Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்

Featured Replies

14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்

புதுடில்லி: டில்லியில்இ 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்இ 45 வயது நடன ஆசிரியை விரித்த காதல் வலையில் சிக்கி அவருடன் தலைமறைவாகி விட்டார்.

டில்லியில்இ பாஷ் மாவட்டத்தில் உள்ள கல்காஜியில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது மகன்இ அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். 14 வயதான அவருக்கு இன்டர்நெட்டில் "சாட்' செய்யும் பழக்கம் உண்டு. இன்டர்நெட்டில் "பேசியபோது' ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான அப்பெண்ணின் வயது 45. திருமணமாகாதவர். அப்பெண்இ மயூர் விஹாரில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.

கமலா நகரில் உள்ள கிளாசிக் டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில்இ பெண் களுக்கு நடனம் கற்றுத்தரும் ஆசிரியையாக உள்ளார்.இன்டர்நெட்டில் ஆரம்பித்த இவர்களின் நட்புஇ சிறிது சிறிதாகஇ காதலாக மாறியது. காதல் மயக்கத் தில் இவர்களுக்கு வயது ஒரு பொருட் டாக தெரியவில்லை. அடிக்கடி நேரிலும் சந்திக்க ஆரம்பித்தனர். சென்ற மாதம் இவர்கள் இருவரும் ஒன்றாக ரெஸ்ட்டாரன்டில் அமர்ந்து உணவருந்துவதைப் பார்த்த மாணவருடைய தந்தையின் நண்பர்இ இந்த காதல் விவகாரத்தைஇ தந்தையிடம் கூறினார்.

மாணவரின் தந்தைஇ மாணவரை அழைத்து விசாரித்தார். "அவரும்இ நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம்' என்றார்.கடந்த ஆக.இ 27ம் தேதி மாணவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து சி.ஆர்.பார்க் போலீசில் மாணவரின் தந்தை புகார் கொடுத்தார். மேலும்இ பள்ளியில் தன் மகனுக்கு பெண் தோழிகளே கிடையாது என்றும் தெரிவித்தார். போலீசாரும் பல இடங்களில் தேடிஇ இறுதியாகஇ நடன ஆசிரியையின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது 70 வயதான தாயார் தான் இருந்தார். ஆசிரியை மாயமாகியிருந்தார்.அந்த மாணவர் தன்னுடைய மொபைல் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் அந்த நடன ஆசிரியை போனை கண் காணித்தபோதுஇ அவர் அந்த மாணவருடன் அரியானாவில் இருப்பது தெரிய வந்தது.இவர்களைத் தேடி போலீசார் அரியானா விரைந்துள்ளனர்.

தேன்கூடு

அந்த மாணவினிற்கு "ஒடிபஸ் காம்ப்ளெக்ஸ்" இருக்கும் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதேமாதிரி எங்கடை ஊர்வழியவும் ரீச்சர்மார் தாங்கள் படிப்பீச்ச பொடியளை இழுத்துக்கொண்டு ஓடின கதையள் கனக்க இருக்கு கண்டியளோ :D

குமாரசாமியினால் சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது *******

Edited by குமாரசாமி

odipus complex க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இது pedophile case :D

Edited by Snegethy

பெண்களிலும் pedophile இருக்கிறீனமோ?

டான்ஸ் படிப்பிக்கும் ஆசிரியை எப்படிப்பட்ட டான்ஸ் கற்பித்து வந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களிலும் pedophile இருக்கிறீனமோ?

டான்ஸ் படிப்பிக்கும் ஆசிரியை எப்படிப்பட்ட டான்ஸ் கற்பித்து வந்தார்?

நீங்களும் அதே மாயை உலகில் தான் இருக்கிறீங்களா. நானும் ஏதோ நினைச்சிட்டன். தப்பாப் போச்சு.

பெண்களில் என்னதான் இல்லை உலகில். ஏலவே சிநேகிதி திறந்த ஒரு திரியில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கே.

பெண்களைப் பற்றிய மாயை உலகுக்குள் இன்னும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது சாட்சி.

