Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் அந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தலைமைப் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழமையாக தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு என்பது கட்சியின் மத்திய சபையாலேயே தீர்மானிக்கப்படும்.

எனினும், இம்முறை மத்தியசபையில் பரிந்துரை செய்யப்படும் வேட்பாளர்கள் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சியின் பொதுச் சபையில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தலைவர் பதவிக்கான போட்டியில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோருக்கு சம ஆதரவு இருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இருவரும் தீவிரம் காட்டிவருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம், கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

போட்டி இல்லாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டது.
 
http://www.samakalam.com/தமிழரசுக்-கட்சியின்-தலை-2/

  • Replies 69
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று

  • அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்? ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக

  • உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ  மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன். எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆ

  • கருத்துக்கள உறவுகள்

sri.jpg?resize=700,375&ssl=1

தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடுகள் இல்லை : இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 21/01/2024 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயமுறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1365675

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு!

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் கால அவகாசத்தினை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுமந்திரன் சிறிதரன், யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் யாப்பின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டுமெனவும் அவர்கள் தங்களுக்குள் இணக்கப்பாட்டிற்கு வருவதன் அடிப்படையில் போட்டியின்றித் தலைவர் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த இணக்கப்பாடு ஏற்படாதவிடத்து கட்சியின் யாப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1365652

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தமிழரசு  கட்சிக்குள் பிரிவினை ஏட்பட்டுள்ளதாகவே தெரிகிறது. வீரகேசரி பத்திரிகை செய்திகளை பார்க்கும்போது மதவாதமும் உள்ளிடடதாகவே காண முடிகின்றது.

யோகேஸ்வரனும் போட்டியிடடாலும் தான் இப்போது ஸ்ரீதரனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே கட்சி இரு குழுக்களாகவே இயங்க போகின்றது. அநேகமாக ஸ்ரீதரன் தெரிவாக சந்தர்ப்பம் இருக்கின்றது.

தலைமை பதவி என்பது இருக்கும் தலைமையினால் உருவாக்க பட்டிருக்க வேண்டும். சம்பந்தன் சுமந்திரனை அதட்கு வழி நடத்தியதாகவே இருந்தது. ஆனால் சிலபல காரணங்களினால் அது சாத்தியப்படவில்லை போல் தெரிகின்றது.

எனவே கட்சிக்குள் மதவாதம், சிறுபான்மை , பெரும்பான்மை என இனி பிரிவினைகள் வரலாம். பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அயோக்கியர்களின் இறுதி  ஆயுதம் மதம்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அயோக்கியர்களின் இறுதி  ஆயுதம் மதம்  🤣

அதைத்தான் நானும் சொல்ல வருகின்றேன் ஹி ஹி ஹி 😜

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் அந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தலைமைப் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழமையாக தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு என்பது கட்சியின் மத்திய சபையாலேயே தீர்மானிக்கப்படும்.

எனினும், இம்முறை மத்தியசபையில் பரிந்துரை செய்யப்படும் வேட்பாளர்கள் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சியின் பொதுச் சபையில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தலைவர் பதவிக்கான போட்டியில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோருக்கு சம ஆதரவு இருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இருவரும் தீவிரம் காட்டிவருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம், கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

போட்டி இல்லாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டது.
 
http://www.samakalam.com/தமிழரசுக்-கட்சியின்-தலை-2/

சிறிதரனை காட்டிலும் சுமந்திரன் வருவது நல்லம். இருவரும் கிட்டத்தட்ட ஒரே மட்டைகள் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் சுமத்திரன் வென்றால்  அடுத்த 2 வருடங்களில் கட்சியை சுக்குநூறாக உடைத்து விடுவார். தோற்றால்  தேசியக்கட்சிகளில் தனை;னை இணைத்துக்கொண்டு தன் வழக்கறிஞர் தொழிலைப் பார்ப்பார். அரசியல் பலமில்லாவிட்டால் அவருடைய வழக்கறிஞர் தொழில் எடுபடாது. சிறிதரன் தோற்றால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சுமத்திரன் பாலா அண்ணை போல ஒரு விண்ணன். தமிழ்மக்களுக்கு சுமத்திரன் தேவை என்று சுமத்திரன் புராணம்பாடுவார்.  தொண்டர்கள் காறித்துப்புவாங்களே என்று சொன்னால் துப்பினால் துடைச்சுக்குவேன் என்று   சொல்லுவார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புலவர் said:

இப்பவும் உடைந்துதான் கிடக்குது. தலைவர் தெரிவுடன் சுக்கு நூறாகி விடும். மதவாதம் புகுந்தால் சிங்கள பவுத்தம், தமிழ் இந்து, etc  etc 
நல்லா இருக்கு இல்லே?

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனா? சிறிதரனா ?என்றால் எனது தெரிவு சிறிதரன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

சுமத்திரனா? சிறிதரனா ?என்றால் எனது தெரிவு சிறிதரன்.

இந்து தமிழன் என்பது ஒரு காரணம் சொல்லலாம். வேறு ஏதாவது நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் .........................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Cruso said:

இந்து தமிழன் என்பது ஒரு காரணம் சொல்லலாம். வேறு ஏதாவது நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் .........................

