Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ என்னை அழைத்தது ஒரு முரண்நகை” - சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அழைத்தது ஒரு முரண்நகை

adminNovember 2, 2023
swasthika.jpg?fit=1024%2C576&ssl=1

 

“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என தொனிப்பொருளில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் கருத்துரை வழங்க இருந்தார்.

அந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் தெற்கில் நடைபெற்ற புத்தக வெளியீடு ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் , பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பை வெளியிட்டமையால் சட்டத்தரணியின் கருத்துரை நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.  இந்நிலையில் சடடத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,

சமகால பிரச்சினைகளுக்கான சட்ட மன்றத்தின் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என்ற விரிவுரை இரத்து செய்யப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எழுதப்படும் கடிதம்.

இந்த விரிவுரை திடீரென ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எழுப்பப்படும் ஊடகக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பொதுக் கடிதத்தை எழுதுகிறேன்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு பாரதூரமான பிரச்சினையை எழுப்பவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த பொதுக்கடிதத்தை உரிய முறையில் பரிசீலிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

31 ஒக்டோபர் 2023 அன்று “நெருக்கடியான காலத்தில் நீதித்துறை சுதந்திரம்”என்ற தலைப்பில் சட்டத்துறைத் தலைவரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான் பேச அழைக்கப்பட்டேன். மூன்று காரணங்களுக்காக நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். முதலாவதாக, நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதோடு தொடர்ந்து நீதிமன்றங்களோடு ஈடுபாட்டில் இருக்கிறேன். இரண்டாவதாக, இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திப்பதற்கும், கருத்துக்கள், கோட்பாடுகள் பற்றியும் அவை நடைமுறையில் எவ்வாறு வெளிவருகின்றன என்பதைப் பற்றியும் கலந்துரையாடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நான் எண்ணினேன். மூன்றாவது அண்மை காலத்தில் சிங்கள தேசியவாதிகளிடம் இருந்து இனரீதியான அச்சுறுத்தல்களின் பிரகாரம் பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு சரவணராஜவின் பதவி விலகலுக்குக் காரணாமாக இருந்த இனரீதியான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்திலும் நான் ஈடுபட்டிருந்தேன்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி, எனது விரிவுரைக்கு ஒரு நாள் முன்னதாக, நான் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றப் போவது தொடர்பில் மாணவர் சங்கம் அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்று சட்டத்துறைத் தலைவர் என்னிடம் தெரிவித்தார். கடந்த மாதம் நான் ஆற்றிய மற்றுமொரு உரையில் விடுதலைப் புலிகளை ஒரு பாசிச அமைப்பாகக் கட்டமைத்திருந்தேன் என்பதுதான் இந்த அதிருப்திக்கான காரணம் என்று கூறினார். எப்படியிருந்தாலும், விரிவுரை திட்டமிடப்பட்டவாறே இடம்பெறும் என்று அவர் என்னிடம் கூறினார்.

விரிவுரை நடைபெறும் நாளில், பேசுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனி நிகழ்வை நடத்துவது சாத்தியமில்லை என்று சட்டத்துறைத் தலைவர் எனக்கு தெரிவித்தார்.

எனவே பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிகழ்வை நடத்த கலைப் பீடத்தின் பீடாதிபதி அழைப்பு விடுத்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. இடத்தை மாற்றுவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று துறைத் தலைவரிடம் தெரிவித்தேன். நான் பல்கலைக்கழகத்திற்கு வந்ததும், பீடாதிபதியை சந்திக்க விரும்புவதாகவும் நான் கேட்டுக் கொண்டேன்.

பீடாதிபதியை சந்தித்த போது பதில் துணைவேந்தரும் தானும் இந்த நிகழ்வை‘ஒத்திவைக்க’ முடிவு செய்திருப்பதாகவும், ‘அசௌகரியத்தை (unpleasant)’தவிர்க்க விரும்பியதால் அவர்களால் இந் நிகழ்வை நடத்த முடியாது என்றும் பீடாதிபதி என்னிடம் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசியதாகவும், எதிர்ப்பை வெளிப்படுத்த மாற்று வழிகளை அவர்களுக்கு அளித்ததாகவும் பீடாதிபதி என்னிடம் தெரிவித்தார். எனினும் இந்த நிகழ்வு தொடரக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தனர் என்றும் மாணவர்கள்‘தீவிர உணர்வுகளுடன் (extreme emotions)’ செயல்படுவதாகவும், அவர்கள்‘முதிர்ச்சியற்ற (immature)’ முறையில் நடந்துகொள்ளுவதாகவும் அவர் கூறினார்.

