Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நன்றி.

குருசோவுக்கு இப்படி ஒரு பதிலை போட எண்ணினேன். அந்த நேரம் ஒரே தூக்க கலக்கம், கூடவே இப்படி ஒரு பதிலை கோபாலகிருஸ்ண  பஞ்சாபிகேச சர்மா என்ற பெயரில் எழுதுவதை விட ஜஸ்டீனோ, ஆபிரகாமோ (🤣) எழுதினால் நல்லது என நினைத்தேன்.

இன்னொரு திரியில் முஸ்லிம்கள் எப்படி யூதர் அழியும் வரை இறுதி காலம் வராது என நம்புகிறார்களோ அப்படி பல கடுமைவாத கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.

ஆனால் பல கிறிஸ்தவர் அல்லாத தமிழர்கள் - மேற்கு நாடுகள் பைபிளில் சொன்னபடிதான் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள் என பிழையாக விளங்கி வைத்துள்ளார்கள்.

இஸ்ரேலை மேற்கு நாடுகள் உருவாக்கியதன் பின் பல காரணங்கள் உள்ளன. ஆனால் பலரும் இதில் யானை பார்த்த விழிபுலனற்றோர்தான்.

இது போன்ற black & white விடயங்களுக்கெல்லாம் "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்" என யோசிக்காமல் பதில் சொல்லி விட வேண்டும்! இல்லா விட்டால் கிடைத்த இடை வெளியில் #மண்ணு லாறி புகுந்து வாரிக் கொட்டி விடும் - புரியுதா நாஞ்சொல்றது😂?

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

என்னதான் இருந்தாலும் ஜஸ்டின் போல நீங்களும் அவருக்கு ஒரு அன்பு மடல் எழுதி இருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கசாவை அழிக்க வேண்டும் அங்கிருக்கும் அப்பாவிகள் மேல் மேற்கு உலகம் பக்குவமாகவே குண்டுகளை போட்டு கொல்கிறது என்று எமக்கு ஆதரவாக எழுதிவருகிறார் 
முன் பின் யோசிக்காமல் திடீரென பைபிளை தூக்கி போட்டுவிட்டார்  
பைபிளை வேண்டுமானால் உக்ரைன் ரஷ்ய போருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற அறிவுரைதான் அவருக்கு இப்போதைக்கு தேவை. புடினை சாத்தன் அப்படி இப்படி என்று அடைமொழி சொற்களுக்கு பைபிளை பாவிக்கலாம். அமெரிக்கா பிரிட்டன் இஸ்திரேலி கூட்டுக்குழுவாக சேர்ந்து குண்டுபோடும்  நேரம் 
அந்த திரிக்குள் பைபிளை எடுத்து சிறிய தப்பை செய்துவிட்டார். மற்றும்படி மிக நன்றாக உலக வரலாறுகள் இஸ்திரேலி _ பலஸ்தீன பிரச்சனை பற்றி எல்லாம் மற்றவர்கள்போல தெளிவாக எழுதுகிறார் 

யானை பார்த்த விழிபுலனற்றோர் எண்டு எழுதினது சுட்டு விட்டதா? காரியமில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உண்மையில் நான் அதை பார்க்கவில்லை 
பார்த்திருப்பின் சுட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னுமொரு தக்காளி சோஸ்/ரத்த முரண்நகை.

இந்த பைத்தியகார இஸ்ரேலிய சயோனிச வெறி அமைச்சர் அணுகுண்டு போடுவோம் என மோட்டு கதை கதைத்ததை மிக கடுமையாக விமர்சிப்பவர் எல்லாரும் யார் என்கிறீங்க?

உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் புட்டின் அப்பட்டமாக அணு குண்டு பட்டனுக்கு பக்கத்தில் இருந்து போட்டோ போட்டபோது, அணு ஆயுத தடிப்பு-பேச்சை (rhetoric)  பேசிய போது, அணுஆயுத மிரட்டல் (nuclear blackmail) செய்தபோது - ஒரு அணு ஆயுத நாட்டை சீண்டினால் அது அப்படித்தான் செய்யும் என வக்காளத்து வாங்கிய நம்ம பயலுவதான்🤣.

கீழே இரெண்டு நாட்களுக்கு முன் ரஸ்ய அரச தொலைக்கட்ட்சியில் ஒளிபரப்பானதாக சொல்லப்படும் ஒரு அனிமேசன் வீடியோ போட்டுள்ளேன்.

ரஸ்ய அணு ஏவுகணை ஒன்று எப்படி அமெரிக்கா நகர்களை தாக்கும் என காட்டியுள்ளார்கள்.

வாயால பேசின அந்த இஸ்ரேல் அமைச்சர்ரையே இந்த வாங்கு வாங்கின நம்ம பயலுவ, இப்படி வீடியோ விட்டு மிரட்டும் புட்டினை, புரட்டி, புரட்டி எடுக்கப்போகிறார்கள் பாருங்களே (don’t hold your breath).

13 minutes ago, Maruthankerny said:

உண்மையில் நான் அதை பார்க்கவில்லை 
பார்த்திருப்பின் சுட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன் 

4 பந்தி எழுதினான். 3 வாசிச்சிட்டு, குவோட்டும் பண்ணி, அதை மட்டும் மிஸ்பண்ணி இருக்கிறியள். சோ சாட்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இங்கே இன்னுமொரு தக்காளி சோஸ்/ரத்த முரண்நகை.

