Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே  இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம்.

எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். 

ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். 

என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. 

அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை  வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம்.

 

நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். 

இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். 

ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம்.

ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். 

சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். 

மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

 

  • Like 16
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். 

நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம்  முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. 

நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். 

மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது.

அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. 

அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.

  • Like 8
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் அண்ணை யாழின் 26ஆம் அகவைக்கான சுய ஆக்கங்களில் பதிந்திருக்கலாமே?!

  • Like 1
Posted

தொடர்ந்து எழுதுங்கள் ரஞ்சித். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
37 minutes ago, ரஞ்சித் said:

ரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். 

நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம்  முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. 

நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். 

மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது.

அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. 

அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.

 

தென் கொரியர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை மதிப்பதில்லை. வெள்ளையர்களையும் தம்மவர்களையுமே உயர்வாக நினைப்பர்.

இப்போதெல்லாம் தென்கொரியா சென்ற இந்தியர்கள் இன்ஸ்ராகிராமில் இதைக் கூறி வருத்தப்படுகின்றனர். மேலும் தாங்கள் கொரிய மொழி கதைத்தால் அதை அவர்கள் கேவலப்படுத்துவதாகவும் கூறி வேதனைப்பட்டனர். 

 

கோராவிலும் இது பற்றி பட்டறிவுப் பகிர்வுகள் உண்டு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். 

ரஞ்சித் உங்களது ஆங்கில மொழிபெயர்ப்பை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க 

இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்?

இது சும்மா கதைக்காகத் தானே?

எமக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்தாலும் கதைத்துப் பழகாததால் ரொம்பவும் கூச்சமாக இருக்கும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான்.

அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது.

தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. 

சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன்.  வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். 

அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன். 

  • Like 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன். ....நாடு விட்டு நாடு வந்து நம்மவர்கள்  ஏராளம் பிரச்சினைகள் வேலையிடங்களில்.சந்தித் தார்கள். இன்னும் நடக்கிறது.   அவனிடம் எதோ ஒன்று ...இருக்கலாமோ ? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்க வேண்டும், வேலையில் நிற்கிறேன், பின்னேரம் தொடரலாமா? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். 

அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன்.

இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள். 

  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருக்கலாம்.

வழமை போல எனது பணித்தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பணியாளர்களுடன் பேசுவது போல அன்று பேசிக்கொண்டு வந்தேன். அவனது இளைய சகோதரனைப் பார்த்துப் பேசலாம் என்று போனபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

இயல்பாகவே குறும்புத்தனம் மிக்க அவனது சகோதரனின் முகம் வாடியிருந்தது. பணி ஆரம்பிக்கும் முன்னர் நடக்கும் கூட்டத்தில் அவனது முகத்தைக் கவனித்தேன், வழமையான புன்னகை இருக்கவில்லை. ஆகவேதான், "ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனத்திற்குப் பின்னர், மூச்சினை ஆளமாக இழுத்துக்கொண்டு பேசினான். 

"அண்ணாவுக்குச் சற்றுச் சுகமில்லை" என்று அவன் கூறவும், "அப்படியென்ன சுகமில்லை, மருந்தெடுத்தால்ப் போயிற்று" என்று நான் சர்வ சாதாரணமாகக் கூறினேன். "இல்லை, அவன் சில நாட்களாகவே அடிக்கடி கோபப்படுகிறான். எவருடனும் பேச விரும்புகிறான் இல்லை. நாங்கள் அவனை அப்படிப் பார்த்ததில்லை". என்று கூறினான். "சரி, வைத்தியரிடம் அழைத்துச் சென்றீர்களா?" என்று கேட்க, "ஆம், அழைத்துச் சென்றோம். அவனுக்கு மூளையில் கட்டியொன்று இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலும் அது புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறிவிட்டு அமைதியானான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. 

எனக்கோ எதுவுமே சொல்லத் தெரியவில்லை. "இல்லை, அப்படியிருக்காது. உனது அண்ணனன் சிறந்த உடற்பயிற்சியாளன், திடகாத்திரமானவன், அவனுக்கு புற்றுநோய வரச் சந்தர்ப்பமில்லை" என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், அவனுக்குத் தெரியும் நான் சொல்வது வெற்றுச் சமாதானம் தான் என்பது. 

நாட்கள் செல்லச் செல்ல அவனது உடல்நிலை மோசமாயிருக்க வேண்டும். அவனது சகோதரன் அடிக்கடி லீவு எடுக்கத் தொடங்கினான். "அண்ணாவை ஒவ்வொரு வைத்தியராகக் கூட்டிச் செல்கிறோம். அவனது உடல்நிலை மோசமாகிக்கொண்டு போகிறது. புற்றுநோயென்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.  சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் கட்டத்தை அவன் தாண்டி விட்டான். கீமோ (கதிர்வீச்சு ரீதியிலான‌ சிகிச்சை) ஆரம்பித்திருக்கிறோம். உயிர் பிழைப்பதற்கான சாத்தியப்படு மிகவும் குறைவென்றாலும், எம்மாலான அனைத்தையும் அவனுக்காகச் செய்துகொண்டிருக்கிறோம்...."இப்படி ஏதாவது ஒரு மனம் நொருங்கிப்போகும் செய்தியும், சாத்தியமே அற்ற நம்பிக்கை தொக்கு நிற்கும் வசனங்களும் அவனிடமிருந்து அவ்வபோது வந்து போகும். 

