Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
4 minutes ago, Justin said:

இது போன்ற கணக்குகளில் சொல்லப் படும் கருத்துக்களை கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ மனைக் கட்டிடம் மீது நேராக எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்பது உண்மை, ஆனால் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால், கட்டிடத்தின் ஒவ்வொரு ஜன்னலும் உடைந்து சன்னம் பறந்திருக்கிறது.

மருத்துவமனை பாதுகாப்பு என்று நம்பிய மக்கள் தஞ்சமடைந்து, வாகனத் தரிப்பிடதிலேயே தங்கியிருந்த சான்றுகள் தெரிகின்றன (மெத்தைகள்). அருகில் ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் இருந்திருக்கிறது, அங்கே சிறுவர்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் நூற்றுக் கணக்கானோர் இறந்து, காயப்பட்டிருக்கின்றனர் என நம்பக் காரணங்களாக இருக்கின்றன.

ஒரு வீடியோ உட்பட பலரின் பேட்டிகள் கருத்துகளை உள்ளடக்கிய செய்தியில் இவையெல்லாம் காட்டப் படுகின்றன.

https://www.nytimes.com/2023/10/18/world/middleeast/gaza-hospital-israel-hamas-explained.html

 மனித உயிர் இழப்புகளைப் பொய் என்று நிறுவ நாம் உதவக் கூடாது, இது பாதிக்கப் பட்ட மக்களை இன்னும் காயப்படுத்துவது போலாகும்!

 

தகவலுக்கு நன்றி. 

மேற்கொண்டு வரும் செய்திகளையும் பார்ப்போம்.

 

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, Justin said:

இது போன்ற கணக்குகளில் சொல்லப் படும் கருத்துக்களை கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ மனைக் கட்டிடம் மீது நேராக எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்பது உண்மை, ஆனால் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால், கட்டிடத்தின் ஒவ்வொரு ஜன்னலும் உடைந்து சன்னம் பறந்திருக்கிறது.

மருத்துவமனை பாதுகாப்பு என்று நம்பிய மக்கள் தஞ்சமடைந்து, வாகனத் தரிப்பிடதிலேயே தங்கியிருந்த சான்றுகள் தெரிகின்றன (மெத்தைகள்). அருகில் ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் இருந்திருக்கிறது, அங்கே சிறுவர்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் நூற்றுக் கணக்கானோர் இறந்து, காயப்பட்டிருக்கின்றனர் என நம்பக் காரணங்களாக இருக்கின்றன.

ஒரு வீடியோ உட்பட பலரின் பேட்டிகள் கருத்துகளை உள்ளடக்கிய செய்தியில் இவையெல்லாம் காட்டப் படுகின்றன.

https://www.nytimes.com/2023/10/18/world/middleeast/gaza-hospital-israel-hamas-explained.html

 மனித உயிர் இழப்புகளைப் பொய் என்று நிறுவ நாம் உதவக் கூடாது, இது பாதிக்கப் பட்ட மக்களை இன்னும் காயப்படுத்துவது போலாகும்!

எனக்கு வெளிநாட்டில் அதுவும் போரின் சுவடுகளே இல்லாத மேலைநாடுகளில் இருந்து கொண்டு நன்னி( நன்னி வெளியில் இப்படி உள்ள பலரின் யாழ் பிரதி நிதி) போன்றவர்கள் எழுதுவது போரின் ரொம்ப தொலைவில் கண்டி கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு எமது பாடசாலைகள் சந்தைகள் கோவில்கள் தேவாலயங்கள் வைத்தியசாலைகள் மீது சிங்களப்படைகள் குண்டுவீசியபோது பலநூறு பொதுமக்கள் இறந்ததை ஆங்கில ஊடகங்கள் எழுதியபோது இறந்தவர்களவ தமிழர்கள் அல்ல புலிகள் என்றும் தாக்கப்பட்டது புலிகள் முகாம் என்றும் அப்பாவி தமிழர்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் ராணுவத்தினர் என்றும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி எழுதிய சிங்களவர்கள் நாபகம் வருகின்றனர்..

