Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. 

நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குறைஞ்ச சாதிக்காறர் எந்த நிகழ்ச்சியும் செய்யுறேல்ல மியூசிக் இன்ஸ்ருமென்ற் கூட வாசிக்கேலா பைபிள் கூட மேடையில வாசிக்கேலா வரலாம் பிரேயர்ல பங்குபற்றலாம் வணங்கலாம் ஆனால் வேற எதிலும் பங்குபற்ற முடியாது.. பாதர் ஆக்கள் பேசுறவை ஏண்டா இப்பிடி செய்யிறீங்கள் இது சேர்ச் இங்க எல்லாரும் சமம் எண்டு எவ்வளவோ சொல்லியும் எங்கட ஊர் ஆக்கள் கேக்கேல்ல எண்டான்.. எனக்கு தலை சுத்திப்போச்சு.. முதன் முதலா என் வாழ்நாளில சேர்ச்சில சாதி பாக்குற கதை கேட்டு.. ஏற்கனவே தென்மராட்சி உசன் மிருசுவில் வறணி மற்றும் வடமராட்சியில் சில பகுதி ஆக்களையும் காட்டானுவள் எண்டுதான் நாங்கள் யாழில் கதைப்பது( இங்கு நல்லவர்களும் உண்டு அவர்கள் மன்னிக்க.. இது பெரும்பான்மைக்குரிய கருத்து) எவ்வளவு படிச்சாலும் பிற்போக்கு தனம் ஆனவர்கள் எண்டு யாழில பேசிக்கொள்வது உண்டு இந்த பக்கத்து ஆக்களை.. மிகப்பழைமை வலதுசாரிகள் இவர்கள்.. இப்படிப் பட்ட பல பிற்போக்குத்தனங்களை சுமந்து கொண்டு இன்னமும் நாகரிகமடையாத ஆனால் படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கும் பலரை இந்த ஊர்களுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம்.. இந்த சர்ச் ஏ9 றோட்டில் மிருசுவில்சந்தியில் உள்ளது.. இது உண்மையா பொய்யா என்று யாரும் விசாரிச்சு கொள்ளலாம்..

வருத்தப்பட்டு பாரஞ்சுமந்த பிதாவே.. இந்த சிறுவர்கள் தெரிந்தும் செய்யும் பாவச்செயல்களை மன்னியும் ஆண்டவரே..

large.A1E248ED-EFE9-469B-9AD3-3B44155161F7.jpeg.3105d86eda70427569ea1dd5a6850bdc.jpeg

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 "வரலாம் பிரேயர்ல பங்குபற்றலாம் வணங்கலாம் ஆனால் வேற எதிலும் பங்குபற்ற முடியாது.."

களைகளை பிடுங்க கூடாது மகா பாவம் 
தண்ணி ஊற்றி வளர்க்கணும் 

அப்பத்தான் ஜனநாயகம் வளரும் 
(குறித்த) சமூகம் வளரும் 

கடந்த 30 வருடமாக புலிகளின் அராஜகத்துக்கள் அகப்பட்டு துன்பத்தை அனுபவித்த மக்கள் 
2009இல் விடுதலை பெற்று சீரும் சிறப்புமா வாழ்கிறார்கள் 

ஜேசுவின் பெயரில் அன்பை பொழிகிறார்கள் 
படித்த அறிவாளிகள் மனித உரிமை நேயர்கள் வந்து 
ஏழைகள் என்று யாரும் இல்லாது பார்த்து மிகவும் மனிதத்துடனும் கருணையுடனும் 
பார்த்துக்கொள்கிறார்கள். 

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. 

நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குறைஞ்ச சாதிக்காறர் எந்த நிகழ்ச்சியும் செய்யுறேல்ல மியூசிக் இன்ஸ்ருமென்ற் கூட வாசிக்கேலா பைபிள் கூட மேடையில வாசிக்கேலா வரலாம் பிரேயர்ல பங்குபற்றலாம் வணங்கலாம் ஆனால் வேற எதிலும் பங்குபற்ற முடியாது.. பாதர் ஆக்கள் பேசுறவை ஏண்டா இப்பிடி செய்யிறீங்கள் இது சேர்ச் இங்க எல்லாரும் சமம் எண்டு எவ்வளவோ சொல்லியும் எங்கட ஊர் ஆக்கள் கேக்கேல்ல எண்டான்.. எனக்கு தலை சுத்திப்போச்சு.. முதன் முதலா என் வாழ்நாளில சேர்ச்சில சாதி பாக்குற கதை கேட்டு.. ஏற்கனவே தென்மராட்சி உசன் மிருசுவில் வறணி மற்றும் வடமராட்சியில் சில பகுதி ஆக்களையும் காட்டானுவள் எண்டுதான் நாங்கள் யாழில் கதைப்பது( இங்கு நல்லவர்களும் உண்டு அவர்கள் மன்னிக்க.. இது பெரும்பான்மைக்குரிய கருத்து) எவ்வளவு படிச்சாலும் பிற்போக்கு தனம் ஆனவர்கள் எண்டு யாழில பேசிக்கொள்வது உண்டு இந்த பக்கத்து ஆக்களை.. மிகப்பழைமை வலதுசாரிகள் இவர்கள்.. இப்படிப் பட்ட பல பிற்போக்குத்தனங்களை சுமந்து கொண்டு இன்னமும் நாகரிகமடையாத ஆனால் படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கும் பலரை இந்த ஊர்களுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம்.. இந்த சர்ச் ஏ9 றோட்டில் மிருசுவில்சந்தியில் உள்ளது.. இது உண்மையா பொய்யா என்று யாரும் விசாரிச்சு கொள்ளலாம்..

