Jump to content

யாழில் விமானப்படையின் கண்காட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   26 FEB, 2024 | 03:35 PM

image

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்”  எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்யும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை வடக்கில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் “தொழினுட்பம் , கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் நடத்தவுள்ளன.

கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.

இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும். கண்காட்சிக்கு, 2 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஜெட் விமான இயந்திரம் ஒன்றினையும் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தவுள்ளோம். கண்காட்சியின் முடிவில், அதனை யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177349

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பலாலி விமானநிலையத்தை பெருப்பிக்கப் போகிறோம்...டொட்.

Link to comment
Share on other sites

Quote

இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும். கண்காட்சிக்கு, 2 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ரொம்ப முக்கியம். எமது மக்கள் மேல் மலம் கொட்டியவர்கள் உங்களில் பலர் உள்ளீர்கள். குண்டு மழை பொழிந்தவர்களும் நீங்கள் தானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அதேவேளை வடக்கில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்ல விடயம் ...எங்கன்ட யாழ்கள செய்தியை வாசித்துவிட்டு மரம் நட வெளிக்கிட்டியள் போல....

உங்களுடைய விமானப்படையில் 10 தமிழர்களை இந்த வருடம் உள்வாங்கி நீங்கள் உண்மையிலயே நல்லிணக்கவாதிகள் என்பதை நிருபியுங்கள் பார்ப்போம்....

இந்தியாவை சீனாவுக்காக உளவு வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்ப்பட்டு விட்டது  போல ...
அல்லது இந்தியா உணவு பொட்டலம் போடும் என்ற பயமோ ....

1 hour ago, nunavilan said:

ரொம்ப முக்கியம். எமது மக்கள் மேல் மலம் கொட்டியவர்கள் உங்களில் பலர் உள்ளீர்கள். குண்டு மழை பொழிந்தவர்களும் நீங்கள் தானே?

அவர்கள் மக்கள் மீது கொட்டவில்லை புலிகள் மீது தான் கொட்டினார்கள் 😃

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மகனுடன் விமானப்படையின் கண்காட்சிக்கு சென்றோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மகனுடன் விமானப்படையின் கண்காட்சிக்கு சென்றோம்

 

சாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை  காட்டமுடியாத யாழ்ப்பாண யூரியூப்பர்களுக்கு  இது ஒன்றுதான் கேடு

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம்

09 MAR, 2024 | 06:29 PM
image

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சி இன்றைய தினம் (09) ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தப்பட்டது. 

இந்த கண்காட்சி நாளையும் (10) காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். 

பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும்.

IMG-20240309-WA0110.jpg

IMG-20240309-WA0114.jpg

IMG-20240309-WA0117.jpg

IMG-20240309-WA0126.jpg

IMG-20240309-WA0118.jpg

IMG-20240309-WA0135.jpg

இந்த கண்காட்சி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்துக்கும், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், அவர்களுக்கு 73 ஆயிரம் பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், நாடளாவிய ரீதியில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன் மூலம் ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான பூரண அனுசரணையை வட மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப்படை பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதயனீ ராஜபக்ஷவின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

சாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை  காட்டமுடியாத யாழ்ப்பாண யூரியூப்பர்களுக்கு  இது ஒன்றுதான் கேடு

தம்பி உங்கள் கோணத்தில் நானும் நினைத்தேன்.

ஆனாலும் புலனாய்குப் பிரிவினரின் கெடுபிடிகளுக்காக தவிர்த்திருக்கலாம்.

அங்குள்ள நிலமை அப்படி.

முற்றத்து பங்கருக்குள் இருந்து பார்த்ததை

முற்றவெளியில் போய் பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தம்பி உங்கள் கோணத்தில் நானும் நினைத்தேன்.

ஆனாலும் புலனாய்குப் பிரிவினரின் கெடுபிடிகளுக்காக தவிர்த்திருக்கலாம்.

அங்குள்ள நிலமை அப்படி.

முற்றத்து பங்கருக்குள் இருந்து பார்த்ததை

முற்றவெளியில் போய் பார்க்கிறார்கள்.

