Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, Nathamuni said:

நன்றி: கூடை, முட்டை..... அப்படியே கருத்தை எடுக்கிறீர்கள் போலுள்ளது.

அது முதலீடு செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை உவமானம். அதாவது உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலிடாமல், பல இடங்களில் முதலிட்டால் ஒன்று பிழைத்தாலும் ஏணையவை கைகொடுக்கும்.

லைக்கா உள்பட சகலரும் இலங்கைக்கு வெளியே பல உறுதியான கூடைகளையும் இலங்கையில் சின்ன கூடையையும் வைத்திருப்பார்கள்.

இலங்கையில் வங்கிகளில் பணத்தை கடன் வாங்கியே தொழில் செய்வர். காப்புறுதியால், வன்செயல் வந்தால் நட்டம் இலங்கைக்கே.

மேலும் இலங்கை BOI எனும் அரசஅமைப்பு வெளிநாட்டவர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருகிறது.

ஆக, புலம் பெயர் முதலீட்டாளர்கள், அளந்தே காலை வைப்பார்கள். பணத்தை அங்கே கொட்டி இழக்கும் முட்டாள்களாக நான் கருதவில்லை.

இதே திரியில்தான் நீங்கள் எழுதியிருந்தீர்கள் அரசியல் ஸ்திரதன்மை இல்லாதமையால் கேரளாவிலிருந்து இலங்கை ரொட்டியை இறக்குமதி செய்வதாக.. அவருக்கு விளங்கியது ஏன் இந்த அல்லிராஜாவுக்கு விளங்கவில்லை? அவரைப் போன்ற நீங்கள் கூறும் மற்றைய முதலாளிகளுக்கு விளங்கவில்லை?

பொன்னியின் செல்வனில் முதலிடமுதலே வேறு படங்களில் தயாரிப்பில் ஈடுபட்டு அவர் அங்கே பிரபல்யமான தயாரிப்பாளராகத்தான் இருந்திருக்கிறார் ஆனால் பொன்னியின் செல்வனின் இலங்கை காட்சிகள் இலங்கையில்தான் எடுக்கப்பட்டதா? இல்லை பின் எவ்வாறு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வரும்? 

நாங்கள் தமிழர் இடங்களில் முதலிடமுடியாமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறோம், அங்கே உள்ள இளையோரையும் குறை கூறுகிறோம்  ஆனால் அதில் ஒன்றைத்தன்னும் இந்த புலம்பெயர் முதலீட்டாளர்களால் மாற்றமுடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கான எல்லை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. 

இப்படிப் பல கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அது தேவையற்றது. ஏனெனில் இங்கே  பலர் அதனை தெளிவாக விரிவாக விளங்கப்படுத்தியுள்ளர்கள். 

ஆனாலும் எனக்கு வர்த்தகத்தின்/வியாபாரத்தின் விதிமுறைகளை விளங்கப்படுத்தியதற்கு நன்றி. 

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சுவைப்பிரியன்

இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.

ரஞ்சித்

பொருளாதார பலமே எம்மை மீட்க வழி என்று எழுதப்படும் மொக்கைத்தனமான கருத்துக்களைச் சகிக்க முடியவில்லை. தனக்கு இலாபம் தரக்கூடிய ஒரு சில தமிழ் பண முதலைகளைச் சிங்களம் வளைத்துப்போடும். இவர்கள் பெருந்தொகைப் பணத

Justin

இங்கே அல்லிக்கு விழும் பந்தி பந்தியான வசவுகளைப் பார்க்கையில் ஒன்று தெளிவாகிறது: புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழனாக இருப்பது ரொம்பக் கஷ்டமான விடயம், தாண்ட வேண்டிய bar மிக உயரம்😂!  இந்த ஆக்ரோஷத்தைப்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதே திரியில்தான் நீங்கள் எழுதியிருந்தீர்கள் அரசியல் ஸ்திரதன்மை இல்லாதமையால் கேரளாவிலிருந்து இலங்கை ரொட்டியை இறக்குமதி செய்வதாக.. அவருக்கு விளங்கியது ஏன் இந்த அல்லிராஜாவுக்கு விளங்கவில்லை? அவரைப் போன்ற நீங்கள் கூறும் மற்றைய முதலாளிகளுக்கு விளங்கவில்லை?

நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேனே.

அல்லிராஜா, இங்கு அவருக்கு கருத்து மழை பொழியும் அனைவரிலும் பார்க்க, ஒரு படி மேலே. காரணம் அவரது பில்லியன் டாலர் மதிப்புள்ள வியாபாரம். 

அது குறித்து, நதிமூலம், ரிசிமூலம் பார்ப்பதும் தேவையில்லாதது. அதே பொருளாதார மட்டத்தில் உள்ள நம்மில் யாராவது அறிவுரை சொன்னால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்து.

