Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி

Published By: RAJEEBAN

11 JUN, 2023 | 11:15 AM
image
 

உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ukraine_missile.jpg

எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.

பக்முத்திற்கு கிழக்காகவும் ஜபோரிஜியாவிற்கு தெற்கிலும் உக்ரைன் படையினர் முன்னேறியுள்ளனர் அங்கிருந்து ரஸ்ய படையினரை நோக்கி நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டுள்ளனர்.

உக்ரைன் படையினர் தங்கள் தாக்குதல்நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் ஆனால் பெரும் இழப்புகளை அவர்கள் சந்தித்துள்ளனர் அது முறியடிக்கப்பட்டுள்ளது என ரஸ்ய ஜனாதிபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157435

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல் - மூன்று கிராமங்கள் மீட்பு - உக்ரைன்

Published By: Rajeeban

12 Jun, 2023 | 10:56 AM
image

ரஸ்ய படையினருக்கு எதிரான பதில்தாக்குதலில் மூன்று கிராமங்களை ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மூன்று கிராமங்களை மீள கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரைனின் பதில் நடவடிக்கைகளில்  அந்த நாட்டிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றிஇது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் வெற்றியை கொண்டாடுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

ukrain_forcess11.jpeg

பிளகோடட்னே என்ற பகுதியில் கட்டிடங்களிற்கு வெளியே உக்ரைன் படையினர் உக்ரைன் கொடிகளை ஏற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

டொனெட்ஸ்க் பிராந்தியம் மீண்டும் உக்ரைனின் கொடியின் கீழ் என உக்ரைன் படையினர் கோசமெழுப்பும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

உக்ரைன் படையினரின் பதில் தாக்குதல்கள் மீள ஆரம்பமாகியுள்ளதை சனிக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிசெய்திருந்தார்.

மூன்று கிராமங்களை இழந்துள்ளதை  மொஸ்கோ இன்னமும் உறுதிசெய்யவில்லை மாறாக தாக்குதல்களை முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/157498

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, vasee said:

 

 

என்ன பரபரப்பு  ரிசியும் கட்சி மாறிட்டார் போல...??

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

 

என்ன பரபரப்பு  ரிசியும் கட்சி மாறிட்டார் போல...??

தனித்து நின்று போராடும் உக்ரேன் வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

 

என்ன பரபரப்பு  ரிசியும் கட்சி மாறிட்டார் போல...??

இல்லை, அவர் மாறமாட்டார் எனவே கருதுகிறேன்.

கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வழங்கிய ஆயுதம், இரஸ்சியாவின் கண்ணிவெடிகளில் இரஸ்சிய இராணுவம் சிக்குவதாக கூறிய இரஸ்சிய அறிக்கையினை வைத்து தானாகவே ஒரு செய்தியினை தயாரித்துள்ளது போல தெரிகிறது, இந்த செய்தியினை எந்த தரப்பும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன்.

நாங்கள் அணிந்து கொண்டிருக்கும் நிறக்கண்ணாடியூடாக பார்த்தால்  அந்த காட்சிகள் அந்த குறிப்பிட்ட நிறத்திலே தெரியும் அதனைதான் Biased என கூறுகிறார்கள்.

18 minutes ago, குமாரசாமி said:

தனித்து நின்று போராடும் உக்ரேன் வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

உங்கள்  நகைசுவை புரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய படைகளிடம் இருந்து 7 கிராமங்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், ரஷ்யா தனது போரை முடிவுக்கு கொண்டுவருவதாக இல்லை.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

15-1.jpg

கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/258177

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - ரஷ்யா இழந்த மிக முக்கிய தளபதி!

நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரின் தொடர்ச்சியாக ரஷ்யாவின் மூத்த தளபதி ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனின் தெற்கு டொனெட்ஸ்க் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலிலேயே கோரியாச்சேவ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - ரஷ்யா இழந்த மிக முக்கிய தளபதி! | Ukraine Russia War Latest News

52 வயதான இவர், போரில் பலியானதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக வகைப்படுத்திய 11 ஜெனரல்களில் ஒருவர் ஆவார்.

