Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, சனிக்கிழமை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும்.

சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ISROவின் அடுத்த கட்ட பாய்ச்சல்... Aditya-L1 Mission-ல என்ன இருக்கு? Explained

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பட்டினியால் வாடும் மக்களின் வறுமையை போக்கியபின் இந்த ஆய்வை செய்யட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, உடையார் said:

இந்தியாவில் பட்டினியால் வாடும் மக்களின் வறுமையை போக்கியபின் இந்த ஆய்வை செய்யட்டும் 

அவங்கள் கொஞ்ச நாளைக்கு ஆகாச வெளியில் பறந்து கொண்டு இருப்பாங்கள் பாஸ் ஏதாவது மிசன் பெய்லியர் ஆனாபின் தான் தரையில் வந்து விழுவார்கள் அது மட்டும் அவர்கள் பாசையில் உன்னிப்பாய் கவனித்து கொண்டு இருப்போம் .😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்யா எல்1: 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி இந்திய செயற்கைக்கோள்களை எப்படி காப்பாற்றும்?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது.

இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஆதித்யா - எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் , “ஆதித்யா-எல்1 திட்டத்தை மேற்கொள்வதற்காக மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறையை செய்த பிஎஸ்எல்விக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி, மிஷன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்களைக் கொண்ட மிக நீண்ட பயணம்,” என்றார்.

ஆதித்யா-எல்1 விண்கல திட்டத்தின் இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் சாஜி பேசுகையில், “கனவு நிஜமாகி உள்ளதைப் போன்ற நிலை இது. பிஎஸ்எல்வி மூலம் ஆதித்யா-எல்1 விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது.

அது 125 நாட்களுக்கான தனது நீண்ட பயணத்தை ஆதித்யா-எல்1 தொடங்கியுள்ளது. ஆதித்யா-எல்1 பயன்பாட்டுக்கு வந்தவுடன், அது நாட்டிற்கும் உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும் ஒரு சொத்தாக இருக்கும். இந்தப் பணியை சாத்தியமாக்குவதற்கு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய முழு குழுவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

ஆதித்யா என்பதற்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் சூரியன் என்று பொருள். எல்1 என்பது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே இரண்டின் ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருக்கும்

நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று இந்தியா பெற்றது.

இது நடந்த ஒரே வாரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காகவும் ஒரு விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c895eqdvn74o

  • கருத்துக்கள உறவுகள்

India's First Sun Mission: வெற்றிகரமாக விண்ணில் சீறிய Aditya-L1; அடுத்தது என்ன?

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்யா எல் -01 விண்கலம் தொடர்பில் இஸ்ரோவின் அறிவிப்பு!

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -01 விண்கலம், சூரியனின் எல் – 01 புள்ளியை நோக்கிய பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ம் திகதி பி.எஸ்.எல்.வி. மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

புவி சுற்றுப்பாதையில் தமது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருந்தது. "இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்” என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/273615

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்யா எல்1 எடுத்த முழு வட்ட புகைப்படங்கள் சூரியன் குறித்து அளிக்கக்கூடிய முக்கிய தகவல்கள்

ஆதித்யா எல்1 சூரியனின் முழுவட்ட புகைப்படங்கள் படம் பிடித்தது எப்படி? SUIT தொலைநோக்கி எப்படி செயல்படுகிறது?

பட மூலாதாரம்,ISRO

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது?

ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT எனப்படும் தொலைநோக்கி உலகிலேயே முதல் முறையாக இந்தப் புகைப்படங்களை சூரியனுக்கு 200 முதல் 400 நேனோமீட்டர் அலைநீள அளவிற்கு அருகே சென்று படம் பிடித்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் மூலம் சூரியனின் ஒளிமண்டலம் (Photosphere), புற வளிமண்டலம் (Chromosphere) ஆகிய மேற்பரப்புகள் பற்றி நுண்ணிய தகவல்களைப் பெற முடியும்.

