Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது என்ற மாணவர்களுக்காவது கற்பிப்பதே   முறையானது. அவ்வாறு சொல்லி கொடுக்க முடியாதவர்கள், (அது அவர்களின் பழக்கத்தில் இருந்தால் தானே அதைச் சொல்லி கொடுப்பது😂) இவ்வாறான லூசுத்தனமான விதி முறைகளை விதிப்பது பொது சுத்தம் கருதி அல்ல என்பது வெள்ளிடை மலை. 

  • Replies 161
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தனியே சைவம் பரிமாறினால், பயறு, பருப்பு, கடலை வடை போன்றவற்றால் ஏற்படும் வளிமண்டல மாசு பாட்டையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் 🤣

உரிய முறையில் கழிவ;கற்றல் நடைபெறாமல் இருக்கும் வேளைகளில் கூட இது பற்றி அறிவித்திருக்கலாம் படிச்ச பெரிய மனிசரே ஆயிரம் பிழைகள் செய்யும் போது படிக்கும் பிள்ளைகள் செய்யும் வேலை நாம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை நாமும் கடந்து வந்தவர்களே 
ஆண்கள் பாடசாலைகளில்  பாத்றூம்களில் இருக்கும் பெண் நிர்வாணச்சித்திரத்திரத்திற்கு அடிக்க வாளிக்கணக்கில் பெயிண்ட் வாங்குவார்கள் அதற்கு அடிக்க என்றால் பாருங்கோவன் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தனியே சைவம் பரிமாறினால், பயறு, பருப்பு, கடலை வடை போன்றவற்றால் ஏற்படும் வளிமண்டல மாசு பாட்டையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்

பசுமைக்குடில்  வளிம மாசடைத்தலுக்கு மாடு அடிக்கடி வாய்வு மற்றும் ஏவறை விடுவதால்  உலகம் முழுதும் 15 வீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்படுதாம். இதற்க்கு அணிலாக இருந்து பங்களிப்பவர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என்று ஒரு வாதத்தை வைத்தால் பதில் என்ன 😄

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பகிடி said:

பசுமைக்குடில்  வளிம மாசடைத்தலுக்கு மாடு அடிக்கடி வாய்வு மற்றும் ஏவறை விடுவதால்  உலகம் முழுதும் 15 வீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்படுதாம். இதற்க்கு அணிலாக இருந்து பங்களிப்பவர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என்று ஒரு வாதத்தை வைத்தால் பதில் என்ன 😄

மாட்டிறச்சி ஏற்றுமதியில் இந்தியா நாலாவது பெரிய நாடாம்🤣.

அப்புறம் சீஸ், பால், வெண்ணை, நெய், பனீர், தவிலுக்கு தோல், லெதர் சூ எண்டு கேட்க மாட்டார்கள்தானே, இந்து மகா சனங்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உரிய முறையில் கழிவ;கற்றல் நடைபெறாமல் இருக்கும் வேளைகளில் கூட இது பற்றி அறிவித்திருக்கலாம் படிச்ச பெரிய மனிசரே ஆயிரம் பிழைகள் செய்யும் போது படிக்கும் பிள்ளைகள் செய்யும் வேலை நாம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை நாமும் கடந்து வந்தவர்களே 
ஆண்கள் பாடசாலைகளில்  பாத்றூம்களில் இருக்கும் பெண் நிர்வாணச்சித்திரத்திரத்திற்கு அடிக்க வாளிக்கணக்கில் பெயிண்ட் வாங்குவார்கள் அதற்கு அடிக்க என்றால் பாருங்கோவன் 

உங்கள் கருத்தை வாசித்த போது ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வந்தது.

அது ஒரு மிக கொழும்பின் மிக பெரிய ஆடம்பர நிறுவனம்.

அதில் வரும் மேல்தட்டு, படித்த பணியாட்கள் டாய்லெட் டிசூவை பாவித்த பின் அதை flush பண்ணாமல் அருகில் இருக்கும் bin உள் அடிப்பார்களாம். 

