Jump to content

சீக்கியர் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ - என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அரசியல் காரணிகளால் ( சீனாவை சமாளிக்க ) இந்தியாவை ஓரளவுக்கு மேல் எதிர்க்க கனடாவுக்கு ஏலாமல் இருந்தால் இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்ட இந்திய பிரதமரை கொன்றதாகக் குற்றம் சாட்டப் பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை கனடாவில் அவர்கள் எந்த பயங்கரவாததையும் நிகழ்த்தவில்லை என்ற காரணத்தினால் அவர்களின் மீது உள்ள தடையை நீக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

இவ்வாறன விடயங்களில் இந்தியாவை அம்பலப்படுத்தும் ஒரு லாபியாக நாம் வளரும் பட்சத்தில், எம்மையும் கனம் பண்ண வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்படும்.

இலங்கைத் தமிழர்களில் அரைவாசி அரைவேக்காடுகளின் இந்திய அபிமானம் துடைத்து அழிக்கப்படும்  வரைக்கும் எங்கள் பிரச்னை அடுத்த கட்டத்துக்கு நகராது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

இலங்கைத் தமிழர்களில் அரைவாசி அரைவேக்காடுகளின் இந்திய அபிமானம் துடைத்து அழிக்கப்படும்  வரைக்கும் எங்கள் பிரச்னை அடுத்த கட்டத்துக்கு நகராது.

உண்மைதான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பிரதமரை ஆதரித்தும் இந்தியாவின் கனடாவில் செய்த ஜனநாயக விரோத செயலை ஈழதமிழ்  மக்களின் முக்கியமான அரசியல் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவசியம் கண்டிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு இன்னொரு சீக்கிய போராளிய கனடாவில போட்டிட்டாங்களாம்… 🫢   

இவரை ஒரு காலிஸ்தான் தீவிரவாதி என்று இந்திய ஊடகங்கள் எழுதுகின்றன..

இந்தியாவின் என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவராம்..

சுக்தூல் சிங் மீது இந்தியாவில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்..

மோடிக்கு 2026 எலெக்சன வெல்ல இந்திய தேசிய அபிமானத்தை காட்டி இந்திய சங்கிகளின் தலையில் மிளகாய் அரைக்க அருமையான திட்டம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா அதிரடி நடவடிக்கை!

21 SEP, 2023 | 01:16 PM
image
 

இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும்இ பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கனடா நாட்டுக்கான விசா சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/165102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நந்தன் said:

இதோட கனடாவின் பொருளாதாரம் அழிஞ்சுது. 

அத்துடன் இனி கனடியர்கள் சொர்க்கத்தின் வாசலை பார்க்கவே முடியாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் இருவருக்குமிடையில் ஓடித் திரிந்து ஒட்ட வைப்பார்.

அதுவரை அமைதி அமைதி.

1 hour ago, நந்தன் said:

இதோட கனடாவின் பொருளாதாரம் அழிஞ்சுது. 

கனடாவில் உள்ளவர்கள் அசைலம் கேட்டு இலங்கை போகப் போகிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியர் கொலையால் இந்தியா - கனடா இடையே வலுக்கும் மோதல்

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 செப்டெம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு "நம்பகமான" தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது என்று ட்ரூடோ கூறினார்.

 

கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

கனடாவின் "கடுமையான" குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.

கனடா அதிகாரிகள் தொடர்ந்து புலனாய்வு செய்து வருவதால் இதுபற்றி மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

விசா சேவையை நிறுத்தியது இந்தியா

கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக இந்திய விசா வழங்கும் சேவை மையம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், "செயல்பாட்டு காரணங்களுக்காக செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு செல்லும் விசா வழங்கும் சேவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தல்

அரிந்தம் பக்சி

பட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA

இந்தியாவில் இருக்கும் கனடா அரசின் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் குற்றச்சாட்டில் முன்முடிவு தெரிவதாகவும் இது முற்றிலும் அரசியல் பின்னணி கொண்டது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தக் குற்றச்சாட்டு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களைப் பார்க்கத் தயாராக இருப்பதாக கனடா அரசுக்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும் இதுவரை அத்தகைய குறிப்பிட்ட தகவல்கள் எதையும் தாங்கள் பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

அதேவேளையில் கனடா மண்ணில் நடக்கும் குற்ற நடவடிக்கைகள் மற்றும் அதில் தொடர்புடைய தனிநபர்கள் பற்றிய தெளிவான தகவல்கள் சீரான கால இடைவெளியில் அந்நாட்டு அரசுக்கு இந்தியா தரப்பில் இருந்து வழங்கப்பட்டதாகவும் அரிந்தம் பக்சி குறிப்பிட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோ பேசியது என்ன?

அண்மையில் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்த விவகாரத்தை எழுப்பியதாக கனடா பிரதமர் ட்ரூடோ கூறினார்.

"கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகன் கொல்லப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவது," என ஜஸ்டின் ட்ரூடோ திங்கள் கிழமையன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார்.

