Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சந்திரயான்-3 திட்டம்
 
படக்குறிப்பு,

சிவன், முன்னாள் தலைவர், இஸ்ரோ

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 9 ஜூலை 2023, 12:16 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வரும் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் கே. சிவன். பேட்டியிலிருந்து:

கே. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் சந்திரயான் - 3ன் முக்கியத்துவம் என்ன?

ப. சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை நிகழ்த்திப் பார்ப்பது. இது மிகப் புதிய தொழில்நுட்பம். நாம் இஸ்ரோவைத் துவங்கியபோது நம்மிடம் இருந்த தொழில்நுட்பம் மிகச் சிறியது. ஆனால், தற்போது நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம். சந்திரயான் திட்டத்தின் முக்கிய நோக்கம், சந்திரனில் போய் தரையிறங்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான்.

கே. புவிசார் அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமானது?

ப. இஸ்ரோவைப் பொறுத்தவரை, இது ஒரு புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம்.

 
சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,TWITTER/ISRO

கே. சந்திரயான் 1, 2ல் நமக்குக் கிடைத்த படிப்பினைகள் என்ன? அந்தப் படிப்பினைகள் இந்தத் திட்டத்திற்கு எந்த விதத்தில் உதவும்?

ப. சந்திரயான் -1ஐப் பொருத்தவரை, சந்திரனைச் சுற்றும்படி ஒரு விண்கலத்தை ஏவுவதுதான் அதன் நோக்கம். அது தவிர, Moon Impact probe என்று பெயரிடப்பட்ட சிறிய சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு சிறிய பொருள் சந்திரனில் தரையிறக்கிப் (crash landing) பார்க்கப்பட்டது. இதுதான் அந்தத் திட்டத்தின் முழுமையான நோக்கம்.

சந்திரயான் - 2ஐப் பொறுத்தவரை 3 நோக்கங்கள் இருந்தன. முதலாவதாக, சந்திரனைச் சுற்றிவரும் ஒரு செயற்கைக்கோளை ஏவுவது. அது சந்திரனைச் சுற்றிவந்து, சில அறிவியல் தகவல்களை அளிக்கும். இரண்டாவதாக, அந்த விண்கலத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து தரையிறங்க வேண்டும். அது லேண்டர் என்று அழைக்கப்படும். மூன்றாவதாக அந்த லேண்டரில் இருந்து ஒரு ரோவர் தரையிறங்கி, நிலவை ஆராய வேண்டும்.

இதில் முதலாவது கட்டம் சரியாக நிறைவேறி செயற்கைக்கோள் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. இரண்டாவது கட்டத்தில், லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்குப் பதிலாக வேகமாகத் தரையிறங்கி, நொறுங்கியது. இதனால், அதிலிருந்து கிடைக்க வேண்டிய சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.

சந்திரயான் 3ஐப் பொறுத்தவரை, சந்திரயான் -2ல் தோல்வியடைந்த பகுதியைச் சரிசெய்திருக்கிறார்கள்.

 
சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,TWITTER/ISRO

கே. முந்தைய சந்திரயான் திட்டத்தில் எந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், லேண்டர் வேகமாகத் தரையிறங்கி மோதியது? இப்போது அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது அல்லது சரிசெய்யப்பட்டிருக்கிறது?

ப. சந்திரயான் 2ல் இருந்த லேண்டர் வேகமாக தரையிறங்கி மோதியபோது, அதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆராயப்பட்டன. அதில் என்ன தவறு நடந்தது என்பதை அறிந்து, இப்போது அதனைச் சரிசெய்திருக்கிறார்கள்.

கே. முந்தைய திட்டத்தில் விக்ரம் லாண்டர் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. அது ஏன் என்பது கண்டறியப்பட்டதா?

ப. அதில் இரண்டு, மூன்று பிரச்சனைகள் இருந்தன. ராக்கெட்டின் உந்துவிசை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் செயல்பட வேண்டும். இதை propulsion band என்று சொல்வார்கள். போன முறை இந்த உந்துவிசை குறிப்பிட்ட அளவைத் தாண்டி செயல்பட்டது. அதனால், அந்த அளவு வேகத்தைக் கையாளும் திறன் வழிகாட்டும் அமைப்புக்கு இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையையும் தாண்டி அது செயல்பட்டது. இந்தக் குறைபாடுகளையெல்லாம் இந்தத் திட்டத்தில் சரிசெய்திருக்கிறார்கள்.

கே. 1960களிலேயே அமெரிக்கா போன்ற நாடுகள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியிருக்கின்றன. ஆட்களே சென்றுவந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் ஆளில்லாத ரோவர்களை நாம் அனுப்புவது அவசியம்தானா?

ப. நம்முடைய விண்வெளித் திட்டத்தில் 1960களில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆரம்பித்தோம். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதுபோலவே, இப்போது நாம் செய்யும் முயற்சிகள் பிற்காலச் சந்ததிகளுக்குப் பயன்தரும். அதில் ஒரு திட்டம்தான் சந்திரயான் திட்டம்.

கே. அடுத்ததாக இஸ்ரோ ஆதித்யா எல் - 1 என்ற பெயரில் சூரியனுக்கு ஆய்வுக் கோளை அனுப்பவிருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன?

ப. சூரியன் பூமிக்கு மிக முக்கியமானது. பூமியின் வாழ்வைக் கட்டுப்படுத்துவது சூரியன்தான். ஆனால், சூரியனைப் பற்றி அறிய வேண்டியது நிறைய இருக்கிறது. உதாரணமாக, அதன் வெளிப்பகுதியின் வெப்பநிலை 5,700 டிகிரிதான் தான் இருக்கும். ஆனால், சூழலின் வெப்ப நிலை மிகப் அதிகமாக இருக்கும். அது ஏன் என்பதற்கான விடை கிடைக்கவில்லை. சூரியனின் நடக்கும் மாற்றத்தால் பூமியில் ஏற்படும் சூழல் மாற்றம் பற்றியும் அறிந்துகொள்ளவே ஆய்வுக் கோளை அனுப்புகிறோம்.

