Jump to content

குருந்தூர் மலையில் பொங்கலுக்கு மூட்டிய தீயை சப்பாத்து காலால் அணைத்த பொலிஸ் அதிகாரி - அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்கிறார் சித்தார்த்தன் எம்.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

14 JUL, 2023 | 04:44 PM
image
 

குருந்தூர் மலையில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்கல் செய்யும் இடத்திற்கு வந்து நிகழ்வினை குழப்புகின்றார்கள். 

ஒருவர் இதற்கென்று விளம்பரங்கள் கொடுத்து சிங்கள மக்களை அழைத்து வந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் குருந்தூர் மலைக்கு சென்று பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட இடையூறு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அடுப்பினை கற்பூரத்தை வைத்து மூட்டுகின்ற போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தனது சப்பாத்து காலினால் அந்த கற்பூரத்தினை அணைத்துள்ளார். 

முன்னர் இந்த நாட்டிலே இது ஒரு மொழி பிரச்சினையாக இருந்தது, தற்போது மதப் பிரச்சினையாக மாறிக் கொண்டு வரும் நிலையை இவர்கள் உருவாக்குகின்றார்கள். இவர்கள் இதனை வேண்டுமென்றே உருவாக்குகின்றார்கள் எனத்தான் நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் இந்த நாட்டில் அமைதி இருக்கக் கூடாது, இந்த நாட்டில் பௌத்த கலாச்சாரங்கள் தான் இருக்கின்றது என எனக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே நாங்கள் எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்து இவைகளை நிறுத்துவதற்கு முயல்வோம்.

இந்தப் பகுதிகள் முழுமையாக அவர்கள் ஆக்கிரமிக்க கூடிய நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஊர் மக்களுடன் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஆகவே நாங்கள் அனைவரும் முழுமையாக இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் நினைக்கின்றேன் ஒரே ஒரு சாத்வீகமான வழி தான் தற்போது இருக்கின்ற வழி. அந்த வழியிலே நாங்கள் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இதை மீண்டும் தமிழ் சைவ மக்களுடைய ஆலயமாக மாற்ற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/160028

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலையில் பெரும் பதற்றம்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் 14.07.2023இன்றையதினம் பொங்கல் வழிபாடு ஒன்றினை மேற்கொள்வதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நியைில் குறித்த பொங்கல் வழிபாடுளில் கலந்துகொள்வதற்காக பெருமளவான தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குருந்தூர்மலைப்பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இதேவேளை குருந்தூர்மலைக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட, பெருமளவான பெரும்பான்மை இனத்தவர்கள்  பேருந்துகளில் குருந்தூர்மலைக்கு வருகைதந்திருந்தமையினையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

இவ்வாறான சூழலில் தமிழ் மற்றும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு குருந்தூர்மலையில் மிகப் பாரிய அளவில் பொலிார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அங்கு தமது கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

▪︎ பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு பௌத்ததேரர்கள் மற்றும், பெரும்பாண்மையினத்தவர்கள் இடையூறு; பொங்கல் வழிபாட்டைத் தடுத்த பொலிசார்.

இந்நிலையில் அங்கு வருகைதந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும், அடியவர்களும்  பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தயாரானபோது, குறித்த பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு, பௌத்த தேரர்களாலும், பெரும்பாண்மையினத்தைச் சார்ந்தோராலும் இடையூறுசெய்யப்பட்டன.

இந் நிலையில் அங்கிருந்த பொலீசாரும் குறித்த பொங்கல் வழிபாட்டிற்கான முயற்சியினை நிறுத்துமாறு தடுத்தனர்.

▪︎ நிபந்தனைகளுடன் பொங்கல் வழிபாட்டினை மேற்கொள்ள அனுமதித்த தொல்பொருள் திணைக்களம்.

இவ்வாறு பொங்கல் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதற்கு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார்ஆலய நிர்வாகத்தினரும், அங்கு வருகைதந்த தமிழ் மக்களும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

தமது வழிபாட்டு உரிமையினைத் தடுக்காது, தம்மை பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தினரைக்  கேட்டுக்கொண்டனர்.

