Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்யும் உக்ரைன் காட்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-2-1.jpg

சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உலகையே உலுக்கி எடுத்து வருகிறது, பார்ப்பவர் கண்களை எல்லாம் கண்ணீர் பெருக்கச் செய்கிறது.
நீண்ட காலமாக நடந்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர்க்கள கொடுமைகளின் சாட்சியே இந்தக் காட்சி.

உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் போரினால் கைகளை இழந்து, முகம் சிதைந்த நிலையில் உள்ள தனது இளம் கணவர் ஆண்ட்ரியை, அவரது மனைவி அலினா கட்டிப்பிடித்திருக்கிறார். மனைவியின் அன்பை, ஆறுதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை தனது கைகளால் ஆரத்தழுவி உடல் மொழியால் சொல்ல முடியாத இயலாமை கணவரை இன்னும் கவலையுறச் செய்கிறது.

w.jpg

ஆண்ட்ரி உக்ரைனிய இராணுவத்தின் 47வது படைப்பிரிவின் வான் உளவுத்துறை அதிகாரி, அவர் ரஷ்ய துருப்புக்களுடன் நடந்த போரில் இந்தளவிற்கு காயமடைந்துள்ளார்.

கடந்த 14 மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர்களை மேற்கொண்டுள்ள தலைவர்களுக்கு படத்தில் உள்ளவர் ஒரு எண்ணிக்கை அவ்வளவுதான், ஆனால் அவரின் குடும்பத்திற்கு, குறிப்பாக காதல் மனைவிக்கு..

போரில் இறந்துள்ள இரண்டு இலட்சம் வீரர்களைவிட இவர்களைப் போன்றவர்களின் நிலைமைதான் மிக மோசம். கை, கால், கண் என்று உடலின் பல அவயங்களை இளம் வயதிலேயே இழந்து நித்தம் நித்தம் மற்றவர்களை சார்ந்து, மருந்து மாத்திரைகளின் தயவால் வாழும் கொடுமையான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தினர் மட்டுமின்றி 428 குழந்தைகள் உள்பட 10,769 பேர் போரால் காயம் அடைந்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

அவர்கள் அத்தனை பேரும் இப்படித்தான் நித்தமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருப்பர் என எண்ணும்போது கல்நெஞ்சமும் கலங்குமே.

போர் தொடங்கி இரண்டு மாத காலத்தில் உக்ரைனை பிடித்துவிடுவோம் என்று சவால் விட்ட ரஷ்யஜனாதிபதி புதின், பதினான்கு மாதமாகியும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, மாறாக தன் சொந்த நாட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளார், ஆயிரக்கணக்கான பேர்களை அகதிகளாக்கியுள்ளார், பல நாட்டு மக்களின் பசி பட்டினிக்கு காரணமாகியிருக்கிறார்.

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதாய் இல்லை’ என்ற கதையாக இப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் நேர்முகமாகவும், ரஷ்யாவிற்கு, சீனா உள்ளீட்ட நாடுகள் மறைமுகமாகவும் உதவி வருவதால் மனித உயிர்கள் மேலும் மேலும் மலிவாகி வருகிறது.

இரு நாட்டு தலைவர்களின் ஈகோ, அணு ஆயுதத்தை பயன்படுத்தக்கூட தயங்கமாட்டோம் என்று அறிவிக்குமளவிற்கு சென்றுள்ளது.

உணவு, மருத்துவம் என்று உயிர்வாழ தேவையான விஷயங்களுக்கு கூட நாடு அல்லாடிக்கொண்டு இருக்கிறது பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் பற்றி கவலைப்படக்கூட நேரமில்லை

பூமி தோன்றிய நாள் முதல் அன்பை மட்டுமே விதைத்து வந்தாலும் அறுவடை செய்வது என்னவோ உயிர்களைத்தான் என எண்ணும்போது கவலைதான் மேலிடுகிறது. படத்தில் உள்ள பெண்ணின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளம் நடுங்குகிறது.