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

பிரான்ஸ் பற்றி சிரித்த ஜேர்மனி வாழ் உறவுகள் வரிசையில் வரவும் 😂 

எப்படி இருந்த ஜேர்மனி?

அமைதியாக இருக்கும் எங்களை ஏன்  சண்டைக்கு. இழுக்கிறீர்கள்.  ??? 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதாபிமான காரணங்களுக்காக யுத்த நிறுத்தம் எனும் பொருளில்(?) ஐநா பாதுகாப்புச் சபையில் பிரேசிலால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து நிராகரித்தது. 

☹️

China ‘deeply disappointed’ at US veto to UN Gaza resolution

https://www.globaltimes.cn/page/202310/1300223.shtml

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

பனிப்போருக்கும் இஸ்ரேலுக்கும் ஒரே வயது. பலஸ்தீன பிரச்சினை அப்போது இருந்து இருக்கிறது.

பனிப்போர் காலத்தில் நைஜீரியா, பலஸ்தீன், காச்மீர், திபெத், இன்னும் பல இடங்களில் ஒடுக்கப்பட்ட இனங்கள்  அப்படி ஒன்றும் உவப்பான நிலைமைகளை காணவில்லை.

இரு அல்லது பல் துருவ உலகில் எப்படி எல்லாபக்கமும் எம்பக்கம் இருக்குமாறு காய் நகர்த்தலாம் என்பதற்கு சிங்கபூர், மலேசியா, இலங்கை என பல உதாரணங்கள் உள்ளன.

 

நீங்கள் கூறுவதும் சரிதான், ஆனால் எமது போராட்டம் ஒழிக்கப்படுவதற்கு காரணம் ஒற்றை உலக ஒழுங்குதான் என்பதனை குறிப்பிட்டிருந்தேன் அதாவது பலச்சமனிலை அற்றநிலை, அது என்ன விலை கொடுத்தாலும் அமைதியினை கொண்டுவருவதுதான் நோக்கமாக இருந்தது.

போராட்டத்தின் வெற்றி என்பது புறனிலை தாக்கம் அப்போது அதிகமாக காணப்பட்டிருந்தது, புறச்சூழ்னிலை  எந்த தாக்கம் செலுத்தாவிட்டால் போராட்டத்தின் வெற்றியினை போராட்ட அமைப்புகளிலேயே தங்கியிருக்கும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, Kandiah57 said:

அமைதியாக இருக்கும் எங்களை ஏன்  சண்டைக்கு. இழுக்கிறீர்கள்.  ??? 🤣

இனியும் அமைதியாக இருப்பது பயனில்லை அண்ணா 😂  உங்கள் நாட்டில் உள்ள ஹமாஸ் மற்றும்  பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் யேர்மன் ஜனநாயகத்தை அழித்தொழிப்பது என்று செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுங்கோ என்று வேண்டுகோள் விடுகின்றோம்.

[நியுகோலானை காசாவாக மாற்றுமாறு  டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.]

Edited by விளங்க நினைப்பவன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, vasee said:

ஒற்றை உலக ஒழுங்குதான் என்பதனை குறிப்பிட்டிருந்தேன் அதாவது பலச்சமனிலை அற்றநிலை, அது என்ன விலை கொடுத்தாலும் அமைதியினை கொண்டுவருவதுதான் நோக்கமாக இருந்தது.

எப்படி?

மேற்கும், சீனாவும், ராஸ்யாவும், பலஸ்தீனும், இஸ்ரேலும், கியூபாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து அல்லவா இலங்கைக்கு உதவின?

அப்போ இரெட்டை, பல் துருவ உலக ஒழுங்கு இருந்தாலும் எல்லா துருவங்களும் இலங்கை சார்பாகவே இருந்துதிருக்கும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

அகண்ட இஸ்ரேல் = அகண்ட அழிவு.