வருத்தப்பட்டு பாரஞ்சுமந்த பிதாவே.. இந்த சிறுவர்கள் தெரிந்தும் செய்யும் பாவச்செயல்களை மன்னியும் ஆண்டவரே..

large.A1E248ED-EFE9-469B-9AD3-3B44155161F7.jpeg.3105d86eda70427569ea1dd5a6850bdc.jpeg

Over to someone!!  🥺
 
வந்து உருட்டுவார் பாருங்கோ

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நீங்கள் சுண்டுக்குளி.. கொழும்புத்துறை பக்கம் போகவில்லைப் போல. அங்க அந்தோனியாருக்கு அந்தோனியார் சில்லெடுப்புத்தான். 

என்ன.. இவை எல்லாம் மூடிமறைச்சு.. தொடரப்படலாம்.

பாடசாலையின் உள்ளக அறிவிப்பு ஒன்று தான்.. மொத்த சமூகத்திற்கும் பிரச்சனை. அதனை திருத்தினால்.. பெரும் புரட்சி நிகழ்ந்து ஓரிரவில் எல்லாரும் திருந்திடுவாங்கள்.. என்பதற்காக நாம் பெரும் உருட்டு உருட்டி அல்லவா..  உழைக்கிறோம். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில என்ன உருட்டல் தேவை? இது உண்மை தான்.

அனேகமாக புற நகரப் பகுதிகளில் இருக்கும் கத்தோலிக்க ஆலயங்களில் இப்படியான பிற்போக்கான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் இப்படியே தான் இருப்பர். ஆனால், கத்தோலிக்க திருச்சபையோ அல்லது வேறெந்த கிறிஸ்தவ சபையோ "மனுஸ்மிரிதி" மாதிரி இதை விதியில் எழுதி வைத்திருக்கவில்லை😂. ஏதாவது செய்து இதை ஒழிக்கவே முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இதை விட இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது: பிரதேச/ஊர் வாதம். புனித யாகப்பர் ஆலயமும் புதுமை மாதா ஆலயமும் யாழ் பிரதான வீதியில் கால் மைல்கள் தொலைவில் இருக்கின்றன. ஆனால், இரண்டும் வெவ்வேறு குழுக்களுக்குரியவை (சாதி ஒன்று தான் என ஊகிக்கிறேன்). யாகப்பர் ஆலயம் குண்டு வீச்சினால் அழிந்த போது மட்டும், பூசைக்காக புதுமை மாதா கோவிலோடு சேர்ந்தார்கள். "இப்படியே ஒரு ஆலயமாக வைத்திருக்கலாம்" என்று ஆயர் இல்லம் கனவு கண்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டிலிருந்து பணம் இறைத்து யாகப்பர் ஆலயத்தை விடாப்பிடியாக நின்று மீளக் கட்டினார்கள்.

எனவே, ஆம். மக்களிடையே சாதி இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ சபைகளின் உத்தியோக பூர்வக் கொள்கை சாதி, பிரதேச, ஊர் வாதம் அல்ல!  

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, Justin said:

அப்ப என்னத்துக்கு, கிறிஸ்தவராயினும் பதவியை பெற்றுக்கொண்ட பின்னும், அவர் சாதியவாதத்துக்கு உள்ளானாரே என்று அழுது வடித்தீர்கள்?

சகல இடங்களிலும் இருக்குது என்ற நிதர்சனம் இருக்கும் போது, கிறிஸ்தவருக்கு எதிராக மட்டும் பிறர் சாதியம் பேசுகிறார்கள் என்பது தவறு என்றே அந்தத் திரியில் எனது நிலைப்பாடு.