அவரது நிறுவனத்தின் CEO போன்ற முக்கிய பதவிகளில் வெள்ளையர்கள். ஆகவே, அவருக்கு தேவையான அறிவுரை தர தேர்ச்சி உள்ள பலர் இருப்பார்கள் என்று கருதலாம்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், லண்டனில், அல்லிராஜாவை நேரடியாக சந்தித்து, ரணில் விடுத்த கோரிக்கையினால் தான், போயிருக்கிறார். மிகுதி எல்லாம் பக்கா ட்ராமா. அல்லிராஜா முட்டாள் அல்ல.   👋

Edited by Nathamuni
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சமூகத்தில் இப்படி 4 வகையான மனிதர்களைப் பார்க்கலாம். எனக்கு இந்தத் திரியை வாசித்த பொழுது இதனைப் இங்கே பதிவது சரியென தோன்றியது என்பதால் இணைத்துவிடுகிறேன். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் நீக்கப்பட்டது
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

தேவை ஓட்டை இல்லாத கூடையை பின்னும் தூரநோக்குடைய தலைமை

அதற்கிடையில் இலங்கையை ஆளும் அரசு எங்கட வளங்களை வைத்தே எங்களை இன்னமும் கீழே தள்ளிவிடுவார்கள். 

எத்தனை அறிவாற்றல் இருந்தாலும் பணபலம் இருந்தாலும் எங்களுக்கு இன்னமும்(2009ற்குப் பின்) ஒரு ஒழுங்கான கூடையை பின்னமுடியவில்லை. ஆனால் நிறைய கதைக்கிறோம். அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/8/2023 at 10:40, Justin said:

இது உண்மையான தகவலா? செய்தி , நிகழ்வு இணைப்பைத் தர முடியுமா?

இது உண்மையான தகவல் தான். சிங்கள தளம் ஒன்றில் பார்த்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

IMG-4391.jpg

கருத்தான ஓவியம்👍

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதற்கிடையில் இலங்கையை ஆளும் அரசு எங்கட வளங்களை வைத்தே எங்களை இன்னமும் கீழே தள்ளிவிடுவார்கள். 

எத்தனை அறிவாற்றல் இருந்தாலும் பணபலம் இருந்தாலும் எங்களுக்கு இன்னமும்(2009ற்குப் பின்) ஒரு ஒழுங்கான கூடையை பின்னமுடியவில்லை. ஆனால் நிறைய கதைக்கிறோம். அவ்வளவுதான்

👌.

சிங்கள இனவாதத்தின் மைண்ட்வாய்ஸ்:

நமக்கு வாய்த்த எதிரிகள் ரொம்பவும் கையாலாகாதவர்கள்…

ஆனால் வாய் மட்டும் காது வரை நீள்கிறது🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேனே.

அல்லிராஜா, இங்கு அவருக்கு கருத்து மழை பொழியும் அனைவரிலும் பார்க்க, ஒரு படி மேலே. காரணம் அவரது பில்லியன் டாலர் மதிப்புள்ள வியாபாரம். 

அது குறித்து, நதிமூலம், ரிசிமூலம் பார்ப்பதும் தேவையில்லாதது. அதே பொருளாதார மட்டத்தில் உள்ள நம்மில் யாராவது அறிவுரை சொன்னால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்து.

அவரது நிறுவனத்தின் CEO போன்ற முக்கிய பதவிகளில் வெள்ளையர்கள். ஆகவே, அவருக்கு தேவையான அறிவுரை தர தேர்ச்சி உள்ள பலர் இருப்பார்கள் என்று கருதலாம்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், லண்டனில், அல்லிராஜாவை நேரடியாக சந்தித்து, ரணில் விடுத்த கோரிக்கையினால் தான், போயிருக்கிறார். மிகுதி எல்லாம் பக்கா ட்ராமா. அல்லிராஜா முட்டாள் அல்ல.   👋

நாதம்,

அல்லி முதலீட்டை காப்பாற்றுகிறார்ரா? பெருக்கிகிறாரா, வகுக்கிறாரா என்பதெல்லாம் சாதாரண தமிழ் குடிமக்களாகிய எமக்கோ, நாட்டில் இருப்போருக்கோ ஒரு பொருட்டே அல்ல.

அவர் ஒரு யாவாரி…எல்லா சமூகத்திலும் காசு உள்ளவர் வேட்டி நுனியை பிடித்து கொண்டு ஒரு கூட்டம் அலையும்…அதை பற்றியும் பொதுவானவர்களுக்கு அக்கறை இல்லை.

அல்லியோ, தாமரையோ, ஓக்கிட்டோ, டியுலிப்போ யாராகினும் 3 வகையில் தம் பொருளாதார வலுவை பாவிக்கலாம்.