ஆனா நம்ம பெண்களோ... பலே கில்லாடிகள். இணையத்தில சாட்டிங் வந்ததும் வந்திச்சு.. அவங்க சுயரூபம் புட்டுக்கிட்டு வருகுது...! :o:D

females are not only pedophiles but also sex predators.

http://www.childpredatorbook.com/research/female.html

Myth # 1 "All pedophiles are men"

No they are not! A pedophile can be a man or a woman. There are undoubtably MORE pedophiles that are men than women, but female child lovers do exist. Part of the reason society accepts this myth is related to the usual male-bashing and refusal to believe anything "bad" about women or their intentions. I am not saying pedophilia is bad, but I suspect you understand my point. But women are quite capable of being pedophiles, I suggest if you doubt this you need to look a little more closely at what is going down in the real world. Still, it is true that more men are pedophiles. SOME of the reasons for this disparity are: (1) Women have alot more outlets via easier access to kids which leads to less "desperate" behavior which would be noticable to society at large. A woman can be around kids more easily and not be suspected by our society. A man does this and he is immediately viewed with suspicion. This does not mean they are not there-only that society refuses to believe they are for real, and this helps women pedos get their relief more easily than male pedos. If a woman gives a child a bath, how many would suspect her of arousal? If a man does the same it is much more likely to be considered. Women often get trusting, unchallenged access to these outlets even if they are closet pedos which relieves pressure. Men are forced to use pedo Usenet and illegal pictures to get relief, and many now want this outlet taken away! No wonder men appear more desperate and are caught "acting out" much more often than women!

http://www.lege.cz

I am not saying pedophilia is bad

இதுவும் மேலே குறித்த pedophilic கட்டுரையாளரின் நிலைப்பாடு. சட்ட ரீதியா.. pedophilic behaviour in certain level is commonly seen as kind of criminal act. that has been band all over the world.. சிறுவர் பாலியல் ஒரு குறித்த எல்லையில் உலகெங்கும் தடை செய்யப்பட்ட கிறிமினல் குற்றமாக அல்லது சட்டவிரோத செயலாக நோக்கப்படுகிறது.. மேலே உள்ள கட்டுரை.. பெண்களும் சிறுவர் பாலியலில் எப்படி ஈடுபடுகின்றனர் என்பதை இனங்காட்ட கொண்டு வரப்பட்டது. அதன் சிறுவர் பாலியல் நியாயப்படுத்தலை அங்கீகரிபதல்ல நோக்கம்.

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்காலபோவான் உங்களுக்கு ஒரு மனசு இல்லையா. நான் எங்கையோ ஏமளாந்தி கொண்டு இருக்கிற நேரமா பார்த்து காகம் கையில வச்சிருந்த வடையை டப் ஏண்டு வந்து பறிக்கிறமாதிரி யாழில எண்ட இமேஜுக்கு ஆப்பு வைக்கிறீங்கள்.. :P

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான் உங்களுக்கு ஒரு மனசு இல்லையா. நான் எங்கையோ ஏமளாந்தி கொண்டு இருக்கிற நேரமா பார்த்து காகம் கையில வச்சிருந்த வடையை டப் ஏண்டு வந்து பறிக்கிறமாதிரி யாழில எண்ட இமேஜுக்கு ஆப்பு வைக்கிறீங்கள்.. :P

ஏன் யாழில உங்க image நல்லாத்தானே இருக்கு. அங்க எங்க ஆப்பு இருக்கு தலைப்பா தானே இருக்கு.

av-3376.jpg:D

14 வயது மாணவனுக்கு ஒரு 45 வயது பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அந்தப் பெண்ணுடன் வாழ்கின்ற அளவிற்கு போய் இருப்பதால், மாணவனிற்கு "ஒடிபஸ் கொம்ப்ளெக்ஸ்" இருக்கலாம்.

14 வயது மாணவன் அந்தப் பெண்ணுடன் ஒரிரு சந்திப்பை மட்டும் மேற்கொண்டிருந்தால், அதைப் பற்றி வேறு மாதிரி சிந்திக்கலாம். அந்தப் பெண்ணுடன் வாழவே போய் விட்டதால், "ஒடிபஸ் கொம்ளெக்ஸ்" பற்றி சிந்தித்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்

டில்லியில் இருந்து அரியானா வரைக்கும் ஓடியிருக்கினம் எண்டது அடுத்த ஒலிம்பிற்கு ஒரு பொருத்தமான ஆட்களாகத் தான் இருக்குது. அடுத்த ஒலிம்பிற்கு இந்தியாவின் சார்பாகப் போகச் சொல்லி பரிந்துரை செய்யுறன்.