இஸ்ரேலின் நிலத்துக்கான உரிமை ஐ நா அமைத்து கொடுத்த 1967 போருக்கு முன்னான எல்லைக்கு மட்டுமே.

அதன் பின் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள நிலங்கள் எல்லாமும் கொள்ளை.

அத்தோடு அகல கால் வைத்தால் - உள்ளதும் போச்சுதடா என்ற நிலை வரலாம்.

இந்த காரணமே சினாய் பகுதி, ஜோர்தான் ஆற்றின் எதிர் கரையை இஸ்ரேல் மீள எகிப்த், ஜோர்தானிடம் கொடுக்க காரணம்.

இஸ்ரேலின், உலகின் பாதுகாபுக்கான ஆகச் சிறந்த, நிரந்தர உத்தரவாதம் - ஒரு மிதவாதிகளால் (PLO போல் மதச்சார்பற்ற என்றால் இன்னும் சிறப்பு) ஆளப்படும் பஸ்தீனத்தை அமைத்து கொடுப்பதே.

இப்போதைக்கும் அழிவுதான். காசாவை விட்டுக்கொடுத்ததுதான் இஸ்ரேலுக்கு அழிவு , ஈரானுக்கு கொண்டாடடம். எனவே அது மீண்டும் நடக்காது.

சினாய் , ஜோர்டான் போன்ற பகுதிகள் ஒரு நாட்டுடன் சம்பந்தப்படட விடயம். ராஜதந்திர ரீதியாக அது நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை இல்லை. மேலும் சினாய் வனாந்தரத்தை வைத்திருப்பதில்  பிரயோசனம் இல்லை. இப்போதும் கூட அங்கு மிதிவெடிகள் விதைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ஹமாஸ் போன்ற ISIS போன்ற பயங்கரவாதிகளுக்கு கொடுப்பதென்பது மஹா தவறு. பாலஸ்தீன அதிகார சபையும்கூட அவர்களிடம் இருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி விட்ட்து. அது ஒரு டம்மி கூடடம். இரான், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாது. இஸ்ரவேலே அவர்களிடம் அடி வாங்கும்போது இவர்கள் எம்மாத்திரம். எனவே நிச்சயமாக முதலில் ஹமாஸ் அழிக்கப்படும். பின்னர் காஸ்ஸா கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

கோலான் குன்று இஸ்ரவேலுக்கு அதன் பாதுகாப்புக்கு முக்கியம் எனவே அதனை விட்டுக்கொடுக்க மாடடார்கள். லெபனான், சிரிய பகுதிகள் தேவைப்பட்ட்தால் மீண்டும் கைப்பற்றப்படும். அது அந்தந்த நாடுகளின் செயல்பாட்டில்தான் இருக்கின்றது. 

23 hours ago, Maruthankerny said:

அகண்ட இஸ்திரேல் என்றால் ?
குறுகிய சிரியாவுக்கு .... குறுகிய லெபனானுமா? 

அவைகள் அகண்ட நாடுகள். அவைகளுக்கு அகண்ட தேசம் தேவை இல்லை. இஸ்ரவேல் சிறிய நாடு. அவர்களுக்குத்தான் அகண்ட தேசம் தேவை. எனவே அருகில் உள்ள நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட தேசம் அமையும். அமைய வேண்டும். 😜

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இனியும் அமைதியாக இருப்பது பயனில்லை அண்ணா 😂  உங்கள் நாட்டில் உள்ள ஹமாஸ் மற்றும்  பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் யேர்மன் ஜனநாயகத்தை அழித்தொழிப்பது என்று செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுங்கோ என்று வேண்டுகோள் விடுகின்றோம்.

[நியுகோலானை காசாவாக மாற்றுமாறு  டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.]

