Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள மரபணு நெருக்கம்

Published By: VISHNU   01 MAR, 2024 | 05:27 PM

image
 
  • தெற்காசியாவில் வேறு எந்த இனக் குழுமங்களுக்கும் இடையில் இத்தகைய நெருக்கம் கிடையாது என்று ஆய்வில் கண்டுபிடிப்பு 

பி.ரி.ஐ. (புதுடில்லி ) இலங்கையின் இரு பெரிய இனக்குழுமங்களான சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் மரபணு ஒப்புடைமை தெற்காசியாவில் வேறு எந்த இனக்குழுமங்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய மரபணு ஒப்புடைமையை விடவும் மிகவும் நெருக்கமானது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த மரபணு விஞ்ஞானிகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 'ஐ சயனஸ் ' (i Science)என்ற சஞ்சிகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகள் இலங்கையின் இனக்குழுமங்களின் தோற்றுவாய்களையும் அவற்றுக்கு இடையிலான சமூக ஊடாட்டங்களையும் தெளிவுபடுத்துகிறது.

குறிப்பிடத்தக்க கலாசார மற்றும் மொழியியல் வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கடந்த காலத்தில் பல நூற்றாண்டுகளாக கலந்து வாழ்ந்திருப்பதன் விளைவாக அவர்களுக்கிடையில் மரபணு ஒப்புடைமை ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

"பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பரஸ்பர அவநம்பிக்கையும் பகைமையும் இருந்துவருகின்ற போதிலும், உள்நாட்டுப் போரொன்றில் அவர்கள் ஈடுபட்டபோதிலும் எமது கண்டுபிடிப்புக்கள் மிகுந்த வியப்பைத் தருகின்றன" என்று இந்தியாவின் வாரணாசியில் உள்ள பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் இலாகாவை சேர்ந்த பேராசிரியர் கியனேஷ்வர் ஷோபே கூறுகிறார்.

லக்னோவில் உள்ள பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தையும் மங்களூர் பல்கலைக்கழகத்தையும் இலங்கையின் கொழும்பு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்களும் பெனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இலங்கையின் மிகப்பெரிய இனக் குழுமத்தினரான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும்  உள்நாட்டில் சோனகர் என்று அறியப்படும் முஸ்லிம்களும் முறையே 11.1 சதவீதத்தினராகவும் 9.3 சதவீதத்தினராகவும் இருக்கின்ற அதேவேளை, இந்தியத் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராக இருக்கிறார்கள். மிகவும் சிறிய ஒரு சதவீதத்தில் பறங்கியரும், மலாயர்களும், வேடர்களும் (ஆதிவாசிகள்) இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கி.பி.500 அளவில் அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

"சிங்களவர்கள் இந்தியாவின் மேற்கு பாகத்தில் இருந்து குடிபெயர்ந்த அதேவேளை இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தார்கள். இரு இனத்தவர்களின் குடிபெயர்வுகளும் ஏககாலத்தில் இடம்பெற்றது. இரு தரப்புகளில் இருந்தும் பல நூறு வருடங்களாக மரபணு பரவல் அல்லது மரபணு ஓட்டம் ( Flow of genes) இடம்பெற்றிருப்பதாக தோன்றுகிறது. அதன் விளைவே இந்த மரபணு ஒப்புடைமை" என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விஞ்ஞானி ஆர். ரணசிங்க கூறினார்.

இந்த துறையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மரபணு விபரங்களில் ஆழமானவையாக இருக்கவில்லை. அதனால் அவை தீர்க்கமான முடிவாகக் கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள்.

"ஒரு தனிநபரில் ஒரு ஐந்து இலட்சம் மரபணு  மாற்றம் அல்லது மரபணு  விகாரம் ( Genetic mutations ) மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வாக இது அமைந்திருக்கிறது. இந்த பணியின் முனைப்பு மற்றும் பரந்தளவிலான வீச்செல்லை காரணமாக  எமது ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானவையாகவும்  வலுவானவையாகவும் இருக்கிறது என்று நம்புகிறோம்" என்று ஷோபே கூறினார்.

