Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

 

இஸ்ரேல் ஆதரவுக் கணக்குகள் இது ஹமாஸ் ஏவிய ராக்கெட் அங்கேயே வெடித்ததால் நிகழ்ந்தது என்கிறன.

இலங்கை அரசுவிட்ட  அறிக்கை போல் உள்ளது, காற்று பலமாக வீசியதால் யாழ் வைத்தியசாலையில் ஏறி கணைகள் விழுந்துவிட்டவென

  • Replies 1.5k
  • Views 157.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Full official record: What the mufti said to Hitler | The Times of Israel

அரேபியர்களும் நாஷி கொள்கையுடையவர்களா?

undefined

  • கருத்துக்கள உறவுகள்

‘Stunned and sickened.’ Wexner Foundation cuts ties with Harvard over ‘tiptoeing’ on Hamas

Leslie Wexner, right, and his wife Abigail
Leslie Wexner, right, and his wife Abigail

Jay LaPrete/AP/FILE

New YorkCNN — 

A nonprofit founded by former Victoria’s Secret billionaire Leslie Wexner and his wife Abigail is breaking off ties with Harvard University, alleging the school has been “tiptoeing” over Hamas’ terror attacks against Israel.

The Wexner Foundation’s decision to end its relationship and financial support for Harvard is the latest fallout amid criticism from donors who were alarmed by the university’s initial response to the attacks and to an anti-Israel statement issued by student groups.

The end of Wexner’s support comes as college campuses across the United States are in turmoil over responses from students, professors and administrations to Hamas’ attack on Israel and the ensuing war. Big donors have pulled money from a number of high-profile universities. Students have protested and some have been publicly shamed for their views. A handful of faculty have been lambasted by students and administrations for sharing controversial views. And university leaders are clinging onto diminishing support as some fight for survival.

முன்னாள் விக்டோரியாவின் சீக்ரெட் கோடீஸ்வரர் லெஸ்லி வெக்ஸ்னர் மற்றும் அவரது மனைவி அபிகெய்ல் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் உறவுகளை முறித்துக் கொள்கிறது, இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பள்ளி "குறிப்பாக" உள்ளது என்று குற்றம் சாட்டுகிறது.

வெக்ஸ்னர் அறக்கட்டளையின் உறவு மற்றும் ஹார்வர்டுக்கான நிதி உதவியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு, தாக்குதல்களுக்கு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப பதில் மற்றும் மாணவர் குழுக்களால் வெளியிடப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான அறிக்கையால் பீதியடைந்த நன்கொடையாளர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் சமீபத்திய வீழ்ச்சியாகும்.

ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் போருக்கு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகங்களின் பதில்களால் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி வளாகங்கள் கொந்தளிப்பில் இருப்பதால் வெக்ஸ்னரின் ஆதரவின் முடிவு வந்துள்ளது. பெரிய நன்கொடையாளர்கள் பல உயர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மற்றும் சிலர் தங்கள் கருத்துகளுக்காக பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர். சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களாலும் நிர்வாகங்களாலும் சாடப்பட்டுள்ளனர். மற்றும் சிலர் பிழைப்புக்காக போராடுவதால், பல்கலைக் கழகத் தலைவர்கள் ஆதரவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்

https://www.cnn.com/2023/10/16/business/wexner-harvard-hamas-israel-antisemitism/index.html

அமெரிக்காவில் பல இடங்களில் இரண்டாகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

 கண்டிப்பாக இல்லை ...அவர்கள் அரசியல் மதம்” இரண்டையும் கலக்கமால்.  வாழ்வது எல்லோருக்கும் நல்லது என்பது எனது கருத்துகள்     

அவனை முதலில் நிற்பாட்ட சொல்லுங்கள் 
நானும் நிற்பாடுகிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்

