Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   18 DEC, 2023 | 08:22 PM

image
 
(நா.தனுஜா)

அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். 

கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கை விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது;

முதன்முறையாக கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ப்ரியன் மல்ரொனியினாலேயே 1980 ஆம் ஆண்டளவில் புலம்பெயர்ந்து வருகைதந்த பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் வரவேற்று, கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் பிரதமர் ஹார்பரின் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தடைகளை விதித்து, பகிரங்க கண்டனத்தையும் வெளியிட்டது. அதுமாத்திரமன்றி கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டையும் ஹார்பரின் அரசாங்கம் புறக்கணித்ததுடன், அது அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அவமானமாக அமைந்தது. 

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதே எனது திட்டமாக இருக்கின்றது. அதன்மூலம் அந்நபர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் முடக்கப்படும்.

அதுமாத்திரமன்றி இனப்படுகொலையுடன் தொடர்புடையவர்களை அடையாளங்கண்டு, அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எமது சட்டத்தரணிகள் ஊடாக முன்னெடுக்கப்படும்.

மேலும் தற்போதும் தமிழ்மக்களின் உரிமைகளை மீறும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை நாம் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கண்டிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/172003

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்சி தான் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டது. அந்த தடையை நீக்குவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2023 at 15:35, nunavilan said:

உங்கள் கட்சி தான் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டது. அந்த தடையை நீக்குவீர்களா?

எதைச் சாதிப்பதற்காக? தடை நீக்கப்பட்ட அமைப்பாக இனிமேல் என்ன செய்யமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

எதைச் சாதிப்பதற்காக? தடை நீக்கப்பட்ட அமைப்பாக இனிமேல் என்ன செய்யமுடியும்?

தமிழர்கள் பயங்கரவாதிகள் எனும் அவப்பெயருடன் இருக்க வேண்டுமா??

  • கருத்துக்கள உறவுகள்

"மக்னிற்ஸ்கி" தடைகள் என்றால் என்ன.......! 😴

  • கருத்துக்கள உறவுகள்

"மக்னிற்ஸ்கி" தடைகள்  - எனக்கு தெரிந்த வரை மனித உரிமையை மீறி குற்றம் செய்த பொறுப்பானவர்கள் , அதிகாரிகள் மீது தடைவிதிக்கும் சட்டத்தின் பெயர் என்று நினைக்கிறேன். பெரியோர்கள் தான் விளங்கபடுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

"மக்னிற்ஸ்கி" தடைகள் என்றால் என்ன.......! 😴

தெரியவில்லை  ஆனால் குறித்த நபர்களின் தனிபட்ட சொத்துக்கள் முடக்கபடும். என்கிறார் ...கனடா இல் மட்டும??? அல்லது உலகம் முழுவதும??  உலகம் முழுவதும் எனில் சிறந்த நடவடிக்கை    இவருடன் கனடா வாழ் தமிழ் மக்கள் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது   சொத்துக்கள் சிறிதும் இல்லாத விடல். அரசியல் வாதிகளை மக்கள் மதிக்க மாட்டார்கள்  அரசியல்வாதிகளும் அடங்கி விடுவார்கள்   வங்கி கணக்குகளும் முடக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

தகவலுக்கு நன்றி கந்தையா ........நாங்கள் இருவருமாக இது பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தவர் வரும்வரை காத்திருக்கலாம் ......நீங்கள் என்ன சொல்லுறீங்கள்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

தகவலுக்கு நன்றி கந்தையா ........நாங்கள் இருவருமாக இது பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தவர் வரும்வரை காத்திருக்கலாம் ......நீங்கள் என்ன சொல்லுறீங்கள்.......!  😁

ஆமாம் நிச்சயமாக  உங்கள் கருத்துகளை எற்றுக்கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றேன் 😂🙏 கோஷானின் கருத்துகளை காணவில்லை  என்றாலும்  அமெரிக்கா மருத்துவர் எழுவார்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

"மக்னிற்ஸ்கி" தடைகள் என்றால் என்ன.......! 😴

Canadian Magnitsky LawCanada's Sergei Magnitsky Law, officially the Justice for Victims of Corrupt Foreign Officials Act, received royal assent and was passed into law on October 18, 2017. The Act is regulated by the Justice for Victims of Corrupt Foreign Officials Regulations.

Sergei Magnitsky

Wikimedia Foundation Logo

, donate $2.75.
In this name that follows Eastern Slavic naming conventions, the patronymic is Leonidovich and the family name is Magnitsky.

