Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்குள் - பேராசிரியர் பத்மநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

30 JUL, 2023 | 06:54 PM
image
 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர்  விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

தமிழ் மக்களுடைய மொழி கலாச்சாரம் பண்பாடு ஆகிய பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதனைப் பாதுகாப்பதற்கு 13 வது திருத்தத்தில் உள்ள பறிக்கப்பட்ட பல அதிகாரங்களை மீளப்பெற்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது இருப்பை ஓரளவு நிலை நாட்ட முடியும்.

நான் அரசியல்வாதியோ அல்லது அரசியல் கட்சியின் பிரதிநிதியாகவோ எனது செயற்பாடுகளை என்றைக்கும் மேற்கொண்டதில்லை. ஆனாலும் எனக்கு பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை தந்துள்ளார்கள்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு. தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது. 

இராமநாதன் தொடக்கம், 50:50 திட்டத்தினை முன்வைத்த காலம் வரையான தலைவர்களின் மகத்தான தவறாகும்.

அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கொழும்பை மையமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை நோக்கினார்கள்.

கிழக்கு மாகாணம் மூன்று சமூகங்களின் பிரதேசமாக உள்ளது அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமூகம் தமிழ் சமூகத்திலும் பார்க்க கூடுதலாக காணப்படுகின்றனர்.

திருகோணமலையில் பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டார்கள்.

ஏனனில் தமிழர்களை கவனிப்பார்கள் இல்லை. அவர்களை கவனிப்பதற்கு அதிகாரமும் இல்லை.

எமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொண்டால் நிலங்களையும், கடல் வளங்களையும் பயன்படுத்தி பொருளாரத்தில் பலமடையமுடிவதோடு தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். 

எனவே உரிய முறையில் மாகாணசபை அதிகாரங்களை நடைமுறைப்படுத்த எல்லா கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். கல்வியலாளர்கள், பொதுமக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.

மாகாணசபை முறைமை தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வல்ல. காலா காலம் இலங்கை ஜனாதிபதிகள் ஒவ்வொரு தீர்வு முறைமைகளை முன்வைத்தனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதித் தீர்வை முன்நிபந்தனையாக வைத்தால் சிங்கள ஆட்சியாளர்கள் ஒற்றையாட்சியையே வலியுறுத்துவார்கள். 

5வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் என்று கூறும் நிலை மாறிவிடும். அதற்கு பின் எந்த அதிகாரத்தை கேட்க முடியும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எப்படி கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களுடையதாக மாறியதோ அது போல் வடக்குமாகாணமும் மாற்றமடையும்.

தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமது சமூதாயத்தின் அபிலாசைகளையும், அவர்களது இருப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இதுவே அரசியல் தலைவர்களின் கடமை எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161284

  • கருத்துக்கள உறவுகள்

💯 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எம் கையில் இல்லாதா மாகாண பொலிஸ்சுக்கு கையில் துவக்கு வேண்டும் என கூச்சல் போட்டபடி இருக்க, சிங்களவன் எப்போதும் எமது கையில் இருந்த யாழ் பல்கலைகழகத்தையே உருவி விடுவான்.

பெரும் சிங்கள இனவாதி எஸ் எல் குணசேகர ஒரு தடவை டீவி பேட்டியில் சொன்னார்

1. முன்பு ஒட்டு மொத்த நாட்டிற்கும் 50:50 சிறுபான்மை அதிகாரம் கோரினீர்கள் (ஜீ ஜீ கேட்டது)

2. பின்னர் மாகாண அதிகாரம் காணாது என இந்தியாவிடம் போராடினீர்கள்

3. அதே போல் தனிநாடு கேட்டு போராடுகிறீர்கள்

தமிழர்கள் நீங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எது சாத்தியம் இல்லையோ அதையே கேட்டு நிற்கிறீர்கள்.

இது உண்மைக்கு புறம்பான, ஒரு பொய்யான, பல வரலாற்று நிகழ்வுகளை (தமிழரின் செல்வா தலைமையிலான விட்டு கொடுப்புக்களை) மறைத்து சொல்லப்படும் கருதாகினும்.

ஜி ஜி பொன்னம்பலத்தின் அரசியல், அதேபோல் திம்பு-2023 வரையான தமிழ் அரசியல் அணுகுமுறையை பற்றிய ஒரு இழையோடிய உண்மை இதில் உள்ளது.