ஒரு வியட்நாம் போரை நிறுத்தியது ஒரு புகைப்படம், அது போல இந்த உக்ரைன் போரையும் இந்தப் படம் நிறுத்துமா? நிறுத்தவேண்டும்!

https://thinakkural.lk/article/269845

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கியிருப்பார்கள்.......எல்லாமே கேள்விக்குறியாகி விட்டது .......!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஒரு வியட்நாம் போரை நிறுத்தியது ஒரு புகைப்படம், அது போல இந்த உக்ரைன் போரையும் இந்தப் படம் நிறுத்துமா?

இல்லை.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. அங்கே போருக்கு எதிரான எதிர்ப்புக்கள்  தீவிரமாகியதால் போரை நிறுத்தி இராணுவத்தை திருப்பி அழைத்தது. ரஷ்யாவில் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு இருக்கின்றது. ஆனால் அங்கே உள்ள சர்வாதிகாரி புதின் எதிர்கட்சியினரை சிறையில் அடைத்து எதிர்ப்புக்ளை ஒடுக்கி ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கிறார்.  இந்த சர்வாதிகாரிக்கு முடிவு ஏற்படும்வரை அவரது ஆக்கிரப்பு போர் நடைபெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஒரு வியட்நாம் போரை நிறுத்தியது ஒரு புகைப்படம், அது போல இந்த உக்ரைன் போரையும் இந்தப் படம் நிறுத்துமா? நிறுத்தவேண்டும்!

புதினின் ரஸ்யாவில் போரினை எதிர்த்தால் உடனடியாகச் சிறை. 15ஆண்டுகள் கம்பிகளுக்குப் பின்னால் கஞ்சியோடு காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். அப்படிப் பலர் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nochchi said:

புதினின் ரஸ்யாவில் போரினை எதிர்த்தால் உடனடியாகச் சிறை. 15ஆண்டுகள் கம்பிகளுக்குப் பின்னால் கஞ்சியோடு காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். அப்படிப் பலர் இருக்கிறார்கள்.

உலகப்பயங்கரவாதி. ஏதாவது ஒரு வழியில் அழிக்கப்படணும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இல்லை.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. அங்கே போருக்கு எதிரான எதிர்ப்புக்கள்  தீவிரமாகியதால் போரை நிறுத்தி இராணுவத்தை திருப்பி அழைத்தது. ரஷ்யாவில் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு இருக்கின்றது. ஆனால் அங்கே உள்ள சர்வாதிகாரி புதின் எதிர்கட்சியினரை சிறையில் அடைத்து எதிர்ப்புக்ளை ஒடுக்கி ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கிறார்.  இந்த சர்வாதிகாரிக்கு முடிவு ஏற்படும்வரை அவரது ஆக்கிரப்பு போர் நடைபெறும்.

வியாட்னாமின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின் வாங்கிய அமெரிக்கா, அது தான் உண்மை நிலை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உலகப்பயங்கரவாதி. ஏதாவது ஒரு வழியில் அழிக்கப்படணும். 

அமெரிக்க-ஐரோப்பியக் கூட்டினது இலக்கும் அதுவே. ஆனால் சதாம்,கடாபி வரிசையில் இணைப்பதை நோக்காக்கொண்டு நகரும் இவர்களால் அப்படி எதுவும் செய்துவிட முடியாது. அது பேரழிவில் போய்முடியலாம். தானில்லையென ஒரு நிலை வருமாயின் அது அணு ஆயுத யுத்தத்திலேயே போய் முடியும். இவர்கள் ரஸ்யா,ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் தொடர்பில் உடனடி முடிவுகளை எடுக்கமாட்டார்கள். ரஸ்யாவிலே, உக்ரேன் ஊடான படை நடவடிக்கை மூலம் பொருண்மிய மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைத்து மக்களை வீதிக்கிறக்கி தமக்காதரவானதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இத்தனை பிரளயமும் நடக்கிறது. அதன்பின் அவரை கைது செய்யக்கூடமாட்டார்கள். ஏறக்குறைய கோத்தாவை,மகிந்தவைப்போல் விட்டுவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

உலகப்பயங்கரவாதி. ஏதாவது ஒரு வழியில் அழிக்கப்படணும். 

யார் உலகப்பயங்கரவாதி என்பதற்கு அப்புறம்.........