சபேசன்,

இந்த வயது முதிர்ந்த பெண்ணை இந்த மாணவன் ஒன்லைனில் பழகிய பின் தான் அறிந்தே உள்ளான். ஒன் லைனில் பழக முயல்கையில் இப்பெண் ஒரு பெண்ணாக (அதுகும் எந்த உறவு முறையும் அற்ற முற்றிலும் பிறத்தியான, பல மைல்களிற்கு அப்பால் வசிக்கின்ற ஒரு பெண்ணாக) மட்டும் தான் அவனிற்கு அறிமுகமாகியுள்ளாள். பின்னர் தான் அப்பெண்ணின் வயது என்ற விடயமே பையனிற்குத் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த உறவில் வயதை மட்டும் வைத்து இதனை ஓடிபஸ் கொம்பிளெக்ஸ் என்பது, சற்றும் பொருத்தமற்றது. (உளவியலில், ஓடிபஸ் கொம்பிளெக்ஸ் என்பதற்கு, வயது முதிர்ந்தவரோடான உறவு ஆசை என்பதல்ல அர்த்தம்

என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்)

மேலும், இந்தச் செய்தி தொடர்பில் "கொம்பிளெக்ஸ்" என்ற பதத்தை அந்தப் பையனிற்கு அடைமொழியாக்குவதானது, உண்மையில் இங்கு எமது சமூகத்தில் ஆண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் தொடர்பில் எத்தனை அறியாமை நிலவுகிறது என்பதனைத் தான் காட்டுகின்றது.

மேலும், கொம்பிளெக்ஸ் என்ற பதம் பொதுவாக பலவீனமாகச் சித்தரிக்கப்ட்டாலும் நீங்கள் இங்கு அப்பதத்தை உங்களையும் அறியாது ஒரு பலமாகவே சித்தரிக்கின்றீர்கள். எப்படி என்றால், இந்தப் பையனிற்கு வயது முதிர்ந்த பெண்ணோடான உறவில் ஏற்பட்ட நாட்டத்தினால் தான் அவன் இந்த பெண்ணோடு சென்றுள்ளான் என்பதே உங்களின் அடிப்படைக் கருத்து. அதாவது, இங்கு அந்தச் சிறுவன் ஒரு victim என்பதற்கான சிந்தனை துளியளவும் இல்லாது, அவன் ஆண் என்ற ஒரு சிருஸ்டிப்பாக, ஆண் தனது விருப்பமமொன்றை நிறைவேற்றச் சென்றுள்ளான் என்ற ரீதியிலேயே அந்தக் கொம்பிளெக்ஸ் என்ற பதம் இங்கு அர்த்தம் பெறுகின்றது.

இவ்வாறான விடயங்கள் அனைத்திலும் "பாதிப்பவர்" (perpetrator/abuser) மற்றும் "பாதிக்கப்படுபவர்" (victim) என்ற இரு பாத்திரங்கள் இருக்கும்.

எமது சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு சம்மபவத்தில் "பாதிப்பவர்" பாத்திரம் ஒரு வளர்ந்த ஆணாக இருந்தால் அதனைப் உடனே சரியாக வகைப்படுத்திப் புரிந்து கொள்ளுகின்ற நம்மவர்கள், "பாதிப்பவர்" பாத்திரம் பெண்ணாக இருக்கையில மடடும், ஏனோ சம்பவத்தை ஒரு பாதிப்பாகக் கூடப் பார்க்கத் தவறி விடுகின்றனர்.

உண்மையில் எமது சமூகத்தில் ஆண் சிறார்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் மீதான ஒரு பலத்த அறியாமை இன்னமும் நிலவுகிறது என்பது கவலைக்குரியது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர் பலர் பாதிப்பவர் பெண் என்றால் ஏனோ அதை உணர மறுக்கின்றனர்

இன்னுமொருவன் நீங்கள் மேற்குறிப்பட்டதில் ஆண் என்பதுக்கு பதிலாக பெண் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

********

Edited by harikalan

நம்மவர் பலர் பாதிப்பவர் பெண் என்றால் ஏனோ அதை உணர மறுக்கின்றனர்

இன்னுமொருவன் நீங்கள் மேற்குறிப்பட்டதில் ஆண் என்பதுக்கு பதிலாக பெண் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

சஜீவன்,

இங்கு 45 வயதுப் பெண்ணிற்கும்; 14 வயதுப் பையனிற்குமிடையேயான உறவில் 45 வயதுப் பெண் தான் பாதிப்பவர் என்பதனால், பெண் என்று தான் அதில் வரவேண்டும். இருப்பினும், உங்களது கருத்தை உள்வாங்கி, இயன்ற வரை எனது கருத்தின் வசன அமைப்பை கருத்து மயக்கம் வராத வாறு மாற்றியுள்ளேன். மொத்தத்தில் நான் கூற வருவது, 45 வயது ஆண்

ஒரு 14 வயதுப் பெண்ணை இவ்வாறு அழைத்துச் சென்றால் அதை உடனே சரியாக வகைப்படுத்திவிடுகின்ற நாம் 45 வயதுப்

பெண் 14 வயது சிறுவனை அழைத்துச் சென்றால் மட்டும் வகைப்படுத்தலில் பிழை விட்டுவிடுகிறோம் என்பது தான்.

