Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள உறவுகளும் பயன் பெற ஊரில் உலாவிய இடங்களின் படங்களும் பகிர்வும்  மிக்க நன்று 

  • Like 1
  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kavi arunasalam

சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன்

Kavi arunasalam

சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெற

Kavi arunasalam

காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால்  மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

உங்கள் மனைவியுடன் போய் வாருங்கள்   

அப்புறம் ஏன் அங்க போவான்?

2 hours ago, நிலாமதி said:

யாழ் கள உறவுகளும் பயன் பெற ஊரில் உலாவிய இடங்களின் படங்களும் பகிர்வும்  மிக்க நன்று 

அக்கா இதில உள்குத்தொன்றும் இல்லையே?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் பிரியன் இந்த சந்தேகம். நெஞ்சிலே  கரவு வஞ்சகமிருந்தால் தான் இந்த   எண்ணம் வரும். ஊருலா என  தலைப்பு இடடார்..அதனால் ஊரில் உலவிய இடம்.பற்றி என  எழுதினேன். என்னைக் கோர்த்து விடுவதே வேலையாய் போச்சா 😃...என்னை உங்களுக்கு தெரியும் தானே ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஏன் அங்க போவான்?

கவி அருணாச்சலம்  போன்ற வயோதிபர்கள்   இடங்களை பார்க்க தான் போவார்கள்   கிருபனுக்கும்  இடங்கள் பிடித்து கொண்டது போல.  எனவேதான் போக ஆசைப்படுகிறாரோ?? ஆகவே மனைவியும் போனால் துணையாக இருக்கும்   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kandiah57 said:

உங்கள் மனைவியுடன் போய் வாருங்கள்   

பிறகேன் அங்க போவான்......!   😴

நான் 2ம் பக்கத்தில் கந்தையரின் பதிவுக்கு பதில் போட்டேன் ......பின் 3ம் பக்கத்தைப் பார்க்க பிரியனும் அதே பதில் போட்டிருக்கிறார் ........சேம் பிளட் ........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஏன் அங்க போவான்?

ஓ....இவர் இப்பவும் பெரிய நினைப்போட தான் திரியிறார் :cool:

3_jXDj.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

ஓ....இவர் இப்பவும் பெரிய நினைப்போட தான் திரியிறார் :cool:

3_jXDj.gif

spacer.png

இளந்தாரியள் வர முதல் ஓடுவம்😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஓ....இவர் இப்பவும் பெரிய நினைப்போட தான் திரியிறார் :cool:

3_jXDj.gif

பார்த்தால்  நித்யானந்தா போல இருக்கிறது   ........மேலும் பிரியன். ஒருபோதும் தனியாக திரிவது இல்லை சோடியாகத் தான்  திரிவது என்று  எழுதியவர்   நான் வாசித்த ஞாபகம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

கவி அருணாச்சலம்  போன்ற வயோதிபர்கள்   இடங்களை பார்க்க தான் போவார்கள்   கிருபனுக்கும்  இடங்கள் பிடித்து கொண்டது போல.  எனவேதான் போக ஆசைப்படுகிறாரோ?? ஆகவே மனைவியும் போனால் துணையாக இருக்கும்   

ஒராள் இடம் பார்க்க

ஒராள் இடை பார்க்க

2 hours ago, குமாரசாமி said:

ஓ....இவர் இப்பவும் பெரிய நினைப்போட தான் திரியிறார் :cool:

3_jXDj.gif

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:
2 hours ago, குமாரசாமி said:

ஓ....இவர் இப்பவும் பெரிய நினைப்போட தான் திரியிறார் :cool:

3_jXDj.gif

Expand  

பார்த்தால்  நித்யானந்தா போல இருக்கிறது   ........மேலும் பிரியன். ஒருபோதும் தனியாக திரிவது இல்லை சோடியாகத் தான்  திரிவது என்று  எழுதியவர்   நான் வாசித்த ஞாபகம்

கிருபன் தான் போவதாக சொல்லியிருந்தார்.

நான் போவதானால் சோடியாக தான் போவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, கிருபன் said:

சிதம்பரத்தை பூ - செம் பரத்தை?? செவ்வரத்தை என்றுதான் நாங்கள் சொல்லுவது..

நீங்கள் சொல்வதுபோல் ‘செவ்வரத்தை’தான் சரியானது.  சிதம்பரத்தை பூ  எங்களது ஊர் பேச்சுத் தமிழ்☺️

21 hours ago, ஈழப்பிரியன் said:

விலாசத்தையும் போட்டுவிட்டால் விரும்பியவர்கள் போய் ரம்பைகளை பார்க்கலாமே.