அழிக்கப்படணும் என்றால் இன்னும் பொதுமக்கள் அழிக்கப்படுவதை ஆதரிக்கின்றீர்கள். இன்றும் மேற்குலக நாடுகள் போர் அழிவை முடிவிற்கு கொண்டு வர முயற்சிக்காமல் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் மீண்டும் மீண்டும் புதிய உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது. இதே நிலைதான் ரஷ்ய தரப்பிலும் நடக்கின்றது. ரஷ்ய பின் புலத்திலும் பல நாடுகள் உள்ளன. எனவே சமாதானம் இல்லையேல் அழிவுதான் மிஞ்சும்

புட்டின் அழிக்கப்பட்டால் புட்டினை விட இன்னொரு  புட்டின் ரஷ்ய சார்பில் வரத்தான் போகின்றார். அது சிலவேளை இன்னும் மோசமாகவே போகும்.

உலகில் போர் அழிவுகளை கண்டு மனித  இனம் திருந்தியிருந்தால் முதலாம் உலகப்போரோடு எல்லாமே நின்றிருக்க வேண்டும். அல்லது இரண்டாம் உலகப்போரோடு ஆவது நின்றிருக்க வேண்டுமே.

போட்டி, பொறாமை, போர் எல்லாம் அலைகள் ஓய்வதில்லை போல்.....enjoy :cool:

  • கருத்துக்கள உறவுகள்

கு சா அவர்களே ஒரு முறை நேர்காணலில் ஜெகத் கஸ்பார் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் தட்டையான மனநிலைகொண்டவர்கள் எனக் கூறியதன் அர்த்தத்தை இதுவரை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அதனது உண்மையான அர்த்தம் என்ன என்பதை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சிலவேளை அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ எனக் குழம்பிப்போவதெள இதுவரை நீடிக்கிறது.

ஆனால் இந்தத் திரியில் நீங்கள் எழுதிய கருத்து இப்படியாகவும் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிடது. பூட்டின் ஒரு மன நோயாளி அந்த மனநோயாளியின் செயல்களை யாரோ ஒருவருக்கு மேலுள்ள கோவத்தின் காரணமாக ஆதரித்து நிற்பது என்பது அபத்தன் இந்தியா சீனா இவை போன்ற நாடுகளது நடுநிலை எனும் பாசாங்குத் தனத்துக்கு ஒப்பானது இந்தச் செயல்.

உயிர் அழிவு மட்டுமல்லை உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் எமக்கு அறிமுகமில்லாத மனிதர்களும் இந்தப்போரினால் பாதிக்கப்படுகிறான, நேற்றிருந்ததுபோல வாழ்க்கை இன்றில்லை காரணம் இந்தப்போர்தான். 

சாதாரணமாக தனிப்பட்ட விதத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் வரையறுக்கப்பட்ட எனது வருமானத்தில் கட்டுபடியில்லாத செலவீனங்களால் எனது அமைதி குலைகிறது. எனது அனைத்துச் செலவினங்களும் மிகவும் திட்டமிட்ட முறையில் நியாயமானதாக இருந்தாலும் சமாளிக்கமுடாதுள்ளது நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் நிம்மதியாக நித்திரைகொள்ள முடியவில்லை பயம் பயம் பயம் நாளைய விடியல் எப்படியிருக்கப்போகுது எனும் பயம். யுத்தத்தினாலான பயமில்லை சாதாரண நடைமுறை வாழ்வையிட்டுப் பயம் இடுப்பிலிருக்கும் வேட்டியும் உருவப்பட்டுவிடுமோ எனும் பயம் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோமோ எனும் பயம் கிரேக்கத்தில் நடந்த பொருளாதார மந்தநிலையில் மேல்மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்தார்களே அவர்கள்போலான மனநிலை எனக்கும் வந்துவிடுமோ எனும் பயம். 

இந்த உலகவல்லரசுகளது அடாவடித்தனம் சாமானியனை மிகவும் பாதித்துவிட்டது, பாவம் அவன்  வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் தெருவில் இலவச உணவுக்காக வரிசையில் காத்துக்கிடக்கிறான் இங்குவாழும் புலம்பெயர்ந்தவன் இல்லை இந்த நாட்டின் மைந்தர்கள்தான் அப்படி நிற்கிறார்கள் எங்கள் நிலையும் இதுதான் ஆனால் பிச்சியெடுக்க ரோசம் விடுகிதில்லை எனச் சிலர் புறுபுறுக்கிறார்கள்.