இஸ்லாமியர்களின் ரத்தத்தில் பயங்கரவாதம், மதவாதம் பிறந்தவுடனேயே ஊடடபடுகின்றது. இன்று அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களை உயிருடன் எரித்தது, குழந்தைகளின் தலையை வெட்டி கொன்றது,

பொது மக்களை கொலை செய்தது, கடத்தியது போன்ற செயல்களை எந்த முஸ்லீம் நாடும், முஸ்லீம் மக்களும் கண்டிக்க தயாராக இல்லை. அது முஸ்லிம்கள் என்று வரும்போது எந்த பயங்கரவாதமும் அவர்களால் நியாயம் படுத்த  படும்.

மேற்கத்திய  நாடுகள் இன்னும் முஸ்லிம்களை நம்பி அவர்களுக்கு வதிவிட விசா வழங்கி அவர்கள் நாட்டுக்கே ஆபத்தை தேடி கொள்ளுகிறார்கள். உலகுக்கே ஒரு சாபக்கேடு. 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஸாவுக்குள் நுழைய தயக்கம் காட்டும் இஸ்ரேல் - காரணமான நான்கு விஷயங்கள்

காஸாவுக்குள் இஸ்ரேல் ஏன் இன்னும் நுழையவில்லை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸாவில் தரைவழி தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்து சில நாட்கள் ஆன பின்பும் இன்னும் காஸாவுக்குள் இஸ்ரேல் நுழையவில்லை.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
  • 49 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது. அதற்காக, கடந்த சில நாட்களாகவே காஸாவுக்குள் தனது படைகள் நுழையப் போவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் மூன்று லட்சம் வீரர்களை ரிசர்வ் படைக்கு அழைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான வீரர்கள் மெர்காவா டாங்கிகள், பீரங்கிகள், நவீன ஆயுதங்களுடன் இஸ்ரேல்-காஸா எல்லையில் தயார் நிலையில் உள்ளனர்.

இஸ்ரேல் கப்பல் படை மற்றும் விமானப்படை, ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் மறைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதில் பல பாலத்தீன மக்கள் உயிரிழந்தும் காயமுற்றும் இருக்கின்றனர். சில ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பு காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் நிலைமையை இன்னும் மோசமாக்கி பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், இஸ்ரேல் ஏன் இன்னும் காஸாவுக்குள் நுழையாமல் இருக்கிறது?

இதற்கு சில காரணங்கள் உள்ளன.

 

காரணம் 1 - பைடன்

காஸாவுக்குள் இஸ்ரேல் ஏன் இன்னும் நுழையவில்லை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அவசர பயணத்தின் மூலம், அமெரிக்கா இஸ்ரேல் விவகாரம் குறித்து எவ்வளவு கவலை கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவுக்கு இரண்டு கவலைகள் உள்ளன: ஒன்று அதிகரித்து வரும் மனிதநேய நெருக்கடி, மற்றொன்று மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இந்த மோதல் பரவும் அபாயம்.

கடந்த 2005இல் வெளியேறிய காஸாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய இஸ்ரேலின் எந்தவொரு முயற்சிக்கும் தனது எதிர்ப்பை அமெரிக்க அதிபர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அப்படி ஆக்கிரமிப்பது “மிகப் பெரிய பிழை” என அவர் குறிப்பிட்டார்.

அதிகாரபூர்வமாக, அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இருக்கும் நெருங்கிய நண்பருக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், காஸா குறித்த இஸ்ரேலின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்திருந்தார்.

ஆனால், வெளியில் சொல்லப்படாத மற்றொரு காரணம், அவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடுமையான போக்கை சற்று கட்டுப்பட்டுத்துமாறு கூறியிருக்கலாம். இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், எப்படி, எப்போது வெளியேறப் போகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

டெல் அவிவில் அமெரிக்கா அமர்ந்திருக்க, காஸா மீது இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ படையெடுப்பு நடத்தினால், அது இஸ்ரேலுக்கும் நல்லதல்ல, அமெரிக்காவுக்கும் நல்லதல்ல.