இந்த பைத்தியகார இஸ்ரேலிய சயோனிச வெறி அமைச்சர் அணுகுண்டு போடுவோம் என மோட்டு கதை கதைத்ததை மிக கடுமையாக விமர்சிப்பவர் எல்லாரும் யார் என்கிறீங்க?

உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் புட்டின் அப்பட்டமாக அணு குண்டு பட்டனுக்கு பக்கத்தில் இருந்து போட்டோ போட்டபோது, அணு ஆயுத தடிப்பு-பேச்சை (rhetoric)  பேசிய போது, அணுஆயுத மிரட்டல் (nuclear blackmail) செய்தபோது - ஒரு அணு ஆயுத நாட்டை சீண்டினால் அது அப்படித்தான் செய்யும் என வக்காளத்து வாங்கிய நம்ம பயலுவதான்🤣.

கீழே இரெண்டு நாட்களுக்கு முன் ரஸ்ய அரச தொலைக்கட்ட்சியில் ஒளிபரப்பானதாக சொல்லப்படும் ஒரு அனிமேசன் வீடியோ போட்டுள்ளேன்.

ரஸ்ய அணு ஏவுகணை ஒன்று எப்படி அமெரிக்கா நகர்களை தாக்கும் என காட்டியுள்ளார்கள்.

வாயால பேசின அந்த இஸ்ரேல் அமைச்சர்ரையே இந்த வாங்கு வாங்கின நம்ம பயலுவ, இப்படி வீடியோ விட்டு மிரட்டும் புட்டினை, புரட்டி, புரட்டி எடுக்கப்போகிறார்கள் பாருங்களே (don’t hold your breath).

பாட்டும் நானே பாவமும் நானே என்று நீங்கள் பார்த்த வீடியோவுக்கு நீங்களே பதில் எழுதுகிறீர்கள் 
ஆனாலும் மற்றவர்களை சாடுகிறீர்கள். 

நல்ல தெளிவாகவும் அறிவாகவும் எழுதுவீர்கள் 
பின்பு இப்படி எழுந்ததனமாக ஏதும் பிதற்றலாகவும் எழுதுகிறீர்கள்.

எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும் 
எல்லா திரியிலும் எழுதவேண்டும் 
எல்லா விடயமும் எல்லோரைவிட எனக்கு அதிகம் தெரியும் 

அப்படியான ஏதும் எண்ணம் நிலைப்பாடு இருப்பின் அதை தலைக்கணம் என்று தமிழில் சொல்லுவார்கள் அது கூடாதது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். எந்த உந்துதலில் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரிவதில்லை ......... கொஞ்சம் வேக கவனம் பலவிதத்தில் பாதுகாப்பு என்று முளுமையாக நம்புகிறேன். நீங்கள் தெளிவாக எழுதினாலும் ..... வாசிப்பவரிடம் தெளிவு இல்லை என்றால் அது ஒரு வீண் வேலை என்றே எண்ணுகிறேன். குறித்த தலைப்பு .......... குறித்த கருத்துக்கள் என்று மட்டும் எழுதினால் யாழ்களமும் சிறப்புறும் என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

4 பந்தி எழுதினான். 3 வாசிச்சிட்டு, குவோட்டும் பண்ணி, அதை மட்டும் மிஸ்பண்ணி இருக்கிறியள். சோ சாட்🤣

உண்மையில் நான் கருத்துக்களை இப்போ அதிகம் வாசிப்பதில்லை ஏதும் புது தகவல் செய்தி இருப்பின் வாசிப்பேன் அல்லது கடந்து போய்விடுவேன்

"ஆதிக்கத்தனமான" கருத்துக்களை கருத்தாளர்களை பார்க்கும்போது மட்டும் அதற்கு ஏற்ற பதில் கொடுக்கவேண்டும்  என்று எண்ணி அதற்கும் நேரம் இருந்தால் மட்டும் எழுதுவேன்.

மற்றும்படி இப்போ நல்ல நகைசுவை கருத்துக்களாகவே ஒரு இனஅழிப்பு திரியே போய்க்கொண்டு இருக்கிறது 
அதில் எழுத என்ன இருக்கிறது? யார் எழுதி ... யார் மாற போகிறார்கள்?  எதோ ஒரு மாயையில் எல்லோரும் லயித்து இருக்கிறோம். விலைகொடுத்து வாங்கி மூளையை சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் வைத்திருக்க எல்லோரும் கொஞ்சமாவது குடிக்கிறோம் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அது நன்றாகவும் இருக்கிறது. சிலர் இல்லாத கடவுளை முழுமையாக நம்பி அதில் லயித்து வாழ்கிறார்கள். மூடத்தனமாக வாழ்தல் என்பதில் ஒருவரை ஒருவர் சாட முடியாமலும் இருக்கிறது அளவுகள் விடயங்கள்தான் வேறு வேறாக இருக்கிறதே தவிர  எல்லோரும் எதோ ஒன்றை செய்கிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

முந்தநாள் திண்ணையில் எழுதினேன். நொஸ்டிரடாமஸ் திரியை மீளாய்வு செய்து விட்டு கொஞ்சம் விலகி இருக்க போகிறேன் என.