பூடின் ஒழியவேண்டும் காரணம் இதைத்தவிர வேறி எந்தவித மாற்றீடும்  இல்லை.

3 hours ago, குமாரசாமி said:

யார் உலகப்பயங்கரவாதி என்பதற்கு அப்புறம்.........

அழிக்கப்படணும் என்றால் இன்னும் பொதுமக்கள் அழிக்கப்படுவதை ஆதரிக்கின்றீர்கள். இன்றும் மேற்குலக நாடுகள் போர் அழிவை முடிவிற்கு கொண்டு வர முயற்சிக்காமல் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் மீண்டும் மீண்டும் புதிய உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது. இதே நிலைதான் ரஷ்ய தரப்பிலும் நடக்கின்றது. ரஷ்ய பின் புலத்திலும் பல நாடுகள் உள்ளன. எனவே சமாதானம் இல்லையேல் அழிவுதான் மிஞ்சும்

புட்டின் அழிக்கப்பட்டால் புட்டினை விட இன்னொரு  புட்டின் ரஷ்ய சார்பில் வரத்தான் போகின்றார். அது சிலவேளை இன்னும் மோசமாகவே போகும்.

உலகில் போர் அழிவுகளை கண்டு மனித  இனம் திருந்தியிருந்தால் முதலாம் உலகப்போரோடு எல்லாமே நின்றிருக்க வேண்டும். அல்லது இரண்டாம் உலகப்போரோடு ஆவது நின்றிருக்க வேண்டுமே.

போட்டி, பொறாமை, போர் எல்லாம் அலைகள் ஓய்வதில்லை போல்.....enjoy :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட கொடிய கண்கொண்டு பார்க்க முடியாத புகைப்படங்கள் காணொளிகள் எல்லாம் எமது மண்ணிலிருந்தும் வந்தன.

உலகத்தில் எவனுமே வாய் திறக்கலையே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. இப்போது உக்ரைன் சரணடையாமல் "நிலத்தை விட்டுக் கொடுக்காமல்" நிற்பதற்கு கொடுக்கும் விலை இது!

"கோமாளி" என்று எள்ளப்படும் செலென்ஸ்கி, "இப்படியெல்லாம் நடக்காது" என்று பொய் வாக்குறுதி கொடுத்து தற்காப்புப் போரை ஆரம்பிக்கவில்லை!

"ஒரு வாரத்தில் எல்லாம் முடிந்து விடும்!" என்று தம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து வலிந்து போரைத் தொடங்கியது வேறு ஒருவர், யாரென இங்கே குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை!

ஆனால், தற்காப்புப் போரை நடத்தாமல் இருந்திருந்தால் 2014 இல் க்ரைமியா போல போலந்து, ஹங்கேரி எல்லைகள் வரை வந்திருப்பார்கள் ரஷ்யர்கள். விலையை உக்ரைன் கொடுத்திருக்காது, "எப்ப உள்ள வருவானோ, எங்கள் வாழ்க்கை நிலை என்னவாகுமோ?" என்ற கலக்கத்தில் மேற்கு ஐரோப்பாவில் இருப்போர் - நம் புலம் பெயர் தமிழர் உட்பட- கொடுத்திருப்பர்.

எனவே உக்ரைனியனுக்கு நன்றி சொல்லுங்கள், கண்ணீர் சிந்துங்கள், ஒரு சலூட் செய்யுங்கள், அதன் பிறகு சமாதானம் பற்றி முறையிடுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைவிட கொடிய கண்கொண்டு பார்க்க முடியாத புகைப்படங்கள் காணொளிகள் எல்லாம் எமது மண்ணிலிருந்தும் வந்தன.

உலகத்தில் எவனுமே வாய் திறக்கலையே?