Sergei Leonidovich Magnitsky (Russian: Сергeй Леонидович Магнитский, pronounced [sʲɪrˈɡʲejlʲɪɐˈnʲidəvʲɪtɕ mɐɡˈnʲitskʲɪj]; Ukrainian: Сергій Леонідович Магнітський; 8 April 1972 – 16 November 2009) was a Russian tax advisorresponsible for exposing corruption and misconduct by Russian government officials while representing client Hermitage Capital Management.[1] His arrest in 2008 and subsequent death after eleven months in police custody generated international attention and triggered both official and unofficial inquiries into allegations of fraud, theft and human rightsviolations in Russia.[2][3][4] His posthumous trialwas the first in the Russian Federation.

Sergei Magnitsky
Сергeй Магнитский
220px-MagnitskySergei.jpg
Magnitsky in 2006
Born 8 April 1972
Died 16 November 2009(aged 37)
Cause of death Blunt cranial trauma
Resting place Preobrazhenskoye Cemetery, Moscow, Russia
Nationality Soviet (until 1991)
Russian
Alma mater Plekhanov Russian University of Economics
Occupation Tax advisor[1]
Known for Inspiring Magnitsky legislation
Spouse Natalia Zharikova
Children 2

Magnitsky alleged there had been large-scale theft from the Russian state, sanctioned and carried out by Russian officials. He was arrested and eventually died in prison seven days before the expiration of the one-year term during which he could be legally held without trial.[5][6] In total, Magnitsky served 358 days in Moscow's Butyrka prison. He developed gall stones, pancreatitis, and a blocked gall bladder, and was denied medical care. A human rights council set up by the Kremlin found that he had been physically assaulted shortly before his death.[7][8] His case became an international cause célèbre.[9]

The United States Congress and President Barack Obama enacted the Magnitsky Act at the end of 2012, barring those Russian officials believed to be involved in Magnitsky's death from entering the United States or using its banking system. In response, Russia condemned the Act and claimed Magnitsky was guilty of crimes.[10] Nearly a dozen other nations, as well as the European Union, have subsequently implemented or considered Magnitsky legislation.

In early January 2013, the Financial Times wrote that "the Magnitsky case is egregious, well documented and encapsulates the darker side of Putinism".[11]

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தகவலுக்கு நன்றி கந்தையா ........நாங்கள் இருவருமாக இது பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தவர் வரும்வரை காத்திருக்கலாம் ......நீங்கள் என்ன சொல்லுறீங்கள்.......!  😁

2 hours ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சயமாக  உங்கள் கருத்துகளை எற்றுக்கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றேன் 😂🙏 கோஷானின் கருத்துகளை காணவில்லை  என்றாலும்  அமெரிக்கா மருத்துவர் எழுவார்  🤣

நான் இதை பற்றி மேலோட்டமாக தெரிந்து வைத்திருந்தேன்…..யாழில் விளக்கமாக எழுத அந்த அறிவு போதாது.

ஆனால் இதை பற்றி வரும் நாட்களில் கொஞ்சம் நோண்டி பார்க்க உள்ளேன்.

ஜஸ்டின் அண்ணா எழுதினால் நல்லம், இல்லை என்றால் நான் முயல்கிறேன்.

கேட்டதும் கொடுப்பவரே @Justin அண்ணா, கேள்வியின் நாயகனே….😀.

பிகு

கனடாவில் தமிழரை குஷிப் படுத்த ஒரு price war இரு பெரிய கட்சிகள் இடையேயும் வருவது மிக நல்ல அறிகுறி.

ஆளும் தரப்பில் கரி போல் பழமைவாதிகளில் இன்னொருவர் தேவை. இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

தமிழர்கள் பயங்கரவாதிகள் எனும் அவப்பெயருடன் இருக்க வேண்டுமா??

2009 ற்கு பின் தாம் ஆயுதத்தை மெளனித்து விட்டதாக புலிகளே அறிவித்த பின். தலைவரும் குடும்பமும் கூட உயிரோடு இல்லை எனும் போது, புலிகள் என்ற பெயருக்கு நம்பகமான வாரிசுகள் இல்லை என்றாகிவிட்ட பின்பு, புலிகள் மீதான தடையை நாம் ஏன் இத்தனை வருடங்களின் பின்னும் தமிழர் மீதான தடை என கருத வேண்டும்?