தவறா?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே சிலர் ஒண்டும் விளங்காத மாதிரி நல்லா நடிக்கிறார்கள்🤣.

ஆனால் விளக்கம் ஓணாண்டி சொன்ன சம்பவத்தின் ஒரு வசனத்தில் இருக்கிறது.

4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதர் ஆக்கள் பேசுறவை ஏண்டா இப்பிடி செய்யிறீங்கள் இது சேர்ச் இங்க எல்லாரும் சமம் எண்டு எவ்வளவோ சொல்லியும் எங்கட ஊர் ஆக்கள் கேக்கேல்ல எண்டான்..

ஒருக்கால் வாசித்தால் விளங்க கூடிய எழியதமிழில்தான் ஓணாண்டியின் நண்பன் மகன் கூறியுள்ளான்.

25 minutes ago, Nathamuni said:

தவறா?

ஆம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிகு

யாழ்பாணத்து முஸ்லிம்களுக்கு இது புதிய செய்தியாக இருக்கலாம் 🤣.

இத்தனை காலம் யாழில் வாழ்ந்த தமிழராகிய ஓணாண்டிக்கும் இது புதினமாக இருப்பதுதான் ஆச்சரியம்.

வெள்ளாளர் அநேகம் அங்கிலிக்கன் மதத்தவராக இருக்க என்ன காரணம் என சிந்தித்து பார்த்தாலோ அல்லது கத்தோலிக்கரில் சில்லாலை, இளவாலை இடையில் காட்டப்படும் வேறுபாட்டை பார்த்தாலோ இது சட்டென புரியும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

25 minutes ago, goshan_che said:

எண்ட தாய்வழி அடி சில்லாலை😂 ஏலுமெண்டாடால் பண்ணிப்பாருங்கவன்😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்தில் கத்தோலிக்கரிடம்

சாதி இருக்கா?

ஜேர்மன் நாட்டில் கத்தோலிக்கரிடம் சாதி  இருக்கா? 

பிரான்ஸில்?  இத்தாலியில் ? ஸபெயினில்? போத்துக்கலில்? கனாடாவில்? 

இல்லையே! 

இவ்வாறாக எந்த நாட்டிலும் கத்தோலிக்கரிடம் இல்லாத சாதி ஏன் இந்தியா

இலங்கையில் வந்தது? 

காரணம் மனிதர்களிடையே பிறப்பால் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கிய, “வருணாசிரமம், மனுஸ்மிருமி”  போன்ற சனாதன சாக்கடைக்குள் பல நூற்றுகணக்கான வருடங்களாக உருண்டு பிரண்ட மக்கள் வேறுமதத்திற்கு மாறினாலும் அந்த சனாதன வியாதி மாறவில்லை. 

சாதி என்ற சாக்கடையின்  ஊற்று சனாதன  இந்து மதத்திலேயே இருக்கிறது. இணைந்து வாழும் ஏனைய மத மக்களைக் கூட பாதிக்கும் அளவுக்கு அது கொடிய வியாதி தான். 

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Nathamuni said:

Over to someone!!  🥺
வந்து உருட்டுவார் பாருங்கோ

இதே யாழ்களத்தில் சாதி சம்பந்தப்பட்ட பல திரிகளில் கிறிஸ்தவர்களும் சாதி பார்ப்பவர்கள் என நான் எழுதும் போது  பெரிய எதிர்ப்பெல்லாம் தெரிவித்தார்கள். கிறிஸ்தவ மதங்களில் சாதி பார்ப்பதில்லை என..... அதையும் மீறி நான் யதார்த்தமாக உண்மையாக எனது அனுபவங்களை சேர்த்து எழுதிய போது ஆதாரம் எந்த இடங்கள் என விசாரித்தார்கள். தமிழ் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என அறுதியாக எழுதி என்னை பொய்யனாக்கி விட்டார்கள். ஆனால் இன்று ஆம் பிற்போக்கான கிறிஸ்தவ சமூகங்களில் சாதி வேற்றுமை இருக்கின்றது என ஒற்றுமையாக ஒத்துக்கொண்டு வருகின்றார்கள். மகழ்ச்சிக்குரிய விடயம்.👍🏼

16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

முதன் முதலா என் வாழ்நாளில சேர்ச்சில சாதி பாக்குற கதை கேட்டு.. ஏற்கனவே தென்மராட்சி உசன் மிருசுவில் வறணி மற்றும் வடமராட்சியில் சில பகுதி ஆக்களையும் காட்டானுவள் எண்டுதான் நாங்கள் யாழில் கதைப்பது

இந்த பதிவிற்கு நன்றி ஓணாண்டியார்

அன்று மறுக்கப்பட்ட எனது யதார்த்தமான உண்மைக் கருத்துக்களுக்கு.... இன்று நீதியும் நியாயமும் கிடைத்துள்ளது. இதை விட  அப்பனான இன்னும் பல சம்பவங்கள் உள்ளன. அதை இங்கே எழுதினால் உப்புச்சப்பில்லாமல் திரியின் பக்கங்கள் கூடுமே தவிர உண்மைத்தன்மையை வெளிக்கொணர விடமாட்டார்கள்.

