Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை!

தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை!

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தமிழ் பிரதிநிதிகள், இது அவசியமானது அல்ல என்றும் சமஷ்டி முறையிலான தீர்வே தங்களுக்கு வேண்டும் என்றும் வெளியே சென்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

நான் இவர்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கனவுக் கணாதீர்கள்.

சமஷ்டி கோரிக்கையுடன் வட்டுக்கோட்டைவரை சென்று, மீண்டும் 2009 ஆம் ஆண்டு இந்நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இரத்த ஆறுக்கு மத்தியில் திரும்பி வந்துள்ளது.

இவ்வாறு இருக்க மீண்டும் யுத்தமொன்றையா நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? அப்படியென்றால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அன்று சரத்பொன்சேகாவுடன் இணைந்து, சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்வோம் என்றே யாழில் கூறியிருந்தார்.

அப்படியென்றால், இப்போது ஏன் இதற்கு மாறான ஒரு கருத்தை இவர்கள் வெளியிட வேண்டும்?

அதுவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே ஏன் இவ்வாறு கூற வேண்டும்?
இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க இடமளிக்க முடியாது. இனியும் இந்நாடு இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்காது.

எனவே, மீண்டும் இதற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிட வேண்டாம் என நான் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இது எச்சரிக்கை கிடையாது. உண்மையைத்தான் கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள அப்பாவி விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமெரிக்கா தூதுவரையும், இந்திய உயர்ஸ்தானிகரையும் மகிழ்ச்சிப் படுத்த நாம் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது.

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயணம் முடிவடையும் முன்னரே சமஷ்டியைக் கோருவதை, வடக்கு மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதனை நான் வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற வகையில் உறுதியாகக்கூறுகிறேன்.

தமிழ் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1340659

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நியமன பா.உ மாறாத பற்று/நன்றியுணர்விற்காக இவ்வளவு கீழான நிலைக்கு இறங்குவாரா?!

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு அவரை இவரெல்லாம் தழரா தமிழ்த்தாய் தந்தைக்குப் பிறந்தவரா என கேட்டு எழுதாதையுங்கோ அவர் கமிழராக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுறார்.

கடந்தமுறை காங்கேசந்துறையில் காணி விடுவிக்கும்போது இவரது பெருமளவினான காணிகள் விடுவிச்சாச்சு அதற்காகத்தான் அவங்கள் காணியை விடுவிச்சவங்கள் இதை சம் சும் மாவை கஜே ஆகியோருக்கு நன்றாகவே தெரியும் அதனால்தான் மிச்சக்காணிகளையும் விடுங்கோ என அவர்கள் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை.

அந்த நன்றிக்கடனுக்காகத்தான் கூத்தமைப்பும் விக்கியரும் கஜேயும் அரசியல் செய்ய லைன் பிடிச்சுக்கொடுக்கிறார். அவர்கள் இதைவைத்துக் கொஞ்சநாளைக்குக் குறுக்குச்சால் ஓட்டுவினம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ விதத்தில் தமிழர் பிரச்சனை தீர்நதால் இலங்கையில் உள்ள சகல இன அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வரும்.அந்தப்ப பயம் இருக்கும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

முழுசா சந்திரமுகியாக மாறி நிற்கும் கங்காவை பார்..

jyothika-45220m1-db0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

துரையப்பா.. வாரிசுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அங்கஜனை வென்றிடுவார் போல இருக்குது. 

இவரைப் பொறுத்த வரை தன் பிழைப்பை புகழை.. ஓட்டுவதற்கு தமிழ் மக்கள் மீது சவாரி செய்வதற்கு.. சமஷ்டி எதற்கு தனிநாடு எதற்கு. காலில விழ.. தோப்புக்கரணம் போட.. காட்டிக்கொடுக்கத் தெரிந்தால்.. போதும். இதனை யாரும் செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

உறங்கிக்கொண்டிருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் எழுப்ப முயற்சிக்க வேண்டாம் - சுரேன் ராகவன் 

Published By: VISHNU

20 JUL, 2023 | 08:23 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தமிழ் தேசியவாதிகள் அதிகார பகிர்வை கோரி நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். ஒருபோதும் அதிகார பகிர்வு கிடைக்கப்போவதில்லை. அத்துடன் வடக்கு மக்களும் இதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல்வாதிகளுடன் அதிகார பகிர்வு தொடர்பில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளில் அமர்ந்த தமிழ்த் தேசியவாதிகள் வெளியில் சென்று இது அவசியமில்லை. அதிகாரபகிர்வு இன்றி இதனை முடிக்கப் போவதில்லை என்று கூறுகின்றனர்.

