Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

batti.jpg?resize=750,375&ssl=1

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை குறித்த பூசாரி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த நபருக்கும் பூசாரியின் மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததை அறிந்தே குறித்த பூசாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவர் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2023/1362554

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரி மனைவியுடன் தகாத உறவு: ஒருவர் படுகொலை, சகோதரிக்கு காயம்

Mayu   / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 11:11 - 0      - 221

facebook sharing button
print sharing button
twitter sharing button
pinterest sharing button

பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் நோய்யை குணப்படுத்துவதற்காக சென்ற சகோதரன், சகோதரி மீது  ஆலய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் சகோதரன் உயிரிழந்துள்ளதோடு சகோதரி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு -  வாகரை மாங்கேணி பிரதேசத்தில் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில்   புதன்கிழமை (6) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

image_4ee4a33b4a.jpg

மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுரா ஜெயலத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக பேய் பிசாசு ஆவிகளை விரட்டியடிக்கும் மாங்கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்திற்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

image_125a1e7f2f.jpg

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில்:

பூசகரின் மனைவியுடன் நோயை குணப்படுத்துவதற்காக சென்ற நபர் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக, பூசகர் மனைவியை கத்தியால் தாக்க முற்றபட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, மனைவியுடன் தொடர்புபட்டவர் மீதும் அவரது சகோதரி மீதும் காரின் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் நபர் உயிரிழந்ததுடன் காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து  தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

image_cc6deadaeb.jpg

image_3178ed21a7.jpg

Tamilmirror Online || பூசாரி மனைவியுடன் தகாத உறவு: ஒருவர் படுகொலை, சகோதரிக்கு காயம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு

இது கண்ணகி வழிபாடல்லவா? இது எப்ப பெளத்த வழிபாடாகியது?

3 minutes ago, goshan_che said:

இது கண்ணகி வழிபாடல்லவா? இது எப்ப பெளத்த வழிபாடாகியது?

சில சிங்களப் பகுதிகளில் பத்தினி தெய்வோ என்று கண்ணகியை வழிபடுவது உண்டு என கேள்வி பட்டுள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இது கண்ணகி வழிபாடல்லவா? இது எப்ப பெளத்த வழிபாடாகியது?

1 minute ago, நிழலி said:

சில சிங்களப் பகுதிகளில் பத்தினி தெய்வோ என்று கண்ணகியை வழிபடுவது உண்டு என கேள்வி பட்டுள்ளேன். 

பத்தினி தெய்வோ வழிபாட்டிற்குப் போய்…
பூசாரியின் பெண்டாட்டியுடன் கள்ளத் தொடர்பு வைத்ததை நினைத்து
சிரிப்பை அடக்க முடியவில்லை. 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இது கண்ணகி வழிபாடல்லவா? இது எப்ப பெளத்த வழிபாடாகியது?

11 minutes ago, நிழலி said:

சில சிங்களப் பகுதிகளில் பத்தினி தெய்வோ என்று கண்ணகியை வழிபடுவது உண்டு என கேள்வி பட்டுள்ளேன். 

பௌத்த தமிழ் இலக்கியம் என்பது பௌத்த சமயம் பற்றிய தமிழ் இலக்கியங்களை முதன்மையாகக் குறிக்கிறது. பெளத்தர்களால் எழுதப்பட்ட பிற தமிழ் இலக்கியங்களையும் இது சுட்டுவதுண்டு. சங்க காலம் தொடக்கம் தற்காலம் வரை பெளத்த தமிழ் இலக்கியங்கள் உண்டு. குண்டலகேசி, மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்கள் பெளத்த காப்பியங்கள் ஆகும்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

சில சிங்களப் பகுதிகளில் பத்தினி தெய்வோ என்று கண்ணகியை வழிபடுவது உண்டு என கேள்வி பட்டுள்ளேன். 

ஓம் இது உண்மைதான்…முருகனையும் ஸ்கந்த தெய்யோ என்பார்கள்.

அதுக்காக முப்பாட்டனை விட்டு கொடுக்கவா முடியும்🤣.

1 minute ago, Nathamuni said:

பௌத்த தமிழ் இலக்கியம் என்பது பௌத்த சமயம் பற்றிய தமிழ் இலக்கியங்களை முதன்மையாகக் குறிக்கிறது. பெளத்தர்களால் எழுதப்பட்ட பிற தமிழ் இலக்கியங்களையும் இது சுட்டுவதுண்டு. சங்க காலம் தொடக்கம் தற்காலம் வரை பெளத்த தமிழ் இலக்கியங்கள் உண்டு. குண்டலகேசி, மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்கள் பெளத்த காப்பியங்கள் ஆகும்.

