Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வர் !

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் !

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர்.

அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்

அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று அவர்கள் நல்லூர் கந்தனை தரிசித்திருந்தனர்.

image2-600x338.jpeg

https://athavannews.com/2023/1341582

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வர் !

பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வர் !

😀

 ஒரு  அல்ல குரு        முதல்வர்கள். 😀😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிலாமதி said:

 ஒரு  அல்ல குரு        முதல்வர்கள். 😀😄

அது ஆதவன் செய்தி... நிலாமதி அக்கா.
நான், பாப்பரசரின் பிரதிநிதியாக ஒருவர் 
வத்திக்கானில் இருந்து வந்துள்ளார் என நினைத்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலயத்துக்கு வருகை தந்த குருவானவர்களுக்கும்.....அவர்களுக்காக தங்கள் விதிகளைத் தளர்த்தி முருகனைத் தரிசிக்கவைத்த ஆலய நிர்வாகத்துக்கும் வணக்கங்கள்......!  💐

நன்றி சிறியர்.....!

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களிலும்" மனிதம்" பேணுதல் மதங்களுக்கு அழகு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நல்லூர் ஆலயத்துக்கு வருகை தந்த குருவானவர்களுக்கும்.....அவர்களுக்காக தங்கள் விதிகளைத் தளர்த்தி முருகனைத் தரிசிக்கவைத்த ஆலய நிர்வாகத்துக்கும் வணக்கங்கள்......!  💐

நன்றி சிறியர்.....!

சுவியர்…. குருவானவர்கள் நல்லூர் ஆலயத்துக்குள் செல்லும் முதலாவது
படத்தைப் பாருங்கள். எந்த ஒரு மக்களோ, படப் பிடிப்பாளர்களின் ஆரவாரமோ இன்றி, அவர்கள் மூவரும் நடந்து செல்லும் காட்சியை… எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 🥰

இந்தப் படம் காலா காலத்துக்கும்…  நினைவில் நிற்கும் என்பது உறுதி.
தமிழ் மக்களுள்…. கிறிஸ்தவருக்கும், சைவருக்கும் சிண்டு முடியும் வேலையில் எம்மில் சிலரும், பக்கத்து நாடும் முனைப்பாக
உள்ள நேரத்தில், இந்த நிகழ்வு… முக்கியத்துவம் பெறுகின்றது. 👍🏽

இந்தச் சந்தர்ப்பதை ஏற்படுத்திய குருவானவர்களுக்கும்,
நல்லூர் கோவில் நிர்வாகத்திற்கும்… கோடி நன்றிகள். 🙏 🙏 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாட்டை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் - யாழ். மறை மாவட்ட குரு முதல்வர்

25 JUL, 2023 | 09:24 PM
image
 
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை  மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ்  மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்,

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் நாட்டின் ஜனாதிபதி செல்வதாக இருந்தால் கூட மேலாடை கழற்றி செல்ல வேண்டும் என்பது ஆலய விதிமுறை, அதற்கமைய  இன்றைய தினம் இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் நானும் மேலும் ஒரு குருவும்  சென்றிருந்தோம்.

 உரிய நடைமுறைகளை பின்பற்றி நாங்கள் ஆலயத்தின் முன்றலில்  நின்று வெளியேறிய போது நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் எங்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே செல்லமுடியும் என அழைத்திருந்தார்கள்.

 அந்த அழைப்பை ஏற்று  ஆலயத்திற்குள் நமது கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்றிருந்தோம், எனவே இந்த விடயமானது  மத நல்லிணக்கத்திற்கான ஒரு முன்னுதாரணமாகும் மற்றும்  மத நல்லிணக்கத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளி என கூறலாம்.

 எதிர்காலத்தில் நாங்கள் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

01__6_.jpeg

https://www.virakesari.lk/article/160918

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சந்தர்ப்பதை ஏற்படுத்திய குருவானவர்களுக்கும்,
நல்லூர் கோவில் நிர்வாகத்திற்கும்… கோடி நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் நிர்வாகத்தின் இந்த நெகிழ்வு தன்மை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. 

மத நல்லிணக்கம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாக காணப்பட்ட விடயம். போர் காலத்தில் கூட..!