கனவு காண வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்கின்றேன். அதிகார பகிர்வுகோரி வட்டுக்கோட்டை வரை சென்று மீண்டும் 2009 வரை இந்நாட்டு இளைஞர்களை இரத்த களரிக்குள் கொண்டு சென்றனர். மீண்டும் யுத்தத்தையா கேட்கின்றீர்கள்?

அன்றைய கூட்டத்தில் சம்பந்தன் இருந்தார். அவர் சரத் பொன்சேகாவுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கக்கொடியை அசைத்து பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வுக்குள் போவோம் என்று அன்று உறுதியளித்தார்.

 அப்படியென்றால் எப்படி இன்று வந்து பேச்சுவார்த்தை நடக்கும் போது ஒழுக்கத்தை மீறி வெளியில் சென்று அதிகாரபகிர்வை தவிர நாங்கள் எதனையும் ஏற்கமாட்டோம் என்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கின்றேன். இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரிவினை வாதத்திற்கு நாடு முகம்கொடுக்காது. 

மீண்டும் யுத்தத்திற்குள் தள்ள வேண்டாம். உறங்கிக்கொண்டிருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் எழுப்ப முயற்சிக்க வேண்டாம்.

எங்களுக்கு சர்வதேசத்தை மகிழ்விக்கவும், அமெரிக்க, இந்திய தூதுவர்களை மகிழ்விக்கவும் முடியும். ஆனால் அதுவல்ல நடக்க வேண்டியது. அனைத்து இனங்களில் உரிமைகளுக்காகவும் பொதுவில் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வோம்.

பயணத்தை ஆரம்பிக்க முன்னரே பிரிவினை வாதம், அதிகார பகிர்வு தொடர்பில் கூறினால் அதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. வடக்கு மக்கள் இதற்கு இடமளிக்கப் போவதில்லை. அடுத்த தேர்தலில் தோல்வியடையும் தமிழ் தேசிய வாதிகள் முன்னெடுக்கும் இந்த செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு என்றார்.