இதை யாருக்கு சொல்கின்றீர்கள்?  தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் உலகத்தை இன்னுமா நம்புகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின் சற்றுமுன் வந்த செய்திகளின்படி மஸ்கோவில் இருந்து செண்ட் பீற்றேஸ்பர்க் பயணம் செய்யும்போது விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, vanangaamudi said:

வக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின் சற்றுமுன் வந்த செய்திகளின்படி மஸ்கோவில் இருந்து செண்ட் பீற்றேஸ்பர்க் பயணம் செய்யும்போது விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

நல்ல செய்தி 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இலங்கைத் தமிழர்கள் தட்டையான மனநிலைகொண்டவர்கள்

உங்கள் புரிதல் சரியே. இலங்கை தமிழர்களின் தட்டையான மனநிலை எப்படி என்றால்….

ரஸ்ய சார்பு உக்ரேன் அரசும், ஆயுத தரகர்களும், கூலி விமானிகளும் இலங்கைக்கு உதவினர் என்பதற்காக ….

ரஸ்யாவை எதிர்க்கும், தமது மொழி, இன, தேசிய அடையாளத்துக்கு போராடும் எமது பிரச்சனையில் எந்த சம்பந்தமும் அற்ற உக்ரேனியர்கள் அழிய வேண்டும். 

ஆனால் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து இன்றளவும் உலக அரங்கில் நிபந்தனை அற்ற ஆதரவு கொடுக்கும், 2009 இல் இருந்த அதே புட்டினின் ரஸ்யாவுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள்.

இது தட்டையான சிந்தனை அல்ல - இது சிந்தனையே அல்ல, வெறும் குரூரம்.

3 hours ago, Elugnajiru said:

இப்படியாகவும் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிடது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

எமது பிரச்சனையில் எந்த சம்பந்தமும் அற்ற உக்ரேனியர்கள் அழிய வேண்டும். 

தம்பீ

இது தவறான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

யார் உலகப்பயங்கரவாதி என்பதற்கு அப்புறம்.........

அழிக்கப்படணும் என்றால் இன்னும் பொதுமக்கள் அழிக்கப்படுவதை ஆதரிக்கின்றீர்கள். இன்றும் மேற்குலக நாடுகள் போர் அழிவை முடிவிற்கு கொண்டு வர முயற்சிக்காமல் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் மீண்டும் மீண்டும் புதிய உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது. இதே நிலைதான் ரஷ்ய தரப்பிலும் நடக்கின்றது. ரஷ்ய பின் புலத்திலும் பல நாடுகள் உள்ளன. எனவே சமாதானம் இல்லையேல் அழிவுதான் மிஞ்சும்

புட்டின் அழிக்கப்பட்டால் புட்டினை விட இன்னொரு  புட்டின் ரஷ்ய சார்பில் வரத்தான் போகின்றார். அது சிலவேளை இன்னும் மோசமாகவே போகும்.

உலகில் போர் அழிவுகளை கண்டு மனித  இனம் திருந்தியிருந்தால் முதலாம் உலகப்போரோடு எல்லாமே நின்றிருக்க வேண்டும். அல்லது இரண்டாம் உலகப்போரோடு ஆவது நின்றிருக்க வேண்டுமே.

போட்டி, பொறாமை, போர் எல்லாம் அலைகள் ஓய்வதில்லை போல்.....enjoy :cool:

ஜனநாயக பண்புகளை புதைத்து ரசிய மக்களை ஏமாற்றி பல சகாப்தங்களாக நாட்டை அபகரிப்பு செய்தபடி தன்னகத்தே கூலிப்படையை வைத்து நாடு பிடிக்கும் ஒரு பயங்கரவாதி புட்டின். 

இவருக்கு எதிரி வெளியே இல்லை. 50 ஆயிரம் கூலிப்படையை வைத்திருக்கும் ஒருவரை போட்டுத் தள்ளி உள்ளார். இனித்தான் இருக்கு ஆட்டம்?

இவரை வென்று ஒரு மக்கள் தலைவன் வரவே இனி வாய்ப்பு அதிகம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ

இது தவறான செய்தி.

இல்லை சரியான செய்திதான்.

எமது பிரச்சனையில் சம்பந்த பட்டவை அப்போ அந்தந்த நாடுகளில் இருந்த அரசுகள்,  அதிகாரவர்க்கத்தினர், கூலிப்படையினர்.

இங்கே இவர்கள் எவரும் அழியவில்லை. 