அது:

தமிழர்கள் பறக்கும் கனவுடன் சிறகுகள் வேண்டும் என அடிபட,

சிங்களவர் மிக தந்திரமாக தமிழர்களின் கால்களையே வெட்டி எடுத்து விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து 1996 வாக்கிலேயே எச்சரிச்சிட்டாங்க. இவை பதவியை நோக்காகக் கொண்டு எதையும் கணக்கில் எடுக்காமல்.. இருந்து விட்டு.. இப்போ ஐயோ அம்மா என்று பாசாங்கு செய்வது போலிக் கூப்பாடு ஆகும். வெற்றுக் கூச்சல்கள் அல்ல.. தடுக்கக் கூடிய செயற்பாடுகளே அவசியம்.

எனி தடுப்பது அவ்வளவு இலகு அல்ல. காரணம்.. பல்வேறு புதிய பாடநெறிகளுக்கு மாவட்ட புள்ளி அடிப்படையில் அன்றி தேசிய அளவில் மாணவர்கள் பெறும் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறுவதால்.. பெரும்பான்மை சமூக மாணவர்கள் இயல்பாகவே கூடிய நன்மை பெறுவர். அதனால் தான் மாவட்ட அடிப்படையில்.. அல்லது மாகாண அடிப்படையில்.. மாணவர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால்.. அதனை ஆணித்தரமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை எடுத்துச் செல்ல எம்மவர்களிடம் திராணி இருக்கவில்லை.

ஆனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களே அதிகம்.. இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியப்பட்டது..??!

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2023 at 17:36, ஏராளன் said:

திருகோணமலையில் பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டார்கள்.

 திருகோணமலையில்  பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள் என்பது உண்மையா? அப்படி நடந்திருந்தால் அது அபாயகரமானது.  அது தான் அங்கே தமிழர்களின் கல்லூரியை குறிவைத்து  ஹபாயா அணிவிந்து ஒரு ரீச்சரை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 திருகோணமலையில்  பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள் என்பது உண்மையா? அப்படி நடந்திருந்தால் அது அபாயகரமானது.  அது தான் அங்கே தமிழர்களின் கல்லூரியை குறிவைத்து  ஹபாயா அணிவிந்து ஒரு ரீச்சரை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

சுந்தந்திரத்துக்கு முன் 60% க்கும் மேலாக இருந்த தமிழர் எண்ணிக்கை, இப்போ 30-33% அளவில் வந்து நிற்கிறது.

பல தமிழ் கிராமங்களை சிங்கள காடையர்களை கொண்டு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.

மிக பெரும் குடியேற்ற முயற்சியால் பதவிக்குளம்-பதவியா, கண்தளாய்-கண்தலே, இப்படி பல தமிழ் பகுதிகள் பூரண சிங்கள மயமாகிவிட்டன.

இதனால் இப்போ தமிழ், முஸ்லிம், சிங்கள விகிதாசாரம் 1/3 : 1/3 : 1/3 என்றே இருக்கிறது.

இதில் 1948 இல் இருந்து முஸ்லீம்களின் எண்ணிக்கை கூடியது இயற்கை இனப்பெருக்கத்தால்.

தமிழர் எண்ணிக்கை குறைந்தமை, சிங்களவர் எண்ணிக்கை கூடியமை - போர், திட்டமிட்ட வன்முறை, திட்டமிட்ட குடியேற்றத்தால் என்றே நினைக்கிறேன்.

வழமையாக இடம்பெறும் மதமாற்றல் நடவடிக்கைகளை தவிர மேலதிகமாக திருமலையில் தமிழ் - முஸ்லிம் மதமாற்றம் நடந்ததாக தெரியவில்லை.

@MEERA சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

வழமையாக இடம்பெறும் மதமாற்றல் நடவடிக்கைகளை தவிர மேலதிகமாக திருமலையில் தமிழ் - முஸ்லிம் மதமாற்றம் நடந்ததாக தெரியவில்லை.

?? விளங்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் படித்து படம் பெற்ற பின்னர் வெளி நாட்டுக்கு பறப்பதால் உருவாகும்  பிரச்சினை ஒன்று. சிலர் தென் பகுதி பல்கலை கழகங்களில் படடம் பெற்ற பின்னர் வடக்கு நோக்கி போவதட்கு விரும்புவதில்லை. இன்னொன்று வடக்கில் காணப்படும் அரசியல் நிலைமைகளால் பல்கலைகழகங்களில் தெரிவு செய்யப்படாமை. இப்படியாக நிறைய காரணங்கள் உண்டு. இதை தமிழர்கள் , பேராசிரியர்கள் குறை சொல்வதை விட்டுவிட்டு தீர்ப்பதட்கு வழியை  பார்த்தல் நல்லது. 