நானும் ‘அதீத உணர்ச்சிகளின்’ கீழ் அறிக்கைகளை வெளியிட்டேன் என்றும், எனது முந்தைய உரையில் விடுதலைப் புலிகளை அந்த வகையில் நான் பரந்த அளவில் வர்ணித்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். என்னுடன் தனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் என்னை அழைக்க தான் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

பதிலுக்கு, ஒரு நிகழ்வைக் கூட நடத்த முடியாத நிலையில், நான் ‘தீவிரஉணர்ச்சிகளுடன்’ பேசினேன் என எனக்கு விரிவுரை செய்யக்கூடிய ஒரு இடத்தில் அவர் இல்லை என்று நான் பீடாதிபதியிடம் கூறினேன். இந்த நிகழ்வை இரத்துச் செய்ததன் மூலம் பல்கலைகழக நிர்வாகம் புலிகளின் கருத்துக்கு மாறான கருத்துக்களை பல்கலைகழகத்திற்குள் அனுமதிக்காது என்ற செய்தியை எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அனுப்பியுள்ளதாக நான் மேலும் கூறினேன்.

பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை என்று நான் மேலும் கூறினேன். நிகழ்வைத் தொடருமாறு நான் பீடாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனது விரிவுரையை இரத்துச் செய்யும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்ததன் மூலம், பல்கலைக்கழகத்திற்குள் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிராக ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பரந்தளவில், மாணவர் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகம், ஜனநாயக வெளியின் மீதான இந்த அப்பட்டமான பாதிப்புக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்றும், இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் நடப்பதை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

எனது பங்கிற்கு, பீடாதிபதி உறுதியளித்த அதே விரிவுரைத் தொடருக்கான’ஒத்திவைக்கப்பட்ட’அழைப்பிற்காக நான் காத்திருக்கிறேன். இந்த விடயத்தில் தாங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் எனது கருத்தைப் பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இடமளிப்பீர்கள் எனவும், வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகளை உடையவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எந்தத் தடையும் இல்லாமல் உரையாடல்களிலும், விவாதங்களிலும் ஈடுபடுவதற்கான கலாசாரம் ஒன்று நிலவுவதனை உறுதி செய்வீர்கள் எனவும் நம்புகின்றேன் – என்றுள்ளது.

spacer.png
 
  • Replies 69
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவாஸ்டிக்காவின் முந்திய உரை எங்கே கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்+

இந்த அம்மணி, இதே கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு சிங்களப் பல்கலைக்கழத்தினுள் சென்று சிங்கள அரசையோ இல்லை அவர்தம் படைத்துறை இயந்திரத்தையோ இச்சொல்லுக்கு நிகரான அரசை விமர்சிக்கத்தக்க சொல்கொண்டு விமர்சிப்பாவோ?... ஏலாதுதானே.

அப்ப தமிழன் என்டால் மட்டும் என்ன இழிச்சவாயனோ.

இச் ******** தமிழரைச் சீண்டும் கருத்துக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பை வரவேற்கிறேன்.

(இக்கருத்தும் பாசிசமாக தெரியலாம், உணர்வற்றவர்களுக்கு)

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

 

யாழ் பல்கலைக்கழகத்தில் பொதுவாகவே உள்ளக அரசியல் நிறைய உள்ளன. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மூதவைக்குள்ளேயே பல போட்டிகள், இழுபறிகள். ஒருத்தன் சிரேஷ்ட விரிவுரையாளராக வரப்போறான் என்றால் மற்றவன் விடமாட்டான் இழுத்துபிடிப்பான். 

இப்போது உள்ள துணைவேந்தர் தற்போதைக்கு சிறந்த தெரிவு என கூறுகின்றார்கள். 

துணைவேந்தர், பீடாதிபதிகள் எல்லாம் ராடார் பார்வையின் கீழ் உள்ளார்கள். இவர்கள் தம் சுயவிருப்பில் நினைத்தமாதிரி எல்லாம் செய்யமுடியாது. மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள்.

ஆட்கள் ஓரம் கட்டப்படுவது புதிய விடயம் இல்லை. அது அதை எதிர்கொள்பவருக்குத்தான் புதிய விடயம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

எப்படி??

