Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

2024 நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டசபை தேர்தல்.. 2024 தேர்தல்தான் இந்தம்மா பெட்டி வாங்கும் கடைசி சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன்.. இவ்வளவு காலமும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எண்டதுக்கு இந்தம்மா அதிமுக ஆட்சிய கைகாட்டுது.. ஆனால் 2026 வரை திமுக ஆட்சிதான்..மாத்தி கைகாட்ட கட்சியும் இல்ல.. ரெண்டு வருசத்துக்க நடவடிக்கை எடுக்காமல் ஆமை ஓட்டுக்க தலை இழுத்தமாரி இந்த எலெக்சன் பேட்டாவை வாங்கிட்டு போய் பெங்களூரில முட்டையிட்டிட்டு வந்து 2026 ல வந்து மறுபடி சங்கத்தை கூட்டிச்சுதுன்னா சங்கத்து ஆளுங்களே சங்கில கடிச்சு வெரட்டி விட்டுரப்போறானுவ.. ஆகையால் போலிசுக்கு போய் நடவடிக்கை எடுத்து ரெண்டு பேரில ஓராள் ஜெயிலுக்கு போறது எங்களுக்கு நல்லது..

சீமானும் நடந்தத ஒத்துக்கொண்டு நான் பிள்ளைகுட்டிகாரன் ஆமா இந்தம்மாவ லவ் பண்ணினன் லிவ்விங் ருகெதர் இருந்தம் பிடிக்கல ஆளாலுக்கு பிரிஞ்சிட்டம் இப்ப லவ் பண்ணின காலத்துல நடந்தத வச்சு இந்தம்மா பிளாக்மெயில் பண்ணுது எண்டு பப்ளிக்கில சொல்லிட்டா சனமே இந்த பொண்ண அடிச்சு விரட்டும்.. சீமான் பொலிசில் போய் ஒரு கம்ளெய்ண்ட் குடுத்த்தா எங்களுக்கும் நல்லது.. 

என்னய்யா இந்த நூற்றாண்டின் கண்ணகி விஜலடசுமி மீது 
இப்படி ஒரு பழியை தூக்கி போடுறீங்கள் ?

உங்களுக்கு எல்லாம் இப்படி எழுத எப்படித்தான் மனசுவருதோ ? 

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே பழியை “வாழும் பிரபாகரன்” சீமான் மீதும்தான் போட்டுள்ளார்.

ஆனால் உங்கள் கண்ணுக்கு எப்போதும் போல கண்ணகிகள் மட்டும்தான் தெரிகிறார்கள்🤣

4 minutes ago, Maruthankerny said:

என்னய்யா இந்த நூற்றாண்டின் கண்ணகி விஜலடசுமி மீது 
இப்படி ஒரு பழியை தூக்கி போடுறீங்கள் ?

உங்களுக்கு எல்லாம் இப்படி எழுத எப்படித்தான் மனசுவருதோ ? 

 

20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானும் நடந்தத ஒத்துக்கொண்டு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

இலங்கையில் தமிழர் சுயநிர்ணயதுக்கு எப்போதும் ஆதரவு. 

பெரியார் முன்வைத்த திராவிட கொள்கைகளில் 90% க்கு ஆதரவானவன். ஆனால் இன்றைய திராவிட கட்சிகளுக்கு அல்ல.

👆🏼பச்சை பொய்

உண்மைய‌ எழுத‌ ஏன் பொய் முத்திரை குத்துறீங்க‌ள்...............வார்த்தைக்கு வார்த்தை க‌ருணாநிதி தான் திராவிட‌ம் திராவிட‌ம் சொன்ன‌வ‌ர்..........இன‌ம் ஈழ‌த்தில் அழியும் போது வாய் மூடி வேடிக்கை பார்த்த‌வ‌ர்.............வ‌ன்னி த‌ல‌மை க‌னிமொழிய‌ தொட‌ர்வு கொள்ள‌ க‌னிமொழிக்கு எத்தின‌ வாட்டி போன் ப‌ண்ணி இருந்தார்க‌ள்  என்று உங்க‌ட‌ திருட்டு திராவிட‌ ந‌ட்ப்பு  வ‌ட்டார‌த்திட‌ம் கேட்டு பாருங்கோ உண்மை வெளியில் வ‌ரும்...........திருமாள‌வ‌ன் இப்போது திமுக்கா கூட்ட‌னியில் தானே இருக்கிறார் அவ‌ருக்கு எல்லாம் தெரியும்...............கூட்ட‌னிய‌ விட்டு வில‌கினா பிற‌க்கு ப‌ல‌ உண்மைக‌ளை பொது வெளிக‌ளில் அவ‌ரே  போட்டு உடைப்பார் 😡.............

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

அதே பழியை “வாழும் பிரபாகரன்” சீமான் மீதும்தான் போட்டுள்ளார்.

ஆனால் உங்கள் கண்ணுக்கு எப்போதும் போல கண்ணகிகள் மட்டும்தான் தெரிகிறார்கள்🤣

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

வார்த்தைக்கு வார்த்தை க‌ருணாநிதி தான் திராவிட‌ம் திராவிட‌ம் சொன்ன‌வ‌ர்..........

என்னப்பா இது …ஒரு கள்ளன்…தங்கம்…தங்கம் என கூவினான் என்பதற்காக தங்கத்தில் பழுது என்பதா?

சீமானும், சுமந்திரனும் கூடத்தான் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தேசியம் என்கிறானர். அதற்காக தமிழ் தேசியத்தை வெறுக்க முடியுமா?