5 hours ago, goshan_che said:

நாம் எம் கையில் இல்லாதா மாகாண பொலிஸ்சுக்கு கையில் துவக்கு வேண்டும் என கூச்சல் போட்டபடி இருக்க, சிங்களவன் எப்போதும் எமது கையில் இருந்த யாழ் பல்கலைகழகத்தையே உருவி விடுவான்.

பெரும் சிங்கள இனவாதி எஸ் எல் குணசேகர ஒரு தடவை டீவி பேட்டியில் சொன்னார்

1. முன்பு ஒட்டு மொத்த நாட்டிற்கும் 50:50 சிறுபான்மை அதிகாரம் கோரினீர்கள் (ஜீ ஜீ கேட்டது)

2. பின்னர் மாகாண அதிகாரம் காணாது என இந்தியாவிடம் போராடினீர்கள்

3. அதே போல் தனிநாடு கேட்டு போராடுகிறீர்கள்

தமிழர்கள் நீங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எது சாத்தியம் இல்லையோ அதையே கேட்டு நிற்கிறீர்கள்.

இது உண்மைக்கு புறம்பான, ஒரு பொய்யான, பல வரலாற்று நிகழ்வுகளை (தமிழரின் செல்வா தலைமையிலான விட்டு கொடுப்புக்களை) மறைத்து சொல்லப்படும் கருதாகினும்.

ஜி ஜி பொன்னம்பலத்தின் அரசியல், அதேபோல் திம்பு-2023 வரையான தமிழ் அரசியல் அணுகுமுறையை பற்றிய ஒரு இழையோடிய உண்மை இதில் உள்ளது.

அது:

தமிழர்கள் பறக்கும் கனவுடன் சிறகுகள் வேண்டும் என அடிபட,

சிங்களவர் மிக தந்திரமாக தமிழர்களின் கால்களையே வெட்டி எடுத்து விடுகிறார்கள்.

உண்மை. பொன்னம்பலங்கள் அந்த நாள் தொடக்கம் இந்த நாள் வரைக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்றவைகளை பேசி வருவது உண்மையே. இவர்களால்தான் இந்திய தமிழர்களுக்கும் பிரச்சினை ஏட்பட்ட்து.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

?? விளங்கவில்லை!

இலங்கையில் நான்கு மதங்கள், அவற்றின் நிறுவனங்கள் உள்ளன.

1. பெளத்த நிறுவனம்

இதன் மத கொள்கையில் (dogma) ஏனையோரை பெளத்த வழிக்கு கொண்டுவருவது அவ்வளவு முக்கியம் இல்லை. இந்த நிறுவனம் தனது இருப்பை பேண, பெளத்த-சிங்கள அடையாளம் என்ற ஒன்றை உருவாக்கி, அதை வன்முறை சேர் அரசியல் தத்துவமாக்கி தன்னை நிலை நிறுத்துவதோடு - ஏனைய இன, மத சிறுபான்மைகளையும் உள்ளீர்த்து தன்னை பெருப்பித்து நாட்டின் அசைக்க முடியாத மத நிறுவனமாக தன்னை ஆக்கி கொண்டுள்ளது.

2. இந்து நிறுவனம்  

உள்ளதிலேயே காமெடியான நிறுவனம் இதுதான். இது ஒரு மதமா இல்லையா என்பதில் கூட தெளிவில்லை. ஒரு ஒருங்கமைக்கப்பட்ட தலைமையோ, மதப் பீடங்களோ இல்லை. இப்போ புதிதாக இந்தியாவில் இருந்து இறக்கப்பட்ட சிலர் இதன் பீடங்களாக வர முயல்கிறார்கள். இது உண்மையில் தன்னைதானே சிறுக்கி கொள்ளும் மத கொள்கையை உடையது. ஒரு இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்து என்ற தத்துவம். வர்ணாசிரம அடிப்படையிலான சாதி என்பவற்றை இறுக்கி பிடிப்பதன் மூலம் இதை விட்டு பலர் சுய விருப்பில் வெளியேறுகிறனர். ஆனால் இதை உணர்ந்து, தன்னை மீள் புதிப்பிப்பதோ அல்லது வறுமைபட்ட இந்துக்களுக்கு வாழ்வழிப்பதோ இங்கே இல்லை. மதம் மாற்றினால் எந்த நன்மையும் இங்கே இல்லை. என்பதால் யாரையும் இந்துவாக மாற்ற எவரும் முயற்சிப்பதில்லை. இருக்கும் காசை திருவிழா, கோபுரம் என வெட்டியாக செலவழிக்கும் பந்தா மனிதர்கள்தான் இங்கு அதிகம்.