எதிர்ப்பு தாயகத்தில் இருந்து தான் வந்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசாங்கங்களின் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான அடக்குமுறைகள் இன ஓதுக்க ல்கள்  குறித்து பல தடவைகள் சிங்களவர்களின் கூட்டங்களில் இவர் உரையாற்றியுள்ளார். அதற்காக சிங்கள இனவாதிகளின் கடும் கோபத்துக்கும் ஆளாகி இருந்தார். 

இறுதி யுத்தத்தில் சரண்டைந்த போராளிகள் தொடர்பான விடயங்களில் ராஜபக்ச அரசுக்கு எதிராக வழக்குகளை நடத்தியும் உள்ளார். இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. புலம் பெயர் நாடுகளில் வாழும் கடதாசிப் புலிகள் அவர்களுடைய வழமையான  பாணியில் இவரை மோசமான தூஷணவார்ரத்தைகளால் திட்டி எழுதியிருந்ததை இவரது முக நூலில் தெரிவித்திருந்தார்.  

Edited by island

இவரது முன்னைய கொழும்பு உரையை நான் முழுமையாக கேட்கவில்லை, ஆனால் அதில் புலிகளை பாசிஸவாதிகள் என்று குறிப்பிட்டு இருந்தார் என முகனூல் போராளிகள் பொங்கி இருந்தமையை பார்த்து உள்ளேன்.

இதைத்தவிர, இவரை மனித உரிமை செயற்பாட்டாளராகவும் அரகலய போராட்டத்தில் சிங்கள அரசுக்கு எதிராக, கோத்தாவுக்கு எதிராக போராடியதையும், உத்தேச பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்திற்கு எதிராகவும், 2022 இல் தடுத்துவைக்கப்பட்ட ஒருவர் பொலிஸ் நிலையத்தில் கொல்லப்பட்டதுக்கு எதிராகவும், பெண்களை முகனூலில் பாலியல் ரீதியில் தாக்கி எழுதிய சிலருக்கு எதிராக குரல் கொடுத்ததையும் கண்டுள்ளேன்.

சரி, இவர் புலிகளை பாசிசவாதிகள் என்று கூறியமைக்காக மட்டுமே இவரை பல்கலைகழகத்தில் உரையாட அனுமதிக்கவில்லை எனில், அது நிச்சயம் வரவேற்க வேண்டிய விடயம் மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டிய விடயமும் ஆகும். புலிகள் மீது மாற்றுகருத்து கொண்ட ஒருவரை, அவரது அந்தக் கருத்துக்காக மட்டும் உரையாட அனுமதிக்காமையும் அச் செயலை வரவேற்பதும், இன்னும் எம்மில் பலர் தொடக்க புள்ளியிலேயே நிற்கின்றோம் என்பதைத் தான் காட்டுகின்றது.

புலிகளை பயங்கரவாதிகள் என்று பிரகடனப்படுத்தி இருக்கும் நாடுகளில், அவர்களின் கொடியையும், தலைவர் பிரபாகரன் அவர்களின் படங்களையும் தாங்கி பிடித்து கொண்டு போராட்டங்களில் பங்கு கொண்டு கருத்துச் சுதந்திரத்தின் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு பிரிவினர், யாழ் பல்கலைக்கழகத்தின் இந்த செயலை ஆதரிப்பதும் ஒரு பெரிய முரண் நகை.


 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால தமிழ் தலைமைகள் பற்றிய ஏனைய திரிகளிலேயே யாழ் பல்கலை மாணவர் சமூகம் எவ்வளவு பிற்போக்கான, அறிவுபூர்வமற்ற ஒரு அணி எனக் குறிப்பிட்டேன்! இதோ இன்னொரு சாட்சி என் கருத்துக்கு.

அம்பிகா சற்குணநாதனை அவரது மனித உரிமை ஆதரவு நிலைப்பாட்டிற்காக கான்சல் செய்தது போலவே இப்போது இன்னொரு மனித உரிமைச் செயற்பாட்டாளர் கான்சல். வேறு சில திரிகளில் தமிழர்களுக்கு தாயகத்தில் அடுத்த தலைவர்களாக வர யார் இருக்கின்றனர்? என்று கேட்ட போது ஒரு பெயரைத் தானும் சொல்ல முடியாமல் தொண்டையில் முள் சிக்கித் தவித்தார்கள் யாழ் கள தீவிர தேசியர்கள்😂, இது தான் காரணம்: தகுதியும் துணிவும் இருக்கும் இளையோருக்கு வரவேற்பில்லை!