Address: St. Sebastian Rd, Kalutara 12000, Sri Lanka

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அடுத்து வவுனியாஇந்தப் பயணத்தில் மணியன் என்னுடன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலேயே ரிக்கெற்றைப்   பதிவு செய்து கொண்டேன். எயார் கொன்டிசனில் இடம் இல்லை என்று கையை விரிக்க சதாரண வகுப்பில் பதிவு செய்தேன். இரயில் பெட்டியில் சுத்தம் குறைவாகவும் சத்தங்கள் அதிகமாகவும் இருந்தது.

 

Untitled Artwork

இடம் வலமாக ஆடியாடிப் போய்க் கொண்டிருந்த இரயில் அநுராதபுரத்துக்கு அப்பால் சீராக, வேகமாகப் போக ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் இதைப்பற்றிக் கேட்க, “இப்ப கிட்டடியலேதான் பாதையை திருத்தினவங்கள்என்று பதில் கிடைத்தது.

Untitled Artwork

 

 வவுனியா வீதிகள் துப்பரவாக இருந்தன. நல்லதொரு மழை நேரத்தில் அங்கே மாட்டிக் கொண்டதால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தங்கியிருந்த  ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை  வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம்மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது.

 

Untitled Artwork

Untitled Artwork

பருத்தித்துறை நான் பிறந்த ஊர். கைத்தடி இல்லாமல் வடக்கே கடலைப் பார்த்து உட்கார்ந்திருந்த காந்தி இப்பொழுது எழுந்து நிற்கிறார். சிலையின் அழகு முன்னதைப் போல் இல்லை. முன்பிருந்த வணிக நிலையங்கள் எதுவும் இப்பொழுது அங்கே என் கண்களில் படவில்லை. 

Untitled Artwork

மழை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்ததால் நினைத்து வந்த பலதை ப் பார்க்க முடியாமல் போயிற்று. ஆனாலும் பலரைச் சந்திக்க முடிந்தது.

Untitled Artwork

புற்றளை மகா வித்தியாலத்தில்தான் என் ஆரம்பக் கல்வி இருந்தது. ஒருதடவை பள்ளியை எட்டிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த புற்றளை ப் பிள்ளையார் கோவில் கேணிக்கு முன் இருக்கும் மகிழமரத்தில் குரங்குகளாக ஏறி விளையாடி மகிழம் பழங்களைச் சாப்பிட்டது நினைவுக்கு வர வயதை மறந்து மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துச்  சாப்பிட்டேன். பழங்களைச் சாப்பிட்டதும் தொண்டையில் கரகரப்பு வந்து கொஞ்சம் சிரமப்பட்டேன்.

Untitled Artwork

பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அருகே ஒரு அம்மா சுடச்சுட தோசை சுட்டுத் தருகிறார். சுவையாக இருக்கும்  எனக் கேள்விப்பட்டு ஒரு காலைச் சாப்பாட்டை அங்கே எடுத்துக் கொண்டேன். பொலித்தீனால் சுற்றப்பட்ட தட்டில் சாப்பிட்டதாலோ என்னவோ அங்கே உணவை என்னால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. அதுவும் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, நீல நிற பிளாஸ்ரிக் குடுவையில் இருந்து அவர் தண்ணி எடுத்துத் தந்த அழகும், அந்த குடுவை இருந்த கோலமும் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை.

Untitled Artwork வேலாயுதம் பாடசாலைக்கு முன்னால் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றார்கள். அங்கேயும் பொலித்தீன் சுற்றிய தட்டில் உணவு வந்ததுபொலித்தீனின் விளைவுகளைத் தெரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை வந்தும் நான் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை. ஏனெனில் இப்பொழுது பருத்தித்துறைக்கு நான் அந்நியன்.

Untitled Artwork ஹொலண்டில் வசிக்கும் ஒரு தமிழர், விஎம் (விநாயகர் முதலியார்) றோட்டில் ஒரு ஹொட்டலை வைத்திருக்கிறார். அங்கேதான் தங்கினேன் ஹொட்டலில் எங்கெல்லாம் கமரா வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்கள் ஹொட்டலின் பொறுப்பாளரைக் கேட்டால், “இங்கே நடப்பதை ஹொலண்டில் இருந்து முதலாளி பார்ப்பதற்காகஎனப் பதில் வந்தது.