 
சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,NASA

கே. 2025ல் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது.. இதில் எந்தக் கட்டத்தில் ஆபத்து இருக்கும்?

ப. விண்ணுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு விண்கலத்தில் 450 கி.மீ. உயரத்திற்கு மனிதனை அனுப்புவார்கள். பிறகு, மீண்டும் அவரைப் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். மனிதனை சுமந்து செல்லும் ராக்கெட்டைப் பொறுத்தவரை, செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்களைவிட கூடுதல் செயல்திறனை, நம்பகத்தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஆகவே தற்போதைய ராக்கெட்டுகளை அதற்கேற்றபடி மாற்ற வேண்டும். அடுத்தபடியாக, மனிதர்கள் பூமியில் இருக்கும்போது என்னவிதமான சூழலில் இருந்தார்களோ அதேபோன்ற சூழலில் விண்ணிலும் இருப்பதற்கேற்றபடி சிறு அறைகளை (module) உருவாக்கவேண்டும். Environment Controlled Life support System என்று இதை அழைப்பார்கள்.

மனிதர்களை திரும்ப அழைத்துவரும்போது, பல கட்ட வெப்ப மாறுபாட்டை விண்கலம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி அந்த விண்கலத்தை வடிவமைக்க வேண்டும். அதேபோல, திரும்பிவரும் விண்கலம் நாம் நினைத்த இடத்தில் துல்லியமாக தரையிறங்க வேண்டும். அதற்கும் சில தொழில்நுட்பங்கள் தேவைப்படும். இதுதொடர்பான சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்ததாக சோதனை ஓட்டம் நடைபெறும். இதற்குப் பிறகு மனிதர் இல்லாத ரோபோக்களைக் கொண்ட ராக்கெட் அனுப்பப்படும். இப்படியான இரண்டு - மூன்று சோதனைகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள்.

 
சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,TWITTER/ISRO

கே. அடுத்ததாக, செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான சுக்ரயான் திட்டத்திலும் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது... வேறு எந்தெந்த கிரகங்களையெல்லாம் அடைய இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது? அதனால், என்ன பலன் கிடைக்கும்?

ப. அடுத்ததாக செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தயாராகிவருகிறது. அதற்கடுத்து வெள்ளி கிரகத்திற்கு ஆளை அனுப்பும் திட்டம் இருக்கிறது. ஆனால், அது அனுமதி பெறும் கட்டத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கம், பூமியின் துவக்கம் ஆகியவற்றை அறிவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை அதற்குப் பல்வேறு பலன்கள் இருக்கும். ஒன்று மக்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும் திட்டங்கள். மற்றொன்று, வேறு கட்டமைப்புக்கு உதவும் தகவல்களைத் தரும் திட்டங்கள். மூன்றாவதாக, முழுக்க முழுக்க விண்வெளி அறிவியலுக்கு உதவும் திட்டங்கள். இந்தத் திட்டம் அதுபோன்ற ஒரு திட்டம்தான்.

கே. சந்திரயான் 1 ஏவப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்தத் திட்டத்திற்குப் பிறகு நம்முடைய விண்வெளித் திட்டம் எந்த அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறது...?

ப. சந்திரயான் திட்டத்திற்கும் விண்வெளி வளர்ச்சிக்கும் இடையில் பெரிய தொடர்பு கிடையாது. இது ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது, அவ்வளவுதான். ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறோம். கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய செயற்கைக்கோள்கள் உருவாகியிருக்கின்றன.

 
சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இஸ்ரோ நுழைவு வாயில்

கே. சீனாவும் ரஷ்யாவும் இணைந்து நிலவில் ஒரு ஆய்வு நிறுவனத்தைக் கட்ட நினைக்கின்றன. இந்தியா இது போன்ற திட்டங்களில் ஈடுபட எவ்வளவு காலம் பிடிக்கும்?

ப. இந்தியா இப்போதுதான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேண்டுமானால், இதுபோன்ற திட்டங்களைப் பற்றி யோசிக்கலாம்.

கே.. இஸ்ரோவின் திட்டங்கள் அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்யப்படுகின்றன. இஸ்ரோவைப் பற்றித் திரைப்படம் எடுப்பதைவிட குறைவான செலவில் இஸ்ரோ ராக்கெட்களை அனுப்புவதாகக்கூட வேடிக்கையாகச் சொல்வார்கள்.. இது எப்படி சாத்தியமாகிறது?

ப. குறைந்த செலவு என்பது ஒரு ஒப்பீட்டுப் பார்வைதான். நாம் சிறப்பு முயற்சி எதையும் அதற்காக மேற்கொள்வதில்லை. விண்வெளித் திட்டங்களுக்கான பொருட்களையும் கருவிகளையும் நாம் நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கேயே உருவாக்குவதால் செலவு குறைவாக இருக்கிறது. இதனை வெளிநாடுகளில் வாங்கினால், விலை அதிகமாக இருக்கும். செலவு குறைவாக இருக்க அது ஒரு காரணம். அதேபோல, இங்கே தயாரிப்புச் செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை குறைவு. மற்றபடி, இதற்கென சிறப்பு முயற்சிகள் எதையும் இஸ்ரோ செய்வதில்லை.

கே. சந்திரயான் - 3 ஏவப்பட்டு எத்தனை நாட்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக சொல்ல முடியும்?