ஆதித்யா எல்1 நிகழ்த்தியுள்ள இந்தக் கண்டுபிடிப்பில் சாதனையாகக் கருதப்படுவது, சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புற ஊதா கதிர்களுக்கு அருகே சென்று இந்தப் புகைப்படங்களை SUIT என அழைக்கப்படும் சூரிய புற ஊதா தோற்றுருவாக்கல் தொலைநோக்கி (Solar Ultra Violet Imaging Telescope) படம் பிடித்துள்ளது.

 
ஆதித்யா எல்1

பட மூலாதாரம்,ISRO

இந்தப் புகைப்படங்கள் மூலம் இரண்டு சிக்கலான ஆய்வுகளுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஒன்று, சூரியனின் மேற்பரப்பு நாம் அணுப்பக்கூடிய விண்கலம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்வது. இரண்டாவது, சூரியக் கதிர்கள் பூமியின் காலநிலை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை உன்னிப்பாக ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்துவது.

முழு வட்ட புகைப்படங்கள் என்றால் என்ன?

புற ஊதா கதிர்களில் இயங்கக்கூடிய இந்த வகை தொலைநோக்கிளைப் பயன்படுத்தி இரண்டு விதமாக சூரியனை படம் பிடிக்க முடியும் என்று கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

சூரியனில் குறிப்பிட்ட ஓர் இடத்தை ஆழமாகப் படம் பிடிப்பது அதில் ஒருவகை. மற்றொன்று, பல்வேறு வடிகட்டிகள் மூலம் சூரியனை படம் பிடிப்பது என்று அவர் விளக்கினார்.

"தற்போது சூரியனின் ஒளிமண்டலம், புற வளிமண்டலம் ஆகிய அடுக்குகளை இந்தத் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இதன் மூலம் அந்த அடுக்குகளில் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியும்.”

அவர் மேலும் கூறுகையில், “இந்த அடுக்குகளின் புகைப்படங்களை ஆராய்வதன் மூலம் சூரியனின் இந்த அடுக்குகளில் எங்கே கருப்புப் புள்ளிகள் உள்ளன, எங்கே தீப்பிழம்புகள் உள்ளன, எந்த இடங்கள் அமைதியாக உள்ளன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்,” எனத் தெரிவித்தார்.

இந்த தொலைநோக்கி மூலம் பதினொரு வகையான ஃபில்டர் (Filter) என்றழைக்கப்படும் வடிகட்டிகளை பயன்படுத்தி சூரியனை படமெடுத்துள்ளதாக த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட SUIT தொலைநோக்கி

ஆதித்யா எல்1

பட மூலாதாரம்,ISRO

சூரியனின் இந்த முழுவட்ட புகைப்படங்களை படம் பிடித்துள்ள SUIT தொலைநோக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது இதில் சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த தொலைநோக்கியானது மகாராஷ்ட்டிரா மாநிலம் பூனேவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விண்வெளி நிறுவனத்தின் தலைமையில் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட கருவியாகும்.

இந்தக் கூட்டு முயற்சியில், இஸ்ரோ, மணிபால் உயர்கல்வி நிறுவனம் (MAHE), கொல்கத்தாவை சேர்ந்த இந்திய விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CESSI), பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் நிறுவனம் மற்றும் உதய்ப்பூர் சூரிய கண்கானிப்பகம் (USO-PRL) மற்றும் அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இந்தத் தொலைநோக்கி குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “இந்தியாவின் சொந்த தயாரிப்பான இந்த SUIT தொலைநோக்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு இந்த தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் புகைப்படங்களே சாட்சி,” என்றார்.

 

ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த கட்டம் என்ன?

ஆதித்யா எல்1

பட மூலாதாரம்,ISRO

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 2ஆம் தேதி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி SUIT தொலைநோக்கி சூரியனின் ஒளிப்படத்தை வெளியிட்டது.

