Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(எழிலன்): -    முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? 
                            எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்)
முதலாளி:-    இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு க‌டையை                                   நடத்துற‌ வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி
முதலாளி:-   இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் 
முதலாளி:-    சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும்  வராத‌ என்றார் முதலாளி. 
(எழிலன்):     உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க 
முதலாளி:-   எத்தனை நாள்?
  (எழிலன்):    15 நாள் ஐயா 15000 ரூபா
முதலாளி:-        இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி 

நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று 
காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி  இன்றைக்கு  ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட

அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள்.

நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல

அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற‌ ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் 

வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை!
ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ

சரி ஐயா நன்றி  என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது  அந்த பெண்தான் நீங்க??

நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு.........  சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி  இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க‌ அதிலதான் காசு வைத்திருந்தா

அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல 

 இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான்

பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல 

கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா  சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க‌ இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி 

 அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா

பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம்  பறவாயில்ல நீ வச்சுக்க .................

 சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு  தெரியாத குழுசையா என்ன‌ ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி  அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு
ம் சரி

அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார்  இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா

ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை

இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து  பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை .

சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள்

சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க  கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என  எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார்.

நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த‌ சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின்  போஸ்டர்கள்  ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில்   நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்...   

மலிந்து போன கடவுள்களை  நோக்கி..................................

  • Like 14
  • Sad 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போராளிகளின் போருக்குப் பின்னான வாழ்வில் ஒரு துளி இங்கும் தெறித்து விழுந்திருக்கு......!  😢

நல்லதொரு சம்பவம் "தனி".....பகிர்வுக்கு நன்றி......!  

Edited by suvy
எ .பிழை திருத்தம்.....!
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ

தீ சுடுகிறது

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னாள் போராளிகள் ஊருக்குப் பயந்து வாழ்வது என்பது எமது சமூகத்தின் சாபக் கேடுகளில் ஒன்று…!

மனதை நெருடிய கதை..!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, suvy said:

போராளிகளின் போருக்குப் பின்னான வாழ்வில் ஒரு துளி இங்கும் தெறித்து விழுந்திருக்கு......!  😢

நல்லதொரு சம்பவம் "தனி".....பகிர்வுக்கு நன்றி......!  

நன்றி அண்ணை

கனபேர் இந்த சமூகத்துக்கு தூரமாகவே வாழ்ந்துவருகிறார்கள்  சிலர் சிறையில்  இருப்பவர்கள் எந்த கையாவது தங்களை விடுவிக்காதா என்ற ஏக்கத்திலே இருக்கிறார்கள்  

20 hours ago, Kavi arunasalam said:

தீ சுடுகிறது

நன்றி அண்ணை

 

14 hours ago, புங்கையூரன் said:

முன்னாள் போராளிகள் ஊருக்குப் பயந்து வாழ்வது என்பது எமது சமூகத்தின் சாபக் கேடுகளில் ஒன்று…!

மனதை நெருடிய கதை..!

நன்றி புங்கையூரான்  வரவுக்கும் கருத்துக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலனாய்வுப் பிரிவுகளின் கெடுபிடிகளால்த் தான் போராளிகள் தனித்து நிற்கிறார்கள் என எண்ணுகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பெருமூச்சு மட்டும் தான்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் நெருடலான கதை. கைவிடப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைதான் அதிகம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராளிகளின் நிலமைகளை  மிகவும் கவலை யளிக்கிறது...பகிர்வுக்கு நன்றி தனி

  • Thanks 1
Posted

முன்னாள் போராளிகள் பற்றிய பல சோகமான விடயங்கள் நாம் அறிந்தாலும் "வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்" என்பது போல சிலர் பல உதவிகளையும் சிலர் எதுவித உதவியும் இல்லாது இருப்பது வேதனை தான்.

சமீபத்தில் யாழ் சென்றபோது ஒரு சமூக ஆர்வலர் பெரும்பாலும் பணமற்றவர்களே ஏனையவர்களுக்கு பெரும்பான்மையாக உதவுகின்றார்கள் என்று ஒரு கருத்தையும் வைத்திருந்தார். இக்கதையிலும் அக்கருத்தும் வருகின்றது.

Quote

நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி

ஊறல் என்றால் என்ன? 🤔

 

  • Like 1
  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/2/2024 at 12:51, மோகன் said:

ஊறல் என்றால் என்ன? 🤔

ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்

 

  • Like 5
Posted
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்

 

விளக்கத்திற்கு  நன்றி. கசிப்பு காச்சுவதையும் ஊறல் என்று தான் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன் 😄

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்

 

நான் ஏற்கனவே தேடி கண்டு பிடிச்சுட்டு எதற்கும் தனி வந்து எழுதட்டுமே என்று காத்துக் கொண்டு இருந்தேன்.தகவலுக்கு நன்றி தனி.இங்கு குடினீர் பைக்கற் என்று சொல்கிறார்கள்.✍️