திராவிடம் என்பது ஒரு கொள்கை நிலைப்பாடு. தத்துவம். அதை பயன்படுத்து கொள்ளை அடித்தவர் கருணாநிதி.

3 minutes ago, பையன்26 said:

இன‌ம் ஈழ‌த்தில் அழியும் போது வாய் மூடி வேடிக்கை பார்த்த‌வ‌ர்.............வ‌ன்னி த‌ல‌மை க‌னிமொழிய‌ தொட‌ர்வு கொள்ள‌ க‌னிமொழிக்கு எத்தின‌ வாட்டி போன் ப‌ண்ணி இருந்தார்க‌ள்  என்று உங்க‌ட‌ திருட்டு திராவிட‌ ந‌ட்ப்பு  வ‌ட்டார‌த்திட‌ம் கேட்டு பாருங்கோ உண்மை வெளியில் வ‌ரும்...........திருமாள‌வ‌ன் இப்போது திமுக்கா கூட்ட‌னியில் தானே இருக்கிறார் அவ‌ருக்கு எல்லாம் தெரியும்...............கூட்ட‌னிய‌ விட்டு வில‌கினா பிற‌க்கு ப‌ல‌ உண்மைக‌ளை பொது வெளிக‌ளில் அவ‌ரே  போட்டு உடைப்பார் 😡.............

இதை யார் மறுத்தார்கள்? 

ஜெகத் கஸ்பர் வீடியோ திரியில், இன்னும் பல திரிகளில் இதை எழுதி, அத்தனை பேரையும் கழுவி கழுவி ஊத்தியுள்ளேனே? வாசிக்கவில்லையா?

கருணாநிதி இறந்த செய்தி வந்த திரி இங்கேதான் இருக்கும் - என்ன எழுதியுள்ளேன் என போய் வாசித்து பாருங்கள்.

எனக்கு திராவிட கொள்கையில்தான் பிடிப்பே ஒழிய திராவிட அரசியல்வாதிகளிலோ, கட்சிகளிலோ அல்ல. அவர்கள் என் நண்பர்களும் இல்லை.

உங்கள் மனதில் உள்ள கற்பனைக்கு நான் பதில் சொல்ல முடியாது.

7 minutes ago, Maruthankerny said:

 

இந்த வீடியோவை நான் பகிரவும் இல்லை, இதில் சொல்லப்பட்டுள்ளவை பற்றி எழுதவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

என்னப்பா இது …ஒரு கள்ளன்…தங்கம்…தங்கம் என கூவினான் என்பதற்காக தங்கத்தில் பழுது என்பதா?

சீமானும், சுமந்திரனும் கூடத்தான் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தேசியம் என்கிறானர். அதற்காக தமிழ் தேசியத்தை வெறுக்க முடியுமா?

திராவிடம் என்பது ஒரு கொள்கை நிலைப்பாடு. தத்துவம். அதை பயன்படுத்து கொள்ளை அடித்தவர் கருணாநிதி.

இதை யார் மறுத்தார்கள்? 

ஜெகத் கஸ்பர் வீடியோ திரியில், இன்னும் பல திரிகளில் இதை எழுதி, அத்தனை பேரையும் கழுவி கழுவி ஊத்தியுள்ளேனே? வாசிக்கவில்லையா?

கருணாநிதி இறந்த செய்தி வந்த திரி இங்கேதான் இருக்கும் - என்ன எழுதியுள்ளேன் என போய் வாசித்து பாருங்கள்.

எனக்கு திராவிட கொள்கையில்தான் பிடிப்பே ஒழிய திராவிட அரசியல்வாதிகளிலோ, கட்சிகளிலோ அல்ல. அவர்கள் என் நண்பர்களும் இல்லை.

உங்கள் மனதில் உள்ள கற்பனைக்கு நான் பதில் சொல்ல முடியாது.

இந்த வீடியோவை நான் பகிரவும் இல்லை, இதில் சொல்லப்பட்டுள்ளவை பற்றி எழுதவும் இல்லை. 

நீங்க‌ள் சொல்லுவ‌து எப்ப‌டி இருக்கு தெரியுமா

என்ர‌ அம்மாவையும் பிடிக்கும் அதே போல் என்ர‌ அம்மாவை கொன்று குவிச்ச‌ காட்டாங்க‌ளின் கொள்கையும் பிடிக்கும்..................
நினைவில் வைத்து இருங்கோ திராவிட‌த்தால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு சிறு ந‌ன்மையும் கிடைக்க‌ போவ‌து கிடையாது................இவ‌ர்க‌ளை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி அதோட‌ ஈழ‌ ம‌ண்ணில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது..............

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

என்னைப் பொறுத்த வரை, பிரபாகரனின் வேண்டுதலில், (இதனை சூசை உறுதிப்படுத்தினார்) தமிழகத்தில், சில அரசியல் வேலைகளை  செய்து, அவரது பெயரை, மக்கள் மறக்காமல் செய்து கொண்டிருப்பதால் தான் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடு.

அது எப்போது மாறுமோ, அன்றே, எனது நிலைப்பாடும் மாறும். இன்றும் கூட, திமுக, அதிமுக, பிஜேபி அல்லது காங்கிரஸ், பல கோடிகளை கொடுத்து, இவரை கூட்டணி சேர்க்க தயார். அது செய்யாதவரை நம்பலாம். தனிப்பட்ட வாழ்க்கையினை இழுத்து எடைபோட, ஜேசு சொன்னது போலவே, எவ்வித தவறும்  செய்யாதவர்கள் கல்லை எறியலாம்.

