Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

17 AUG, 2023 | 09:43 AM
image
 
மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில் இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (16) நுகேகொடையில் உள்ள அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றமடைய வேண்டும். நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது பிள்ளைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீன மற்றும் இந்தியையும் கற்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஜெனரேஷன் ஆல்பாவிற்கு (Gen Alpha) பொருந்தும் வகையில் புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்கள் மற்றும் போட்காஸ்ட்கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கியல் (ரோபோடிக்ஸ்) ஆகியவற்றை கற்பிக்க வேண்டும்

புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன் டொலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை,'' என்றார்.

காலநிலை மாற்றம் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் 20 வருடங்களுக்குள் இலங்கை நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார். " ஐ.நா தலைவர் கூறியது போல நாங்கள் காலநிலை மாற்றத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் காலநிலை மாற்றத்தை கையாளும் போது உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும், "  எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/162537

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில் இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரிதானே இனி அவங்க நாடு தானே வடகிழக்கு இந்தியா ,  மற்ற பகுதி சைனா  பிறகென்ன 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல்ல, சிங்களவனுக்கு தமிழும், தமிழனுக்கு சிங்களமும் படிப்பியுங்கோ பார்ப்போம்.... போட்டார்... சீனத்துக்கும், ஹிந்திக்கும்.... க்..கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மற்றவர்கள் எனது தாய் மொழியை கற்கின்றார்களோ படிக்கின்றார்களோ என கவனிப்பது எனது நோக்கமல்ல. எனக்கு பல மொழிகள் தெரிந்திருந்தால் அது  பல வழிகளில் பிரயோசனப்படும்.
எனக்கு சிங்களம் தெரிந்திருந்தல் சிங்கள இணையங்களில் வரும் செய்திகளை படித்து அவர்கள் மனோநிலையையும் நேரடியாக அறியக்கூடியதாக இருந்திருக்கும்  என ஆதங்கப்படுவேன்.

மொழிகள் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. இனப்பற்றுக்கும் பிற மொழி படிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

முன்பெல்லாம் வெவ்வேறு முதலீட்டாளர்கள் எங்களிடம் வந்து மூதலீடு குறித்து பேசி செயற்படுவர், இப்போது அப்படி இல்லை, இந்தியாவுக்குச் சென்று விற்றுவிட்டதை நாம் அறியோம். 

அதானியிடம் என்ன பேசினார்கள் என்றும் இந்தியா சென்ற போது என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.அதானிக்கு என்ன விற்றார்கள் என்றும் தெரியவில்லை. இவற்றுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சி கப்பல் விவகாரத்தால் இந்தியா மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

இன்னொரு பக்கம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கைப் பிள்ளைகள் சீன ஹிந்தி என்று கற்க வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதல் பாடசாலை கல்வியை கற்பதற்குரிய ஏற்பாடுகளை முறையாக வழங்க வேண்டும்.

பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் எகிறியிருப்பதாலும், தரம் குறைந்த மருந்தாலும், மருந்தின் விலையும் மிக அதிகமாக உயர்ந்ததாலும் மருத்துவமனைகளுக்குச் சென்று சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் பெற்றோர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது இன்று நாட்டின் பிள்ளைகள் சீன ஹிந்தி மொழிகளை கற்கச் சொல்கிறார்கள்.எனக்குத் தெரியாது.இதற்கு என்ன சொல்வது?

13 ஆவது திருத்தம் குறித்து பொய்க் கதையை கட்டமைத்ததால் ஜனாதிபதிக்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தும் இல்லாமல் போகும் நிலையே காணப்படுகிறது. சாகர காரியவசத்தின் பேச்சுக்கள் அதை உணர்த்துகின்றன.

தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் என்னிடம் இருப்பதாகக் காட்டிக் கொண்டு 13 ஆவது திருத்தம் குறித்து பேசி வேட்பாளர் பதவியை கோர முயல்வதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் கதை பொய்யானது.அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஏனென்றால் ஜனாதிபதி சொன்னபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான பதிலைப் வழங்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் மாகாண சபை நடத்துங்கள் என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியது. இப்போது அஸ்வெசும தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது” என்றார்.