இந் நிலையில் நிலத்தில் தீ படாதவாறு, கற்களை வைத்து, அதற்குமேல் தகரங்களை வைத்து, அதற்குமேல் மூன்று கற்களை வைத்து பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடலாம்என தொல்லியல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

தொல்லியல் திணைக்களத்தினரின் குறித்த நிபந்தனையானது சைவ பொங்கல் வழிபாட்டு நெறிமுறைக்கு மாறாக இருப்பதாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும் அடியவர்களும் சுட்டிக்காட்டினர். எனினும் தொல்லியல் திணைக்களத்தினரின்  குறித்த  நிபந்தனைக்கு அமைவாக பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

▪︎ பௌத்த தேரர்களும், பெரும்பாண்மையினத்தவர்களும் பொங்கல் வழிபாட்டிற்கு மீண்டும் எதிர்ப்பு; பொங்கலுக்குரிய அடுப்பினை கால்களால் மிதித்து உழக்கிய பொலிஸ்

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஆதிசிவன் ஐயனார் ஆலயநிர்வாகத்தினரும், தமிழ் மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சூழ்ந்திருந்த பௌத்த தேரர்களும், பெரும்பாண்மை இனத்தவர்களும் பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந் நிலையில் அடிவயர்கள் பொங்கல் பொங்குவதற்காக அடுப்பினை தயார்ப்படுத்தியபோது, அங்கிருந்த பொலிசார் அடுப்பினை கால்களால் மிதித்துழக்கிச் சேதப்படுத்தினர்.

பொலிசாரின் இத்தகைய செயற்பாட்டிற்கு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும், அடியவர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அத்தோடு தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக, அனுமதியினைப் பெற்று பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, இவ்வாறு அநாகரிகமான முறையில் பொலிசார் செயற்பட்டதற்கான காரணம் தொடர்பில் அடியவர்களும், அங்கிருந்த அரசியல் பிரதிநிதிகள் சிலரும்  கேள்வி எழுப்பினர்.

▪︎ தொல்லியல் பகுதிக்குள் 'தீ' வைக்க முடியாது; சமாதானக்குலைவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொங்கல் வழிபாடும் மேற்கொள்ளமுடியாது.

இந் நிலையில் தொல்லியல் பிரதேசத்திற்குள் 'தீ' இட முடியாது எனபொலிசார் தெரிவித்ததுடன், வெளியே பொங்கலைத் தயாரித்து அங்கு கொண்டுவந்து படையல் இடமுடியுமெனத் தெரிவித்தனர்.

அத்தோடு அங்கு சமாதானக்குலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொங்கல் மேற்கொள்ள முடியாது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

▪︎ சிவ புராணம்பாடி வளிபாடுகளில் ஈடுபட்ட அடியவர்கள்; குழப்பும்வகையில் கூச்சலிட்ட பெரும்பாண்மை இனத்தவர்கள்.

இவ்வாறான சூழலில் அங்கு குழுமியிருந்த அடியவர்கள் ஒன்று சேர்ந்து பக்தி பரவசத்துடன், சிவபுராணம் இசைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு சிவபுராணம் இசைத்து வழிபாடுகளில் ஈடுபடுவதைக் குழப்புகின்றவகையில் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் சத்தமாகக் கூச்சலிட்டனர்.

அத்தோடு நின்றுவிடாமல் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குரிய திரிசூலம் இருந்த பகுதிக்குள் நுழைந்த பெரும்பாண்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் பௌத்த பாராயணங்களை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குறித்த திரிசூலம் இருந்த பகுதிக்குள் நுழைவதற்கு தமிழ் மக்களை நுழையவிடாத பொலிசார், பெரும்பாண்மை இனத்தவர்களையும், பௌத்த தேரர்களையும் எவ்வாறு நுழைய விட முடியுமென அங்கிருந்த தமிழ் மக்களால் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அங்கு சிறிய குழப்ப நிலையும் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து பெரும்பாண்மை இனத்நவர்களும், பௌத்த தேரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு பொலிசாரால் வலியுறுத்தப்பட்டது.