"இது சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது." என்று கூறினார்.

ஆனால் நிஜ்ஜார் கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா முன்பு மறுத்திருந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,

கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்

இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்

ட்ரூடோவின் கருத்தைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய், கனடாவிலிருந்து திங்களன்று வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பிபிசி கருத்து கேட்டுள்ளது..

நிஜ்ஜார் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதன் காரணமாக, அதிக விவரங்களை வெளியே பகிரமுடியாது என மெலனி ஜோலி கூறினார்.

நிஜ்ஜார் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரிகள் இந்த மரணத்தை ‘இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக’ வகைப்படுத்தியுள்ளனர்.

கனடிய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

இந்தியா vs கனடா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மெலனி ஜோலி, கனடா வெளியுறவு அமைச்சர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனத்திற்குப் பிறகு, இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

கனடா மண்ணில் கனடிய குடிமகன் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசின் பிரதிநிதிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பிரச்னைக்குரியது மட்டுமல்ல, முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.

"அந்த குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அது நமது நாட்டின் இறையாண்மையை மீறியதாகும். அத்துடன், நாடுகள் ஒன்றுக்கொன்று நடந்து கொள்ள வேண்டிய முறையை மீறிய ஒன்றாகும். இது எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து எந்த வித வெளிநாட்டு தலையீட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்." என்று மெலனி ஜோலி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மீண்டும் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கொல்லப்பட்டது கவலை தரத்தக்க தீவிரமாக விஷயம் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை இந்திய அரசு தீவிரத்துடன் அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவைத் தூண்டவோ அல்லது பிரச்னையை பெரிதாக்கவோ நாங்கள் இதனைச் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக உலகின் பல பகுதிகளும் சீக்கியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்

இந்தியா மறுப்பு

கனடா பிரதமரின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறியதையும், அவர்களின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"கனடாவில் எந்த ஒரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் நமது (இந்திய) பிரதமரிடம் முன்வைத்தார். அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன."

"கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது புதிதல்ல. இதுபோன்ற செயல்களுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் எந்த முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்."

"தங்கள் மண்ணில் இருந்து செயல்படும் அனைத்து இந்திய விரோதக் கூறுகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலை வழக்கு

கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான கார் பார்க்கிங்கில் வைத்து கடந்த ஜூன் மாதத்தில் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவராக இருந்த அவர், காலிஸ்தான் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார்.

இவரது செயல்பாடு காரணமாக கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவினைவாத போராளிக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரு பயங்கரவாதி என்று நிஜ்ஜார் குறித்து இந்தியா முன்பு விவரித்திருந்திருந்தது. ஆனால் அவரது ஆதரவாளர்கள், இந்தியாவின் குற்றச்சாட்டுகள் "ஆதாரமற்றது" என்று அழைக்கின்றனர்.

 

நிஜ்ஜார் மரணம் குறித்து கனடா தனது கவலைகளை இந்தியாவில் உள்ள உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளிடம் தெரிவித்துள்ளதாக ட்ரூடோ கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடமும் அவர் இது குறித்து எடுத்துரைத்தார்.

"இந்த வழக்கில் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட இந்திய அரசு, கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் உறுதியாக கேட்டுக் கொள்கிறேன்," என்று ட்ரூடோ கூறினார்.

"நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் கனடா மக்களை கோபமடையச் செய்துள்ளது, சிலர் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்" என்று ட்ரூடோ கூறினார்.

உலக சீக்கிய அமைப்பு உட்பட கனடாவில் உள்ள சில சீக்கிய குழுக்கள் பிரதமரின் அறிக்கையை வரவேற்றுள்ளன.

சீக்கிய சமூகத்தினர் மத்தியில் ஏற்கெனவே பரவலாக நம்பப்பட்டதை ட்ரூடோ உறுதிப்படுத்தினார் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளனர்.

இந்தியா ஒத்துழைக்க வேண்டும் - அமெரிக்கா

இந்தியாவுக்கு எதிராக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்கரெட் மெக்லியோட் தெரிவித்துள்ளார், விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய மெக்லியோட், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. விசாரணைக்கு தகுதியானவை. குற்றவாளிகள் நீதியை எதிர்கொள்வது மிக முக்கியமான விஷயம். இந்த விசாரணையில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

“நாங்கள் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் கேட்போம். இருவரும் எங்களின் நெருங்கிய நண்பர்கள். ஒவ்வொரு நாட்டுடனும் எங்களுக்கு வெவ்வேறு உறவுகள் உள்ளன."

"விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, எனவே நான் அதை மேலும் விரிவாகப் பேச மாட்டேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விசாரணை சரியாக நடந்து, குற்றவாளி நீதியை எதிர்கொள்ள வேண்டும்." என்றும் அவர் கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,JUSTIN TRUDEAU

படக்குறிப்பு,

ஜி-20 கூட்டத்தின் போது இரு தலைவர்களும் சங்கடமாக காணப்பட்டனர்

இந்தியா - கனடா உறவு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள், கனடாவில் 14 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடாவில் உள்ளனர்.