அன்று மறுப்புக்கருத்துக்களால் பாதிக்கப்பட்ட நான் இன்று ஒரு வித மன திருப்தியில் இருக்கின்றேன் என்றால் நீங்கள் பதித்த இந்தபதிப்புதான் காரணம்.
நன்றி...🙏 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, island said:

இங்கிலாந்தில் கத்தோலிக்கரிடம்

சாதி இருக்கா?

ஜேர்மன் நாட்டில் கத்தோலிக்கரிடம் சாதி  இருக்கா? 

பிரான்ஸில்?  இத்தாலியில் ? ஸபெயினில்? போத்துக்கலில்? கனாடாவில்? 

இல்லையே! 

இவ்வாறாக எந்த நாட்டிலும் கத்தோலிக்கரிடம் இல்லாத சாதி ஏன் இந்தியா

இலங்கையில் வந்தது? 

காரணம் மனிதர்களிடையே பிறப்பால் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கிய, “வருணாசிரமம், மனுஸ்மிருமி”  போன்ற சனாதன சாக்கடைக்குள் பல நூற்றுகணக்கான வருடங்களாக உருண்டு பிரண்ட மக்கள் வேறுமதத்திற்கு மாறினாலும் அந்த சனாதன வியாதி மாறவில்லை. 

சாதி என்ற சாக்கடையின்  ஊற்று சனாதன  இந்து மதத்திலேயே இருக்கிறது. இணைந்து வாழும் ஏனைய மத மக்களைக் கூட பாதிக்கும் அளவுக்கு அது கொடிய வியாதி தான். 

ஏன் வருணாச்சிரமம் மீது இன்றும் பழியை போடுகின்றீர்கள்? இலங்கையில் சீர்திருத்தம் செய்ய கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டு மாற்றங்கள் வந்தது அல்லவா? மாற்றம் விரும்பி கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் ஏன் சாதி மாற்றத்தை செய்யவில்லை? பட்டணத்தில் வாழும் ஒரு தமிழ்  கிறிஸ்தவர் ஏன் கிராமபுறங்களில் வாழும் சாதி குறைந்த கிறிஸ்தவர் சமூகத்தில் சம்பந்தம் வைப்பதில்லை?
முதலில் ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவரும் சாதி எனும் போர்வையில் இருந்து வெளியே வரட்டும். அதன் பின் .......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11 hours ago, island said:

இங்கிலாந்தில் கத்தோலிக்கரிடம்

சாதி இருக்கா?

ஜேர்மன் நாட்டில் கத்தோலிக்கரிடம் சாதி  இருக்கா? 

பிரான்ஸில்?  இத்தாலியில் ? ஸபெயினில்? போத்துக்கலில்? கனாடாவில்? 

இல்லையே! 

இவ்வாறாக எந்த நாட்டிலும் கத்தோலிக்கரிடம் இல்லாத சாதி ஏன் இந்தியா

இலங்கையில் வந்தது? 

காரணம் மனிதர்களிடையே பிறப்பால் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கிய, “வருணாசிரமம், மனுஸ்மிருமி”  போன்ற சனாதன சாக்கடைக்குள் பல நூற்றுகணக்கான வருடங்களாக உருண்டு பிரண்ட மக்கள் வேறுமதத்திற்கு மாறினாலும் அந்த சனாதன வியாதி மாறவில்லை. 

சாதி என்ற சாக்கடையின்  ஊற்று சனாதன  இந்து மதத்திலேயே இருக்கிறது. இணைந்து வாழும் ஏனைய மத மக்களைக் கூட பாதிக்கும் அளவுக்கு அது கொடிய வியாதி தான். 

விடுங்கோ ஐலண்ட் இது தெரியாமலா இருக்கிறார்கள்.

மற்ற திரியில் கூட அதிபர் பற்றி ஜஸ்டின் அண்ணா சொன்னது…

உண்மையில் அவரின் சாதிதான் பிரச்சனை, அதை சொல்ல தயங்கி மதத்தை முன்னிறுத்தினர்….