ஒரு தனிநபரின் மரபணு  விபரங்கள் அவரைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மரபணு விபரங்களுடன் பொதுத்தன்மையை வழமையாகக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

"உதாரணமாக நாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த ஒருவரின் வட இந்தியாவில் உள்ள வேறு  நகரங்களில் இருப்பவர்களுடன் பெருமளவுக்கு மரபணு ஒற்றுமையைக் கொண்டிருப்பார். ஆனால் இலங்கை ஆய்வில் தென்னிந்தியாவை விடவும் இந்தியாவின் மேற்கு பாகத்தின் மரபணுக் கூறுகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும் மராட்டியர்களுக்கும் ஒரு பொதுவான வேருக்கான தடயங்கள் இருக்கின்றன" என்று ரணசிங்க கூறினார்.

இனத்துவ மற்றும்  மொழியியல் எல்லைக்கு அப்பால் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வலுவான மரபணு பரவல் இருப்பது  வியப்பைத் தருகின்ற இன்னொரு அம்சமாகும். தெற்காசியப் பின்புலம் ஒன்றில் இது வழமைக்கு மாறானதாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள சிங்கபுரவில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்றும் புராணக்கதைகள் கூறுவதை அவதானித்த விஞ்ஞானிகள் குழு அது சரியான இடம் அல்ல என்று மறுத்துரைக்கிறார்கள்.

"இரண்டு சிந்தனைகளைக் கொண்ட பிரிவினர்  இருக்கிறார்கள்.  ஒரு பிரிவினர்  அந்த இடம் வடமேற்கு இந்தியா என்று கூறுகிறார்கள். மற்றையவர்கள் மேற்கு வங்காளம் என்று கூறுகிறார்கள்.எமது ஆய்வு அவர்களின் தாயகம் வடமேற்கு  இந்தியா என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது." என்று பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் புராதன மரபணு ஆய்வுகூடத்தைச் சேர்ந்த இன்னொரு மரபணு விஞ்ஞானி நிராஜ் ராய் கூறினார். 

இந்த ஆய்வை நடத்த முடிக்க ஐந்து வருடங்கள் சென்றது. இலங்கைத் தமிழர்கள் (88), சிங்களவர்கள் (129 ), இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (56),  இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள்  (562 ) ஆகியோரிடமிருந்து 834 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

https://www.virakesari.lk/article/177697

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு I science ன் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் வந்துவிட்டது. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.cell.com/iscience/pdf/S2589-0042(23)01874-6.pdf

 



Reconstructing the population history of the Sinhalese, the mmajor ethnic group in Sri Lanka 


Highlights
Higher West Eurasian genetic component in Srı Laṅka than South India
A strong gene flow beyond the boundary of ethnicity and language in Srı Laṅka
Traces of common roots of Sinhala with Maratha
Singh et al., iScience 26, 107797 October 20, 2023 a 2023 The Authors. https://doi.org/10.1016/ j.isci.2023.107797
      
 iScience ll
OPEN ACCESS
Ar ticle
Reconstructing the population history
of the Sinhalese, the major ethnic group in Sri Lanka


SUMMARY
The Sinhalese are the major ethnic group in Srı Laṅka, inhabiting nearly the whole length and breadth of the island. They speak an Indo-European language of the Indo-Iranian branch, which is held to originate in northwestern India, going back to at least the fifth century BC. Previous genetic studies on low-resolution markers failed to infer the genomic history of the Sinhalese population. Therefore, we have performed a high-resolution fine-grained genetic study of the Sinhalese population and, in the broader context, we at- tempted to reconstruct the genetic history of Srı Laṅka. Our allele-frequency-based analysis showed a tight cluster of Sinhalese and Tamil populations, suggesting strong gene flow beyond the boundary of ethnicity and language. Interestingly, the haplotype-based analysis preserved a trace of the North Indian affiliation to the Sinhalese population. Overall, in the South Asian context, Srı Laṅkan ethnic group

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

இந்தியாவில் உள்ள சிங்கபுரவில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்றும் புராணக்கதைகள் கூறுவதை அவதானித்த விஞ்ஞானிகள் குழு அது சரியான இடம் அல்ல என்று மறுத்துரைக்கிறார்கள்.