https://www.virakesari.lk/article/160525

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பயபுள்ள ஒரு பௌத்தன், சிங்கள விசுவாசி, இந்த லட்ஷணத்தில ஆளுநர் பதவி இறக்கப்பட்டபின் த .தே. கூட்டமைப்புக்குள் நுழைந்து மிகுதி ஓட்டத்தை தொடர விரும்பியவர், சம்பந்தனும் பச்சைக்கொடி காட்டினார். ஆனால் தான் ஒருவரே போதும் தமிழரை ஏமாற்றி விழுத்த வேறொருவரை அதில் இணைக்க  சுமந்திரன் விரும்பவில்லை. அதனால் அவரின் கனவு பாதியிலே கலைந்தது. சிங்களம் ஒவ்வொருவரை தேடிப்பிடித்து கொண்டுவந்து உள்நுழைக்கும் தமிழரை இல்லாமல் செய்வதற்கு. காரணம்; நல்ல முடிவெடுத்து உண்மையாக உழைக்கும் தலைமை இல்லா ஏதிலிகள் தமிழர், தனது பக்கம் எதிர்ப்பு திரும்பாமல் எப்போதும் தமிழரை குற்றவாளிகளாகவும் அடிமைகளாகவும் வைத்திருப்பதற்கு ஊழைக்கும்பிடு போட்டு நக்கிப்பிழைக்கும் கூத்தாடிகள் தேவை அதற்கு. எப்போதாவது ஒரு சிங்களவர் தமது தலைவர்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை அனிஞாயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? ஏன் தமிழர்மட்டும் இப்படி? சுரேன் தமிழர் என்று சொல்லலாம் ஆனால் அவர் பூர்வீகம் இலங்கையல்ல, சந்தர்பத்திற்கேற்ப அவர் தமிழர் என்று மாற்றிக்கொண்டாலும் அவர் சிங்களத்தின் விசுவாசி. அதை சிங்களம் பாவித்துக்கொள்கிறது. இழப்பு, இறப்பு, இடப்பெயர்வு ஏதும் அனுபவிக்காதவர். அதன் வலி புரியாதவர். தமிழர் பற்றி கருத்து தெரிவிக்க உரிமையற்றவர். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இந்தப்பயபுள்ள ஒரு பௌத்தன், சிங்கள விசுவாசி, இந்த லட்ஷணத்தில ஆளுநர் பதவி இறக்கப்பட்டபின் த .தே. கூட்டமைப்புக்குள் நுழைந்து மிகுதி ஓட்டத்தை தொடர விரும்பியவர், சம்பந்தனும் பச்சைக்கொடி காட்டினார். ஆனால் தான் ஒருவரே போதும் தமிழரை ஏமாற்றி விழுத்த வேறொருவரை அதில் இணைக்க  சுமந்திரன் விரும்பவில்லை. அதனால் அவரின் கனவு பாதியிலே கலைந்தது. சிங்களம் ஒவ்வொருவரை தேடிப்பிடித்து கொண்டுவந்து உள்நுழைக்கும் தமிழரை இல்லாமல் செய்வதற்கு. காரணம்; நல்ல முடிவெடுத்து உண்மையாக உழைக்கும் தலைமை இல்லா ஏதிலிகள் தமிழர், தனது பக்கம் எதிர்ப்பு திரும்பாமல் எப்போதும் தமிழரை குற்றவாளிகளாகவும் அடிமைகளாகவும் வைத்திருப்பதற்கு ஊழைக்கும்பிடு போட்டு நக்கிப்பிழைக்கும் கூத்தாடிகள் தேவை அதற்கு. எப்போதாவது ஒரு சிங்களவர் தமது தலைவர்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை அனிஞாயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? ஏன் தமிழர்மட்டும் இப்படி? சுரேன் தமிழர் என்று சொல்லலாம் ஆனால் அவர் பூர்வீகம் இலங்கையல்ல, சந்தர்பத்திற்கேற்ப அவர் தமிழர் என்று மாற்றிக்கொண்டாலும் அவர் சிங்களத்தின் விசுவாசி. அதை சிங்களம் பாவித்துக்கொள்கிறது. இழப்பு, இறப்பு, இடப்பெயர்வு ஏதும் அனுபவிக்காதவர். அதன் வலி புரியாதவர். தமிழர் பற்றி கருத்து தெரிவிக்க உரிமையற்றவர். 

இவனெங்கிருந்து வந்தவன். தமிழானா அல்லது ..... அல்லது ... வனா?  பதவிக்காகக் கூவுவதைவிடத் வீதியிலே துண்டைப்போட்டிருந்தும் சுகமாக வாழலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பேசும்போது தூங்கும் சிங்கள இளைஞர்களை தட்டி எழுப்பவேண்டாமென்று சரத் வீரசேகராவிவிட ஒருபடி மேலே போய் அங்கு கூவி இருக்கிறார். அதாவது தனது பதவியை பாதுகாத்துக்கொள்ள எந்த இழிவான , தமிழனை காட்டிக்கொடுக்கும் நிலைமைக்கும் போக தயாராக இருக்கும் ஒருவர்தான் இவர். காலத்துக்குக்காலம் வந்து போகும் எட்டப்பர்களில்   ஒருவர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2023 at 05:50, தமிழ் சிறி said:

தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை!

அரசு போடும் எலும்புக்காக ரொம்பவும் குரைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ போட்டி சரத் வீரசேகர, அலிசப்ரி, சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் யார் அதிகமாக  தமிழருக்கு எதிராக கூவுவது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

இவர் பேசும்போது தூங்கும் சிங்கள இளைஞர்களை தட்டி எழுப்பவேண்டாமென்று சரத் வீரசேகராவிவிட ஒருபடி மேலே போய் அங்கு கூவி இருக்கிறார். அதாவது தனது பதவியை பாதுகாத்துக்கொள்ள எந்த இழிவான , தமிழனை காட்டிக்கொடுக்கும் நிலைமைக்கும் போக தயாராக இருக்கும் ஒருவர்தான் இவர். காலத்துக்குக்காலம் வந்து போகும் எட்டப்பர்களில்   ஒருவர். 