 

Untitled Artwork

கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி போகும் வீதியில்தான் என் வீடு இருந்தது. சந்தியில் இருந்து முதலியார் வாசிகசாலைவரை எனது உறவினர்கள்தான் வசித்தார்கள். இப்பொழுது அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. உறவுகள் மட்டுமல்ல பல வீடுகளையும் அங்கே காணவில்லை. இருந்த ஒன்றிரண்டு வீடுகளும் பாழடைந்திருந்தன. அத்தி பூத்தாப்போல் ஒரே ஒரு குடும்பம், அதுவும் கணவன்,மனைவி இருவரும்தான் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. பல வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்து விட்டு  இப்பொழுது ஊருக்கு வந்து வீட்டைத் திருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போய் பார்த்தேன்.

Untitled Artwork

ஆரெண்டு தெரியேல்லை. இடம் பெயர்ந்த ஆக்களாத்தான் இருக்கவேணும். அவையள்தான் இப்ப உங்கடை வீட்டிலை இருக்கினம். வீடு பாழடைஞ்சு போகுது, சும்மாதான் இருக்குது  எண்டு ஆறுமுகமண்ணைதான் அவையளை இருக்க விட்டவர். அவர் இப்ப புற்றளையிலை தம்பிக்காரனோடை இருக்கிறார். அவருக்கும் ஏலாமல் வந்திட்டுது. வந்தனீ எதுக்கும் போய் அவரை பாரன்

தேனீருக்கு மத்தியில் அங்கே அவர்களிடம் இருந்து எனக்கு அறிவுரை கிடைத்தது. ஆறுமுகண்ணையைப் பார்ப்பதற்கு முன்னர் நான் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பது என்று முடிவு செய்து அங்கே போனேன். எனது அம்மா சொல்லுவார், “எனக்கு எந்தக் குறையும் எப்போதும் வராது. நாலு இளவரசர்களுக்கும் ஒரு இளவரசிக்கும் நான் தாய்வீட்டின் கேற்றை நான் நெருங்கும் போது ஏனோ அம்மா எங்கள் சொந்தங்களுக்குச் சொல்லும் வாசகங்கள் எனக்குள் கேட்டன.

2008இல் எனது தாய் இறந்த சோகம் மறையும் முன்னர் அடுத்த ஆண்டு அண்ணன் ஒருவன் இறந்து போக எங்கள் கோட்டை தளர ஆரம்பித்து விட்டதுமிகுதியான மூன்று இளவரசர்களும் இளவரசியும் இராச்சியங்களை இழந்து இப்போ வெவ்வேறு நாடுகளில் சிதறி இருக்கிறார்கள். இதற்குள் சிதிலமடைந்திருக்கும் இந்த வீட்டுக்குள் போய் நான் எதைப் பார்க்கப் போகிறேன்? எதைத் தேடப் போகிறேன்உள்ளே இருப்பவர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்களை எனக்கும் தெரியாது. அப்படியே எதுவும் தெரியாமலே இருந்து விட்டுப் போகட்டும் என்று முடிவெடுத்தேன்.

 

IMG_5651

அம்மா வைத்த விலாட் மாமரம் பெரிதாக வளர்ந்து காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதை மட்டும் வீதியில் நின்றே கமராவில் பதிந்து கொண்டு திரும்பி விட்டேன்.

ஆறுமுகமண்ணையைப் போய்ப் பார்த்தேன். முதுமையும் இயலாமையும் அவரிடம் தெரிந்தது. “என்னாலை இப்ப ஏலாது தம்பி. அதுதான் அவையளை இருக்க விட்டனான். வாடகை எண்டு ஒண்டும் வேண்டிறதில்லை.சும்மா கிடந்து பாழடையிற நேரத்திலை..”

“நான் உங்களைப் பாக்கத்தான் வந்தனான். வீட்டை அல்லநான் இதைச் சொன்ன போது அவரது முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

“உங்கடை அம்மான்ரை தையல் மெசினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தனான்

“அப்பிடியே அதை நான் பாக்கலாமா?”

 “அது நல்லா கறல் பிடிச்சுப் போட்டுது. சும்மா எப்பவாவது தைப்பம்

Untitled Artwork

கறள் பிடித்திருந்தாலும் அது அம்மாவின் தையல் மெசின். எத்தனை தீபாவளி, தைப்பொங்கல்களுக்கு அம்மா அதைப் பயன்படுத்தி இருப்பார். அந்தத் தையல் மெசினைப் படம் பிடித்துக் கொண்டு ஆறுமுகமண்ணையிடம் இருந்து விடை பெற்றேன்

பாலா எனது பாடசாலை நண்பன். நீண்டகாலமாக அமெரிக்காவில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறான். மந்திகைச் சந்தைக்கு அருகே அவனது நண்பர் இருவர்களுடன் (அவர்களும் அவனுடன் அமெரிக்காவில் இருந்தவர்கள்) இருப்பதாகச் சொன்னார்கள். தகவல் அறிந்து அவனைக் காணப் போனேன். புதிதாக, பாதுகாப்பு வசதிகளுடன் அந்த வீடு இருந்தது. வெளியில் இருந்து அழைப்புமணி அடித்தும் யாரும் வரவில்லை. பக்கத்தில் இருந்த நாகேந்திரத்தின் (தெரிந்தவர்) கடைக்குப் போய் கேட்டேன்.