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது மோதியுடனான பதற்றமான சந்திப்புக்குப் பிறகு நேற்று ட்ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோதி - ட்ரூடோ சந்திப்பின் போது, கனடா நாட்டில் இயங்கும் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தை குறிப்பிட்டு, "பயங்கரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை" அடக்க கனடா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோதி குற்றம் சாட்டினார், என ஜி20 மாநாட்டின் போது இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளையும் கனடா சமீபத்தில் நிறுத்தியது.

அது ஏன் என்பது குறித்த சில விவரங்களைக் கனடா தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் "சில அரசியல் நிகழ்வுகளை" இந்திய தரப்பு மேற்கோள் காட்டியிருந்தது.

சமீபத்திய மாதங்களில் எதிர்பாராத விதமாக இறந்த மூன்றாவது முக்கிய சீக்கியர் நிஜ்ஜார் ஆவார்.

பிரிட்டனில், காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கண்டா, ஜூன் மாதம் பர்மிங்காமில் மர்மமான முறையில் இறந்தார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்ச்வார் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cyd9zgrjymqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா: ஜஸ்டின் ட் ரூடோவின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்ற உதவிய சீக்கியர்கள்

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜஸ்டின் ட்ரூடோ 2018இல் பொற்கோவிலுக்கு சென்றார்

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர், இந்தியாவில் மோதி அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

அப்போது ட்ரூடோ நான்கு சீக்கியர்களை அமைச்சரவையில் சேர்த்திருந்தார். கனடாவின் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது அதுவே முதல்முறை.

தற்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான கனடாவின் உறவுகள் கடுமையான சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று நாடாளுமன்றத்தில் சந்தேகம் தெரிவித்தார். அதன் பிறகு இரு நாடுகளும், ஒன்று மற்றதன் உயர் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றின.

காலிஸ்தான் காரணமாக கனடாவுடனான இந்தியாவின் உறவுகளில் கடந்த காலங்களிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் பதற்றங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் அளவுக்கு அது ஒருபோதும் தீவிரம் அடைந்ததில்லை.

கனடாவில் சீக்கியர்கள் மத்தியில் ட்ரூடோவின் பிரபலம் பற்றிப் பேசப்படும் போதெல்லாம், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீதான அவரது மென்மையான நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடாவிடம் இந்திய அரசு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

ட்ரூடோ அரசு தனது வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்து காலிஸ்தான் மீது மென்மையாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இதுவரையிலான அரசியல் பயணம் மற்றும் அதில் கனடா வாழ் சீக்கியர்களின் சிறப்புப் பங்கு பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

 

ட்ரூடோவுக்கு சீக்கியர்கள் ஏன் முக்கியம்?

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தனது மனைவியுடன்

ஜஸ்டின் ட்ரூடோ தனது 44 வயதில் முதல்முறையாக கனடாவின் பிரதமரானார். 2019ஆம் ஆண்டில் அவர் மீண்டும் இந்த நாற்காலியில் அமர்ந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரது பிரபலம் கணிசமாகக் குறைந்துவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றுப் பேரிடரைத் திறம்பட சமாளித்தால், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (கனடா நாடாளுமன்றத்தின் கீழ் அவை) தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று ட்ரூடோவின் லிபரல் கட்சியினர் நம்பினர்.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது. ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 20 இடங்கள் குறைந்தன.

ஆனால் இந்தத் தேர்தலில் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி, 24 இடங்களைப் பெற்றிருந்தது.

ஜக்மீத் சிங் கட்சித் தலைவராக ஆவதற்கு முன்பு காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

"ட்ரூடோ பிரதமராக நீடிக்க ஜக்மீத் சிங்கின் ஆதரவு மிகவும் முக்கியமானதாகிவிட்டது. சீக்கியர்களை கோபப்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்யாமல் இருக்க ட்ரூடோ முயல்வதற்கு ஒருவேளை இதுவும் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்,” என்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, ’ட்ரிப்யூன் இந்தியா’, ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

"ட்ரூடோ பெரும்பான்மை இல்லாத அரசை நடத்துகிறார். ஆனால் ஜக்மீத் சிங்கின் ஆதரவு அவருக்கு உள்ளது. ட்ரூடோ அரசியலில் தொடர்ந்து இருக்க ஜக்மீத் சிங் தேவை. ஜக்மீத் சிங் இப்போது ட்ரூடோவின் நம்பகமான கூட்டாளியாகக் காணப்படுகிறார். ஒவ்வொரு கடினமான நேரத்திலும் ட்ரூடோவுடன் அவர் நிற்கிறார்," என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் மக்கள்தொகையில் சீக்கியர்கள் 2.1 சதவிகிதமாக உள்ளனர். கனடாவில் சீக்கிய மக்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கல்வி, தொழில், வேலை போன்ற காரணங்களுக்காக இந்தியாவின் பஞ்சாபில் இருந்து கனடா வந்தவர்கள்.