நம்மை பொருத்தவரை ஸ்ரீதரன் கூட அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் அவரை விட்டால் வேறு வழியில்லை .

சுமத்திரன் தலைவராய் வந்தால் அவ்வளவுதான் சிதறு தேங்கா .இங்கு இந்துவா கிறிஸ்த்தவனா என்று குறுகிய மனப்பான்மையில் பார்க்காமல் தமிழர் நலன் என்று பார்ப்பது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இங்கு இந்துவா கிறிஸ்த்தவனா என்று குறுகிய மனப்பான்மையில் பார்க்காமல் தமிழர் நலன் என்று பார்ப்பது நல்லது .

இல்லை அங்கு கட்சிக்குள் நிலைமைஅப்படிதான் இருக்கிறது. நான் தேசிய பத்திரிகையில் வந்ததை வைத்து சொல்லுகிறேன். இலங்கையிலசிங்கள பவுத்தம் பெரும்பாண்மை என்றுசொல்லும்போது தமிழ் இந்து பெரும்பாண்மை தலைமை என்று சொல்வதில் தவறில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Cruso said:

இல்லை அங்கு கட்சிக்குள் நிலைமைஅப்படிதான் இருக்கிறது. நான் தேசிய பத்திரிகையில் வந்ததை வைத்து சொல்லுகிறேன். இலங்கையிலசிங்கள பவுத்தம் பெரும்பாண்மை என்றுசொல்லும்போது தமிழ் இந்து பெரும்பாண்மை தலைமை என்று சொல்வதில் தவறில்லை.  

சுமத்திரன் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் அதுதான் அந்த பருப்பு வேகாது .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

சுமத்திரன் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் அதுதான் அந்த பருப்பு வேகாது .

அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்?

ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக்கணிக்கப்படும் நிலைமை.

சிங்கள பவுத்தன் இதை விட மேல் என்று நினைக்கிறேன். சரத் வீரசேகர, விமல், கம்மன்பில பாடு கொண்டாட்டம்தான். வாழ்க தமிழ் ஈழம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

நான் அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேணும் என்று இங்கு கருத்து எழுதுகிறேன் நீங்கள் உங்கள் ஆள் சுமத்திரன் தலைவராகணும் எனும் தொனியில் கருத்து எழுதுகிறிர்கள் லண்டன் நேரம் ஒன்றரை ஆகி விட்டது இனிய இரவு சொல்வமா ?

தமிழருக்குள் மதவாதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கு விடுதலை, நிம்மதி இருக்காது. குட் நைட் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

தமிழருக்குள் மதவாதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கு விடுதலை, நிம்மதி இருக்காது. குட் நைட் 

கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை….

தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் தலைவர்கள் தமிழ் மக்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….

ஒரு சிறிய விளக்கம்

தமது தந்தையாக .....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

தமிழரசு கட்சியின் தலைவர்கள் தமிழ் மக்கள் தானே?

ஓம்.  ஆனால் மதம் என்றவுடன் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு பெண் எம்பி  சாமிஉரு ஆடினது பார்த்திருப்பீர்கள் அது மாதிரி வந்துவிடுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை….

தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….

8 hours ago, விசுகு said:

ஒரு சிறிய விளக்கம்

தமது தந்தையாக .....

உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ  மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன்.

எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆட்சியில் இருப்பதைவிட சிங்களவனின் கீழ் இருக்கலாம். சிவபூமி, சிவா சேனை எல்லாம் கொண்டு எங்களை ஆட்சி செய்ய முயட்சிப்பதை எல்லாம் நாங்கள் அறியாமல் இல்லை.

சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. 

9 hours ago, நியாயம் said:

தமிழரசு கட்சியின் தலைவர்கள் தமிழ் மக்கள் தானே?

ஓம் ஓம். பேச்சில் அப்படிதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Cruso said:

உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ  மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன்.

எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆட்சியில் இருப்பதைவிட சிங்களவனின் கீழ் இருக்கலாம். சிவபூமி, சிவா சேனை எல்லாம் கொண்டு எங்களை ஆட்சி செய்ய முயட்சிப்பதை எல்லாம் நாங்கள் அறியாமல் இல்லை.

சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. 

தமிழர் தரப்பில் என்றுமே மதவாதம் இருந்ததில்லை. உங்கள் நலனுக்காக்காக தயவு செய்து மத வாதத்தை புகுத்த வேண்டாம். தமிழர்கள் என்றுமே மதவாதம்,இனவாதம் இல்லாதவர்கள்.
கருத்தில் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தமிழர் தரப்பில் என்றுமே மதவாதம் இருந்ததில்லை. உங்கள் நலனுக்காக்காக தயவு செய்து மத வாதத்தை புகுத்த வேண்டாம். தமிழர்கள் என்றுமே மதவாதம்,இனவாதம் இல்லாதவர்கள்.
கருத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் இப்படி எழுதுவதால் உண்மையை மறைக்க முடியாது. தலைமைத்துவ தெரிவு முடியட்டும். பின்னர் நான் என்ன நடக்குமென்பதை எழுதுகிறேன்.

இங்கு எனது நலன் என்று ஒன்றுமேயில்லை. எங்களை யாராவது இஸ்லாமியரின் வழியை பின்பற்ற தள்ளினால் அதன் பலனை அனுபவிப்பார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.