▪︎ தமிழ் மக்களை வெளியேற்ற முயன்ற பொலிஸ்; கலவரபூமியானது குருந்தூர்மலை

பொலிசார் வெளியேறுமாறு கூறிய நிலையில், சிறிது நேரம் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களால் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இருப்பினும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொலீசார் தெரிவித்ததுடன், அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜதீபன், க.சிவநேசன் உள்ளிட்டவர்களை பொலீசார் கீழே தள்ளி வீழ்த்தினர். சமூகசெயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியனைப் பொலிசார் தாக்கியதில் அவருக்கு சிறிய அளவிலான காயங்களும் ஏற்பட்டன.

தொடர்ந்து அங்கிருந்த தமிழ் மக்களுக்கும்,  பொலிசாருக்குமிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போது அங்கிருந்த பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

பொலிசாரின் இத்தகைய செயற்பாட்டிற்கு தமிழ் மக்கள் தமது கடுமையான கண்டனங்களை இதன்போது தெரிவித்திருந்தனர்.

இவ்வாறாக சிறிது நேரம் குருந்தூர்மலைப் பகுதி கலவரபூமியாகக் காணப்பட்டது.

▪︎ சிறிதுநேரம் வழிபாட்டிற்கு கால அவகாசம் வழங்கிய பொலிசார்; விசேட பால் அபிஷேகவழிபாட்டில் ஈடுபட்ட தமிழ் மக்கள்

இந் நிலையில் சிறிதுநேரம் பொலிசாரால் வழிபாட்டிற்கென தமிழ்மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் தேவார பாராயணங்கள் பாடப்பட்டு, திரிசூலம் இருந்த பகுதியின் வாயிலில், பூச்சொரிந்து, தேங்காய்கள் உடைக்கப்பட்டு, பாலால் அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.  R

image_f1749ad633.jpgimage_cbe88c40f0.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_b1158595bd.jpg


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

இந்த நாட்டில் பௌத்த கலாச்சாரங்கள் தான் இருக்கின்றது என எனக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பௌத்த கலாச்சாரந்தான் கொடிகட்டிப்பறக்கிறதே! அதை மறைக்க தமிழரை சீண்டுவதும், அடுத்தவர் மீது பழியைப்போட்டு தம்மை சுத்தமாக விளம்பரப்படுத்துவதும் அந்த இனத்தின், மதத்தின் பாரம்பரியம். பிக்குகளை, பௌத்தத்தை அவமானப்படுத்துவதற்காக புலம்பெயர்ந்தோர் பணத்தை வழங்கி அவர்களுக்கெதிரான காணொளிகளை திட்டமிட்டு தயாரிக்கின்றனர் என்று கருத்திட்ட ஒருவர் அதே நேரம், பிக்குகளிடம் நூறு வீதம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கமுடியாது என்று பொருளாதாரத்தை காரணம் கூறுகிறார். என்ன ஒரு அறிவார்ந்த, அருமையான விளக்கம். அவர்கள் எல்லாம் சொர்கத் தங்கம், எல்லாம் புலம்பெயர்ந்தோர் செய்யும் வேலை இது. நாட்டிலே எது நடந்தாலும் அதற்கு பின்னால் இருப்பது புலம்பெயர்ந்தோரும் அவர்கள் பணமுமே. அவர்களது திட்டத்திற்க்கும் பணத்திற்கும் பின்னால் பிக்குகள், விகாரைகள், மகாசங்கத்தினர், காணொளி பிடிப்போர், பகிர்வோர் செயற்படும்போது போது, எப்படி இவர்களால் தமிழர் நிலங்களில் விகாரைகளை கட்டவும் அடாவடி பண்ணவும் தவறான பரப்புரைகளை செய்யவும் பௌத்தத்தை, நாட்டை காப்பாற்ற நிர்வகிக்க முடியும்? பிறகு எதற்கு இவர்களுக்கு பதவி? என்ன சொல்கிறோம், ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை உணர்வதில்லை. தங்களை, அந்த மக்களை, தாமே தரம் தாழ்த்துகிறோம் என்பதை அறியவில்லையோ? பரவணிக்குணத்தை யாரால் மாற்ற முடியும்? உலகமே தலைகீழாகத்தான் இயங்குகிறது. அன்று தமிழர் பிரதேசங்களில் இருந்த அவர்களது மத வழிபாட்டுத்தலங்கள் மக்களோடு சேர்த்து குண்டு போட்டு அழிக்கப்பட்டது, உயிர்த்த ஞாயிறு வழிபாட்டில் காரணமில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர், அதற்கு எதிராக எந்த தீர்மானமும் கொண்டு வராத ஐ .நா. சபை, சுவீடனில் குரானை எரித்த அதே மத்தைச் சார்ந்த ஒருவரை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இலங்கை இத்தனை அட்டூழியங்களையும்  மற்றைய மதங்களை குறிவைத்து நடத்திவிட்டு இன்னும் நடத்திக்கொண்டு விழுந்தடித்துக்கொண்டு கண்டனம் தெரிவித்திருக்கின்றதென்றால் நினைத்துப்பாருங்கள் உலகத்தின் இரட்டை நிலையை! பாதிக்கப்பட்டவன் முறையிடுகிறவனே குற்றவாளி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகத்தாருக்குப் போட்டியாக வந்தவருக்கு உது தெரியுமோ ? 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஆறுமுகத்தாருக்குப் போட்டியாக வந்தவருக்கு உது தெரியுமோ ? 