  • Sad 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ரஞ்சித் said:

மன்னிக்க வேண்டும், வேலையில் நிற்கிறேன், பின்னேரம் தொடரலாமா? 

 மன்னிப்பெல்லாம்  எதற்கு  தொடருங்கள் என்பது  ஆர்வமாக இருக்கிறேன் என்று அர்த்தம் உங்கள் வசதிப்படி  தொடரலாமே.....உடனுக்குடன் எழுதுங்கள் என்று அர்த்தமல்ல .உங்கள் எழுதும் ஆற்றல் நிறையவே நல்ல மாற்றமடைந்துள்ளது. பாராட்டுக்கள்.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் உங்களது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நியாயமானவை எனினும், எமக்கு ஏன் ஒரு நாடு தேவை என்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று..! இவ்வாறான ஒரு சம்பவமே, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய முடிவை எடுக்க என்னை நிர்ப்பந்த்தித்தது. என்ன தான் வாழ்வு வசதியாக இருந்தாலும்.. குரங்கு தனது குழுமத்தை விட்டு இன்னொரு குழுமத்துடன் சேர்ந்தால்…. அதன் வாழ்வு ஒரு நிரந்தர போராட்டமாகத்  தான் இருக்கும்..!

தொடருங்கள்…!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன் சுகயீனமுற்று இருப்பதாகத் தெரிந்து சில மாதங்களாக அவன் பற்றி விசாரித்து வருகிறேன். அவனது சகோதரனுடனான எனது நாளாந்த  பேச்சுக்களில் அவனும் நிச்சயம் இடம்பெறுவான். சிலவேளைகளில் நம்பிக்கையுடன் அவன் பேசும் போது, "கடவுளே அவன் தப்பிவிடவேண்டும்" என்று மனதிற்குள் நினைப்பதுண்டு. வேலைத்தளத்தில் பலருக்கு அவன் முன்மாதிரியாகத் தோன்றியவன். வாழ்வினை மகிழ்ச்சியாக வாழும் வெகுசிலரில் அவனும் ஒருவனாக இருந்திருக்கிறான். எவ்வளவுதான் நம்பிக்கைகள் இருந்தாலும், யதார்த்தம் என்று இருக்கிறதல்லவா? அதுதான் அவனது பேச்சுக்களில் அடிநாதமாக இருக்கும். ஒவ்வொருநாளும் எமது பேச்சுக்களின் முடிவில், "நாம் மனதளவில் தயாராகி வருகிறோம், அம்மாவையும் அப்பாவையும் நினைக்கும்போதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது" என்று கூறி முடிப்பான். அவனுக்கும் இரண்டு பெண்பிள்ளைகள். அவனது சகோதரனுடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்று அவன் அடிக்கடி சொல்லியிருக்கிறான். அவனது இழப்பு பலருக்கு பாரிய அதிர்ச்சியினையும் சோகத்தனையும் வழங்கவிருக்கிறது.

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னராக இருக்கலாம். என்னிடம் வந்து, "அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு மாற்றவேண்டும் என்று வைத்தியர்கள் பேசுகிறார்கள். அவனுக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவை நான்கு மடங்காக்கியும் பார்த்தாயிற்று, ஆனால் புற்றுநோய் கேட்பதாக இல்லை. அது தன்பாட்டில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அவனால் இப்போது கொடுக்கும் மருந்தின் அளவைத் தாங்க முடியாது, ஆகவே சிறிது சிறிதாக அதனைக் குறைத்து அவனது இறுதி நாட்களில் அவன் விரும்பியபடி வாழ நாம் விடப்போகிறோம்" என்று கூறிவிட்டு, "இனிவரும் நாட்களில் நான் அடிக்கடி லீவு எடுக்கவேண்டி இருக்கும், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். மனமுடைந்து போய்விட்டேன். "என்ன கேட்கிறாய், நீ போகும்போது சொல்லிவிட்டுப் போ, முன் அனுமதி எதுவும் வேண்டாம், அண்ணாவையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள், தவறாமல் என்னையும் உனது வட்டத்திற்குள் வைத்துக்கொள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றேன். 