இனி தமிழ் நாட்டு அரசியல் போல "வாரிசு" அரசியல் தான் செய்யலாம்! வாரிசுகள் (Nepo Babies😎) வந்து அரிதாரம் பூசி அப்பர்மார் போலவே நடித்து தங்கள் வயிற்றை வளர்ப்பர்! தீவிர தேசியர்கள் மேற்கில் இருந்து இணைய வெளியில் நெருப்புக் கக்குவர். தாயகம் கல்வியும் அபிவிருத்தியும் நலிந்து சீரழியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி சொல்வது தான்

புலிகளை அதன் தலைமையை போற்ற வேண்டும் பாராட்டவேண்டும் என்றில்லை. ஆனால் அவர்கள் தாயகத்துக்காக போராடிய போராளிகள் என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆகக் குறைந்த தமிழரின் வரலாற்றை திரிக்காக தன்மை.

ஆனால் இங்கே ஒருவர் அவர்களை பாசிஸ்டுகள் என்பதும் அதை கண்டும் காணாமலும் அவர் செய்யும் சிறு விடயங்களை முன்னிறுத்தி அவர் பாசிஸ்டுகள் என்பதையும் ஆமோதிப்பதும் மிகத் தவறான வரலாற்று தவறுகளுக்கு இட்டு செல்லும். மாவீரர்களை யும் மண்ணுக்காக போராடியவர்களையும் பாசிஸ்டுகள் என்பவர்களால் ஒருபோதும் தமிழர் தாயகப் பகுதிகளில் தீர்வுகளையோ சமரசங்களையோ சர்வதேச பிரசாரங்களையோ செய்யமுடியாது. அப்படி செய்ய நினைத்தால் அல்லது அனுமதித்தால் தமிழர் வரலாற்றில் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஏதுமில்லை. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

நான் அடிக்கடி சொல்வது தான்

புலிகளை அதன் தலைமையை போற்ற வேண்டும் பாராட்டவேண்டும் என்றில்லை. ஆனால் அவர்கள் தாயகத்துக்காக போராடிய போராளிகள் என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆகக் குறைந்த தமிழரின் வரலாற்றை திரிக்காக தன்மை.

ஆனால் இங்கே ஒருவர் அவர்களை பாசிஸ்டுகள் என்பதும் அதை கண்டும் காணாமலும் அவர் செய்யும் சிறு விடயங்களை முன்னிறுத்தி அவர் பாசிஸ்டுகள் என்பதையும் ஆமோதிப்பதும் மிகத் தவறான வரலாற்று தவறுகளுக்கு இட்டு செல்லும். மாவீரர்களை யும் மண்ணுக்காக போராடியவர்களையும் பாசிஸ்டுகள் என்பவர்களால் ஒருபோதும் தமிழர் தாயகப் பகுதிகளில் தீர்வுகளையோ சமரசங்களையோ சர்வதேச பிரசாரங்களையோ செய்யமுடியாது. அப்படி செய்ய நினைத்தால் அல்லது அனுமதித்தால் தமிழர் வரலாற்றில் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஏதுமில்லை. 

200%

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2023 at 06:28, கிருபன் said:

கடந்த மாதம் நான் ஆற்றிய மற்றுமொரு உரையில் விடுதலைப் புலிகளை ஒரு பாசிச அமைப்பாகக் கட்டமைத்திருந்தேன் என்பதுதான் இந்த அதிருப்திக்கான காரணம் என்று கூறினார்.

இவா சட்டத்தரணியா.. அல்லது சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசியா என்பது தான் முதல் கேள்வியே.

ஏனெனில்.. புலிகள் அமைப்பை எல்லாரும் தங்கள் மண்டை ஓட்டுக்குள் இருக்கும் களிமண்ணுக்கு ஏற்ப கட்டமைப்பு படுத்தி அழிச்சும் முடிச்சிட்டார்கள்.

இப்போ இவா என்ன மண்ணாங்கட்டிக்கு.. அதே களிமண்ணை பிசைஞ்சு.. இன்னொரு கட்டமைப்பு கட்டுவதில்... ஈடுபடுகிறா..?!

இல்லாத புலிகள்.. பாசிசமாக இருக்கட்டும்.. பயங்கரவாதியாக இருக்கட்டும்.. விடுதலைப் போராளியாக இருக்கட்டும்.. புலிகள்.. தாகம் தமிழீழத் தாயகம் என்ற மக்களின் உரிமைக்காக சொந்த மண்ணின் விடுதலைக்காக உயிர்கொடை கொடுத்தவர்களை விமர்சனம்.. கட்டமைக்கிறம் என்ற போர்வையில் மலினப்படுத்த இந்தக் களிமண்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

ஒரு சட்டத்தரணியாக.. Sinhala Buddhist Chauvinism எந்த அளவுக்கு சொறீலங்கா நீதித்துறைக்குள்ளும் அதன் தீர்ப்புகளுக்குள்ளும் தாக்கம் செய்கிறது அது எப்படி மற்றைய இன மக்களின் நாளாந்த சிவில் வாழ்வியல் உரிமைகளை பறிக்கிறது.. இனப்படுகொலையை ஊக்குவிக்கிறது... இவை பற்றி ஆராய்ந்து கட்டமைக்கலாமே..??!