😏

அவர் இன்னும் சைவ தமிழ் தொண்டில் அமளி. பௌத்தத்தின் மானம் காத்த தமிழர்1 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

 

இந் நிலையில் நிலத்தில் தீ படாதவாறு, கற்களை வைத்து, அதற்குமேல் தகரங்களை வைத்து, அதற்குமேல் மூன்று கற்களை வைத்து பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடலாம்என தொல்லியல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

 

நெருப்பு வைத்தால் நிலம் எரிந்து விடும் என்றும், பூமி சூடாகிவிடும் என்று பயந்துவிடடார்கள் போல. தமிழனை எரித்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக வடக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கு ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை பாத்துக்கொண்டிருந்ததாவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விவகாரத்தில் பொலிஸாரும் உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதோசத்தை முன்னிட்டு குருந்தூர்மலை பகுதியில் பொங்கல் நிகழ்வை மேற்கொள்ள தமிழ் மக்கள் முற்பட்டபோது அங்கு வந்த தேரர்கள் மற்றும் சிங்கள மக்களால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.

a-450x600.jpg

https://athavannews.com/2023/1339565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரஞ்சித் said:

என்ன செய்யலாம்? 

என்னத்தைக் கூறுவது. நாமெல்லோரும் விடுமுறைக்கு சிறிலங்காவுக்கு உல்லாசப்பயணம் போகத்தயாராகிக் கெகாண்டிருப்பதால் இவற்றையெல்லாம் சிந்திக்கமுடியாது. மன்னிக்கவும். நாம் தாயக உறவுகளான உங்களது துன்பங்களை  புலம்பெயர் வாழ்வாக அறுவடை செய்தோம். இப்போது அதன்பயனாக மீண்டும் உல்லாசமாகச் சிறிலங்கா போகின்றோம். பயணச்சீட்டும் பயணப்பொதியும் தயார். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

என்னத்தைக் கூறுவது. நாமெல்லோரும் விடுமுறைக்கு சிறிலங்காவுக்கு உல்லாசப்பயணம் போகத்தயாராகிக் கெகாண்டிருப்பதால் இவற்றையெல்லாம் சிந்திக்கமுடியாது. மன்னிக்கவும். நாம் தாயக உறவுகளான உங்களது துன்பங்களை  புலம்பெயர் வாழ்வாக அறுவடை செய்தோம். இப்போது அதன்பயனாக மீண்டும் உல்லாசமாகச் சிறிலங்கா போகின்றோம். பயணச்சீட்டும் பயணப்பொதியும் தயார். 
 

இல்லை, நாம் மீண்டும் போராடவேண்டும் நொச்சி. இந்த இழிவாழ்வு போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

இல்லை, நாம் மீண்டும் போராடவேண்டும் நொச்சி. இந்த இழிவாழ்வு போதும். 