காஸாவில் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர், இஸ்ரேலின் கூற்றை ஒப்புக் கொண்டு, இந்தத் தாக்குதல் தவறாக ஏவப்பட்ட பாலத்தீன ராக்கெட்டால் நிகழ்ந்த்து என்றார்.

ஆனால் பாலத்தீன அதிகாரிகள் இது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்றனர். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதையும், குண்டு வெடிப்புக்கு என்ன காரணம் என்பதையும் கண்டறியும் முயற்சியில் பிபிசி ஈடுபட்டு வருகிறது.

 
காஸாவுக்குள் இஸ்ரேல் ஏன் இன்னும் நுழையவில்லை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேல்-காஸா மோதல் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவலாம் என அமெரிக்கா கவலைப்படுகிறது.

காரணம் 2- இரான்

கடந்த சில நாட்களாகவே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கிடைக்காமல் இருக்காது என கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகிறது இரான். இதற்கு நடைமுறையில் என்ன அர்த்தம்?

மத்திய கிழக்கில் ஏராளமான ஷியா ஆயுதக் குழுக்களுக்கு இரான் நிதியளித்து, ஆயுதங்கள் வழங்கி, பயிற்சியும் வழங்கி வருகிறது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த குழு, இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அருகில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா.

கடந்த 2006ஆம் ஆண்டு இரு நாடுகளும் முடிவுறாத மோசமான போரை நிகழ்த்தினர். இதில் மறைத்து வைக்கப்பட்ட கன்னிவெடிகள் மற்றும் எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக, இஸ்ரேலின் நவீன போர் டாங்கிகள் வீழ்த்தப்பட்டன.

அதன் பிறகு ஹெஸ்புல்லா இரானின் உதவியுடன் மேலும் அதிக ஆயுதங்களுடன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது ஹெஸ்புல்லாவிடம் நீண்ட தூரத்தில் துல்லியமாக ஏவக்கூடிய சுமார் 1,50,000 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளன.

இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், ஹிஸ்புல்லா இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க ஆரம்பிக்கும். இஸ்ரேல் இரு முனைகளிலும் போரிட நேரிடும்.

ஆனால், மத்திய தரைக்கடலில் இஸ்ரேலுக்கு உடனடியாக உதவிட இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு போரை ஹெஸ்புல்லா விரும்புமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எனினும் கடந்த முறை ஹெஸ்புல்லாவுடன் போரிட்டபோது இஸ்ரேலிய போர்க்கப்பலை ஹெஸ்புல்லா தனது ஏவுகணையால் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

காரணம் 3: மனிதநேய நெருக்கடி

காஸாவுக்குள் இஸ்ரேல் ஏன் இன்னும் நுழையவில்லை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க வாய்ப்புள்ளது.

உலக நாடுகளின் மனித நேய நெருக்கடி குறித்த பார்வையுடன் ஒப்பிடுகையில், ஹமாஸை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேலிடம் அந்தப் பார்வை குறைவாகவே உள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான ரத்தவெறி கொண்ட தாக்குதலுக்குp பிறகு உலக நாடுகளின் கரிசனம் இஸ்ரேல் பக்கம் இருந்தது.

ஆனால், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக, பாலத்தீன மக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்த வான்வழித் தாக்குதலை நிறுத்தச் சொல்லி உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரி வருகின்றன.

காஸாவுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கத்தான் போகிறது.

எதிர்பாராத தாக்குதல், ஸ்னைப்பர்கள் மூலம் இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்படுவார்கள். சண்டையின் பெரும்பகுதி பல மைல்கள் தூரம் கொண்ட சுரங்கங்களில் நடைபெறலாம்.

 

காரணம் 4: உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி

காஸாவுக்குள் இஸ்ரேல் ஏன் இன்னும் நுழையவில்லை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலத்தீன மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஹமாஸின் பயங்கர தாக்குதலை கணிக்கத் தவறியதற்காக ஷின்பெத், உள்நாட்டு உளவுத்துறை பழியை ஏற்றுக்கொண்டது. ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, ஷின்பெத்துக்கு காஸாவின் உள்ளே உளவாளிகள் உள்ளனர்.