கலைச் சொற்கள் தொடர்பில், சில சமயங்களில் இவ்வாறு சிக்கல்கள் வந்து விடுகின்றன. "பாதிப்பவர்" மற்றும்

"பாதிக்கப்படுபவர்" என்பன சரியான பதங்களா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ--ஆ சூர்யா -- சிம்ரன் கதைமாதிரியெல்லோ கிடக்குது. :icon_mrgreen::lol:

எனக்குத் தெரிந்து என்பது oedipus complex தாய் மீது அல்லது primary caretaker மீது வருவது...அதாவது தனக்குக்கிடைக்க வேண்டிய முழு அன்பையும் பராமரிப்பையும் தந்தை பகிர்ந்துகொள்ள வரும்போது தந்தை மீது ஏற்படுகின்ற கோவம்தான் தாய் மீது கூடுதலான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. எனக்கும் என் தந்தைக்கும் என்ன வித்தியாசம்?? தந்தை தாயுடன் உடலுறவு கொள்கிறார் அதனால்தான் தாய் தந்தை மீது பாசமாக இருக்கிறார் எனவே அதையே நானும் செய்தால் தாயின் முழு பாசமும் தனக்கே கிடைக்கும் என்ற ஆசையில் தனயனுக்குத் தாய் மீது ஏற்படும் sexual desire ஐத்தான் oedipus complex என்று சொல்கிறோம்.

ஒரு ஆணுக்கு முதலாவதாக ஏற்படும் பாலின ஈர்ப்பு அவனது தாய் மீதுதான் இருக்கும் என்று உளவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். 3 - 4 வயதில் அறியாப் பருவத்தில் தாய் மீது இந்த ஈர்ப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள். அவன் சந்திக்கின்ற முதலாவது பெண்பால் அவனது தாயாக இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். தந்தைக்குப் போட்டியாக இது ஏற்படுகிறது என்று அவர்கள் சொல்வதாக நான் நினைக்கவில்லை. இந்த ஈர்ப்பால் தந்தை மீது பொறாமை ஏற்படும் என்றுதான் சொல்கிறார்கள்.

இந்த ஈர்ப்பு கொஞ்சம் வயது வந்ததும் தானாக இல்லாது போய்விடும். சிலருக்குப் போகாது. ஆனால் தாயின் மகத்துவம் அறிந்த காரணத்தால், அவனுடைய நாட்டம் தாயின் வயதை ஒத்த பெண்களிடம் போகும்.

இந்தப் பிரச்சனையை ஒடிபஸ் கொம்ப்ளெக்ஸ் என்பார்கள்.

இந்தப் பெயர் ஒரு கிரேக்கக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. தாயென்று அறியாமல் தன் தாயுடன் ஒடிபஸ் என்னும் அரசன் வாழந்த சம்பவம் அந்த கதையில் வருகிறது.

ஆணுக்கு ஏற்படும், இதே பிரச்சனை பெண் குழந்தைகளுக்கும் தந்தை மீது ஏற்படும் என்கிறார்கள். அதற்கு எலக்ரா கொம்ப்ளெக்ஸ் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தானுங்க 16 வயது பொண்ணும் , 45 வயது மனிதரும் விரும்பி கலியாணம் கட்டிக் கொண்டாங்கள் . இது எங்கே நடந்தது எண்டு கேக்குறீங்களா ? ஒர் ஐரோப்பிய நாட்டில் தமிழ் குடும்பத்தில் தான்.

பெண்ணைப்பெற்றவர் வீட்டுக்கு விருந்தினராய் அடிக்கடி வந்து போனவர் .

கடைசியில் இப்படியாகிவிட்டது .

இதை நினைத்து பெண்ணை பெற்றவர்கள் கலங்கி நின்றதை கண் முன்னே கண்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தானுங்க 16 வயது பொண்ணும் , 45 வயது மனிதரும் விரும்பி கலியாணம் கட்டிக் கொண்டாங்கள் . இது எங்கே நடந்தது எண்டு கேக்குறீங்களா ? ஒர் ஐரோப்பிய நாட்டில் தமிழ் குடும்பத்தில் தான்.

பெண்ணைப்பெற்றவர் வீட்டுக்கு விருந்தினராய் அடிக்கடி வந்து போனவர் .

கடைசியில் இப்படியாகிவிட்டது .

இதை நினைத்து பெண்ணை பெற்றவர்கள் கலங்கி நின்றதை கண் முன்னே கண்டேன் .