பெரியாரின் போலி திராவிடக்கொள்கை நமக்கு எதுக்கு என்பதே எனது நிலைப்பாடு. 

மன்னிக்க வேண்டும் கோசன், உங்கள்  பெரியாரின் திராவிட கொள்கைக்கு ஆதரவு, அதனை எதிர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு.....திராவிட கட்சிகளுக்கு ஆதரவு இல்லை.... எனக்கு புரியாத அரசியல்... 

இது குறித்து முன்னர் விவாதித்துள்ளோம்.

நாம் தமிழரின் உறுதிப்பாட்டினை அசைக்க, திராவிடம் விடும் அஸ்திரங்கள் பல.அதில், இந்த எடுபடும் அம்மணியும் ஒருவர். சீமான் உள்பட, பலரிடம் பணத்தினை வாங்கி செலவழித்து விட்டு, மீண்டும் வாங்க முனைவதால், அனுதாபம் இல்லை.

🙏

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சொல்லுவ‌து எப்ப‌டி இருக்கு தெரியுமா

என்ர‌ அம்மாவையும் பிடிக்கும் அதே போல் என்ர‌ அம்மாவை கொன்று குவிச்ச‌ காட்டாங்க‌ளின் கொள்கையும் பிடிக்கும்..................
நினைவில் வைத்து இருங்கோ திராவிட‌த்தால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு சிறு ந‌ன்மையும் கிடைக்க‌ போவ‌து கிடையாது................இவ‌ர்க‌ளை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி அதோட‌ ஈழ‌ ம‌ண்ணில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது..............

உங்களுக்கு கிரகிக்கும் தன்மை முற்றிலும் அவுட் ஆகி விட்டதா?

கருணாநிதி செய்தமைக்காக திராவிட கொள்கையை வெறுப்பதும்,

புளொட் செய்ததற்காக தமிழ் தேசியத்தை வெறுப்பதும் ஒன்றுதான்.

இதே போல் ஒரு அடி முட்டாள்தனத்தால்தான் மேற்கின் அரசுகள் மீதான வெறுப்பை, மேற்கில் இருக்கும் தாராளவாத ஜனநாயகத்தின் மீதான வெறுப்பாக பலர் கட்டமைத்து யாழில் புட்டின் புகழ் பாடி திரிந்தனர்.

எனக்கு

ஒரு கொள்கைக்கும், அந்த கொள்கையை பயன்படுத்தி கொள்ளை அடிப்பவனுக்கும் உள்ள வித்தியாசத்தை கிரகிக்கும் இயலுமை இருக்கிறது. 

ஆகவே கொள்ளையன்/கொலைகாரன் கருணாநிதிக்காக, திராவிட கொள்கையே மோசம் என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நான் வரமாட்டேன்.

9 minutes ago, பையன்26 said:

திராவிட‌த்தால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு சிறு ந‌ன்மையும் கிடைக்க‌ போவ‌து கிடையாது................

தமிழ் நாட்டில் இப்போ இருக்கும் எவராலும் எமக்கு ஒரு துரும்பும் கிடைக்காது.

10 minutes ago, பையன்26 said:

இவ‌ர்க‌ளை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி அதோட‌ ஈழ‌ ம‌ண்ணில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது

நான் தமிழ்நாட்டின் எந்த அரசியல்வாதியையும் நம்புவதில்லை. பெரும்பாலனா ஊரில் வசிக்கும் எமது மக்களும் அப்படித்தான்.

புலம்பெயர் தேசத்தில்தான் சில விட்டில்பூச்சிகள், மின்னுவதெல்லாம் பொன் என நம்பித்திரிகிறன.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும் கோசன், உங்கள்  பெரியாரின் திராவிட கொள்கைக்கு ஆதரவு,அதனை எதிர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு.....திராவிட கட்சிகளுக்கு ஆதரவு இல்லை.... எனக்கு புரியாத அரசியல்... 

இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல.

எனக்கு யூகேயில் மித வலதுசாரி கொள்கையில் ஏற்பு உண்டு (center right) என வைப்போம்.

ஆனால்  பொரிஸ் ஜோன்சன் செய்த அநியாயங்கள், குழப்படிகள், ஊழல்கள், கோக்குமாக்குகள், இதனால் ஏற்பட்ட தவிர்க்க கூடிய கொவிட் மரணங்கள் காரணமாக பொரிசிலும், அதை அனுமதித்த தற்போதைய கன்சேவேடிவ் கட்சியிலும் மிக கடும் கோபம் உண்டு.

அடுத்த தேர்தலில் லேபருக்கு வாக்கு போடும் அளவுக்கு கோபம்.

ஆனால் இன்னும் 20 வருடத்தில் ? நான் மீண்டும் ஒரு கன்சேவேடிவ் ஆட்சிக்கு வாக்கு போடலாம்.

ஏன்? 

ஏனன்றால் conservative politics/ policies க்கும் Conservative Party / politician க்கும் உள்ள வேறுபாட்டை நான் கிரகிக்கிறேன்.

இதையேதான் திராவிட கொள்கை/ திராவிட கட்சிகள் விடயத்திலும் எடுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல.

எனக்கு யூகேயில் மித வலதுசாரி கொள்கையில் ஏற்பு உண்டு (center right) என வைப்போம்.

ஆனால்  பொரிஸ் ஜோன்சன் செய்த அநியாயங்கள், குழப்படிகள், ஊழல்கள், கோக்குமாக்குகள், இதனால் ஏற்பட்ட தவிர்க்க கூடிய கொவிட் மரணங்கள் காரணமாக பொரிசிலும், அதை அனுமதித்த தற்போதைய கன்சேவேடிவ் கட்சியிலும் மிக கடும் கோபம் உண்டு.