மேலும் இவர், படையெடுப்பின் தொடக்கத்தில் 5 ஆவது இராணுவ படைப்பிரிவின் தளபதியாக இருந்ததாகவும் போரின் போது அவர் இராணுவத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

ரஷ்யாவின் இன்றைய தாக்குதல்

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - ரஷ்யா இழந்த மிக முக்கிய தளபதி! | Ukraine Russia War Latest News

இந்த நிலையில், இன்றையதினம் உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://ibctamil.com/article/ukraine-russia-war-latest-news-1686666567

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு ; புடின் அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3

17 JUN, 2023 | 11:32 AM
image
 

பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் உக்ரேன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது.

இந்நிலையில், செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பேசியதாவது,

முதல் கட்டமாக அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும்.

இருப்பினும் பெலாரஸ் நாட்டிற்கு முதல்கட்டமாக அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளோம். முழுமையாக இந்த கோடை முடிவதற்குள் அனுப்பி வைப்போம். பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேற்குலகிற்கு ஒரு எச்சரிக்கை. இவ்வாறு புடின் பேசினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவில் இருந்து அணு ஆயுதங்கள் வந்துள்ளதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகஷென்கோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157900

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு காட்டு மிராண்டி லூசன்

உலகத்தை  இவன் அழிபபதற்கு  முன் ஏதாவது  ஒரு  வகையில் இவன்  அழிக்கப்படணும். ஏதோ துப்பாக்கியை நகர்த்துவது போல் அணுஆயுதத்தை பேசுகிறான். 

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

ஒரு காட்டு மிராண்டி லூசன்

உலகத்தை  இவன் அழிபபதற்கு  முன் ஏதாவது  ஒரு  வகையில் இவன்  அழிக்கப்படணும். ஏதோ துப்பாக்கியை நகர்த்துவது போல் அணுஆயுதத்தை பேசுகிறான். 

பயம் வேண்டாம் குச.

தனது நாட்டின் இறையாண்மைக்குக்/இருப்புக்கு குந்தகம் ஏற்படுமானால் மட்டுமே தான் அணுவாயுதத்தைப் பாவிக்க நேரும் என புடின் கூறியுள்ளார். 

அதுவரை தாங்கள் நிம்மதியாக உறங்கலாம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

பயம் வேண்டாம் குச.

தனது நாட்டின் இறையாண்மைக்குக்/இருப்புக்கு குந்தகம் ஏற்படுமானால் மட்டுமே தான் அணுவாயுதத்தைப் பாவிக்க நேரும் என புடின் கூறியுள்ளார். 

அதுவரை தாங்கள் நிம்மதியாக உறங்கலாம். 

🤣

பொறுப்பற்ற சிந்தனை, எழுத்து

பொதுநலம் சார்ந்து சிந்திக்காமல் அது சார்ந்து சிந்திப்போரை கேலிக்குரியவர்களாக பார்ப்பதும்

ஒரு கொடிய பைத்தியக்காரனுக்கு பந்தம் பிடிப்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறானவர்களை எந்த தமிழில் எந்த சொல்லில் வைதாலும் தீராது போதாது 😡

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விசுகு said:

பொறுப்பற்ற சிந்தனை, எழுத்து

பொதுநலம் சார்ந்து சிந்திக்காமல் அது சார்ந்து சிந்திப்போரை கேலிக்குரியவர்களாக பார்ப்பதும்

ஒரு கொடிய பைத்தியக்காரனுக்கு பந்தம் பிடிப்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறானவர்களை எந்த தமிழில் எந்த சொல்லில் வைதாலும் தீராது போதாது 😡

 

விசுகர், உங்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றவர்களும் உங்களைப் பின்பற்ற வேண்டும் எனும் சிந்தனையை முதலில் நிறுத்துங்கள். 

பொதுநலன் சார்ந்த உங்கள் சிந்தனையைத்தான் ஊருக்கொரு தலைமை.........உலகுக்கொரு தலைமையில்  பார்த்தோமே. 

😏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிபிசி மற்றும் மீடியாசோனா இணைந்து நடத்திய புலனாய்வில், உயிரிழந்த 25,000 ராணுவ வீரர்களின் விபரம் கண்டறியப்பட்டது. ஆனால் ரஷ்யா உறுதி செய்த எண்ணிக்கையை விட இது 4 மடங்கு அதிகம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

பிபிசி மற்றும் மீடியாசோனா இணைந்து நடத்திய புலனாய்வில், உயிரிழந்த 25,000 ராணுவ வீரர்களின் விபரம் கண்டறியப்பட்டது. ஆனால் ரஷ்யா உறுதி செய்த எண்ணிக்கையை விட இது 4 மடங்கு அதிகம்.