ப. இந்தத் திட்டம் முழுமையடைய 45 நாட்களாகும். சந்திரயான் ஏவப்பட்ட பிறகு, 45 நாட்களுக்குப் பிறகுதான் லாண்டர் சந்திரனில் தரையிறங்கும். ஜூலை மாத மத்தியில் சந்திரயான் ஏவப்பட்டால் ஆகஸ்ட் மாத இறுதியில் லாண்டர் தரையிறங்கும். அதற்குப் பிறகுதான் அந்தத் திட்டம் முழுமையடையும்.

 

கே. விண்வெளி ஆய்வுத் துறையில் நாம் மேலும் திறன்களை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?

ப. விண்வெளித் துறையில் தேவைகள் அதிகரித்துவருகின்றன. வெளிநாட்டு சந்தையைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நம் நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும். இந்திய அரசைப் பொறுத்தவரை 2021ல் விண்வெளித் துறை தனியாருக்கும் திறக்கப்பட்டது. இப்போது தனியாரும் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். நிறைய ஆரம்ப நிலை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுகின்றன. நிறைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திலும் நாம் ஈடுபட வேண்டும். அதற்கு இஸ்ரோ தயாராகிக்கொண்டிருக்கிறது.

கே. இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு, காலநிலைகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் போன்ற ஆய்வு கோள்களைத் தவிர மங்கள்யான், சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்கள் தேவையா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறதே?

ப. காலநிலை கண்காணிப்பு, ரிமோட் சென்சிங் எல்லாம் தேவை என இப்போது சொல்கிறார்கள். ஆனால், 1960களில் இஸ்ரோ தனது ஆய்வுகளைத் துவங்கியபோது, இதெல்லாம் தேவையா என்றுதான் சொன்னார்கள். ஆனால், அப்போது துவங்கியதன் பலன்களைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதேபோல இப்போது சந்திரயான் போன்ற திட்டங்களைத் துவங்கினால்தான், அதன் பலன்களை வரும் சந்ததியினர் அனுபவிப்பார்கள். தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,TWITTER/ISRO

கே. நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் ஏதும் இஸ்ரோவுக்கு உள்ளதா, அது சாத்தியமா?

ப. இப்போதைக்கு அப்படித் திட்டம் ஏதும் இல்லை. பிற்காலத்தில் நடக்கலாம்.

கே. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ராக்கெட்களை ஏவுவது என்பது உச்சபட்ச தொழில்நுட்பங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், அம்மாதிரி நிகழ்வுகளுக்கு முன்பாக விஞ்ஞானிகள் வழிபாட்டுத் தலங்களுக்குப் போகிறீர்கள்.. ராக்கெட் மாதிரிகளை வைத்து பூஜை செய்கிறீர்கள்... அறிவியலும் நம்பிக்கையும் எந்த இடத்தில் சந்திக்கின்றன?

ப. இதெல்லாம் தனி நபர்களின் நம்பிக்கை. அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. ராக்கெட்களைப் பொறுத்தவரை, எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். இம்மாதிரி பிரச்சனை வரலாம் என்பதே முதலில் புரியாது. அம்மாதிரி நிலையில், சிலர் வழிபடுகிறார்கள். அவ்வளவுதான்.

https://www.bbc.com/tamil/articles/crgk0144p12o

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்த

வாலி

முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂

Justin

நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!) முன்கதை சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான்-3: நிலவில் என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளும்? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன?

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்
  • பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு
  • 10 ஜூலை 2023, 14:02 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சந்திரயான் 3 விண்கலத்தை வருகின்ற ஜூலை 14ஆம் தேதியன்று இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன.

இந்தப் பத்து கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால்தான், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க முடியும். அவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

அதற்குள் செல்வதற்கு முன்பாக, சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும், அதைச் சுமந்து செல்லப்போகும் ராக்கெட் எப்படிச் செயல்படும் என்பது பற்றியும் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

சந்திரயான் 3 விண்கலம் எப்படி இருக்கும்?

இந்த விண்கலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி ஒரு பொம்மை கார் போல இருக்கும். அதற்கு ஊர்திக்கலம்(Rover) என்று பெயர். இந்த ஊர்திக்கலம் அதன் நகர்வு மற்றும் இயக்கத்தின்போது, நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வை மேற்கொள்ளும்.

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும்.

இந்த ஊர்திக்கலம், தரையிறங்கிக் கலம்(Lander) எனப்படும் இரண்டாவது பகுதியின் வயிற்றுக்குள் இருக்கும். இது நிலவின் தரைப்பரப்பில் மென்மையாக, பாதிப்பு ஏதுமின்றி தரையிறங்கி, அதன் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே அனுப்பும்.

இந்த இரண்டும் சேர்ந்து, மூன்றாவது பகுதியான உந்துக்கலம்(Propulsion unit) என்ற பகுதியின் தலைக்கு மேலே இருக்கும். இந்தப் பகுதிதான், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கி.மீ தொலைவு வரைக்கும் தரையிறங்கி கலம், ஊர்திக்கலம் இரண்டையும் கொண்டு செல்லும்.

இந்த மூன்றும் சேர்ந்ததுதான் விண்கலம். இந்த அமைப்பைக் கொண்ட சந்திரயான் 3 விண்கலம்தான், எல்.வி.எம் 3 என்ற ராக்கெட்டின் தலைக்குமேல் ஒரு கலசம் போல் தெரியும் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும்.

சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவது எப்படி?

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள்

முந்தைய சந்திரயான் விண்கலங்களை சுமந்து சென்ற ராக்கெட்டுகளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்று அழைத்தார்கள். தற்போது சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கு எல்.வி.எம் 3 என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூன்று அடுக்குகளைக் கொண்டது. அதன் இருபுறமும் இரண்டு தூண்களைப் போல் தெரிவது S200 இன்ஜின். அவற்றில் திட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.