காஸா வைத்தியசாலை மீது குண்டுத்தாக்குதல் நடத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றது யாரென்பதில் இஸ்ரேலும், ஹமாஸும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேல் பாலஸ்த்தீனப் பகுதி மீது நடத்தும் அகோரமான வான்வழித் தாக்குதலின் ஒரு அங்கமே இது என்று ஹமாஸும், பாலஸ்த்தீன அதிகார அமைப்பும், பாலஸ்த்தீன உதவியாளர்களும் கூறுகின்றனர். இதனை ஆமோதிப்பது போலவே இஸ்ரேலும், "அந்த வைத்தியசாலையினை விட்டு வெளியேறுமாறு 5 மணித்தியாலத்திற்கு முன்னரே அறிவித்து விட்டோம்" என்று கூறியது. அதாவது, "சொல்லிவிட்டுத்தானே அடித்தோம்" எனும் தொனி. ஆனால் இப்போது அது மாறிவிட்டது. ஹமாஸ் ஏவிய ரொக்கெட் ஒன்றே பாதிவழியில் வெடித்து வைத்தியசாலை மீது வீழ்ந்ததாக கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்கிறது இஸ்ரேல். அமெரிக்காவும், "அப்படியா, சொல்லவேயில்லை" என்கிற ரேஞ்சில் இஸ்ரேலின் கதையினை அப்படியே அவிழ்த்து விட்டிருக்கிறது.

பாலஸ்த்தீனர்களை கொல்ல ஒரு கணமேனும் சிந்திக்காது கொன்றுவிடும் இஸ்ரேல் இதனைச் செய்திருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. 

இதில் உள்ள கொடுமை என்னவென்றால், 10  நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் படுகொலை செய்த 1400 இஸ்ரேலியர்கள் பற்றி இப்போது எவரும் பேசுவதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. அழிக்கப்பட்ட பாலஸ்த்தீனர்களின் எண்ணிக்கையில் அது அப்படியே புதைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பிணவறைகளாக மாறும் ஐஸ்கிரீம் வண்டிகள்!

பிணவறைகளாக மாறும் ஐஸ்கிரீம் வண்டிகள்!

பாலஸ்தீனத்தில் போரினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஐஸ்கிரீம் வண்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே  இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலினால் இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும், இதனால் அங்குள்ள வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிக்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பியுள்ளதால் ஐஸ்கிரீம் வண்டிகளை தாம்  பிணவறைகளாக மாற்றி வருவதாகவும்  வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ice-900-600x402.jpg

https://athavannews.com/2023/1354554

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of the Western Wall and text

May be an image of blimp

 

May be an image of text

 

May be an image of 1 person, smoking and cigarette

 

May be an image of tea and text

 

May be a doodle of fire and text

 

May be an illustration of hospital and text

 

May be pop art of skydiving and text that says 'Oh,for Oh, the wings of a dove... @'

 

May be an image of bird

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனின் அரபு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து

ஹமாஸ் அமைப்பு தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (17) காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை (18) இஸ்ரேல் சென்று ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார்.

இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அரபு-தலைவர்கள்-உடனான-சந்திப்பு-ரத்து/50-326307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது - காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர்

Published By: RAJEEBAN

18 OCT, 2023 | 11:02 AM
image

கார்டியன்

காசா மருத்துவமனையில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்து சம்பவம் போன்ற ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

gaza_hos_35.jpg

2007 இல் ஹமாஸ் அமைப்பினர் காசா பள்ளத்தாக்கை கைப்பற்றிய பின்னர் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரே நாளில் மிக அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக இது விளங்குகின்றது.

gaza_ho36.jpg

ஹமாசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காசா சுகாதார அமைச்சு 500பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பப்டிஸ்ட் மருத்துவமனை  என அழைக்கப்படும் அல் அஹ்லி அல் அராபியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானதாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக ஹமாஸ் இஸ்ரேலிற்கு இடையிலான 11 நாள் யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த இரத்தக்களறி இடம்பெற்றுள்ளது.

இது மத்திய கிழக்கில் வன்முறைகளை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

gaza_ho_37.jpg

ஆரம்பகட்ட விசாரணைகள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன என முதலில் தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் பின்னர் இஸ்லாமிய ஜிகாத்தின் ரொக்கட்தவறுதலாக வெடித்ததால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

எனினும் அழிவின் அளவு அந்த அமைப்பின் ரொக்கட் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது  என கருதமுடியாத அளவிற்கு காணப்படுகின்றது.