ஒரு முறை நாற்றம் எடுக்க ஒரு துப்பரவு பணியாளரை கூப்பிட்டு விசாரித்தார் மனேஜர்.

துப்பரவு பணியாளர் சொன்னது:

“ நான் என்ன செய்ய சேர், மிஸ்மாருகள் முகத்துக்கு நல்லா லிப்ஸ்டிக் அடிச்சு வாறாங்க, ஆனா ***யை துடைச்சு பின்னில அடிக்கிறாங்க”🤣.

இதெல்லாம் வளர்ப்பு முறை. 

என்னதான் சின்ன பிள்ளை என்றாலும் வீட்டில் இப்படி செய்வார்களா?

நாம் வளர்ந்து பொதுசொத்தை எப்படி உதாசீனம் செய்கிறோம் என்பதன் முதல் படிதான் பாடசாயில் சுகாதாரம்.

இதை 5 லேயே வளைக்க வேண்டும். 

1 hour ago, island said:

பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது என்ற மாணவர்களுக்காவது கற்பிப்பதே   முறையானது. அவ்வாறு சொல்லி கொடுக்க முடியாதவர்கள், (அது அவர்களின் பழக்கத்தில் இருந்தால் தானே அதைச் சொல்லி கொடுப்பது😂) இவ்வாறான லூசுத்தனமான விதி முறைகளை விதிப்பது பொது சுத்தம் கருதி அல்ல என்பது வெள்ளிடை மலை. 

2 hours ago, Kavi arunasalam said:

IMG-4481.jpg

கிளாசிக் ஐயா. கிளாசிக்👏🏾

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதை 5 லேயே வளைக்க வேண்டும். 

அதில் மாற்று கருத்து இல்லை முந்தய  காலங்களில் உட் சுத்தம் பெண்கள் செய்ய ஆண்கள் வெளிச்சுத்தம் செய்வார்கள் பாடசாலையில் இப்ப வகுப்பறை கூட கூட்ட விடுவதில்லை பெற்றோர் பிள்ளைகளை பிறகு எப்படி பிள்ளை வேலை பழகும்.
 
எப்போது வளைக்க முடியும்  பாடசாலையில் என்ன செய்தாலும் மனித உரிமை மீறல்  ஆப்பிசர் வந்துவிடுகிறார் ஆனால் பல லச்சம் பேர் பாதிக்கப்பட்ட போது பாயில சுருண்டு படுத்திருந்திருப்பார் போல  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதை மாற்றியமைக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முஸ்லிம் இணையத்தளம்.. இந்தச் செய்தியை உருவகிக்கவும்.. அதனை கொழும்பான் இங்கு கொண்டு வந்து ஒட்டவும் இருந்த உள்நோக்கம் நன்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. (ஒட்டியதோடு சரி கொழும்பான்.. ஒரு கருத்தும் பதியவில்லை.)

தமிழர்களுக்குள் மத.. சாதி ரீதியான அடிப்பாட்டுக்கு மேல்.. பாடசாலை ரீதியான.. கிராம ரீதியான அடிப்பாட்டை உருவாக்கனும். தமிழர்கள் எனி அரசியலுக்காகவோ.. எதுக்காகவுமோ.. ஓரணியில் திரளக் கூடாது. அப்படித் திரள்வது.. முஸ்லிம்களுக்கும் கூடாது.. அவர் தம் எஜமானச் சிங்களவர்களுக்கும் கூடாது.

ஆனால்.. அல்காவின் பெயரால் முஸ்லிம் அரபுலகம் வரை உறவாட வேண்டும்.. ஒற்றுமைப்பட வேண்டும். புத்தரின் பெயரால்.. பெளத்த சிங்களம் பலம்பெற வேண்டும். ஆனால்.. தமிழர்கள் மட்டும் சாத்தியமான எல்லா வழிகளிலும் பிரிய வேண்டும்.. பலமிழக்க வேண்டும். நாட்டை விட்டு ஓட வேண்டும்.