ம்ம்ம்…பெளத்த தமிழ் இலக்கியம் சரி. ஆனால் கண்ணகை அம்மன் வழிபாடு தமிழரது அல்லவா?

அதை எல்லையோர சிங்களவர் பின்பற்ற நாமே அதை பெளத்த வழிபாடு என்பதுதான் உதைக்கிறது.

7 minutes ago, தமிழ் சிறி said:

பத்தினி தெய்வோ வழிபாட்டிற்குப் போய்…
பூசாரியின் பெண்டாட்டியுடன் கள்ளத் தொடர்பு வைத்ததை நினைத்து
சிரிப்பை அடக்க முடியவில்லை. 😂🤣

இதைத்தான் தமிழில் முரண்நகை என்பார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஓம் இது உண்மைதான்…முருகனையும் ஸ்கந்த தெய்யோ என்பார்கள்.

அதுக்காக முப்பாட்டனை விட்டு கொடுக்கவா முடியும்🤣.

கதிர்காமம் புட்டுக்கிச்சு....

நீங்க இதை கொண்டு போய்... நக்கல் கிரந்தம் விடுறீங்க...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கதிர்காமம் புட்டுக்கிச்சு....

நீங்க இதை கொண்டு போய்... நக்கல் கிரந்தம் விடுறீங்க...

கதிர்காமம் மாரி இதுவும் ஆக நாமே துணை போக கூடாது என்ற ஆதங்கம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

batti.jpg?resize=750,375&ssl=1

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னப்பா நடக்குது இலங்கையிலே...

மட்டக்கிளப்பு தேரர், வெட்டுவன், கொத்துவன் எண்டுறார்.

சிறுமி சர்ச்சுக்கு வரேல்ல எண்டு, பாதர் அடிக்கிறார்.

உங்க, பூசாரி கொலையே செய்து போட்டார்.

அடுத்தது லெப்பை... அதுவும் ஈஸ்டர் வெடிப்புக்குள்ள சேர்க்கலாம்...

அப்படி பார்த்தால், எல்லா மத அசாமிகளுக்கும் மதம் பிடிச்சு போயிருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சில சிங்களப் பகுதிகளில் பத்தினி தெய்வோ என்று கண்ணகியை வழிபடுவது உண்டு என கேள்வி பட்டுள்ளேன். 

கொழும்பு பகுதியில் ஓடும் சகல தனியார் பேரூந்துகளிலும் சாரதியின் பின்புறம் பெரிய லட்சுமியின் படம் கைகளில் இருந்து சில்லறைகள் கொட்டுப்படுவது போல படங்கள் போட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அடுத்தது லெப்பை... அதுவும் ஈஸ்டர் வெடிப்புக்குள்ள சேர்க்கலாம்...

14 வயது பெடி ஒண்டு சரியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

கொழும்பு பகுதியில் ஓடும் சகல தனியார் பேரூந்துகளிலும் சாரதியின் பின்புறம் பெரிய லட்சுமியின் படம் கைகளில் இருந்து சில்லறைகள் கொட்டுப்படுவது போல படங்கள் போட்டிருப்பார்கள்.

ஒரு சில்லறையும் கீழே சிந்தியிருக்காதே எல்லாம் நடத்துனரின் பைக்குள் விழுந்து குலுங்கும் ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

ஒரு சில்லறையும் கீழே சிந்தியிருக்காதே எல்லாம் நடத்துனரின் பைக்குள் விழுந்து குலுங்கும் ........!  😂

கொழும்பு போனால், இந்த பஸ்ஸில் போவது, ரயிலில் போவது எனக்கு ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு.

பழைய நினைவுகள் (🥰 😍) வரும், போகும். தேவதைகளும் நினைவில் வருவார்கள். சில தேவதைகளுடன் ஆங்கிலம் கதைக்க சில்வா மாஸ்டரிடம் படித்ததும், சில தேவதைகளுடன் சிங்களம் கதைக்க, வெள்ளவத்தை ஆமத்துருவிடம் போய் கேட்க, அவர், வேறு ஒருவரிடம் அனுப்ப, அவர் ஒரு மாதிரி, மேலும், கீழும் பார்க்க, ஆகா, அவனா நீ என்று தப்பி ஓடியதும்....

புறக்கோட்டையில் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து,ஏறி, வெள்ளவத்தையில் இறங்குவது சுகம்.

அது ஒரு கனாகாலம்.