ஆனால்.. நல்லூர் நிர்வாகம் இப்படி ஒரு தரப்புக்கு வளைந்து கொடுத்தால்.. அதையே மேலும் பலரும் எதிர்பார்க்கக் கூடும். அது இதுவரை காத்து வந்த ஆலய மரபுக்கு முரணாகவும் அதன் தொடர்ச்சிக்கு உதவாமலும் அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்

கவலையே வேண்டாம், சச்சியர் தொடர்வார் மிகுதியை. குருக்கள் சைவ சமயத்தின் விதிமுறைகளை தமக்காக தளர்த்தச்சொல்லி கேட்கவுமில்லை, வற்புறுத்தவுமில்லை, அவர்களின் விதிமுறைகளை மீறவுமில்லை, சைவத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அவற்றை மதித்து, ஏற்று செயற்பட்டார்கள், அது நல்லிணக்கம்! அதை வரவேற்று, விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டது... அது பரஸ்பர மத நல்லிணக்கம்! இதை நோண்டி நொங்கெடுப்பது நல்லிணக்கத்தை குழிதோண்டி புதைப்பதோடு, எதிரிக்கு தூபம் இடுவது போலாகும். அவர்கள் செருப்புக்காலோடு, சப்பாத்துக்காலோடு செல்லவில்லை, வழிபாட்டை தடுக்கவில்லை, இடங்களை தகர்க்கவில்லை, உரிமை கோரவில்லை, பரஸ்பர மத இணைக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஓவ்வாமைக்காரர் இதை சும்மா விடப்போவதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்

7 hours ago, ஏராளன் said:

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் நாட்டின் ஜனாதிபதி செல்வதாக இருந்தால் கூட மேலாடை கழற்றி செல்ல வேண்டும் என்பது ஆலய விதிமுறை,

ஒரு மத குருவை, மேலாடையை கழற்றிவிட்டு வந்து வழிபடு என்று அழைப்பது; அவரையும் அவரின் மதத்தையம் அவரின் நல்லெண்ணத்தையும் அவமதிப்பதாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயத்தை சென்று பார்க்க விரும்பியவர்  உலக கத்தோலிக்க மத தலைவரின் பிரதி நிதி . வேறு நாட்டு , வேற்று இனத்தவர் . இனம் மதம் பாராமல் நல்லூர்   கோவிலை இலங்கையின் முக்கிய வழிபாட்டு தலத்தை   தரிசிக்க விரும்பினார்  இந்நிலையில் நல்லூர் ஆலய நிர்வாகம் அவ்ருக்கு மதிப்பளித்து ஆடையுடன் அனுமதித்தது நியாயமானதே .

வேற்று நாட்டு விருந்தினரை அவமரியாதையா   செய்ய போகிறீர்கள். அனுமதி  பெற்றுத்தான்   நுழைந்தார்கள்.ஆதரிக்க ஒரு கூட்ட்ம் இருந்தால் அதற்குள் ...நொடடை சொல்லவும் ஒரு சிலர் நுழைந்து விடுவார்கள். மதங்களுக்குமதிப்பு கொடுக்க வேணுமே தவிர " மதம்" பிடித்து அலையக்   கூடாது. ஒரு பேச்சுக்கு பெண் ஆக இருந்தால் என்ன சொல்வார்களோ ?அப்போதும் கடைப்பிடிப்பீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என

ஆலய நிர்வாகத்தினர் அழைத்திருந்தார்கள்.....

இது தான்  மதிப்பு ( உலக மதத்தலைவரின்  பிரதிநிதிக்கு )  பண்பு  மனிதபிமானம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்…. குருவானவர்கள் நல்லூர் ஆலயத்துக்குள் செல்லும் முதலாவது
படத்தைப் பாருங்கள். எந்த ஒரு மக்களோ, படப் பிடிப்பாளர்களின் ஆரவாரமோ இன்றி, அவர்கள் மூவரும் நடந்து செல்லும் காட்சியை… எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 🥰

இந்தப் படம் காலா காலத்துக்கும்…  நினைவில் நிற்கும் என்பது உறுதி.
தமிழ் மக்களுள்…. கிறிஸ்தவருக்கும், சைவருக்கும் சிண்டு முடியும் வேலையில் எம்மில் சிலரும், பக்கத்து நாடும் முனைப்பாக
உள்ள நேரத்தில், இந்த நிகழ்வு… முக்கியத்துவம் பெறுகின்றது. 👍🏽

இந்தச் சந்தர்ப்பதை ஏற்படுத்திய குருவானவர்களுக்கும்,
நல்லூர் கோவில் நிர்வாகத்திற்கும்… கோடி நன்றிகள். 🙏 🙏 🙏

இப்ப மோடிக்கு கடுப்பாக இருக்கப் போகுது.

நான் மேலாடையுடன் உள்ளே போவதற்கு எவ்வளவு குத்தி முறிந்தும் இந்த பாவிகள் விடலையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப மோடிக்கு கடுப்பாக இருக்கப் போகுது.

