Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.

இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இணையவன் said:

இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?

அப்படி ஆரம்பத்தில் பல நாம்தமிழர்கட்சி ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் தேவையற்று மூக்கை நுழைத்து தமிழக மற்றைய கட்சி உறவுகளை ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக பேசவைத்ததுதான் மிச்சம்.. மிக மிகத்தவறான உதாரணங்கள் அவை.. இப்பொழுது திராவிட கட்சிகளை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்த அந்த மூர்க்கம் நாம்தமிழர் ஈழ ஆதர்வாளர்களிடம் இல்லை.. வெகுவாக குறைந்து விட்டது.. பலர் தமிழ்நாட்டு அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மெதுமெதுவாக உணர தொடங்கிவிட்டனர்.. ஆனாலும் நான் உட்பட பலரும் நாம் தமிழரை மனதில் ஆதரிப்பதற்கான காரணம் மேலே விசுகண்ணை கோசானுக்கு சொன்னவைதான்.. நம்ம ஆதரவை மற்ற கட்சிகளை பகைக்காமல் நம்மளவில் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஈழத்தமிழருக்கு நல்லது.. ஒரு வெகு சிலரை தவிர மற்றைய அனேக நாம் தமிழர் ஈழ ஆதர்வாளர்கள் இவற்றை புரிந்து கொண்டுள்ளதை இந்த வருடம் அங்கு நடக்க இருக்கும் தேர்தலில் இணையத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.. ஆனால் மறுவளத்தில் ஈழத்தமிழரில் பலர் நாம் தமிழர் கட்சி ஈழ ஆதர்வாளர்கள் மற்றைய திராவிட கட்சிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் மூர்க்கமாக களமாடி எமக்கு எதிராக அவர்களை திருப்பியதுபோல் நாம் தமிழர் கட்சி தமிழக உறவுகளுக்கு எதிராக மூர்க்கமாக களமாடி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அதே மூர்க்கத்துடனும் வெறியுடனும் செய்கிறார்கள்.. அது எப்படி மிக மிகத்தவறோ அதேபோல் இதுவும் மிகமிகத்தவறே.. இவற்றையும் சேர்த்து நீங்கள் சுட்டிக்காட்டினால்தான் உங்கள் கரிசனை நியாயமானதாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

நியாயம் என்று வந்தால் சிறிது பெரிது என்று இல்லை தானே சகோ. அப்படி பார்த்தால் இந்த சிறிய இனத்துக்காக எதுக்காக நாட்டை ஆளும் சிங்களத்தை பகைக்கணும் என்று உலகம் சொல்வது சரியாகிவிடும் அல்லவா??

நீங்கள் சொல்லும் அனைத்து கட்சிகளும் அந்த 8 யை தாண்டி வந்தவை தானே,?

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, இணையவன் said:

இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?

6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்படி ஆரம்பத்தில் பல நாம்தமிழர்கட்சி ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் தேவையற்று மூக்கை நுழைத்து தமிழக மற்றைய கட்சி உறவுகளை ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக பேசவைத்ததுதான் மிச்சம்.. மிக மிகத்தவறான உதாரணங்கள் அவை.. இப்பொழுது திராவிட கட்சிகளை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்த அந்த மூர்க்கம் நாம்தமிழர் ஈழ ஆதர்வாளர்களிடம் இல்லை.. வெகுவாக குறைந்து விட்டது.. பலர் தமிழ்நாட்டு அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மெதுமெதுவாக உணர தொடங்கிவிட்டனர்.. ஆனாலும் நான் உட்பட பலரும் நாம் தமிழரை மனதில் ஆதரிப்பதற்கான காரணம் மேலே விசுகண்ணை கோசானுக்கு சொன்னவைதான்.. நம்ம ஆதரவை மற்ற கட்சிகளை பகைக்காமல் நம்மளவில் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஈழத்தமிழருக்கு நல்லது.. ஒரு வெகு சிலரை தவிர மற்றைய அனேக நாம் தமிழர் ஈழ ஆதர்வாளர்கள் இவற்றை புரிந்து கொண்டுள்ளதை இந்த வருடம் அங்கு நடக்க இருக்கும் தேர்தலில் இணையத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.. ஆனால் மறுவளத்தில் ஈழத்தமிழரில் பலர் நாம் தமிழர் கட்சி ஈழ ஆதர்வாளர்கள் மற்றைய திராவிட கட்சிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் மூர்க்கமாக களமாடி எமக்கு எதிராக அவர்களை திருப்பியதுபோல் நாம் தமிழர் கட்சி தமிழக உறவுகளுக்கு எதிராக மூர்க்கமாக களமாடி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அதே மூர்க்கத்துடனும் வெறியுடனும் செய்கிறார்கள்.. அது எப்படி மிக மிகத்தவறோ அதேபோல் இதுவும் மிகமிகத்தவறே.. இவற்றையும் சேர்த்து நீங்கள் சுட்டிக்காட்டினால்தான் உங்கள் கரிசனை நியாயமானதாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கும்..