இந்தத் தொலைநோக்கி கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி செயல்படத் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார்.

“இந்த விண்கலத்தின் நோக்கமே சூரியனை ஆராய்வதுதான். தற்போது இந்தப் புகைப்படங்கள் சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

தற்போது கிடைத்துள்ள இந்தப் புகைப்படங்களை வைத்து சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரியனின் வளிமண்டலம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்," என்கிறார் அவர்.

ஆதித்யா எல்1

பட மூலாதாரம்,ISRO

ஆனால், தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மட்டுமே அதற்குப் போதாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்த புகைப்படங்களை வைத்து நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இதுபோல இன்னும் பல புகைப்படங்கள் நமக்குத் தேவை. அதை வைத்துதான் சூரியனுடைய இயக்கத்தைப் பற்றி ஆழமாகப் தெரிந்துகொள்ள முடியும்,” எனத் தெரிவித்தார்.

"இந்த SUIT தொலைநோக்கியைப் போல ஆதித்யா எல்1-இல் இருக்கக்கூடிய மற்ற கருவிகள் வரும் நாட்களில் பயன்படுத்தப்படும்.

அடுத்ததாக Plasma Analyser Package for Aditya (PAPA) எனப்படும் கருவி நிலைநின்ற பிறகு ஜனவரி 7 முதல் 15ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும். அந்தக் கருவியில் இருந்தும் நமக்கு அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும்."

https://www.bbc.com/tamil/articles/cn0pw18e9wxo

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல மழைக்காலங்களில் வீதியில்  எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2023 at 08:00, உடையார் said:

இந்தியாவில் பட்டினியால் வாடும் மக்களின் வறுமையை போக்கியபின் இந்த ஆய்வை செய்யட்டும் 

நானும் ரெளடிதான் 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, புலவர் said:

முதல்ல மழைக்காலங்களில் வீதியில்  எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!

தங்களை ஏதோ சொர்க்கபுரி நாடு போல் அரசியலிலும் சினிமாவிலும் பிரமிக்க வைக்கின்றார்கள். ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு குடிக்க தண்ணியுமில்லை. மருத்துவ காப்புறுதியுமில்லை. கதை இப்படியிருக்க யூரியூப்பர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2023 at 10:33, புலவர் said:

முதல்ல மழைக்காலங்களில் வீதியில்  எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!

சென்னையில் அதிக மலை பெய்யும்போதும் கடலில் புயல் உருவாகும் போதும் கடலின் நீர் மட்டம் தரையை விட அதிகமாக உயர்ந்து விடுகிறது அதனால் சாக்கடையை காவிக்கொண்டுவரும் கூவம் ஆறுகூட கடலுக்குள் போகமுடியாமல் நகருக்குள் நகர்ந்து விடுகிறது.......அதனால் இந்த சூரியனின் ஆய்வு மூலம் பாலைவனத்துக்குள் வீணாக சென்று சுட் டெரிக்கும்  சூரியனின் ஒளிக்கதிர்களை சென்னையை நோக்கி திருப்புவதின் மூலம் அந்த மழைநீர் உடனடியாகவே ஆவியாகி மேலே போய் விடுகிறது......இது ஒரு நீண்டகாலத் திட்டம் ஆனால் ஆதித்யா எல் 1  அதை மிகக் குறுகிய காலத்துக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது ......!   😴

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் மிகப்பெரிய வான் பொருளான சூரியன், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்திய விஞ்ஞானிகள், நாட்டின் முதல் சூரிய கண்காணிப்பு செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 நடத்திய ஆய்வில் கிடைத்த “முதல் குறிப்பிடத்தக்க முடிவுகளை” வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, ஆதித்யா எல்1 விண்வெளிக்குச் சுமந்து சென்ற ஏழு ஆய்வுக் கருவிகளில் மிக முக்கியமான ஒன்றான, விசிபிள் எமிஷன் லைன் கொரோனாகிராஃப் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதை வெல்க் (VELC) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்தக் கருவி, கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் (CME) தொடங்கிய நேரத்தைத் துல்லியமாக மதிப்பிட அவர்களுக்கு உதவியது.