அல்ஜசீரா வெளியிட்டுள்ள வீடியோக்கள் மருத்துவமனையின் பல மாடிக்கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதை காண்பித்துள்ளன. உடல்கள் பெருமளவு இரத்தம் பெருமளவு இடிபாடுகளை காணமுடிகின்றது.

அங்கிலிகன் தேவாலயத்திற்கு சொந்தமான அந்த மருத்துவமனை முன்கூட்டிய எச்சரிக்கை இன்றியே தாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமையும் இந்த மருத்துவமனை தாக்கப்பட்டது.

gaza_ho37.jpg

இந்த மருத்துமனை காலை 7.30 மணிக்கு தாக்கப்பட்டுள்ளது அவ்வேளை இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவானவர்கள் அங்கு காணப்பட்டனர். மேலும் இஸ்ரேல் தங்கள் குடியிருப்புகள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மருத்துவமனை பாதுகாப்பான இடம் என கருதி அங்கு தஞ்சமடைந்த பல பொதுமக்களும் காணப்பட்டனர்.

நாங்கள் மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம், பாரிய சத்தம்  கேட்டது கூரை இடிந்து சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த அறையின் மீது விழத்தொடங்கியது, இது படுகொலை என வைத்தியர் ஹசன் அபு சிட்டா தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை  நோயாளிகள்சுகாதார பணியாளர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்கள்  மீதான  இந்த அதிர்ச்சி தரும் தாக்குதலை எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது எனகுறிப்பிட்டுள்ள அவர் மருத்துவமனை ஒரு இலக்கல்ல இந்த இரத்தக்களறி நிறுத்தப்படவேண்டும் போதும் போதும் என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 300க்கும் அதிகமானவர்கள் அம்புலன்ஸ் மற்றும் காரில் காசாவின் பிரதான வைத்தியசாலையான அல்ஸிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஏனைய காயங்களால் காயமடைந்த பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர்.

காயமடைந்த மக்கள் தரையில் காணப்படுகின்றனர் வலியில் கதறுகின்றனர்.

நாங்கள் ஐந்து கட்டில்களை ஒரு அறைக்குள் புகுத்துவதற்கு முயல்கின்றோம் எங்களிற்கு சாதனங்கள் கட்டில்கள் மருந்துகள் வேண்டும் எங்களிற்கு எல்லாம் வேண்டும் என அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சியாட் செகாடா தெரிவித்துள்ளார்.

gaza_ho_38.jpg

அடுத்த சில மணிநேரங்களில் காசாவின் மருத்துவபிரிவு செயல் இழக்கும் என கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதால் இந்த தாக்குதல் மிக மோசமான விடயம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடி பாதுகாப்பான இடம் என தாங்கள் கருதிய இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் - மருத்துவனையில் சர்வதேச சட்டங்களின் கீழ் அது பாதுகாப்பான இடம் எனவும் அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் ஐ.நா. நிவாரண முகாம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - தங்கிருந்த 4 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

17 அக்டோபர் 2023

காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையானது அகதிகள் முகாமாக பயன்படுத்திய பள்ளி மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது. அல்-மகாஸி என்ற இடத்தில் இருந்த அந்த பள்ளியில் 4 ஆயிரம் பாலத்தீனர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தததாக ஐ.நா. கூறியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண முகமை தெரிவித்துள்ளது.

"இது மூர்க்கத்தனமானது. இது பொதுமக்களின் உயிர் மீதான அப்பட்டமான அலட்சியத்தை காட்டுகிறது. காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையின் இடம் உள்பட எந்தவொரு இடமும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதை இது உணர்த்துகிறது." என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c25qe780xleo

இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது.

அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-

இஸ்ரேல் விமான தாக்குதல்களில் 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.

காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயற்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/277433

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

இலங்கை அரசுவிட்ட  அறிக்கை போல் உள்ளது, காற்று பலமாக வீசியதால் யாழ் வைத்தியசாலையில் ஏறி கணைகள் விழுந்துவிட்டவென

இருக்கலாம். என்ன பொய்யையும் சொல்ல கூடிய ஆட்கள்தான் இஸ்ரேல்.