ஏன் இந்த மண்டைகள் உருப்படியாக சிந்திக்க மாட்டம் என்று அடம்பிடிக்கின்றன. இப்ப எல்லாம்.. இலகுவான விளம்பரத்திற்கு புலிகளை கையில் எடுக்கின்றன. ஏனெனில்.. புலிகளை கையில் எடுத்தால்.. தமிழர்களின் ஆழ்மனக் கிடக்கைகளை கிண்டிக் கலாசி.. அதில் எழும் எதிர்ப்பலைகள் மூலம்.. தாம் தம்மை இலகுவாக கீரோவாகக் காட்டிக் கொள்ளலாம். புலி எதிர்ப்பு சித்தாந்திகளிடம் வரவேற்பை பெறலாம். ஆதரவை தக்கவைக்கலாம். ஓசி விளம்பரம் கிடைக்கும். 

இப்படியான சீப்பான சிந்தனைகள் உள்ள ஒரு சீப்பான கரக்டெர் தான் இந்த அம்மணியிடம் இருக்கிறது. இதை விட இவருக்கு புலிகளை பற்றிய கட்டமைப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

மாறாக... சிங்கள பெளத்த பேரினவாதத்தையும் அதன் ஆழமான தாக்கம் என்பது நீதி.. அரசியல்.. பொருண்மிய சமூக சமய உரிமைகளை எப்படி எல்லாம் மறுக்கிறது என்ற நடைமுறை விடயங்களை ஆராய வக்கற்று நிற்கின்றன.

இதை ஒத்த ஒன்று தான் புங்குடுதீவு மாணவி பாலியல் சித்திரவதை கொலை வழக்கில்.. கொலையாளிகளை காப்பாற்றத் துடித்தது.

இவர்கள் உண்மையில் ஆராய வேண்டியது.. புலிகளை அல்ல.. எப்படி சொறீலங்கா தமிழ் சட்டத்தரணிகளிடம் சமூக விரோத பண பிசாசுப் பாசிசப் போக்கு கட்டவிழ்ந்து கிடக்கிறது என்பதையும்.. அதை நீக்குவதுமாக இருந்தால்.. அதுதான் சமூக அக்கறையுடைய ஒன்றாக இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

ஆனால் இங்கே ஒருவர் அவர்களை பாசிஸ்டுகள் என்பதும் அதை கண்டும் காணாமலும் அவர் செய்யும் சிறு விடயங்களை முன்னிறுத்தி அவர் பாசிஸ்டுகள் என்பதையும் ஆமோதிப்பதும் மிகத் தவறான வரலாற்று தவறுகளுக்கு இட்டு செல்லும். மாவீரர்களை யும் மண்ணுக்காக போராடியவர்களையும் பாசிஸ்டுகள் என்பவர்களால் ஒருபோதும் தமிழர் தாயகப் பகுதிகளில் தீர்வுகளையோ சமரசங்களையோ சர்வதேச பிரசாரங்களையோ செய்யமுடியாது. அப்படி செய்ய நினைத்தால் அல்லது அனுமதித்தால் தமிழர் வரலாற்றில் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஏதுமில்லை. 

 

பாசிஸ்டுகள் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

On 3/11/2023 at 09:12, Justin said:

எதிர்கால தமிழ் தலைமைகள் பற்றிய ஏனைய திரிகளிலேயே யாழ் பல்கலை மாணவர் சமூகம் எவ்வளவு பிற்போக்கான, அறிவுபூர்வமற்ற ஒரு அணி எனக் குறிப்பிட்டேன்! இதோ இன்னொரு சாட்சி என் கருத்துக்கு.