1. தன் சுய லாபத்துக்கு மட்டும்

2. மட்டுபட்ட அளவில் தமிழருக்கு வேலை வாய்ப்பை வழங்கல், எமது இடங்களில் முதலிடல்

3. தம் பொருளாதார இயலுமையை கொண்டு - இனத்தை பொருளாதார சுதந்திரம் நோக்கி முந்தள்ளல்.

அல்லி - இதுவரை 1 ஐ மட்டுமே செய்துள்ளார்.

2 ஐ கணிசமான அளவில் செய்ய கூடும். கிளிநொச்சி முயற்சி தவிர வேறு ஏதும் இல்லை என நினைக்கிறேன். செய்ய வாழ்துக்கள்.

3 - வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பில்லை.

அம்புட்டுத்தான் மேட்டர்.

ஒரு யாவாரி…தன் முதலீட்டை பாதுகாக்க… பிக்குகளின் கால்களில் விழுவதை எல்லாம் பொருளாதார நகர்வு, வாழ்த்துக்கள் ப்ரோ என்று பயர் விடுவதைதான் சகிக்க முடியவில்லை.

2 hours ago, Nathamuni said:

லண்டனில், அல்லிராஜாவை நேரடியாக சந்தித்து, ரணில் விடுத்த கோரிக்கையினால் தான், போயிருக்கிறார். மிகுதி எல்லாம் பக்கா ட்ராமா. அல்லிராஜா முட்டாள் அல்ல

வியாபாரநலனுக்காக பிக்கு காலில் விழும்  அல்லியும் முட்டாள் இல்லை.    

புலம்பெயர் பொருளாதார சக்தி என கூவும் ஆட்களுக்கு, அதே சக்தியின் முண்ணனி யாவாரியை கொண்டு போய் பிக்கு காலில் விழவைத்து - “நான் சிங்களவண்டா…நீ பொரிசோட பக்கதில் இருந்து டீ குடிச்சாலும்…என் காலில்தான் விழ வேண்டும்” என முகத்தில் அறைந்து சொன்ன நரியும் முட்டாள் இல்லை.

இதை பார்த்து “வாழ்துக்கள் ப்ரோ” என 🔥 விட்டு திரியும் நம்மாளுகள்தான்….

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் தனது திரைப்பட தயாரிப்புகளை ஆரம்பித்துள்ள லைகா நிறுவனம், ஆரம்பகட்டமாக 6 திரைப்படங்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

இதில் 5 சிங்கள திரைப்படங்களும், ஒரு தமிழ் திரைப்படமும் தயாரிக்கப்பட உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, goshan_che said:

நாதம்,

அல்லி முதலீட்டை காப்பாற்றுகிறார்ரா? பெருக்கிகிறாரா, வகுக்கிறாரா என்பதெல்லாம் சாதாரண தமிழ் குடிமக்களாகிய எமக்கோ, நாட்டில் இருப்போருக்கோ ஒரு பொருட்டே அல்ல.

அவர் ஒரு யாவாரி…எல்லா சமூகத்திலும் காசு உள்ளவர் வேட்டி நுனியை பிடித்து கொண்டு ஒரு கூட்டம் அலையும்…அதை பற்றியும் பொதுவானவர்களுக்கு அக்கறை இல்லை.

அல்லியோ, தாமரையோ, ஓக்கிட்டோ, டியுலிப்போ யாராகினும் 3 வகையில் தம் பொருளாதார வலுவை பாவிக்கலாம்.

1. தன் சுய லாபத்துக்கு மட்டும்

2. மட்டுபட்ட அளவில் தமிழருக்கு வேலை வாய்ப்பை வழங்கல், எமது இடங்களில் முதலிடல்

3. தம் பொருளாதார இயலுமையை கொண்டு - இனத்தை பொருளாதார சுதந்திரம் நோக்கி முந்தள்ளல்.

அல்லி - இதுவரை 1 ஐ மட்டுமே செய்துள்ளார்.

2 ஐ கணிசமான அளவில் செய்ய கூடும். கிளிநொச்சி முயற்சி தவிர வேறு ஏதும் இல்லை என நினைக்கிறேன். செய்ய வாழ்துக்கள்.

3 - வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பில்லை.

அம்புட்டுத்தான் மேட்டர்.

ஒரு யாவாரி…தன் முதலீட்டை பாதுகாக்க… பிக்குகளின் கால்களில் விழுவதை எல்லாம் பொருளாதார நகர்வு, வாழ்த்துக்கள் ப்ரோ என்று பயர் விடுவதைதான் சகிக்க முடியவில்லை.

வியாபாரநலனுக்காக பிக்கு காலில் விழும்  அல்லியும் முட்டாள் இல்லை.    

புலம்பெயர் பொருளாதார சக்தி என கூவும் ஆட்களுக்கு, அதே சக்தியின் முண்ணனி யாவாரியை கொண்டு போய் பிக்கு காலில் விழவைத்து - “நான் சிங்களவண்டா…நீ பொரிசோட பக்கதில் இருந்து டீ குடிச்சாலும்…என் காலில்தான் விழ வேண்டும்” என முகத்தில் அறைந்து சொன்ன நரியும் முட்டாள் இல்லை.