3. கிறீஸ்தவ நிறுவனம் 

இவர்கள் மத கொள்கை படி ஒரு நல்ல கிறீஸ்தவன் தன் சமய ஒழுங்கில் நிற்பதோடு மட்டும் இல்லாமல் - மேலும் ஏனையோரையும் இந்த நல்வழிக்கு திருப்ப வேண்டும். எவ்வளவுக்கு இப்படி ஏனையோரை நல்வழி படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவர்களுக்கு ஆண்டவரின் “கிருபை- போனஸ்” கிடைக்கும்.  

இந்த கிருபை போனஸுக்காக கிறிஸ்தவர்கள் தனி மனிதர்களாகவும், கூட்டாகவும் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை என்பன இதை மட்டுபட்ட அளவில் முன்னெடுத்தாலும், அமேரிக்காவில் இருந்து இறங்கியுள்ள ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும் அமைபுகள் இதை மிக பலமாக முன்னெடுக்கிறன. சுவிசேச கூட்டம், கல்வி, பணம் என பல வழிகளிலும். வீட்டு கதவை தட்டி ரோதனை செய்வது - இழவு வீடுகளில் இழப்பின் துயரில் இருப்போரை மனங் கலைப்பது இப்படி - மிக ஆக்ரோசமாக இவர்கள் இதை செய்கிறார்கள்.

4. இஸ்லாமிய நிறுவனம்

மேலே சொன்ன வகையினரை போலவே இவர்களுக்கும் மதம் மாற்றுவது ஒரு சமய கடமை. இவர்களும் சுவன-போனசுக்காக இதை செய்வார்கள்.

5ம் வேதம் போல ஆக்ரோசமாக முன்னெடுக்காவிட்ட்டாலும் - திருமணம் மூலம் அல்லது, சவுதியில் இருந்து வரும் வகாபி பணம் மூலம் இதை சாதிக்கிறார்கள்.

இவர்களின் மதமாற்ற வீதத்தை தென்னிந்திய/கத்தோலிக்க சபைகளின் வீதங்களுக்கு அண்ணளவாக கருதலாம்.

இதுதான் இலங்கையின் வழமையாக நடைபெறும் மதமாற்ற நடவடிக்கைகள்.

விளங்கி இருக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கல்வி, பணம் என பல வழிகளிலும். வீட்டு கதவை தட்டி ரோதனை செய்வது - இழவு வீடுகளில் இழப்பின் துயரில் இருப்போரை மனங் கலைப்பது இப்படி - மிக ஆக்ரோசமாக இவர்கள் இதை செய்கிறார்கள்.

💯

பண பிரச்சகைள் அற்ற மேற்குலகநாடுகளில்  கிறிஸ்தவ நிறுவனங்களின் தமிழர்களை மதம் மாற்றும் முயற்சி இழவு வீடுகளில் இழப்பின் துயரில் இருப்போரையும், நோய் தாக்கி உடல் நிலை பாதிப்படையும் தமிழர்களை குறிவைத்து நடைபெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எவ்வளவுக்கு இப்படி ஏனையோரை நல்வழி படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவர்களுக்கு ஆண்டவரின் “கிருபை- போனஸ்” கிடைக்கும்.

ஹஹ்ஹா..... நான் கேள்விப்படாத விளக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஹஹ்ஹா..... நான் கேள்விப்படாத விளக்கம்!

உங்கள் பெயர் சாத்தான் எனும் போதே நினைத்தேன் …நீங்கள் வேதாகமத்தை அதிகம் படிக்கவில்லை போலும்.

Matthew 28:18 முதல் 20 வரை

18 - அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

19 - ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20 - நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

யேசுவானவரே நேரடியாக தன்  சீடர்களுக்கு, தன் வழியை ஏனையோருக்கும் பரப்பி, அவர்களை ஞானாஸ்தானம் ஏற்கும் படி கட்டளையிடுகிறார் என்கிறது வேதாகமம்.

சாதாரணமாக கும்பிடும் கிறிஸ்தவரை விட, ஆண்டவரின் கட்டளையை ஏற்று ஏனையோரையும் நல்வழி படுத்திய கிறிஸ்தவருக்கு, ஆண்டவரின் கிருபை கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் அல்லவா? அதுதான் “கிருபை-போனஸ்”.