உண்மை, அதைத்தவிர வேறு வழியைச் சிங்களம் தரப்போவதில்லை. ஆனால் எமது தலைவன்போன்ற ஒரு தலைமையை நாம் காணமுடியுமா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nochchi said:

உண்மை, அதைத்தவிர வேறு வழியைச் சிங்களம் தரப்போவதில்லை. ஆனால் எமது தலைவன்போன்ற ஒரு தலைமையை நாம் காணமுடியுமா?

காலம்  இன்னொரு தலைவனை உருவாக்கும் நொச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

காலம்  இன்னொரு தலைவனை உருவாக்கும் நொச்சி!

ஆழ்மனதில் அப்படியொரு  நம்பிக்கையே இன்னும் வாழச்சொல்கிறது. நம்புவோம் எம் தேசம் மலருமென்று நம்புவோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் அமைதியின்மை - நடந்தது என்ன?

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் அமைதியின்மை நிலவியதால் பதற்றம்
 
படக்குறிப்பு,

"தொல்பொருள் அடையாளங்களில் காணப்படும் சிதைவுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியும்" - நீதிமன்றம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் நேற்று அமைதியின்மை நிலவியது. புத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த அமைதியின்மைக்கு காரணம்.

முல்லைத்தீவு பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள இடமே குருந்தூர்மலை.

இந்தப் பகுதியில் பௌத்த விகாரை ஒன்றும், ஆதிசிவன் ஐயனார் ஆலயமும் காணப்படுகின்றன.

இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குருந்தூர் மலைப் பகுதியில் இதற்கு முன்னர் கூம்பக வடிவிலான பண்டைய கால கட்டடமொன்றின் சிதைவுகள் காணப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது பௌத்த விகாரையொன்றின் சிதைவுகள் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்து மத விழுமியங்களை பின்பற்றுகின்ற அப்பகுதி மக்கள் இந்த கட்டட இடிபாடானது இந்து மத வழிபாட்டுத் தலம் ஒன்றின் இடிபாடுகள் எனக் கூறியிருந்தனர்.

அதற்கு ஆதாரமாக தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வின் மூலம் வெளியில் எடுக்கப்பட்ட எண்கோண வடிவிலான சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை ஆதாரம் காட்டுகின்றனர்.

இந்தப் பின்னணியில், தொல்பொருள் அடையாளங்களில் காணப்படும் சிதைவுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியும் என நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது.

எனினும், சிதைவடைந்திருந்த விகாரை, பின்னரான காலத்தில் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் கூறுகின்றனர்.

தமிழர்கள் வழிபாடுகளுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிங்கள பௌத்த மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்
 
படக்குறிப்பு,

தமிழர்கள் வழிபாடுகளுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிங்கள பௌத்த மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

 

இந்த நிலையில், குறித்த பகுதிக்குள் சென்று வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தொல்பொருள் திணைக்களத்தால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமையவே இந்தப் பகுதிக்குள் சென்று வழிபாடுகளில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த இடத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றத்தால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குருந்தூர்மலை பகுதிக்கு, முல்லைத்தீவு நீதிபதி தலைமையிலான குழுவொன்று கடந்த 4ஆம் தேதி பயணம் செய்து விடயங்களை ஆராய்ந்திருந்தது. அப்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, குருந்தூர்மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் பொங்கி, வழிபாடுகளை நடத்த இந்துக்கள் தீர்மானித்திருந்தனர்.

இந்த நிலையில், குருந்தூர்மலையில் சில தரப்பினர் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்து வருவதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் பிக்கு ஒருவர் முறைபாடொன்றை செய்திருந்தார்.

இதையடுத்து, இந்த பொங்கல் பொங்கும் நிகழ்வை நடத்துவதன் ஊடாக அமைதியின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதைத் தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறும் போலீசார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்திருந்தார்.

இதையடுத்து, பௌத்த மக்கள் நேற்று தினம் குருந்தூர் மலைக்கு வருகை தந்து காலை வேளையில் மத வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இதன்படி, இன்றைய தினம் குறித்த பகுதிக்கு தமிழர்கள் வழிபாடுகளுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிங்கள பௌத்த மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அமைதியின்மை ஏற்பட்டது.