இரண்டுக்கும் நடுவே பெரிய ஒற்றைத் தூணாக இருப்பது, திரவ எரிபொருள் கொண்ட இன்ஜின். அதன் பெயர் L110.

அதற்கு மேலே தெரியும் இரண்டு கருப்பு பட்டைகளுக்கு இடையில்தான் உறைகுளிர் இன்ஜின் (Cryogenic Engine) இருக்கிறது.

உறைகுளிரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே தண்ணீரை போன்ற திரவமாக மாறிவிடும். அந்த இரண்டையும்தான் அதில் வைத்துள்ளார்கள். அவைதான் அதில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்.

அதற்கும் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் இருக்கும். இந்த இன்ஜின்கள் ஒவ்வொன்றாக எரிந்து ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும்.

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO/TWITTER

 
படக்குறிப்பு,

நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன

முதலில், திட எரிபொருள் இன்ஜின்கள் எரிந்து ராக்கெட்டை மேலெழும்பச் செய்யும். அதன் வேலை முடிந்ததும் அது கழன்று கீழே விழுந்துவிடும். இரண்டாவதாக, திரவ எரிபொருள் எரிந்து இன்னும் உயரச் செல்ல உதவும். அதன் வேலை முடிந்ததும் அதுவும் கழன்றுவிடும். இந்த இரண்டின் செயல்பாடும் ராக்கெட்டை விண்வெளிக்குக் கொண்டு சென்றுவிடும்.

பிறகு விண்வெளியில், உறைகுளிர் இன்ஜின் தனது வேலையைச் செய்யும்.

இந்தச் செயல்முறைகளின் மூலமாக எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம்.

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம்

விண்வெளிக்குச் சென்ற பிறகு என்ன நடக்கும்?

விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து, விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்.

அந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ தூரத்தில் விண்கலம் இருக்கும். அதுவே தொலைவில் இருக்கும்போது, 36,500 கி.மீ. தூரத்தில் இருக்கும்.

விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை இந்தப் பாதையில் சுற்ற வைப்பதுதான் இரண்டாவது கட்டம்.

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

ராக்கெட்டின் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் வைக்கப்பட்டிருக்கும்

புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைப்பது எப்படி?

அடுத்ததாக, புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைத்தால் மட்டும் போதாது, அந்தப் பாதையில் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து, நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால்தான், நிலவின் சுற்றுப்பாதைக்கு அதைக் கொண்டுசெல்ல முடியும். அதுதான் மூன்றாவது கட்டம்.

இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் எளிமையாக விளக்கலாம். தினசரி வீடுகளுக்கு நாளிதழ்களை விநியோகிப்பவரை சான்றாக எடுத்துக்கொள்வோம்.

அவர் ஒரு கட்டடத்தின் தரைத் தளத்தில் இருக்கும் வீட்டிற்கு நாளிதழைப் போடும்போது இயல்பாக கையை வீசி கதவுக்குள் எறிந்துவிடுவார். அதுவே வீடு இரண்டாவது மாடியில் இருந்தால், இரண்டாவது மாடிக்கே சென்று கொடுக்கமாட்டார், அதையும் கீழிருந்துதானே வீசுவார். அப்போது, தரைத்தள வீட்டிற்குள் நாளிதழை வீசும்போது எடுத்துக்கொண்ட ஆற்றலைவிட அதிக ஆற்றலைச் செலவழித்து, கையை நன்றாகச் சுழற்றி வீசுவார். நாளிதழ் இரண்டாவது மாடியில் வந்து விழும்.

இதேபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தி தான் சந்திரயான் 3 விண்கலமும் நிலவுக்குச் செல்லப் போகிறது.

இந்த மூன்றாவது கட்டத்தை ‘பாதை உயரம் உயர்த்து கட்டம்(Orbit raising)’ என்பார்கள். அதாவது விண்கலம் பயணிக்கும் சுற்றுப்பாதையின் உயரத்தை உயர்த்திக்கொண்டே போக வேண்டும்.

அப்படி உயரத்தை உயர்த்துவதற்கு, விண்கலம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில், அதாவது 170 கி.மீ தொலைவுக்கு ராக்கெட் வந்ததும், அதை எரித்து உந்துவிசை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது முந்தைய சுற்றில் இருந்ததைவிட இன்னும் கூடுதலான உயரத்திற்கு விண்கலம் தள்ளப்படும்.

அதேபோல் ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியாக சுமார் 20 நாட்களுக்கு பாதையை விண்கலத்தின் உயர உயர உயர்த்தும் வேலையைச் செய்வார்கள்.

சந்திரயான் 3 விண்கலம் பாதை மாறிவிடாமல் தடுக்க வேண்டும்

நான்காவது கட்டம் மிகவும் சுவையானது. பூமி, நிலா இரண்டையும் கற்பனையாக ஒரு நேர்கோட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதில், பூமிக்கும் ஈர்ப்புவிசை உள்ளது, நிலவுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்புவிசை உள்ளது.

அப்படியென்றால், இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும். அந்த சம ஈர்ப்பு விசைப் புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62,630 கி.மீ தொலைவில் இருக்கிறது.

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பூமி, நிலா ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும்

அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்துவதான் நான்காவது கட்டம்.

ஆனால், இது அவ்வளவு எளிதானதல்ல. இதை மிக மிகத் துல்லியமாகச் செய்யவேண்டும். அதற்குத்தான் ஐந்தாவது கட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதாவது, அந்த சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் ஐந்தாவது கட்டம்.

புவியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்து சந்திரயான் 3 விடுபட வேண்டும்

சந்திரயான் 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரித்து தொலைவாகச் செல்கிறது. ஆரம்பத்தில் கூறிய இரண்டாவது, மூன்றாவது கட்ட செயல்முறைகள் அப்படி பூமியை விட்டு தூரமாகச் செல்ல மட்டும்தான் வழி வகுத்தன.