ஆம்! இவர் தமிழரின் முதுகின்மேல் சவாரி செய்து சிங்களத்தை காப்பாற்ற ஆளுநராக அனுப்பப்பட்டவர், அது முடிய தமிழருக்குள் உள்நுழைந்து கழுத்தறுக்க முற்பட்டவர், அது இயலாமல் போனதால் சிங்களத்தோடு ஒட்டிக்கொண்டவர் பதவிக்காக. திறமை தேவையில்லை அரசியல் செய்வதற்கு, தமிழரை சீண்டி, சிங்களத்தைபுகழ்ந்து  பிரச்சனையை உருவாக்கத்தெரிந்தால் போதும், இலங்கையில் அவரே திறமை வாய்ந்த அரசியல்வாதி. அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எமது வலி, தேவை, நிஞாயம் அறியாதவர்களுக்கு எங்களின் உரிமை பற்ற்றி கதைக்க நாம் அதிகாரம் கொடுக்கவில்லை. ஆகவேவரலாறு தெரியாத, சம்பளத்துக்கு கூவும் இவர் போன்றவர்களின் கருத்துக்களுக்கு நாம் செவிசாய்க்கத் தேவையில்லை. அழிவை நோக்கி பயணிக்கும் சிங்களம் இப்படியான அரைகுறைகளை கூவ விட்டு தான் பெரியவர் என மகிழட்டும். தான் மாட்டிக்கொண்டதும்; அது அவர்களின் கருத்து, அதை அரசின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கைகழுவி விடும். அதன்பிறகு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் மறைந்து விடுவார்கள் இவர்கள். அதுவரை குதிக்கட்டும், கத்த விட்டு வேடிக்கை மட்டும் பாருங்கள், தாங்களாகவே சிக்கிக் கொள்வார்கள். 

இது வேறொரு நாட்டில் பணிபுரிந்தது, சிங்கள அரசால் வரவழைக்கப்பட்டது என நினைக்கிறேன் தன்னை இழிவு படுத்துவதற்காக. அருமந்தாப்போல அமெரிக்காவில இருந்த கோத்தா, பதவியை கண்டவுடன் விழுந்தடித்து ஓடி வந்து, இப்போ சிக்கலில் மாட்டியிருப்பதுபோல இவரும் ஒருநாள் முழிப்பார். அப்போ; இருந்த கொப்புமில்லை பிடிச்ச கொப்புமில்லை இவருக்கு. சிங்கள பதவிகள் கொடுக்கும் பலன் அதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

இப்போ போட்டி சரத் வீரசேகர, அலிசப்ரி, சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் யார் அதிகமாக  தமிழருக்கு எதிராக கூவுவது.

சரத் வீரச்செக்கிற ஒரு சிங்கள பவுத்தன். தனது இனத்துக்காக பேசுவதில் ஒரு நியாயம் இருக்கின்றது.

ராகவன் தமிழ் பெயர் உள்ள சிங்களவன் என்று நினைக்கிறேன். தனது சுய நலத்துக்காக பவுத்த மதத்தை தழுவியவர். எனவே அவர் அப்படி பேசலாம்.

ஆனால் அலி சபரி மிகவும் தந்திர சாலி. அவர்களது மொழியில் இங்கு எழுதினால் நிர்வாகம் அதை அகற்றி விடும். எனவே அதனை இங்கு எழுதவில்லை. அலி சபரி நோகாமல் தந்திரமாக ஊசி ஏற்றுபவர். நல்லவர் போல காட்டி தமிழர்களின் கழுத்தறுப்பவர்கள்தான் இவர்.

முகத்துக்கு முகம் நேராக பேசுபவர்கள்  சரியோ, பிழையோ அவர்களை நம்பலாம். ஆனால் நல்லவர்கள் போல பேசி நடிப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலி சபரி ஒரு நச்சு பாம்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

ராகவன், நேபாள் பூர்வீகமானவர் என நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.