அடுத்த தேர்தலில் லேபருக்கு வாக்கு போடும் அளவுக்கு கோபம்.

ஆனால் இன்னும் 20 வருடத்தில் ? நான் மீண்டும் ஒரு கன்சேவேடிவ் ஆட்சிக்கு வாக்கு போடலாம்.

ஏன்? 

ஏனன்றால் conservative politics/ policies க்கும் Conservative Party / politician க்கும் உள்ள வேறுபாட்டை நான் கிரகிக்கிறேன்.

இதையேதான் திராவிட கொள்கை/ திராவிட கட்சிகள் விடயத்திலும் எடுக்கிறேன்.

இப்ப கொஞ்ச நாளா, நான் குழப்புகிறேனா அல்லது குழப்பப் படுகிறேனா எண்டு பயங்கர டவுட் வருகுது. 🤣

உந்த கோதாரி திராவிட கொள்கையை விளக்க, பிரிட்டிஷ் அரசியலா கிடைச்சது.

சரி, பிரிட்டிஷ் அரசியலுக்கு வருவோம். எனக்கும் கான்செர்ட்டிவ் மேலே செல்ல கோபம் தான். ஆனாலும் அடுத்த தேர்தலில் அதுக்கு தான் வாக்கு. காரணம், இரண்டு.

1. லேபர் தயாரில்லை. 🙄
2. ரிஷியரின் அடுத்த தேர்தல் துருப்பு சீட்டு: inheritance tax இல்லாமல் செய்தல். 👍

2 hours ago, goshan_che said:

ஆனால் இன்னும் 20 வருடத்தில் ? நான் மீண்டும் ஒரு கன்சேவேடிவ் ஆட்சிக்கு வாக்கு போடலாம்.

ஏன்? 

ஆட்டு இறைச்சியும், வெந்தயமும்... செய்யிற கூத்திலே, 20 வருச கதை... கொஞ்சம் too much... பாஸ்...  🤣

வாக்கு இருக்கும், கோசன் இருக்கணுமே.... 

take care !!!

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Nathamuni said:

சரி, பிரிட்டிஷ் அரசியலுக்கு வருவோம். எனக்கும் கான்செர்ட்டிவ் மேலே செல்ல கோபம் தான். ஆனாலும் அடுத்த தேர்தலில் அதுக்கு தான் வாக்கு. காரணம், இரண்டு.

1. லேபர் தயாரில்லை. 🙄
2. ரிஷியரின் அடுத்த தேர்தல் துருப்பு சீட்டு: inheritance tax இல்லாமல் செய்தல். 👍

எந்த நாட்டு தேர்தல் எண்டாலும் தோற்க போகும் கட்சிக்கே ஆதரவு என்றால் எப்படி நாதம்🤣.

லேபர் வெல்லும் என்றே நினைக்கிறேன்.

1. Inheritance Tax - இதனால் உயர் 10% க்கும் குறைவாக மட்டுமே பலனடையும். வாழ்க்கை செலவு ஏறிய நிலையில் - இது மிகுதி 90% ஐ கடுப்பாக்கும். பணக்கார ரிசி சாதாரண மக்களிடம் இருந்து out of touch என்ற கருத்தை மேலும் உறுதியாக்கும்.

2.  Anti incumbency factor 

3. மக்களுக்கு மாற்று தேவைபடுகிறது. இந்த கோமாளிகளை விட, தயார், அனுபவம் இல்லாத லேபர் பரவாயில்லை என நினைக்கிறனர்.

4. ஸ்கொட்லாந்தின் எம்பி சீட்டுகளில் எஸ் என் பி யின் ஏகபோகம் பறிபோகும், இதில் பலதை லேபரும் சிலதை லிபரலும் எடுக்கும்.

பார்ப்போம். But my money is on labour. தனியாக அல்லது கூட்டணியாக ஆட்சி அமைக்கும் என நினைக்கிறேன்.

26 minutes ago, Nathamuni said:

வாக்கு இருக்கும், கோசன் இருக்கணுமே.... 

🤣சும்மா இரும் ஐயா. கட்டின பென்சன அனுபவிக்கோணும்🤣.

TC

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் மீது குற்றச்சாட்டு….. நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை!

maxresdefault-780x470.jpg

தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.seeman-300x169.jpg

சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இதைதொடர்ந்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் தலைவர் வீரலட்சுமியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்று சீமான் மீது 4 பக்கத்தில் பரபரப்பு புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயலட்சுமியிடம் சீமான் மீதான புகார் குறித்து 6 மணி நேரத்திற்கும் மேலாக துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தி வருகிறார்.

காவல் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 

https://akkinikkunchu.com/?p=254601

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Seeman on Vijaya Lakshmi's Allegation: 11 வருஷமாவா ஒரே குற்றச்சாட்டு? Pressmeet-ல் பேசியது என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான்..8 மணி நேரம் துருவி துருவி விசாரித்த டிசி உமையாள்.. போட்டுடைத்த விஜயலட்சுமி.. என்ன நடந்தது?

Updated: Friday, September 1, 2023, 9:19 [IST]
What did Actress Vijayalakshmi says about Naam Tamilar Seeman in the long police investigation?

நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

 

கடந்த முறையே இது போல அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது சீமான் தரப்பில் விஜயலட்சுமியிடம் சமரசம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ்வதாக இவர்கள் சமரசம் பேசிக்கொண்டதாக் கூறப்படுகிறது.

