Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, goshan_che said:

இரெண்டாம் உலக யுத்ததின் முன்னும், அதன் போதும்…..கால்நடைகளை விட மோசமாக ஒட்டு மொத்த யூத இனமே நடத்தப்பட்டது.

ஹிட்லரால் மட்டும் அல்ல.

தன்னை நோக்கி படை எடுக்காமல் விட்டால் - யூதரை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையை ஸ்டாலின் எடுத்தார். கிட்லருடன் உடன்படிக்கை செய்தார்.

யூதரை பற்றி எதுவும் சொல்லாமல், செக்கொஸ்லோவியாவின் Sudetenland ஐயும் எடுத்துக்கொள், ஆனால் அடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் பிடியாதே என கிட்லரோடு ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனின் சேம்பர்லின்.

பேர்ல்காபர் தாக்கப்படும் வரை - யூதர் கொலைகள் அமெரிக்காவை போரில் இறக்கவில்லை.

இப்படியா மில்லியன் கணக்கான யூதர்களின் சாவு, இழப்பு, வன்கொடுமைகள் போரின் சகல தரப்பாலும் கிள்ளுகீரையாகவே நடத்தப்பட்டது.

ஆனால் இன்று?

ஒரு யூத தாயின் கோரிக்கை பிரஞ்சு தொலைகாட்சியில் ஒரு மணி நேரம் போகிறது. ஜனாதிபதி விரைந்து பதில் கொடுக்கிறார்.

பாடம் புரிகிறதா?

அதே...

அடுத்த அடுத்த கட்டங்களுக்கு எமது அடுத்த தலைமுறையை நகர்த்தியே ஆகணும். 

அதைவிடுத்து வீதியில் நின்று அல்லது ஐநா வில் நின்று கத்தி எந்த பிரயோசனமும் இல்லை😭

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Thanks 1
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, விசுகு said:

அதே...

அடுத்த அடுத்த கட்டங்களுக்கு எமது அடுத்த தலைமுறையை நகர்த்தியே ஆகணும். 

அதைவிடுத்து வீதியில் நின்று அல்லது ஐநா வில் நின்று கத்தி எந்த பிரயோசனமும் இல்லை😭

கத்தியிராவிட்டால் அப்படி ஒன்று நடக்கவில்லை என்றே ஆக்கி இருப்பார்கள்.

ஒரு காலத்தில்  கத்தியதன் பலன் கிடைக்கும். நீங்களும் நானும் இருப்போமா தெரியாது. 

  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2023 at 09:37, goshan_che said:

உண்மையில் இந்த வெள்ளை பொஸ்பரஸ் விடயத்தில் யாழ்கள கருத்தாளர் சிலரின் இரெட்டை வேடம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஒரு சாதாரண கருத்துக்களத்தில் கூட காஸாவில் நடந்தால் ரத்தம் உக்ரேனுக்கு வந்தால் தக்காளி சோஸ் என இரெட்டை நாக்கால் எழுதும் ஆட்களுக்கு - உலக நாடுகள் இரெட்டை வேடம் போடுகிறன என எழுத எந்த அருகதையும் இல்லை.

இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?

  • Like 2
  • Thanks 2
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரதி said:

இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?

ஒரு கள உறவின் நிலைப்பாட்டை அவரிடமே நேரடியாக கேட்பதுதான் சரி. எனவே @நன்னிச் சோழன் ஐ tag பண்ணியுள்ளேன்.

என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்:

இரு வேறுபட்ட மனித இழப்புகளில், தமது நிலைப்பாடு, விருப்பு வெறுப்பு  கருதி மாறுபட்ட நிலையை எடுக்கும் அனைவருக்கும் நான் எழுதியது பொருந்தும். நன்னிக்கும்.

அதேபோல் நேரம் கிடைக்கும் போது மட்டும் தமிழன் கேட்ட கேள்விக்கு எழுதிய பதிலிலேயே கூறி விட்டேன். காஸா விடயத்தில் நன்னிக்குக் எனக்கும் பாரிய அணுகுமுறை வேறுபாடு உண்டு.

நான் எனக்காக மட்டும்தான் எழுத முடியும்.

எனது நிலைப்பாடு:

1. தமிழ், யூத, பலஸ்தீன அரபி, உக்ரேன் தேசிய இனங்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் சுய நிர்ணயத்தோடு வாழ வேண்டும் (உக்ரேனின் ரஸ்ய மொழி பிராந்தியத்தில், ரஸ்ய படைகள், உக்ரேன் படைகளை நீக்கி, ஒரு ஐநா பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளேன்). 

2. எந்த உயரிய அரசியல் நோக்குக்காகவும் பொதுமக்கள் வேண்டும் என்றே இலக்கு வைக்கப்படுவதை எதிர்க்கிறேன். 