சிங்களவர்கள்  மட்டுமல்ல தமிழர்களுக்கும் இப்போது புராணக்கதைகள் கூறுபவை தான் உண்மை  என்கின்றார்கள்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

4 hours ago, ஏராளன் said:

தெற்காசியாவில் வேறு எந்த இனக் குழுமங்களுக்கும் இடையில் இத்தகைய நெருக்கம் கிடையாது என்று ஆய்வில் கண்டுபிடிப்பு 

 

அப்ப கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் தெலுங்கர்கள் எல்லாம் என்ன கோபால்?

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை .

1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 

2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில  பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் .

3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .

  • Like 1
  • Thanks 1
Posted

யாரப்பா யாழ்கள ஆய்வாளர்களை மிஞ்சி ஆய்வு செய்து மராட்டியர்களை இதற்குள் கொண்டு வந்து செருகியது?:)

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

which is held to originate in northwestern India,

இங்கிலுசுக்குள் எழுதி விட்டார்கள் நம்புவது தவிர வேறு ஒன்றும் இல்லை .😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான விடய்யங்களில்@கோசான்  போன்றவர்களுக்கு கை துரு துருக்கும் கூடவே அடுத்த ஐடி நாதமுனிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பெருமாள் said:

முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை .

1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 

2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில  பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் .

3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .

அய்யா...யாழ்களமே..இதற்கு உண்மையான அத்தாட்சி...போகிறபோக்கில் பெரும்பான்மையின வீதாசாரமே கூடிவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பெருமாள் said:

முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை .

1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 

2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில  பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் .

3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .

@alvayan

2 hours ago, பெருமாள் said:

இங்கிலுசுக்குள் எழுதி விட்டார்கள் நம்புவது தவிர வேறு ஒன்றும் இல்லை .😃

அட அப்பிரண்டீசுகளா ! 🤦🏼‍♂️

மேலே கொடுக்கப்பட்டது ஒரு ஆய்வுக் கட்டுரை. அதைச் செய்தது ஆய்வாளர்கள். கட்டுரையை இணைத்தது ஏராளன்,  கட்டுரைக்கான மூலத்தை இணைத்தது  கப்பித்தான்.  அம்புட்டுதே. 

 ஆய்வுக் கட்டுரை பிழையென்றால் அதை நிறுவுங்கள். 

அதை விடுத்து அம்பை நோவதால் ஒரு பயனும் இல்லை. 

 

 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

@alvayan

அட அப்பிரண்டீசுகளா ! 🤦🏼‍♂️

மேலே கொடுக்கப்பட்டது ஒரு ஆய்வுக் கட்டுரை. அதைச் செய்தது ஆய்வாளர்கள். கட்டுரையை இணைத்தது ஏராளன்,  கட்டுரைக்கான மூலத்தை இணைத்தது  கப்பித்தான்.  அம்புட்டுதே. 

 ஆய்வுக் கட்டுரை பிழையென்றால் அதை நிறுவுங்கள். 

அதை விடுத்து அம்பை நோவதால் ஒரு பயனும் இல்லை. 

 

 

தேவையே இல்லை ஐயா...யாழ்மூலம் ...தேற்ற த்ததை   நிறுவியுட்டோம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

இப்படியான விடய்யங்களில்@கோசான்  போன்றவர்களுக்கு கை துரு துருக்கும் கூடவே அடுத்த ஐடி நாதமுனிக்கும்.