 

 

BBC 🤣

BBC  UK அரசாங்கத்தின் பணத்தில் இயங்கும் நிறுவனம். 

UK அரசோ உக்ரேன் யுத்தத்தை பின்னின்று நடாத்துகிறது. 

இந்த நிலையில், BBC நடுநிலை நின்று,  உண்மைகளை, பக்கச்சார்பின்றி வெளியிடும் என  நம்புவது புத்திசாலிகளுக்குக் கடினமானது. 

😁 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனின் தாக்குதலில் கிரைமியா பாலம் சேதம்: ரஷ்யா தெரிவிப்பு

Published By: Sethu

22 Jun, 2023 | 05:37 PM
image

கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரேனையும் இணைக்கும் பாலமானது உக்ரேனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு நடந்த தாக்குதல் சோங்கார் பாலத்தை தாக்கியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட உக்ரேனிய ஆளுநர் சேர்ஜி அக்சினோவ் தெரிவித்துள்ளார்.

சோங்கார் பாலம், உக்ரேனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது. 

கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன் பின்னர், அப்பிராந்திய தலைநகரை உக்ரேன் மீளக் கைப்பற்றியது.
 

https://www.virakesari.lk/article/158358

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

கச்சான் அல்வா, பாப் கான், மிக்சர், சோடா, எல்லாம் எடுத்து கொண்டு கூத்து பார்க்க நான் தயார். 

🍿🥤🍭🥤

  • Haha 1
Posted

ஈற்றில் தங்களுக்கிடையே அடிபட்டு மேலும் பலகீனமாகப் போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

கச்சான் அல்வா, பாப் கான், மிக்சர், சோடா, எல்லாம் எடுத்து கொண்டு கூத்து பார்க்க நான் தயார். 

🍿🥤🍭🥤

ஐயோ எனக்கு கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல....:face_with_tears_of_joy:

Posted
2 hours ago, goshan_che said:

கச்சான் அல்வா, பாப் கான், மிக்சர், சோடா, எல்லாம் எடுத்து கொண்டு கூத்து பார்க்க நான் தயார். 

🍿🥤🍭🥤

மீண்டும் நல்வரவு கோசன் !

சில குளறுபடிகள் நடந்தாலும் நீங்கள் நினைப்பது நடப்பதற்குச் சான்றுகள் குறைவு. ஏனென்றால் பிரிகோஜின் புதினுக்கு வேண்டப்பட்டவர். பிரிகோஜின் இல்லாமல் புதின் இயங்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் பக்மூத் சண்டையின்போதே புதின் இவருக்குத் தேனீர் விருந்து கொடுத்திருப்பார். 🤣

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, இணையவன் said:

பிரிகோஜின் இல்லாமல் புதின் இயங்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

அப்படி தான் எல்லோரும் சொல்கிறார்கள்.
மாமனிதன் என்று சிலரால்  போற்றபடும் புதின்  சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒரு கூலி படையின் கிரிமினல் சக்தியை நம்பிதான் இருக்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பு

நான் வெளியில் இருந்து அவதானித்தது, உக்ரேன் போர் சம்பந்தமாக தமிழ் செய்தி உலகில் செய்திகள் மிக தாமதமாகவே பகிரப்படுகிறது.

உள்ளவற்றில் யாழ் திறம். ஆனாலும் இங்கும் கூட அநேக செய்திகள் வர 24 மணி நேரம் பிடிக்கிறது.

ஒரு பொழுது போக்காக இந்த திரியில் டிவிட்டரில் வரும் உறுதிப்படுத்த படாத தகவல்களை போடலாமா என நினைக்கிறேன். 

அண்மையில் நடந்த ரஸ்ய கலகம் ஒரு நல்ல உதாரணம். கருத்துகளத்தில் செய்திகள் ஓரளவு உடனடியாக பகிரப்பட்டன. ஆனால் முறை சார் செய்தியை ஏராளன் இணைக்க நேரம் எடுத்தது.

எனது நிலைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கம் என அன்றி. செய்தி காவல் என்பதாக மட்டும் இதை செய்யமுடியுமா என்பது தெரியவில்லை. ஒரு சுய பரிசோதனையாக செய்து பார்க்கலாம் என நினைக்கிறேன்.