இதற்கு ஆசைப்பட்டுத்தான் அந்தமான் தீவில் போய் அம்படி வாங்கி இறந்தார் ஒரு பாதிரியார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2023 at 11:36, ஏராளன் said:

.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

https://www.virakesari.lk/article/161284

முதலில், இந்தக் கூற்று உண்மையா என்பதை யாராவது தேடிப்பார்த்துச் சொல்வீர்களா? யாழ் பல்கலையில் 10 இற்குக் கிட்டவான திணைக்களங்கள் இருக்கின்றன. அவற்றில் எத்தனை திணைக்களங்களில் தலைவர்களாக, அல்லது பீடாதிபதிகளாக "பெரும்பான்மையினர்" இருக்கின்றனர் என்று யாராவது கைகளில் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தீர்களா?😂

அப்படி அவர்  யாழ் பல்கலையில் பதவிகளில் இருப்போரை  சொல்லவில்லையென்றால் அனுமதிக்கப் படும் மாணவர்களைச் சுட்டுகிறாரா? அப்படி "பெரும்பான்மையின மாணவர்கள்" யாழ் பல்கலையில் அதிகரிக்கக் கூடாதென்றால், பேராதனை, மொரட்டுவ, ஜெயபுர, றுகுண போன்ற சிங்களப் பகுதிப் பல்கலைகளில் சிறுபான்மையின மாணவர்களை என்ன செய்வதாம்?

இந்த அச்சத்தை வெளியிடும் "வேந்தர் பதமநாதன்",  உண்மையில் யாழ் பல்கலை வாழ்நாள் பேராசிரியர் அல்ல, பேராதனைப் பல்கலையில் தான் அவர் வாழ் நாள் பேராசிரியர். நான் பேராதனையில் இருந்த காலத்தில் அங்கே அவர் வரலாற்றுப் பிரிவின் தலைவராகவும் (HOD) இருந்தவர். இவ்வளவுக்கு பல்லினத் தன்மையை ஊக்குவிக்கும் கொள்கைகளால் தான் பலனடைந்து விட்டு, யாழ்  பல் கலையில் மட்டும் "ஒரு குறிப்பிட்ட மக்கள் பகுதியினர் தான் கோலோச்ச வேண்டுமென" வேந்தரே சொல்கிறார் என்றால், அமெரிக்காவில் நாம் சொல்வது போல, யாழ் பல்கலைச் சமூகம் rotten to the core என்று தான் நான் கருதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்  செய்யவேண்டிய  பணிகள்

படிகள்

நிலைகள்  என  பலவற்றை  விட்டுவிட்டு குய்யோ துமுறையோ  என்று  கதறுவதில்  பலனேதும் வரப்போவதில்லை

தமிழினம்  முதலில் ஒற்றமைப்படணும்

அதற்கு  பின்பே  எதுவும்...?

இதைக்கூட  செய்யமுடியாது  என்றால்

பொத்திக்கொண்டு  வாழ்நாளை  வாழ்ந்துவிட்டுப்போகவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

அப்படி அவர்  யாழ் பல்கலையில் பதவிகளில் இருப்போரை  சொல்லவில்லையென்றால் அனுமதிக்கப் படும் மாணவர்களைச் சுட்டுகிறாரா?

இப்படித்தான் நான் விளங்கி கொண்டேன்.

28 minutes ago, Justin said:

அப்படி "பெரும்பான்மையின மாணவர்கள்" யாழ் பல்கலையில் அதிகரிக்கக் கூடாதென்றால், பேராதனை, மொரட்டுவ, ஜெயபுர, றுகுண போன்ற சிங்களப் பகுதிப் பல்கலைகளில் சிறுபான்மையின மாணவர்களை என்ன செய்வதாம்?

கேள்வியில் நியாயம் நிறையவே இருக்கிறது.

ஆனாலும் நாம் ஒரு விளிம்பு நிலையில், எமது இன, நில அடையாளம் பாதுகாக்க பட வேண்டிய நிலையில் இருக்கும் இனம் அல்லவா?

விலங்கியலில், சூழலியலில் endangered species இற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், non endangered species இற்கு இல்லை அல்லவா?

எத்தனை தமிழர் சோனகர் போய் படித்தாலும், தெற்கின் பல்கலைகழகங்களின் பெரும்பான்மை எப்போதும் சிங்களர்தான். அந்த பல்கலைகளின் institutional culture உம் சிங்களம் சார்ந்தே இருக்கும்.

ஆனால் எமது பல்கலைகள், குடியேற்றத்தின் மூலம் எமது மண், பறிக்கப்பட்டு, கலாச்சார மாற்றத்துக்கு ஆளானது போல ஆகிவிடும் ஆபத்து உண்டு.

நாமும் சிங்களவர் போல் existential threat இல்லாத ஒரு சூழலில் எமது இனத்தை, மொழியை, சுயநிர்ணய உரிமையை இலங்கையில் நிலைநாட்டியபின், தெற்கு பல்கலைகழகம் போல் நாமும் ஆகலாம்.

இந்த context இல்தான் இதை பேராசிரியர் சொல்லி இருப்பார் என நான் நினைக்கிறேன்.