இந்த தகவலை விஜயலட்சுமி நேற்று கொடுத்த புகாரிலேயே குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இந்த முறை அந்த சமரசத்திற்கு வழி இல்லை என்கிறார்கள். ஏனென்றால் விளக்கமான புகார் விஜயலட்சுமி மூலம் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுவிட்டதால் சமரசம் செய்ய சான்ஸ் இல்லை என்கிறார்கள்.

என்ன சொன்னார்?: சமீபத்தில் விஜயலட்சுமி தனது பேட்டியில் இந்த சமாதானம் விவகாரம் குறித்து விளக்கமாக பேசினார். அதில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.

ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவரை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.

அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.

மகனாய் இருப்பேன் என்ற சீமான்: விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது.

மன அழுத்தம்: அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன்.

என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.

7 முறை கரு: சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டாயபடுத்தியும் நிற்பந்தபடுத்தியும் கருச்சிதைவு மாத்திரைகள் எனக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எனக்கு கருச்சிதைவு செய்தார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி உள்ளார்.

 

What did Actress Vijayalakshmi says about Naam Tamilar Seeman in the long police investigation?

போலீசார் விசாரணை: இந்த நிலையில்தான் நேற்று இரவு நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக அவர்கள் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

சீமான் மீதான புகார் குறித்து 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. துணை ஆணையர் உமையாள் விசாரணை அவரிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். முக்கியமாக டார்ச்சர் செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று விசாரணைக்கு இடையில் பரர்பாப்பு ஏற்பட்டது. இந்த விசாரணை காரணமாக எங்கே சீமான் கைது செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/what-did-actress-vijayalakshmi-says-about-naam-tamilar-seeman-in-the-long-police-investigation-534781.html

 

பொறுப்பு துறப்பு 

மேலே செய்தியில் உள்ளதை வாசித்து விட்டு, சீமான் மீது சேறு பூசுறார், சீமேந்து பூசுறார் என ஆணாதிக்க சிங்கங்கள் கிளம்ப முன்னம்-

1. செய்தி தட்ஸ்தமிழ் உடையது

2. புகார் சொன்னவர் விஜை அண்ணி

3. புகாரின் பாத்திரவாளி சீமான் அண்ணன்

நான் வெறுமனே வெட்டி ஒட்டுபவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சீமான் மீதான புகார்: நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்

சீமான் மீதான புகார்: நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு  முன்பு பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கோயம்பேடு துணை கமிஷனர் உமையாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார்.  ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் முன்பு விஜயலட்சுமி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடிகை விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ராமாபுரம் காவல் நிலையத்தில் வியலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன் விஜயலட்சுமி ஆஜராகியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/amp/News/State/complaint-against-seaman-vijayalakshmi-appears-in-court-1043125

 

Seeman vs Vijayalakshmi: நடிகை விஜய லட்சுமியின் புகார்..'அதுக்கு பயப்படுகிற ஆள் இல்லை நான்' - சீமான் ஆவேசம்!

சீமான், விஜயலட்சுமி

Sep 01, 2023, 04:02 PM IST

திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி காவல்துறையில் அளித்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,"யார் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனில், விளக்கம் சொல்லத் தேவையில்லை. கருத்துப் பெட்டகத்தின் சாவி நல்ல கேள்விதான். ஒரு நல்ல பதிலின் தாயே, நல்ல கேள்விதான் என்று கூறுவார்கள். எனவே, பத்திரிகையாளர்கள் நல்ல கேள்வியைத்தான் கேட்க வேண்டும்.

என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை நம்பியிருந்தால், இத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின்தொடர்வார்கள்? அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியைக் கூட தொட முடியாது. அது ஏன் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், இதுகுறித்து பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது? 11 ஆண்டுகளாகவா ஒரே குற்றச்சாட்டு.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பெண் ஏமாற்றிவிட்டு, அவருடைய கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை ஏன் ஊடகத்தில் இருப்பவர்கள் ரசிக்கிறீர்கள். எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஒரு கனவு இருக்கிறது. அதையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதேபோன்ற குற்றச்சாட்டு எனக்கு முன்னாடி 5 பேர் மீது இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் உள்ளது.

எனவே,இனிமேல் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள். அவசியமான கேள்விகளை கேளுங்கள், அவசியமற்ற கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள். நான் உதிர்க்கும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. வருங்கால தலைமுறைகளை வழிநடத்தும் ஒரு தத்துவமாக, பொன்மொழியாக, புரட்சிகர பாதையாக இருக்க வேண்டும். நீங்கள் இதுபோல் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் அதையே செய்து கொண்டிருக்கிறார்.

திருப்பூரில் நேற்று கூடிய கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகள் கூட வரும். யார் புகார் அளித்தாலும் காவல்துறை விசாரணை நடத்தும் அது அவர்களது கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால், அதன்பிறகு நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அதுக்கு பயப்படுகிற ஆள் இல்லையே நான்" என்றார்.

https://tamil.hindustantimes.com/amp/tamilnadu/seeman-reply-of-actress-vijayalakshmis-police-complaint-131693564156718.html

டிஸ்கி

திருட்டு தி.மு.க அரசியல் ஆதாயத்துக்குக்காக இந்த முறையும் இந்த வழக்கை போலீஸ் விசாரிக்க தடை போடாமல் - பொலிசுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வழக்கை விசாரிக்க விட வேண்டும்.