ஆனால் பூமியைவிட்டுத் தொலைவாகச் சென்றுகொண்டிருந்தாலும், விண்கலம் பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இன்னமும் இருக்கிறது.

 
சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்

இப்போது பூமியை சுற்றி வந்த விண்கலத்தை, நான்காவது, ஐந்தாவது கட்ட செயல்முறைகளின் மூலமாக பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம். ஆனாலும், அது இன்னமும் பூமியுடைய ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இருக்கிறது.

ஆகவே மேல்நோக்கி வீசிய கல் கீழே விழுவதைப் போல், அந்த சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்குச் சென்ற விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பிவிடக்கூடும்.

இந்த நிலையில், அந்தப் புள்ளிக்குச் சென்றதும் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து அதைத் தள்ளிவிட்டால், அதுவரைக்கும் அது இருந்த புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றுவிடும். இதுதான் ஆறாவது கட்டம்.

நிலாவின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை எப்படி செலுத்துவது?

ஆறாவது கட்டத்தின் முடிவில், சந்திரயான் 3 நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. இப்போது, அதை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நிலவுக்கு அருகில் சென்றுவிட்டு பிறகு விலகி விண்வெளியில் சென்றுவிடும்.

அப்படிச் சென்றுவிடாமல், அதை நெறிப்படுத்தி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும்.

அந்த நேரத்தில் விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100கி.மீ தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்தவேண்டும். அப்படிக் கொண்டுவந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பதுதான் எட்டாவது கட்டம்.

விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. இதில் உள்ள தரையிறங்கி கலத்தில்தான் ஊர்திக்கலமும் அமைந்துள்ளது. இவற்றை அப்படியே தரையிறக்க முடியாது. உந்துகலத்தையும் தரையிறங்கி கலத்தையும் பிரிக்க வேண்டும்.

அப்படிப் பிரித்து, தரையிறங்கி கலத்தை அதிகபட்சமாக 100 கி.மீ முதல் குறைந்தபட்சமாக 30 கி.மீ வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள்.

நிலாவில் சந்திரயான் 3 எப்படி தரையிறங்கும்?

இதுவரை நாம் பார்த்த எட்டு கட்ட செயல்முறைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகுதான், இந்த முயற்சியிலேயே மிக முக்கியமான சவால் தொடங்குகிறது.

நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்குவதுதான் அந்தச் சவால்.

இந்த ஒன்பதாவது கட்ட செயல்முறை எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது.

இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில்தான்.

சந்திரயான்-3 நிலவில் எப்படி தரையிறங்கும்?

பட மூலாதாரம்,ISRO/TWITTER

 
படக்குறிப்பு,

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள்

இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.

கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின்போதும் எட்டாவது செயல்முறை வரைக்கும் இதேபோலத்தான் சென்றது. ஆனால், ஒன்பதாவது கட்டத்தில் தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும்போதுதான் தவறு நிகழ்ந்து, தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது.

ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.

அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். இதுதான் பத்தாவது கட்டம்.

இந்த பத்து கட்டமும் கச்சிதமாக நடந்தால் மட்டுமே சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றியைப் பெறும். இந்த நீண்ட பயணத்திற்கான முதல் அடி வரும் ஜூலை 14ஆம் தேதியன்று தொடங்குகிறது.

https://www.bbc.com/tamil/articles/cy0p93lzem0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாலி said:

முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂

மிகப்பெரிய பணக்காரர்களும் அதிக ஏழைகளும் வாழுமிடம் கிந்தியா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலவை நோக்கி நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான் – 3’ விண்கலம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது.

அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ரொக்கெட், நாளை(ஜூலை 14) பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதற்கான, 25 மணி நேரம், 30 நிமிடங்களுக்கான, ‘கவுன்ட் டவுண்’ இன்று மதியம், 1:00 மணிக்கு தொடங்குகிறது.

பூமியில் இருந்து புறப்படும் ரொக்கெட், 173 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில் சந்திரயான் விண்கலத்தை நிலைநிறுத்தும். அங்கிருந்து படிப்படியாக புவி வட்ட பாதையின் துாரம், 36,500 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்.

பின், ரொக்கெட்டில் உள்ள, ‘புரோபெல்லன்ட்’ சாதனம் ரொக்கெட் போல் செயல்பட்டு, சந்திராயன் விண்கலத்தை, நிலவின் சுற்று வட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்கும். ஆக., 23 அல்லது, 24ம் திகதி சந்திரயான் விண்கலம் – 3ல் உள்ள லேண்டர் கலனை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/262903

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விண்ணில் பாய்ந்தது சந்திராயன்

14 JUL, 2023 | 02:57 PM
image
 

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் இன்று விண்ணை நோக்கி சென்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, இந்திய மக்கள் கொண்டாடினர். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

முன்னதாக, விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டன. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியது. இதனை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.05 மணிக்கு துல்லியமாக தொடங்கியது. இந்நிலையில் கவுண்டவுன் முடிவடைந்து சரியாக 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3, முந்தைய சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி என்றாலும், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணத்தை ஆர்வமுடன் கண்காணித்து வந்தனர். ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. குறிப்பாக விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் தரையிரங்க ஏதுவாக கடந்த முறையை விட விக்ரம் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, நொடிக்கு 3 மீட்டர் அளவிற்கு பயணித்தாலும் கால்கள் உடையாத வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/160007

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திராயன் 3 லான்ச் வெற்றி பெற்றதில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திகழ்ந்து உள்ளனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திராயன் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!

Image

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விண்ணில் ஏவப்படும் Chandrayaan 3

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காற்றில்லாத விண்வெளியில் சந்திராயன் போன்ற விண்கலங்கள் எவ்வாறு உந்திதள்ளப்படுகின்றன?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

20 minutes ago, ஏராளன் said:

காற்றில்லாத விண்வெளியில் சந்திராயன் போன்ற விண்கலங்கள் எவ்வாறு உந்திதள்ளப்படுகின்றன?