நேற்று அந்த மீளாய்வை முடித்தேன். இன்று வரை யாரும் திருத்தம் கோருகிறார்களா என காத்திருக்கிறேன்.

நாளை முதல் கிளம்பும் ஐடியாதான்.

உங்கள் அட்வைஸை வாசிக்கும் வரை.

அதை வாசித்த பின் தான் - என்னை நானே சகலமும் அறிந்தவனாக காட்டி கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், எனது தலைகணத்தை கைவிடா கூடாது என்பதும், எல்லா திரிகளிலும் கண்டபடி பிதற்றுவதிலும் உள்ள அருமை பெருமைகளை புரிந்து கொண்டேன்🤣.

நன்றி.

4 minutes ago, Maruthankerny said:

ஓம் மருதர் இங்கே எழுதுபவர்கள் ஒன்றில் கடவுளை நம்பும் மோடையர்கள், அல்லது தலைக்கணம் பிடித்த தருக்கர்கள், அல்லது மனித இனப்படுகொலையை ஆதரிக்கும் கயவர்கள் (உக்ரேன் என்றால் பராவாவில்லை அவர்கள் எலிகள் இனம்தானே). 

உங்களை ஒத்த ஒரு நியாயவானின் பாதம் இங்கே படுவதே நாம் செய்த பூர்வ புண்ணியம்தான். இதில் 4 பந்தியையும் வாசித்து கருத்து வைக்க வேண்டும் என்ற எதிர்பார்பெல்லாம் டூ மச்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

முந்தநாள் திண்ணையில் எழுதினேன். நொஸ்டிரடாமஸ் திரியை மீளாய்வு செய்து விட்டு கொஞ்சம் விலகி இருக்க போகிறேன் என.

நேற்று அந்த மீளாய்வை முடித்தேன். இன்று வரை யாரும் திருத்தம் கோருகிறார்களா என காத்திருக்கிறேன்.

நாளை முதல் கிளம்பும் ஐடியாதான்.

உங்கள் அட்வைஸை வாசிக்கும் வரை.

அதை வாசித்த பின் தான் - என்னை நானே சகலமும் அறிந்தவனாக காட்டி கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், எனது தலைகணத்தை கைவிடா கூடாது என்பதும், எல்லா திரிகளிலும் கண்டபடி பிதற்றுவதிலும் உள்ள அருமை பெருமைகளை புரிந்து கொண்டேன்🤣.

என்ன நொஸ்ட்ராடமஸ் திரி? நான் காணவில்லை? நானும் வந்து என் "பாசிச அடக்கு முறையை" வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தவறி விட்டதே, ஐயகோ😂!

பி.கு: எங்கோயோ பல வருடங்கள் முன்பு வாங்கிய ஒரு அடியின் கோபத்தில் இன்றும் எல்லா இடங்களிலும் நுழைந்து territory marking செய்யும் ஆட்களைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்! சில விடயங்களில் மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனை தூக்கி ஏற்றி விட வேணுமேயொழிய, கீழே தான் இருப்பேன் என்பவர் இழுத்து விழுத்த இடம் கொடுத்தலாகாது, #அடக்கு முறைக் கருத்தாளன்😎 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

தற்காலிக ஓய்வு எண்ணம் - சில தனிப்பட்ட விடயங்கள் நேரத்தை கோரப்போகிறன - அதற்கான முன்னேற்பாடு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரேயடியாக ஓய்வு எடுக்காதையுங்கோ! பிறகு குழவி இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளாடின கத தான்😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

முந்தநாள் திண்ணையில் எழுதினேன். நொஸ்டிரடாமஸ் திரியை மீளாய்வு செய்து விட்டு கொஞ்சம் விலகி இருக்க போகிறேன் என.

நேற்று அந்த மீளாய்வை முடித்தேன். இன்று வரை யாரும் திருத்தம் கோருகிறார்களா என காத்திருக்கிறேன்.

நாளை முதல் கிளம்பும் ஐடியாதான்.

உங்கள் அட்வைஸை வாசிக்கும் வரை.

அதை வாசித்த பின் தான் - என்னை நானே சகலமும் அறிந்தவனாக காட்டி கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், எனது தலைகணத்தை கைவிடா கூடாது என்பதும், எல்லா திரிகளிலும் கண்டபடி பிதற்றுவதிலும் உள்ள அருமை பெருமைகளை புரிந்து கொண்டேன்🤣.

நன்றி.

ஓம் மருதர் இங்கே எழுதுபவர்கள் ஒன்றில் கடவுளை நம்பும் மோடையர்கள், அல்லது தலைக்கணம் பிடித்த தருக்கர்கள், அல்லது மனித இனப்படுகொலையை ஆதரிக்கும் கயவர்கள் (உக்ரேன் என்றால் பராவாவில்லை அவர்கள் எலிகள் இனம்தானே). 

உங்களை ஒத்த ஒரு நியாயவானின் பாதம் இங்கே படுவதே நாம் செய்த பூர்வ புண்ணியம்தான். இதில் 4 பந்தியையும் வாசித்து கருத்து வைக்க வேண்டும் என்ற எதிர்பார்பெல்லாம் டூ மச்.