அண்ணம் சீமானும் அதைத்தான் சொல்கிறார்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

’நாம் தமிழர்’ சீமான் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Published:1st Sep, 2023 at 8:47 AM
 

kamadenu%2F2023-09%2F1a3daea0-51e7-4cab-

சினிமாUpdated:1st Sep, 2023 at 8:47 AM

சென்னையில் நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்தார். அதில் 2008-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடந்தது என்றும், ஆனால் பிறகு சீமான் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

WIN   10

ஆனால் புகார் குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் அண்மையில் விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்தார்.

புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட விஜயலட்சுமியிடம், கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார். நேற்று மாலை தொடங்கி இரவு வரை விசாரணை நீடித்தது.

kamadenu%2F2023-09%2Ff0045263-596e-4abe-

இதனிடையே கோவை மாவட்டம் பல்லடம் அருகே அறிவித்திருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சீமானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் பல்லடத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, மயங்கி சரிந்து விழுந்த சீமான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://kamadenu.hindutamil.in/amp/story/cinema/naam-tamilar-party-chief-coordinator-seeman-admitted-to-hospital-due-to-sudden-illness

டிஸ்கி

சீமான் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

திருட்டு திராவிட அரசியல்வாதிகள் போல வழக்கு, ரெய்டு எண்டதும் ஆஸ்பத்திரியில் போய் படுக்கும் ஆள் சீமான் இல்லை என நினைக்கிறேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

லண்டனில் வெள்ளைகளின் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றார் அந்த தமிழ் ஐயா.

அங்கு ஒரு தமிழ் அம்மாவும் வேலை செய்கிறார்.

அவரை ஐயா என்பதற்கு காரணம்.. அவர் ஏலவே திருமணமாகி மனைவியுடன் தான் லண்டனில் வாழ்ந்து வந்தவர்.

அந்த அம்மையாரை அம்மா என்று சொல்லக் காரணம்.. அவரும் திருமணமாகி குழந்தைகளுக்கு அம்மா என்பதால்.

இருவரும் ஒரே சிவ்ட்.

இருவரும் தமிழில் கதைச்சு கதைச்சு வேலை செய்வது வழமை. இப்படியே நன்கே காலமும் வேலையும் போகிறது.

ஒரு நாள் திடீர் என்று ஒரு குற்றச்சாட்டை அந்தம்மா வைக்கிறார்.. அதாவது இந்த ஐயா.. அந்த அம்மாவை வேலையிடத்தில் வைச்சு படுக்கைக்கு அழைத்ததாக.

இதன் பின்னணியில்.. அந்த அம்மாவின் வெள்ளைத் தோழியும்.

நிர்வாகத்தின் கவனத்திற்கு  விடயம் போகிறது.

விசாரணைகள் ஆரம்பமாகின்றன.

மொழிப் பிரச்சனையால்.. மொழிபெயர்ப்பாளர் தேவை என்று அந்த ஐயா சொல்கிறார்.

நிர்வாகமும்.. ஏற்று மொழிபெயர்ப்பாளரை நியமிக்கிறது.

மொழிபெயர்ப்பாளரிடம்  அந்த ஐயா.. அழாத குறை..

என்ன தம்பி சொல்ல.. அவா கலியாணம் கட்டின ஆள். இவோவோட தமிழ் என்று தான் தமிழில் கதைச்சுப் பழகினன்.

காதல் வசனம் எல்லாம் பேசவும் இல்லை.. படுக்கைக்கும் கூப்பிடவும் இல்லை. அடி கள்ளின்னு.. சொல்லி இருக்கிறேன். அது சாதாரணமாக நன்கு பழகினால் சொல்லுறது தானே. இப்படி அவர் தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்.

இப்படி சாதாரண தொழிலாளியில்  இருந்து பெரும் பெரும் தலைவர்கள்.. புரட்சியாளர்களின் பெருமைகளை சிதைப்பதற்கு பெண்கள் சிலரை எப்பவும் பாவிப்பவர்கள் இருக்கினம்.

அண்மையில் டொலான்ட் ரம் மீதும் குற்றம் வைச்சார்கள். விக்கிலீக்ஸ் நிறுவுனரையும் பொம்பிளை கேசில தான் உள்ள போட்டவை. இப்ப அவரின் இருப்பே கேள்வுக்குறியான பின்.. அந்த வழக்கை கைவிட்டாச்சு. 

இந்த உலகில் ஒரு ஆணை கொச்சைப்படுத்தனுன்னா.. அதற்கு மிக இலகுவாக உள்ள வழிமுறை.. பெண்ணோடு சம்பந்தப்படுத்தி.. படுக்கை வரைக்கு கொண்டுபோவது. ஏனெனில்.. இங்கு நிறுவ முடியாத உண்மைகள் பல இருக்கலாம் என்ற சந்தேகம் தான். அந்த சந்தேகத்தில் கட்டி வளர்க்கப்படும் உண்மைகளை.. பொய்களை நிறுவவும்.. நிராகரிக்கவும் வழி இருக்காது.

இது தான் இங்கேயும்.

சீமான் எனும் தமிழ் தேசிய தமிழன்.. இதனை எல்லாம் தாண்டி தன் இனமானமே பெரிதென்று.. இந்த அர்ப்பங்களை கடந்து செல்ல வேண்டும். அதுதான் காலத் தேவை ஆகும். 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

சீமான் எனும் தமிழ் தேசிய தமிழன்.. இதனை எல்லாம் தாண்டி தன் இனமானமே பெரிதென்று.. இந்த அர்ப்பங்களை கடந்து செல்ல வேண்டும். அதுதான் காலத் தேவை ஆகும். 

