Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023) காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்த இந்த வரலாற்று நிகழ்வை செய்துள்ளார்.

பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.

தமிழீழத் தேசியக்கொடி

மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேட்ரிக் பிரவுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம்.

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், நாங்கள் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமைமீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி | Maverar Rememberance Day In Canada

https://tamilwin.com/article/maverar-rememberance-day-in-canada-1700633029

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு சிங்களவர்க்கு பசி மறந்து போய் இனவாதம் கக்குவார்கள் .அநேகமா சொரிலன்காவில் இருந்து முப்படையும் கனடாவுடன் போர் புரிய தயரான ரேஞ்சில் சிங்கள அரசியல்வாதிகளின் அறிக்கைகள் வரும் .

எங்கடயலில் புலிக்கொடியை கண்டால் வலிப்பு வரும் கூட்டம் அநேகமா அவர்களின் வயது 6௦ தாண்டி முதியோர் இல்லங்களுக்கு போவதுக்கு ரெடியாக இருப்பவர்கள் கொடி ஏற்றி விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் பயித்தியம் பிடித்து கண்டபடி உளறுவார்கள் நித்திரை இல்லாமல் தவிப்பார்கள் இவ்வளவுக்கும் தங்களை தமிழர் என்று சொல்லுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊருக்கு போய்வர தடையாக இருக்குமோ என்ற எண்ணம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாளைக்கு சிங்களவர்க்கு பசி மறந்து போய் இனவாதம் கக்குவார்கள் .அநேகமா சொரிலன்காவில் இருந்து முப்படையும் கனடாவுடன் போர் புரிய தயரான ரேஞ்சில் சிங்கள அரசியல்வாதிகளின் அறிக்கைகள் வரும் .

பெருமாள் அண்ணாவும் யாழில் இடைசுக‌ம் எங்க‌ளை சிரிக்க‌ வைக்கிறார்😁.............

YouTube இதனை நீக்க முன் தரவிறக்கம் செய்ய முடிந்தவர்கள் செய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு இலங்கையில் அமைவதை கனடிய மத்திய அரசு ஒருபோதும் விரும்பியதோ அங்கீகரித்ததோ அல்லது புலிகள் அமைப்பை  ஒரு போராளி இயக்கமாக ஏற்றுக்கொண்டதோ  இல்லை.

சமீபகாலமாக ஈழதமிழர் சார்பு நடவடிக்கையில் சிறிது  நெகிழ்வுதன்மை கொண்டு அணுகுவதாக செய்திகள் வந்தன. அந்த நேரத்தில் கனடிய அரசினால் அங்கிக்கரிக்கப்படாத புலி கொடி என்றும் தேசிய கொடி என்றும்  நம்மவர்கள் பழைய உணர்ச்சி கொந்தளிப்பு வேலைகள் செய்தால் சட்ட சிக்கல் கருதியே பழையபடி எம்மைவிட்டு ஒதுங்க பார்ப்பார்கள்.

இலங்கை அரசும் இலங்கையிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு கொடியை எப்படி அனுமதித்தீர்கள், இது புலி சார்பு நிலையென்று பிரச்ச்சாரம் செய்யும்  நிலை வந்தால் கனடிய அரசும் பதில் சொல்ல முடியாது நிற்கும் நிலமையும் உண்டு.

சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு சாதுரியமாக தற்போது தமிழர் சார்பாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பாவித்து இலங்கயை ஒரு தீர்வு நோக்கி கொண்டு வந்தபின்னர் தாரளமாக எப்படி வேண்டுமென்றாலும் கொண்டாடலாம் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+

ஆங்கிலத்தில்: Tamil National Flag என்றூ எழுதி பற்றிக் பிரவுனும் கையெழுத்து வைத்துவிட்டு,

தமிழில்: தமிழீழத் தேசியக் கொடி நாள் என்று உருட்டுகிறார்கள்...🤣🤣

முட்டாள் தமிழா விழித்தெழு.... 

உது தமிழீழத் தேசியக் கொடி நாளாக கனடாவில் சாற்றாணைப்படவில்லை (proclaimed). தமிழ் தேசியக் கொடி நாள் & தமிழ்க் கொடி நாள்  எனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டும் வெவ்வேறு. 