எதோ ஒரு மூடத்தனம் மாயைக்குள் நானும் அடங்குகிறேன் 
எல்லோரும் அடங்குகிறோம் இதில் ஒருவரை ஒருவர் சாட என்ன இருக்கு?  என்றே எழுதினேன் 

அதுக்கும் பதில் இப்படி எழுதுகிறீர்கள் 

மற்றும்படி யாழ்களம் உலகின் மிக முக்கிய ஒரு தளம் 
இங்கு marketing territory ரொம்ப முக்கியம்......  எதிர்கால சேமிப்பே இங்குதானே? 
தீயாய் வேலை செய்யணும் குமாரு 

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலுவின் காமெடிமாதிரி ........... 
வடிவேலு நடிப்பதை குறைக்க போகிறேன் என்றதும் 
அவருக்கு பின்னல் இழுபடும் நான்கு ஐந்துபேர் பொருளாதார 
பிரச்சனையால் ஓடித்திரிவதுபோல 
சில கருத்துக்களை வாசித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை 

இதிலே தத்துவம் என்றால் உலகிற்கே நகைச்சுவையை அறிமுகப்படுத்தியது நாம்தான் என்ற தோணி 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

நாளை முதல் கிளம்பும் ஐடியாதான்.

உங்கள் விடுமுறை நல்லதாக அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் இந்தியர்களை வேலைக்கு அழைப்பதற்குக் காரணம் 

1) பலஸ்தீனியர்களைப் பழிவாங்க

2) ஹமாXன் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததுடன் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கியதற்கு நன்றியாக

3) இந்துத்துவாவும் ஸியோனிசமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவது

4)  இரு கொள்கைகளுக்கும் பொது எதிரியாக இஸ்லாம் இருப்பது.

5) பத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா நெருங்கி வருவதை பயன்படுத்தி நீண்ட கால நலனை அடைவதற்கு ... ..  

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் விடுமுறை நல்லதாக அமையட்டும்.

நன்றி அண்ணா. 

51 minutes ago, Maruthankerny said:

வடிவேலுவின் காமெடிமாதிரி ........... 
வடிவேலு நடிப்பதை குறைக்க போகிறேன் என்றதும் 
அவருக்கு பின்னல் இழுபடும் நான்கு ஐந்துபேர் பொருளாதார 
பிரச்சனையால் ஓடித்திரிவதுபோல 
சில கருத்துக்களை வாசித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை 

இதிலே தத்துவம் என்றால் உலகிற்கே நகைச்சுவையை அறிமுகப்படுத்தியது நாம்தான் என்ற தோணி 

தோணியா? சீச்சீ அவர் ஹெலிகாப்டர் ஷார்ட்டைதான் அறிமுகபடுத்தியவர்🤣

@Maruthankerny

செல்வத்திற் செல்வம் மக்கள் செல்வம். 

மக்கள் என்றால் பிள்ளை இல்லை. மனிதர்கள்.

போகும் போது நம்மிடம் இருக்க போகும் ஒரே செல்வம் ஏனையோர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை, நட்பு, மரியாதை, நேசம் இவை மட்டுமே.

இன்னொரு முகம் தெரியா கருத்தாளரின் மக்கட் செல்வத்தை க(கா)ண்டு மறுகாமல் …பத்தி பிரிச்சு எழுதுவதில் தொடங்குங்கள்.

நீங்களும் ஆகலாம் குரோர்பதி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

மற்றும்படி யாழ்களம் உலகின் மிக முக்கிய ஒரு தளம் 
இங்கு marketing territory ரொம்ப முக்கியம்......  எதிர்கால சேமிப்பே இங்குதானே? 
தீயாய் வேலை செய்யணும் குமாரு 

ஒரு சவால்….எனது Marketing Territory ஐ உங்களுக்கு தாரை வார்கிறேன்.

உங்களுக்கு பந்து இருக்கிறதா என பார்ப்போம் (let’s see if you have the balls). 

என்னை போல் ஒவ்வொரு திரியாக போய் தம்பட்டம் அடிக்க தேவையில்லை.

நான் திரும்பி வரும் வரை:

உக்ரேன்-ரஸ்யா, இஸ்ரேல்-பலஸ்தீன் இந்த இரு திரிகளிலும் மட்டும்;

நேரம் செலவழித்து, தகவல்கள், கருத்துகளை பதிந்து - பலதரபட்ட கருத்தளருடனும் ஒருமித்தும், எதிர்த்தும் கருத்து பரிமாறி, இந்த இரு திரிகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்?

செய்வீர்களா? (ஜெ பாணியில் வாசிக்கவும்).

அல்லது வெறும் வாய் மட்டும்தானா?

(உங்களால் முடியும்).

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பல கிறிஸ்தவர் அல்லாத தமிழர்கள் - மேற்கு நாடுகள் பைபிளில் சொன்னபடிதான் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள் என பிழையாக விளங்கி வைத்துள்ளார்கள்.

இஸ்ரேலை மேற்கு நாடுகள் உருவாக்கியதன் பின் பல காரணங்கள் உள்ளன. ஆனால் பலரும் இதில் யானை பார்த்த விழிபுலனற்றோர்தான்.

காரணம் அவர்களது மூடநம்பிக்கை அவர்களை சரியாக பார்க்க விடவில்லை.
மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு உதவினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை. முஸ்லிம் மதத்தவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கவலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இங்கே இன்னுமொரு தக்காளி சோஸ்/ரத்த முரண்நகை.