இதை பார்த்து “வாழ்துக்கள் ப்ரோ” என 🔥 விட்டு திரியும் நம்மாளுகள்தான்….

நான் உங்கள் விவாதத்துக்கு வரவில்லை - இது அரசியல். பிரபாவுடன் மட்டுமே கருத்தாடல் - அது பொருளாதாரம் சம்பந்தமானது. 😲

உங்களுடன் விவாதித்தால்..... குழப்பமாகிவிடும். 😜

Edited by Nathamuni
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

நான் உங்கள் விவாதத்துக்கு வரவில்லை - இது அரசியல். பிரபாவுடன் மட்டுமே கருத்தாடல் - அது பொருளாதாரம் சம்பந்தமானது. 😲

உங்களுடன் விவாதித்தால்..... குழப்பமாகிவிடும். 😜

🤣… விவாதம் என்றில்லை…

நீங்கள் திரியில் ஒரு தனி டிரக்கில் ஓடி விட்டு (பொருளாதாரம்), பின்னர் அதை ஈழதமிழரின் பொருளாதார சுதந்திரம் என்ற மெயின் டிரக்கோடு ( அறிந்தோ, அறியாமலோ) லிங்க பண்ணும் போதுதான் பதில் சொல்ல வேண்டி வருகிறது.

சுருங்கச்சொல்லின் - 

அல்லி - தன் முதலீட்டை காப்பாற்ற - வேட்டி சால்வை சகிதம் பிக்கு காலில் விழவைக்கப்பட்டுள்ளார்.

இது அல்லியின் கெட்டித்தனம்தான். பொருளாதார டிரக்கில்பார்த்தால் அவருக்கும், இனவாததுக்கும் win-win தான்.

ஆனால் திரி அலசும் மெயின் டிரக்ட் (பிரபா கதைப்பதும்) இதுவல்ல.

16 minutes ago, Nathamuni said:

குழப்பமாகிவிடும்

குழப்பம்…விளக்கம் தரலால்…

குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும்🤣

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, goshan_che said:

🤣… விவாதம் என்றில்லை…

குழப்பம்…விளக்கம் தரலால்…

குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும்🤣

தனி ட்ராக்கில் போனாலும், அவோ, குழம்புறாவோ, குழப்புறாவோ என்று ஒரே குழப்பமா இருக்குது பாஸ் 🤪 🤣

பேசாம, மெயின் ட்ராக்க்கு வந்து சோதில கலந்திடலாமோ எண்டு குழம்பிக்கொண்டிருக்கிறேன் 🤪 🤣

Edited by Nathamuni
  • Haha 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

இல்லை…வங்கி நடைமுறை எல்லா நாடுகளில் இருப்பது போலத்தான் இலங்கையிலும். ஆனால் வட்டி விகிதம் அதிகம்.

இலங்கையில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாடுமே பெரும்பான்மை விரும்பின், இருக்கும் அரசியல்

சாசனத்தை தூக்கி வீசி விட்டு புதிய சாசனத்தை உருவாக்கலாம்.

ஆனால் நாம் மேற்கு என அழைக்கும் நாடுகள் அப்படி நடவாது (ஹங்கேரியில் ஒபான், இத்தாலியில் வலது கூட்டமைப்பு, டிரம் என வந்த போதிலும்) என்ற நியாயமான நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் இலங்கையில் அப்படி இல்லை.

காலத்துக்கு காலம் அரசியல் சாசனத்தை மாற்றி, புதிய சட்டங்களை உருவாக்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் - தமிழரின் உரிமையை பறிப்பது என்பது இலங்கையில் சர்வ சாதாரணம்.

அதே போல் நில உச்சவரம்பு, தொழில்களை தேசிய மயமாக்கல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என சொல்லி, நாளைக்கே வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை சுவீகரிக்கலாம்.

இதில் மேற்கு நாட்டின் பிரஜைகள் முறையாக முதலிட்டதை - அந்த நாட்டு இராஜதந்திர தூதுவராலயங்கள் - தலையிட்டு அல்லது இலங்கை அரசு மீது வர்த்தக வழக்கு போட்டு நட்ட ஈட்டை பெற்று கொடுக்கலாம். அதற்கே நாய் பேய் அலைச்சல் பட வேண்டும். ஆனாலும் நட்ட ஈடுதான் கிடைக்கும். தொழில்/சாலைகள்/நிலங்கள் அல்ல.

60, 70 களில் இது நடந்த விடயம்தான்.

ஆனால் இப்படி சட்டபடி கூட தேவையில்லை.