கொரோனா என்பது சூரியனின் வெளிப்புற அடுக்கு. அதிலிருந்து வெளியேறும் மிகப் பிரமாண்டமான அளவில் இருக்கும் தீப்பந்தமே கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றைக் கண்காணிப்பது, இந்தியாவின் சூரிய ஆய்வுத் திட்டத்தின் முக்கியமான அறிவியல் நோக்கங்களில் ஒன்று.

 

“ஆற்றல் துகள்களால் ஆன இந்தத் தீப்பிழம்புகள் அடங்கிய ஒரு சி.எம்.இ (CME) ஒரு டிரில்லியன் கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். அதோடு பயணிக்கும்போது இதனால் விநாடிக்கு 3,000 கி.மீ வேகத்தை அடைய முடியும். இது பூமி உள்பட எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்லக்கூடும்,” என்று விளக்கினார் வெல்க் கருவியை வடிவமைத்த இந்திய வான் இயற்பியல் கழகத்தின் பேராசிரியர் ஆர்.ரமேஷ்.

“இப்போது இந்தப் பெரிய தீப்பந்தம் (CME), சூரியனில் இருந்து வெடித்து வெளியேறி பூமியை நோக்கி வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் உச்சக்கட்ட வேகத்தில் வந்தால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் 150 மில்லியன் கி.மீ தொலைவைக் கடக்க, அதற்குச் சுமார் 15 மணிநேரம் மட்டுமே ஆகும்” என்றார் ரமேஷ்.

சூரியனில் இருந்து பூமியை நோக்கி வந்த பிரமாண்ட தீப்பந்து

கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, வெல்க் கருவி அவதானித்த சி.எம்.இ வெளியேற்றம் சூரியனில் இருந்து இந்திய நேரப்படி மாலை 6:38 மணிக்குத் தொடங்கியது (GMT 13:08). மதிப்பு மிக்க வான் இயற்பியல் ஆய்விதழ்களில், இந்த சி.எம்.இ பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட வெல்க் கருவியின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ரமேஷ், கடந்த ஜூலை 16 அன்று வெளிப்பட்ட சி.எம்.இ பூமிக்குப் பக்கத்தில் உருவானதாகக் கூறினார்.

“ஆனால், அதன் பயணம் தொடங்கிய அரை மணிநேரத்திற்கு உள்ளாகவே, திசைதிருப்பப்பட்டு, வேறு திசையில் பயணித்து சூரியனுக்குப் பின்னால் சென்றுவிட்டது. அது வெகு தொலைவில் இருந்ததால், பூமியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்றும் குறிப்பிட்டார் ரமேஷ்.

 
ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சூரியனின் கொரோனா அடுக்கு பூமியிலிருந்து பார்க்கையில், முழு சூரிய கிரகணத்தின்போது மட்டுமே தெரியும்

ஆனால், சூரியப் புயல்கள், சூரியச் சுடர்கள், சி.எம்.இ வெளியேற்றங்கள் ஆகியவை பூமியின் வானிலையை வழக்கமாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் உள்பட கிட்டத்தட்ட 7,800 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளிப் பகுதியின் வானிலையையும் அவை பாதிக்கின்றன.

Space.comஇன் கூற்றுப்படி, அவை மனித வாழ்வுக்கு நேரடி அச்சுறுத்தல் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அவை பூமியின் காந்தப்புலத்தில் குறுக்கிடுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும்.

அவற்றின் மிகவும் தீங்கு இல்லாத தாக்கம் வட மற்றும் தென் துருவத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் அழகான சுடரொளிகளை (Aurora) ஏற்படுத்துகிறது. ஒரு வலுவான சி.எம்.இ வெளியேற்றமானது லண்டன் அல்லது பிரான்ஸ் போன்ற துருவத்தில் இருந்து தொலைவிலுள்ள பகுதிகளின் வானத்திலும்கூட, கடந்த மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்ததைப் போல, சுடரொளிகள் தென்பட வழிவகுக்கும்.

