Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்

Vladimir Putin Net Worth 2018 - Why At $200 Billion Putin Thinks He's the  Richest Man in the World

2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின்.

இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது.

Putin's Palace (film) - Wikipedia

அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Putin's £1billion palace' is a building site and just 'one slab of  concrete', footage claims | Daily Mail Online

மேலும் குறித்த மாளிகையை பராமரிப்பதற்கு மாத்திரம் 2 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

White House proposes plan to sell Russian yachts for Ukraine aid

இதுதவிற 19 சொகுசு வீடுகள், 700 மகிழுந்துகள், 58 விமானங்கள் மற்றும் 6 இலட்சம் டொலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spacer.png
spacer.png

https://thinakkural.lk/article/288992

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்

இதென்ன பிரமாதம்???????  
மேற்கத்தைய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களையும் வெளியிலை விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே.......😋

ஆனால் ஒண்டு புட்டின் சார்  சொத்துக்கள் சேர்த்தது உண்மை பொய்களுக்கப்பால் வெளிநாடுகளுக்கு   படையெடுத்து சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. 😎
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யுவர் ஆனர், 

நீங்கள் புட்டினின் புகழ் பாடுவதை யாம் வன்மையாகக்  கண்டிக்கும்,.... 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

யுவர் ஆனர், 

நீங்கள் புட்டினின் புகழ் பாடுவதை யாம் வன்மையாகக்  கண்டிப்பதாம்,.... 

😁

யுவர் ஆனர்.....யுவர் ஆனர்!  உண்மையும் யதார்த்தமும் புரியாவிட்டால்  யான் என்ன செய்யும்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதென்ன பிரமாதம்???????  
மேற்கத்தைய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களையும் வெளியிலை விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே.......😋

ஆனால் ஒண்டு புட்டின் சார்  சொத்துக்கள் சேர்த்தது உண்மை பொய்களுக்கப்பால் வெளிநாடுகளுக்கு   படையெடுத்து சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. 😎
 
யார் மறிப்பது?? எவருமில்லை   நீங்கள் ஏன் மற்றவர்கள் சொத்து மதிப்புகளை  வெளியிடக்கூடாது???   வெளியீடுகள்  வாசிக்கலாம் வாசித்து பார்ப்போம்  முதலில்  உங்கள் முன்னாள் பிரதமர் அங்கிலவிருந்து  தொடங்குங்கள்.  🤣😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Kandiah57 said:

யார் மறிப்பது?? எவருமில்லை   நீங்கள் ஏன் மற்றவர்கள் சொத்து மதிப்புகளை  வெளியிடக்கூடாது???   வெளியீடுகள்  வாசிக்கலாம் வாசித்து பார்ப்போம்  முதலில்  உங்கள் முன்னாள் பிரதமர் அங்கிலவிருந்து  தொடங்குங்கள்.  🤣😂

செய்திகள், விபரங்கள் இணைப்பதில் நான் மூக்கை நுழைக்க முடியாது. செய்திகளை இணைப்பவர்கள் அதனையும் கவனித்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

செய்திகள், விபரங்கள் இணைப்பதில் நான் மூக்கை நுழைக்க முடியாது. செய்திகளை இணைப்பவர்கள் அதனையும் கவனித்துக்கொள்வார்கள்.

பழகுங்கள் பழகினால்   நீங்கள் இப்ப செய்கிற வேலையை விட சுகமானது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதென்ன பிரமாதம்???????  
மேற்கத்தைய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களையும் வெளியிலை விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே.......😋

ஆனால் ஒண்டு புட்டின் சார்  சொத்துக்கள் சேர்த்தது உண்மை பொய்களுக்கப்பால் வெளிநாடுகளுக்கு   படையெடுத்து சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. 😎
 
https://www.lovemoney.com/galleries/92260/the-richest-world-leaders-today-and-how-they-made-their-money?page=1

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக திராவிட  அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்..
புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழக திராவிட  அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்..
புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂

வேண்டாம் புட்டின். முதலாவது ஆக இருக்கட்டும்  பாவம் மனிதன்  ஜேர்மனியில் ரொம்பவே கஸ்டப்பட்டவர்  🤣

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில் குத்துதலில் வலி வலியது. பாவம் அந்த மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது, பின்பு சிறைக்கு அனுப்பியது, போன வருடம் மேலும் 19 வருடங்கள் சிறை தண்டணையை அதிகரித்தது  மிக முக்கிய காரணம் புதின் செய்த ஊழலை அவர் அம்பலபடுத்தினார் என்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துச் சேர்ப்பது ஒன்றும் பாவம் இல்லை.