இதற்கு மாறாக நான் எழுதி இருந்தால் - வாங்கோ மேலும் கதைக்கலாம்.

பிகு

நீங்கள் கேள்வி கேட்டபோது நன்னியை மட்டும் அல்ல, திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன் கடந்த முறை எலக்சன் கேட்ட போது நீங்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இதே யாழில் எழுதி நான் முரண்பட்டதையும் நினைத்து கொண்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

ஒரு கள உறவின் நிலைப்பாட்டை அவரிடமே நேரடியாக கேட்பதுதான் சரி. எனவே @நன்னிச் சோழன் ஐ tag பண்ணியுள்ளேன்.

என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்:

இரு வேறுபட்ட மனித இழப்புகளில், தமது நிலைப்பாடு, விருப்பு வெறுப்பு  கருதி மாறுபட்ட நிலையை எடுக்கும் அனைவருக்கும் நான் எழுதியது பொருந்தும். நன்னிக்கும்.

அதேபோல் நேரம் கிடைக்கும் போது மட்டும் தமிழன் கேட்ட கேள்விக்கு எழுதிய பதிலிலேயே கூறி விட்டேன். காஸா விடயத்தில் நன்னிக்குக் எனக்கும் பாரிய அணுகுமுறை வேறுபாடு உண்டு.

நான் எனக்காக மட்டும்தான் எழுத முடியும்.

எனது நிலைப்பாடு:

1. தமிழ், யூத, பலஸ்தீன அரபி, உக்ரேன் தேசிய இனங்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் சுய நிர்ணயத்தோடு வாழ வேண்டும் (உக்ரேனின் ரஸ்ய மொழி பிராந்தியத்தில், ரஸ்ய படைகள், உக்ரேன் படைகளை நீக்கி, ஒரு ஐநா பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளேன்). 

2. எந்த உயரிய அரசியல் நோக்குக்காகவும் பொதுமக்கள் வேண்டும் என்றே இலக்கு வைக்கப்படுவதை எதிர்க்கிறேன். 

இதற்கு மாறாக நான் எழுதி இருந்தால் - வாங்கோ மேலும் கதைக்கலாம்.

அதையே தான் நானும் சொல்கிறேன் ...எந்த வித அடிப்படையில் அவர் அங்கு இருந்திருப்பார், அவர் அப்படிப்பட்ட ஆள் என்று அவரை தெரிந்த மாதிரி அவருக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்கள் ...அப்படி எழுதின படியால் தான் அதை இந்த திரியிலேயே பல இடங்களில் காண  கூடியதாய் இருந்த படியால் தான்  நானும் உங்களை கேட்க வேண்டி வந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, ரதி said:

உங்களுக்கு விளக்க குறைபாடு என்றால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

1. நான் எங்கும் நன்னி அப்படி எழுதியது சரி என்று எழுதவில்லை.

2. அவர் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டவர் என அவரே எழுதியுள்ளதாக எனக்கு நியாபகம் என்றே எழுதினேன். 

இதை எழுதியது கூட, இந்த திரியில் அவர் எழுதியது சரி என சொல்ல அல்ல, மாறாக ஏதோ நாம் யுத்த அனுபவம் இல்லாதோர் ஆகவே இழப்பின் வலி தெரியாதோர் என நி.க எழுதினார். ஆகவேதான் அப்படி இல்லை என்பதை சுட்ட அதை எழுதினேன்.

3. போரின் இழப்பை அதிகம் அனுபவித்தவர் என்பதால் அதற்கு ஏதோ ஒரு வகையில் பங்களித்தார்கள் என அவர் கருதும் முஸ்லிம்கள் மீது அவர் கோவத்தில் எழுதி இருக்கலாம் என எழுதினேன். இதுவும் அவரின் நிலைப்பாட்டுக்கு வக்காலத்து இல்லை. மாறாக அவர் ஏன் அப்படி எழுதினார் என்பதை நான் விளங்கி கொண்ட முறை.

ஒருவர் இன்ன காரணத்துக்காக இன்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்ற என் கருத்தை எழுதுவது, அந்த நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன் என்றோ, அல்லது அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்ததை நான் நியாயப்படுத்துகிறேன் என்றோ ஆகாது.

இங்கே நன்னி ஏன் கடுமையாக இலக்கு வைக்கப்படுகிறார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

யார் அவரை இலக்கு வைக்கிறார்கள் என்பதையும் நான் கண்டு கொள்கிறேன்.

நான் மட்டும் அல்ல, வாசிப்பவர்களும் இதை காண்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காய்கும் மரம்தான் கல்லடி படும் என்பார்கள். நன்னி சிலருக்கு உவப்பிலாதா பழ தோட்டங்களையே உருவாக்கி வைத்துள்ளார்.