அந்த ரகசியத்தை சொன்னால்... பாகிஸ்தான்காரன் பயன்படுத்தி விடுவான் என்பதால்,
சொல்ல முடியாமைக்கு வருந்துகின்றேன்.  😂 🤣

👇

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழத்துக்கள்.ஆனால் இப்ப செய்ய வேன்டியவை இவை இல்லை.முதலில் உரிஞ்சான் குன்டி நிலை மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘சந்திராயன் -3’க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

13-12.jpg

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர்.

விழுப்புரத்தில் உள்ள வீர முத்துவேலின் தந்தை பழனிவேல் கூறியதாவது:

வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். பின், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.

அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘இஸ்ரோ’வில் பணிக்கு சேர்ந்தார்.

இடையே, சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது திறமையால் உயர்ந்து, தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பழனிவேல் கூறினார்.
 

https://akkinikkunchu.com/?p=250309

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

காற்றில்லாத விண்வெளியில் சந்திராயன் போன்ற விண்கலங்கள் எவ்வாறு உந்திதள்ளப்படுகின்றன?

நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும்.

(பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!)


உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?

 

Edited by Justin
கேள்வி சேர்க்கப் பட்டது
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/7/2023 at 22:38, வாலி said:

முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂

வாலி! நாசா புகழ் அமெரிக்க மக்களின் கேள்வி இப்படி இருக்கின்றதே? :rolling_on_the_floor_laughing:

தயவு செய்து குதர்க்கவாதி என மீண்டும் பட்டம் தந்து விடாதீர்கள்  :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

 

அந்த ரகசியத்தை சொன்னால்... பாகிஸ்தான்காரன் பயன்படுத்தி விடுவான் என்பதால்,
சொல்ல முடியாமைக்கு வருந்துகின்றேன்.  😂 🤣

👇

 

இந்த rocket திரவ எரிபொருள்  இயந்திரமா அல்லது திட எரிபொருள் இயந்திரமா? 

🤣

5 hours ago, Justin said:

உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?

 

பதிலளிக்கும் முன்னர், கேள்வியைப் புரிந்துகொள்ள வேண்டியது சிறந்த  ஆசிரியருக்குரிய பண்பு. 

வாழ்த்துக்கள்.

👍

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Justin said:

நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும்.

(பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!)

உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணை.

 

9 hours ago, Justin said:

உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?

இதை நான் யோசிக்கவில்லை, என்றாலும் இதற்கான பதிலையும் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர முத்துவேல்: சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர் - யார் இவர்?

வீர முத்துவேல்: சந்திராயன்-3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

பட மூலாதாரம்,ISRO

14 ஜூலை 2023

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இன்று (ஜூலை 14, வெள்ளிக்கிழமை) மதியம் 2:35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம்3 எம்4 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது நாடு முழுதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தருணத்தில், சந்திரயான் 3-இன் திட்ட இயக்குநராக ஒரு தமிழர் பணியாற்றியிருப்பது தமிழகத்துக்கு இரட்டிப்புப் பெருமையாக அமைந்துள்ளது.

 

சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டபோது வீர முத்துவேல் என்ன பேசினார்?

சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் பேசிய வீரமுத்துவேல், விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப் பாதையில் சரியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

 

“நிலவுக்கு நமது பயணம் இப்போது துவங்கியுள்ளது,” என்றார்.

இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்திலிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாகக் கூறினார்.

“திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்கள் அடுத்து வரவிருக்கின்றன. விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்,” என்றார்.

கல்வி முழுவதும் தமிழகத்தில் முடித்தவர்

வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ஆம் வகுப்பு வரை படித்தார்.

பிறகு, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் இயந்திரவியலில் டிப்ளமோ முடித்தார். பிறகு, சென்னை சாய்ராம் கல்லுாரியில், பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திரவியல் பிரிவில் படித்தார்.

அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லுாரியில், முதுநிலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ'வில் பணிக்குச் சேர்ந்தார்.

இவற்றுக்கு இடையே, இவர் சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி.யிலும் பயிற்சி பெற்றார்.

வீர முத்துவேல்: சந்திராயன்-3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

பட மூலாதாரம்,ISRO

‘என் மகனின் உழைப்பே இந்த வெற்றிக்குக் காரணம்’

இந்த முக்கியமான தருணத்தில் வீர முத்துவேலின் தந்தை பழனிவேலிடம் பிபிசி தமிழ் தொலைபேசி மூலம் உரையாடியது.

தனது மகனின் விடாமுயற்சியும் திறனுமே அவர் இந்நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்றார் பழனிவேல்.

“எனது மகன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் தனது விடாமுயற்சியால் எப்போதும் முதலிடம் பெறுவார். அவரது தனித்தன்மையான செயல்பாடும் அறிவுமே அவர் இந்த நிலைக்கு உயர்ந்ததற்குக் காரணம்,” என்றார் பழனிவேல்.

மேலும் பேசிய அவர், “என் மகனின் இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் அவரது உழைப்பு மட்டுமே," என்றும் கூறினார்.

வீர முத்துவேல்: சந்திராயன்-3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

பட மூலாதாரம்,ISRO

தொடர்ந்து ‘சந்திரயான்’ திட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் தமிழர்கள்

சந்திரயான் திட்டத்திற்கு ஒரு தமிழர் தலைமை வகிப்பது இது முதல்முறை அல்ல.

சந்திரயான்-1இன் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2இன் திட்ட இயக்குநராக இருந்த வனிதா ஆகிய இருவரும் தமிழர்கள்.