பார்ப்போம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசின் கொள்கைக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் - என்ன காரணம்?

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்
 
படக்குறிப்பு,

நேபாளத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஸ்வச்சா ராவத்
  • பதவி,பிபிசி நேபாளி சேவை
  • 40 நிமிடங்களுக்கு முன்னர்

நேபாள இளைஞரான ரமேஷ் (அவர் கேட்டுக் கொண்டதன்படி அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க விரும்பினார். அதன் காரணமாக மாணவர் விசாவில் உயர்கல்வி பயில ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு அவர் விரும்பியபடி படிப்பை நல்லபடியாக முடித்தார்.

இருப்பினும் அதன் பின்னர் ரஷ்யாவிலேயே நல்ல வேலைத் தேடி கொள்வதா அல்லது நேபாளத்துக்கு திரும்பி அங்கே வேலைத் தேடுவதா என்ற கேள்வி எழுந்ததால் அவர் ஒருவித மன போராட்டத்துக்கு ஆளானார்.

நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, நேபாளத்தில் பெரும்பாலான பணிகள் அமைப்பு சாரா துறைகளில் தான் கிடைக்கப் பெறுவதாகவும் இந்தப் பணிகளை மேற்கொள்வோருக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

வேலை கிடைப்பதில் சிக்கல்

"வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் அனைத்து இளைஞர்களும் நல்ல வேலையை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை" என்று பிபிசி நேபாளி உடனான ஆன்லைன் உரையாடலின்போது ரமேஷ் தெரிவித்தார்.

 

இப்படி ரமேஷ் போன்ற நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ரஷ்ய ராணுவ வீரரின் சித்தரிப்பு படம்

ரஷ்ய ராணுவத்தில் சேர வெளிநாட்டவருக்கு வாய்ப்பு

ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் இறந்தனர். அதன் விளைவாக ரஷ்ய ராணுவத்துக்கு நிறைய படை வீரர்கள் தேவைப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகைச் செய்யும் விதத்தில், குறிப்பிட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதிக ஊதியம், ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்

ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொன்னான வாய்ப்பை தான் பயன்படுத்தி கொள்ள ரமேஷ் விரும்பினார்.

தான் விரும்பிய படியே ரஷ்ய ராணுவத்தில் ரமேஷ் இணைந்தார். அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டியிருந்தது. இந்தத் தேர்வுகளை எழுத 1,00,000 நேபாளி ரூபாயை செலவழித்தார். இவ்வளவு பெரிய தொகையை தனக்கு அளித்து உதவியவர் யார் என்ற தகவலை பகிரங்கமாக கூற அவர் மறுத்துவிட்டார்.

ரஷ்ய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்த தனது மகிழ்ச்சியை ‘டிக்டாக்’ பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

“வாழ்வில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பணியை தேர்ந்தெடுத்துள்ளேன்” என்றும் அந்தப் பதிவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளது எவ்வளவு கடினமான முடிவு என்பது குறித்தும் அவர் தன் வீடியோ பதிவுகளில் தெரிவித்திருந்தார்.

"செய் அல்லது செத்து மடி" என்பது ராணுவ வீரர்களுக்கான தாரக மந்திரம். எனவே இதனை உணர்ந்து, ராணுவத்தில் சேர்வதற்கு விருப்பம் இருந்தால் மட்டும் அதில் இணையுங்கள்" என்றும் டிக்டாக் வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

‘தகவல்’ என்ற தலைப்பில் ரமேஷ் மற்றொரு வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். “ ராணுவப் பணியில் இங்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நிலைமை எதிர்பார்த்தது போல் இல்லை. ஏனெனில் ரஷ்யா மோதுவது யுக்ரேன் உடன் என்பதால், இதை வாழ்வின் மிகவும் கடினமான தருணம் என்று எண்ணுகிறேன்,” என அந்த வீடியோவில் ரமேஷ் உருக்கமாக கூறியிருந்தார்.

பிபிசி அவரை கடைசியாக தொடர்பு கொண்டபோது, தான் பயிற்சிக்காக பெலாரஸுக்கு அழைத்து செல்லப்படுவதால், உரையாடுவதற்கு போதிய நேரம் இல்லை என்று ரமேஷ் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பிபிசி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ரமேஷ் மட்டுமல்ல. அவரை போன்று நிறைய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் பிபிசியின் ஒரு வார கால கள ஆய்வில் தெரிய வந்தது.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்
 
படக்குறிப்பு,

நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது.