பெருமாள், 

யாருடைய கை துருப்பிடித்தாலென்ன அடிப்பிடித்தாலென்ன ஆய்வு ஆய்வுதான். இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்து ஒரு கிழமைதான் ஆகிறது. இந்த ஆய்வு முடிவுகளை மறுதலிப்பதற்கு மிகவும் நம்பிக்கையான வேறு தரவுகள் வேண்டும். நம்பிக்கையான வேறு தரவுகள் முன்வைக்கப்படும் வரை இந்த ஆய்வு முடிவுகளை மறுதலிக்க முடியாது.

அதுதான் விஞ்ஞானம்.  👍

27 minutes ago, alvayan said:

தேவையே இல்லை ஐயா...யாழ்மூலம் ...தேற்ற த்ததை   நிறுவியுட்டோம்...

முதலில் ஆய்வுக்  கட்டுரையை வாசியுங்கள். 

பிறகு நிறுவுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நன்னிச் சோழன் said:

அப்ப கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் தெலுங்கர்கள் எல்லாம் என்ன கோபால்

இந்த அறிவியல் ஆதாரத்தை வைத்து இங்குள்ளோர் ஒற்றுமையாக வாழட்டும் என நினைத்தார்களோ?!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஏராளன் said:

இந்த ஆய்வை நடத்த முடிக்க ஐந்து வருடங்கள் சென்றது. இலங்கைத் தமிழர்கள் (88), சிங்களவர்கள் (129 ), இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (56),  இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள்  (562 ) ஆகியோரிடமிருந்து 834 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

Sample size போதாது. இப்படியான ஆய்வுகளை முறையான Statistical methods ஐப் பாவித்துச் செய்யவேண்டும்.  எனினும், சிங்களவர்கள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருப்போருக்கு நெருக்கமானவர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. 

தவிர, 88 இலங்கைத் தமிழர்களும் முன்னைய போர்களில் சிறைபிடிக்கப்பட்ட சிங்களப் போர்வீரர்களின் வம்சாவழியினராக இருக்கலாம்😃

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

இந்த அறிவியல் ஆதாரத்தை வைத்து இங்குள்ளோர் ஒற்றுமையாக வாழட்டும் என நினைத்தார்களோ?!

அதே அதே

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது போன்ற ஆய்வு முடிவுகள் இனத்தூய்மை ("பச்சைத் தமிழன்", "சிங்கள ரத்தம்") என்ற கற்பனைக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்போருக்கு கிச்சு கிச்சு மூட்டும்😎! எனவே, அதிகம் இவை பற்றிப் பேச வேண்டும்.

மறுவளமாக, கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆசியாவின் மேற்கில் இருந்து மத்தி வரையான பகுதியில் மக்கள் சமூகங்களிடையே நிகழ்ந்த கலப்பை (genetic admixture) இது போன்ற ஆய்வுகள் மீள மீள நிரூபிக்கின்றன.

இந்தக் கலப்பிற்கு ஆதாரமான இன்னொரு சுவாரசியமான விடயம் இங்கே பகிரத் தக்கது.

பசுப்பால் உட்பட, பால்களில் இருக்கும் பிரதான வெல்லம் லக்ரோசு. இந்த லக்ரோசை சமிக்கச் செய்யும் லக்ரேசு என்ற நொதியம்,மனிதன் உட்பட்ட பாலூட்டிகளில் பால் மறந்த பின்னர் செயல்படாமல் போய் விடும். ஆதிமனிதர்களில், வளர்ந்தவர்களில் லக்ரேசு இருக்கவில்லை என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், கடந்த 5000 வருடங்கள் முன்பு, சில மனித மூதாதைகள் கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்படிக் கால்நடை மேய்த்த சமூகங்களை "மேய்ச்சல் காரர்கள்-Pastoralists" என்று அழைப்பர். இந்த மேய்ச்சல் காரர்கள் மாட்டுப் பாலை உட்கொள்ள ஆரம்பித்த போது, அவர்களில் லக்ரேசு நொதியம் வளர்ந்தவர்களிலும் தொழிற்பட ஆரம்பித்தது. இது ஒரு கூர்ப்பியல் இசைவாக்கம். ஆனால், இப்படி வளர்ந்த மனிதர்களில் பாலைச் சமிக்கச் செய்யும் இயலுமை உலகம் பூராவும் சீராக பரவிக் காணப்படவில்லை.