யாழ் களமும்.. இப்ப வர வர.. அதற்கு நல்லா தீனி போடுது.

யாழ் ஒஸ்மேனியா கல்லூரி வாசலில்.. செய்ய முடியாததை.. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவது பற்றி ஏன் பேசினமில்லை. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவதை.. யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஏன் செய்ய முடியவில்லை..?????????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முஸ்லிம் இணையத்தளம்.. இந்தச் செய்தியை உருவகிக்கவும்.. அதனை கொழும்பான் இங்கு கொண்டு வந்து ஒட்டவும் இருந்த உள்நோக்கம் நன்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. (ஒட்டியதோடு சரி கொழும்பான்.. ஒரு கருத்தும் பதியவில்லை.)

அட இதுவா விசயம் ... அதுதானே பார்த்தான்..எமிமினத்தின்  கேடுகெட்ட் செய்திகளுக்கு யார் முன்னுரிமை கொடுப்பது என்பது... நன்றி நெடுக்கர்..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

யாழ் ஒஸ்மேனியா கல்லூரி வாசலில்.. செய்ய முடியாததை.. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவது பற்றி ஏன் பேசினமில்லை. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவதை.. யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஏன் செய்ய முடியவில்லை..?????????!

ஏனென்றால் வேலணை மத்திய கல்லூரியில் பாதிக்கப்படுவது என் பிள்ளை.. தமிழ்பிள்ளை ஒஸ்மானியகல்லூரியிலோ சிங்கள மகாவித்தியாலயத்திலையோ படிக்கப்போவதில்லை.. அங்கு பிரச்சினை என்றால் அவர்கள் பாத்துக்கொள்வார்கள்.. இது தமிழர் நம்ம வீட்டுக்குள் பிரச்சினை.. நாமதான் பேசனும்.. சிங்களவர்களோ முஸ்லீம்களோ வந்து பேசப்போவதில்லை.. அவர்கள் என்ன நோக்கத்துக்கு இணைத்தார்களோ அதைவிட பெரிய பிரச்சினை இது.. இணைத்தவர்கள் நோக்கம் வெல்லக்கூடாது என்பதற்காக எம் பிள்ளையை பலிக்கடா ஆக்கமுடியாது.. சிங்களவன் அடக்குமுறை செய்யுறான் அதால நான் உன்னை அடக்குவதை கண்டுக்காமல் என்னுடன் சேர்ந்து சிங்களவனுக்கு எதிராக போர் செய்.. போர் முடிய சிங்களவனை விரட்டிவிட்டு என் அடக்கு முறைக்கு கீழ் எனக்கு வாழ்நாள் அடிமையாக வாழு என நமது சாதிமான்கள் தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி எழுதியதை இப்பவும் எழுதுவதை போன்றது இது..( இப்ப எங்க சாதிபாக்குறாங்கள், சாதி பேசக்குடாது சிங்களவருக்கு எதிரான போராட்டத்தை வீக் ஆக்கும்..)

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது ஒரு பாடசாலை உள்ளக அறிவிப்பு.

அதனை சாதி.. மதப் பிரச்சனையாக உருவகிக்க வேண்டிய தேவையென்ன..?!

இந்த அறிவிப்புக் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால்.. அப்பாடசாலை பெற்றோரோ பிள்ளைகளோ.. பழைய மாணவர் சங்கங்களோ பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்த முடியும். மாற்றங்களை கோர முடியும்.

இப்படி எல்லாம் வழிமுறைகள் இருக்க.. இதனை ஒரு பகிரங்கச் செய்தியாக்கி.. அங்கு.. ஏதோ மற்றைய பாடசாலைகளில் உள்ளக அறிவிப்புக்களில்.. எதுவுமே வராதது போல் தோற்றம் காட்டி.. சாதி.. மத.. கிராம.. அரசியல் எல்லாம் பேசி.. எதுக்கு வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்... இருக்கிறார்கள்..??!