எழுதப்பட்டகிற்கே செல்லுபடித்தன்மை கூட, வாய்மொழிக்கு அன்று.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ் மடையர்களே.... குதூகலிப்பதை நிறுத்துங்கள்

எங்கடா தமிழீழம் என்டு கிடக்குது.... ஏமாத்துறாங்கள்டா உங்களை.

தூ....

7 hours ago, பெருமாள் said:

பேட்ரிக் பிரவுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமைமீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் Tamil win சும்மாவே ஒரு **** வலைத்தளம்.. இதிலை அவன் போடுற செய்தி வேறை...

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

எங்கடா தமிழீழம் என்டு கிடக்குது.... முட்டாள்களே... ஏமாத்துறாங்கள்டா உங்களை.

தூ....

வழமை போல் மாவீரர் தினம் வரும்போது வரும் கொடிக்காய்சல் அவ்வளவே .

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, பெருமாள் said:

வழமை போல் மாவீரர் தினம் வரும்போது வரும் கொடிக்காய்சல் அவ்வளவே .

கொடிக்காய்ச்சல் என்டால் என்ன ஐயனே?

  • கருத்துக்கள உறவுகள்+

இஞ்சே, இன்னொரு கள்ளர் கூட்டத்தின் உருட்டுகள்... 

நாடுகடந்த உருட்டு அரசாங்கமும் அதன் அடிபொடிஸும்

கனேடிய அரசாங்கம் இப்பிடி சொல்ல, 

large.F_gBejGXAAAv0gy.png.b28f6045e53d46bf70f4599eff509cef.pnglarge.F_bw12FXEAAwaUi.png.49bab9b7fd30405c4158412dded1bb3d.pnglarge.F_bvqVBXcAASW98.png.13f50e15df6da109dc4396cd45b53486.pnglarge.F_bvH2yWYAAemk4.png.0812df772dc0ba2374414cb044dd24f9.pnglarge.F_bs2K1WgAABTol.png.ac11b9e36cd07c18a54e594791465afe.pnglarge.F_btgqQWYAAOpst.png.c0c9febdd3647083d348909137ed6902.pnglarge.F_buMgWXkAAN0Q_.png.c8d7b2455c5c35a821c2269b6586bf62.pnglarge.F_bup44XoAAx2Zb.png.156a500a84218763af5df6373d560558.png

இவங்கள் இப்பிடி உருட்டி வைச்சிருக்கிறாங்கள்.

அவர் (நா.க.) உருட்ட, இவர் பாட... ஒரே கூத்துத்தான். .🤣🤣

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நன்னிச் சோழன் said:

கொடிக்காய்ச்சல் என்டால் என்ன ஐயனே?

மேலே வளவன் விளக்கமாக எழுதியுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, பெருமாள் said:

மேலே வளவன் விளக்கமாக எழுதியுள்ளார் .

விளங்கியது... ஆனால், மக்களிடம் ஏன் பொய் சொல்ல வேண்டும். தமிழ் தேசியக் கொடி என்றே தமிழிலும் சொல்லலாமே? ஏன் மாற்றி மாற்றி பொய் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உசார் மடையர்கள்தானே? 

1 hour ago, valavan said:

தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு இலங்கையில் அமைவதை கனடிய மத்திய அரசு ஒருபோதும் விரும்பியதோ அங்கீகரித்ததோ அல்லது புலிகள் அமைப்பை  ஒரு போராளி இயக்கமாக ஏற்றுக்கொண்டதோ  இல்லை.

சமீபகாலமாக ஈழதமிழர் சார்பு நடவடிக்கையில் சிறிது  நெகிழ்வுதன்மை கொண்டு அணுகுவதாக செய்திகள் வந்தன. அந்த நேரத்தில் கனடிய அரசினால் அங்கிக்கரிக்கப்படாத புலி கொடி என்றும் தேசிய கொடி என்றும்  நம்மவர்கள் பழைய உணர்ச்சி கொந்தளிப்பு வேலைகள் செய்தால் சட்ட சிக்கல் கருதியே பழையபடி எம்மைவிட்டு ஒதுங்க பார்ப்பார்கள்.

இலங்கை அரசும் இலங்கையிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு கொடியை எப்படி அனுமதித்தீர்கள், இது புலி சார்பு நிலையென்று பிரச்ச்சாரம் செய்யும்  நிலை வந்தால் கனடிய அரசும் பதில் சொல்ல முடியாது நிற்கும் நிலமையும் உண்டு.

சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு சாதுரியமாக தற்போது தமிழர் சார்பாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பாவித்து இலங்கயை ஒரு தீர்வு நோக்கி கொண்டு வந்தபின்னர் தாரளமாக எப்படி வேண்டுமென்றாலும் கொண்டாடலாம் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு இலங்கையில் அமைவதை கனடிய மத்திய அரசு ஒருபோதும் விரும்பியதோ அங்கீகரித்ததோ அல்லது புலிகள் அமைப்பை  ஒரு போராளி இயக்கமாக ஏற்றுக்கொண்டதோ  இல்லை.

சமீபகாலமாக ஈழதமிழர் சார்பு நடவடிக்கையில் சிறிது  நெகிழ்வுதன்மை கொண்டு அணுகுவதாக செய்திகள் வந்தன. அந்த நேரத்தில் கனடிய அரசினால் அங்கிக்கரிக்கப்படாத புலி கொடி என்றும் தேசிய கொடி என்றும்  நம்மவர்கள் பழைய உணர்ச்சி கொந்தளிப்பு வேலைகள் செய்தால் சட்ட சிக்கல் கருதியே பழையபடி எம்மைவிட்டு ஒதுங்க பார்ப்பார்கள்.

இலங்கை அரசும் இலங்கையிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு கொடியை எப்படி அனுமதித்தீர்கள், இது புலி சார்பு நிலையென்று பிரச்ச்சாரம் செய்யும்  நிலை வந்தால் கனடிய அரசும் பதில் சொல்ல முடியாது நிற்கும் நிலமையும் உண்டு.

சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு சாதுரியமாக தற்போது தமிழர் சார்பாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பாவித்து இலங்கயை ஒரு தீர்வு நோக்கி கொண்டு வந்தபின்னர் தாரளமாக எப்படி வேண்டுமென்றாலும் கொண்டாடலாம் தப்பில்லை.

இதுக்கை குறுக்கிடுவ‌துக்கு ம‌ன்னிக்க‌னும்............2009க்கு பிற‌க்கு அமெரிக்காவில் நாடு க‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு ஒன்றை உருவாக்கினார் அவை ஏதும் த‌மிழீழ‌ விடைய‌த்தில் முன்னேற்ற‌ம் க‌ண்டு விட்டார்க‌ளா அல்ல‌து............வாயால் வ‌டை சுடுவ‌து தான் அவ‌ர்க‌ளின் வேலையோ..............நான் நினைக்கிறேன் 2010ம் ஆண்டு யாழ்க‌ள‌த்தில் நீங்க‌ள் யாரை அதிக‌ம் ஆத‌ரிக்கிறீங்க‌ள் என்று பொதுவாக்கெடுப்பு ந‌ட‌ந்த‌து அப்பேக்கை எல்லாரும் உருத்திர‌குமார் ஜ‌யாவை ந‌ம்பி நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சை தான் ஆத‌ரிக்கிறோம் என்று முழு ஆத‌ர‌வையும் அவ‌ருக்கே வ‌ழ‌ங்கினார்க‌ள்.............ஆனால் அவ‌ர் த‌ன்னை தேசிய‌ த‌லைவ‌ருக்கு நிக‌ராய் காட்ட‌ தொட‌ங்க‌ அவ‌ரின் மாவீர‌ நாள் உரைய‌ யாரும் பெரிசா கேட்ப்ப‌தில்லை...........மாவீர‌ர் நாள் உரை அது த‌லைவ‌ருக்கு ம‌ட்டுமே அந்த‌ த‌லைவ‌ரின் குர‌லை ம‌க்க‌ள் ஒரு வ‌ருட‌த்தில் ஒருக்கா தான் கேட்ப்பின‌ம் அத‌னால் த‌லைவ‌ரின் உரைய‌ கேட்க்க‌ ம‌க்க‌ள் த‌வ‌மாய் த‌வ‌ம் இருப்பின‌ம்...........ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ மாவீர‌ நாளின் போது உருத்திர‌குமார் ஜ‌யா சொன்னார் அடுத்த‌ ஆண்டு நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சுக்கு ச‌பாலான‌ ஆண்டு என்று.............பின்னைய‌ கால‌ங்க‌ளில் ம‌க்க‌ள் ந‌ம்பிக்கைய‌ இழ‌க்க‌ தொட‌ங்கிட்டின‌ம்..............இப்ப‌ அப்ப‌டி ஒரு அமைப்பு இருக்கா என்ற‌தும் ச‌ந்தேக‌மே............அவ‌ர்க‌ளை ப‌ற்றி செய்திக‌ள் வ‌ருவ‌தில்ல................