இதனால் மூன்று சந்திரயான் திட்டங்களிலும் திட்ட இயக்குநர்களாக தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு வகித்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2r6znq35no

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணை.

 

இதை நான் யோசிக்கவில்லை, என்றாலும் இதற்கான பதிலையும் சொல்லுங்கோ.

நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!)

முன்கதை

சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக்க வேண்டும். சந்திராயன் 3 இன் தோற்றத்தில் அந்த இரண்டு பக்கமும் அமைந்திருக்கும் தாங்கிகள் தான் முதல் நிலை (Stage 1) இயந்திரம். இவற்றை ஊக்கிகள் (boosters) என்றும் அழைக்கலாம். இந்த ஊக்கிகள் முதல் சில நிமிடங்களில் எரிந்து முடித்து கழன்று பூமியில் வீழ்ந்து விடும். இதன் பிறகு, இரண்டாம் நிலை (Stage 2) ஊக்கி வேலை செய்து விண்கலத்தை பூமியில் இருந்து 22 000 மைல்கள் தொலைவு வரை தள்ளி விடும். இந்த உயரத்தில் தான் சந்திராயன் பூமியைச் சுற்றி வரும் சுற்றுப் (orbit) பாதையில் நுழையும். தன் வேலையை முடித்த பின்னர், இந்த இரண்டாம் நிலை எஞ்சின் பகுதியும் விண்கலத்திலிருந்து கழரும், ஆனால் பூமிக்கு முழுமையாக மீளுவதில்லை.

இனித் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்:

சந்திராயனோ, அல்லது நிலவுக்கு முன்னர் சென்ற எந்த விண்கலமுமோ நேராக நிலவுக்குப் பறக்கவில்லை. பூமியைச் சுற்றி மிக உயரத்தில் Geo-synchronous orbit (GEO) என்ற வட்டப் பாதையில் அவை சுற்றி வந்து கொண்டிருக்கும். படிப்படியாக, 22,000 மைல்கள் உயரத்தில் இருந்து மேலதிக உயரத்திற்கு ஏறி, விண்கலம் சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி, நிலவினைச் சுற்றி வரும் ஒரு வட்டப் பாதையில் விண்கலம் இணையும். இப்படி, சுற்றுப் பாதையை மாற்றிக் கொள்ளவும் (orbit transfer), விண்கலத்தின் திசையை மாற்றிக் (maneuver) கொள்ளவும் தான் விண்கலத்திற்கு விசையுருவாக்கும்  இயந்திரம் தேவை. அந்த இயந்திரத்தின் பெயர் மூன்றாம் நிலை (Stage 3) இயந்திரம். வெற்றிடத்தில், காற்றில்லாமல் வேலை செய்யக் கூடிய இந்த இயந்திரம் "உறைநிலை எரிபொருள்" (cryogenic) இயந்திரம் எனும் விசேட வகையைச் சார்ந்தது.   

இந்தியாவின் தயாரிப்பான உறைநிலை இயந்திரம் CE-20

சந்திராயன் 3 இல் விண்கலத்திற்குப் பின்னால் தாங்கி போல இருக்கும் பகுதி தான் CE-20 எனப்படும் உள்ளூர் தயாரிப்பான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரம். இந்த இயந்திரம் உள்ளூர் தயாரிப்பாக உருவாக வித்திட்டது, 1992 இல் அமெரிக்கா இந்தியாவின் விண்வெளி ஆய்வை முடக்க எடுத்த ஒரு நடவடிக்கை தான். 90 களில் இந்தியா இந்த கிறையோஜெனிக் இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வாங்க முயன்றது. அமெரிக்காவும், பிரான்சும் சொன்ன விலையை விட, ரஷ்யாவின் இயந்திரங்கள் மலிவாக இருந்ததால், இந்தியா ரஷ்யாவின் கிறையோஜெனிக் இயந்திரங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. அமெரிக்காவோ, இது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஒத்தது, எனவே ஏவுகணைப் பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரண் எனக் கூறி, அடுத்த 2 வருடங்களுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை முடக்கும் வகையில் ஏற்றுமதி இறக்குமதித் தடையை விதித்தது. அன்றே, இந்தியா உள்ளூரில் கிறையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கி, இன்று பெங்களூரில் இதற்கெனத் தனியான ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறது. அங்கே உருவாக்கப் பட்டு, தமிழ்நாட்டில் போன வருடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப் பட்ட ஒரு இயந்திரம் தான் இந்த CE-20. 

எப்படி வேலை செய்கிறது கிறையோஜெனிக் இயந்திரம்?

சில நாட்கள் முன்பு ஒரு திரியில், ஐதரசன் வாயு ஒட்சிசனுடன் சேர்ந்தால் பெரும் வெப்பம் உருவாகும் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? அதே exothermic இரசாயனத் தாக்கம் தான் கிறையோஜெனிக் இயந்திரத்தின் செயல்பாட்டுப் பொறிமுறை. மொத்தமாக 27,000 கிலோ நிறையுடைய திரவ நிலை ஓட்சிசனும், திரவ நிலை ஐதரசனும் இந்த இயந்திரத்தின் தாங்கிகளில் சேமிக்கப் பட்டிருக்கிறது. தேவையேற்படும் போது, பம்பிகள் மூலம் இந்த திரவ வாயுக்கள் கலக்கப் பட்டு, தீயை ஒரு தீயுருவாக்கி (ignition) ஏற்படுத்த, தாரை இயந்திரம் போன்ற அமைப்பு அந்தத் தீ-வாயுக்கலவையை பின் நோக்கித் தள்ளுவதால் உந்துகை (propulsion) நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த கிறையோஜெனிக் இயந்திரம் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை: மொத்தமாக 40 நாட்கள் எடுக்கும் சந்திராயனின் நிலவுப் பயணத்தில், வெறும் 720 செக்கன்களுக்குத் தான் இந்த கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், நியூட்டனின் முதல் விதியின் படி: இயக்கத்திலிருக்கும் பொருள் தடை ஏற்படும் வரை இயக்கத்திலிருக்கும். இதனால், உராய்வில்லாத விண்வெளி வெற்றிடத்தில் தொடர்ந்த உந்துகையின்றியே சந்திராயன் நகரும். சுற்றுப் பாதைகளை மாற்றும் போது மட்டும், கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்து விசையை வழங்கும். அப்படி அது வேலை செய்ய வேண்டிய கால அளவு மொத்தமாக வெறும் 720 செக்கன்கள் என்று கணித்திருக்கிறார்கள்.