எனினும் தெற்கு இஸ்ரேலில் அன்று நடந்த தாக்குதல், 1973 யோம் கிப்பூர் போருக்குப் பிறகான மிகப்பெரிய உளவுத்துறை தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக பதற்றத்துடன் அவசர அவசரமாக இஸ்ரேல் உளவுத்துறை, பாதுகாப்பு படையினருக்குத் தேவையான ஹமாஸ் குழு தலைவர்களின் பெயர்களையும், இடங்களையும், பணயக் கைதிகளின் இடங்களையும் எடுத்துக் கொடுத்திருக்கும்.

தரை வழித் தாக்குதலை துல்லியமாக நடத்த மேலும் சில தகவல்களைப் பெற இஸ்ரேல் உளவுத்துறைக்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம். அப்போதுதான் குறிப்பாக இலக்கைத் தாக்க முடியும். இல்லையென்றால் வடக்கு காஸாவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் இருந்து தப்பித்து இயங்கி வரும் ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் இந்நேரம் மறைந்திருந்து தாக்குவதற்கும், இஸ்ரேலிய படைகளுக்கான வலைகளை விரிக்கவும் திட்டமிட்டிருக்கும்.

நிலத்துக்கு அடியில் இருக்கும் சுரங்கங்களில் இன்னும் ஆபத்தானதாக இருக்கும். அந்த இடங்களைக் கண்டறிந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை எச்சரிப்பதில் இஸ்ரேல் உளவுத்துறையும் உன்னிப்பாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c89w52p49evo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா எல்லையில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள், இராணுவ வீரர்களை குவித்த இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

தொடர்ந்து 14 ஆவது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் இராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் இராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது

தொடர்ந்து கூறும்போது, லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ரொக்கெட்டுகளில் 4 ரொக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது. இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ரொக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன.

பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

https://thinakkural.lk/article/277838

  • கருத்துக்கள உறவுகள்
Posted

65 வயது பெண்ணின் அதிர வைக்கும் வீரம்: பிரமித்த பைடன்

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர்.

உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.

ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர்.

Capture-1-7.jpg

இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார். உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார்

காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கொமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் .பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர்.

அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது:

அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன். அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன் என்றார்.

Capture-10.jpg

இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார்.

தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார்.

சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/277877

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

  இந்தா காத்தான்குடிக்காரர் தொடங்கீற்றாங்கள்.... புத்தளத்தான்ஸைத் தான் இன்னும் காணேலை இல்லை என்ர கண்ணிலை படேலை.

 

 

 

 

இது இலங்கை முஸ்லிம்களின் யூரியூப் தடம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிபிசி இனிமேல் ஹமாசை “ஆயுததாரிகள்” என வர்ணிக்காதாம்.

“பிரிடிஷ் அரசும் ஏனைய பல அரசுகள் பயங்கரவாதிகள் என தடை செய்த அமைப்பு”, அல்லது தனியே “ஹமாஸ்” என்றே விளிக்குமாம்.

யூத அமைப்புகளை பிபிசி பணிப்பாளர் நாயகம் சந்தித்த பின் எடுத்த முடிவாம்.

https://www.ft.com/content/20b5466e-d690-4e00-828e-5f364e22f1c5

பிகு

பிபிசி என்ன முடிவெடுத்தாலும் - கோஷான் இஸ்ரேலை விளிக்க - இனப்படுகொலையாளர் எனும் பதத்தையோ, ஹமாசை விளிக்க பயங்கரவாதிகள் எனும் பதத்தையோ பாவிக்கமாட்டார் என்றும் அறிய கிடைக்கிறது🤣

 

  • Like 1
Posted

கமாஸ் இரு அமெரிக்க பணய கைதிகளை விடுவித்ததாக சொல்கிறது சனல் 4..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிஸ்புல்லா தாக்குதலில் மூன்று இஸ்ரேலிய இராணுவத்தினர் பலியாம்.