கடுப்பாகுமா இல்லையா🤣.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

நன்றாய்  தோசையை திருப்பி ,திருப்பி சுடுங்கோ...அது உங்களுக்கு கை  வந்த கலை அல்லவா ...நானும் நீங்கள் அவரது கருத்துக்கு ஆதரவு என்று எழுதவில்லை ...அவருக்கு ஆதரவு என்றே எழுதினேன்.  

சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாம் ஆனால் முஸ்லீம்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்த மட்டுவில் இருந்து வந்தவள் ..அவர்கள் செய்த அட்டுழியங்களை கண்டு வளர்ந்தவள் ...அப்படியிருந்தும் கூட அப்பாவி மக்கள் இறக்க கூடாது என்று நினைக்கிறேன் ..ஆனால் அவர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

நன்றாய்  தோசையை திருப்பி ,திருப்பி சுடுங்கோ...அது உங்களுக்கு கை  வந்த கலை அல்லவா ...நானும் நீங்கள் அவரது கருத்துக்கு ஆதரவு என்று எழுதவில்லை ...அவருக்கு ஆதரவு என்றே எழுதினேன்.  

நான் அவருக்கு ஆதரவு, இவருக்கு ஆதரவு கொடுக்க இங்கே என்ன குழு மோதலா நடக்கிறது?

நன்னியின் இஸ்ரேல் என்ற தேசம் பற்றிய  நிலைப்பாடே என் நிலைப்பாடும் - ஆகவே இங்கே அவர் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

அவரின் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் செய்யும் அட்டூளியங்கள் பற்றிய  நிலைப்பாட்டுடன் எனக்கு உடன்பாடில்லை ஆகவே அதை ஆதரித்து எழுதவில்லை.

ஆதரவு கருத்து நிலைகளுக்கே ஒழிய கருத்தாளருக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரதி said:

சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாம் ஆனால் முஸ்லீம்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்த மட்டுவில் இருந்து வந்தவள் ..அவர்கள் செய்த அட்டுழியங்களை கண்டு வளர்ந்தவள் ...அப்படியிருந்தும் கூட அப்பாவி மக்கள் இறக்க கூடாது என்று நினைக்கிறேன் ..ஆனால் அவர்?

இதுவும் அவருக்கான கேள்வி. ஆனால் என் வியாக்கியானம் கீழே.

நீங்கள் மட்டும் அல்ல, நானும் கிழக்கின் அட்டூழியங்களை நேரில் கண்டவந்தான். மட்டகளப்பு நகரில் இருந்து அல்ல, அதை விட அவலங்கள் நடந்த இன்னும் தெற்கான பட்டினம் ஒன்றில் இருந்து.

ஆனால் முஸ்லிம்களோடு, வளங்களை விகிதாசார படி பகிர்ந்து, அவர்களுக்கு அவர்கள் பகுதிகளை இணைத்து ஒரு நிர்வாக தொடர்பற்ற அலகை கொடுத்து, இதன் மூலம் அவர்களை எம் கோரிக்கைக்கு இணங்க செய்ய வேண்டும், இதுவே நீண்ட கால நோக்கில், அருகருகே வாழும் இரு குழுக்கள் நிம்மதியாக வாழ உகந்த வழி என்பது என் நிலைப்பாடு.

பாருங்களேன் - ஒரே முஸ்லிம்கள், நம்மிருவருக்கும் கிட்டதட்ட ஒரே அனுபவம் - ஆனால் அணுகுமுறைகள் எப்படி வேறு படுகிறன.

இப்படி ஒவ்வொருவரினதும் அணுகுமுறை வேறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, goshan_che said:

உங்களுக்கு விளக்க குறைபாடு என்றால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

1. நான் எங்கும் நன்னி அப்படி எழுதியது சரி என்று எழுதவில்லை.

2. அவர் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டவர் என அவரே எழுதியுள்ளதாக எனக்கு நியாபகம் என்றே எழுதினேன். 

இதை எழுதியது கூட, இந்த திரியில் அவர் எழுதியது சரி என சொல்ல அல்ல, மாறாக ஏதோ நாம் யுத்த அனுபவம் இல்லாதோர் ஆகவே இழப்பின் வலி தெரியாதோர் என நி.க எழுதினார். ஆகவேதான் அப்படி இல்லை என்பதை சுட்ட அதை எழுதினேன்.

3. போரின் இழப்பை அதிகம் அனுபவித்தவர் என்பதால் அதற்கு ஏதோ ஒரு வகையில் பங்களித்தார்கள் என அவர் கருதும் முஸ்லிம்கள் மீது அவர் கோவத்தில் எழுதி இருக்கலாம் என எழுதினேன். இதுவும் அவரின் நிலைப்பாட்டுக்கு வக்காலத்து இல்லை. மாறாக அவர் ஏன் அப்படி எழுதினார் என்பதை நான் விளங்கி கொண்ட முறை.