எனது தந்தையாரும் இவரும் பேசுவதை ஒரு ஓரமாய் இருந்து கேட்டவன் நான் - rotten core இன் ஓரங்கம் இவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் வயது போக, போக தலைகீழ் மாற்றங்கள் சாதாரணமே. இதுவும் அப்படியாக இருக்கலாம். 

பிகு

பல நாடுகளில் Minority Protection Mechanisms மூலம் சில நிலப்பரப்புகளில் சில இன, கலாச்சார அடையாளம்கள் பேணப்பட, சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழமைதான்.

அப்படி வடக்கு, கிழக்கு பல்கலைகளில் விகிதாசாரம் பேணலாம் என நான் நினைக்கிறேன்.

தேவை என்றால் அதையே தெற்கிலும் அமல் படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

மேலே நெடுக்கரும் சுட்டிக் காட்டியிருப்பதைப் பார்த்தால், மாணவர் அனுமதியைத் தான் சொல்கிறார். நெடுக்கர் சொன்னது போல, யாழ்ப்பாணம் இராணுவம் வசம் போன பின்னர்  சிங்கள மாணவர்களின் முதல் அணியை அனுமதிக்க இருந்த காலத்தில் இதே ஆட்சேபனை முதலில் எழுந்தது. அப்போது யாழ் உபவேந்தரோ, யாரோ "அப்படியானால் பேராதனையில் இருக்கும் சில நூறு பொறியியல் பீட தமிழ் மாணவர்களை என்ன செய்வது?" என்று கேட்டிருந்தார் (அப்போது யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் இருக்கவில்லையென்பதும் குறிப்பிடத் தக்கது).

ஆனால், நீங்கள் சொல்வது போல, வேந்தர் ஆசைப்படுவது போல பல்கலைகளை communal ஆக மாற்ற முடியாது. ஒரு காரணம், தற்போதைய அனுமதி முறையில் இடமில்லை (பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவராக இருந்தவர் வேந்தர், அவர் அறிவார் இதை!).

இரண்டாவது: என் அபிப்பிராயம், இவ்வாறு பிரித்து வைக்காமல் உயர் கல்வி நிலையங்களையாவது இனப்பாகுபாடின்றி வைத்திருப்பது நல்ல விடயம். இதனால் வரும் தீமைகளை விட நன்மைகள் அதிகம்.

மாணவர் இனப்பரம்பலைக் கட்டுப் படுத்தாமல், so-called தமிழ் கலாச்சாரத்தைப் பேண பல வழிகள் உண்டென நினைக்கிறேன். உதாரணமாக, எழுத்தில் எதுவும் இல்லாமலே, எப்படி யாழ் பல்கலையில் ஒரு சைவர் மட்டுமே துணைவேந்தராக வரமுடியும் என நிர்ணயித்திருக்கிறார்கள்?😎

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

ஆனால், நீங்கள் சொல்வது போல, வேந்தர் ஆசைப்படுவது போல பல்கலைகளை communal ஆக மாற்ற முடியாது. ஒரு காரணம், தற்போதைய அனுமதி முறையில் இடமில்லை (பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவராக இருந்தவர் வேந்தர், அவர் அறிவார் இதை!).

Communal ஆக மாற்றத்தேவையில்லை. யாழ் பல்கலையில் 60% உள்ளூர் (வடக்கு கிழக்கு மாகாண) மாணவர் இருத்தல் வேண்டும், அதேபோல் பெரதெனியவில் 60% மத்திய, ஊவா, சப்ரகமூவ மாணவர் என மாற்றலாம்.

ருகுணுவும், களனியும், கொழும்பும், ரஜரட்டையும், இன்னும் பலவும் இந்த தேவையை உணரவில்லை என்பதால், யாழும், கிழக்கும், தென்கிழக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்பது - majority mob rule.

இனப்பிரச்சனை, தனி நாட்டு கோரிக்கையின் அடிப்படையே இந்த வேறுபாடுதான்.

அவர்கள் இலங்கை என்ற தேசியத்துள் எம்மை உள்ளடக்கி - எல்லாரும் இலங்கையரே - எல்லாருக்கும் எங்கேயும் போய் வாழலாம், படிக்கலாம் என்கிறார்கள். அப்படி செய்வதால்  அவர்களுக்குத்தான் எப்போதும் நன்மை. ஏனென்றால் அவர்கள் இலங்கையில் 75%.

ஆகவே இலங்கையர் என்ற அடையாளம் = சிங்களவர் என்ற அடையாளம் என்றாகிவிடுகிறது.

ஆனால் நாமோ அப்படி அல்ல. நாம் எமது பகுதிகளில் எமது விடயங்களை நாமே நிர்வகிக்கும், முடிவு செய்யும் அதிகாரத்தை கோருகிறோம்.