 
இந்தியா கனடா பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜக்மீத் சிங்கின் ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் ஆபத்தில் முடிந்திருக்கும்.

கனடாவின் அரசியலில் சிறுபான்மை சீக்கியர்கள் ஏன் இவ்வளவு முக்கியமானவர்கள் என்பதே இப்போதைய கேள்வி.

"சீக்கியர்களின் சிறப்பியல்புகளில் ஒன்று, அவர்கள் ஒரு சமூகமாக ஒன்றுபட்டுள்ளனர். அவர்கள் நிர்வாகத் திறன் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள குருத்வாராக்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் மூலம் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிதியும் திரட்டுகிறார்கள்.

நன்கொடைகள் என்பது, சீக்கியர்கள் மற்றும் குருத்வாராக்களை எந்த ஒரு கனேடிய அரசியல்வாதிக்கும் ஆதரவு அமைப்பாக மாற்றும் ஒரு அம்சம்," என்று நிபுணர்களை மேற்கோள்காட்டி ’ட்ரிப்யூன் இந்தியா’ தெரிவிக்கிறது.

வான்கூவர், டொராண்டோ, கல்கேய்ரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்களின் பெரிய நெட்வொர்க் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வான்கூவர் சன் இதழில் டப்பில்ஸ் டோட் ஒரு கட்டுரை எழுதினார். "வான்கூவர், டொராண்டோ மற்றும் கல்கேய்ரியில் உள்ள முக்கிய குருத்வாராக்களில் இருக்கும் சீக்கியர்களின் பிரிவு, சில லிபரல் மற்றும் என்டிபி தேர்தல் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பெரும்பாலான நேரங்களில் தன் பணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துகின்றன," என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் உள்ள பதற்றம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் கல்கேய்ரி பல்கலைக்கழகத்தின் மதத் துறையில் கற்பிக்கும் ஹர்ஜீத் சிங் கிரேவால், சீக்கியர்களுக்கு கனடா ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

"கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை நடந்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமின்மை, பஞ்சாபின் சீக்கியர்களை இடம்பெயர வைத்தது. சீக்கியர்கள் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் குடியேறினர். ஆனால் அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கனடாவை அடைந்தனர். ஏனெனில் இங்கு தார்மீக-சமூக மதிப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை அவர்கள் காணவில்லை," என்று அவர் கூறுகிறார்.

இன்று சீக்கியர்கள் கனடாவின் சமூகத்திலும் அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். புதிய ஜனநாயகக் கட்சியின் (என்டிபி) தலைவர் ஜக்மீத் சிங் ஒரு சீக்கியர். இந்தியாவில் சீக்கியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அவர் பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ளார். 2013இல் ஜக்மீத் சிங்கிற்கு இந்திய விசா மறுக்கப்பட்டதற்கு அவரது அறிக்கைகளே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

 

'தலைவர் ஆவதற்காகப் பிறந்தவர்'

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம்,PETER BREGG/CANADIAN PRESS

படக்குறிப்பு,

தனது தந்தையும், கனடாவின் முன்னாள் பிரதமருமான பியர் ட்ரூடோவுடன் சிறுவனாக ஜஸ்டின் ட்ரூடோ.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நான்கு மாதங்களே ஆனபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், அந்தக் குழந்தை ஒருநாள் தன் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் என்று கணித்திருந்தார்.

ரிச்சர்ட் நிக்சன் 1972ஆம் ஆண்டு கனடாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது நடத்தப்பட்ட மாபெரும் விருந்தின்போது அவர் கனேடிய பிரதமரிடம், "இன்றிரவு நாம் சம்பிரதாயங்களைத் தவிர்ப்போம். கனடாவின் வருங்காலப் பிரதமர் ஜஸ்டின் பியர் ட்ரூடோவின் பெயரில் இந்த நேரத்தை அர்ப்பணிக்கிறேன்," என்று கூறினார்.

"அவருக்கு (ஜஸ்டின் ட்ரூடோ) அதிபர் ஆவதற்கான திறமையும் ஆளுமையும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அந்த நேரத்தில் பியர் ட்ரூடோ கூறியதாக சிபிசி அறிக்கை தெரிவிக்கிறது.

ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1980கள் வரை கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார். பியர் ட்ரூடோ 1968 முதல் 1979 வரையிலும், மீண்டும் 1980 முதல் 1984 வரையிலும் கனடாவின் பிரதமராக இருந்தார்.

ஜஸ்டினின் குழந்தைப் பருவம்

ஜஸ்டின் ட்ரூடோவுடைய குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி அரசியலில் இருந்து விலகியே கழிந்தது. அவர் மெக்கில் பல்கலைக் கழகத்திலும் பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் படித்து ஆசிரியரானார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இளைய சகோதரர் மைக்கேல், 1998ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தார். இந்த பேரிழப்புக்குப் பிறகு அவர் ஆற்றிய பங்கு மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பனிச்சரிவு பாதுகாப்புக்கான செய்தித் தொடர்பாளராக ஆனார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை 80 வயதில் காலமானபோது, ஜஸ்டின் ட்ரூடோ தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது பேச்சு பெரிதும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் அவர் பிரதமராகும் வாய்ப்பையும் பலர் பார்த்தனர்.