ஒருவர் இன்ன காரணத்துக்காக இன்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்ற என் கருத்தை எழுதுவது, அந்த நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன் என்றோ, அல்லது அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்ததை நான் நியாயப்படுத்துகிறேன் என்றோ ஆகாது.

இங்கே நன்னி ஏன் கடுமையாக இலக்கு வைக்கப்படுகிறார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

யார் அவரை இலக்கு வைக்கிறார்கள் என்பதையும் நான் கண்டு கொள்கிறேன்.

நான் மட்டும் அல்ல, வாசிப்பவர்களும் இதை காண்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காய்கும் மரம்தான் கல்லடி படும் என்பார்கள். நன்னி சிலருக்கு உவப்பிலாதா பழ தோட்டங்களையே உருவாக்கி வைத்துள்ளார்.

கடுப்பாகுமா இல்லையா🤣.

நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கி எடிட் பண்ணி எழுதினதை இப்ப தான் பார்த்தேன் .ஜயோ முடியலைடா சாமி ...நீங்கள் எழுதினது உங்களுக்கே ஓவராய் தெரியல்ல ...அவர் என்ன காரணத்திற்காய் தான் யூதர்களுக்கு ஆதரவு என்று எழுதி போட்டு ஒதுங்கி இருந்தார் என்றால் அவரை இந்தளவிற்கு போட்டு தாக்கி இருக்க மாட்டார்கள்..இந்த திரியில் சிலர் வெளிப்படையாகவே தாங்கள் யூதர்களுக்கு ஆதரவு என்று சொன்னார்கள் ஆனால் ஒருத்தர் கூட நன்னியளவிற்கு பலஸ்தீன மக்களது படுகொலையில் அல்லது இறப்பில் சந்தோசம் கொள்ளவில்லை ...அவரது கருத்துக்கள் ஓவராய் போனதால் தான் நான் முதலில் வந்து அவரை நிறுத்த சொன்னேன் .
உங்களுக்கு எ.போ.தமிழன் , நி.க போன்றோரில் கடுப்பு அதற்காய் நன்னி விட்ட பிழைகள் உங்கள் கண்ணை மறைக்குது ...இதற்கு மேல் இந்த திரியில் இவரை பற்றி எழுத ஒன்றுமேயில்லை ...இவர் இந்த திரியில் வந்து எழுதி தன்  மேல் உள்ள மரியாதையை தானே கெடுத்து கொண்டார் .தன்  சுயரூபத்தையும் காட்டி விட்டார் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கி எடிட் பண்ணி எழுதினதை இப்ப தான் பார்த்தேன் .ஜயோ முடியலைடா சாமி ...நீங்கள் எழுதினது உங்களுக்கே ஓவராய் தெரியல்ல ... 

என்னது நான் எடிட் பண்ணினேனா? நல்ல ஜோக்.

இந்த திரியில் நான் எழுதிய அநேகம் திரிகள் எடிட் பண்ணு பட்டிருக்கும். 

இந்த திரியில் மட்டும் அல்ல. அநேக திரிகளில் என் பதிவுகள் எடிட் பண்ணுபட்டிருக்கும்.

ஏன் என நினைக்கிறீர்கள்? நான் எழுதி விட்டு, பின் வாசித்து முக்கியம் என கருதுவதை எடிட் பண்ணி bold அடிப்பேன்.

இதை கூட விளங்காமல் சின்ன பிள்ளை போல் எடிட் பண்ணிட்டாய், நுள்ளி போட்டாய் எண்டு கொண்டு…

அத்தோட எடிட் மட்டும் அல்ல, எப்போவுக்கும் எனக்குமாமன பலதை நிர்வாகம் இந்த திரியில் தூக்கியது. சிலதை தாமே வெட்டி கொத்தி எடிட் பண்ணியும் உள்ளது.

என்ன அவசரமோ வெட்டி கொத்திய நிர்வாக புண்ணியவான், வழமையா போடும் வெட்டல் அறிவிப்பையும் போடாமல் போயுள்ளார்.

இப்படி கன விசயம் நடந்த பின் - சாவகாசமாக வந்து - என்னை பிடிச்சி சிப்பிலி ஆட்டுறியள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ரதி said:

உங்களுக்கு எ.போ.தமிழன் , நி.க போன்றோரில் கடுப்பு அதற்காய்

என்ன ஜோக்கா?

கிரிகெட் போட்டி திறந்தா தெரியும், நானும் @Eppothum Thamizhanஎப்படி பட்ட தோஸ்து எண்டு. 

உக்ரேன், இஸ்ரேல் விடயத்தில் கருத்து முரண். ஆனால் வேறு பலதில் அவருடன் கருத்தொற்றுமையுடனும் எழுதியுள்ளேன்.

இதென்ன இவ்வளவு சின்ன புள்ளைத்தனமாக யோசிக்கிறீங்க.