அதில் உயர் கல்வி அதிகாரமும் அடங்கும்.

இதற்கு, இப்போதைய அனுமதி முறையில் இடம் இல்லை என்பதும், இனியும் இந்த அதிகாரம் முழுவதும் பல்கலைகழக மானிய குழுவிடம், மத்தியில்தான் குவிந்து கிடக்கும் என்பது புரிகிறது.

ஆனால் நாம் கேட்பது உரிமை அல்லவா - ஆகவே கேட்கவாவது வேணும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்படி அவர்  யாழ் பல்கலையில் பதவிகளில் இருப்போரை  சொல்லவில்லையென்றால் அனுமதிக்கப் படும் மாணவர்களைச் சுட்டுகிறாரா?

மாணவர்களைத் தான் குறிப்பிடுகிறார் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

இரண்டாவது: என் அபிப்பிராயம், இவ்வாறு பிரித்து வைக்காமல் உயர் கல்வி நிலையங்களையாவது இனப்பாகுபாடின்றி வைத்திருப்பது நல்ல விடயம். இதனால் வரும் தீமைகளை விட நன்மைகள் அதிகம்.

என் இரெண்டாம் நிலை கல்வி முழுவதையும் ஒரு மூவின பாடசாலையில் கற்றவன் என்ற வகையில் இதில் வரும் நன்மையை நான் ஏற்கிறேன்.

யாழை முழுக்க முழுக்க தமிழர் பல்கலைகழகம் என வைத்திருப்பது அல்ல என் கோரிக்கை. அதன் தமிழ் அடையாளம் மாறாமல் பேணப்பட வேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான விடயமும் உண்டு. ஒரு பல்கலைகழகம் என்பது அந்த பகுதியின், மக்களின் சிந்தனையின் உருக்கு களம். அங்கே இருக்கும் மாணவர், வெளியே அந்த சமூகதின் பிரச்சனைகள், அபிலாசைகள், மொழி என பலதில் பரிச்சயம் கொண்டிருந்தால் மட்டுமே அந்த பல்கலைகழகம் உள்ளூர் மக்களின் சொத்தாக இருக்கும்.

உதாரணமாக யாழ் பல்கலைகழக மாணவர் 75% தமிழர் அல்லாதோர் ஆகி விடின் ன்யார் திலீபனை நினைவு கூருவர்? யார் மாவீரர் நாள் கொண்டாடுவர்? எமது தமிழ் தேசிய அரசியலுக்கான அடுத்த சிந்தனை, தலைமை எங்கே இருந்து வரும்?

நான் கேட்பது communalism அல்ல localism.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

மாணவர் இனப்பரம்பலைக் கட்டுப் படுத்தாமல், so-called தமிழ் கலாச்சாரத்தைப் பேண பல வழிகள் உண்டென நினைக்கிறேன். உதாரணமாக, எழுத்தில் எதுவும் இல்லாமலே, எப்படி யாழ் பல்கலையில் ஒரு சைவர் மட்டுமே துணைவேந்தராக வரமுடியும் என நிர்ணயித்திருக்கிறார்கள்?😎

🤣 அது அந்த சச்சிதானந்தனுகே விளக்கம்🤣

இந்த முறைகளில் கட்டுபடுத்துவதை விட வெளிப்படைதன்மையாக செய்வதே மேல் என நான் நினைக்கிறேன்.

சைவர்கள் மட்டுமே வரலாம் என எழுதா விதிப்படி நடப்பது  மாபியா நடைமுறை. ஒரு வகை டான் களுக்கு அது சரி. இன்னொரு வகை டான்களும் அதை செய்வது - இனத்துகே வெட்ககேடு.

தவிரவும் அனுமதியை முழுக்க முழுக்க மானிய குழு நிர்வகிக்கிறது.

து வே  பதவிக்கு 3 பேரை குட்டைபட்டியல் இடுவதை போல பல்கலைகழக சமூகம் மாணவர் சேர்கையில் மாபியா வேலை காட்ட முடியாது என  நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என் இரெண்டாம் நிலை கல்வி முழுவதையும் ஒரு மூவின பாடசாலையில் கற்றவன் என்ற வகையில் இதில் வரும் நன்மையை நான் ஏற்கிறேன்.

யாழை முழுக்க முழுக்க தமிழர் பல்கலைகழகம் என வைத்திருப்பது அல்ல என் கோரிக்கை. அதன் தமிழ் அடையாளம் மாறாமல் பேணப்பட வேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான விடயமும் உண்டு. ஒரு பல்கலைகழகம் என்பது அந்த பகுதியின், மக்களின் சிந்தனையின் உருக்கு களம். அங்கே இருக்கும் மாணவர், வெளியே அந்த சமூகதின் பிரச்சனைகள், அபிலாசைகள், மொழி என பலதில் பரிச்சயம் கொண்டிருந்தால் மட்டுமே அந்த பல்கலைகழகம் உள்ளூர் மக்களின் சொத்தாக இருக்கும்.