ட்ரூடோ 2004இல் சோஃபி கிரேகோயரை மணந்தார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ட்ரூடோவும் அவரது மனைவியும் தாங்கள் பிரியப் போவதாக இந்த ஆண்டு அறிவித்தனர்.

 

அரசியல் இன்னிங்ஸின் ஆரம்பம்

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2008இல் ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் தீவிரமாக இறங்கினார். 2008ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே லிபரல் கட்சி, ஜஸ்டின் ட்ரூடோவிடம் 'ஒரு தலைவரை'ப் பார்த்தது. ட்ரூடோ 2011இல் மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லிபரல் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற அவரது ஆசை பலமுறை நிறைவேறாமல் போனது. அதன் பிறகு 2012இல் கட்சித் தலைமைக்கான தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை ட்ரூடோ தெளிவுபடுத்தினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரூடோவின் அனுபவமின்மையை சுட்டிக்காட்டி அவரது எதிரிகள் அவரைத் தொடர்ந்து விமர்சித்தனர். பொதுத் தேர்தலுக்கு முன்பும் இதே விமர்சனத்தை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் ட்ரூடோ பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

இந்திய அரசுடன் முன்பும் பதற்றம் இருந்தது

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜஸ்டின் ட்ரூடோ 2018இல் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலுக்கு சென்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராக இருந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ முதன்முறையாக ஏழு நாள் பயணமாக இந்தியா வந்தபோதும் பல சர்ச்சைகள் எழுந்தன.

அப்போது ட்ரூடோவை வரவேற்பதில் இந்தியா அலட்சியம் காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சீக்கிய பிரிவினைவாதிகள் மீது கனடா காட்டும் அனுதாபம் காரணமாகவே இந்தியா இவ்வாறு செய்ததாக அந்த ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது ஜஸ்டின் ட்ரூடோ அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கும் சென்றார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் 2018ஆம் ஆண்டில் மூன்று சீக்கிய அமைச்சர்கள் இருந்தனர். இந்த அமைச்சர்களில் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜீத் சஜ்ஜனும் ஒருவர்.

சஜ்ஜன் இப்போதும் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருக்கிறார். மேலும் கனடா பிரதமரின் அறிக்கையை ஆதரித்த அவர், ”இந்தியா உட்பட எந்த நாட்டின் தலையீட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.

சஜ்ஜனை காலிஸ்தான் ஆதரவாளர் என்று 2017இல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அழைத்தார். இருப்பினும் இந்தக் கூற்றை சஜ்ஜன் சிங் நிராகரித்தார்.

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து ஒன்டாரியோ சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியதும் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை.

கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ’சுதந்திர பஞ்சாப்’ தொடர்பான பொது கருத்துக் கணிப்பு நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

 

இதற்கு முன்பும் சர்ச்சையில் சிக்கிய ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஷி ஜின்பிங் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் 'உண்மையான மாற்றம்' போன்ற பல முற்போக்கான வாக்குறுதிகளுடன் வெற்றி பெற்று கனடாவின் பிரதமரானார்.

ட்ரூடோ தனது முதல் பதவிக் காலத்தில் 92 சதவீத வாக்குறுதிகளை ஓரளவுக்கு அல்லது முழுமையாக நிறைவேற்றியதாக இரண்டு டஜனுக்கும் அதிகமான சுதந்திர கனேடிய கல்வியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இரண்டாவது பதவிக்காலம் ஒரு தூதாண்மை சம்பவத்துடன் தொடங்கியது. அவர் டொனால்ட் டிரம்பை கேலி செய்தார். இது கேமராவில் பதிவாகியது. இதற்குப் பதிலடியாக டிரம்ப், ட்ரூடோவை ‘பாசாங்குகாரர்’ என்று அழைத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவில் அந்த நேரத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்டன. அதற்கு ட்ரூடோ 20 விநாடிகளுக்கு மேல் அமைதியாக இருந்தார். இந்த வீடியோவும் பெரிதும் வைரலானது.

கடந்த ஆண்டு பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதில் இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தைக் காண முடிந்தது.

 

"நமக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை நாளிதழ்களில் கசிந்துவிட்டது. அது சரியில்லை... இது பேச்சுவார்த்தைக்கான வழிமுறை அல்ல," என்று சீன அதிபரின் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சொல்வதைக் கேட்க முடிந்தது.

"நீங்கள் உண்மையானவராக இருந்தால், நாம் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பேச வேண்டும். இல்லையெனில் விளைவு என்னவாக இருக்கும் என்று சொல்வது கடினம்," என்று ஷி ஜின்பிங் கூறினார்.