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2024 at 22:56, யாயினி said:

நான் ஏற்கனவே தேடி கண்டு பிடிச்சுட்டு எதற்கும் தனி வந்து எழுதட்டுமே என்று காத்துக் கொண்டு இருந்தேன்.தகவலுக்கு நன்றி தனி.இங்கு குடினீர் பைக்கற் என்று சொல்கிறார்கள்.✍️

ஓகோ நன்றி🙂🙂

இத்துடன் இந்த புதிய நிறைவு ஆண்டுடன் யாழ் இணையத்தில் இருந்து சந்தோசத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி அனைவரும் மிக நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இறைவனை பிராத்தித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் பழகியதில் பெருமகிழ்ச்சியும் சந்தோசமும் அந்த வகையில் எழுத்தால் உணர்வு தந்து முகம் தெரியாத உறவுகளை இணைத்த யாழ் இணையத்திற்கும் ,உறவுளுக்கும் மீண்டும் நன்றி 

 @suvy 

@MEERA 

மோகன் @கலைஞன் அண்ணாக்கள் நேரில் சந்தித்தவர்கள் சுமே அக்கா  இவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்

நன்றி வணக்கம். யாழ் வாழ்க வளர்க😊😊😊

 

  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன....உங்களுக்கு ஏதோ முக்கியமான அலுவல்கள் காத்திருக்கின்றன போல் இருக்கு......அவை சீரானவுடன் மீண்டும் வரவேண்டும்.......நாம் மீண்டும் சந்திக்கலாம் தனி ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓகோ நன்றி🙂🙂

இத்துடன் இந்த புதிய நிறைவு ஆண்டுடன் யாழ் இணையத்தில் இருந்து சந்தோசத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி அனைவரும் மிக நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இறைவனை பிராத்தித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் பழகியதில் பெருமகிழ்ச்சியும் சந்தோசமும் அந்த வகையில் எழுத்தால் உணர்வு தந்து முகம் தெரியாத உறவுகளை இணைத்த யாழ் இணையத்திற்கும் ,உறவுளுக்கும் மீண்டும் நன்றி 

 @suvy 

@MEERA 

மோகன் @கலைஞன் அண்ணாக்கள் நேரில் சந்தித்தவர்கள் சுமே அக்கா  இவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்

நன்றி வணக்கம். யாழ் வாழ்க வளர்க😊😊😊

 

ஏன் போறீங்கள்...என்னாச்சு..யாரும் ஒன்றும் சொல்லவும் இல்லை சண்டை போடவும் இல்லயே..போறதுக்கு ஒரு காரணம் தெரியத் தானே வேணும்.சொல்லக் கூடாது மற்றும் சொல்ல முடியாத விடையம் என்றால் விடுங்கள்.✍️

Posted

தெரிந்த ஒருவர் (முன்னாள் போராளி) கண்டி வீதியில் கோழிகள் விற்பதை தற்செயலாக காண முடிந்தது. அடையாளம் காண முடியவில்லை. ஓட்டோ நண்பர் தான் அவர் யார் என சொன்ன பின் தான் தெரிந்தது யார் என்று. அவரிடம் சில கோழிகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வரும்படி கூறி இருந்தேன். ஓட்டோ காரன் என்னை பார்த்து அப்பாவிடம்(எனது) உதை வாங்க போகிறீர்கள் என்றார். அன்று பின்னேரம் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு உணவும் கொடுத்து என்னாலான உதவியும் செய்து அனுப்பி இருந்தேன். வீட்டில் பேச்சுக்கு குறைவில்லை. உதவி செய்வது பறவாயில்லை. நீ போய் விடுவாய். புலனாய்வு வந்து எங்களை துளைத்து எடுத்து விடுவார்கள் என்றார்கள். நிலைமை அங்கு அப்படி உள்ளது. 
பி.குறிப்பு: அப்போராளிக்கு வலது கண்ணும், வலது முன் கையும் பறி போயிருந்தது.
நன்றி தனி.  வேறு நாட்டுக்கு போகிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓகோ நன்றி🙂🙂

இத்துடன் இந்த புதிய நிறைவு ஆண்டுடன் யாழ் இணையத்தில் இருந்து சந்தோசத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி அனைவரும் மிக நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இறைவனை பிராத்தித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் பழகியதில் பெருமகிழ்ச்சியும் சந்தோசமும் அந்த வகையில் எழுத்தால் உணர்வு தந்து முகம் தெரியாத உறவுகளை இணைத்த யாழ் இணையத்திற்கும் ,உறவுளுக்கும் மீண்டும் நன்றி 

 @suvy 

@MEERA 

மோகன் @கலைஞன் அண்ணாக்கள் நேரில் சந்தித்தவர்கள் சுமே அக்கா  இவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்

நன்றி வணக்கம். யாழ் வாழ்க வளர்க😊😊😊

 

என்ன நடந்தது??? ஏன்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2024 at 10:13, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்

 

இது சிங்களத்தில் பஸ்பங்குவ எனப்படும். வெனுவல் கட்டை கசாயம்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.