இந்த‌ புலி கோடி ஏற்ற‌த்தை பார்த்து நான் பெருமை ப‌ட‌ வில்லை..........2013ம் ஆண்டு எம் மீதான‌ த‌டையை நீக்க‌ சொல்லி  ம‌கிந்தா போர் குற்ற‌வாளி என்று நிரூபித்து காட்டியும் க‌ன‌டா தொட்டு அமெரிக்கா வ‌ரை எங்க‌ளுக்கு சாத‌க‌மாய் ஒரு முடிவும் எடுக்க‌ல‌..................2009ம் ஆண்டு அகிம்சை வ‌ழியில் எம் ம‌க்க‌ள் க‌ன‌டாவில் போராடினார்க‌ள் போரை நிப்பாட்ட‌ சொல்லி அப்ப‌ இருந்த‌ அர‌சு காவ‌ல்துறைய‌ வைச்சு எம் உற‌வுக‌ளின் ம‌ன்டைய‌ உடைச்ச‌து............எம் உற‌வுக‌ளின் போராட்ட‌த்துக்கு ம‌திப்ப‌ளிக்க‌ வில்லை..............இந்த‌ நிக‌ழ்வில் ஜ‌ஸ்ரின் ரூட்டோ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பு உரை ஆற்றி இருந்தால் சிறு ந‌ம்பிக்கை த‌ன்னும் வ‌ந்து இருக்கும்............2009க்கு பிற‌க்கு இப்ப‌டி ப‌ல‌ கூத்துக‌ளை பார்த்தாச்சு 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்+

https://brampton.ca/EN/City-Hall/Protocol-Office/Pages/Community-Flag-Raisings.aspx

பிரம்ப்டன் அலுவல்சார் வலைத்தளத்தில் தமிழீழம் என்று வெளியிட்டுள்ளார்கள்.

November 21, 2023 9:00 AM Tamil Eelam National Flag
Tamil Eelam National Flag Day
Kumuthini Kunaratnam    Email: Kumuthinikuna@gmail.com  
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

இஞ்சே, இன்னொரு கள்ளர் கூட்டத்தின் உருட்டுகள்... 

நாடுகடந்த உருட்டு அரசாங்கமும் அதன் அடிபொடிஸும்

கனேடிய அரசாங்கம் இப்பிடி சொல்ல, 

large.F_gBejGXAAAv0gy.png.b28f6045e53d46bf70f4599eff509cef.pnglarge.F_bw12FXEAAwaUi.png.49bab9b7fd30405c4158412dded1bb3d.pnglarge.F_bvqVBXcAASW98.png.13f50e15df6da109dc4396cd45b53486.pnglarge.F_bvH2yWYAAemk4.png.0812df772dc0ba2374414cb044dd24f9.pnglarge.F_bs2K1WgAABTol.png.ac11b9e36cd07c18a54e594791465afe.pnglarge.F_btgqQWYAAOpst.png.c0c9febdd3647083d348909137ed6902.pnglarge.F_buMgWXkAAN0Q_.png.c8d7b2455c5c35a821c2269b6586bf62.pnglarge.F_bup44XoAAx2Zb.png.156a500a84218763af5df6373d560558.png

இவங்கள் இப்பிடி உருட்டி வைச்சிருக்கிறாங்கள்.

அவர் (நா.க.) உருட்ட, இவர் பாட... ஒரே கூத்துத்தான். .🤣🤣

தமிழீழத் தேசியக் கொடியை.. தமிழ் தேசிய கொடியாக ஏற்றுக் கொண்டதே பெரிய விடயம்.

2009 க்குப் பின் புலிக் கொடியை காட்டாத.. காட்டினால்.. இருக்கிற கோவணமும் காணாமல் போயிடும் என்ற கூவல்களை எம்மவர்களே எதிரிக்கு சார்ப்பாக கட்டியமைத்து முன்னெடுத்துச் சென்ற போதும்..