இப்ப‌ திமுக்கா ஆட்சி தானே ந‌ட‌க்குது ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆட்சிய‌ இழ‌ந்தாப் பிற‌க்கு டொசோ ம‌காநாடு போட்டிச்சின‌மே திமுக்கா ஏன் இடையில் அதை நிறுத்தினார்க‌ள்.......................

ச‌ரி 2009க‌ளில் த‌வ‌று இழைத்து விட்டின‌ம் அல்ல‌து துரோக‌ம் செய்து விட்டின‌ம்...............திமுக்கா ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்ய‌ மாட்டின‌ம் ஆட்சி க‌வுன்ட‌தும் ஈழ‌ விடைய‌த்தில் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் போல் மீண்டும் மூக்க‌கை நுழைப்பின‌ம்....................சொல்வ‌து ஒன்று செய்வ‌து இன்னொன்று அது தான் திமுக்காவை  2009க்கு பிற‌க்கு பிடிக்காம‌ போன‌து  க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்தாலே அருவ‌ருப்பும் வெறுப்பும் தான் வ‌ருது😡.................புக‌ழை ம‌ற‌ந்தாலும் நீ ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை ம‌ற‌வாதே ஹிட்ல‌ர்..................

15வ‌ருட‌த்துக்கு முத‌ல் நாம் க‌ண்ணீர் விட்டு  அழுது புல‌ம்பின‌ போது மான‌டா ம‌யில் ஆட‌ நிக‌ழ்ச்சி ந‌ட‌த்தி ம‌க்க‌ளை திசை திருப்பின‌து யார்

2009க‌ளில் க‌ருணாநிதி குடும்ப‌ சொத்தை எழுதி  த‌ர‌ சொல்லியா கேட்டோம் போரை நிறுத்துங்க‌ள் என்று  சொல்ல‌ 2009க‌ளில் எத்த‌னை நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றினார் க‌ருணாநிதி

போலி உண்ணா விர‌த‌ நாட‌க‌ம்............. போர் நின்று விட்ட‌து என்று ஊட‌க‌ம் முன்னால் அறிவித்து விட்டு ஒரே நாளில் போரை நிப்பாட்டின க‌லைஞ‌ர் என்று சுவ‌ரொட்டிக‌ள் அடிச்சு ஒட்டி

ஊட‌க‌ம் கேட்ட‌ கேள்வி நீங்க‌ள் போர் நின்று விட்ட‌து என்று அறிவித்து இருந்தீங்க‌ள் ஆனால் போர் நிக்க‌ வில்லை ம‌க்கள் சிங்க‌ள‌ அர‌சால் கொல்ல‌ ப‌டின‌ம் என்று கேட்க்க‌ க‌ருணாநிதியின் ந‌க்க‌ல் ப‌தில் ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விடுவ‌தில்லை

அதோட‌ எல்லாம் வெறுத்து போச்சு 2008க‌ளில் 2009க‌ளில் யாழ் க‌ள‌த்தில் க‌ருணாநிதிய‌ ஆத‌ரிச்ச‌ கூட்ட‌ம் அவ‌மான‌ம் தாங்க‌ முடியாம‌ இப்ப‌ யாழில் வேறு பெய‌ர்க‌ளில் எழுதுகின‌ம் சில‌ர் முக‌வ‌ரி தெரியாம‌ல‌ போய் விட்டின‌ம்😮.........................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி நான் எதுவும் கூறவில்லை. எதில் காலத்தில் உயர்பதவிகளுக்கு வரும்  போது ஆங்கிலவழிக்கல்வி மகனுக்கு உதவியாக இருக்கும் என்ற அக்கறையில் ஒரு தகப்பனாக அவர் தன் மகனை ஆங்கிலவழிக் கல்வியில் படிப்பிப்பதை தவறென்று கூற முடியாது.  