ஆனால், இந்த சி.எம்.இ வெளியேற்றத்தின் விளைவுகள் விண்வெளியில் தீவிரமாக இருக்கலாம். அவற்றில் இருக்கும் ஆற்றல் துகள்களால் செயற்கைக்கோளில் இருக்கும் அனைத்து மின்னணுக் கருவிகளையும் செயலிழக்கச் செய்ய முடியும். அவற்றால் செயற்கைக்கோளின் மின் கட்டமைப்பைத் தகர்த்து வானிலை மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

நமது வாழ்க்கை முழுவதுமாகத் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களையே சார்ந்துள்ள நிலையில், “சூரியனில் இருந்து வெளிப்படும் சி.எம்.இ.க்களால் இணையம், தொலைபேசி இணைப்புகள், வானொலி என தகவல்தொடர்பு வசதிகள் அனைத்தையும் குலைக்க முடியும்” எனக் கூறும் பேராசிரியர் ரமேஷ், அது முழு வீச்சிலான குழப்பத்திற்கு வித்திடும் என்கிறார்.

 
ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சி.எம்.இ வெளியேற்றம் பூமியைவிடப் பல மடங்கு பெரிதாகவும் இருக்கக்கூடும்

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சூரியப் புயல்களில், வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் 1859இல் ஏற்பட்டது. கேரிங்டன் நிகழ்வு (Carrington Event) என்று அழைக்கப்பட்ட அந்த சூரியப் புயல், தீவிரமான சுடரொளிக் காட்சிகளை உருவாக்கியதோடு, உலகம் முழுவதும் இருந்த தந்தி இணைப்புகளைச் செயலிழக்க வைத்தது.

கடந்த 2012 ஜூலையில் பூமியை நோக்கி ஒரு வலுவான சூரியப் புயல் வீசியதாகவும், அந்தப் புயலுக்குக் காரணம் சூரியனில் இருந்து வெளிப்பட்ட சி.எம்.இ என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதோடு, இந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் வகையில், மிக நெருக்கமாக வந்ததாகவும், அது மேலும் நெருங்கியிருந்தால் நிலைமை ஆபத்தாகியிருக்கும் என்றும் நூலிழையில் அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு, அந்த சூரியப் புயல் பூமியைத் தாக்குவதற்குப் பதிலாக, விண்வெளியில் இருக்கும் நாசாவின் ஸ்டீரியோ-ஏ (STEREO-A) சூரிய கண்காணிப்பகத்தைத் தாக்கியது.

கடந்த 1989ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சி.எம்.இ வெளியேற்றம், கூபெக்கின் மின் கட்டமைப்பின் ஒரு பகுதியை 9 மணிநேரத்திற்குச் செயலிழக்க வைத்தது. இதனால் 60 லட்சம் பேர் மின்சாரமின்றி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நவம்பர் 4, 2015 அன்று சூரிய செயல்பாடு ஸ்வீடன் மற்றும் சில ஐரோப்பிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்தது. இதனால் பல மணிநேரங்களுக்குக் குழப்பம் நிலவியது.

 

சூரியப் புயல்களை கண்காணிப்பது எப்படி?

ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த அக்டோபர் மாதம், பிரிட்டன் வானில் வண்ணமயமான சூரியப் புயலால் ஏற்பட்ட காந்தப்புலச் சுடரொளி இரவு வானத்தை ஒளிரச் செய்தது

சூரியனில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து, சூரியப் புயல் மற்றும் சி.எம்.இ வெளியேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்டறிந்து, அவற்றின் பாதையைக் கணிக்க முடிந்தால், மின் கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தற்காலிகமாக அணைத்து வைக்கலாம். இதன்மூலம், அவற்றை இந்த நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு முன்னறிவிப்பாக அந்தத் தகவல்களைப் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை பல்லாண்டுக் காலமாகத் தங்கள் விண்வெளி சார்ந்த சூரிய ஆய்வுத் திட்டங்கள் வாயிலாக சூரியனைக் கண்காணித்து வருகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்த சூரியக் கடவுளின் பெயரைத் தொடர்ந்து பெயரிடப்பட்ட ஆதித்யா எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை இஸ்ரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.

கிரகணங்களின்போது கூட சூரியனை தொடர்ந்து அவதானிக்கவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆதித்யா எல்1-ஆல் முடியும்.

“நாம் பூமியிலிருந்து சூரியனை பார்க்கும்போது, ஒளிக்கோளம் அல்லது அதன் பிரகாசமான ஆரஞ்சு நிற நெருப்புப் பந்து போன்ற வெளிப்புறப் பகுதியையே பார்க்கிறோம்,” என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

முழு கிரகணத்தின்போது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும் சந்திரன் ஒளிக்கோளத்தை மறைக்கும்போது மட்டுமே, சூரியனின் வெளிப்புற அடுக்கான கொரோனாவை நம்மால் காண முடியும்.

 
ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு, 'ஆதித்யா எல்1-இல் இருக்கும் கொரோனாகிராஃப் கருவியால் சி.எம்.இ வெளியேற்றம் தொடங்கும் நேரத்தையும் அது செல்லும் திசையையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.'

இந்தியாவின் கொரோனாகிராஃப் கருவி, அதாவது வெல்க்-இல், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூட்டுத் திட்டமான சூரிய மற்றும் சூரியவளி மண்டலத்தில் இருக்கும் ஆய்வகத்தில் உள்ள கொரோனாகிராஃப் கருவியைவிடச் சற்றுக் கூடுதல் நன்மை இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

“நம்முடைய கொரோனாகிராஃப் கருவி, கிரகணத்தின்போது சந்திரன் செய்வதைப் போலவே சூரியனின் ஒளிக்கோளத்தைச் செயற்கையாக மறைக்கிறது. இதனால், சூரியனின் பிரகாசமான, ஆரஞ்சு நிற ஒளிக்கோளம் இல்லாமல், ஆதித்யா எல்1-க்கு ஆண்டின் 365 நாட்களும் 24 மணிநேரமும் கொரோனா அடுக்கு தடையின்றிக் காட்சியளிக்கும்,” என்று விளக்கினார் ரமேஷ்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கொரோனாகிராஃப் கருவி மிகப்பெரியது. அதாவது, அது ஒளிக்கோளத்தை மட்டுமின்றி, கொரோனா அடுக்கின் சில பகுதிகளையும் மறைக்கிறது. ஆகவே, அந்தக் கருவியால் மறைக்கப்பட்ட பகுதியில் சி.எம்.இ வெளிப்பட்டால், அதன் தோற்றத்தை அந்தப் பெரிய கொரோனாகிராஃப் கருவியால் காண முடியாது.

ஆனால், வெல்க் மூலம் ஒரு சி.எம்.இ வெளியேற்றம் தொடங்கும் நேரத்தையும் அது எந்தத் திசையில் செல்கிறது என்பதும் துல்லியமாக மதிப்பிட முடியும் என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

இந்தியாவில் சூரியனை கண்காணிக்க, தெற்கில் கொடைக்கானல், கௌரிபிதனூர், வடமேற்கில் உதய்பூர் என மூன்று கண்காணிப்பு மையங்கள் உள்ளன. ஆகவே, இந்த மையங்களின் அவதானிப்புகளை ஆதித்யா எல்1 உடன் சேர்த்தால், சூரியனைப் பற்றிய நமது புரிதலைப் பெரியளவில் மேம்படுத்த முடியும் என்றும் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

கரியாப் போன காசு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.