இரு சமயத்தினரும் மாற்றி மாற்றி கோஷஷங்களை எழுப்பி கொண்டனர்
 
படக்குறிப்பு,

இரு சமயத்தினரும் மாற்றி மாற்றி கோஷஷங்களை எழுப்பி கொண்டனர்

 

குறித்த பகுதி புத்த மதத்திற்குச் சொந்தமானது எனவும், இது தொல்பொருள் பெறுமதி வாய்ந்தமை என்பதால் தீ பற்ற வைப்பதற்கு முடியாது எனவும் தெரிவித்து பௌத்த பிக்குகள் தலைமையிலான பௌத்த மக்கள் குழுவொன்று எதிர்ப்பை வெளியிட்டது.

பௌத்த விகாரை அமைந்துள்ள பகுதியிலிருந்து, இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதியை நோக்கி வருகை தந்த பௌத்த மக்கள், இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்துக்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்ததை அடுத்து, அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பௌத்த மக்கள் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து, இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்த மற்றுமொரு பௌத்த பிக்குகள் குழு, தமது மத அனுஷ்டானங்களை நடத்த ஆரம்பித்தனர்.

இதையடுத்து, அந்த இடத்திலிருந்த இந்து மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு, பௌத்த பிக்குகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது, அந்த இடத்திலிருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த முயன்றனர்.

எனினும், இரண்டு தரப்பினரும் போலீஸாரின் பேச்சுகளை செவிமடுக்காது, தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனால், இரண்டு தரப்பினரையும் அந்த இடத்திலிருந்து கலைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

பௌத்த மக்களை வலுக்கட்டாயமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தம்மை வெளியேற்றுவதைப் போன்று, இந்துக்களையும் அங்கிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மக்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்ததால், போலீசார் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

பின்னர், அங்கு அமர்ந்திருந்த இந்துக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, போலீசாருக்கும், இந்துக்களுக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

எனினும், தமது வழிபாடுகளை நடத்தாமல் குறித்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது என இந்துக்கள் தெரிவித்ததை போலீசார் பின்னர் ஏற்றுக்கொண்டனர்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்குவதாகவும், ஆனால் தீ பற்ற வைத்து பொங்கல் சமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது எனவும் போலீஸார் இந்துக்களிடம் கூறியிருந்தனர்.

அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து, 30 நிமிடங்களில் வழிபாடுகளை நடத்தி அங்கிருந்து வெளியேறுமாறு போலீஸார், இந்துக்களிடம் தெரிவித்திருந்தனர்.

அதற்கு ஏற்றாற்போல், வழிபாடுகளை ஆரம்பித்த இந்துக்கள், போலீசாரின் உத்தரவுக்கு அமைய குறித்த நேரத்தில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன் காரணமாக, நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியது.

குருந்தூர் மலையிலிருந்து பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் அனைவரையும் வெளியேற்றி, பின்னர் பாதுகாப்பு பிரிவினரும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று காலை முதல் குறித்த பகுதியில் போலீஸார், விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தாம் பொங்கல் பொங்க முயன்றபோது, அதை வன்முறையாளர்கள் தடுத்ததாக யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமி குறிப்பிட்டார்.

வழிபாடுகளை நடத்தாமல் குறித்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது என இந்துக்கள் தெரிவித்தனர்
 
படக்குறிப்பு,

வழிபாடுகளை நடத்தாமல் குறித்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது என இந்துக்கள் தெரிவித்தனர்

 

''கற்களை வைத்து, அதற்கு மேல் தகரத்தை வைத்து, தகரத்திற்கு மேல் கற்களை வைத்து பொங்கலை பொங்குமாறு தொல்பொருள் அதிகாரிகள் கூறினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்கள் பொங்கல் பொங்கும்போது, பஞ்சபூத தத்துவங்களில் ஒன்றான தீயானது, பூமாதேவியில் படவேண்டும். அவ்வாறு பொங்குவதுதான் சிறப்பாக இருக்கும். சூரியன், இயற்கை அன்னை இருக்கின்ற இடத்தில் அந்த வழிபாடு செய்யப்பட வேண்டும்.