மேலே, சந்திராயன் ஏவப் பட்ட பின்னர், இந்தியர்கள் பெருமைப் பட்ட சந்தர்ப்பங்களை நக்கல் நையாண்டி செய்திருப்போர் கவனிக்க வேண்டிய ஒன்று: உள்ளூரில் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரத்தை உருவாக்கியமை உண்மையில் சாதனை தான். 90 களில்,  அமெரிக்காவின் ஒரு சில்லறைத்தனமான சேட்டைக்குப் பதிலாக நரசிம்மராவ் உருவாக்கிய  உள்ளூர் முயற்சி, அதில் முழுமையாக உள்ளூர் விஞ்ஞானிகளின் பங்களிப்பு (பலர் தென்மாநிலத்தவர், தமிழர்கள் என்பது கூடுதல் பெருமை!) என்பன தென்னாசிய நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறப்பான முன்மாதிரி. இந்தியர்கள் பெருமைப் பட சந்திராயன் 3 நியாயமான காரணம் தான்! 

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ஜஸ்ரின் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

50 ஆண்டுகளுக்கு முன்பே நாசா அனுப்பிய விண்கலம், நான்கே நாட்களில் நிலவை அடைந்த நிலையில், தற்போது இஸ்ரோ அனுப்பும் ஆளில்லா விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் எடுப்பது ஏன்? நிலவை நோக்கிய சந்திரயான்-3 இன் பயணத்துக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்படுவது எதனால்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரனை போல் ஜொலித்த சந்திராயன் – 3

சந்திரனை போல் ஜொலித்த சந்திராயன் – 3

அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திராயன்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவே தற்போது வைரலாகி வருகின்றது.

வானியல் ஆர்வலர் டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பதிவில், சந்திராயன்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திராயன்-3 விண்கலம் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1339931

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3யின் பாகமா?

கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3´ன் பாகமா?

அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகேயுள்ள கடற்கரையில், அண்மையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலோக பாகம் போன்று காணப்பட்ட குறித்த மர்மப் பொருளானது 2 மீற்றர் உயரமும், 2 மீற்றர் அகலமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

ஏனைய நாடுகளுடன் நாங்கள் இது குறித்து தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றோம். அப் பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ரொக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறன.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொலிஸார் ”விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். குறித்த மர்ம பொருள் தாகவும் ரொக்கெட் பாகம் போன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1340185

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ‘மர்மப்பொருள்’ சந்திரயான் ராக்கெட்டின் பகுதியா?

கரையொதுங்கிய பொருள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய பொருள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 8 நிமிடங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று சந்தேகம் நிலையில் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இது ராக்கெட்டின் பகுதி என்று கூறப்படுகிறது.

எனினும் “நாங்கள் அதை ஆய்வு செய்யாத வரை இது எங்களுடையது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில நாள்களுக்கு முன்பு ராட்சத உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தே இந்தப் பொருள் பற்றிய ஊகங்கள் நிலவி வருகின்றன.

 

இது கடந்த வெள்ளியன்று இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதை நிபுணர்கள் மறுத்தனர்.

சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள், கிரீன் ஹெட் கடற்கரையில் வசிப்பவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பொருள் காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூட முதலில் ஊகங்கள் எழுந்தன. 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் இந்த விமானம் காணாமல் போனது.

ஆனால் விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் இந்த பொருள் விமானத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்றும் அது ராக்கெட்டின் எரிபொருள் கலனாக இருக்கலாம் என்றும் கூறினர்.

சந்திரயான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வெளிநாட்டு விண்வெளி ஏவு வாகனத்தில்" இருந்து ராட்சத உருளை விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறியது.

இதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வழக்கமாக பயன்படுத்தும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் எரிபொருள் கலன் என்று ஊகங்கள் எழுந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் அனுப்ப இந்த வகை ராக்கெட் பயன்படுத்தப்பட்டால், அதன் எரிபொருள் கலனாக இது இருக்கலாம் என்று ஊகம் எழுந்தது. இந்தப் பொருள் பல மாதங்களாக நீரில் கிடந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் ஊகங்கள் குறையவில்லை.

எனினும் “இது ராக்கெட்டின் ஒரு பகுதி” என்று பிபிசியிடம் உறுதிப்படுத்திய சோம்நாத், “எந்த மர்மமும் இல்லை” என்று கூறினார்.

"இது பிஎஸ்எல்வி அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் பாகமாக இருக்கலாம், அதைப் பார்த்து பகுப்பாய்வு செய்யாவிட்டால், அதை உறுதிப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார். எனினும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cev8gng087qo

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் - 3 : இஸ்ரோ தகவல்

06 AUG, 2023 | 09:57 AM
image
 

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான் புவி ஈர்ப்பு விசையில் இருந்துவிலக்கப்பட்டு நிலவை நோக்கிசெல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது. 5 நாட்கள் பயணத்துக்குபின் நிலவுக்கு அருகே விண்கலம் நேற்றிரவு சென்றது. இதையடுத்து விண்கலத்தை நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் முயற்சி 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக இன்று (ஆக.6) இரவு 11 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/161714




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.