இதற்கு கனாடாவின் பிரதமர் ட்ரூடோ, "கனடாவில் நாங்கள் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தையை நம்புகிறோம். நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்," என்று நிதானமாகப் பதிலளித்தார்.

ட்ரூடோவின் மிகப்பெரிய சோதனையாக கொரோனா தொற்றுப் பேரிடர் இருந்தது. கனடாவுக்கு அது மிகவும் கடினமான 18 மாதங்கள்.

அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்தியபோது, கடந்த காலத்தைத் தாண்டி கனடா நகர்ந்துவிட்டதாக நம்பப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஜக்மீத் சிங்கின் ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் ஆபத்தில் முடிந்திருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c8v5v7ree18o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 20/9/2023 at 18:21, விளங்க நினைப்பவன் said:

கனடா பிரதமரை ஆதரித்தும் இந்தியாவின் கனடாவில் செய்த ஜனநாயக விரோத செயலை ஈழதமிழ்  மக்களின் முக்கியமான அரசியல் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவசியம் கண்டிக்க வேண்டும்.

ஊடு கிடைச்சால் கிடா வெட்ட வேண்டியதோ?

அப்ப நீங்கள் EPRLF-இன்ர ஆதரவாளரோ?

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

ஊடு கிடைச்சால் கிடா வெட்ட வேண்டியதோ?

அப்ப நீங்கள் EPRLF-இன்ர ஆதரவாளரோ?

சீனாவிற்கு எதிரான அரணாக இந்தியாவை மேற்குலநாடுகள் நம்பியிருக்கின்றனவே என்று கவலை கொள்பவன் நான்.  நான் கேள்விபட்டது  அந்த இந்தியாவுக்காக ஈழதமிழ்  மக்களை துப்பாக்கியால் போட்டு தள்ளியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் என்பவர் தற்போது ஈழதமிழ்  மக்களின் முக்கியமான அரசியல் தலைவர் அவர் திரு ரூடோவை ஆதரித்தும், இந்தியாவை கண்டித்தும் அறிக்கை விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே கனடாவிற்கு முக்கிய தகவல்களை வழங்கியது - நியுயோர்க் டைம்ஸ்

Published By: RAJEEBAN

24 SEP, 2023 | 01:23 PM
image
 

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை குறித்த முக்கிய புலனாய்வு தகவல்களை அமெரிக்காவே கனடாவிற்கு வழங்கியது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீக்கியர் படுகொலை குறித்த தகவல்களை கனடாவிற்கு வழங்கியது. ஆனால் கனடா தொலைதொடர்பு தகவல்களை இடைமறித்தவேளை அதற்கு மேலும் வலுவான ஆதாரங்கள்  கிடைத்தன, அதன் பின்னரே இந்தியாவிற்கு எதிராக கனடா உறுதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது என நியுயோர்க் டைம்ஸ்தெரிவித்துள்ளது.

சீக்கியரின் கொலையை தொடர்ந்து கனடாவின் அமெரிக்க சகாக்கள் கொலைக்கான சூழமைவினை வழங்கினார்கள் அதன் மூலம் இந்தியாவின் தொடர்பு குறித்து தீர்க்கமான முடிவிற்கு கனடா வந்தது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை கனடா தனது நாட்டில் உள்ள இந்திய இராஜதந்திரிகளின் புலனாய்வு தகவல்களை இடைமறித்தவேளையே இந்தியாவே படுகொலையின் பின்னணியில் உள்ளது என்ற  முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/165317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 22/9/2023 at 20:17, நன்னிச் சோழன் said:

ஈழதமிழ்  மக்களின் முக்கியமான அரசியல் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

முன்னாள்  மண்டையன் குழுவின் தலைவர் , இந்நாள் ஈழதமிழ் மக்களின் முக்கியமான அரசியல் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் என்று வந்திருக்க வேண்டும் என்பதை இந்த திரியின் மூலம் இப்போது அறிந்து கொண்டேன்😂

 

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்


By Athavan CH
September 16, 2014 in ஊர்ப் புதினம்

தயா

  • கருத்துக்கள பார்வையாளர்கள்

 

சுரேஸ் பிரேமசந்திரனின் தலைமையிலான மண்டையன் குழு எண்டு வரவேண்டும் நிழலி...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - அமெரிக்கா

Published By: RAJEEBAN

26 SEP, 2023 | 11:03 AM
image
 

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இந்தியாவை தனிப்பட்ட ரீதியிலும் பகிரங்கமாகவும் கேட்டுக்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடா பிரதமர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்  குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் கனடா சகாக்களுடன் இந்த விடயம் தொடர்பில் நெருங்கிய தொடர்பில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் விசாரணைகள் தொடர்வதும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் முக்கியமான விடயம் என அமெரிக்கா கருதுகின்றது. கனடாவின் விசாரைணகளிற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என நாங்கள் வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியிலும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/165453

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது" - நியூயார்க் நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்