அவர் மனைவி இந்து, நானும் திருநீறு பூசுகிறேன் என சொன்னதும்…

அந்த மத முலாம் வெளித்துப்போக, வேறு வழியில்லாமல் போராட்டத்தை கைவிட்டனர் என்பதையே.

இதை புரிந்து கொள்ளாதது போல் நடித்துகொண்டு அதை திரிக்கு திரிகாவி கையிறு திரிப்பவர்கள் - நீங்கள் மேலே சொன்னதை மட்டும் இதயசுத்தியோடு ஏற்கவா போகிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, island said:

இங்கிலாந்தில் கத்தோலிக்கரிடம்

சாதி இருக்கா?

ஜேர்மன் நாட்டில் கத்தோலிக்கரிடம் சாதி  இருக்கா? 

பிரான்ஸில்?  இத்தாலியில் ? ஸபெயினில்? போத்துக்கலில்? கனாடாவில்? 

இல்லையே! 

இவ்வாறாக எந்த நாட்டிலும் கத்தோலிக்கரிடம் இல்லாத சாதி ஏன் இந்தியா

இலங்கையில் வந்தது? 

காரணம் மனிதர்களிடையே பிறப்பால் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கிய, “வருணாசிரமம், மனுஸ்மிருமி”  போன்ற சனாதன சாக்கடைக்குள் பல நூற்றுகணக்கான வருடங்களாக உருண்டு பிரண்ட மக்கள் வேறுமதத்திற்கு மாறினாலும் அந்த சனாதன வியாதி மாறவில்லை. 

சாதி என்ற சாக்கடையின்  ஊற்று சனாதன  இந்து மதத்திலேயே இருக்கிறது. இணைந்து வாழும் ஏனைய மத மக்களைக் கூட பாதிக்கும் அளவுக்கு அது கொடிய வியாதி தான். 

லண்டனில் வெள்ளை ஆங்கியேயர்களில் வர்க்க வேறுபாடு இல்லை என்று யார் சொன்னது ...அவர்களுக்குள் பல பிரிவுகள் உண்டு ...தற்போது கொஞ்சம் குறைவடைந்து வருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரதி said:

இங்கை தானே தாராமா இருந்ததே.

தொழில் ரீதியாக:

Dobbie

Taylor

Miller

Carter

Iron Smith

Gold Smith

Lock Smith

இங்கிலீஸ்காரனுக்கு ஸ்கொட்டிஸ் தாழ்ந்தவன். ஸ்காட்டிஸ்காரனுக்கு வேல்ஸ்காரன் தாழ்ந்தவன். மூவருக்கும் ஐரிஸ் தாழ்ந்தவன்.

இன்றும் கூட ரைம் பத்திரிகையில் பெரிய குடும்பங்களின் அவர்களுக்கிடையேயான திருமண அழைப்புக்கள் வருகின்றன.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

இதே யாழ்களத்தில் சாதி சம்பந்தப்பட்ட பல திரிகளில் கிறிஸ்தவர்களும் சாதி பார்ப்பவர்கள் என நான் எழுதும் போது  பெரிய எதிர்ப்பெல்லாம் தெரிவித்தார்கள். கிறிஸ்தவ மதங்களில் சாதி பார்ப்பதில்லை என..... அதையும் மீறி நான் யதார்த்தமாக உண்மையாக எனது அனுபவங்களை சேர்த்து எழுதிய போது ஆதாரம் எந்த இடங்கள் என விசாரித்தார்கள். தமிழ் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என அறுதியாக எழுதி என்னை பொய்யனாக்கி விட்டார்கள். ஆனால் இன்று ஆம் பிற்போக்கான கிறிஸ்தவ சமூகங்களில் சாதி வேற்றுமை இருக்கின்றது என ஒற்றுமையாக ஒத்துக்கொண்டு வருகின்றார்கள். மகழ்ச்சிக்குரிய விடயம்.👍🏼

இந்த பதிவிற்கு நன்றி ஓணாண்டியார்

அன்று மறுக்கப்பட்ட எனது யதார்த்தமான உண்மைக் கருத்துக்களுக்கு.... இன்று நீதியும் நியாயமும் கிடைத்துள்ளது. இதை விட  அப்பனான இன்னும் பல சம்பவங்கள் உள்ளன. அதை இங்கே எழுதினால் உப்புச்சப்பில்லாமல் திரியின் பக்கங்கள் கூடுமே தவிர உண்மைத்தன்மையை வெளிக்கொணர விடமாட்டார்கள்.