  • Sad 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் சோகமான நிகழ்வு ..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ந்தப் பலியேடிவ் கெயர் பற்றியும் சொல்ல வேண்டும். வாழ்வு முடியும் தறுவாயில், இனிமேல் அவர்களை மீள அவர்களின் பழைய வாழ்விற்குக் கொண்டுவர முடியாது என்கிற நிலை வரும்போது, சிகிச்சைகள் இன்றி, அவர்களை அவர்கள் பாட்டில், வாழ்வு முடியும்வரைக்கும் மகிழ்வாக வைத்துப் பராமரிக்கும் ஒரு நிலை. வெகுசில வைத்தியசாலைகளும், அநேகமான வயோதிபர் பராமரிக்கும் நிலையங்களும் இதற்கான வசதியைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையங்களுக்குச் செல்வோர் ஓரிரு வாரங்களில் இயற்கை எய்துவதுதான் வழமை. நீங்கள் உங்களின் இறுதிநாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கும் உறவுகளுக்கும் சொல்லி, இறுதி யாத்திரிகைக்கு ஆயத்தப்படுத்த கால அவகாசம் கொடுக்கும், வாழ்வின் இறுதி நிலையின் கடைசிப்படி என்று வைத்துக்கொள்ளலாம். 

அப்படியில்த்தான் அவனும் இருந்தான்.இதனைக் கேட்டவுடன், அவன் உயிருடன் இருக்கும்போது எப்படியாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எழவே, "உனது அண்ணாவை நான் வந்து பார்க்க விரும்புகிறேன், எப்படிச் செய்யலாம்?" என்று கேட்டேன். "அவன் வீட்டில்த்தான் இருக்கிறான், நண்பர்கள் வந்து அங்கு, இங்கென்று அழைத்துச் செல்வார்கள். அவனது மனைவியும் அவன் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறாள்" என்று கூறிவிட்டு, "நீ அவனுடன் பேசு, நிச்சயம் பேசுவான். உனக்கு விருப்பமான நேரத்தைக் கேட்டு, போய் பார்த்துவா" என்று சொன்னான். "என்னை அவனுக்கு அடையாளம் தெரியும் என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டேன். "உனது பெயரை அவன் மறந்திருக்கலாம், ஆனால் உன்னைக் காணும்போது உன்னைப்பற்றி அவன் பேசுவான், போனால் உனக்குத் தெரியும்" என்று அவன் கூறவே, எப்படியாவது பார்த்துவிட மனம் துடித்தது.

வேலைத்தளத்தில் என்னுடன் பணிபுரியும் இன்னொரு நண்பனுடன் இதுபற்றிக் கேட்டேன். "நீ போவதென்றால் நானும் வருகிறேன்' நேரத்தைச் சொல்லு" என்று கூறினான்.

வீடு வந்ததும், "சனிக்கிழமை ஜோஷைப் பார்க்க செல்லவிருக்கிறேன், பாவம், இன்னும் கொஞ்ச நாள்த்தான் வாழப்போகிறான், நானும் அண்டியும் போகிறோம்" என்று கூறவும், "சனிக்கிழமை பிரியாவின்ர மகளின்ர‌ சாமத்திய வீடு இருக்கெண்டெல்லோ சொல்லிக்கொண்டுவாறன்? அண்டைக்குப் போகப்போறன் எண்டுறியள்?" என்று முதலாவது தடை வீழ்ந்தது."எத்தனை மணிக்குச் சாமத்திய வீடு? மத்தியானத்துக்கிடையில வந்துருவன்" என்று கூறவும், "காலமை 8 மணிக்கு அங்க நிக்க வேணும்" என்று தடை இறுகியது.  போச்சுடா, அவனைப் பார்க்க முடியாது என்று எண்ணிக்கொண்டு அண்டிக்கு (வேலைத்தள நண்பன்) தொலைபேசி எடுத்து, "மச்சான், சனிக்கிழமை சரிவராது போல கிடக்கு, வாற கிழமை போகலாமோ?" என்று கேட்கவும், "சரி, போகலாம்" என்று கூறினான்.

கடந்தவாரம் அவனது சகோதரனுடன் பேசும்போது அவன்பற்றி மீளவும் கேட்டேன். "இப்போது படுக்கையாகி இருக்கிறான். யாருடனும் பேசுவதில்லை. எனது பிள்ளைகள் அவனது கட்டிலின் அருகில் சென்று பெரியப்பா என்று காதில் பேசும்போது சிறிய புன்னகை மட்டும் பதிலாக வருகிறது. அவனை இந்த நிலையில் பார்க்கவே கஸ்ட்டமாக இருக்கிறது" என்று கூறினான். "அவனை இனியும் பார்க்க வரலாமா?" என்று கேட்டபோது, "நான் நினைக்கவில்லை, அவனால் எவருடனும் பேசவோ அல்லது எவரையும் பார்க்கும் உடல் நிலையோ இப்போது இல்லை. அம்மாவையும் அப்பாவையும் தவிர வேறு எவரும் அவனருகில் தற்போது இல்லை". என்று மிகவும் அமைதியாகக் கூறினான். அவனைப் பார்க்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வும், கூடவே வந்துசென்ற சாமத்திய வீட்டுத் தடையும் ஆத்திரத்தையும் ஆற்றாமையினையும் எனக்குத் தந்தது. 