large.Lactasepersistence.jpg.5b2b7678cbf8e18b1dacb53a6235414d.jpg

மேலே இணைத்திருக்கும் படத்தில் காட்டப் பட்டிருப்பது போல, இந்தியா, இலங்கை, கிழக்காசியா ஆகிய பகுதிகளில் லக்ரேசு நொதியம் வேலை செய்யும் (Lactase persistence) மனிதர்களின் வீதம் மிகக் குறைவு - இதனால் 60 முதல் 78% ஆன இலங்கை இந்தியர்களில் லக்ரோசு ஒத்துவராமை (Lactose intolerance) என்ற நிலை இருக்கிறது.

இந்த எடுகோளின் படி பார்த்தால், பசுப்பால் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் தென்னாசியாவில் வேரூன்றி வளர்ந்த மண்ணின் மைந்தனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பசுப்பால் உங்களுக்கு ஒத்து வந்தால், மேற்காசியாவின் மேய்ச்சல் காரர்களின் வழியில் வந்த வந்தேறியாக நீங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்! (இந்தக் கடைசிப் பந்தி என்னுடைய வியாக்கியானம் மட்டுமே, ஆனால் கூர்ப்பு மாற்றங்கள் சிக்கலானவை என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்)     

படமூலம் நன்றியுடன்: https://ojs.lib.uwo.ca/index.php/wurjhns/article/download/5208/4353/9276

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாடா, 

எனக்கு lactose intolerance இருப்பதால் நான்  தப்பித்தேன். 

🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இனி தமிழர்களை கண்டால் பசுப்பால்  குடித்தால் எனக்கு வயிற்று குந்து வருகின்றது என்று  சொல்ல போகிறேன் 😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

சிங்களவரில் ஒரு கதை நடக்கிறது அவர்கள் குஜராத் அடி உள்ளவர்கள் என்று.

இது ஒரு புறம். மாரு புறம்  புத்தர் பிறந்தார் என்று.

இன்னொரு புறம், நவீன orientalists, சிங்களத்துடன் சேர்ந்து, சிங்களவர் பருவக்வக்கக் காற்று இரும்பை வார்த்து அரேபியருக்கு விற்றார்கள் என்று (அனால், அரேபியரின் வரலாற்றில் அப்படி இல்லை). (https://www.exeter.ac.uk/research/projects/archaeology/metallurgy/)

இதில், இரும்பு விற்கப்பட்டது என்பது பிரச்னை இல்லை - அனால் அராபியர் , மற்றும் உலோக வார்ப்பு வரலாற்றில் Monsoon steel என்று அடையாளப்படுத்தப்படும் வார்ப்பு இரும்பு இல்லை.

(உ.ம். , தமிழர் (தான்) உருக்கு இரும்பை வார்க்கும் முறையை தீவுக்கு கி.மு 300 அளவில் கொண்டுவந்தார்கள் என்பதை சொல்லும் , திசைமஹராமாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை  மறைத்து விட்டது. இந்த கட்டவேட்டை பற்றி சிங்களமும், அதனுடன் சேர்ந்த ஜேர்மன் (இவ்ர்கள் சிங்களத்தின் சொல் கேட்க வேண்டும்) புதைபொருள், தொப்பொருள், மானிடவியல்  ஆய்வாளர்கள் மூச்சு விடாமல் இருந்தனர், அனால், இரவாதம் மகாதேவனிடம் இது கட்டப்பட்டது (பத்தோடு பலதாக), அவரின் குறிப்புகளில் இருந்தே தெரிந்தது இப்படி ஓர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக.   பின்பு  அந்த கல்வெட்டை தொல்பொருள் திணைக்களம் அப்படி ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டது, அதாவது மறைத்து விட்டது.)