83-85 காலப்பகுதியில் தென்னிலங்கையில் பல வியாபாரங்களை - இனி வாழ முடியாது என்ற பாதுகாப்பின்மையை உருவாக்கி தமிழரிடம் இருந்து கைமாற்றினார்கள்.

கம்மன்பிலவோ, வீரவன்சவோ ஜனாதிபதியானால் நாளைகே இப்படி ஒரு நிலையை உருவாக்கலாம்.

83 போல் கலவரம் பண்ண கூட தேவையில்லை. ஒரு தமிழரின் ஆடைதொழில்சாலை பாணதுறவில் இருக்கிறதென வைப்போம். அங்கே சிங்கள யுவதிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிக்கு விகாரையில் மணி அடித்து சொல்ல, ஏலவே தயார் செய்யபட்ட மக்கள் கூட்டம் தொழில்சாலையை முற்றுக்கையிட்டு கலகம் செய்ய, பொலீஸ் கண்டும் காணாமல் இருந்தால் போதும் - முதளாலி அறாவிலைக்கு ஒரு சிங்களவரிடம் கொடுத்து விட்டு போய் விடுவார்.

இப்படி கெக்கிராவை வயல்கள், மலை நாட்டில் ஹோட்டல்கள், தேயிலை ரப்பர் தோட்டங்கள் என பலதை முன்னமே வலுகட்டாயமாக கைமாற்றி உள்ளார்கள்.

இப்போதைக்கு இது தேவையில்லை என்பதால் கையில் எடுக்கவில்லை.

ஆனால் தேவைப்படும் போது கையில் எடுப்பார்கள்.

விளக்கத்திற்கு நன்றி.

காலில் விழ வைத்து உள்ளூர ரசித்த ...

இந்த படத்தை பார்த்தனிங்களோ ஜெயலலிதா முகத்தில் தெரிகின்ற மகிழ்ச்சியை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் 2008 களின் இறுதிப்பகுதியில் லண்டன் Canary Wharf  இல் உள்ள லைக்கா சுபாஸ்கரனின் அண்ணனின் வெக்ரொன் மொபைலில் tariff controller ஆக வேலைபார்த்த காலத்தில் (அப்பொழுது இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா காட்டு வித்து வாற காச எண்ணி சாக்கில கட்டுர வேலை பாத்துக்கொண்டிருந்தார்.. இப்பொழுதும் செய்கிறாரோ தெரியல.. பணம் சமூகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் உங்களை வயித்துபாட்டுக்கு அந்த பணம் உள்ளவன் படிப்பறிவு இல்லா வடிகட்டின முட்டாள இருந்தாலும் காலில் விழ வைக்கும்) அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு சிங்களவன் நான் பாஸ்கரனின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் head office இல் வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் பாஸ்கரனுடன் பேசுவேன் என்பதால் தான் பாஸ்கரனை பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் பாஸ்கரனை பேசவைக்கணும் எண்டு எப்படியாவது பாஸ்கரனிடம் ஒரு அப்பொயிண்ட்மெண்ட் வாங்கித்தர சொல்லி டெய்லி கேட்பான்.. அப்பொழுது அதை நான் சீரியசாக எடுக்கவில்லை.. அவன் சொன்னதை நான் கண்டுக்கவே இல்லை.. அப்பொழுது இறுதிப்போரில் நம்ம பக்கம் தோற்றுக்கொண்டிருந்த விசரில் இருந்ததால் அவனை கருத்தில்கூட எடுக்கவில்லை.. இப்பொழுது அதை நினைத்து பார்க்கிறேன்.. சிங்களவன் எவ்வளவு காலத்துக்கு முன்னமே பிளான் போட்டிருக்கிறான் பொருளாதார பலம் உள்ள தமிழர்களை தம் பக்கம் தூக்க.. ஜ மீன் அவனுகள் மேல் மட்டம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

தனி ட்ராக்கில் போனாலும், அவோ, குழம்புறாவோ, குழப்புறாவோ என்று ஒரே குழப்பமா இருக்குது பாஸ் 🤪 🤣

பேசாம, மெயின் ட்ராக்க்கு வந்து சோதில கலந்திடலாமோ எண்டு குழம்பிக்கொண்டிருக்கிறேன் 🤪 🤣