அதே போலத்தான் @நியாயத்தை கதைப்போம். உடனும். அண்மையில் கூட அந்த 55+18 திரியில் நானும் நி.க வும் மட்டும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம்.

உண்மையில் ஒரே சூழலில், சிந்தனை புலத்தில் இருந்து வரும் இங்கே எழுதும் பலரின் கருத்தை விட அவரின் கருத்துக்கு ஒரு vale added கனம் இருப்பதாக கருதுகிறேன்.

மறுபடியும். ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக்கே ஒழிய கருத்தாளருக்கு இல்லை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இங்கே நன்னி ஏன் கடுமையாக இலக்கு வைக்கப்படுகிறார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

யார் அவரை இலக்கு வைக்கிறார்கள் என்பதையும் நான் கண்டு கொள்கிறேன்.

நான் மட்டும் அல்ல, வாசிப்பவர்களும் இதை காண்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காய்கும் மரம்தான் கல்லடி படும் என்பார்கள். நன்னி சிலருக்கு உவப்பிலாதா பழ தோட்டங்களையே உருவாக்கி வைத்துள்ளார்.

கடுப்பாகுமா இல்லையா🤣.

எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. :) 🙂

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Sabesh said:

எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. :) 🙂

அவர் உருவாக்கிய பல ஆவணக்காப்பு திரிகளிலும், நல்ல திரிகளிலும் நீங்கள் அவற்றை வரவேற்று ஒரு பதில் தானும் எழுதியதை நான் கண்டில்லை. தவறை மட்டும் தான் கண்டு பிடிப்பீர்களோ ஐயா?

இது தான் ஈனத்தமிழ் குணம்.

சிங்களவர் தம் இனத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரை எக்காலத்திலும் குறை சொல்லார், ஆனால் தமிழர்கள் தம் இனத்திற்கு மினக்கெடும் ஒருவர் ஒரு தவறு விட்டால், ஓடோடி வந்து அதை சொல்லி சொல்லியே அவரை முடக்கி விடுவர்.

இப்படியே நடத்துங்கோ

இந்த அவசர யுகத்தில் தம் பெறுமதியான மணித்துளிகளை லாபம் எதுவுமில்லாமல் செலவழிப்பவர்களையும் முடக்குங்கோ. 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Sabesh said:

எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. :) 🙂

உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது.

பேசாமல் திரியின் தலைப்பை “இஸ்ரேல் கமாஸ் மோதலில் நன்னியின் வகிபாகம்” என மாற்றிவிடுமாறு கோரலாம் என நினைக்கிறேன்🤣.

நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது.

எனக்கு அவர் மேல் இருந்த/இருக்கும் விம்பம் ஒன்றேதான்.

இந்த தளத்திலேயே இளையவர், எமது போராட்டத்தின் வரலாற்றை மிகுந்த சிரத்தை எடுத்து, தன்னளவில் நேர்மையாக தொகுக்கிறார். 2009 இன் பின் “நீ என்ன செய்தாய்” என ஆளை ஆள் கேட்டு வாயால் வடை சுட்டு கொண்டிருந்த நம் மத்தியில் இந்த தளத்தை உருப்படியான வகையில் பயன்படுத்தியுள்ளார். இன்னும் 50 வருடத்தில் வந்து பார்த்தால் இங்கே அவர் பதிவுகள் மட்டுமே பிரயோசனமானவையாக இருக்கும்.

இது மட்டுமே நான் நன்னியின் மீது வைத்திருக்கும் விம்பம். இது அப்படியேதான் இருக்கிறது.

இதை தவிர அவர் நல்லவர், வல்லவர், முஸ்லிம்களை வெறுக்கமாட்டார், சிகெரட், தண்ணி அடிக்கமாட்டார், ஜல்சா படம் பார்க்கமட்டார், பீடா போட மாட்டார் ….இப்படி எந்த விம்பமும் அவர் மேல் எனக்கு இருந்ததில்லை. இனியும் இராது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • @Sabesh @ரதி & மற்றாக்காள் (என் மீது வெறுப்புள்ளோர்)

---------------------------------------------------

நான் எங்கு மாட்டுவேன் என்று காத்திருந்த கண்மணிகளின் தீனிக்காக,🤪

ஓம், நான் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்தனன். மே 15, பின்னேரம் 6:00 மணிக்கு தமிழீழத்தின் கடைசி எல்லைக்கோடை கடந்தனான் (அந்தக் கடைசி இடத்தை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன், காணொளி காட்சியாக). நான் எனது ஆவணங்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தனான் என்பதை எழுதியுள்ளேன். ஆண்டொருமுறை யாழ் களம் வருவோர் வாசிக்காது என் பிழை அன்று🥴. யாழ் களத்தில் நான் நேரில் சந்தித்த எறிகணை வீச்சொன்று தொடர்பாக ஒரு சிறு குறிப்பொன்று எழுதினேன் (கருணாநிதி தொ. திரியில்), ஆனால் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன்.