 

கூட்டம் வைக்கவிடாமல் தடுத்து உள்ளார்கள். இவர்கள் அறிவாளிகள் என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் எடுபடாதா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயம் said:

 

பாசிஸ்டுகள் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

அதிகாரவெறி பிடித்த கூட்டம் என்று கொள்ளலாம். ஆனால் இனி பலவகையாக பந்தாடலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2023 at 13:12, Justin said:

அம்பிகா சற்குணநாதனை அவரது மனித உரிமை ஆதரவு நிலைப்பாட்டிற்காக கான்சல் செய்தது போலவே இப்போது இன்னொரு மனித உரிமைச் செயற்பாட்டாளர் கான்சல். வேறு சில திரிகளில் தமிழர்களுக்கு தாயகத்தில் அடுத்த தலைவர்களாக வர யார் இருக்கின்றனர்? என்று கேட்ட போது ஒரு பெயரைத் தானும் சொல்ல முடியாமல் தொண்டையில் முள் சிக்கித் தவித்தார்கள் யாழ் கள தீவிர தேசியர்கள்😂, இது தான் காரணம்: தகுதியும் துணிவும் இருக்கும் இளையோருக்கு வரவேற்பில்லை!

அதற்குத்தான் மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் தெரிவாக சுமத்திரன் இருக்கிறாரே. சுமத்திரனினதும் அவரது ஆதரவாளர்களின் விருப்பப்படி சுமத்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவராக வந்தால். அம்பிகா மட்டுமல்ல ஸ்வாஸ்திகாவும் தமிழரசுக்கட்சியன் தூண்களாக வர வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதிகாரவெறி பிடித்த கூட்டம் என்று கொள்ளலாம். ஆனால் இனி பலவகையாக பந்தாடலாம்???

 

அதிகார வெறிபிடித்த மொக்கு கூட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

பாசிஸ்டுகள் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

On 3/11/2023 at 13:12, Justin said:

a political philosophy, movement, or regime (such as that of the Fascisti) that exalts nation and often race above the individual and that stands for a centralized autocratic government headed by a dictatorial leader, severe economic and social regimentation, and forcible suppression of opposition.

 ஒரு கொள்கையின் (அநேக சந்தர்பங்களில் ஒரு இனத்தின்) நலனை, தனி நபர் நலனுக்கு மேலாக உயர்த்தி, மத்தியில் சர்வ அதிகாரங்களும் குவிந்த ஒரு அரசை, அநேகமாக ஒரு சர்வ-அதிகாரம் பொருந்திய தலைவரின் கீழ், அது ஆளும் குமுகாயத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பில்கடுமையான ஒழுங்குமுறையை கைக்கொண்டு,  இந்த முறைக்கு எதிரான செயலை/ கருத்தை வலுக்கட்டாயமாக அடக்கும் ஒரு ஆட்சி முறை.

https://www.merriam-webster.com/dictionary/fascism

4 minutes ago, நியாயம் said:

 

அதிகார வெறிபிடித்த மொக்கு கூட்டம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயம் said:

 

அதிகார வெறிபிடித்த மொக்கு கூட்டம்?

சில தோல் தடித்த கூட்டத்திற்கு மண் மீட்பர்கள் மொக்கர்களாக தான் தெரிவர். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சில தோல் தடித்த கூட்டத்திற்கு மண் மீட்பர்கள் மொக்கர்களாக தான் தெரிவர். 

பாசிஸ்டுகள் என்பதற்கு விளக்கம் கேட்டேன். நீங்கள் அவர்கள் மண் மீட்பர் என்று கூறுகின்றீர்கள். அடிப்படையில் இங்கு நீங்கள் கூறவிளைவது என்ன?

உலகில் உள்ள வெவ்வேறு பாசிஸ்டுகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். அவர்கள் என்ன செய்தார்கள் என்று ஆராய்வோம். 

5 hours ago, goshan_che said:

a political philosophy, movement, or regime (such as that of the Fascisti) that exalts nation and often race above the individual and that stands for a centralized autocratic government headed by a dictatorial leader, severe economic and social regimentation, and forcible suppression of opposition.

 ஒரு கொள்கையின் (அநேக சந்தர்பங்களில் ஒரு இனத்தின்) நலனை, தனி நபர் நலனுக்கு மேலாக உயர்த்தி, மத்தியில் சர்வ அதிகாரங்களும் குவிந்த ஒரு அரசை, அநேகமாக ஒரு சர்வ-அதிகாரம் பொருந்திய தலைவரின் கீழ், அது ஆளும் குமுகாயத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பில்கடுமையான ஒழுங்குமுறையை கைக்கொண்டு,  இந்த முறைக்கு எதிரான செயலை/ கருத்தை வலுக்கட்டாயமாக அடக்கும் ஒரு ஆட்சி முறை.

https://www.merriam-webster.com/dictionary/fascism

 

 

உ+ம்: ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயம் said:

உ+ம்: ?