  • Sad 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் உங்களது ஆங்கில மொழிபெயர்ப்பை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க 

அண்ணை, அது 2006 இல. என்ன சொல்கிறார்கள் என்று மூளை மொழிபெயர்த்து, கிரகிக்க டயிம் எடுத்த காலம். இப்ப பரவாயில்லையாக்கும் !!!😁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரு ஏழெட்டு நாட்கள் இருக்கலாம். அவந்து சகோதரன் தொலைபேசியில் அழைத்தான்."நான் இன்றைக்கு வேலைக்கு வரவில்லை, அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு வருகிற வாரம் கொண்டு செல்லவிருக்கிறோம், அம்மாவாலும், அப்பாவாலும் அதனைத் தனியே செய்ய முடியாது. ஆகவேதான் நான் லீவெடுத்து அதனைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், நாளைக்கு நிச்சயம் வருவேன், அனுமதி தருவாயா?" என்று கேட்டான்.


"ஒரு பிரச்சினையுமில்லை, தாராளமாக எடு. நாளைக்கும் நீ வரவேண்டும் என்றில்லை, பார்த்துச் செய்" என்று கூறினேன். நன்றியென்று குறுந்தகவல் வந்தது. 

மறுநாள் அவன் வரவில்லை, நானும் அவனை அழைத்துத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. பணி ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கைத்தொலைபேசிக்குக் குருந்தகவல் ஒன்று வந்திருந்தது. அது இப்படிச் சொல்லிற்று,


"வணக்கம் அன்பர்களே, துரதிஸ்ட்டவசமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு நாங்கள் எங்கள் சகோதரன் ஜோஷை இழந்துவிட்டோம். அவனின் மனைவியும், எங்கள் குடும்பமும் அவனைச் சூழ்ந்திருக்க, அவன் அமைதியாக எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். தயவு கூர்ந்து உங்களின் வேலைத்தள அணிகளில் இருக்கும், எனது சகோதரன் குறித்து அக்கறைப்படும் எல்லோருக்கும் இதனைத் தெரியப்படுத்துவீர்களா? உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது நன்றி. உங்களுடன் விரைவில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்" என்று அது சொல்லியது.

மனதில் இடி இறங்கியது போன்ற உணர்வு. கண்கள் கலங்கிவிட்டேன். முதன்முறையாக ஒரு வெள்ளைக்காரனுக்காக மனம் அழுதது. அவன் எனக்குச் சொந்தமில்லை, எனது இனமில்லை, எனது நெருங்கிய நண்பர் வட்டத்திலும் அவன் இல்லை. ஆனாலும் மனம் அழுதது. இது எப்படிச் சாத்தியம்? ஏன் அவனுக்கு? இதுதான் எனது மனதில் எழுந்த கேள்விகள். அவனைச் சென்று பார்க்கமுடியாத வருத்தமும் சேர்ந்து அழுத்த முழுவதுமாக மனமுடைந்து போனேன். 

large_Josh.jpg.0b484a55cd0ade6aa91b47d364be239c.jpg

  • Like 3
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வனது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது, இதனைத் தவற விடக்கூடாதென்று உறுதியெடுத்துக்கொண்டேன். அது மாசி மாதம் 15 ஆம் திகதி, நேற்று பிற்பகல் 3 மணிக்கு. புதன் இரவும், வியாழன் இரவும் வேலை. நித்திரை அசதி, களைப்பு..இப்படி என்னதான் இருந்தாலும் அவனை வழியனுப்பி வைக்கவாவது செல்லவேண்டும் என்று மனம் சொல்லியது. ஆகவே, வியாழன் காலை பணிமுடித்து வீடுவந்து, அவசர அவசரமாகத் தூங்கி (எல்லாம் ஒரு ரெண்டுமணிநேர தூக்கத்திற்காகத்தான் ), விழித்தபடியே துயில் எழுந்து (ஏனென்றால், இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நித்திரை வருகிறது), கறுப்பு நிறத்தில் புதன்கிழமை வாங்கிவைத்த சற்று இறுக்கமான சேர்ட்டுக்குள் புகுந்து அவனது நினைவுநாள் நடக்குமிடத்திற்குச் சென்றேன். 

மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருக்க, கோடைகால சிட்னியின் வெய்யில் முகில்களுக்குள் முற்றாக மறைந்து நிற்க,  அமைதியான ஆற்றுப்படுக்கையின் ஓரத்தில் சவுக்கு மரங்களின் பின்னணியில் உயர்ந்து நின்ற கட்டடம்   ஒன்றிற்கு முன்னால், அங்கு ஏலவே வந்திருந்த வேலைத்தள நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு நின்றேன்.

அங்கு நின்றவர்களில் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னுடன் ஏதொவொரு காலத்தில் பணியாற்றியவர்கள். இப்போது வேறு வேலைத்தளத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். பதிலுக்குக் குசலம் விசாரித்துவிட்டு அமைதியாக கூட்டத்துடன் கரைந்துபோனேன். 

  • Like 6
  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதுவுமே எழுதத் தோன்றவில்லை.
ஓம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை எழுதும் போது காலை 1 ,24 ,🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பாக எழுதி உள்ளீர்கள்   நன்றி    

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இந்நிகழ்வை எழுதியிருக்கிறீர்கள் என்று புரிகின்றது........அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்........உங்களைப்போன்ற நண்பர்கள் அவருக்கு கிடைத்தது அவரின் பாக்யம் ......இந்த மரணம் பற்றிய எழுத்தும் அதன் வீச்சும்  மனதில் ஒரு நிர்ச்சலமான அமைதியத் தருகின்றது........!