இந்த பைத்தியகார இஸ்ரேலிய சயோனிச வெறி அமைச்சர் அணுகுண்டு போடுவோம் என மோட்டு கதை கதைத்ததை மிக கடுமையாக விமர்சிப்பவர் எல்லாரும் யார் என்கிறீங்க?

உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் புட்டின் அப்பட்டமாக அணு குண்டு பட்டனுக்கு பக்கத்தில் இருந்து போட்டோ போட்டபோது, அணு ஆயுத தடிப்பு-பேச்சை (rhetoric)  பேசிய போது, அணுஆயுத மிரட்டல் (nuclear blackmail) செய்தபோது - ஒரு அணு ஆயுத நாட்டை சீண்டினால் அது அப்படித்தான் செய்யும் என வக்காளத்து வாங்கிய நம்ம பயலுவதான்🤣.

கீழே இரெண்டு நாட்களுக்கு முன் ரஸ்ய அரச தொலைக்கட்ட்சியில் ஒளிபரப்பானதாக சொல்லப்படும் ஒரு அனிமேசன் வீடியோ போட்டுள்ளேன்.

ரஸ்ய அணு ஏவுகணை ஒன்று எப்படி அமெரிக்கா நகர்களை தாக்கும் என காட்டியுள்ளார்கள்.

வாயால பேசின அந்த இஸ்ரேல் அமைச்சர்ரையே இந்த வாங்கு வாங்கின நம்ம பயலுவ, இப்படி வீடியோ விட்டு மிரட்டும் புட்டினை, புரட்டி, புரட்டி எடுக்கப்போகிறார்கள் பாருங்களே (don’t hold your breath).

4 பந்தி எழுதினான். 3 வாசிச்சிட்டு, குவோட்டும் பண்ணி, அதை மட்டும் மிஸ்பண்ணி இருக்கிறியள். சோ சாட்🤣

ரஷ்சியாவும் இஸ்ரேலும் ஒன்றா..??!

ரஷ்சியா இரண்டு உலக யுத்தங்களையும்... ஒரு பனிப்போரையும் பல பிராந்திய ஆக்கிரமிப்பு அழுத்தங்களையும் எதிர் நோக்கிய.. நோக்கும் தேசம். அதனை நோக்கி.. அமெரிக்கா.. மற்றும் நேட்டோ நாடுகள் அணு ஏவுகணைகளை  நிலை நிறுத்தியுள்ள நிலையில்.. ரஷ்சியா தனது அணு ஆயுத திறனை எல்லா வகையிலும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம்.

ஆனாலும் ரஷ்சியா.. எதிரிகள் பாவிக்க எத்தனிக்காத  பட்சத்தில் அணு ஆயுதங்களை பாவிக்காது என்று அறிவித்தும் விட்டது.

இஸ்ரேலுக்கு எதிராக.. பலஸ்தீன மக்கள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியா வைச்சிருக்கினம். 1970 களில் பிறந்த எப் 16 விமானங்களைக் கூட சுட்டுவீழ்த்தி தமது மக்களை வளங்களை பாதுகாக்க முடியாதிருக்கும் அந்த மக்கள் கூட்டம் மீது அணுகுண்டு வீசுவேன் என்று கூவுவது.. போன்ற கொடுமை வேறில்லை. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதும்.. ரஷ்சியாவிடம் இருப்பதும் ஒன்றல்ல. இஸ்ரேல்.. சிறிய பலவீனமான மக்கள் குழுமங்களைக் கூட அணுகுண்டு வீசி அழிக்கக் கூடிய கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு மோசமான பயங்கரவாத நாடு என்றால் மிகையல்ல. 

அதனிடம் அணு ஆயுதங்கள் இருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தாகும்.!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

காரணம் அவர்களது மூடநம்பிக்கை அவர்களை சரியாக பார்க்க விடவில்லை.
மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு உதவினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை. முஸ்லிம் மதத்தவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கவலையோ?

வார்டன் என்றால் அடிப்போம்.

அது போல்,

மேற்கு என்றால் அடிப்போம்.

இலங்கைக்கு மேற்கு உதவியமைக்கு பழி தீர்கிறார்களாம்.

ஆனால் அதே இலங்கைக்கு அதே போல் உதவிய சீனா, ரஸ்யா, பலஸ்தீன், கடாபி, கியூபாவை ஆதரிப்பார்களாம். 

ஏன்?

மேற்கு என்றால் அடிப்போம்.

3 minutes ago, nedukkalapoovan said:

ரஷ்சியாவும் இஸ்ரேலும் ஒன்றா..??!

ரஷ்சியா இரண்டு உலக யுத்தங்களையும்... ஒரு பனிப்போரையும் பல பிராந்திய ஆக்கிரமிப்பு அழுத்தங்களையும் எதிர் நோக்கிய.. நோக்கும் தேசம். அதனை நோக்கி.. அமெரிக்கா.. மற்றும் நேட்டோ நாடுகள் அணு ஏவுகணைகளை  நிலை நிறுத்தியுள்ள நிலையில்.. ரஷ்சியா தனது அணு ஆயுத திறனை எல்லா வகையிலும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம்.