அன்று மறுப்புக்கருத்துக்களால் பாதிக்கப்பட்ட நான் இன்று ஒரு வித மன திருப்தியில் இருக்கின்றேன் என்றால் நீங்கள் பதித்த இந்தபதிப்புதான் காரணம்.
நன்றி...🙏 

உங்கள் புகை மூட்ட (foggy) நினைவைக் கொஞ்சம் தெளிவாக்க அனுமதியுங்கள்😎:

"சாதி குறைந்தோர் ஆலயத்திற்கு வெளியே தான் நிற்பார்கள், உள்ளே சென்று அமர முடியாது" என நீங்கள் சொன்ன போது, "எதை, எங்கே பார்த்து விட்டு எழுதுகிறீர்கள்?" என்று நான் கேட்டேன். ஏனெனில், எனக்குத் தெரிந்த வரை பல சிறிய கத்தோலிக்க ஆலயங்களில், பூசையின் போது ஆட்கள் வெளியே நிற்பது உண்மை, ஆனால் சாதிப் பாகுபாட்டினால் அல்ல! யார் வெளியே நிற்பார்கள்? பெரும்பாலும் ஆண்கள், பூசைக்குப் பிந்தி வந்தோர், உள்ளே இருக்கும் கொஞ்ச ஆசனங்களை எடுத்துக் கொள்ள விரும்பாத இளையோர். தற்போது ஆலயங்களில் ஒரு எரிச்சலூட்டும் புது நடைமுறை காலணியைக் கழட்டி விட்டு உள்ளே வாருங்கள் என்ற அறிவித்தல், எனவே காலணி கழட்டப் பஞ்சி பிடித்தோரும் வெளியே தான்.

இப்படி சாதி ரீதியில் ஒருவரை வெளியே நிறுத்தி வைக்க யாராவது ஆலயத்தில் காவல் நிற்பார்களா என்றால், இல்லை, அதற்கான வாய்ப்புகள் இல்லை. யாரும், எந்த அறிமுகமும் இல்லாமல் கத்தோலிக்க ஆலயங்களுள் நுழையலாம் - இது தான் ஈஸ்ரர் குண்டுதாரிகளுக்கும் வாய்ப்பாகப் போனது எனக் கண்டோம்!

எனவே, உங்கள் அந்தக் கருத்து என்னைப் பொறுத்த வரை இன்னும் நிரூபணமாகாத ஒரு தவறான தகவல் தான்.

மற்றபடி தமிழ்/சிங்கள கிறிஸ்தவர்களிடையே சாதி இருப்பதை யார், எப்போது மறுத்தார்கள்? பிரதானமான கிறிஸ்தவ சபைகள், திருச்சபை என்பவற்றில் சாதியை மனு நீதி போல  அல்லது நாவலரின் நெறிமுறை நூல்கள் போல நிறுவன மயப்படுத்தும் (codify) நடை முறை இல்லை என்பதே உண்மை. இதன் காரணமாகத் தான் இலங்கையில் கிறிஸ்தவ மிசனரிகள் வந்த போது தாழ்த்தப் பட்ட மக்கள் அவர்களுடைய பாடசாலைகளில் நுழைந்து கல்வி பெற முடிந்தது. ஊரில் அவர்கள் குறைந்த சாதியென்றாலும், படிப்பினால் அவர்கள் ஒரு தொழிலையாவது பெற்றுக் கொண்டு வாழ முடிந்தது. இதை உங்களால் மறுக்க முடியுமா? ஒரு கிறிஸ்தவ ஐரோப்பிய நாட்டில், இந்துக் காலனி ஆட்சி உருவானால், அங்கே வர்ணாசிரமம் சட்டமாக வந்திருக்கும். ஆசியாவில், இது மாறி நிகழ்ந்தது. இதை மறுக்க ஒரு காரணமும் இல்லையே? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரதி said:

லண்டனில் வெள்ளை ஆங்கியேயர்களில் வர்க்க வேறுபாடு இல்லை என்று யார் சொன்னது ...அவர்களுக்குள் பல பிரிவுகள் உண்டு ...தற்போது கொஞ்சம் குறைவடைந்து வருகிறது 

Working class, Middle class, upper class என்பது வர்க வேறுபாடு. பிறப்பால் அமைந்தது ஆனால் பிறப்பால் நிர்ணையிக்கப்படுவது அல்ல.

இந்த நாட்டில் working class குடும்பத்தில் பிறந்து social mobility மூலம் middle, upper classes ஆகிய பலர் உளர்.

அதே போல், எந்த கோவிலிலும் working class மணி அடியாதே போன்ற தடைகள் 100 வருடத்துக்கும் மேலாக இங்கே இல்லை.

இது உள்ளவன், இல்லாதவன் பிரச்சினை. இது உலகம் எங்கும் உண்டு.