1990 ஜூன் சண்டைக்கு பிறகு மதவாச்சி ஜங்சனில அம்போ எண்டு நின்ற மன்னார் ரயில் பெட்டியள் மாரி நிக்கிறியள் எண்டுரியல் 🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் 2008 களின் இறுதிப்பகுதியில் லண்டன் Canary Wharf  இல் உள்ள லைக்கா சுபாஸ்கரனின் அண்ணனின் வெக்ரொன் மொபைலில் tariff controller ஆக வேலைபார்த்த காலத்தில் (அப்பொழுது இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா காட்டு வித்து வாற காச எண்ணி சாக்கில கட்டுர வேலை பாத்துக்கொண்டிருந்தார்.. இப்பொழுதும் செய்கிறாரோ தெரியல.. பணம் சமூகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் உங்களை வயித்துபாட்டுக்கு அந்த பணம் உள்ளவன் படிப்பறிவு இல்லா வடிகட்டின முட்டாள இருந்தாலும் காலில் விழ வைக்கும்) அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு சிங்களவன் நான் பாஸ்கரனின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் head office இல் வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் பாஸ்கரனுடன் பேசுவேன் என்பதால் தான் பாஸ்கரனை பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் பாஸ்கரனை பேசவைக்கணும் எண்டு எப்படியாவது பாஸ்கரனிடம் ஒரு அப்பொயிண்ட்மெண்ட் வாங்கித்தர சொல்லி டெய்லி கேட்பான்.. அப்பொழுது அதை நான் சீரியசாக எடுக்கவில்லை.. அவன் சொன்னதை நான் கண்டுக்கவே இல்லை.. அப்பொழுது இறுதிப்போரில் நம்ம பக்கம் தோற்றுக்கொண்டிருந்த விசரில் இருந்ததால் அவனை கருத்தில்கூட எடுக்கவில்லை.. இப்பொழுது அதை நினைத்து பார்க்கிறேன்.. சிங்களவன் எவ்வளவு காலத்துக்கு முன்னமே பிளான் போட்டிருக்கிறான் பொருளாதார பலம் உள்ள தமிழர்களை தம் பக்கம் தூக்க.. ஜ மீன் அவனுகள் மேல் மட்டம்..

யாழில் @Justin அண்ணா சேப்பியன்ஸ் என்ற ஒரு அருமையான புத்தகம் பற்றி முன்னர் எழுதியிருந்தார்.

அதில் எம்மை (ஹோமோ சேப்பியன்ஸ், சேப்பியன்ஸ்) ஐ விட உடல் வலுவும் இன்னும் பல வரபிரசாதங்களும் நிறைந்த ஹோமோ சேப்பியன் நியண்டடாலிஸ் இனத்தை அழித்து நாம் எப்படி ஒரே தக்கன பிழைத்த மனித இனமாக நிலை பெற்றோம் என விபரிக்கப்பட்டிருக்கும்.

அதில் நமக்கு இருந்த மிக பெரிய அனுகூலமாக விபரிக்க படுவது…  

கூட்டுறவு, ஒரே நேரத்தில் பல்லாயிரம், லட்சம் பேரை ஒரே செய்தியின் வழிப்படுத்தும் தொடர்பாடல் என்பன.

அதாவது நியண்டலாலிஸ் மனிதர்கள் 10, 100 என்ற அளவை தாண்டி கூட்டு பிரக்ஞையை உருவாக்க முடியாமல் போக, நாம் 10,000, 100,000, மில்லியன் ஆட்களை ஒரே நோக்கில் கட்டிபோட, செயல்படுத்த முடிந்தோமாம்.

இதுதான் எமது வெற்றிக்கு வழிகோலியதாம்.

இதே போல் தமிழரை விட தானியங்கியாக  சிங்களவர் ஒரு கூட்டு பிரக்ஞையில் இயங்குவதை நான் தனி வாழ்விலும் பொது வாழ்விலும் அவதானித்துள்ளேன்.

ஒரு வேளை நாம் கூர்ப்பில் பிந்தங்குகிற மனிதக்கூட்டமோ? அதனால்தான் அவர்கள் தக்கன பிழைத்துக்கொண்டே போக..நாம் அல்லன மடிந்து கொண்டே போகிறோமோ? 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த படத்தை பார்த்தனிங்களோ ஜெயலலிதா முகத்தில் தெரிகின்ற மகிழ்ச்சியை பாருங்கள்.

தாயையும் தன்னையும் இம்சித்த ஆணினத்தை காலில் விழ வைத்து ரசித்த மனோநிலை.

இரெண்டும் அடிப்படையில் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு சிங்களவன் நான் பாஸ்கரனின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் head office இல் வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் பாஸ்கரனுடன் பேசுவேன் என்பதால் தான் பாஸ்கரனை பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் பாஸ்கரனை பேசவைக்கணும் எண்டு எப்படியாவது பாஸ்கரனிடம் ஒரு அப்பொயிண்ட்மெண்ட் வாங்கித்தர சொல்லி டெய்லி கேட்பான்.