அடுத்து,

இதுவோ கருத்துக்களம். நானோ பெயரோ முகவரியோ அற்ற ஒருத்தன். எனவே, குறிப்பிட்ட ஒன்றையோ ஒன்றிற்குத்தானோ ஆதரித்து எழுதவேண்டும் என்றில்லை. கள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரவர் விருப்பப்படி எழுதலாம். மனித மனம் வேறுபட்டது, அதே போலத்தான் சிந்தனைகளும். கருத்துக்களத்தில் உயர்ந்ததான (அப்படித்தான் நான் கடைப்பிடிக்கிறேன்) விதிமுறை தான் இங்கு ஆள்கிறது, மனித மதிப்பு இல்லை. 

என் மீது யாரேனும் மதிப்போ, மரியாதையோ வைத்திருந்தால், அதை இப்போதே தூக்கியெறிந்துவிடுங்கள். நான் எக்காலதிலும் எவரிடமேனும் மதிப்பையோ நற்பெயரையோ வேண்டுவதற்காக எழுதியதோ எழுதப்போவதோ கிடையாது. என்றென்றும் என் மனம் போனபடியே போவேன் (ஒரேயொரு தடவை குழப்பத்தால் சறுக்கினும் பொதுமக்களின் ஆலோசனைக்காமைவாக சீர்தூக்கி சரிசெய்தேன் என்பதையும் விதப்பாக குறிப்பிட விரும்புகிறேன்). 

எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்வேன். பிழையெனில் கள விதிகளுக்குட்பட மட்டுறுத்தினர்கள் வெட்டியெறிந்து- விடலாம், விடுவார்கள். எந்தவொரு கருத்தையும் ஏன் வெட்டினீர்கள் என்று இதுவரை கேள்வி கேட்டதில்லை, கேட்கப்போவதுமில்லை (ஏனெனில் நான் பெரும்பாலும் கருத்துக்கள் எழுதுவது குறைவு)

எனக்குச் செய்யத் தெரியாத சிலவற்றை, சில கள உறவுகளிடமோ இல்லை நிர்வாகத்திடமோ ஆலோசனை கேட்டு அதன்படி செய்வதுண்டு. 

நான், இங்கே முஸ்லிம்களை எதிர்க்க என்ன காரணம் என்பதை இந்தத் திரியில் பலமுறை எழுதிவிட்டேன். சில கள உறவுகள் வாசிக்கவில்லை/ வாசித்தாலும் வீம்புக்காக இல்லையென்கிறார்கள் போலும். இருப்பினம் அச்சில பேருக்காக மீளத் தெளிவாக எழுதுகிறேன்:

  • 1985 - 1990களில் என் இனத்தை கொன்று குவித்து அதை ஆடிப்பாடி மகிழ்வோடு கொண்டாடினார்கள். அதை இன்று திருப்பிச் செய்கிறேன். 

  • நான் இஸ்ரேல் செய்வது, மக்கள் கொலை தவறென்று ஐந்தாம் பக்கம் @புலவர் எழுதிய அத்தனையையும் ஒத்துக்கொண்டேன். அவர் அதில் எழுதிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்துப்போனேன். ஆனால், "சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்...." 🤣 என்றேன். இந்தக் குறிப்பிட்ட சில கண்மணிகளுக்கு கண்ணில்லையென்றால் நான் பாடில்லை. மீண்டும் என் எழுத்தில் தெரிவிக்கிறேன், இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்வது தவறுதான். நன்கு அறிவேன். ஆனால், சோனாக்கள் எங்களுக்கு நடந்ததைக் கொண்டாடினாங்கள், ஆகையால் அவங்களுக்கு நடப்பதைக் கொண்டாடுகிறேன். இஸ்ரேலின் உளவு அமைப்பு எமக்குச் செய்தவற்றையும் நான் எழுதியுள்ளேன்.

  • அவர்களுக்கு மதமே முக்கியம், இனமன்று. ஆகையால் அந்த மூலநாடிக்கு அனைத்து வழிவகையிலும் அடிக்கிறேன். புண்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்கிறேன்.😁😁 வேண்டுமென்றுதான் செய்கிறேன்.