சிங்களத்துக்கு அடையாளப்  பிரச்சனை உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருந்தது. அதை ஆரிய வாத orientalists (Wilhelm Geiger முக்கியமானவர்) மகாவம்ச மீட்கை, மற்றும் அவர்களின் சில சரியான, இலங்கைத் தீவில் மொழி பற்றிய  பல பிழையான கண்டுபிபிடிப்புகளை அடிப்படையாக வைத்து.      

இதனால் தன - ஒரு புறம் குஜராத்,  இராவணனின் அடி, இயக்கர், நாகர், தேவ வழித்தோன்றல்,, இன்னொரு புறம் புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று பல கதைகள்.

வரலாற்றை திரிப்பதற்கு காரணம் - பழைய கண்டறிதல்களில், விஞ்ஞான வளர்ச்சியால், தங்கி இருக்க முடியாத நிலை. 

ஒரு முக்கிய காரணம், மேற்கு வாங்க சாயல் கொண்ட மரபணு ஈழத்தமிழரில் 28%, சிங்களவரில் 25% என்பது, மகாவம்ச கதையை புரட்டி போட்டு இருக்கிறது. (இது பெரும் வேறுபாடு) 

இன்னுமொன்று, சிங்களளவரில் பெரும்பாலானோருக்கு சிங்கம் புணர்ந்து அவர்கள் உருவாக்கியவர்கள் என்ற கதை மிகவும் சங்கேடனத்தையும், வெட்கத்தையும் உருவாக்குகிறது. அதாவது,  காமஇச்சையை மிருகத்திடம் தணித்த இனம் என்று  துறை சார்   வட்டங்களிலியே சர்வசாதரமாக எள்ளிநகையாடப்படுவது சிங்களத்தினால் பொறுக்க முடியவில்லை. அந்த கதையை எப்படியாவது அவர்களின் வரலாற்றில் இருந்து கழட்டி விட வேண்டும் என்ற முனைவுடன் இருக்கிறது சிங்களம்.

இன்னுமொன்று, கிந்தியா, சிங்களம் இந்தோ ஆரியன் என்ற பெரிய கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

இங்கு தனிப்பட்ட ஆய்வாளரை ஒன்றும் குற்றம் சொல்லவில்லை. 

இதில் மாதிரி எண்ணிக்கை காணும், காணாது என்ற பிரச்னை ஒரு புறம் இருக்க (ஆனல், மாதிரி அளவை நம்பக அளவுக்கு (confidence level by statistical measure) சரி பார்த்து தான் அவர்கள் ஆய்வு செய்து இருப்பார்கள் என்பது அநேகமாக நடந்து இருக்கும்). 

தரவு சேகரித்தலில் எழுந்தமான தன்மை  பெரிய கேள்விக்குறி (தரவு சேகரித்தலின் கட்டுப்பாடு சிங்களத்தின் கைகளிலேயே இருக்கிறது).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/3/2024 at 09:31, பெருமாள் said:

முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை .

1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 

2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில  பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் .

3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .

பாத்துப்பேசுங்கோ பெருமாளு! காதில விழுந்திடப்போகுது,  பிறகு,  உங்களையும்  இனவாதியாக சித்திரித்து ரசிக்கப்போகிறார்கள். இனவாத செயல்களும் பேச்சுகளும் இன்னும் முற்றுப்பெறவில்லை, ஆனால் அதை சுட்டிக்காட்டுவோரை இனவாதிகள் என முத்திரை குத்தி ரசிக்கினமாமெல்லே.  தமிழர் தான் இனவாதிகளென வெகுசீக்கிரத்தில் நம்மவர்களே அறிக்கை விடுவினம் பாருங்கோ

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.