27 SEP, 2023 | 10:38 AM
image

"நான் The Five Eyes புலனாய்வு அமைப்பைச் சார்ந்தவர் இல்லை. நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை செய்யப்பட்டது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு கூட்டமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக ஃபை அய்ஸ் (Five Eyes) புலனாய்வு அமைப்புக்குள் தகவல் பரிமாறப்பட்டதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "நான் The Five Eyes அமைப்பைச் சார்ந்தவர் இல்லை. நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது" என்றார். (The Five Eyes என்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகளை உள்ளடக்கிய கண்காணிப்பு அமைப்பாகும்)

தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியா மீது கனடா சுமத்தியுள்ள அந்நிய மண்ணில் படுகொலை குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர், "காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலையில் நாங்கள் கனடாவிடம் குறிப்பிட்ட, பொருத்தமான அதாரங்கள், தகவல்களை அளிக்குமாறு கோரியுள்ளோம். அவ்வாறு அளித்தால் அதை ஆராய்வதாகச் சொல்லி இருக்கிறோம். அதைவிடுத்து அவர்கள் குற்றஞ்சாட்டிய வகையிலான செயல்களில் ஈடுபடுவது இந்திய அரசின் கொள்கையே அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகவே கனடாவில் திட்டமிட்ட குற்றங்கள் அதுவும் குறிப்பாக பிரிவினைவாத குழுக்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. பிரிவினைவாத குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் கனடாவுக்கு நிறைய தகவல்களைக் கொடுத்துள்ளோம். அதுபோல் குறிப்பிட்ட சிலரை நாடு கடத்தும்படி ஒரு பட்டியலும் கொடுத்துள்ளோம். இதையும் தாண்டி எங்களது தூதரகங்கள் தாக்கப்பட்டுள்ளன. தூதரக அதிகாரிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் எனக்கு யாராவது, ஏதாவது குறிப்பிட்டுக் கொடுத்தால், அதை நான் கனடாவுடன் பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், யாரேனும் அதை அரசாங்க ரீதியாக குறிப்பிட்டால், நான் அதை உற்று கவனித்துப் பார்ப்பேன். எனவே ஹர்தீப் கொலையில் கனடா குறிப்பிட்ட ஆதாரங்களைக் கொடுக்கட்டும் நான் அதை உற்றுப் பார்க்கிறேன்" என்றார்.

சர்ச்சையின் பின்னணி: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடி தரும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்திய அரசு அறிவித்தது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/165543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை நோக்கி 50 குண்டுகள் சுடப்பட்டன: குருத்வாரா உறுப்பினர்கள் தகவல்

28 SEP, 2023 | 02:15 PM
image
 

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மீது சுமார் 50 குண்டுகள் சுடப்பட்டதாக, குருத்வாரா உறுப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாராவில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை சம்பவம் தொடர்பாக, 90 வினாடிகள் வீடியோ ஒன்றை குருத்வாரா வெளியிட்டுள்ளது.

அதில் நிஜாரின் வாகனம், குருத்வாராவின் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது, அதன் அருகில் வெள்ளை நிற கார் ஒன்று இணையாக செல்கிறது. குல்லாவுடன் கூடிய ஸ்வெட்டர் அணிந்திருந்த இரண்டு பேர், காத்திருப்போர் பகுதியில் இருந்து வந்து நிஜாரின் காரை நோக்கி சென்றனர். இருவரும் துப்பாக்கியால், டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஹர்தீப் சிங் நிஜார் மீது சரமாரியாக சுட்டனர். அப்போது அருகில் சென்ற வெள்ளை நிற கார் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியேறி சென்றது. அந்த கார் சென்ற திசையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஓடினர்.

இச்சம்பவத்தை முதலில் பார்த்த குருத்வாரா தொண்டர் புபிந்தர் சிங், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சுமார் 50 குண்டுகள் சுட்டனர். இவற்றில் 34 குண்டுகள் நிஜார் உடலில் பாய்ந்தன. நான் நிஜாரின் கார் கதவை திறந்தபோது, அவர் சரிந்தார். அவர் உயிருடன் இல்லை’’ என்றார்.

https://www.virakesari.lk/article/165641

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு - இந்தியாவின் நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?

இந்தியா vs கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது.

கனடா இதை "சர்வதேச சட்ட மீறல்" என்று கூறியது.

ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது.

பல வாரங்களாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தில் இப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் நுழைந்துள்ளன.

இந்தியாவில் கனடாவின் தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தக் கூடாது என்று அமெரிக்காவும் பிரிட்டனும் கூறியுள்ளன.

கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், "இந்த வாரம் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இந்தியாவில் உள்ள 41 கனேடிய தூதர்களின் ராஜாங்க சட்ட விலக்குகளை தன்னிச்சையாக ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்தது.

இது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது. கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விஷயத்தில் இந்தியா சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியதாக நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தச் செயல்களின் மூலம் இந்தியா ஒதுக்கி வைக்கிறது.