இருக்கிற பிரச்சனைகளுக்கே தீர்வு தேட வழியில்லாத சூழலில்.. யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில்.. இந்த அறிவிப்பு முக்கியம் பெற என்ன காரணம்.. அங்கு முஸ்லிம் மாணவர்கள் படிச்சு அதனால்.. பாதிக்கப்படுவதாலா..?! முஸ்லிம்களே இல்லாத ஊரில்.. முஸ்லிம் ஊடகத்தில் இந்தச் செய்தி வர என்ன நோக்கம்..???!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இது சரியாகத்தான் படுகுது.. இந்த கோணத்தில் நான் இதை சிந்திக்கவில்லை.. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்..

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

இது ஒரு பாடசாலை உள்ளக அறிவிப்பு.

அதனை சாதி.. மதப் பிரச்சனையாக உருவகிக்க வேண்டிய தேவையென்ன..?!

இந்த அறிவிப்புக் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால்.. அப்பாடசாலை பெற்றோரோ பிள்ளைகளோ.. பழைய மாணவர் சங்கங்களோ பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்த முடியும். மாற்றங்களை கோர முடியும்.

இப்படி எல்லாம் வழிமுறைகள் இருக்க.. இதனை ஒரு பகிரங்கச் செய்தியாக்கி.. அங்கு.. ஏதோ மற்றைய பாடசாலைகளில் உள்ளக அறிவிப்புக்களில்.. எதுவுமே வராதது போல் தோற்றம் காட்டி.. சாதி.. மத.. கிராம.. அரசியல் எல்லாம் பேசி.. எதுக்கு வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்... இருக்கிறார்கள்..??!

இருக்கிற பிரச்சனைகளுக்கே தீர்வு தேட வழியில்லாத சூழலில்.. யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில்.. இந்த அறிவிப்பு முக்கியம் பெற என்ன காரணம்.. அங்கு முஸ்லிம் மாணவர்கள் படிச்சு அதனால்.. பாதிக்கப்படுவதாலா..?! முஸ்லிம்களே இல்லாத ஊரில்.. முஸ்லிம் ஊடகத்தில் இந்தச் செய்தி வர என்ன நோக்கம்..???!

அப்ப செய்தி வந்த ஊடகமும், அதை இணைத்தவரும் தான் பேசப்பட வேண்டிய முக்கிய விடயங்கள், இத்தகைய அறிவிப்பு ஏன் ஒரு நோட்டீசாக அங்கே முளைத்தது என்ற காரணமான "அறையில் இருக்கும் யானை" யைக் கண்டு கொள்ளவே கூடாது! இது இதற்கு முதல் வந்த எல்லா உருட்டலையும் விடப் பெரிசா இருக்கே🤣?

அது சரி, இதே போல இந்தப் பாடசாலையில் நடந்த அதிபர் தேர்வில் சாதி/மதப் பிரச்சினையும் எங்கள் தமிழ் ஊடகங்களில் பெரிதாக வரவில்லை. ஏனென்று ஊகிக்க முடிகிறதா? இப்படி உங்களைப் போல "பேசாமல் இருந்தால் சாதி மறையும்!" என்று நம்பிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

எவ்விடம்?

சரவணை - நாரந்தனை பார்டர்?

கந்தசாமி கோவிலடி??? 

நாதமுனிக்கு இநத இடம் எல்லாம் தெரிகிறதா. மேற் கூறியவற்றில் ஓரிடம் என்க்கு மிகவும் கிட்ட இருக்கிறது.

23 hours ago, goshan_che said:

அரியரட்ணம் என நினைக்கிறேன்.

புதியதாய் அறிந்து கொண்டேன். நன்றி.

பிகு

எனக்கு ஒரு சந்தேகம் - யாழில் கருத்தெழுதுவோரில் 80% க்கும் மேல் தீவகத்தை சார்ந்தோராய் இருக்கும் போல ?