  • Like 1
Posted

கதையை நேற்று நடந்த நிகழ்வு வரை தொடர்புபடுத்தியது மிகச் சிறப்பு. 

மிகுந்த சிரமம் எடுத்து ஒரே மூச்சில் எழுதி முடித்த ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ண்டபத்தினுள் நுழைந்தேன். அவனைக் காணவில்லை. சிலவேளை குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அவனை அடக்கம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டேன். மண்டபம் நிறைந்த சனம். எல்லாம் அவனை நேசித்தவர்களும், அவனுடன் கூடப் பழகியவர்களும். ஒரு 25 அல்லது 30 கதிரைகள் தான் போடப்பட்டிருக்கும். சிலர் இருந்துகொண்டார்கள். பின்னால் ஒரு சிலர் நிற்பது தெரியவே, அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். கூடவே எனது நண்பர்கள், வேலைக்கள சக பணியாளர்கள். அங்கு நின்றபடியே மண்டபத்தின் முற்பகுதியில் நடப்பவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மண்டபத்தின் முற்பகுதியில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் அவனுடைய சில படங்கள் அடுக்கப்பட்டிருந்தன‌. கூடவே மரத்தினால் செய்த ஆமை பொம்மை. அவனுக்கு விருப்பமான பொம்மையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அருகில் சிறிய கணிணித் திரையில் அவன் வாழ்வு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது குடும்பத்துடன், காதலியுடன், பெற்றோருடன், நண்பர்களுடன் வாழ்வை முழுமையாக அனுபவித்த பொழுதுகள் திரையில் செக்கன்களுக்கு ஒருமுறை வலம் வந்துகொண்டிருந்தன. அவன் வாழ்ந்து முடித்ததைப் பார்க்கும்போது, இதுவல்லவோ வாழ்வு என்று எண்ணத் தோன்றியது.

அன்றைய நிகழ்வை நடத்தியவள் அவனது நண்பிகளில் ஒருத்தி. வந்தவர்களை வரவேற்றுக்கொண்டே அவன் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாள். திகைத்துப்போனேன்.

16 வயதில் மார்ஷல் ஆர்ட்ஸ் என்று சொல்லும் தற்காப்புக் கலைக்காக அமெரிக்காவின் போட்டியொன்றில் அவுஸ்த்திரேலியா சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறான். மலையேறுதல், தரையிலும், கடலிலும் மட்டைகளில் ஓடுதல் என்று தொடங்கி இரசாயணவியலில் இளங்கலை, இரட்டைப் பொறியியல் இளங்கலை என்று நிறையவே படித்திருக்கிறான் என்பது புரிந்தது. இவனுடனா ஆரம்பத்தில் அநியாயமாகப் போட்டி போட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வு வந்துபோனது. அவள் பேசப்பேச அவன்குறித்த எனது பார்வை மாறிக்கொண்டே போனது. என்னவொரு மனிதன்!!! 

தான் விரும்பிய விடயங்களுக்காக உலகெல்லாம் சுற்றித்திரிந்து, நண்பர்களுக்காக வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் முற்றாக அனுபவித்து, அழியா நினைவுகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, வெறும் 44 வயதில் எம் எல்லாரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான். 

அவளைத்தொடர்ந்து அவனது உற்ற நண்பர்கள் இருவரும் அவனது சகோதரனும் பேசினார்கள். பேசும்போது அடங்க மறுத்துப் பீறிட்டுக் கிளம்பிய அழுகைகளை வெளியே வரவிட்டு, தாமும் அழுது எம்மையும் அழப்பண்ணினார்கள். முன்னால் இருக்கையில் இருந்த பெண்கள் தேம்புவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மேசையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் குறித்து நண்பி பேசினாள். அவை எடுக்கப்பட்ட பொழுதுகள், அப்போது நடந்த சுவாரசியமான சம்பாஷணை என்று பல விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டாள். மீதமாயிருந்தது மரத்தால் செய்யப்பட்ட கழுத்து நீண்ட ஆமை. அதைப் பற்றியும் அவள் கூறினாள்.

அவன் தனது இன்றைய மனைவியும் முன்னாள்க் காதலியுமானவளுடன் காரில்ப் பயணிக்கும்போது வீதியோரத்தில் உயிருள்ள ஆமையொன்றைப் பார்த்திருக்கிறான். உடனேயே காரை நிறுத்தி, ஆமையைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டே அப்பகுதியெங்கும் சுற்றித் திரிந்து நீர்நிலையொன்றில் அதனைப் பத்திரமாக இறக்கிவிட்டிருக்கிறான். அதே பயணத்தில் வேடிக்கையாகப் பேசும்போது தனது காதலியுடன், "நான் இறந்தால் இதே போன்றதொரு ஆமை செய்து, எனது அஸ்த்தியை அதனுள் இட்டு நீரில் இறக்கிவிடு. இந்தச் சமுத்திரத்தையும் நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டது போலவே அவனது அஸ்த்தியை அந்த ஆமையினுள் வைத்து மண்டபத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட ஆமையொன்று எதற்காக அங்கே இருக்கிறது எனும் பலரது கேள்விக்கு அவள் பதிலளித்தாள். கூடவே அவனது இறுதிக் கிரியைகள் முடிவுற்று விட்டதையும் அவள் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள்.