இந்திய அரச, இந்தியாவிலும், கனடாவிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்ப முடியாத அளவிற்கு இது கடினமாக்குகிறது,” எனக் கூறியுள்ளார்.

 
இந்தியா vs கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கா என்ன சொன்னது?

வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இந்திய அரசு இந்தியாவில் கனடா நாட்டு தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவைக் கேட்டுக் கொண்டது, அந்த வேண்டுகோளின் பேரில் கனடா தூதர்களை திரும்ப அழைத்துள்ளது. கனடா தூதர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்," என்றார்.

இந்தியா மீது கனடா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரம் காட்டுவதாக அமெரிக்கா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "பரஸ்பர கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க தூதரக உறவு பலமாக இருப்பது மிகவும் முக்கியம். கனடா தனது தூதர்கள் இந்தியாவில் இருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற பார்வை நீடிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கனடாவின் விசாரணைக்கு இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகிறது.

"இந்தியா 1961 ஆம் ஆண்டு தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கைக்கு உட்பட்டு, கனடா தூதரகப் பணிகளின் உறுப்பினர்களுக்குத் தகுதியான வசதிகள் மற்றும் தூதரக விலக்குகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என ஏற்கெனவே அமெரிக்காவும், பிரிட்டனும் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தியா vs கனடா

பட மூலாதாரம்,X/MATTHEW MILLER

பிரிட்டன் என்ன சொன்னது?

இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சகத்தின் அறிக்கை அமெரிக்க அரசின் அறிக்கையுடன் ஓரளவு ஒத்துப்போகிறது.

பரஸ்பர கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க, இரு நாடுகளின் தலைநகரங்களில் தூதர்கள் இருப்பது அவசியம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

"பல கனடா நாட்டு தூதர்கள் இந்தியாவை விட்டு வெளியேற காரணமான இந்திய அரசின் முடிவில் நாங்கள் உடன்படவில்லை. 1961 வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். "ஒருதலைப்பட்சமாக தூதரக அலுவலர்களை நீக்கம் செய்வது, அவர்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கான தூதரக அதிகாரம் மற்றும் சலுகைகளை மறுப்பது வியன்னா மாநாட்டின் கொள்கைகள் அல்லது அதன் பயனுள்ள செயல்பாடுகளுக்கு முரணானது."

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் பாரபட்சமற்ற விசாரணையில் கனடாவுடன் தொடர்பில் இருக்க இந்தியாவை தொடர்ந்து ஊக்குவிப்போம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுமா?

இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்தியாவில் உள்ள பல கனடா தூதரக அதிகாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் "21 தூதரக அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவருக்கும்" ராஜாங்க சட்ட விலக்கு"தன்னிச்சையாக அகற்றப்படும்" என்று இந்தியா கூறியதாக அவர் தெரிவித்தார்.

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பிபிசி கருத்து கேட்டிருக்கிறது.

மீதமுள்ள 21 தூதரக அதிகாரிகள் இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும், இருப்பினும் பணியாளர்கள் பற்றாக்குறையால் கனடா தனது சேவைகளை நாட்டில் குறைக்க வேண்டியிருக்கும் என்று ஜோலி கூறினார்.

பெங்களூர், மும்பை, சண்டிகரில் மக்கள் நேரில் வந்து பெறும் சேவைகளுக்கு தடையாக இருக்கும் என்று ஜோலி கூறினார். இந்தச் சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
இந்தியா vs கனடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?

டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் எனவும், மூன்றாம் தரப்பு மூலம் மேற்கொள்ளப்படும் சேவைகளும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணியாளர்களின் குறைப்பால் குடியேற்ற விண்ணப்பங்களுக்கான செயலாக்கத்தில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறினார்.

முக்கியமாக கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022 கணக்குப்படி கனடாவில் தற்காலிக, நிரந்தர குடியேற்றத்துக்கான விண்ணப்பதாரர்களில் இந்தியர்களே அதிகம்.

கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ளதை விட டெல்லியில் அதிகமான தூதரக அதிகாரிகள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், இந்த எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியது.

ஆயினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைப் பட்டியலிட்டுள்ள உலகளாவிய விவகார இணையதளம், இந்த எண்ணிக்கை சம அளவிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கனடா தூதரக அதிகாரிகளுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்குவதாக இந்தியா கூறுவது "சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்" என்று ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பின் போது ஜோலி கூறினார்.

இருப்பினும் இதற்காக கனடா பதிலடி கொடுக்காது என்றும் அவர் கூறினார்.

"ராஜாங்க சட்ட விலக்கு விதிமுறைகளை மீற நாம் அனுமதித்தால், உலகத்தில் எங்கும் எந்தத் தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்" என்று ஜோலி கூறினார்.

கனடாவைச் சுற்றிப் பார்க்க அல்லது குடியேற விரும்பும் இந்தியர்களை கனடா இன்னும் வரவேற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/ckreek7rvk7o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.