16 வயதுப் பொண்ணு விரும்பினாக் கட்டிக்கலாம்.. கறுப்பி அக்கோய். அதற்கு ஐரோப்பிய சட்டங்கள் இடமளிக்கும். 14 வயசுப் பையன கட்டிக்க முடியாது. அதற்கு சட்டத்தில இடமில்ல...! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தானுங்க 16 வயது பொண்ணும் , 45 வயது மனிதரும் விரும்பி கலியாணம் கட்டிக் கொண்டாங்கள் . இது எங்கே நடந்தது எண்டு கேக்குறீங்களா ? ஒர் ஐரோப்பிய நாட்டில் தமிழ் குடும்பத்தில் தான்.

பெண்ணைப்பெற்றவர் வீட்டுக்கு விருந்தினராய் அடிக்கடி வந்து போனவர் .

கடைசியில் இப்படியாகிவிட்டது .

இதை நினைத்து பெண்ணை பெற்றவர்கள் கலங்கி நின்றதை கண் முன்னே கண்டேன் .

அந்த 45 வயது கிழவனுக்கு இரண்டொரு இருட்டடி போட மிச்சம்மீதியாய் இருக்கிற 45,50 வயதுக்கார வாலில்லாக்குரங்குகள் தானாகத்திருந்தி வழிக்கு வருவினம் :angry:

எனக்குத் தெரிந்து என்பது oedipus complex தாய் மீது அல்லது primary caretaker மீது வருவது...அதாவது தனக்குக்கிடைக்க வேண்டிய முழு அன்பையும் பராமரிப்பையும் தந்தை பகிர்ந்துகொள்ள வரும்போது தந்தை மீது ஏற்படுகின்ற கோவம்தான் தாய் மீது கூடுதலான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. எனக்கும் என் தந்தைக்கும் என்ன வித்தியாசம்?? தந்தை தாயுடன் உடலுறவு கொள்கிறார் அதனால்தான் தாய் தந்தை மீது பாசமாக இருக்கிறார் எனவே அதையே நானும் செய்தால் தாயின் முழு பாசமும் தனக்கே கிடைக்கும் என்ற ஆசையில் தனயனுக்குத் தாய் மீது ஏற்படும் sexual desire ஐத்தான் oedipus complex என்று சொல்கிறோம்.

சினேகிதி,

நான் படித்ததும் இதே தான்.

ஆணுக்கு ஏற்படும், இதே பிரச்சனை பெண் குழந்தைகளுக்கும் தந்தை மீது ஏற்படும் என்கிறார்கள். அதற்கு எலக்ரா கொம்ப்ளெக்ஸ் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை

இங்கு நாங்கள் இதை ஒரு விவாதமாக எடுத்துக் கதைப்பதற்கான ஓரே ஒரு காரணம், இங்கு abuse என்ற விடயத்தையே நீங்கள் முற்றாக மறக்கின்றீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே. பதின் நான்கு வயதுப் பையன் என்பவன் சிறுவன் என்பதை எக்காரணம் கொண்டும் இங்கு மறக்க முடியாது (அவனோடு சம்பந்தப் பட்ட பெண் எவ்வகையிலும் அவனிற்கு முன்னறிமுகமோ உறவுமுறையோ அற்ற,இணையத்தளத்தில் வயது பற்றிக் கூறாது அறிமுகமாகி இச்சிறுவனின் மனதில் ஒரு ஈர்பினை உண்டாக்கிய ஒரு பெண் மட்டுமே) . அதனால் தான் இங்கு நீங்கள் ஓடிபஸ் கொம்பிளெக்ஸ் என்று நீங்கள் தவறாக வகைப்படுத்துவது வருத்தம் அளிக்கின்றது.. ஏனெனில், ஓடிபஸ் கொம்பிளெக்ஸ் என்று வகைப்படுத்திய மாத்திரத்தில் இங்கு சிறுவன் தனது விருப்பின் பெயரிலேயே இக்காரியத்தில் ஈடுபடுகின்றான் என்பது போன்றும், இது ஆண் சிறுவர்களில் ஒரு பொதுவான Developmental behaviour என்பது போன்றதுமான எண்ணம் தான் மேலோங்குமே அன்றி, ஒரு வளர்ந்த பெண்ணினால் ஒரு சிறுவன் இங்கு victim ஆக்கப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது என்பது மறைக்கப்பட்டுவிடுகிறது. அதனால் தான் அது தவறு. அவ்வளவு தான்.

Edited by Innumoruvan

என்ன கொடுமை இப்படி எல்லாம் நடகிறதா!!என்னவோ என்ட மொண்டசூரி லெக்சருக்கு இப்ப தான் 28 வயசு... :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.