நான் மேலாடையுடன் உள்ளே போவதற்கு எவ்வளவு குத்தி முறிந்தும் இந்த பாவிகள் விடலையே?

நிச்சயம்…. இந்த நிகழ்வை, யாழில் உள்ள இந்தியத் தூதரகம் 
மிக உன்னிப்பாக  அவதனித்து இருக்கும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஒரு மத குருவை, மேலாடையை கழற்றிவிட்டு வந்து வழிபடு என்று அழைப்பது; அவரையும் அவரின் மதத்தையம் அவரின் நல்லெண்ணத்தையும் அவமதிப்பதாகும். 

12 hours ago, ஏராளன் said:

நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை  மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ்  மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்,

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் நாட்டின் ஜனாதிபதி செல்வதாக இருந்தால் கூட மேலாடை கழற்றி செல்ல வேண்டும் என்பது ஆலய விதிமுறை, அதற்கமைய  இன்றைய தினம் இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் நானும் மேலும் ஒரு குருவும்  சென்றிருந்தோம்.

 உரிய நடைமுறைகளை பின்பற்றி நாங்கள் ஆலயத்தின் முன்றலில்  நின்று வெளியேறிய போது நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் எங்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே செல்லமுடியும் என அழைத்திருந்தார்கள்.

 அந்த அழைப்பை ஏற்று  ஆலயத்திற்குள் நமது கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்றிருந்தோம், எனவே இந்த விடயமானது  மத நல்லிணக்கத்திற்கான ஒரு முன்னுதாரணமாகும் மற்றும்  மத நல்லிணக்கத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளி என கூறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தவர்களும், தமிழ் கிறிஸ்தவர்களும்…..
அன்று தொட்டு இன்று வரை ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
அவர்களுக்கு இடையில் காதல் திருமணம் செய்வதிலிருந்து,
நெருங்கிய குடும்ப  நட்பு பாராட்டுவது வரை… மதம் குறுக்கே நின்றதில்லை.
ஆன படியால்… கிறிஸ்தவ மத குருக்கள், நல்லூர் கோவிலுக்குள் சென்றதும் இதே நட்பு ரீதியிலான முன்மாதிரியான நல்லெண்ண செயலாகவே பார்க்க வேண்டும்.

****

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண மனிதனுக்கு  இந்த மத நல்லிணக்கம், மனிதாபிமானம், வளைந்து கொடுத்தல் எல்லாம் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தின் மாண்பும் விதிமுறைகளும் தெரிந்தவர்கள் தங்களுக்காக மதம் வளைந்து கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள், விரும்பவும் மாட்டார்கள். தாங்களாகவே விரும்பி அதை இறுக்கமாக பின்பற்றி வருகிறார்கள். மதம் பிடித்து மற்றவர்களை தாக்குவதில்லை, அதனாலேயே பாப்பரசரின் பிரதிநிதி தேடி வந்திருக்கிறார், அவர் விகாரை தேடி போகவில்லையே அது ஏன்?  

  • கருத்துக்கள உறவுகள்

 மதம் என்பதே வியாபாரம்தானே. அப்பிள் கம்பசுக்கு எலோன் மஸ்க் வந்தால் டிம் குக் போய் வரவேற்ப்பார். நாம் போனால்? அப்படித்தான் இதுவும்.

இரெண்டு வர்தக நிறுவனங்கள் தமது ethical approach ஐ விளம்பரபடுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளனர்.

வேறு ஒரு திரியில் விவாதிக்கப்பட்டது - இந்த மேலாடை உரியும் வழக்கத்துக்கு - சமய ஆதாரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.  இது அந்த கோவிலின் வழக்கம் என்பதாகவே தெரிகிறது.

இதன் பின், நல்லூர் கோவில் இன்னொருவரின் மத அடையாளத்தை மாற்றும்படி கோரவில்லை என்பதை காட்டி - நாளைக்கு ஒரு மெளலவி ஜிப்பா, குல்லாவோடு வந்தால் - அதையும் அனுமதிக்கவே வேண்டும்.

தலதா மாளிகை நிலமே அவரின் மாப்பிள்ளை கோலத்தில் வந்தால்?

ஆனால் ஆம்பிளையள் எல்லாம் சேர்ட்டை கழட்டி விட்டு, வேர்வை நாற, நாற ஏதோ gay pride march இல் கலந்து கொள்வது போல வெற்றுடம்புடன் அலையும் இந்த இத்து போன நடைமுறையை எல்லாருக்குமாக நீக்கி விட்டு - கண்ணியமான உடையுடன் வந்தால் போதும் என வைத்தால் நல்லது.