  • மற்றது, கமாஸும் உந்த மு***களும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். மதத்திற்காக எதையும் செய்வார்கள். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் சாவை வெளிநாடுகளில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். நான் வாழும் நாட்டில் இறந்த இஸ்ரேலியர்களின் சடலங்களை ஊடகங்களுக்குக் காட்டி குதூகலிக்கிறார்கள். இதை மாந்தநேயம் என்றால், நீங்கள் அறிவிலிகள், உணர்வற்றவர்கள்.
  • இம்முறை, வேசுபுக்கிலும் துவிட்டரிலும் நான் கண்ட சில கருத்துக்களும், பதிவுகளும் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. அவற்றில் - சோனாவோடு சேர்ந்த சிங்களவன், வாச்சான் பிழைச்சான் என்று புலியைத் கீழ்த்தனமாக எழுதி பாலஸ்தீனப் பயங்கரவாதத்தை தூக்கினான். அதற்கு சோனாக்கள் இனியில்லையென்ற ஆதரவை நல்கினாங்கள். பாலஸ்தீன ஆயுதாரிக் குழுக்களை "விடுதலை வீரர்கள்" என்பாங்கள், அண்ணாக்களை "பயங்கரவாதிகள்" என்பாங்கள். தங்களுக்கு வந்தால் அரத்தமாம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாம்... ஆகையால் நான் அவங்களுக்கு பகரடி கொடுக்கிறேன், அதே பாணியில். 
  • என்னினத்தை கொன்று குவித்ததை ஒரு நாளும் அவங்கள் ஏற்றதுமில்லை (இந்தத் திரியே மிகச் சிறந்த சாட்சி. புத்திசாலிக்கு எதைச்சொல்கிறேன் என்பது விளங்கும்), மன்னிப்புக் கேட்டதுமில்லை. அதனால் நான் அவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன், கிடைக்கும் வாய்ப்புகளிலும், நானே உண்டாக்கியும்!
  • பாலஸ்தீனம், ஒரு காலமும், எனது தேடல் அறிவிற்கிட்டியவரை, எமக்காக ஒரு குரல் கொடுத்ததில்லை, போர்க்காலத்தில். (ஆருமே எமக்கும்தான் கொடுத்ததில்லை, அதற்காக நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்ற பழையை கம்பைச் சுற்ற வேண்டாம்)

இன்னும் சொல்லவேண்டுமென்றால் எங்களுக்கு செய்ததற்கு இவங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நான் எதிர்ப்பன். 

Edited by நன்னிச் சோழன்
தகவல் சரி செய்தேன்
  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அமெரிக்கா எனும் உலகப் பயங்கரவாத நாடு... ஈராக்.. சிரியா.. ஆப்கானிஸ்தான்.. வியட்நாம் என்று எல்லா போர்முனைகளிலும் ஒரு தலைப்பட்சமாக வெள்ளைப் பொஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்துள்ளது. இதனை மனித உரிமை அமைப்புக்கள் சான்று படுத்தியும் உள்ளன.

அதேபோல்.. டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்றொழிக்க.. வெள்ளை பொஸ்பரஸை பாவித்திருக்கிறது. இப்போ.. ரஷ்சிய மொழி பேசும் மக்களின் விடுதலைக்காக போராடி வரும் ரஷ்சிய படைகள் மீதான எதிர்தாக்குதலின் போது உக்ரைன் வெள்ளை பொஸ்பரஸ் உட்பட அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் வழங்கிய கொத்தணிக் குண்டுகள்.. ஆபத்தான கதிரியக்கக் குண்டுகளை எல்லாம் வீசி வருகிறது. அதற்கு ரஷ்சியா தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறது. ஆக உக்ரைன் போர் முனையில்.. ரஷ்சியா மட்டுமல்ல.. உக்ரைனும்.. அமெரிக்கா மேற்குலக  நாடுகள் வழங்குகின்ற உக்ரைன் அரச பயங்கரவாதத்திற்கு சார்பாக..பேரழிவு.. தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சப்பிளை செய்து பயன்படுத்தி வருகின்றன.

ஆனால்.. இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சனையில் அது அல்ல விடயம். பலஸ்தீனம் சார்ந்து எந்தப் பேரழிவு மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை.

இஸ்ரேல்.. பலஸ்தீனம் மீது ஒருதலைப் பட்சமாகவும் மக்கள் செறிந்து வாழும் இடங்களாகவும் பார்த்து அப்பாவி மக்களை இயன்ற அளவு படுகொலை செய்யும் நோக்கோடு வெள்ளை பொஸ்பரஸ் உட்பட பல வகை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வருவதோடு.. இஸ்ரேல்.. சகட்டு மேனிக்கு.. லெபனான்.. சிரியா.. மேற்குக் கரை.. ஜோடான் என்று அயலில் உள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதோடு.. அதன் பிராந்திய அரச பயங்கரவாதத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கேட்டுக் கேள்விக்கு உட்படுத்தவிடாமல்.. ஆதரித்து.. ஆயுதங்கள்.. நிதி உதவிகள் வழங்கி ஊக்குவித்தும் வருகின்றன.

ஆக மொத்தத்தில்.. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தங்களின் சுயநல ஆதாயத்திற்காக.. இஸ்ரேலின்.. உக்ரைனின் அரச பயங்கரவாதங்களை தமது இஸ்டத்துக்கு பயன்படுத்தி வருவதோடு.. மிக மோசமான மனித இனப்படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றன.