ஹமாஸ்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயம் said:

பாசிஸ்டுகள் என்பதற்கு விளக்கம் கேட்டேன். நீங்கள் அவர்கள் மண் மீட்பர் என்று கூறுகின்றீர்கள். அடிப்படையில் இங்கு நீங்கள் கூறவிளைவது என்ன?

உலகில் உள்ள வெவ்வேறு பாசிஸ்டுகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். அவர்கள் என்ன செய்தார்கள் என்று ஆராய்வோம். 

 

உ+ம்: ?

இஸ்ரேல் அரசு + மொசாட்

  • கருத்துக்கள உறவுகள்

1- கூட்டத்தை தடுத்ததன் மூலம் அறியப்படாத ஒருவரை இலவச விளம்பரம் செய்து அறியப்படுத்தி உள்ளார்கள். கூட்டம் நடந்து இருப்பின் இவ்வளவுக்கு இந்த அம்மா வெளியில் அறியப்பட்டு இருப்பாரோ தெரியாது. 

2- யாழ் பல்கலைக்கழகத்தின் எழுச்சி வாக்கியம் மெய்ப்பொருள் காண்பது அறிவு.  கூட்டம் தடுக்கப்பட்டதன் மூலம் மெய்ப்பொருள் காண்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

யாழ் பல்கலைக்கழக சமூகத்திடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

1- கூட்டத்தை தடுத்ததன் மூலம் அறியப்படாத ஒருவரை இலவச விளம்பரம் செய்து அறியப்படுத்தி உள்ளார்கள். கூட்டம் நடந்து இருப்பின் இவ்வளவுக்கு இந்த அம்மா வெளியில் அறியப்பட்டு இருப்பாரோ தெரியாது. 

2- யாழ் பல்கலைக்கழகத்தின் எழுச்சி வாக்கியம் மெய்ப்பொருள் காண்பது அறிவு.  கூட்டம் தடுக்கப்பட்டதன் மூலம் மெய்ப்பொருள் காண்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

யாழ் பல்கலைக்கழக சமூகத்திடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்.

இதுவரை தான் சொன்னதற்கான விளக்கத்தை அவரோ ஏன் அவருக்காக மெய்ப்பொருள் காண உழைக்கும் உங்களைப் போன்றோரோ ஏன் செய்யவில்லை??

ஏன் என்றால் தமிழரின் தலையில் எதையும் தேய்க்கலாம். கேட்க நாதியில்லை?

அதை தாயக இளைய சமுதாயம் செய்கின்றபோது அதையும் வரவேற்க முடியவில்லை? இதையே புலத்தில் இருந்து செய்தால் அதை தாயகம் செய்யட்டும் என்று பம்மாத்து???

மாறவேண்டியது நாம் தான். கடினமான காலங்களில் கூட யாழ் பல்கலைக்கழகம் தன் கடமையை பலமுறை சரியாக செய்திருக்கிறது. அதை கை நீட்டி பேசும் தகுதி எம் எவருக்கும் இல்லை இல்லை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2844.jpg
 

இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் பிரச்சனைகள் தீராததற்கு இதுவே காரணம். இலங்கையின் அனைத்து தரப்புகளுக்கும் இது பொருந்தும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

விஜிதரன் காலத்தில் இருந்து புலிகள் எதிர்ப்பு தான் யாழ் பல்கலைக்கழக கருத்துச் சுதந்திரமாக துரோகிகளால் நன்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது. காலத்துக்கு காலம் அந்த வரிசையில் சிலது வந்து கொண்டே இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் என்பது.. புலிகள் எதிர்ப்பு.. புலிப் பாசிசம் என்ற தங்கள் சொந்தக் கற்பிதம் பற்றி மட்டும் பேசுவதாக இருந்தால்.. அது இவர்களின் இன்னொரு பாசிச வடிவமாகும். அதாவது புலி எதிர்ப்புக் கும்பல்களின் பாசிச அணி வகுப்பாகும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்துள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் ஊடுருவல் செய்ய அனுமதி அளிக்கவே கூடாது.

பாசிசக் கோட்பாடுகளை.. ஈபி  ஆர் எல் எவ்.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ... புதிய ஈரோஸ்.. சொறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு.. சிங்களக் கட்சிகள்.. அதன் புலனாய்வு அமைப்புக்கள்.. இஸ்லாமிய குழுக்கள்.. எல்லாமே தான் கொண்டிருந்தன. ஏன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பது கூட ஒரு பாசிசக் கட்டமைப்புத்தான். தான் சொல்வதும்.. தான் நிறுவதுமே உண்மை.. தமிழ் மக்களின் மனித உரிமை என்று சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு சாதகமாக அறிக்கைகள் தருவதற்கு என்ன பெயராம்..??!