“பாலுவோ? ஆளைப் பிடிக்கிறது சரியான கஷ்டம். அமெரிக்கப் பென்ஷனியர். ஆனால் சாமிப் போக்கு. காலமை பின்னேரம் எண்டு எந்த நேரமும் கோயில்தான். வல்லிபுரக் கோவிலுக்குப் போய் கூட்டி, குளிச்சு ஆழ்வாரைக் கும்பிட்டு எப்ப வருவார் போவார் எண்டு தெரியாது. வேணுமெண்டால் ஆளின்ரை ரெலிபோன் நம்பர்தாரன் அடிச்சுப் பாருங்கோ

 

IMG_4802

ஹொட்டலுக்குப் போய் நானும் குளித்து, சுத்தமாகசாமிக்கு ரெலிபோன் எடுத்தால் பாலுவின் குரல் கேட்டது.

 “என்ன சாமியாராயிட்டியாம்?”

பாலுவின் சிரிப்புத்தான் பதிலாக வந்தது.

“தனியாக இருக்கிறாயோ? அல்லது குடும்பமாகவோ..?”

“நான் கலியாணமே கட்டேல்லை

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காலை, மாலை என நேரம் தவறாமல் அட்டவணை போட்டு வடமராட்சி,மெதடிஸ் பாடசாலைகளை என்னுடன் சேர்ந்து சுத்தி வந்த பாலு ஏன் இப்படி மாறினான் என்பது எனக்கு விளங்கவில்லை.

நான் இருக்கும் ஹொட்டலை சொன்னேன் வந்து பார்ப்பதாகச் சொன்னான்.

சொன்னது போல் அடுத்தநாள் மதியம் என்னைப் பார்க்க பாலு வந்திருந்தான். அந்த நேரம் நான் அங்கே நிற்கவில்லை. அவன் வந்த தகவல் அறிந்து ஓட்டோ பிடித்து அவன் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை.

“பகலிலே சந்திரனைப்

பார்க்கப் போனேன்

அவன் இரவிலே வருவதாக

ஒருத்தி சொன்னாள் 

கடலிலே மீன் பிடிக்க

நானும் போனேன்

மீன் கரையேறிப் போனதாக

ஒருத்தி சொன்னாள்..” என்ற கண்ணதாசன் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது.

தொலைபேசியில் பல தடவைகள் அழைத்தும் பாலுவை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை

அன்று இரவு நான் மீண்டும் கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்ததுஇனி எனக்கு,  பருத்தித்துறைக்குப் போக வேண்டிய தேவை இல்லை. எனது அடுத்த பயணத்தில் பருத்தித்துறை வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு என்று மனது சொன்னது.

பல இடங்களுக்குப் போக வேண்டும். அதிலே கிழக்கு மாகாணம் முக்கியம் என கணக்குப் போட்டிருந்தேன். மழை பெரிதாக ஆக்கிரமித்து இருந்ததால் இந்த முறை அது முடியவில்லை. அடுத்தடுத்த பயணங்களில் பார்க்கலாம்.

மணியனுடன் கொழும்பில் இருந்த போது, அஞ்சப்பன், சண்முகாஸ், தலைப்பாய்கட்டு, இந்தியன் மசாலா, சரஸ்வதிவிலாஸ், ஹோல் பேஸ் ஹொட்டல், … என்று ஏகப்பட்ட இடங்களில் வயதை மீறி சாப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்து உடம்பைக் குறைக்க வேணும்.

IMG_9180

ஊர்உலாவில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றி.

 

 

Edited by Kavi arunasalam
படம் ஒன்று இணைக்கப்பட்டது
  • Like 10
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, Kavi arunasalam said:

IMG_9180

ஊர்உலாவில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றி.