ஆனால் சமாதானத்தை குழப்பக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக தான் விட்டுக்கொடுத்து நாங்கள் நிலத்திலே பொங்காமல், கல் வைத்து, தகரம் வைத்து மீண்டும் கல் வைத்து பொங்கல் பொங்குவதற்கு இணங்கினோம். அதைக்கூட செய்ய முடியாமல் போனது." என்றார்.

மேலும் இலங்கை போலீசார் தங்களிடம், "சமாதானத்தை குழப்புகின்ற நிலைப்பாடு இருக்கின்ற காரணத்தினாலே நீங்கள் இங்கே நெருப்பு வைத்துப் பொங்க முடியாது," என கூறியதாகத் தெரிவித்தனர்.

"தொல்பொருள் திணைக்களம் சொல்கின்ற விதத்தில் செயற்பட்டபோது, சில வன்முறையாளர்கள், பொங்கல் வைக்கின்ற தகரத்தையும் கற்களையும் காலாலே எட்டி உதைத்தார்கள். வன்முறையைத் தூண்டுகின்ற செயற்பாட்டை அந்த சமூகம் செய்துகொண்டிருக்கின்றது," என வேலன் சுவாமி தெரிவிக்கின்றார்.

பௌத்த புக்குகள் இந்த இடத்தில் வன்முறையைத் தூண்ட முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

''சைவ வழிபாடுகள் இடம்பெறும் இடம் இது. 1000 ஆண்டுகளுக்கு மேல் இந்த இடத்திலே ஆதி சிவன் வழிபாடு நடைபெற்ற இடமாக இருந்து வருகிறது. இந்த இடத்திலே ஒரு லிங்கத்திற்கு மேல் ஐந்து தலை நாகங்களைக் கொண்ட ஓர் உருவம் 100 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றது என்பதற்கு வரலாற்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, சிவனுடைய அடையாளமான சூலம் இந்த வழிபாட்டில் முக்கியமான ஒரு பொருளாக இருந்தது. இந்த இடத்தை தற்போது ஆக்கிரமித்து வைத்துள்ள சிங்கள பௌத்தவர்கள், இந்த இடத்தை சிங்கள பௌத்த அடையாளமாக மாற்ற முயல்கின்றனர்.

இதை அண்டிய பகுதியில் அவர்கள் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட அப்பாவி மக்கள், இந்தப் பொங்கல் விழாவிற்கு எதிராக தூண்டிவிடப்பட்டிருக்கின்றார்கள்.

இதில் வன்முறையை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. பௌத்த தேரர்கள் வன்முறையை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்," என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், குருந்தூர் மலை விகாரையானது, அநுராதபுரம் யுகத்திற்கு முன்னரான காலத்திற்குச் சொந்தமானது என குருந்தூர் விகாரையின் விகாராதிபதி பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

குருந்தூர் மலையிலிருந்து பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் அனைவரையும் வெளியேற்றி, பின்னர் பாதுகாப்பு பிரிவினரும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
 
படக்குறிப்பு,

குருந்தூர் மலையிலிருந்து பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் அனைவரையும் வெளியேற்றி, பின்னர் பாதுகாப்பு பிரிவினரும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

 

''தொல்பொருள் ரீதியில் பொலன்னறுவை பகுதியில் சிவன் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆலயத்தை உடைக்க பௌத்தர்கள் யாரும் செல்லவில்லை.

பல பௌத்த விகாரைகளுக்கு நடுவிலேயே சிவன் ஆலயம் உள்ளது. நாம் அந்த ஆலயத்தை வணங்குகின்றோம். மதிப்பளிக்கின்றோம். அனைத்து பௌத்தர்களும் அதைப் பாதுகாக்கின்றனர்.

இந்த இடத்தில் இரு சமூகங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். உண்மையான இந்து அடையாளங்கள் இலங்கையில் இருக்கின்றன. அதைப் பாதுகாக்க வேண்டும். அவற்றைப் பாதுகாக்க அவர்கள் செல்வார்களாயின், அது எமக்குப் பிரச்னை கிடையாது.