அரியரட்ணம்  தான் தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற எல்லா இனங்களும் சமூகமும் உள்ளக முரண்பாடுகளை ஒதுக்கி வைச்சிட்டு.. தமிழர்களைப் பிரித்தாளுவதில் செல்வாக்குச் செலுத்த.. தமிழர்கள் உள்ளக முரண்பாடுகளை நோண்டி நோண்டி பெரிசாக்க.. தமிழர்கள்.. தாமும் சீரழிஞ்சு.. மற்றவர்களால் சீரழியும் நிலை தான் மோசமடையும்.

சாதி.. மத பிரச்சனைகள் மற்றைய இனங்களில் இருக்கும் உள்ளக பிரிவினைகளோடு ஒப்பிடும் போது தமிழர்கள் மத்தியில் மென்போக்கோடு தான் இருந்தது வந்துள்ளது. சமீப காலமாக (குறிப்பாக 2009 மே க்குப் பின்) அது ஆழப்படுத்தப்படுவதும் ஆக்கிரோசப்படுத்தப்படுவதும்.. வேண்டும் என்றே நிகழ்த்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழர்கள்.. பெளத்த தமிழர்களாகவும்.. மற்றும் மதமாற்றங்களுக்கும் உள்ளாக்கப்படும் நிலையில்.. தீவக அதிகார சபை மூலம் தீவகம் கபளீகரம் செய்யப்பட்டால்.. அங்கு சிங்கள முஸ்லிம் பெருக்கத்திற்கு வகை செய்யும் வழியில் தான்.. இந்தப் பிரச்சனையில்.. யாழ் முஸ்லிம் இணையம் மூக்கை நுழைக்கிறதோ என்ற முக்கிய கேள்வி எழுகிறது.

ஏலவே சாட்டிப் பகுதியில்.. தமிழ் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாதபடி.. முஸ்லிம் மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில்... வேலணையும் குறிவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

நாமோ.. சாதியை நோண்டி.. கவனத்தை வேறு திசையில் கொண்டு சென்று எதிரிகளின் நோக்கம் இலகுவாக நிறைவேற உதவி நிற்கப் போகிறோம்.. என்று விடாப்பிடியோடு இருக்கிறோம். இதில்.. புத்திமான்பலவான் ஆக்களும்.. தங்களின் கெட்டினத்தனத்தைக் காட்டினம். 

எல்லாம் எம் இனத்தின் முன்னெச்சரிக்கையற்ற நடவடிக்கைகளின்.. தாக்கமும்.. எம்மவர்கள் சுயமாக சிந்திச்சு.. முன்னெச்சரிக்கை அடையக் கூடாது என்ற நோக்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவோ தெரியாது...??!

யார் யார் என்ன வேலைத்திட்டங்களோடு இயங்கினமோ..??! உள்ளூரில்.. ஒரு சித்தார்த் சிங்களத்தால் களமிறக்கப்பட்டிருக்கிறான் என்றால்.. யாழில் எத்தனை சித்தார்த்துக்கள் பதுங்கியுள்ளனரோ.. யார் அறிவார்.  இதனையிட்டு.. மக்களை தான் விழிப்புணர்வு படுத்த வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நந்தன் said:

கோயில்ல இருந்து 200m👋

அப்படிஎன்றால் கோவிலுக்கு தெற்குப்பக்கம் அல்லது கிழக்குப் பக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, nedukkalapoovan said:

மற்ற எல்லா இனங்களும் சமூகமும் உள்ளக முரண்பாடுகளை ஒதுக்கி வைச்சிட்டு.. தமிழர்களைப் பிரித்தாளுவதில் செல்வாக்குச் செலுத்த.. தமிழர்கள் உள்ளக முரண்பாடுகளை நோண்டி நோண்டி பெரிசாக்க.. தமிழர்கள்.. தாமும் சீரழிஞ்சு.. மற்றவர்களால் சீரழியும் நிலை தான் மோசமடையும்.