அவனது சகோதரன் பேசும்போது, "உங்கள் எவரையும் கண்களுக்கு நேரே நான் பார்த்துப் பேசப்போவதில்லை. ஏனென்றால் நான் அழுவேன் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டே அழுதான். அவனது நிலைகண்டு கண்களில் வழிந்தோடிய எனது கண்ணீரை துடைக்க விருப்பமின்றி நின்றிருந்தேன். அவன் தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் அவனது இளைய மகள் ஓடிச்சென்று தந்தையின் கழுத்தில் தொங்கி, இடையில் ஏறிக்கொண்டாள். நானும் பெரியப்பாவிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் அன்று அவனது காதில் இரகசியமாகக் கூறினாள். சரி, சொல்லலாமே என்று அவன் கூறவும், நீங்களே அதைச் சொல்லிவிடுங்கள் என்று அவள் கூறிவிட்டுச் சிணுங்கினாள். தழுதழுத்த குரலில் அவன் தனது மகள் கூறியதை அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான், "பெரியப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்". பலர் அழுதார்கள், பலர் கண்கலங்கினார்கள், நானும்தான். 

அருகில் நின்ற நண்பன் , "உனது மரணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன். எனக்கென்று நெருங்கிய நண்பர்கள் ஒருவர் அல்லது இருவர்தான். நெருங்கிய உறவுகள் என்று ஒரு இரண்டு அல்லது மூன்று பேர். "மிஞ்சி மிஞ்சிப் போனல் பத்துப்பேர் கூட வரப்போவதில்லை" என்று கூறினேன். அவன் சிரித்தான்.

அவன் பற்றிய நினைவுப் பகிர்வு முடிவடைந்தபின்னர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. 

சிறிய குழுக்களாக வட்ட வடிவில் நின்றுகொண்டு அவன்பற்றிப் பேசினோம். இடையிடையே சிற்றுண்டிகளையும் சுவைத்தோம். இறுதியாக அவனது சகோதரனுடன் நின்று உரையாடினேன். கடுமையான சோகத்தினை மறைத்துக்கொண்டு வந்தவர்களுடன் முகம் கோணாது அவன் பேசினான். இடையிடையே நாம் பேசிய நகைச்சுவைகளுக்காகச் சிரித்தான். ஆனால் அவன் இன்னமும் தனது சகோதரனுக்காக மனதினுள் அழுவது தெரிந்தது. மாலை 5 மணியாகிக்கொண்டிருந்தது. இரவு வேலை 6 மணிக்கு. இப்போதே ஓடத் தொடங்கினால்த்தான் சிட்னியின் பின்னேர வாகன நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். ஆகவே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

வேலை வந்து அடையும்வரை அவனது நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. இவனைப் போல என்னால் வாழ முடியாது. எமது அகம்பாவமும், தற்பெருமையும், எம்மைச் சுற்றி நாமே வரைந்துகொள்ளும் குறுகிய வட்டங்களும் எமது வாழ்நாள் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதனைப் பூரணப்படுத்தப்போவதில்லை என்பது புரிந்தது. அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். மனிதன் தான் ! சென்றுவா!!! என்று மனதினுள் சொல்லிக்கொண்டு அலுவலகக் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன்.

முற்றும். 