இது போன வருச கர்நாடகா பஞ்சாயத்து. அப்பாவி முகத்தை வைத்திருக்கும் பெண் இப்ப, தமிழகத்தில் டோரா போட்டுள்ளார். அநேகமாக, இதுவே கடைசி முயல்வாக இருக்கும்.

A comment

@sharathsharma6879

1 year ago

This woman is an opportunist. Mr Yogesh, we are with you. You literally won my heart with your sincere and honest answers . I have been following this lady online for quite some time and as you said on Mirrorview channel she definitely needs immediate professional help. She has some serious mental issues. As soon as I saw that you were getting involved to help her, right away I knew that you are getting yourself into trouble. But the way you handled the situation without getting upset and making every thing clear with right proof in front of the film chamber shows that you are a gentleman. Keep up with your good work! You parents must feel proud for raising such a wonderful human being. Sharath USA

சில்லறைய ரொம்ப கொட்டாதீங்க, சிரிக்கும் மக்கா... மாஜிஸ்திரேட், இவரை மனநல மதீப்பீட்டுக்கு அனுப்ப உத்தரவு இடக்கூடும் என்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

இந்த‌ காணொளிய‌ பார்த்த‌தும் விஜயலட்சுமிய காரி தூப்ப‌னும் போல இருக்கு............விஜ‌ய‌ல‌ட்சிமிக்கு தேவை ப‌ண‌ம்............விஜ‌ய‌ல‌ட்சிமிய‌ பின் நின்று இய‌க்குவ‌ர்க‌ளுக்கு தேவை சீமான் மீது  அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்புவ‌து...............

 

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் அவரை தவிர்த்து தமிழ்நாட்டு அரசியலை பார்க்க முடியாத கேவலத்தில் நாம் எல்லோரும் உள்ளோம் .

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

சீமான் அவரை தவிர்த்து தமிழ்நாட்டு அரசியலை பார்க்க முடியாத கேவலத்தில் நாம் எல்லோரும் உள்ளோம் .

உங்களை தவிர

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/8/2023 at 10:36, goshan_che said:

 

சீமான் மீது தொடுக்கப்பட்டிருக்கும்
இந்த நெருக்கடி கூடினால்,
அவரை+ தமிழ் தேசியத்தை சரித்து விட முடியும் என திட்டம் போட்டு நகர்த்தினால்...

உலகத் தமிழர்கள் தளத்தில் திராவிடத்தின் கால் நடுநடுங்கும் -உடையும்.

திராவிட ஜமீன்தார்களின் திரைப்படங்கள் முடக்கப்படும். முதலீடுகள் கேள்விக்குறியாகும்.

திராவிட லாபி படிப்படியாக சரியும். உலகளவிலான திராவிடர்களின் பினாமி சொத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்து பிடிபடும்.

கூடவே, 
தமிழ்நாட்டிலும் தமிழ் மக்களின் வெறுப்பை கூடுதலாக சம்பாதித்து திமுக அந்நியப்பட்டு நிற்கும். 

அடித்து வீழ்த்தி விட்டுப் போவதற்கு, சீமான் ஒன்றும் தனி மனிதன் அல்ல.
திராவிடக் குப்பைகளை அடித்து வீழ்த்தி விட்டுப் போகும் காட்டாறு.

சீமான்,
கட்சிக்குள் மட்டும் அல்ல. கட்சிக்கு வெளியேவும் அது லட்சோபலட்ச உணர்வாளர்களை கனல் கொள்ள வைத்த தமிழ்த் தேசியத்தின் குரல் அது.

விஜயலட்சுமிகளை வைத்து அந்த குரல் வளையை நசுக்கி விடலாம் என்று நினைக்காதீர். நசுங்கிப் போவீர்கள்.

என் இத்தனை ஆண்டுகால ஊடக அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.
திராவிடம் இப்போது தான், தன் சரித்திரத்திலேயே ஒரு உண்மையான எதிரியை, சினம் கொண்ட தமிழ்த் தேசிய முகத்தை சந்திக்கின்றது.

அந்த சீமான் - தமிழ்த் தேசியமுகத்தின் பின்னால், லட்சம் கோடிகளின் கரங்கள் தாங்கி நிற்கின்றது. அந்த அச்சமே 'லட்சுமிகளை' இறக்கி இயக்கவைத்துள்ளது திராவிடம் .

அதை உணர்ந்தே
சீமான் முக்கியம் என கை கோர்க்கின்றது இளையோர் கரம். ஆயிரம் சதிகளுக்கும், 'வீழ்ந்து விடாத வீரமாய்' அது தாங்கி நிற்கும்.

குறிப்பு : அது என்னடா,தேர்தல் நெருக்கத்தின் போது மட்டும் இந்த விஜயலட்சுமிகளை பிரசவிக்கின்றது இந்த திராவிடம். 