தமிழீழத் தேசியக் கொடி.. இன்று தமிழ் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குது. முன்னேற்றமே.

அது தமிழீழத் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட இன்னும் இராஜதந்திர முயற்சிகள் அவசியமே தவிர.. புலிக்கொடியை மடிச்சு பெட்டிக்க போடுங்கடா என்ற கூவல்கள்.. எமக்கு எந்த வகையிலும் எமது இன இருப்பை.. தேசத்தை தக்க வைக்க உதவாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்  கொடி என்ன பெயரிலும் எல்லா இன எம்பிக்கள் ஆதரவுடன் ஏறுகிறது...நாம் அனைவரும் ஆதரிப்பதுதான் சிறந்தது...இதில் முட்டையில் மயிர் புடுங்குவதுபோல பிழை பிடிக்க  வேண்டாமே...இதை எமக்குக் கிடைத்த முதல்படி என்போம்...அப்புறம் மேல் ஏறுவோம்...இதற்கான எதிர்வினை சிங்களப் பகுதியில் இருந்துமட்டுமல்ல...முசுலிம்பகுதியிலிருந்தும்வரும் ..ஏன் நம்ம ஏரியாவில் இருந்தும் எழும்....அவைக்கு நாங்கள்  பொல்லுக்குடுக்க வேண்டாமே...கனடாவில் நிலைநாட்டக் கூடியதை முதலில் நிலை நாட்டுவோம்....

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, nedukkalapoovan said:

தமிழீழத் தேசியக் கொடியை.. தமிழ் தேசிய கொடியாக ஏற்றுக் கொண்டதே பெரிய விடயம்.

2009 க்குப் பின் புலிக் கொடியை காட்டாத.. காட்டினால்.. இருக்கிற கோவணமும் காணாமல் போயிடும் என்ற கூவல்களை எம்மவர்களே எதிரிக்கு சார்ப்பாக கட்டியமைத்து முன்னெடுத்துச் சென்ற போதும்..

தமிழீழத் தேசியக் கொடி.. இன்று தமிழ் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குது. முன்னேற்றமே.

அது தமிழீழத் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட இன்னும் இராஜதந்திர முயற்சிகள் அவசியமே தவிர.. புலிக்கொடியை மடிச்சு பெட்டிக்க போடுங்கடா என்ற கூவல்கள்.. எமக்கு எந்த வகையிலும் எமது இன இருப்பை.. தேசத்தை தக்க வைக்க உதவாது. 

இஞ்ச பாருங்கோ. 

எனது எதிர்ப்பு: எதற்காக தமிழீழக் கொடி என்டு தமிழிலையும் தமிழ் தேசியக் கொடியென்டு ஆங்கிலத்திலையும் இரட்டை வேடம் போட வேண்டும்.? 

=================================

11 hours ago, நன்னிச் சோழன் said:

கனேடிய அரசாங்கம் இப்பிடி சொல்ல, 

large.F_bvqVBXcAASW98.png.13f50e15df6da109dc4396cd45b53486.png

லோகன் கணபதி அவர்கள் தமிழ் தேசியக் கொடியிலிருந்து தமிழீழத் தேசியக் கொடியென்று மாற்றம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

large_af.jpeg.be4c0209376fd5a6cb0541ae4dca288c.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம்  அமைக்க    அமைய. இரண்டு வழிகள் மட்டுமே உண்டு    

முதலாவது  இலங்கையில் வாழும் மக்களின் ஒத்துழைப்புடன்  இரண்டு நாடாக பிரிவது   அதாவது சிங்கள மக்களும் தமிழ் மக்களும்  சேர்ந்து இணங்கி. இரண்டு நாடாக பிரிவது    

இரண்டாவது   இந்தியா தலையிட்டு. போரிட்டு இலங்கையை தோல்வி அடைய செய்து  நாட்டை பிரித்து வழங்குவது   

இந்தியாவையும். இலங்கையையும். தவிர்த்து வேறு எந்த நாட்டினாலும். இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்து விட முடியாது  உலகம் முழுவதும் தமிழ் ஈழக்கொடியை ஏற்றலாம்  ஆனால் தமிழ் ஈழம் அமைத்து விடமுடியாது    🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.