சாதி.. மத பிரச்சனைகள் மற்றைய இனங்களில் இருக்கும் உள்ளக பிரிவினைகளோடு ஒப்பிடும் போது தமிழர்கள் மத்தியில் மென்போக்கோடு தான் இருந்தது வந்துள்ளது. சமீப காலமாக (குறிப்பாக 2009 மே க்குப் பின்) அது ஆழப்படுத்தப்படுவதும் ஆக்கிரோசப்படுத்தப்படுவதும்.. வேண்டும் என்றே நிகழ்த்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழர்கள்.. பெளத்த தமிழர்களாகவும்.. மற்றும் மதமாற்றங்களுக்கும் உள்ளாக்கப்படும் நிலையில்.. தீவக அதிகார சபை மூலம் தீவகம் கபளீகரம் செய்யப்பட்டால்.. அங்கு சிங்கள முஸ்லிம் பெருக்கத்திற்கு வகை செய்யும் வழியில் தான்.. இந்தப் பிரச்சனையில்.. யாழ் முஸ்லிம் இணையம் மூக்கை நுழைக்கிறதோ என்ற முக்கிய கேள்வி எழுகிறது.

ஏலவே சாட்டிப் பகுதியில்.. தமிழ் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாதபடி.. முஸ்லிம் மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில்... வேலணையும் குறிவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

நாமோ.. சாதியை நோண்டி.. கவனத்தை வேறு திசையில் கொண்டு சென்று எதிரிகளின் நோக்கம் இலகுவாக நிறைவேற உதவி நிற்கப் போகிறோம்.. என்று விடாப்பிடியோடு இருக்கிறோம். இதில்.. புத்திமான்பலவான் ஆக்களும்.. தங்களின் கெட்டினத்தனத்தைக் காட்டினம். 

எல்லாம் எம் இனத்தின் முன்னெச்சரிக்கையற்ற நடவடிக்கைகளின்.. தாக்கமும்.. எம்மவர்கள் சுயமாக சிந்திச்சு.. முன்னெச்சரிக்கை அடையக் கடாது என்ற நோக்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவோ தெரியாது...??!

யார் யார் என்ன வேலைத்திட்டங்களோடு இயங்கினமோ..??! உள்ளூரில்.. ஒரு சித்தார்த் சிங்களத்தால் களமிறக்கப்பட்டிருக்கிறான் என்றால்.. யாழில் எத்தனை சித்தார்த்துக்கள் பதுங்கியுள்ளனரோ.. யார் அறிவார்.  இதனையிட்டு.. மக்களை தான் விழிப்புணர்வு படுத்த வேண்டும். 

நன்றி நெடுக்கர்.....🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

தீவகத்தின் பல காணிகள் .வீடுகள் 1990 இடப்பெயர்வுக்குப் பின்  கேட்பாரற்று கிடக்கின்றன. ஒருசிலர் யாழ்நகரப்பகுதிக்குள் வீடுகளை வாங்கி பிள்ளைகளைப் படிப்பித்துக்கொண்டு விவசாயத்தை மட்டும் தங்கள் காணிகளுக்குப் போய் வருகின்றனர். பெரும்பாலான காணிகள் . வீடுகள் ஆளரவமற்று இருப்பதால் சிங்களவர்கள் அங்கே ஒரு விகாரையைக்கட்டி அங்கே வந்து குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்பவே திளைகாட்டியில் நயினாதீவு அழிக்கப்பட்டு நாகதீப என்று போட த் தொடங்கி விட்டார்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

அப்படிஎன்றால் கோவிலுக்கு தெற்குப்பக்கம் அல்லது கிழக்குப் பக்கம்.

மேற்குப்பக்கம் வயல்.