ஆனால் சாதி அப்படி அல்ல. அம்பேத்கர் சொன்னது போல் அது ஒரு மேல் எழ முடியாத பரம்பரை சிறை.

27 minutes ago, Nathamuni said:

Dobbie

Taylor

Miller

Carter

Iron Smith

Gold Smith

Lock Smith

இவை தொழில்கள். அதன் காரணமாக வந்த குடும்ப பெயர்கள். 

இவையும் பிறப்பால் நிர்ணையிக்கப்படுவன அல்ல.

ஒரு கோல்ட் ஸ்மிதின் மகன், ஒரு லொக் ஸ்மித்தாகலாம். அதை வர்ணாசிரமம் போல் எதுவும் தடுக்கவில்லை.

இதை வேணும் எண்டால், வர்ணாசிரம சாதி புக முன்னர் தமிழரிடம் இருந்த குடி முறையோடு ஒப்பிடலாம் (இது இப்போ அழிந்து சாதியால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது). 

31 minutes ago, Nathamuni said:

இங்கிலீஸ்காரனுக்கு ஸ்கொட்டிஸ் தாழ்ந்தவன். ஸ்காட்டிஸ்காரனுக்கு வேல்ஸ்காரன் தாழ்ந்தவன். மூவருக்கும் ஐரிஸ் தாழ்ந்தவன்.

இது தேசிய இனங்கள் இடையான மனோநிலை. தமிழன், மலையாளி, தெலுங்கன், சிங்களவன் ஆளையாள் நாம்தாம் பெரிது என சொல்லுவது போல.

இதையும் சாதியோடு ஒப்பிட முடியாது.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Justin said:

இப்படி சாதி ரீதியில் ஒருவரை வெளியே நிறுத்தி வைக்க யாராவது ஆலயத்தில் காவல் நிற்பார்களா என்றால், இல்லை, அதற்கான வாய்ப்புகள் இல்லை. யாரும், எந்த அறிமுகமும் இல்லாமல் கத்தோலிக்க ஆலயங்களுள் நுழையலாம் - இது தான் ஈஸ்ரர் குண்டுதாரிகளுக்கும் வாய்ப்பாகப் போனது எனக் கண்டோம்!

ஈஸ்ரர் குண்டுதாரிகளுக்கு மட்டும் இல்லை, நான் உட்பட யாழில் கருத்து எழுதும் பல சைவத்தமிழ் உறவுகள் கூட, திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல், அந்தோணியார் கோவிலில் போய் ஒரு மெழுகுதிரியை ஏற்றவும் இதுவே வழி சமைத்து கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

அன்று மறுப்புக்கருத்துக்களால் பாதிக்கப்பட்ட நான் இன்று ஒரு வித மன திருப்தியில் இருக்கின்றேன் என்றால் நீங்கள் பதித்த இந்தபதிப்புதான் காரணம்.
நன்றி...🙏 

நீங்கள் ஒருவகை victim mentality எனப்படும் “நான் பாதிக்கப்பட்டவன்” என்ற மனநிலையில் உழல்வதாக தெரிகிறது.

நான் அறிந்தவரையில் யாழில், தமிழ் கிறிஸ்தவர் சாதி பார்ப்பதில்லை என யாரும் எழுதவில்லை.

இந்து வர்ணாசிரம நியமங்கள் போல அன்றி, கிறிஸ்தவ நியமங்கள் சாதிக்கு ஒரு வகிபாகத்கை கொடுக்கவில்லை என்றே எழுதப்பட்டது, படுகிறது.

ஓணாண்டியின் நண்பனின் மகன் சொன்னதும் அதையே.

பிகு

தமிழ் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என யாரும் எழுதிய ஆதாரங்கள் இருப்பின் பதியவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

பிகு

தமிழ் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என யாரும் எழுதிய ஆதாரங்கள் இருப்பின் பதியவும்.

காரணகர்த்தா  தான் எழுதியதை அரை குறையாக ஏற்றுக்கொண்டு விட்டார். அன்று நான் சாதீயம் பற்றி எழுதிய கருத்துக்களில் எழுத்துக்கள் மாறுபட்டிருந்தாலும் சொல்ல வந்த சாரம்சம் ஒன்று தான்.

நீங்களும் ஜஷ்ரினும் ஒன்றை கவனிக்க வேண்டும் நான் யாழ்களத்திற்கு வருவது கருத்து எழுதுவதற்காக மட்டுமே. 

வழக்காடுவதற்காக அல்ல 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அப்ப ஆதாரம் இல்லை.

சரி சந்திப்பம் அண்ணை.

பிகு

நான் யாழ்களம் வருவது வழக்காட இல்லை. ஆனால் - உண்மை என்று ஒண்டு உளது. அதற்கு புறம்பாக எழுதினால் கேள்வி கேட்பது தவிர்க்கவியலாதது.