இப்படி சேர்ட்டை கழட்டுவதை ஏதோ தமிழர் பாரம்பரியம், யாழ்பாண மரபுரிமை என ஏன் கொண்டாடுகிறார்கள் என தெரியவில்லை.

எல்லாரும் டிரவுசர் போர்ட்டுத்தான் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சேயின் சிறந்த விளக்கங்கள்,அவசியமான வேண்டுகோளும் 👍

இரு வர்தக நிறுவனங்கள் தம்மை மக்களிடையே விளம்பரபடுத்துவதற்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளனர்.

ஆம்பிளையள் சேர்ட்டை கழட்டி விட்டு வேர்வை நாற நாற ஓரின சேர்க்கையாளர் பெருமை அணிவகுப்பு மாதிரி வெற்றுடம்புடன் அலையும் நடைமுறைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கபட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இரெண்டு வர்தக நிறுவனங்கள் தமது ethical approach ஐ விளம்பரபடுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொருவர் பார்வையை பொறுத்தது. ஒன்றாக இருந்த இரு குழுமத்தை பிரிக்க செய்யும் சதிவேலையை ஆதரிப்போர் இதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் கண்டுபிடிக்கலாம். ஆனால் நாம் எல்லா மதத்தையும் மதிக்கிறோம், அவர்களின் தனிப்பட்ட விழுமியங்களை மதித்து ஏற்று ஒன்றாக பயணிக்க விரும்புகிறோம் எனும் நல்லெண்ணத்தையே இருதரப்பும் இங்கு வெளிப்படுத்தியிருக்கிறது. வீம்புக்கு வந்து விதண்டாவாதம் பண்ணி விட்டுக்கொடு, வளைந்துகொடு என்று கேட்ப்பவர்கள் தங்கள் நல்லெண்ணத்தை முதலில் காட்டட்டும் தேவையானபோது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

யாரோ எழுதின கருத்துக்கு எனக்கு பதில் போடுகிறீர்கள் போல படுகிறது?

ஆறுமுக நாவலரின் அடிப்பொடிகள் உங்களை அப்படி துவைத்து எடுத்துள்ளார்கள் முன்பு🤣.

#அதெல்லாம் கண்முன்னாடி வந்து போகுமா, இல்லையா

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

யாரோ எழுதின கருத்துக்கு எனக்கு பதில் போடுகிறீர்கள் போல படுகிறது?

உங்கள் கருத்தைத்தான் மேற்கோள் காட்டியிருக்கிறேன், தாங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறது......

On 26/7/2023 at 21:27, goshan_che said:

இதன் பின், நல்லூர் கோவில் இன்னொருவரின் மத அடையாளத்தை மாற்றும்படி கோரவில்லை என்பதை காட்டி - நாளைக்கு ஒரு மெளலவி ஜிப்பா, குல்லாவோடு வந்தால் - அதையும் அனுமதிக்கவே வேண்டும்.

20 hours ago, satan said:

வீம்புக்கு வந்து விதண்டாவாதம் பண்ணி விட்டுக்கொடு, வளைந்துகொடு என்று கேட்ப்பவர்கள் தங்கள் நல்லெண்ணத்தை முதலில் காட்டட்டும் தேவையானபோது. 

8 hours ago, goshan_che said:

ஆறுமுக நாவலரின் அடிப்பொடிகள் உங்களை அப்படி துவைத்து எடுத்துள்ளார்கள் முன்பு🤣

அப்படி நான் உணரவில்லை. நீங்கள்! சிண்டு முடிவதுபோல் உணர்கிறேன். இருந்தாலும்; அச்சமில்லை, அச்சமில்லை. சொல்ல வேண்டியதை, வேண்டிய நேரத்தில் சொல்வது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

உங்கள் கருத்தைத்தான் மேற்கோள் காட்டியிருக்கிறேன், தாங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறது......

அப்படி நான் உணரவில்லை. நீங்கள்! சிண்டு முடிவதுபோல் உணர்கிறேன். இருந்தாலும்; அச்சமில்லை, அச்சமில்லை. சொல்ல வேண்டியதை, வேண்டிய நேரத்தில் சொல்வது நல்லது!

உங்கள் கற்பனைக்கு நான் பொறுப்பல்ல.

எந்த மதத்தையும் நான் நிந்திப்பதும் இல்லை.

மதங்களின் பின்னால் உள்ள அரசியலை மறந்து/மறுத்து நல்லிணக்கம் வளர்கிறார்கள் என நெக்கருகுவதும் இல்லை. 

உலகின் மிக மிலேச்ச ரத்தம் தோய்ந்த வரலாறை உடையவர்கள் மத பீடங்களே.

வத்திக்கானும் அதில் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.