எந்தவொரு இனத்தவரும் இந்தப் பிரதேசத்திற்கும் வருகை தர முடியும். விகாரையை வணங்க முடியும். பார்வையிட முடியும். முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமிழ் மக்களின் உரிமை இது.

தமது பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையைப் பாதுகாக்க வேண்டும். மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றனர்," என குருந்தூர் விகாரையின் விகாராதிபதி தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c2l95xvj77no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் மதப்பிரச்சனையோ, வழிபாட்டுப்பிரச்சனையோ, தொல்பொருளியல் பிரச்சனையோவல்ல. சொறிஞ்ச கை  சும்மா இராது. தமிழரை கொன்று சேகரித்த கை மீண்டும்  அரிப்பெடுக்குது. ஒரு கலவரத்தை திணித்து மீண்டும் தமிழரை இல்லாதொழிக்க முயற்சிக்கிறார்கள். உண்மையிலேயே தங்கள் மதத்தை அவர்கள் மதித்திருந்தால் மற்றைய மதத்தினரின் வழிபாட்டிடங்களில் தூய்மையை கடைப்பிடித்திருப்பர். இது அவ்வளவும் திமிர். "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்." அவர்களின் வழிபாட்டு உரிமையை பறித்து, தடுத்து செய்யப்படும் வழிபாடு வழிபாடேயல்ல. தங்கள் மதத்தையும் அவர்கள் மதத்தையும் அவமதிக்கும் செயல். இது உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் கடன் உதவி செய்யும் வரை, ஐ. நா. இவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க தாமதிக்கும்வரை இந்த அடாவடி தொடரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர் ஆனை எரித்ததற்காக தீர்மானம் கொண்டு வந்தவர்கள், இந்த அராஜகத்தை  மௌனமாக வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன? மீண்டும் ஒரு இனவழிப்புக்கு  சந்தர்ப்பம் வழங்குகிறார்களா? முன்பு மூட்டையை கட்டிக்கொண்டு வெளியே போய்    நின்று கொண்டு எமது அழிவை வேடிக்கை பார்த்தார்கள், இப்போ கால அவகாசத்தை வழங்கி ஊக்கப்படுத்துகிறார்கள் அழிவை, வேதனையை ரசிக்கும் கூட்டம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை, ஊடக அடக்குமுறை : பொலிசாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: VISHNU

17 JUL, 2023 | 05:17 PM
image
 

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 14.07.2023 அன்று சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் திங்கட்கிழமை 17.07.2023 முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் ஆகியோரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பெரும்பாண்மை இனத்தவர்களாலும் மற்றும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன், பொங்கலுக்காக அங்கு தீமூட்டப்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும், பெரும்பாண்மை இனத்தவர் ஒருவராலும் சப்பாத்துக்கால்களால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.

அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலீசாரால் தாக்கப்பட்டுமிருந்தனர்.

இந் நிலையில் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவ வழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு குறித்த நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தள்ளிவிடப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.

குறிப்பாக சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடக அடக்குமுறை என்பவற்றில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/160246

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம் ; தொல்லியல் திணைக்களம் நீதிமன்றத்தில் உறுதி

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 04:15 PM
image
 

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே நகர்த்தல் பத்திரம் மூலம் நடைபெற்று கொண்டிருந்த குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (08) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகளின் பின்னர் சட்டத்தரணி தனஞ்சயன் கருத்து தெரிவிக்கும் போது, குருந்தூர்மலை வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த தவணையிலே பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்தோம். 

அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் தொல்லியல் திணைக்களம், சட்டமா திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றியிருந்தார்கள். 

இந்நிலையில், தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபடதடை செய்ய இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆலய பரிபாலனசபை மக்கள் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலரும், ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக பல சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆதிசிவன் ஐயனர் ஆலயம் சார்பாக இந்த வழக்கில் தோன்றியிருந்தார்கள். இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக இந்த வழக்கானது எதிர்வரும் 31.08.2023 க்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161895

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி விடடோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.