இங்கே உண்மையானது:

யாழில் தமிழ்கிறிஸ்தவர்கள் சாதியே பார்ப்பதில்லை என எவரும் எப்போதும் எழுதியதில்லை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

அப்ப ஆதாரம் இல்லை.

சரி சந்திப்பம் அண்ணை.

பிகு

நான் யாழ்களம் வருவது வழக்காட இல்லை. ஆனால் - உண்மை என்று ஒண்டு உளது. அதற்கு புறம்பாக எழுதினால் கேள்வி கேட்பது தவிர்க்கவியலாதது.

இங்கே உண்மையானது:

யாழில் தமிழ்கிறிஸ்தவர்கள் சாதியே பார்ப்பதில்லை என எவரும் எப்போதும் எழுதியதில்லை. 

நீங்கள் யாழ்களத்தில் தொடர்ந்திருந்தால் ஆதாரம் தேவைப்பட்டிருக்காது. நகத்தில் சிறு கீறல் ஏற்பட்டால் கூட யாழ்களத்திலிருந்து விலகியிருப்பவர். அல்லது வேறு பெயரில் வந்து போபவர் என நினைக்கின்றேன்.
என்னுடன் அந்த சம்பவம் தொடர்பாக கருத்தாடல் செய்த ஜஷ்ரின் கூட பதில் தந்து விட்டார். இதற்கு பின்னரும் ஆதாரம் கேட்கின்றீர்கள். நானும் ஜஷ்ரினும் பிரச்சனையை தீர்த்துக்கொள்கின்றோம். நீங்கள் விலகியிருங்கள்.சட்டத்தரணி வேலை வேண்டாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, குமாரசாமி said:

🤣. நான் ஜஸ்ரினுக்காக கேட்கவில்லை. 

நானும் சைவ, கிறிஸ்தவ மதங்கள் அவற்றில் சாதியின் ஆதிக்கம் பற்றி எல்லாம் எழுதியுள்ளேன்.

ஆகவே எனக்காகவும்தான் கேட்டேன்.

சரி விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

நீங்கள் யாழ்களத்தில் தொடர்ந்திருந்தால் ஆதாரம் தேவைப்பட்டிருக்காது. நகத்தில் சிறு கீறல் ஏற்பட்டால் கூட யாழ்களத்திலிருந்து விலகியிருப்பவர். அல்லது வேறு பெயரில் வந்து போபவர் என நினைக்கின்றேன்.
என்னுடன் அந்த சம்பவம் தொடர்பாக கருத்தாடல் செய்த ஜஷ்ரின் கூட பதில் தந்து விட்டார். இதற்கு பின்னரும் ஆதாரம் கேட்கின்றீர்கள். நானும் ஜஷ்ரினும் பிரச்சனையை தீர்த்துக்கொள்கின்றோம். நீங்கள் விலகியிருங்கள்.சட்டத்தரணி வேலை வேண்டாம்.

தீர்க்க இங்கே ஒரு பாரிய  பிரச்சினையொன்றும் இல்லை. மேலே நான் சுட்டியிருப்பது போல உங்களுக்கு விளங்கியதை நானோ, வேறெவருமோ இங்கே எழுதவில்லை அல்லது நான் எழுதியது உங்களுக்கு விளங்கியிருக்கவில்லை.

இது சாதாரணமாக யாழில் அடிக்கடி நடப்பது தான், இதற்காக யாரும் யாரையும் கழுவிலேற்றப் போவதில்லை.

இதில் கோசானைத் தனிப்படத் தாக்க ஏன் அவசியம் ஏற்பட்டதெனத் தெரியவில்லை.

பகிரப் படும், நினைவுகூரப்படும் தகவல்கள் கருத்துக்கள் உண்மையானவையாக இருக்க வேண்டுமென்ற அக்கறை எல்லோருக்கும் இருக்க வேண்டும், உங்களுக்கும் இருக்க வேண்டும். இல்லா விட்டால், கருத்தாளர்கள் சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாக திரி திரியாகக் காவித் திரியும் அக்கப்போர் களமாக கருத்துக் களம் இருக்கும்😂!

எனவே, நலமோடிருங்கள், ஏதும் கேள்வி இருந்தால் கேளுங்கள்! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Justin said:

ஈழத்து கிறிஸ்தர்களிடையே சாதி வேகுபாடு இல்லையென்று நீங்கள் எழுதியது உண்மை. இதற்கு மேல் இந்த திரியில் எனக்கு வேலையில்லை.  நேரம் பொன்னானது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.