Tamilmirror Online || இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

11 hours ago, பிழம்பு said:

இலங்கையில் சீன மொழியும் , இந்தி மொழியும் கட்பிக்கப்படுகின்றது. விரும்பியவர்கள்  கற்கலாம். இந்தியாவும், சீனாவும் இனி வரும் காலங்களில் வளர்ச்சியடைந்த முன்னேறிய நாடுகளாக இருப்பதால் ஜனாதிபதி அப்படி கூறி இருக்கிறார். இலங்கையில் இனி சீன இந்திய நிறுவனங்களே முதலீடு செய்யபோகின்றன என்பது வெள்ளிடை மலை. எனவே இம்மொழியை கேட்பது வேலைவாய்ய்புகளுக்கு வசதியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Cruso said:

 வியாபாரம்,தொழில் நிமித்தம் எந்தமொழியையும் கற்கலாம் என்பது என் கருத்து. 
இருந்தாலும்  ஹிந்தி கற்று எதை சாதிக்கப்போகின்றோம். இந்தியர்கள் ஆங்கிலத்தில் தானே அதிகமாக உரையாடுகின்றார்கள்.:rolling_on_the_floor_laughing:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தமிழருக்குரிய நாடு இல்லை என்பவர்கள், சீனனோடும் இந்தியனோடும் பகிர்ந்து வாழட்டும். அப்போ புரியும் தாம் விட்ட தவறு. அதன்பிற்பாடு திருத்திக்கொள்ள முடியாது, போராடவும் வலு இல்லை, விதைத்ததை மௌனமாய் அறுக்கத்தான் முடியும். இப்போ கூவுபவர்கள் குனிந்து வணங்குவார்கள். நான் பிறந்த நாடு எனக்கில்லை எனும்போது எவன் ஆண்டால் எனக்கென்ன? இல்லை எண்டவன் எப்படி ஆளப்படுகிறான் என்பதையாவது பாத்து ரசிக்க ஆயுள் வேண்டும் எனக்கு.

On 17/8/2023 at 15:42, ஏராளன் said:

இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும்

இலங்கைப்பிள்ளைகள் தங்கள் தாய் மொழியோடு பலமொழிகளையும் கற்பது நல்லது என்று கூறினால் வரவேற்கலாம், பொது மொழி ஆங்கிலம் இருக்கிறது, குறிப்பிட்டு சீன, இந்தி மொழி என்று கூறுவதுதான் உதைக்கிறது. இந்தியாவிலேயே எல்லா மாநிலங்களிலும் இந்தி கற்பிப்பதுமில்லை கற்பதுமில்லை. சீனாவிலேயே பல மொழிகள் வழக்கிலுள்ளன. இவர் எதை குறிப்பிடுகிறார்?  

Posted

மேற்கு நாடுகளிலும் மண்டரின் கற்க வேண்டி வரும் என மக்கள் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nunavilan said:

மேற்கு நாடுகளிலும் மண்டரின் கற்க வேண்டி வரும் என மக்கள் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் பேசுகிறார்கள்.

ஜேர்மனியில் பத்து வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டு விட்டது.
ஜேர்மனி சீனாவுடன் மிக நெருக்கமான நட்பு நாடு. முன்னர் ரஷ்யாவுடன் இருந்ததை போல்.....

Posted
34 minutes ago, nunavilan said:

மேற்கு நாடுகளிலும் மண்டரின் கற்க வேண்டி வரும் என மக்கள் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் பேசுகிறார்கள்.

நான் என் மகளை படிக்கச் சொல்லி உள்ளேன். சீன இலக்கியத்தையும் அறியட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

நான் என் மகளை படிக்கச் சொல்லி உள்ளேன். சீன இலக்கியத்தையும் அறியட்டும்.

முதலில் அவர்கள் தங்கள் இலக்கியங்களை அறிய ஊக்குவியுங்கள், பிறகு தன்னாலேயே அவர்ளுக்கு ஆர்வம் பிறக்கும் மற்றவைகளை அறிய.  இப்போ நீங்கள் சீன மொழியை ஊக்குவித்தால் அவர்கள் தாங்கள் யார் என்பதை அறிய மறந்துவிடுவார்கள், ஒருநாள் உங்களை மனம் நோவார்கள் தங்களை அடையாளத்தை தொலைத்துவிட்டு..

சிங்களம் எங்கடை முட்டாளுகளை பயன்படுத்தி, எங்களதை பறிக்க, அதை இந்தியா, சீன நோகாமல் கவரும். அதற்காகவே இந்த நாட்டில் முரண்பாடுகளை தீரவிடாமல் ஊக்குவிக்கும், அது தெரியாத முட்டாளுகள் கூவி கூவி அழைக்குதுகள் சண்டைக்கு. முட்டி மோதி அழிவது தமிழரென்றாலும் எங்களிடமிருந்து  பறித்ததை இழப்பது சிங்களமே.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.