  • Like 5
  • Thanks 2
  • Sad 4

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் அதற்காகவே பதவியிலிருந்து விலகினார் அல்லது விலக்கி வைக்கப்பட்டார் போலுள்ளது. அவர் தன்னிச்சையாக கத்தினால், விமல் வீரவன்சவோடு புதிய கூட்டணி அமைப்பார். இல்லையேல், மீண்டும் தமிழர் பிரச்சனை கிடப்பில், பத்தோடு பதினொன்று. அனுரா கூறியிருந்தார், தமிழ் மக்கள் தொடர்ந்து அரசுகளால் ஏமாற்றப்படுத்தப்பட்டத்தினாலேயே பொதுவேட்பாளர் என்கிற முடிவை எடுத்தனர் என்று. அந்த ஏமாற்றத்தை தராமல் இருப்பதே அவரின் கருத்துக்கு அழகு. இல்லையேல் ரில்வின் சில்வாவை வைத்து விளையாட வெளிக்கிட்டால் அதன் பயனை அடைவார்.
    • ‘அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது’ – சுரேன் சுரேந்திரன்     அமரபுர மஹாநாயக்கர் நியமன வைபவத்தில் பேச்சு அமரபுர மஹா நிக்காயா பீடத்தின் அதிபதியாக வணக்கத்திற்குரிய கலாநிதி மதம்பகம அஸாஜி திஸ்ஸ தேரர் நியமனம் பெற்ற வைபவம் டிசம்பர் 07, 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. மத மற்றும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் லண்டன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்கள் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு சுரேந்திரன் “ஒரு பெளத்த அதியுயர் பீடத்தின் மஹாநாயக்கராக எமக்கு மிக நெருங்கிய தேரர் நியமிக்கப்படும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நான் லண்டனிலிருந்து வந்து கலந்துகொள்வது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து இவ்வைபவத்தில் அவர் உரையாற்றும்போது: “எனது சிங்களம் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் நான் இம்மொழியில் பேச எத்தனிக்கிறேன். புத்த பகவானால் போதிக்கப்பட்ட சமத்துவத்தையும் அரவணைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில், வேறெந்த தமிழருக்கும் கிடைக்காத, இம்மேடையில் பேசுவதற்கான இப்பாக்கியத்தை எனக்களித்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன். புத்த பகவானின் போதனைகளில் ஒன்றான வாசல சூத்திரத்தில் குறிப்பிட்டபடி “ஒருவருடைய உண்மையான விழுமியம் அவரது சமூக அல்லது குல அந்தஸ்துகளை வைத்து அல்லாது அவரது செயற்பாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது” . “தேரருடனான எனது ஈடுபாடு பெப்ரவரி 2010 இல், பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவை அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஆரம்பமானது. இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இரத்த ஆறுகள் இன்னும் வற்றிப்போகாத ஒரு காலத்தில், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு அப்பாவி மக்கள் காணாமலாக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நிகழ்வு நடந்தது என்பதை நான் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படியான காலகட்டத்தில் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவென நாம் தேரரை அழைக்கும்போது அதை நாம் எடுத்த ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே நினைத்தோம். ஆனாலும் இலங்கையிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் எமது சமூகத்தின் முன்னர் எங்களோடு தோளோடு தோளாக நின்று தேரர் சமத்துவம் பற்றிப் பேசியது தான் உண்மையான துணிச்சல் என நான் கருதுகிறேன். “தர்மசக்தி என்னும் பல்மத அமைப்பின் மூலம் சகவாழ்வையும், சமத்துவத்தையும் முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பணியும் ‘இமாலயப் பிரகடனத்தின்’ உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கும் சமத்துவத்தை முன்னெடுக்க அவர் பேச்சளவில் அல்லாது செயலிலும் காட்டியமைக்கான உதாரணங்கள் என்பேன். “சமத்துவத்தில் முழுமனதாக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மதத் தலைவரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வில் பங்குபற்றவும் பேசவும் கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்திற்காக நானும் எனது சமூகமும் நன்றியுடையவர்களாக இருப்போம் எனக்கூறி இவ்வுரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி” எனத் தெரிவித்தார். https://marumoli.com/அந்தஸ்து-அல்லாது-ஒருவரு/  
    • கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது  வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/   **********************************************************   இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி   என் கழிவிரக்கம் பாலைவெளியில் அலையும் ஆண்மையற்ற காளை என் மனமாற்றம் குருதி படிந்த வாளின்மீது சுற்றப்பட்ட காவி   தர்மச்சொற்பொழிவாற்றும் இக்கனவுகளால் என் பாவத்தை மறைக்கமுடியாது அவையும் என் கீர்த்தித்தூண்களென்றாகும் என் தீமையின் விரைத்தெழல்கள்.   என் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரக்காலும் நான் ஒடுக்கிய ஒரு வம்சத்தின் முதுகெலும்பு என் சிம்மங்களின் ஒவ்வொரு சடைமயிரும் நான் எரித்த நகரங்களின் சிதைச்சுவாலை.   இருபோர்களிலும் நான் தோற்றேன் எனக்கு மரணதண்டனை அளியுங்கள் என் இறுதிவிருப்பம் இதுவே இப்புவியின் இறுதி அரசன் நானேயாகவேண்டும்.
    • பயங்கரவாத சட்டம் தமிழருக்கெதிராகவே இயற்றப்பட்டது நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் அது இன்று தமிழருக்கானது அல்ல அப்படியென்றால் மஹிந்தவே இன்றும் தேர்தலில் வென்றிருப்பார் அது கடைசியில் அரகலியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்பட்டது அப்போதுதான் அந்த சட்டத்திற்கு எதிராக எல்லோரும் குரல் எழுப்பினார்கள் எதை வைத்து தம் எதிரிகளை அடக்கியதோ சிங்களம் அதை அனுபவிக்க வேண்டாமோ எத்தனையோ முறை நாங்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பினோம் அப்போதெல்லாம் அது வீரியம் பெற்றது அதன் தாக்கம் வலி அவர்களுக்கு புரியவில்லை இவர்கள் அதன் வலியை அனுபவிக்கும்போது அதன் தாக்கம் புரியும் அவர்களே குரல் எழுப்புவார்கள் இப்போ நாங்கள் குரல் எழுப்பி அதை தகர்த்துவிட்டால் அவர்களுக்கு அதன் வலி புரியாது தமது வல்லாதிக்கத்தை மீண்டும் நம்மேல் காட்டுவார்கள் எந்த மாற்றமும் நிகழ விடமாட்டார்கள் வீதியிலே இறங்கி தமிழரை அழிப்பார்கள் சும்மாவே கொக்கரிக்கிற சரத் வீர சேகர போன்றோர் அடக்கி வாசிப்பதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் எதன் பின்னணியில் வந்தது முதலில் அனுராவை எச்சரிப்பார்கள் எதிர்ப்பார்கள்  சவால்விடுவார்கள் பின்னர் வேறுவழியின்றி இணைந்து போக முயற்சிப்பார்கள் இது எனது தனிப்பட்ட நம்பிக்கை இது பிழையாக கூட இருக்கலாம் இறுதியில் தெரியும் முடிவு. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாமே! சொல்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். இனவாதத்தையல்ல, இனவாதத்தை தூண்டும் இனவாதிகளை தடுக்க! 
    • சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -  - குரு அரவிந்தன் -   சிறுகதை   27 நவம்பர் 2024                                          - ஓவியம் - AI - சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள். ‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய். பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். ‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான். ‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார். ‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய். கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது. இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள். மரணத்தின் வாசலில் நின்று தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனை காரணமாக அவனது முகம்; அப்படியே வெளிறிப்போய்;க் கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்தது. அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்தார் டாக்டர். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார். போர்ச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சீருடையின் துணிவில் நடமாடும் வெறிபிடித்த இந்தவக்கிரங்கள், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை!  ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் துளைத்தது போல, உடம்பில் பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள். கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். அவனும் வேறு வழியில்லாமல் விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான். சின்னஞ்சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இதை வெடிக்க வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், வெறியும் இந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாள் ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டார். எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் வெருண்டடித்துப் பயப்படுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போ புலனாகியது. உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி உயிர் தப்புவானா இல்லையா என்ற முடிவைக் காலன், இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது. ஒரு இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, ஆயுதபலத்தால் அந்த இனத்தின் பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்திருக்கும் ராணுவ அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியான ஒரு சூழ்நிலையில், வெறிபிடித்தலையும் அவனைக் காப்பாற்றுவதிலேயோ, அல்லது அவனை உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் மனதார இருக்கவில்லை. எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தையே அழித்தொழிக்கும் பரமஎதிரி இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போயிருந்தால் எங்களுக்கு சற்று நிம்மதி யாவது இருந்திருக்கும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். இப்போ நோயாளியாக அவன் தன்னிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி என்ற கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து, ஒரு டாக்டராய் விரைவாகச் செயற்பட்டார். கடினமான உழைப்பில், சத்திர சிகிட்சை நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவில்லை. மகனின் நினைவு வரவே, கடிகாரத்தைப் பார்த்தார். மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் கவனம் செலுத்தினார். நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருந்தன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள். இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் இந்த மருத்துவமனை இருந்ததால், தொழில் செய்ய யாருமே விருப்பப்படவில்லை. இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை செய்தாய்’ என்று இரண்டு பக்கத்தில் இருந்தும்  மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது. பாசமா கடமையா என்று எடைபோட்டபோது, கடமைதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது. ‘என்ன..?’ என்றார். ‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’ ‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’ ‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின் பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அந்த வெறுப்பு நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கே உள்ள ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் அறிவார். நாட்டு நடப்பு அப்படி இருந்தது. ‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் கம்மியது. ‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது. ‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு கேட்டார். ‘வந்து.., அவசர சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவசிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க மறுத்திட்டாங்க!’ ‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார். ‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேற வழியில்லாமல் எங்கேயாவது வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் திரும்பிப் போயிட்டாங்க!’ ‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’ ‘ஆமா, டாக்டர் துப்பாக்கிச்சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’ ‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லையே!’ ‘மருத்துவக்கல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைத்த இராணுவகாப்டன் அகப்பட்டிருந்தான்.’ ‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் சட்டென்ற அடைத்துக் கொண்டது. ‘ஆமா, காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் இங்கே கொண்டுவந்த அந்த மாணவங்க காயப்பட்டாங்களாம்!’ ‘மருத்துவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் அடைத்துக் கொண்டன. ‘ஆமா டாக்டர்..!’ ‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு கேட்டார் சிவகுமாரன். ‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி மன்றாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவரக் காவலுக்கு நின்ற சிப்பாய்ங்க விடவேயில்லை!’ ‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அது சார்ந்த இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின. ‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க டாக்டர்.’ ‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’ களைப்பும், குழப்பமும் ஒன்றாய் நிறைந்த நிலையில், மனம் உடைந்துபோன சிவகுமாரன், தலையில் கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் அழைப்பாகத்தான் இருக்கும், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தார்! என்றுமில்லாதவாறு ஏதோ தவறு நடந்துவிட்டது போல, 'என்ர ராசா...'  என்று கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் கேட்க, ஒன்றும் புரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றார் டாக்டர்! :kuruaravinthan@hotmail.com https://yarl.com/forum3/forum/215-கதைக்-களம்/?do=add
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.