இதில் யாருக்கு சந்தேகம்? 

😉

7 hours ago, விசுகு said:

முதுகில் குத்துதலில் வலி வலியது. பாவம் அந்த மக்கள். 

பிரான்சில்,? சேர்மனியில் farmes எல்லோரும் வீதியில் என்று கேள்வி? 

அந்த மக்கள் பாவம் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

தமிழக திராவிட  அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்..
புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂

செலன்ஸ்கியும் கிட்ட முட்ட வந்திருப்பார் என நினைக்கிறேன்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

செலன்ஸ்கியும் கிட்ட முட்ட வந்திருப்பார் என நினைக்கிறேன்.🙃

ஒரே மட்டை ஒரே குட்டை

😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது, பின்பு சிறைக்கு அனுப்பியது, போன வருடம் மேலும் 19 வருடங்கள் சிறை தண்டணையை அதிகரித்தது  மிக முக்கிய காரணம் புதின் செய்த ஊழலை அவர் அம்பலபடுத்தினார் என்பதாகும்.

புதின்  நேர்மையாக உழைத்த சொத்து ஒன்றும் அவரிடம் இல்லை. அங்குள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி எப்படி கொள்ளையடித்தார் என்று வாசித்த ஞாபகம் இருக்கிறது. ராஜபக்சேக்கள் கொள்ளையடித்தது இன்று வரை பேசு பொருள் மட்டும்தான். கண்டுபிடிக்க முடியவில்லை. புட்டினின் கொள்ளையடிப்புக்கள் எல்லாம் பில்லியன் கணக்கில்தான். எப்படியோ மனுஷன் போகும்போது கையை விரித்துபோட்டுத்தான் போக வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

சொத்துச் சேர்ப்பது ஒன்றும் பாவம் இல்லை.

இதில் யாருக்கு சந்தேகம்? 

😉

பிரான்சில்,? சேர்மனியில் farmes எல்லோரும் வீதியில் என்று கேள்வி? 

அந்த மக்கள் பாவம் இல்லையா? 

ஒரு தவறை குறிப்பிட்டு செய்தி வந்தால் அவனை நிறுத்த சொல் இவன் நிறுத்துவான் என்பது தவறை தட்டிக் கொடுக்கும் வேலை. 

இந்த வியாதி இருக்கும் வரை தத்துவத்தை வைத்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்து வாழ்வோர் வேலை இலகுவாக தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2024 at 15:22, தமிழ் சிறி said:

தமிழக திராவிட  அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்..
புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂

மகி & Co,  முன்னால் எமது பினாமிகளிடமிருக்கும் சொத்துகள்???😎

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2024 at 05:54, கிருபன் said:

ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்

Vladimir Putin Net Worth 2018 - Why At $200 Billion Putin Thinks He's the  Richest Man in the World

2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின்.

இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது.

Putin's Palace (film) - Wikipedia

அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Putin's £1billion palace' is a building site and just 'one slab of  concrete', footage claims | Daily Mail Online

மேலும் குறித்த மாளிகையை பராமரிப்பதற்கு மாத்திரம் 2 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

White House proposes plan to sell Russian yachts for Ukraine aid

இதுதவிற 19 சொகுசு வீடுகள், 700 மகிழுந்துகள், 58 விமானங்கள் மற்றும் 6 இலட்சம் டொலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spacer.png
spacer.png

https://thinakkural.lk/article/288992

How Putin became ‘world’s richest man’: Lies, affairs, greed (nypost.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

ஒரு தவறை குறிப்பிட்டு செய்தி வந்தால் அவனை நிறுத்த சொல் இவன் நிறுத்துவான் என்பது தவறை தட்டிக் கொடுக்கும் வேலை. 