(நாளை ராவணாவில் ஒரு விரிவான கச்சேரி உள்ளது)

- பா. ஏகலைவன்.

https://www.facebook.com/100003312409473/posts/pfbid031ynKbAaaLzg8cwUGLaTscb9d2nTeZhfmgMXVaueUEWX6S2GFSzcuDxW6epTJ9UGzl/

நான் வெறுமனே வெட்டி ஒட்டுபவன்.😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, விசுகு said:

 

நான் வெறுமனே வெட்டி ஒட்டுபவன்.😛

மேல கோசனின் பொறுப்புத் திறப்பையும், வெட்டி, ஒட்டிவிடுங்கோ!! 😂
 

அப்படி பொறுப்பை திறந்தால், பல்லடம் ஆஸ்பத்திரீல நெஞ்சைப் பிடித்தபடி படுத்திருந்தார் என்ற பொய் செய்தியையும் ஒட்டிப் போட்டு சிரிச்சுக் கொண்டே நிக்கலாம். 😂

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பையன்26 said:

 

இந்த‌ காணொளிய‌ பார்த்த‌தும் விஜயலட்சுமிய காரி தூப்ப‌னும் போல இருக்கு............விஜ‌ய‌ல‌ட்சிமிக்கு தேவை ப‌ண‌ம்............விஜ‌ய‌ல‌ட்சிமிய‌ பின் நின்று இய‌க்குவ‌ர்க‌ளுக்கு தேவை சீமான் மீது  அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்புவ‌து...............

 

ம்..இது மிகவும் வலுவான ஆதாரம்! (எதுக்கு ஆதாரம் எண்டு கேட்கக் கூடாது!)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, பையன்26 said:

இந்த‌ காணொளிய‌ பார்த்த‌தும் விஜயலட்சுமிய காரி தூப்ப‌னும் போல இருக்கு............விஜ‌ய‌ல‌ட்சிமிக்கு தேவை ப‌ண‌ம்............விஜ‌ய‌ல‌ட்சிமிய‌ பின் நின்று இய‌க்குவ‌ர்க‌ளுக்கு தேவை சீமான் மீது  அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்புவ‌து...............

 

இந்த விசர் பெண்ணின் விசர்கதையில படித்தவர்கள் என்று சொல்பவர்கள் கூட கடந்து செல்லாமல், சிந்திக்காமல் பதிவுகள் செய்வது வியப்பை தருகிறது.

அம்மணி, அடுத்தவர்களை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களையும் அடி முட்டாள்கள் என்று கதை அடித்து சிக்குகிறா.

2010ல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில மாலை மாத்த போனார்களாம். (அப்போ சீமான் பகுததறிவு, பெரியார் ஆள்).

நான் கிறிஸ்தவர். இப்ப வேணாம். ஊரறிய, உலகறிய தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமைல கல்யாணத்தை வைச்சிரலாம் எண்டாராம்.

தான் ஒத்துக்கிட்டு புருசன் பெண்டாட்டியா வாழ்ந்து 7 முறை கருக்கழைப்பு செய்தார்களாம்.

தலைவர் வீரமரணம் 2009ல தாயி!!

Edited by Nathamuni
Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இளங்கோவன் யார்? காங்கிரஸ்காரர். புலிகளின் பரம எதிரி. சோனியா பக்தர். தெலுங்கு வம்சாவழியினர். இவரும் சீமானும் எந்த இனத்தின் அல்லது எந்த கொள்கையின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட முடியும்? வேண்டு? அதுவும் உயிரோடு இருக்கும் போது போய் சந்தித்தால் கூட பரவாயில்லை. செத்த பின் இளக்கோவன் பிணத்தோடு என்ன அரசியலை செய்யப்போகிறார் சீமான்?      
    • சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த செல்வம் அடைக்கலநாதன்  
    • நாதத்தின் அவதாரைக் கனவில் கண்டீர்களா? அல்லது "நாதம்" என்று ஒருவர் அறிமுகம் செய்து கொண்டாரா கனவில்? ஒரு "கனவியல்" ஆராய்ச்சிக்காகத் தான் கேக்கிறேன்😎
    • இது தொடர்பாக சில விடயங்களைச் சொல்ல விரும்புகின்றேன். மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் என்பது கொழும்பு  மட்டக்குளியில் உள்ள ஒரு free gospel church ஆகும். சங்கிகளின் மொழியில் சொல்வதனால் மதம் மாற்றும் ஒரு நிறுவனமாகும். இந்த ஆலயத்தின் நத்தார் நிகழ்வுக்கு இந்தியத் தூதர் ஏன் வரவேண்டும் அல்லது அழைக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்ததாக ஏழை மக்களுக்கு பணம்கொடுத்து மதம்மாற்றுபவர்கள் என்று சங்கிகளால் சொல்லப்படும் ஓர் ஆலய மாணவர்களுக்கு ஏன் இந்திய மக்களின் உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும்? இந்தியத் தூதர் ஓரு கிறிஸ்தவராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அதில் ஓரளவுக்குத்தன்னும் நியாயம் இருந்திருக்கும்.  சரி இந்த நிகழ்வில் ஏன் மீனவர் பிரச்சினை குறித்த கருத்துக்களை இந்தியத்தூதர் தெரிவிக்கவேண்டும்? இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இது குறித்து ஈழத்து இந்து சமயிகளின் தலைவன் மற்வன்புலவு சச்சிதானந்தனினதும் இந்து சமயத்தின் காவலன் சிறுவர் இல்லம் புகழ் ஆறுதிருமுருகனினதும் எதிர்வினை எப்படி இருக்கப்போகின்றது என்பதனையும் அறிய உள்ளம் அவாவுகின்றது. மேலதிக தகவல்களாக இந்த மிஸ்பா சபையின் போதகர் ஜெயம் சாரங்கபாணி (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) ஆவார். சாரங்கபாணி என்ற பெயர் பொதுவாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் பெயராக அறியப்படுகின்றது. இறுதியாக இது ஓரு மத நிகழ்வாக இருந்தால் பேசாமல் கடந்து போய்விடலாம். ஆனால் இங்கு ஒரு மதநிகழ்வில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. அதுதான் சில அய்யங்களை தோற்றுவித்திருக்கின்றது!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.