வடக்குப் பக்கமும் வீடுகள் இருக்கே! 🤔😁

7 minutes ago, புலவர் said:

தீவகத்தின் பல காணிகள் .வீடுகள் 1990 இடப்பெயர்வுக்குப் பின்  கேட்பாரற்று கிடக்கின்றன. ஒருசிலர் யாழ்நகரப்பகுதிக்குள் வீடுகளை வாங்கி பிள்ளைகளைப் படிப்பித்துக்கொண்டு விவசாயத்தை மட்டும் தங்கள் காணிகளுக்குப் போய் வருகின்றனர். பெரும்பாலான காணிகள் . வீடுகள் ஆளரவமற்று இருப்பதால் சிங்களவர்கள் அங்கே ஒரு விகாரையைக்கட்டி அங்கே வந்து குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்பவே திளைகாட்டியில் நயினாதீவு அழிக்கப்பட்டு நாகதீப என்று போட த் தொடங்கி விட்டார்கள்.

சுருவில் பக்கத்தில், யோகம்மா என்ற பெரும் பணக்கார அம்மா வீட்டில் வேலைக்கிருந்த மலையக தமிழர்கள், வேறு வீடுகளில் வேலைக்கிருந்தவர்களை கலியாணம் செய்து, அப்படியே வெறுமையாக உள்ள வீடுகளில் உரிமையாளர் அனுமதியுடன் குடியிருக்கின்றனர்.

அப்படி ஒரு பத்து குடும்பங்கள் உள்ளன.

மலையகத்தில் இருந்து வந்து குடியேறினாலும் நல்லது தான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

மேற்குப்பக்கம் வயல்.

வடக்குப் பக்கமும் வீடுகள் உருக்கே! 🤔😁

வடக்குப்பக்கமா? புளியமரத்தடி தான்டிப்போனால் யாழ் பண்ணை வீதி.  வடக்குப்பக்கம் சரவணை மேற்கு வேலணை என்று வராதே

  • கருத்துக்கள உறவுகள்

கதை @பாலபத்ர ஓணாண்டி சொன்ன திசையில் நகர தொடங்கி விட்டதாகவே படுகிறது

—————

யாழ் முஸ்லிம் இதை தீய நோக்கோடு காவுவது உண்மை என்றே வைத்தாலும்.

எமது உள் முரணை நாம் போத்து மூடுவதால் எமக்குத்தான் தீமை தொடரும்.

ஆங்கிலத்தில் சொல்வது போல் தகவலாளியை கொல்லாமல் (shooting the messenger) தகவலை ஆராய்வதே சிறப்பு.  

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

வடக்குப்பக்கமா? புளியமரத்தடி தான்டிப்போனால் யாழ் பண்ணை வீதி.  வடக்குப்பக்கம் சரவணை மேற்கு வேலணை என்று வராதே

ஓம், கோவில் இருப்பதே நாரந்தணை தான். இதுக்கு முன்னால போற ரோட் தான் போர்டர். அநேகமா, சங்கக்கடை பக்கமா இருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பிறகென்ன..ஒரே ஆக்கள்தான்…

சட்டு புட்டென்று குறிப்பை அனுப்புங்கோ🤣

நிக்கா செலவு என்னோடது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

பிறகென்ன..ஒரே ஆக்கள்தான்…

சட்டு புட்டென்று குறிப்பை அனுப்புங்கோ🤣

நிக்கா செலவு என்னோடது 🤣

நந்தர் பெற்றோல் கானோட வரப் போறார், கொழுத்த !!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஓம், கோவில் இருப்பதே நாரந்தணை தான். இதுக்கு முன்னால போற ரோட் தான் போர்டர். அநேகமா, சங்கக்கடை பக்கமா இருக்கும்! 

இன்னும் கேள்விகள் இருக்கே 2 சங்க்கடை இருக்கு. உன்று கோவிலுக்கு கிழக்கே மற்றது வடக்கே

3 minutes ago, goshan_che said:

பிறகென்ன..ஒரே ஆக்கள்தான்…

சட்டு புட்டென்று குறிப்பை அனுப்புங்கோ🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.