இதை நகைச்சுவையாக எடுத்தைக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 11:50, ஏராளன் said:

2 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

x 100 = 2 கோடியை ரிக்கெட் மூலம் மட்டும் புடுங்கப் போயினம். அதுக்கு மேல.. வேற வழியிலும் காசு பறிக்கப்படுகுது. 

அங்கால.. இவையால அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுக்க ஆக்களில்லை...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, நந்தன் said:

சாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை  காட்டமுடியாத யாழ்ப்பாண யூரியூப்பர்களுக்கு  இது ஒன்றுதான் கேடு

சுயமா உழைக்கும் காசு என்றால் இப்படி எல்லாம் ஊதாரித்தனம் செய்ய முடியாது இது உலகம் பூரா இருக்கும் வயசு போனவர்கள் கஸ்ரபட்டு உழைக்கிறவர்களும் சேர்ந்து பின் பலத்தில் நிற்பதனால் தான் இப்படிச் செய்கிறார்கள்..நான் கடந்த சில நாட்களுக்கு பின் இப்படியான இடங்களில் எழுதக் கூடாது என்று நினைத்து விட்டேன்.இப்படியானவற்றைக் கண்டால் நம்மையறியாமலே செய்யக் கூடாத என்ற தப்பை செய்ய  வைக்கிறார்கள்.🖐️

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பை ஏதுவாக்கிய காரணிகளில் சிங்கள விமானப்படையின் விமானங்களும் முக்கிய பங்கினை ஆற்றின. தமிழரைப் பொறுத்தவரையில் இவ்விமானங்கள் அவர்களை அழிப்பதற்காகவே சிங்களத்தால் கொள்வனவுசெய்யப்பட்டு, பாவிக்கப்பட்டு வருகின்றன.

அப்படியொரு விமானத்தில் தமிழ் மாணவர்கள் ஏறிப் பார்த்துவிட்டார்கள் என்றும், அவர்கள் தமது பிறப்பின் பயனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இலங்கையர்களாக நாம் ஒன்றிணைவோம் என்றும் கூக்குரலிடுவது ஆக்கிரமிப்பினை தமிழர்களிடமிருந்தே ஆமோதித்து, அரவணைக்கும் செயலேயன்றி வேறில்லை.

தமது யூடியூப் சனல்களுக்குச் செய்திகிடைக்காதா என்று அலையும் சில தெரு........ இந்தச் சிங்களக் கொலைக்கருவிகளும் செய்திதான். இதனைச் செய்தியாக்கி லைக்குகளை அள்ளக் காத்திருக்கும் பதர்கள் தமது இனத்தின் பிணங்களை வைத்துப் பணம் பண்ணுவதற்குச் சமனானவர்கள். 

தமிழர்களின் மீதான இனவழிப்பினை சிங்கள வெற்றிவிழாவாகக் கொண்டாடும்போது அவ்விழாவில் தமிழர்கள் கலந்துகொள்வதும் ஒன்றுதான், இனக் கொலையில் முக்கிய பங்காற்றிய இவ்விமானங்களின் கண்காட்சியில் கலந்துகொள்வதும் ஒன்றுதான்.

"உங்களை அழிக்க நாம் பாவித்த கொலைக்கருவிகளை வந்து பாருங்கள், இனியொரு முறை சுதந்திரம் கேட்டாலும் இவற்றைக் கொண்டே மீண்டும் ஒருமுறை உங்களை அழிப்போம்" என்பதுதான் சிங்களம் விடுக்கும் செய்தி. 

எமது உறவுகளை பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்த எதிரியின் கொலைக்கருவிகளில் இருந்து எம்மை விலத்தியே வைத்திருப்போம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, நந்தன் said:

சாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை  காட்டமுடியாத யாழ்ப்பாண யூரியூப்பர்களுக்கு  இது ஒன்றுதான் கேடு

 

 