52 minutes ago, ஈழப்பிரியன் said:

கொழும்பு பகுதியில் ஓடும் சகல தனியார் பேரூந்துகளிலும் சாரதியின் பின்புறம் பெரிய லட்சுமியின் படம் கைகளில் இருந்து சில்லறைகள் கொட்டுப்படுவது போல படங்கள் போட்டிருப்பார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரியின் மனைவிக்கு எத்தினை வயசாம்?😊

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

பூசாரியின் மனைவிக்கு எத்தினை வயசாம்?😊

பிறகு, கொலைகாரரின் மனிசியை வாலி மடக்கப்பார்க்கிறார் என்று கதை கட்டுவினமே. ஓகே என்றால் சொல்லுங்கோ, ஆள் அனுப்பி விசாரிச்சு சொல்றேன். 🤪

ஆனால்  பாஸ், அவளோட டேஸ்ட் 58 வயசு சீக்காளி... அதை யோசித்துப் பார்தனியளே?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

பிறகு, கொலைகாரரின் மனிசியை வாலி மடக்கப்பார்க்கிறார் என்று கதை கட்டுவினமே. ஓகே என்றால் சொல்லுங்கோ, ஆள் அனுப்பி விசாரிச்சு சொல்றேன். 🤪

ஆனால்  பாஸ், அவளோட டேஸ்ட் 58 வயசு சீக்காளி... அதை யோசித்துப் பார்தனியளே?

இல்லையில்லை😂 எனக்கு அந்தம்மாவ மடக்குற ஒருசொட்டு எண்ண்முமில்லை. 58 வயசுக்காரரோடு கள்ளத்தொடர்பு வச்சிருந்த அந்தம்மா வயசானவவோ இல்லை யங்கானவவோ எண்டு விடுப்பு அறியும் ஆவலிலை கேட்டனான். எனக்கென்ன விசரே உங்கபோய் மாட்டுப்பட்டு சாக!😂

  • கருத்துக்கள உறவுகள்

கணவருக்கு 58 வயசு. அப்ப அவாவுக்கு 🤪ஜம்பது இருக்கும். பழுத்த வயசு. 🥰

பூசாரிக்கு முயல் பிடிக்க தெரிந்திருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

இல்லையில்லை😂 எனக்கு அந்தம்மாவ மடக்குற ஒருசொட்டு எண்ண்முமில்லை. 58 வயசுக்காரரோடு கள்ளத்தொடர்பு வச்சிருந்த அந்தம்மா வயசானவவோ இல்லை யங்கானவவோ எண்டு விடுப்பு அறியும் ஆவலிலை கேட்டனான். எனக்கென்ன விசரே உங்கபோய் மாட்டுப்பட்டு சாக!😂

அதுதானே பார்த்தனான். அய்யர், சிறை உடைச்சு, கனடாவந்திருப்பார், வெட்ட!! 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆனால்  பாஸ், அவளோட டேஸ்ட் 58 வயசு சீக்காளி... அதை யோசித்துப் பார்தனியளே?

இன்னொரு 10 கூடினால் பறவாயில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கொழும்பு போனால், இந்த பஸ்ஸில் போவது, ரயிலில் போவது எனக்கு ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு.

பழைய நினைவுகள் (🥰 😍) வரும், போகும். தேவதைகளும் நினைவில் வருவார்கள். சில தேவதைகளுடன் ஆங்கிலம் கதைக்க சில்வா மாஸ்டரிடம் படித்ததும், சில தேவதைகளுடன் சிங்களம் கதைக்க, வெள்ளவத்தை ஆமத்துருவிடம் போய் கேட்க, அவர், வேறு ஒருவரிடம் அனுப்ப, அவர் ஒரு மாதிரி, மேலும், கீழும் பார்க்க, ஆகா, அவனா நீ என்று தப்பி ஓடியதும்....

புறக்கோட்டையில் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து,ஏறி, வெள்ளவத்தையில் இறங்குவது சுகம்.

அது ஒரு கனாகாலம்.

தனியே பஸ்சிலும் ரெயினிலும் பயணிப்பதோடு மட்டும் அல்லாமல், கோல்பேசில் இஸ்ஸு அல்லது மாசி வடே, வெள்ளவத்தை பம்பே ஸ்வீட்டில் மஸ்கட் & பலூதா, டிராகன் கபேயில் ஒரு சைனீஸ் சாப்பாடு, புங்குடுதீவு கடையில் புட்டும் சொதியும், பிளவுசிலில் கொத்தும் ஆணமும், கொன்கோர்ட்டில் ஒரு தமிழ் படம், சவோய்க்கு அருகில் இருக்கும் கச்சான் கடையில் மஞ்சள் கடலை, கார்னிவேலில் ஒரு பனானாபோர்ட் ஐஸ்கிரீம், கிரீன் கபினில் ஒரு சாக்கிலேட் கேக், சேரியட்டில் ரோல்ஸ், கட்லட், ரோயல் பேக்கரியில் ஒரு எக்ளயர்ஸ் எண்டு ஒரு ரவுண்டு வந்து, காந்தி லொட்ஜ்ஜில் ஒரு கோல்ட் லீபும் பிளேண்டியும் வாங்கி புகையை, வளையம், வளையமாக விட…..