இஸ்ரேல் மீது பலஸ்தீன  காசா மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. இஸ்ரேல் - கமாஸ் மோதலில் இஸ்ரேல் நடந்து கொண்ட மிக மோசமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவே கமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்று கமாஸ் கூறியிருப்பதோடு.. அது ஒரு பழிவாங்கல் தாக்குதல் என்றும் கூறி இருக்கிறது. இந்த நிலையில்.. காசா பலஸ்தீன அப்பாவிகளைக் குறிப்பாக 450 குழந்தைகள் உட்பட 1500 பேரை 4000 தொன் குண்டுகளை கொட்டிக் கொன்ற இஸ்ரேலின் செயல்.. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இஸ்ரேலில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா கமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவும் 1500 கமாஸ் உடலங்களை தாம் அவதானித்திருப்பதாகவும் கூறிவிட்ட பின்னும்.. தாக்குதலாளிகள் தண்டிக்கப்பட்ட பின்னும் காசா மீது குண்டு வீசி 450 குழந்தைகள் உட்பட 1500 அப்பாவி மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்குள்ளேயே குண்டு வீசி அழிப்பதன் இஸ்ரேலின்.. அமெரிக்காவின்.. மேற்குலகின் நோக்கம் என்ன.. இன அழிப்பும்.. இஸ்ரேலின் அரச இராணுவ பயங்கரவாதத்தை தமக்கான மத்திய கிழக்கிற்கான.. முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளுதலுமே. 

இந்த சேட்டையை டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் நடப்பு அரச பயங்கரவாதிகளை பயன்படுத்தி செய்ய வெளிக்கிட்டு... ரஷ்சியாவை நேட்டோ விரிவாக்கம் மூலம் அச்சுறுத்த விளைந்ததன் விளைவே.. அதாவது அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாத யுத்தமே.. ரஷ்சிய - உக்ரைன் மோதலாக உருவாகியுள்ளது.

ஆக மொத்தத்தில்.. அமெரிக்க... ஜனநாயகக் கட்சியின் மனித இனத்துக்கு எதிரான.. கொடும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைமைத்துவ.. கொள்கை வகுப்புக் கொடியவர்களின் செயலால் தான் இத்தனை பேரழிவுகளும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்..

பல வகையான உருட்டல்களை உருட்டிக்கொண்டு திரிகிறார்கள் இங்கு. அது அவர்களின் மனச்சாட்சிக்கே விரோதம் என்பதும் அவர்களுக்கு தெரியும். இருந்தும்.. விசமத்தனத்துக்காக அதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு இதனை தெளிவு படுத்தவே.. இப்பதிவு இடப்படுகிறது.

Edited by nedukkalapoovan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ISIS இன் மீது சராசரியாக ஒரு மாதத்தில் வீசிய குண்டுகளை காட்டிலும் அதிக குண்டுகள் ஏலவே ஆறு நாட்களில் காஸா மீது போடப்பட்டுள்ளதாம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஹமாசின் பிரச்சார வீடியோவாம்.

இதில் எப்படி வெளிநாட்டு நிதி உதவியில் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாய்களை புடுங்கி அதில் இருந்து ஹமாஸ் ராக்கெட் செய்தது என்பது விபரிக்கப்படுகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட காஸா மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!

வட காஸாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது.
 
http://www.samakalam.com/வட-காஸா-மக்களை-உடனடியாக-வ/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் இன்னுமொரு போர்முனையில் மோதல்கள் வெடிக்கலாம் - ஈரான்

Published By: RAJEEBAN

13 OCT, 2023 | 06:22 AM
image
 
காசாமீதான இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சு தொடர்ந்தால் வேறு போர்முனைகள் திறக்கப்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் வேறு போர்முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் ஈரான் வெளிவிவகார அமைச்சுh ஹ_சைன் அப்டொலாகியன் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்புல்லா குழு குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டிற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காசாமீதான தொடரும் வன்முறைகள் யுத்தகுற்றங்கள் மற்றும் முற்றுகை காரணமாக இன்னொரு போர்முனை திறக்கப்படுவது யதார்த்தமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166741

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா மக்கள் இடம்பெயரவேண்டும் என்ற உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் - ஐநா

13 OCT, 2023 | 10:27 AM
image
 
காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி இடம்பெயரவேண்டும்  என விடுத்துள்ள உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே பெரும் துன்பகரமானதாக காணப்படுகின்ற சூழ்நிலை பெரும் பேரழிவு நிலையாக மாறாலாம் என்பதால் இந்த உத்தரவை இஸ்ரேல் இரத்துச் செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகளின் அதிகாரிகள் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை இன்று ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/166747

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரானிய வெளிவிவகார அமைச்சர் லெபனானில் வைத்து ஹிஸ்புலாவை சந்தித்தார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.