ஆனாலும் ரஷ்சியா.. எதிரிகள் பாவிக்க எத்தனிக்காத  பட்சத்தில் அணு ஆயுதங்களை பாவிக்காது என்று அறிவித்தும் விட்டது.

இஸ்ரேலுக்கு எதிராக.. பலஸ்தீன மக்கள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியா வைச்சிருக்கினம். 1970 களில் பிறந்த எப் 16 விமானங்களைக் கூட சுட்டுவீழ்த்தி தமது மக்களை வளங்களை பாதுகாக்க முடியாதிருக்கும் அந்த மக்கள் கூட்டம் மீது அணுகுண்டு வீசுவேன் என்று கூவுவது.. போன்ற கொடுமை வேறில்லை. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதும்.. ரஷ்சியாவிடம் இருப்பதும் ஒன்றல்ல. இஸ்ரேல்.. சிறிய பலவீனமான மக்கள் குழுமங்களைக் கூட அணுகுண்டு வீசி அழிக்கக் கூடிய கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு மோசமான பயங்கரவாத நாடு என்றால் மிகையல்ல. 

அதனிடம் அணு ஆயுதங்கள் இருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தாகும்.!!

இரெண்டும் ஒன்றில்லத்தான்.

ஆனால் பாரம்பரிய யுத்தத்தில் அணு ஆயுத பிளாக்மெயில் எனப்பார்த்தால் - இரு நாடுகாளும் இதை செய்தது பொறுப்பற்ற செயல்தான்.

ஆனால் நீங்கள் கூறியபடி சில மாதங்களின் பின் புட்டின் தன் தவறை உணர்ந்து இந்த rhetoric ஐ கைவிட்டு விட்டார்.

அதே போல் இந்த மூளை பிசகிய சயானிஸ்ட் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது நல்லதே.

ஆனால் இவை பிளாக்மெயில்தான் செய்தன.

அமேரிக்கா பாவிக்கவே செய்தது என்பதும் அது ஒரு போர்குற்றம் என்பதும், என்றும் மறக்ககூடாத அமெரிக்காவின் மீது விழுந்த மறு என்பதும் கூட உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரு சவால்….எனது Marketing Territory ஐ உங்களுக்கு தாரை வார்கிறேன்.

உங்களுக்கு பந்து இருக்கிறதா என பார்ப்போம் (let’s see if you have the balls). 

என்னை போல் ஒவ்வொரு திரியாக போய் தம்பட்டம் அடிக்க தேவையில்லை.

நான் திரும்பி வரும் வரை:

உக்ரேன்-ரஸ்யா, இஸ்ரேல்-பலஸ்தீன் இந்த இரு திரிகளிலும் மட்டும்;

நேரம் செலவழித்து, தகவல்கள், கருத்துகளை பதிந்து - பலதரபட்ட கருத்தளருடனும் ஒருமித்தும், எதிர்த்தும் கருத்து பரிமாறி, இந்த இரு திரிகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்?

செய்வீர்களா? (ஜெ பாணியில் வாசிக்கவும்).

அல்லது வெறும் வாய் மட்டும்தானா?

(உங்களால் முடியும்).

வெறும் வாய் மட்டும்தான் !

கண்ணுக்கு முன் நடக்கும் ஒரு இன அழிப்பு போரை 
ஒரு இன அழிப்பில் இருந்து தப்பியவர்களுக்கு கருத்து எழுதி புரியவைக்க என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் பணத்தை பின் தொடர்ந்தால் எல்லாமும் புரியக்கூடியயதாக இருக்கும் 
இராணுவம் என்பதே பொருளாதார பாதுகாவலர்கள்தான் ஏழை நாடுகள் கூட ஏன் 
பாதுகாப்பு செலவுக்கு கோடி கோடியாக கொட்டுகிறார்கள் என்று பலரும் சிந்திப்பதில்லை 
உண்மையில் ஏழைநாடுகள் கொட்டுகிறார்களா? வற்புறுத்த படுகிறார்களா என்பதுகூட பலருக்கு தெரியாது. மத்தியவங்கி என்றால் என்ன? தேசியவங்கி என்றால் என்ன? உலகவங்கி என்றால்? எங்கள் அன்றாட வாழ்வை பாதிக்கும் கேள்விகள்கூட பலருக்கு இல்லை. அனால் புட்டினுக்கும் உக்ரைனுக்கும் அரசியல் பாடம் எடுத்தால் அதில் போய் எழுதி அதை ஏன் உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். 