சட்டவிரோதம் என்று அறியாத நேபாள இளைஞர்

இதனிடையே, ராஜ் என்ற நேபாளத்தை சேர்ந்த இளைஞரும், ரமேஷை போல உயர் கல்வி பயில்வதற்காக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் என்று தெரிய வந்தது. அங்கு அவர் இருந்தபோது தான், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர்ப்பது குறித்த அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டது.

அந்த அறிவிப்பு வெளியான உடனே, நேபாளத்தில் இருந்து பலர் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு ரஷ்ய மொழி அவ்வளவு சரளமாக தெரியவில்லை என்பதால், அந்நாட்டு ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் ராஜின் உதவியை நாடினர்.

எனக்கு அறிமுகமான சில நேபாளிகளுக்கு, அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி புரிந்துள்ளேன். அதன் பின்னர் அவர்களே, இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளும்படி பலரிடம் எனது தொலைபேசி எண்ணை பகிர்ந்தனர்” என்று பிபிசி நேபாளியிடம் ராஜ் கூறினார்.

ரஷ்யாவில் உயர் கல்வி பயில விரும்பும் நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை ராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அதன்பின் நேபாள மாணவர்களுடன் தற்போது, ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பிய அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களும் ராஜின் உதவியை நாடினர்.

 
ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்

பட மூலாதாரம்,OFFICIAL PUBLICATION OF LEGAL ACTS/RUSSIA

 
படக்குறிப்பு,

வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்ட ரஷ்ய அதிபர் விளாதிர் புதின்.

முத்தரப்பு ஒப்பந்தம்

“நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைவது நாட்டின் கொள்கைக்கு இணக்கமானது அல்ல,” என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேவா லாம்சல் பிபிசி நேபாளியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

நேபாள குடிமக்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக, 1947 இல் நேபாளம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேபாள மக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படும் நேபாளிகள் “கூலிப்படைகளாக கருதப்படமாட்டார்கள்” என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டனை தவிர, பிற நாடுகளின் ராணுவத்தில் நேபாளிகள் சேர்வதை ஆதரிக்கும் கொள்கை இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மாஸ்கோவில் உள்ள நேபாள தூதர் மிலன்ராஜ் துலாதரை பிபிசி நேபாளி சேவை தொடர்பு கொண்டது.

“சுற்றுலா விசாவிலும், மேற்படிப்பு பயிலவும் ரஷ்யாவுக்கு வருகை தரும் நேபாள நாட்டினர், இங்கு வேறு எந்த பணியிலும் சேர முடியாது. தங்களின் குடிமக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக மட்டுமே அந்த நாடுகளுடன் நேபாள அரசு ஒப்பந்தம் புரிந்துள்ளது. இதுபோன்ற ஒப்பந்தம் ரஷ்ய அரசுடன் மேற்கொள்ளப்படவில்லை” என்று பிபிசி நேபாளி சேவையிடம் கூறினார் மிலன்ராஜ்.

நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளது தொடர்பான டிக்டாக் வீடியோக்களை தம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆவணப்படங்கள் ஆய்வு

இருப்பினும், ரஷ்ய ராணுவ பயிற்சி முகாம்களில் படமாக்கப்பட்ட இதுபோன்ற சில வீடியோக்களை சரிபாக்கும் பணியை பிபிசி மேற்கொண்டது.

ரஷ்ய ராணுவம் தொடர்பான ஆவணப்படங்களை கொண்ட வீடியோக்கள் பதிவிடப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு டிக்டாக் கணக்குகளை பிபிசியின் ரஷ்ய சேவையை சேர்ந்த செய்தியாளர் ஆன்ட்ரி கோசென்கோ சரிபார்த்தார்.

“ரமேஷ் உள்ளிட்ட இரண்டு நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அந்த வீடியோக்கள் மூலம் அறிய முடிந்தது” என்று கூறினார் கோசென்கோ.