வெளிநாடுகளில் உள்ள தமிழரை சிங்களம் கண்காணித்து தன் வலைக்குள் இழுத்துக்க்கொண்டே இருக்கிறது. ஒரு புறம் தமக்கு நீதி வேண்டும் என போராடும் தமிழருமுண்டு, அதேநேரம் சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்கும் கூட்டம்முண்டு. சிங்களம் சொல்லும், நாட்டிலே தமிழருக்கு பிரச்சனையில்லை, புலம்பெயர் தமிழர் நாட்டை முன்னேற்ற முன்வந்துள்ளனர். தமிழ் இனவாதிகள் நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள், ஒருபக்கம் தமிழரின் நிலங்களை பறித்துக்கொண்டு, தங்களுக்கு வட கிழக்கிலே சுதந்திரமாக விகாரை கட்ட முடியவில்லை என்று சண்டைக்கிழுத்துக்கொண்டு, அதே தமிழனின் காசில் நாட்டையும் கட்டியெழுப்பிக்கொண்டு. இதற்கு பட்டும் படிப்பினை பெறாத நாம்தான் காரணம். வெளிநாடுகளில் இவர்களின் தொழில் நிறுவனங்களிலே சிங்களவருக்கு வேலைவாய்ப்பும் வழங்குவார்கள். தாயகத்திலே தமிழரிடம் கூலிக்கு வந்து, அவர்களின் உற்பத்திகளை  கொள்வனவு  செய்ய வந்து, எல்லாம் கற்ற பின் அவர்களை அடித்துவிரட்டி விட்டு தாங்கள் தொழிலதிபர் ஆகியது போல் தமிழரின் நிலத்தில், உழைப்பில், நிதியில், சிங்களம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு நம்மை வந்தேறு குடிகள் என விரட்டுவதன் காரணம் இதுவே. வலை விரித்து தேடி கைது செய்த ஜே .பியை சுதந்திரமாக நடமாட விட்டதன் பின்னணி என்ன? கோத்தா கைப்பற்றிய புலிகளின் பணத்துக்கும், தங்கத்துக்கும் என்ன நடந்தது என அப்பப்போ சில சிங்கள அரசியல்வாதிகள் கேள்விகள் எழுப்புகிறார்களே, தமிழருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்காமல் இழுத்தடிப்பதன் காரணம்; எம்மை அடிமைகளாக வைத்து நினைத்த போது எமது உடமைகளை, எம்மை அச்சுறுத்தி பறித்தெடுப்பதற்கும், வெளிநாடுகளில் இருந்து எம்மவர்களால், பிற நாட்டு உதவிகளை தான் பொறுப்பெடுத்து தனது தேவைகளுக்கு நினைத்த திட்டங்களுக்கு செலவிடலாம், சூறையாடலாம், யார் கணக்கு கேட்பார். ஏன்.... நமது மக்களின் தேவைகளுக்காக பணம் அனுப்பிய தமிழரின் பொது நிறுவனங்களை தேவையற்ற காரணங்களை சொல்லி தடுத்த்து நிறுத்தியது? தான் கையாடல் செய்ய முடியாவிட்டால்  எந்த நேரத்திலும் தடை செய்து பறித்தெடுக்கும். இது காபனையல்ல நிதர்சனம்!   

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

3 - வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பில்லை.

அம்புட்டுத்தான் மேட்டர்.

ஒரு யாவாரி…தன் முதலீட்டை பாதுகாக்க… பிக்குகளின் கால்களில் விழுவதை எல்லாம் பொருளாதார நகர்வு, வாழ்த்துக்கள் ப்ரோ என்று பயர் விடுவதைதான் சகிக்க முடியவில்லை.

வியாபாரநலனுக்காக பிக்கு காலில் விழும்  அல்லியும் முட்டாள் இல்லை.    

புலம்பெயர் பொருளாதார சக்தி என கூவும் ஆட்களுக்கு, அதே சக்தியின் முண்ணனி யாவாரியை கொண்டு போய் பிக்கு காலில் விழவைத்து - “நான் சிங்களவண்டா…நீ பொரிசோட பக்கதில் இருந்து டீ குடிச்சாலும்…என் காலில்தான் விழ வேண்டும்” என முகத்தில் அறைந்து சொன்ன நரியும் முட்டாள் இல்லை.

அவ்வளவு தான். நன்றி 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, goshan_che said:

அம்புட்டுத்தான் மேட்டர்.

இது பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன்.

கெண்டன் பகுதியில் டைம்ஸ் ரவல் வைத்திருந்தவர் சுதா. 

பக்கா யாபாரி. இவர் தென் இலண்டலில், Sri Lankan GSA வைத்திருந்த நிறுவனத்துடன் போட்டியிட்டு  GSA எடுக்கும் முணைவில் போய் நின்ற இடம் (புனித) வத்தைகளில் ஒன்று. 

காலில் விழுந்தாரோ, கையில் விழுந்தாரோ கிடைத்தது GSA!

இலண்டணில் இலங்கையர் விளையாட்டு போட்டி தமிழ், சிங்களமாக பிரிந்த போது, இவரை சிங்கள பகுதியில் காணமுடியும். அங்கே கேட்பவர்களுக்கு, இங்க தான் அருமை, அங்க மனிசன் போவானா பாணி கதை.