இது புலிகளின் மெளனிப்பின் பின்னான 15 வருடத்தின் பின் உருவாகியுள்ள புதிய தமிழ் தலைமை - நாம் எமது உரிமைகளை கோருகிறோம் - பழைய சிலுவைகளை நாம் சுமக்கதேவையில்லை என்ற நிலையை நாம் எடுத்தால் - அது வினைதிறனாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

பழைய சிலுவைகளை நாம் சுமக்கதேவையில்லை என்ற நிலையை நாம் எடுத்தால் - அது வினைதிறனாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

ஆமோதிக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

"மக்னிற்ஸ்கி" தடைகள்  - எனக்கு தெரிந்த வரை மனித உரிமையை மீறி குற்றம் செய்த பொறுப்பானவர்கள் , அதிகாரிகள் மீது தடைவிதிக்கும் சட்டத்தின் பெயர் என்று நினைக்கிறேன். பெரியோர்கள் தான் விளங்கபடுத்த வேண்டும்.

ரஸ்ய கணக்காளர்/வருமான வரி நிபுணர். ரஸ்ய அரசின் நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நிதி மோசடிகளை  வெளிப்படுத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டவராக மேற்கால் கொண்டாடப்படுபவர். 

ஆனால், ரஸ்யாவோ இவர் மிகப்பெரிய நிதி மோசடியை செய்த  கூட்டத்தில் ஒருவர்  எனக்  குற்றம் சாட்டப்பட்டு சிறையில்  இருக்கும்போது இறந்ததாக அறிவிக்கப்பட்டவர். 

மேற்கிற்கு இவர் பெயர்  ஒரு துருப்புச் சீட்டு. இவர் பெயரில் ஒரு சட்டத்தை US & UK கொண்டுவந்து தமக்குப் பிடித்தமில்லாத செல்வந்தர்களை குறிவைக்கிறது. 

ரஸ்யாவுக்கோ இவர் ஒரு மோசடிப் பேர்வழி. 

அம்புட்டுதே. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

2009 ற்கு பின் தாம் ஆயுதத்தை மெளனித்து விட்டதாக புலிகளே அறிவித்த பின். தலைவரும் குடும்பமும் கூட உயிரோடு இல்லை எனும் போது, புலிகள் என்ற பெயருக்கு நம்பகமான வாரிசுகள் இல்லை என்றாகிவிட்ட பின்பு, புலிகள் மீதான தடையை நாம் ஏன் இத்தனை வருடங்களின் பின்னும் தமிழர் மீதான தடை என கருத வேண்டும்?

இது புலிகளின் மெளனிப்பின் பின்னான 15 வருடத்தின் பின் உருவாகியுள்ள புதிய தமிழ் தலைமை - நாம் எமது உரிமைகளை கோருகிறோம் - பழைய சிலுவைகளை நாம் சுமக்கதேவையில்லை என்ற நிலையை நாம் எடுத்தால் - அது வினைதிறனாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

உத்தியோகபூர்வமாக பயங்கரவாதிகள் பெயர் அகற்றப்பட வேண்டும்.இதனை சிறிலங்கா அரசு advantage ஆக எடுத்துள்ளது தெரியவில்லையா?

7 hours ago, goshan_che said:

கனடாவில் தமிழரை குஷிப் படுத்த ஒரு price war இரு பெரிய கட்சிகள் இடையேயும் வருவது மிக நல்ல அறிகுறி.

ஆளும் தரப்பில் கரி போல் பழமைவாதிகளில் இன்னொருவர் தேவை. இருக்கிறார்களா?

NDP  ம் ஒரு வளர்ந்து வரும் கட்சி. அக்கூடையிலும் அப்பிள்களை போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

உத்தியோகபூர்வமாக பயங்கரவாதிகள் பெயர் அகற்றப்பட வேண்டும்

இதை எப்போதும் செய்யலாம். ஆனால் தீர்வு அப்படி அல்ல. அதை காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வருடமும் எமக்குத்தான் ஆப்பு அதிகரிக்கிறது.

4 hours ago, nunavilan said:

இதனை சிறிலங்கா அரசு advantage ஆக எடுத்துள்ளது தெரியவில்லையா?

நாம்தாம் புலிகள் என கருதும் வரைதான் இலங்கை இந்த அட்வாண்டேஜ்ஜை எடுக்க முடியும்.

புலிகள் பயங்கரவாதிகளா? நாம் அதை பற்றி எங்கே கதைத்தோம்? நாம் 2009 இன் பின்னான தமிழர்கள், எமக்கு நீதியான தீர்வை தாருங்கள் என நாம் கேட்டால், இந்த advantage, neutralize பண்ணபட்டு விடும். 

4 hours ago, nunavilan said:

NDP  ம் ஒரு வளர்ந்து வரும் கட்சி. அக்கூடையிலும் அப்பிள்களை போட வேண்டும்.

ஓம். இராதிகா இந்த கட்சியா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஓம். இராதிகா இந்த கட்சியா?

பா.உறுப்பினராக இக்கட்சியில் தான் இருந்தார். பின்பு கட்சி தாவியதாக நினைவு. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.