அன்றைய தேவதைகள் கண் முன் தரிசனம் தருவார்கள்…..

பேரன், பேத்தியோடு🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோகிலாம்பாள் ஞாபகம் வந்து போகுது...🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

தனியே பஸ்சிலும் ரெயினிலும் பயணிப்பதோடு மட்டும் அல்லாமல், கோல்பேசில் இஸ்ஸு அல்லது மாசி வடே, வெள்ளவத்தை பம்பே ஸ்வீட்டில் மஸ்கட் & பலூதா, டிராகன் கபேயில் ஒரு சைனீஸ் சாப்பாடு, புங்குடுதீவு கடையில் புட்டும் சொதியும், பிளவுசிலில் கொத்தும் ஆணமும், கொன்கோர்ட்டில் ஒரு தமிழ் படம், சவோய்க்கு அருகில் இருக்கும் கச்சான் கடையில் மஞ்சள் கடலை, கார்னிவேலில் ஒரு பனானாபோர்ட் ஐஸ்கிரீம், கிரீன் கபினில் ஒரு சாக்கிலேட் கேக், சேரியட்டில் ரோல்ஸ், கட்லட், ரோயல் பேக்கரியில் ஒரு எக்ளயர்ஸ் எண்டு ஒரு ரவுண்டு வந்து, காந்தி லொட்ஜ்ஜில் ஒரு கோல்ட் லீபும் பிளேண்டியும் வாங்கி புகையை, வளையம், வளையமாக விட…..

அன்றைய தேவதைகள் கண் முன் தரிசனம் தருவார்கள்…..

பேரன், பேத்தியோடு🤣

என்னப்பா அப்ப அத்தனை வருத்தங்களும் போட்டி போட்டு உடலுக்குள் போர் நடாத்துகிறார்கள்??😂

3 minutes ago, குமாரசாமி said:

கோகிலாம்பாள் ஞாபகம் வந்து போகுது...🤣

அண்ணை உந்தாள் அவாவின் கையைப்பிடித்து 🤪 ஒழுங்காக கதை பேசி இருந்தால் அவா ஏன் சாத்திரியரின் கையை நீள விடுகிறா?😛

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தனியே பஸ்சிலும் ரெயினிலும் பயணிப்பதோடு மட்டும் அல்லாமல், கோல்பேசில் இஸ்ஸு அல்லது மாசி வடே, வெள்ளவத்தை பம்பே ஸ்வீட்டில் மஸ்கட் & பலூதா, டிராகன் கபேயில் ஒரு சைனீஸ் சாப்பாடு, புங்குடுதீவு கடையில் புட்டும் சொதியும், பிளவுசிலில் கொத்தும் ஆணமும், கொன்கோர்ட்டில் ஒரு தமிழ் படம், சவோய்க்கு அருகில் இருக்கும் கச்சான் கடையில் மஞ்சள் கடலை, கார்னிவேலில் ஒரு பனானாபோர்ட் ஐஸ்கிரீம், கிரீன் கபினில் ஒரு சாக்கிலேட் கேக், சேரியட்டில் ரோல்ஸ், கட்லட், ரோயல் பேக்கரியில் ஒரு எக்ளயர்ஸ் எண்டு ஒரு ரவுண்டு வந்து, காந்தி லொட்ஜ்ஜில் ஒரு கோல்ட் லீபும் பிளேண்டியும் வாங்கி புகையை, வளையம், வளையமாக விட…..

அன்றைய தேவதைகள் கண் முன் தரிசனம் தருவார்கள்…..

பேரன், பேத்தியோடு🤣

உங்கடை அனுபவமோ? 🥰😍

காந்திக்கிளாஸ் கதைபோல கிடக்குது...  இண்டைக்கு நிலைமை, சீனிக்கு குளுசை எடுக்கிறதில நிக்குது.

இந்த மாதிரி சின்ன இடங்களில எல்லாம் நான் காலும் வைக்கிறேல்ல, கையும் நனைக்கிறேல்ல. 😎

இப்படித்தான் கதை விட்டு, ஆட்களை மடக்கிப்பிடிக்கிறது. முந்தி ஒருக்கா, இப்படி, நிழலி மாட்டினவர் கண்டியளே. வாழைத்தோட்டத்து கதை ஒன்றிலே.... வாயை விட்டவர்.. 🤪🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 புங்குடுதீவு கடையில் புட்டும் சொதியும்....

மறக்க முடியாத உருசி...இதோடை ஒரு முட்டை ஆம்லெட்..டும்.....ஒரு கோழிக்கறிய்ம் எடுத்தால்...சொர்க்கம்... உந்த அய்யர்..மனுசி..சீக்காளி சிங்களவன் கதையெல்லாம் தூசு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.