அங்கு நடக்கும் செய்திகளை இணைக்க வேண்டும்தான்  யாரவது படிப்பார்கள் அதை நான் செய்வதில்லை சுய ஆக்கம் என்று கூட யாழில் எதையும் எழுதுவதில்லை காரணம் நேரம் இல்லை ஏழு நாளும் வேலை செய்கிறேன். அப்படி ஒன்றை செய்துவந்தால் எனக்கும் அது ஒரு மோட்டிவேஷனாக இருக்கும் ஆனால் இந்த போர் பற்றிய செய்திகளை செய்ய முடியாது. நான் இப்போ மெயின் ஸ்ட்ரீம் மீடியா செய்திகள் பார்ப்பதே  இல்லை தேவையற்ற இரத்த அழுத்தம். இன்டெலிஜென்ஸ் தளம் ஒன்றில் பணம் செலுத்தி பலவருடமாக  அங்கத்தவராக இருக்கிறேன் அவர்கள் ஒரு வாரம் 5 கட்டுரைகள் அனுப்புவார்கள் அதை வாசிப்பதோடு  சரி. இங்கு ஓரளவு நடுநிலையான என் பி ஆர் NPR என்று ஒரு ரேடியோ உண்டு அதுதான் இவ்வளவுகாலமும்  தொடர்ந்து கேட்பேன் காரில் வேலையில் கூட கேட்பது உண்டு. ரஷ்ய உக்கரைன்  காஸா போர்  தொடங்கியதில் இருந்து அதுவும் கேட்பதில்லை தமிழ் பாட்டு மட்டுமே கேட்க்கிறேன். எனது நேரத்தை  செலவழித்து எனக்கு இரத்த அழுத்தம் கூடுவதைத்தானே ...... சொந்த செலவில் சூனியம் என்று சொல்வோம். அதை ஏன் தெரிந்துகொண்டும்  செய்ய வேண்டும். 

அப்படி ஒன்றை செய்யத்தான் வேண்டும் என்றால்  கிரிப்டோ/ வர்த்தகம் என்ற திரியில் பொருளாதார சந்தை செய்திகளை  நீங்கள் வரும்வரை இணைக்கிறேன். அங்கு பெரிதாக குழுவாதம் இல்லை அடுத்தவரை சொறிய  முடியாது என்பதால் பலருக்கும் புளிக்கும் ........ உயிர்ப்புடன் இருக்குமா தெரியாது .... செய்திகளை   இணைக்கிறேன். வேண்டுமானால் நான் இப்போ ஸ்விங் டிரேட் தான் செய்வதுண்டு  நான் வாங்கி விற்கும்  பங்குகளையும்  இணைத்து விடுகிறேன்.   

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இலங்கைக்கு அதே போல் உதவிய சீனா, ரஸ்யா, பலஸ்தீன், கடாபி, கியூபாவை ஆதரிப்பார்களாம். 

ஏன்?

மேற்கு என்றால் அடிப்போம்.

முரண்நகை
இதேபோல்  மேற்கு என்றால் அடிப்போம் என்ற கொள்கை ஆனால் அதே மேற்கில் தான் இன்ப வாழ்கை அனுபவித்து வாழ்ந்து இறப்போம் என்ற உறுதியான கொள்கையும்.
முரண்நகைக்கு இன்னொரு தமிழ் பெயரும் உள்ளது😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

வெறும் வாய் மட்டும்தான் !

கண்ணுக்கு முன் நடக்கும் ஒரு இன அழிப்பு போரை 
ஒரு இன அழிப்பில் இருந்து தப்பியவர்களுக்கு கருத்து எழுதி புரியவைக்க என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் பணத்தை பின் தொடர்ந்தால் எல்லாமும் புரியக்கூடியயதாக இருக்கும் 
இராணுவம் என்பதே பொருளாதார பாதுகாவலர்கள்தான் ஏழை நாடுகள் கூட ஏன் 
பாதுகாப்பு செலவுக்கு கோடி கோடியாக கொட்டுகிறார்கள் என்று பலரும் சிந்திப்பதில்லை 
உண்மையில் ஏழைநாடுகள் கொட்டுகிறார்களா? வற்புறுத்த படுகிறார்களா என்பதுகூட பலருக்கு தெரியாது. மத்தியவங்கி என்றால் என்ன? தேசியவங்கி என்றால் என்ன? உலகவங்கி என்றால்? எங்கள் அன்றாட வாழ்வை பாதிக்கும் கேள்விகள்கூட பலருக்கு இல்லை. அனால் புட்டினுக்கும் உக்ரைனுக்கும் அரசியல் பாடம் எடுத்தால் அதில் போய் எழுதி அதை ஏன் உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். 

அங்கு நடக்கும் செய்திகளை இணைக்க வேண்டும்தான்  யாரவது படிப்பார்கள் அதை நான் செய்வதில்லை சுய ஆக்கம் என்று கூட யாழில் எதையும் எழுதுவதில்லை காரணம் நேரம் இல்லை ஏழு நாளும் வேலை செய்கிறேன். அப்படி ஒன்றை செய்துவந்தால் எனக்கும் அது ஒரு மோட்டிவேஷனாக இருக்கும் ஆனால் இந்த போர் பற்றிய செய்திகளை செய்ய முடியாது. நான் இப்போ மெயின் ஸ்ட்ரீம் மீடியா செய்திகள் பார்ப்பதே  இல்லை தேவையற்ற இரத்த அழுத்தம். இன்டெலிஜென்ஸ் தளம் ஒன்றில் பணம் செலுத்தி பலவருடமாக  அங்கத்தவராக இருக்கிறேன் அவர்கள் ஒரு வாரம் 5 கட்டுரைகள் அனுப்புவார்கள் அதை வாசிப்பதோடு  சரி. இங்கு ஓரளவு நடுநிலையான என் பி ஆர் NPR என்று ஒரு ரேடியோ உண்டு அதுதான் இவ்வளவுகாலமும்  தொடர்ந்து கேட்பேன் காரில் வேலையில் கூட கேட்பது உண்டு. ரஷ்ய உக்கரைன்  காஸா போர்  தொடங்கியதில் இருந்து அதுவும் கேட்பதில்லை தமிழ் பாட்டு மட்டுமே கேட்க்கிறேன். எனது நேரத்தை  செலவழித்து எனக்கு இரத்த அழுத்தம் கூடுவதைத்தானே ...... சொந்த செலவில் சூனியம் என்று சொல்வோம். அதை ஏன் தெரிந்துகொண்டும்  செய்ய வேண்டும். 