ஆரை வெறுப்பேத்த உந்த படம் போடனியள்? 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

ஆரை வெறுப்பேத்த உந்த படம் போடனியள்? 😎

வயதுக்கு வந்த இளைஞனை

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

பக்கத்தில் இருந்த புற்றளை ப் பிள்ளையார் கோவில் கேணிக்கு முன் இருக்கும் மகிழமரத்தில் குரங்குகளாக ஏறி விளையாடி மகிழம் பழங்களைச் சாப்பிட்டது நினைவுக்கு வர வயதை மறந்து மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துச்  சாப்பிட்டேன்

நானும் உப்பிடித் தான் நினைத்து பிலாப்பழம் இறக்குவம் என்று ஏறி…………………

சோகக்கதையாகிப் போச்சு.

மிகவும் ரசித்து வாசித்த உங்கள் பயணக்கதை நெஞ்சில் பதிந்துவிட்டது.

பாராட்டுக்கள்.

 

IMG_9180

கொண்டுவாற ஆளைப் பார்க்கிறதா?

தட்டில் என்ன கொண்டுவாறா என பார்ப்பதா?

ஒரே குழப்பமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொண்டுவாற ஆளைப் பார்க்கிறதா?

தட்டில் என்ன கொண்டுவாறா என பார்ப்பதா?

ஒரே குழப்பமாக இருக்கு.

என்ன பெரிசு?
குழம்பி என்னாத்த......?
காசி இராமேஸ்வரத்துக்கு ரிக்கற் போடுறத விட்டுட்டு......  இப்பவும் குமரனாட்டம்..😂

tea-master-ganja-karuppu.gif

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

என்ன பெரிசு?
குழம்பி என்னாத்த......?
காசி இராமேஸ்வரத்துக்கு ரிக்கற் போடுறத விட்டுட்டு......  இப்பவும் குமரனாட்டம்..😂

 

சேர்ந்தே போவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

. தங்கியிருந்த  ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை  வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம் மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது

 

ஸ்டோரி நல்லாத்தான் போகுது..பொசுகென்று முடிச்சுப்போட்டியள்... வவுனியாவுக்கு அங்காலைசீனாக்காரர் என்னும் குடியேற வில்லையோ...கன்பியூசா  இருக்கே

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் உப்பிடித் தான் நினைத்து பிலாப்பழம் இறக்குவம் என்று ஏறி…………………

சோகக்கதையாகிப் போச்சு.

மிகவும் ரசித்து வாசித்த உங்கள் பயணக்கதை நெஞ்சில் பதிந்துவிட்டது.

பாராட்டுக்கள்.

 

 

IMG_9180

கொண்டுவாற ஆளைப் பார்க்கிறதா?

தட்டில் என்ன கொண்டுவாறா என பார்ப்பதா?

ஒரே குழப்பமாக இருக்கு.

இது தமிழ் பெண் இல்லை   😂

2 hours ago, ஈழப்பிரியன் said:

சேர்ந்தே போவோம்.

யாருடன். உங்கள் துணை உடானா.???

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kavi arunasalam said:

ஹொலண்டில் வசிக்கும் ஒரு தமிழர், விஎம் (விநாயகர் முதலியார்) றோட்டில் ஒரு ஹொட்டலை வைத்திருக்கிறார். அங்கேதான் தங்கினேன்

ஏன் Tulip Inn என்று பருத்தித்துறையில் பெயர் உள்ளது என்பது இப்போது விளங்கிவிட்டது!

இங்கு 2022 சம்மரில் நண்பர்களுடன் சிலநாட்கள் தங்கி இருந்து கும்மாளம் போட்டிருந்தோம்!

On 8/1/2024 at 22:52, Kandiah57 said:

உங்கள் மனைவியுடன் போய் வாருங்கள்   

போய்ஸாகப் போய் குஷியாக இருக்கலாம் என்று நினைத்தால் இந்தாள் கோயிலுக்குப் போறமாதிரி போகச் சொல்றார்☺️

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/1/2024 at 07:07, Kavi arunasalam said:

தெரியவில்லை நிழலி. ஆனால் வெள்ளவத்த றோயல் பேக்கரிக்கு அருகில் இருக்கிறது.

ஓம். ஒரு காலத்தில் வெள்ளவத்தையில் gangs  சந்திக்கும் இடம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயனக் கட்டுரை அருமை மிகவும் ரசித்துப் படித்தேன் அத்துடன் படங்களும் அழகோ அழகு ........!   👍

நன்றி கவி. அருணாசலம் ........! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

ஏன் Tulip Inn என்று பருத்தித்துறையில் பெயர் உள்ளது என்பது இப்போது விளங்கிவிட்டது!

IMG_4761

 

Edited by Kavi arunasalam



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.