அதென்ன.. புலிகளை மட்டும்.. தொடர்ந்து பாசிசத்துக்குள் கட்டமைக்கிறது.

எனவே.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டதையும்.. தேவையையும்.. அதன் இருப்பையும் கொச்சைப்படுத்தவும்.. இல்லாதொழிக்கவும்.. இந்த பதவி.. புகழாசைக் குடும்பிகளை ஆட விட்டிருக்குது.. சிங்கள பெளத்த பேரினவாதம். அதன் ஊருடுவலுக்கு புலி எதிர்ப்பு கையில் எடுக்கப்பட்டிருக்குதுவே தவிர.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது.. சொறீலங்காவில் எங்கும் கிடையாது. அதென்ன குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. புலி எதிர்ப்பு என்ற போர்வையில்.. கருத்துச் சுதந்திரம் தேடப்படுகிறது.

விஜிதரன் கும்பலும் இதை தான் செய்ய வெளிக்கிட்டனர். ஹிந்திய ரோவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஈபி ஆர் எல் எவ் கும்பல் மூலம்.. அப்போது மக்கள் மத்தியில் பெருகி வந்த புலிகள் ஆதரவு செல்வாக்கு.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளும் இயல்பாகப் பெருக முற்பட்ட வேளை தான்.. விஜிதரன் கும்பல்.. புலி எதிர்ப்பு வாதங்களைக் கொண்டு வந்தது. பின்னர் புலிகள் மீதான மக்கள் வெறுப்பை தூண்டும் வண்ணம்.. விஜிதரன் கடத்தல் நாடகம் அரங்கேறியது. அவரை ரோவின் கட்டளைக்கு ஏற்ப கடத்திச் சென்றது.. முன்னாள் மன்னார் மாவட்ட ஈபி ஆர் எல் எவ் பொறுப்பாளர்.. சிறீதரன் தலைமையிலான.. கும்பல். ஆனால்.. பழி புலிகள் மேல் போடப்பட்டது. இதே சிறீதரன் பின்னர் ஈபி ஆர் எல் எவ்வில் இருந்து விரட்டப்பட்டது வேறு விடயம்.

இப்படித்தான்.. இவர்களின் புலிப் போலிப் பாசிசம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போ.. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்.. மீண்டும் மீண்டும் புலிகள்.. மையப்படுத்தப்படுவது.. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும்.. அரசியல்.. சமூக.. பொருண்மிய உரிமைகளை முற்றாகப் பறித்தெடுக்கவும்.. மீண்டும்.. உரிமைக் குரல்கள் ஆணித்தரமாக எழுவதை தடுக்கவுமே அன்றி.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த சொறீலங்காவிலேயே இல்லை.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் மட்டும்.... புலிகளின் எதிர்ப்பை முன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை.. தேடுவதன் நோக்கம்..என்ன..??! அதுவே.. இவர்கள் எப்படியான தேவைகளோடு இவற்றை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை நன்கு இனங்காட்டுகிறது.

உண்மையான கருத்துச் சுதந்திரம் என்றால்.. சிங்கள பெளத்த பேரினவாத Chauvinism தொடங்கி.. சிங்களக் கட்சிகள்.... எல்லா தமிழ் கட்சிகள்.. எல்லா தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. மற்றும்.... முஸ்லிம் மத அடிப்படைவாதக் கும்பல்களின்.. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட.. இவர்களின் பாசிசக் கட்டமைப்புக்கள் ஈறாக.. சிங்கள பெளத்த இராணுவ இயந்திரத்தின்  வரைந்தெடுத்த இனப்படுகொலை கட்டமைப்பு.. அமெரிக்க.. ஹிந்திய.. இஸ்ரேலிய... சீன.. ரஷ்சிய.. ஐரோப்பிய ஒன்றிய..மனித இனத்துக்கு எதிரான இராணுவ சித்தாந்த வகுப்பெடுப்புக்கள் உட்பட எல்லாம் பேசப்பட வேண்டும்.  

இந்த அம்மையார்.. இதற்கு தயாராமோ..?! இவருக்கு வாக்காளத்து வாங்கி கருத்துச் சுதந்திரம் பேசுறவை தயாராமோ..??!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.