உக்ரேனில் இப்படி எம்மை அழிக்க உதவியோர் பலர் இப்போ ரஸ்யாவில் இருக்கிறார்கள்.

4 minutes ago, விசுகு said:

இவரை வென்று ஒரு மக்கள் தலைவன் வரவே இனி வாய்ப்பு அதிகம் உள்ளது.

இருக்கா? ரஸ்யாவின் வரலாற்றில் அது முதல் முறையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

தம்பீ

இது தவறான செய்தி.

இல்லை சரியான செய்திதான்.

எமது பிரச்சனையில் சம்பந்த பட்டவை அப்போ அந்தந்த நாடுகளில் இருந்த அரசுகள்,  அதிகாரவர்க்கத்தினர், கூலிப்படையினர்.

இங்கே இவர்கள் எவரும் அழியவில்லை. 

உக்ரேனில் இப்படி எம்மை அழிக்க உதவியோர் பலர் இப்போ ரஸ்யாவில் இருக்கிறார்கள்

கோசான் பொத்தம் பொதுவாக நாம் கூறும்போது 

உக்ரேன் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது.

உக்ரேன் விமானிகள் எம்மக்கள் மீது குண்டு போட்டார்கள்.

உக்ரேன் விமானங்கள் குண்டுகள் போட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் பொத்தம் பொதுவாக நாம் கூறும்போது 

உக்ரேன் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது.

உக்ரேன் விமானிகள் எம்மக்கள் மீது குண்டு போட்டார்கள்.

உக்ரேன் விமானங்கள் குண்டுகள் போட்டன.

அப்போ புளொட் மாலைதீவில் கலகம் செய்தது என்பதை வைத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழர் மீதும் மாலைதீவினர் வன்மத்தை கக்கினால் -அது சரியா?

உங்கள் பதிலிலே விடையும் உள்ளது அண்ணா.

“பொத்தாம் பொதுவாக” - மனித வதைபாட்டை அணுகுதல் ஆகாது.

இயற்கை அனர்தத்தால் சிங்களவர் துன்பபடும் போது அனுதாபம் தெரிவிப்போரே கூட - உக்ரேனில் பிஞ்சுகள் சிதறும் போது, குழந்தைகள் கடத்தப்படும் போது அதற்கு  போராடிய உக்ரேனியரின் பிழை என்பார்கள்.

இதைதான் தட்டையான சிந்தனை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அப்போ புளொட் மாலைதீவில் கலகம் செய்தது என்பதை வைத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழர் மீதும் மாலைதீவினர் வன்மத்தை கக்கினால் -அது சரியா?

புளொட்டின் ஒரு பகுதியினர் பங்குபற்றினாலும் அது புளொட்டையே சாரும்.

அதே போல உக்ரேனியர் குழுவாக இருந்தாலும் அரசே பொறுப்பு.

நான் எங்கேயுமே உக்ரேனியர்களுக்கு எதிராகவோ சண்டைக்கு ஆதரவாகவோ எழுதவில்லை.

எமது பிரச்சனையில் எந்த சம்பந்தமும் அற்ற உக்ரேன்

என்று நீங்கள் எழுதியதற்கே எந்த சம்பந்தமும் அற்ற என்றதற்கே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

எமது பிரச்சனையில் எந்த சம்பந்தமும் அற்ற உக்ரேன்

இல்லை அண்ணா. எமது பிரசானையில் எந்த சம்பந்தமும் அற்ற உக்ரேனியர்கள் என்றே எழுதினேன்.

உக்ரேன் என்ற நாடு அதன் 2009 கால பிழைகளுக்கு என்றும் பொறுப்பு கூற வேண்டும் (இப்போ வேறு ஆட்கள் ஆட்சியில் என்றாலும்) என்பதே என் நிலைப்பாடும்.

3 hours ago, goshan_che said:

எமது பிரச்சனையில் எந்த சம்பந்தமும் அற்ற உக்ரேனியர்கள் அழிய வேண்டும்

26 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் எங்கேயுமே உக்ரேனியர்களுக்கு எதிராகவோ சண்டைக்கு ஆதரவாகவோ எழுதவில்லை.

ஏற்றுகொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.