உதாரணமாக யாழ் பல்கலைகழக மாணவர் 75% தமிழர் அல்லாதோர் ஆகி விடின் ன்யார் திலீபனை நினைவு கூருவர்? யார் மாவீரர் நாள் கொண்டாடுவர்? எமது தமிழ் தேசிய அரசியலுக்கான அடுத்த சிந்தனை, தலைமை எங்கே இருந்து வரும்?

நான் கேட்பது communalism அல்ல localism.

ஓம், சுதேச ஊக்குவிப்பிற்காக சில வாதங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை.

ஆனால், 1994 இலிருந்தான என் அவதானிப்பின் படி, யாழ் பல்கலையின் சமூகத்திற்குப் பயனான கல்வியை வழங்கும் தரம் வீழ்ச்சியைத் தான் கண்டிருக்கிறது. இதன் பிரதான காரணம் என நான் கருதுவது, யாரும் ஊடுருவ முடியாத ஒரு கடின கவசத்திற்குள் (shell) இருக்கும் ஆசிரியர்கள், அவர்களிடம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள். 2002 இன் பின்னர், இந்தத் தரத்தை உயர்த்த தென்பகுதியிலிருந்து எடுக்கப் பட்ட முயற்சிகளுக்குத் தடை போட இந்த உள்ளூர்வாதத்தைத் தான் பாவித்தனர்.

என் அபிப்பிராயம், ஒரு சமூக அடையாளமாக, குறியீடாக மட்டும் வைத்திருக்க வேண்டுமானால், யாழ் பல்கலையை வேந்தர் சொல்வது போன்ற திசையில் செல்ல விடலாம். இதனால், தமிழர்களுக்கு கல்வி, கேள்வி, சமூக விடயங்களில் பலனெதுவும் கிடைக்காது. எல்லாம் ஒரு balancing act தான்!   

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக அயலில் வசிப்பவர்களுக்கும் ஒரு 5% இருக்கவேண்டும்😂

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

நியாயமான தர்க்கங்கள்.

உள்ளூர்வாதம் எதிர் வெளியாரை கொண்டு வருவாதால் வரும் நேர்மறை விளைவுகள் இரெண்டையும் இலங்கையின் எல்லா பல்கலை கழகங்களும் அடையும் நிலை இருந்தால் நல்லது என்பதே என் நிலைப்பாடு.

பெரெதெனியாவில் ஒரு Kandyan flavor உள்ளதை போல திருநெல்வேலியில் இருக்கும் Jaffnese flavor உம் நிலைத்திருக்க வேண்டும். 

34 minutes ago, வாலி said:

பல்கலைக்கழக அயலில் வசிப்பவர்களுக்கும் ஒரு 5% இருக்கவேண்டும்😂

🤣 நல்லவேளை பழைய மாணவர் கோட்டாவும் வேணும் என கேட்க்காமல் விட்டீர்கள்🤣.

ஆனால் கொழும்பின் முதல் தர அரச பாடசாலைகள் எல்லாம் catchment area என்று நீங்கள் சொல்லும் முறையில்தான் ஆண்டு 1 க்கு பெரும்பாலான மாணவர்களை உள்வாங்குகிறார்கள்.

  ஆண்டு 1, பல்கலை அனுமதியை ஒப்பிடவில்லை. 

பல்கலை கழக வெட்டு புள்ளி எடுத்த சிங்களவரை விட, வெட்டு புள்ளி எடுக்காத தமிழரை யாழ் பல்கலைகழகம் உள் எடுக்க வேண்டும் என்பதல்ல கோரிக்கை.

யூஜிசி மாணவர்களை பல்கலைக்கு அனுப்பும் போது - பல்கலை கழக சூழல், உள்ளூரியல்லையும் கருத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ். பல். உள்ள புத்த பெருமான் வாரார் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நீங்கள் வேதாகமத்தை அதிகம் படிக்கவில்லை போலும்.

நான் வேதாகமத்தை படித்தகாக எங்கும் சொல்லவில்லை.

8 hours ago, goshan_che said:

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

 அதன் பொருள் என்ன? 

8 hours ago, goshan_che said:

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;

அந்தக்கட்டளைகள் என்ன? இல்லை; அவற்றை வடிவாக அறிந்தால், ஞானஸ்நானம் பெறலாமே என்று கேட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.