 

 

Just now, nunavilan said:

கமாஸ் இரு அமெரிக்க பணய கைதிகளை விடுவித்ததாக சொல்கிறது சனல் 4..

இவர்கள் தாயும் மகளுமாம். கத்தார் அரசின் முயற்சியால் விடுவிப்பாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சை உலுப்புகின்றது 😪

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் விடுதலை செய்தது ஹமாஸ்

Published By: RAJEEBAN    21 OCT, 2023 | 07:29 AM

image

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரண்டு அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள 200க்கும் அதிகமானபணயக்கைதிகளில்  இருவரை விடுதலை செய்துள்ளது- கட்டார் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.

யூடித் ரனானும் அவரது 17 வயது மகள் நட்டாலியாவும் தென் இஸ்ரேலில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்கசென்றிருந்தவேளை 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டது.

விடுதலைசெய்யப்பட்ட பணயக்கைதிகள் இருவரையும் காசாவிலிருந்து இஸ்ரேலிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளது.

https://www.virakesari.lk/article/167405

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகள்

21 OCT, 2023 | 02:46 PM
image

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்து இரண்டு வாரங்களின் பின்னர் முதல் தடவையாக  மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் காசா சென்றுள்ளன.

எகிப்திலிருந்து ரபா எல்லை ஊடாக வெள்ளை கொடியுடன் ஐநா வாகனங்கள் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாகனங்களில் இருந்து பாலஸ்தீனத்திலிருந்து சிறிய வாகனங்களிற்குள் விநியோகத்திற்காக பொருட்கள் ஏற்றப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/167438

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நன்னிச் சோழன் said:

  இந்தா காத்தான்குடிக்காரர் தொடங்கீற்றாங்கள்.... புத்தளத்தான்ஸைத் தான் இன்னும் காணேலை இல்லை என்ர கண்ணிலை படேலை.

 

 

 

 

இது இலங்கை முஸ்லிம்களின் யூரியூப் தடம்.

இந்த காத்தான்குடி காரர்கள் நாலு பேரீச்ச மரம் நடடவுடன் தங்கள் சவூதி, கத்தாரில் இருப்பதாக நினைப்பு. இவர்களும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலையை பின்பற்றுபவர்கள்தான். ஈஸ்டர் குண்டு தாக்குதல்தாரிகளின் திடடமிடுதலும் இங்கிருந்தால் தொடங்கியது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இவர்கள் ஆர்ப்பாடுடம் படுவதில் ஆச்சரியம் இல்லை. அரசாங்கத்துக்கு இது தெரிந்தாலும் தேர்தல் நெருங்குவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

வட காஸாவில் இண்டர்நெட் துண்டிப்பாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடகொரியாவின் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ் படையினர்!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் வடகொரியாவின் எப் – 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் – 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ்படையினர்க்கு வழங்கப்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை வடகொரியாவின் எப்7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மோதல் காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/277892

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.bbc.co.uk/news/world-middle-east-67180844

காஸாவில் சாவு எண்ணிக்கை 4300 ஐ தாண்டியதாக காஸா சுகாதார அமைச்சு அறிவிப்பு.

வடக்கு காசாவில் அல் ஸஹாரா என்ற குடியிருப்பு பகுதி முற்றாக தரைமட்டமாக்கபட்டுள்ளதாம் (படம் லிங்கில்).

 

பல டசின் அப்பார்ட்மெண்டுகளை கொண்ட 32 தொடர்மாடிகள் அழிக்கப்பட்டுள்ளனவாம்.

இரவு 8.30 வெளியேற சொல்லி விட்டு 9 மணி முதல் காலை 7 வரை இஸ்ரேல் குண்டு வீசியதாக சொல்கிறார் இங்கே வசிக்கும் ஒருவர்.

இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க கூட இயலாமல் உள்ளதாம்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.