இந்த வியாதி இருக்கும் வரை தத்துவத்தை வைத்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்து வாழ்வோர் வேலை இலகுவாக தொடரும்.

அப்படியல்ல விசுகர்! அவனைப்பார் இவனைப்பார் என்பதற்க்கப்பால் புட்டினின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் தான் அதே தவறையும் செகின்றார்கள்.

மற்றும் படி பெரும்பானமையான அரசியல்வாதிகள் ஊழல்கள் செய்பவர்கள் அல்லது செயதவர்களாகவே இருக்கின்றார்கள்.. ஏன் ஒவ்வொரு தனிமனிதன் கூட எப்படி இலகுவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற கனவில் தான் ஓடித்திரிகின்றான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னைப் பொறுத்தவரை புட்டின் அரசியல்வாதியாக அல்ல கொள்கைவாதியாக அல்லது தேசியவாதியாக அம்மக்களால் நம்ப வைக்கப்பட்டவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை புட்டின் அரசியல்வாதியாக அல்ல கொள்கைவாதியாக அல்லது தேசியவாதியாக அம்மக்களால் நம்ப வைக்கப்பட்டவர். 

எல்லா நாடுகளிலும் கொள்கைவாதிகளும் தேசியவாதிகளும் இருக்கத்தானே செய்கின்றார்கள். 

புட்டின் இல்லாவிட்டால் ரஷ்யா என்றொரு நாட்டை சின்னா பின்னாமாக்கியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எல்லா நாடுகளிலும் கொள்கைவாதிகளும் தேசியவாதிகளும் இருக்கத்தானே செய்கின்றார்கள். 

புட்டின் இல்லாவிட்டால் ரஷ்யா என்றொரு நாட்டை சின்னா பின்னாமாக்கியிருப்பார்கள்.

ரசியாவை விட்டு ஓட்டம் பிடித்த நாடுகள் எல்லாம் நல்லா தானே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, விசுகு said:

ரசியாவை விட்டு ஓட்டம் பிடித்த நாடுகள் எல்லாம் நல்லா தானே இருக்கின்றன.

McDonald, Netflix, facebook, twitter,apple, fanta cola, kfc  இவையெல்லாம் தாராள மயமாக இருந்தால் நல்லாய் இருப்பதன் அர்த்தமா விசுகர்? :cool:

சாதாரண வேவு அதிகாரியாகப் பணியாற்றி இன்றுவரை பத்தாயிரம் யூரோ சம்பளம் எடுக்கும் புதின் எவ்வாறு 2023 இல் உலகில் மிகப் பெரிய பணக்காரராக ஆக முடிந்தது ?

உக்ரெயின் போர் தொடங்கியதிலிருந்து பலர் படியால் தடுக்கியும் ஜன்னலால் விடுந்தும் தூக்கு மாட்டிக் கொண்டும் இறந்தனர். இவர்களில் பலர் சாதாரணமானவர்கள் கிடையாது. ரஸ்யாவின் Gazprom மற்றும Gazprombank நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் முதலீட்டாளர்களும். பெரும் கோடீஸ்வரர்கள். ஒருவர் தனது குடும்பத்தோடு அழுந்து போனார். இவர்களது சொத்துகளுக்கு என்ன நடந்த்தது என்று தெரியாது.

புதின் பற்றி எழுதியவுடனேயே அவன் முதுகைப் பார்த்தாயா இவன் முதுகைப் பார்த்தாயா என்று முண்டியடித்துக் கொண்டு வந்து புதினுக்கு வெள்ளையடிப்போருக்கு ஒருவன் அயோக்கியனாக இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் கிடையாது. 

On 23/1/2024 at 08:22, தமிழ் சிறி said:

தமிழக திராவிட  அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்..
புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂

வசி ஏற்கனவே தந்த இணைப்பில் சென்று வாசித்தால் கோடிக்கு எத்தனை இலக்கம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

👇

On 23/1/2024 at 02:30, vaasi said:

👆

18 hours ago, nunavilan said:

செலன்ஸ்கியும் கிட்ட முட்ட வந்திருப்பார் என நினைக்கிறேன்.🙃

செலன்ஸ்கி மட்டுமல்ல பிரெஞ்சு அதிபரும் இந்தப் பட்டியலில் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.