அப்படி ஒன்றை செய்யத்தான் வேண்டும் என்றால்  கிரிப்டோ/ வர்த்தகம் என்ற திரியில் பொருளாதார சந்தை செய்திகளை  நீங்கள் வரும்வரை இணைக்கிறேன். அங்கு பெரிதாக குழுவாதம் இல்லை அடுத்தவரை சொறிய  முடியாது என்பதால் பலருக்கும் புளிக்கும் ........ உயிர்ப்புடன் இருக்குமா தெரியாது .... செய்திகளை   இணைக்கிறேன். வேண்டுமானால் நான் இப்போ ஸ்விங் டிரேட் தான் செய்வதுண்டு  நான் வாங்கி விற்கும்  பங்குகளையும்  இணைத்து விடுகிறேன்.   

அதெல்லாம் தெரியா, ஊர் தப்பா பேசும், திரிகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.

போனசாக கிரிப்டோ திரியையும் 🙏.

Done deal.

🤝

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

மேற்கு என்றால் அடிப்போம்.

இலங்கைக்கு மேற்கு உதவியமைக்கு பழி தீர்கிறார்களாம்.

ஆனால் அதே இலங்கைக்கு அதே போல் உதவிய சீனா, ரஸ்யா, பலஸ்தீன், கடாபி, கியூபாவை ஆதரிப்பார்களாம். 

மேற்கு என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் 
எதை எதிர்க்கிறார்கள்?  என்று நீங்கள் விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே 
மற்றவர்கள் சொல்வதும் எழுதுவதும் புரிந்துகொள்ளப்படும்.

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசிலவாதிகள் முதல் பொருளாதாரம்வரை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சொந்த மக்களுக்கே பாதுகாப்பு இல்லாதவர்கள் 
இங்கு உணவு எனும் பெயரில் நஞ்சு விற்கப்படுகிறது உடனடியாக கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். இங்கு விற்கும் உணவுக்கு உங்கள் நாட்டில் கூட தடை ஐரோப்பிய யூனியனில் கூட தடை.
பணம் எப்படி பெறுவது என்று பார்ப்பார்கள் தவிர நீங்கள் நோய் கொண்டாலும் அதில் எப்படி லாபம் பெறுவது? எனும் சிந்தனைதான் இங்கு உண்டு. புடின் சென்ற வருடம் அனைத்து ஜி எம் ஓ GMO பயிர் செய்கைக்கும் ரஷியாவில் தடை விதித்து இருக்கிறார். ஏற்கனவே உணவு தட்டுப்பாடு இருக்கும் சீனா இதில் எந்த நிலை எடுக்கும் என்று தெரியவில்லை பல மெட்ரிக் டோன்ஸ் பசளைகளை சீனா ஏற்றுமதி செய்கிறது அதன் இரசாயன கலவைகள் இப்போது மிக மிக குறைவு ஆனால் பின்னாளில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. 

பெண்களின் கைஜெனிக் தயரிப்புகள்  அனைத்தும் டயோக்சின் ப்ளீச்  Dioxin,  Bleach,  போன்ற கெமிக்கல் கொண்டிருக்கின்றன  இதில் குறிப்பாக தம்பான் என்பதை பெண்கள் தங்கள் பெண் உறுப்புக்குள் செருகிறார்கள்  அது இலகுவாகவே இரத்தத்தோடு கலக்கிறது கேன்சருக்கு அடித்தளமாகவே மைகிறது. 

இவர்கள் உக்ரைன் இஸ்திரேலிகள்க்கு அழுதால்?
அதற்குள் எவ்வளவு பண லாபம் இருக்கும் 
இம்முறை எப்பபோதும் இல்லாததுபோல் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஜூடிஷ்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும்  சியோனிஸ்ட்டுக்களுக்கு  எதிராகவும் ஆர்ப்படடம் செய்கிறார்கள் பார்த்திருப்பேர்கள் என்று நம்புகிறேன். காரணம் சியோனிஸ்ட்டுக்களின் போர் வெறி  உலக மக்களிடம் இருந்து யூதர்களை பிரித்துக்கொண்டு  இருக்கிறது ...... மற்றவர்கள்போல அவர்களால் சுதந்திரமாக எல்லா நாடுகளிலும் திரிய முடியவில்லை. தவிர சியோனிஸ்ட்டுகளின் கொலைவெறி அவர்களுக்கே வெறுப்பை கொண்டுவரும் அளவுக்கு  இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்+

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

@பையன்26 க்கு தெரிந்திருக்கும்.

எப்போ ஜெ போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார் பையா?

இது சம்பந்தாமன் செய்தி ஆதாரம் ஏதும் உள்ளதா?

https://tamil.oneindia.com/news/2009/03/09/tn-jaya-observe-fast-for-sl-tamils.html

வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ!

Read more at: https://tamil.oneindia.com/news/2009/03/09/tn-jaya-observe-fast-for-sl-tamils.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.