Edited by putthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபு களால் தாக்கியழிக்கப்பட்ட  சிறீ லங்கன் எயார் லைன்ஸில் பயணம் செய்யலாம், பலாலி, கொழும்பு விமான நிலையங்களை புலம்பெயர்ஸ்  பாவிக்கலாம்.  ஆனால்,  தாயகத்திலுள்ளோர் அவற்றைப்  பார்வையிடுவதன் காரணமாக அவர்களது தேசிய உணர்வில் புலம்பெயர்ஸ் களுக்கு சந்தேகம் வருகிறது. 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“எங்கட விமானங்கள்” என்று தமிழ் மாணவர்கள் பெருமிதமாகச் சொல்லும் அளவிற்கு தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். அதை தமிழ் யூடியுப்பர்களும் கொண்டாடி கொஞ்சம் சம்பாதிக்கவும் முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த பழைய தலைமுறையோ இப்போதும் “பழய சீலை கிழிஞ்சமாதிரி” புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

“எங்கட விமானங்கள்” என்று தமிழ் மாணவர்கள் பெருமிதமாகச் சொல்லும் அளவிற்கு தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். அதை தமிழ் யூடியுப்பர்களும் கொண்டாடி கொஞ்சம் சம்பாதிக்கவும் முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த பழைய தலைமுறையோ இப்போதும் “பழய சீலை கிழிஞ்சமாதிரி” புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.!

 

வடமாகாணத்தில் இரண்டும் நடை பெறுகிறது ஒரு பக்கம் நல்லிணக்க செய்ல்பாடு ....வெடுக்குநாறிமலையில்  ஆக்கிரமிப்பு ...தாயகத்திலும் இந்த புறு புறுப்பு உண்டு ....இங்கு வயது போனவர்கள்...அங்கு இளைஞர்கள் 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2024 at 05:45, ஏராளன் said:

மகனுடன் விமானப்படையின் கண்காட்சிக்கு சென்றோம்

 

 

சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி @ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாதம் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே  அளவான மக்கள் திரள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக யாழ்பாணத்தில் இருக்கும் யூருபர்கள்  வீடியோ வெளியிட்டுள்ளனர்.  அந்த நிகழ்சசியில் தூஷன வார்ததைகளுடன் அநாகரிகமாக நடந்து நிகழ்வைக் குழப்பிய  காவாலிகள் இந்த நிகழ்சசியில் வாலைச் சுருட்டிக்கொண்டு  இருந்திருப்பார்கள். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, island said:

சென்ற மாதம் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே  அளவான மக்கள் திரள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக யாழ்பாணத்தில் இருக்கும் யூருபர்கள்  வீடியோ வெளியிட்டுள்ளனர்.  அந்த நிகழ்சசியில் தூஷன வார்ததைகளுடன் அநாகரிகமாக நடந்து நிகழ்வைக் குழப்பிய  காவாலிகள் இந்த நிகழ்சசியில் வாலைச் சுருட்டிக்கொண்டு  இருந்திருப்பார்கள். 😂

விமான கண்காட்சிக்கு தமன்னா வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 22:34, nunavilan said:

ரொம்ப முக்கியம். எமது மக்கள் மேல் மலம் கொட்டியவர்கள் உங்களில் பலர் உள்ளீர்கள். குண்டு மழை பொழிந்தவர்களும் நீங்கள் தானே?

 

Whats-App-Image-2024-03-11-at-8-00-56-AM

 

Whats-App-Image-2024-03-11-at-8-01-38-AM

Whats-App-Image-2024-03-11-at-8-01-51-AM

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

 

Whats-App-Image-2024-03-11-at-8-00-56-AM

 

Whats-App-Image-2024-03-11-at-8-01-38-AM

Whats-App-Image-2024-03-11-at-8-01-51-AM

பெருமாள் 90களின் பின்பு பிறந்தவர்கள் இராணுவத்தின் அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து பழகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானூர்திப்படையில் இணைய யாழில் 250 பேர் விண்ணப்பம்

1372540245.jfif
 

கண்காட்சி ஊடாக ஆட்சேர்ப்பு

(ஆதவன்)

சிறிலங்கா வானூர்திப் படையில் இணைந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளையோர் 250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அரச தலைவர் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முற்றவெளியில் சிறிலங்கா வான்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கண்காட்சி இடம்பெற்றது.

https://newuthayan.com/article/வானூர்திப்படையில்_இணைய_யாழில்_250_பேர்_விண்ணப்பம்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.