சம்பந்தப்பட்ட நபர்கள் ராணுவத்தில் வகிக்கும் நிலை (Rank), அவர்களின் முழு பெயர், உயரதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆவணப்படங்களில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் ராணுவத்தில் அவர்கள் பணிபுரியும் பிரிவுகள் குறித்த தகவல்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம், காத்மாண்டுவில் உள்ள ரஷ்யாவுக்கான தூதரை பிபிசி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டது. இருப்பினும். இந்த கட்டுரை வெளியிடும் வரை ரஷ்ய அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர என்ன காரணம்?

படித்த இளைஞர்களுக்கு நேபாளத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“சுற்றுலா, மேற்படிப்பு போன்ற காரணங்களை சொல்லி நேபாளிகள் வெளிநாடுகளுக்கு பயணித்தாலும், அங்கு வேலை தேடி கொள்வதே அவர்களது பயணத்தின் பிரதான நோக்கமாக உள்ளது” என்று கூறுகிறார் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளரான திகாரம் கௌதம்.

“ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள சில மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தை, பிற வழிகளில் சம்பாதிக்க அவர்களுக்கு சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக அவர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா -யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக மொத்தம் 1,729 நேபாளிகள் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளனர் என்று நேபாள அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

749 நேபாள மாணவர்கள் மேற்படிப்புக்காகவும், 356 பேர் வேலைக்காகவும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று நேபாள அரசின் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

ராஜ் உள்ளிட்ட ரஷ்யாவில் இருக்கும் நேபாளிகளிடம் பிபிசி பேசியபோது, ரஷ்யா வந்ததற்காக அவர்கள் கூறிய காரணங்கள், சமூகவியலாளர் கௌதமின் கருத்தை பிரதிபலிப்பவையாக இருந்தன.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

“பணம் சம்பாதிப்பதற்காக தான் நாங்கள் ரஷ்யாவுக்கு வந்தோம்” என்று நேபாள இளைஞர் ஒருவர் பகிரங்கமாக தெரிவித்தார். இதன் காரணமாக தான் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாகவும். அதுகுறித்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட தாகவும் அவர் கூறினார்.

“ரஷ்யாவில் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை நேபாளத்திலோ, வேறு எந்த நாட்டிலோ எங்களால் சம்பாதிக்க முடியாது. எனவே இதயம் சம்பந்தமான நோய்கள் இல்லாதவர்கள் தாராளமாக ரஷ்யாவுக்கு வரலாம்” எனவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.

“எங்கள் வாழ்வு மீதான அன்பின் காரணமாக நாங்கள் நேபாளத்திற்கு திரும்பலாம். ஆனால் அங்கு எங்களின் வேலைக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?” என்று மற்றொரு இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.

யுக்ரேன் போரில் பங்கேற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு அதிக ஊதியம் தருவதாக ரஷ்ய அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார் ராஜ். அதன்படி, ராணுவ பயிற்சி காலத்தில் 60 ஆயிரம் நேபாள கரன்சிக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பயிற்சி காலம் முடிந்ததும், தங்களுக்கு மாதாந்திர ஊதியமாக 1.95 லட்சம் ரூபிள்கள் வழங்கப்படும் என்று வேலைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் மற்றொரு நேபாள இளைஞர் தெரிவித்தார்.

இந்த தொகை மூன்று லட்சம் நேபாள கரன்சிகளுக்கு இணையானது என்கிறார் ராஜ். அத்துடன் ஓராண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு, ராணுவ வீரர்கள் ரஷ்ய நாட்டின் பாஸ்போர்ட்டை பெற இயலும். அத்துடன் அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் கூறுகிறார் நேபாள இளைஞரான ராஜ்.

https://www.bbc.com/tamil/articles/cll0p77m7yzo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ஏராளன் said:

பயிற்சி காலம் முடிந்ததும், தங்களுக்கு மாதாந்திர ஊதியமாக 1.95 லட்சம் ரூபிள்கள் வழங்கப்படும் என்று வேலைக்கான ஒப்பந்தத்தில்

வாவ்.....நல்ல சம்பளம்     ரஷ்யாவுக்கு ஆதரவுயனவர்கள்.  விண்ணப்பிக்கவும் 🤣 இது  ஒரு அரிய சந்தர்ப்பம்    😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

world-news-9.jpg

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீற்றர் உயரமும், 3.2 கிலோ மீற்றர் நீளமும் கொண்டது.

சுமார் 7 இலட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர். இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5ஆம்திகதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

news-03-6.jpg

இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், இலட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15இற்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/260093




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.