அவரது வீட்டுக்கு நான் வேறு விடயமாக போயிருந்த போது, காற்சட்டை, ரீசேட் போட்டிருந்த, ஒரு வத்தையின் கெற் மொட்டை பியர் உறிஞ்சிக் கொண்ருடிந்தார்.

புன்சிரிப்பில் அருளாசி தந்தார் 🙏

இலண்டண் வந்திருந்த அவரை, இலங்கை தூதரக காரில் கொண்டு வந்து விட்டுப் போயிருந்தார்கள் - காவியுடன் தான்,

ஈழபதீஸ்வர ஆலய விவகாரத்தில், புலிகள் சார்பில், சமாதான பேச்சுக்கு கோயில் நிர்வாகியுடன் பேசப்போன குழுவில்சுதா இருந்தார் என கொழும்புப்பத்திரிகையில் DBS Jeyaraj எழுதப் போகிறார் என்று தெரிந்ததும், Sri Lankans கான்சல் ஆகும் என்று தெரிந்து, அதற்கு கொடுக்க வேண்டிய தொகையை இழுத்தடித்து, வேறு பகுதிக்கு மாத்தி, இறுதியில் bankruptcy அடித்து பல மில்லியன் தேத்திக் கொண்டார்.

அதனால் தான் சொல்கிறேன், இவர்கள், யாழ் தமிழில் சொல்வதானால், எமனை பச்சடி போட்டு தின்பவர்கள்.

😁

7 hours ago, விசுகு said:

ஆங்கிலத்தில் சொல்வது போல் Time Travels 🤣 (புரிந்தவன் பிஸ்தா).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“அங்க மனிசன் போவானா”

யுரேக்கா!  யுரேக்கா!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் வேறு யாரோ.. ஆனால் மகிந்தா ராஜபக்‌ஷ சைவக்கோயில் பூசாரிக்கு முன்னால் அடங்கி பணிவாய் நின்றால் சிங்களம் தமிழரிடம் அடங்கிவிட்டது என்று பொருளா?

எங்கள் ஆட்கள் விமர்சனங்களை காதில் போடாமையே அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வெற்றியின் ரகசியம் போல. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஜரோப்பாவில் இருந்த இருக்கும் நமக்கு மட்டுமே தெரியும் இவ்வளவு தகவல்களையும் இந்தியாவில் இருந்தபடியே திரட்டியது ஆச்சரியம்தான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Posted
12 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இவர் வேறு யாரோ.. ஆனால் மகிந்தா ராஜபக்‌ஷ சைவக்கோயில் பூசாரிக்கு முன்னால் அடங்கி பணிவாய் நின்றால் சிங்களம் தமிழரிடம் அடங்கிவிட்டது என்று பொருளா?

எங்கள் ஆட்கள் விமர்சனங்களை காதில் போடாமையே அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வெற்றியின் ரகசியம் போல. 

பணம், அதிகாரம் உள்ள ஒருவர் ஏனையவர்களின் விமர்சனத்தை ஏற்ற ஒருவரை உலகத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இவர் வேறு யாரோ.. ஆனால் மகிந்தா ராஜபக்‌ஷ சைவக்கோயில் பூசாரிக்கு முன்னால் அடங்கி பணிவாய் நின்றால் சிங்களம் தமிழரிடம் அடங்கிவிட்டது என்று பொருளா?

எங்கள் ஆட்கள் விமர்சனங்களை காதில் போடாமையே அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வெற்றியின் ரகசியம் போல. 

என்னது மகிந்த ஐயர்மாருக்கு முன்னால அடங்கி நிண்டாரா?

நன்னா ஜோக் அடிக்கிறேள் போங்கோ.

மகிந்த எப்போ கோயிலுக்கு போனாலும் ஒரு அரசன், கோவில் முதல் மரியாதையை ஏற்கும் தோரணையில்தான் இருப்பார்.

மகிந்த மட்டும் அல்ல. எல்லா சிங்கள அரச, இராணுவ தலைவர்களும் இதே போலத்தான்.

இப்படி பிக்குகளின் கால்களுக்கிடையில் மோதிரத்தை தொலைத்தவன் விழுவது போல், சிங்கள தலைவர்கள் கூட பிக்குகளின் காலில் விழுவது அரிது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு நாம் ஏற்றுக் கொண்ட கொள்கை வேறு சுரக்கமாக முடித்திருக்கிறார்.
    • சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு  கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.  சபாநாயகர் பதவிக்கு எதிர்கட்சி முன்மொழியவுள்ள நபர் - தமிழ்வின்
    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣) பிழைகளை மூடி மறைப்பவர்களாலும் பிழைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களாலும் , பிழைகளை நியாயப் படுத்துபவர்களாலும் அது முடியும்.  ஆனால் நடைமுறையில் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிபவர்கள் மேற் கூறப்பட்டவர்களே. 
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.