முன்பும் பலதடவைகள் அப்பாவிகளை இலக்கு வைத்து விட்டு, பின்னர் மறுத்து பின் ஆதாரத்தோடு சமர்பித்ததும் வேறு வழியின்றி ஒத்து கொண்டுள்ளனர்.

 

1 hour ago, கிருபன் said:

ஜோ பைடனின் அரபு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து

இந்த சந்திப்பை ஈரானும் விரும்பவில்லை, இஸ்ரேலும் விரும்பவில்லை.

ஆஸ்பத்திரி தாக்குதல் இரு தரப்பும் விரும்பிய முடிவை கொடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

டெல் அவிவ் வந்தார் பைடன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஆஸ்பத்திரியை தாமே தாக்கி விட்டு, இஸ்ரேல் மீது பழியை போட கூடியவர்கள்தான் ஹமாஸ்.

தாக்கப்பட்ட ஆஸ்பத்திரி கிறிஸ்தவர்களின் ஆஸ்பத்திரி என அறிய கிடைக்கிறது (ஹிண்ட் - ஈஸ்டர் தாக்குதல்).

ஹமாஸ்  தனது எதிரியை  இழிவுபடுத்துவதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 

பற்றி எரியும் லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்பத்திரி தாக்குதலுக்குள்ளான பார்க்கிங் பகுதியின் பகல் நேரக் காட்சி.

பார்க்கிங் இடத்தில் இவ்வளவு சேதம் மட்டுமே வந்த குண்டு வெடிப்பில் 500 பேர் இறந்திருப்பர்களா?

இதை கேட்பதால், மனித நேயம் அற்றவன், இஸ்ரேலின் பிரசாரகன் என என்ன வேணும் எண்டாலும் சொல்லுங்கள். ஆனால் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஒன்றை நம்புவது சரியாக தெரியவில்லை.

 

 

 

 

———

இதற்கு காரணம் இஸ்லாமிக் ஜிஹாதின் ராக்கெட்டே என இரு ஹாமாஸ் போராளிகள் பேசி கொள்வதன் ஒட்டு கேட்பு என இஸ்ரேல் ஒரு வீடியோவை. வெளியிட்டுள்ளது. உருவாக்கியதாயும் இருக்கலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்தான் தாக்கியது என காட்டும் ஆதாரம் இதுவாம் என்கிறது இந்த கணக்கு.

இவரின் கருத்து படி முதலில் ஜிகாத்தின் ராக்கெட் ஏவ படுகிறது. பின் இஸ்ரேலிய விமானத்தின் ஒளி தென்படுகிறது. பின் (விமானத்தில் இருந்து வீசப்பட்ட) குண்டு வெடிக்கிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

பாலஸ்தீ *****  எங்கு தனது பல்குழல் உந்துகணைகளை வைத்து ஏவுகின்றது என்பதை நோக்கவும்.

 

 

Edited by நிழலி
ஒட்டு மொத்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று சொல்வதை முற்றாக தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு சபையில் காசா தொடர்பான முக்கிய தீர்மானம் -அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

18 OCT, 2023 | 08:14 PM
image
 

இஸ்ரேலிற்கும் காசாவிற்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான இடைநிறுத்தங்களை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/167215

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பாதுகாப்பு சபையில் காசா தொடர்பான முக்கிய தீர்மானம் -அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

18 OCT, 2023 | 08:14 PM
image
 

இஸ்ரேலிற்கும் காசாவிற்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான இடைநிறுத்தங்களை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/167215

ரஸ்யா, யூகே வாக்களிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய ஹேக்கர்கள், டெஹ்ரானின் மின்சார வலையயமைப்பை செயலிழக்க செய்துள்ளனராம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

 

  • கருத்துக்கள உறவுகள்+

 

  • கருத்துக்கள உறவுகள்

அமரிக்க பாராளுமன்ற கட்டிடத்துள் புகுந்த பலஸ்தீன ஆதரவாளர்கள்.

 

 

 

துனிசியாவில் எரிக்கப்பட்ட யூத கோவில் (சினகோக்). 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினில் தாக்கப்பட்டு கொண்டிருக்கும் சினொகொக்.

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.