தமிழ் தமிழ் என்று தமிழைவைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தமிழ் வழி கல்வியை நிராகரித்து தனது மகனுக்கு ஆங்கிலவழி கல்வி படிப்பிப்து அவர் செய்கின்ற சுத்துமாத்துகளில் முதன்மையானது.இலங்கையில் தமிழ் வழி கல்வியில்  படித்து பின்பு இலங்கை யுனியில் படித்து டொக்டர்களாக இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் உள்ளனர். அது போன்றே இலங்கையில் தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் உயர்நிலையில் உள்ளார்கள் இலங்கையில் சிங்கலத்தில் படித்த சிங்களவர்களும்  நல்ல நிலையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டவர்களோடு வேலைபார்க்கும் ரசோதரன் அண்ணா இங்கே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.தமிழ் மொழி மூலம் படித்த தமிழ்நாட்டு தமிழர்கள் நல்ல நிலையில் உள்ளதை.
சீமான் ஆங்கில மோகத்தால் தமிழை நிராகரித்து தனது மகனுக்கு ஆங்கிலவழி கல்வி படிப்பிக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இதையே தான் நானும் கேட்டுக்கிறேன் மொழி போரை வைச்சு ஆட்சிக்கு வ‌ந்த‌ திமுக்கா த‌மிழை வ‌ள‌த்த‌தா அல்ல‌து அழிச்ச‌தா த‌மிழ் நாட்டு க‌டைக‌ளில் எங்கு த‌மிழ் இருக்கு

ஸ்டாலின் அவ‌ரின் ம‌க‌ன் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ த‌மிழை அவ‌ர்க‌ளால் ஒழுங்காய் வாசிக்க‌ தெரிய‌ல‌...................த‌மிழ் த‌மிழ் என்று க‌ருணாநிதி க‌த்தாதையா  சீமான் க‌த்தி விட்டார்................உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன் வெளி நாட்டில் ப‌டித்து விட்டு வ‌ந்தார் அவ‌ர்க‌ளை பார்த்து கேள்வி கேட்க்க‌ மாட்டிங்க‌ள் சீமான் சீமான் என்று  அவ‌ரை விர‌ல் நீட்டி கேள்வி கேட்ப்ப‌து அப‌த்த‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

நான் ஒரு முற்போக்கான தமிழ்தேசியவாதி.. தமிழ்தேசியம் என்பது உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழர்களையும் உள்ளடக்கியது.. திராவிடம் அப்படி அல்ல.. தமிழ்நாட்டுடன் முடங்கிவிடும்..  நான்  ஈழத்தில் ஒரு தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதி தன் பிள்ளையை ஆங்கில வழி அல்லது சிங்கள வழி கல்வியில் படிக்கவைத்தால் கண்டிப்பாக மிக உக்கிரமாக எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும்.. தமிழ் மொழிதான் தமிழ்தேசியத்தின் அடி அத்திவாரம்.. இருப்பு.. அதேபோல் தமிழ் தேசியம் என்று வரும்போது அதில் ஏதும் தவறு செய்யும்போது நாங்களும் சீமானின் தவறை தோழமையுடன் சுட்டிக்காட்ட உரிமை இருக்கு என்று நம்புகிறேன்.. கம்யூனிஸ்ட்டுக்கள் இன்னொரு நாட்டில் கம்யூனிஸ்ட்டுக்கள் அதன் சித்தாந்தத்தில் இருந்து விலகி நடந்தால் அது தவறு என்று தோழமையுடன் சுட்டிக்காட்ட முடியும்.. ஆனால் அதை சீமானை வீழ்த்த காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டு செயல்படுவது ஈழத்தமிழர் நமக்கு வேண்டாத வேலை.. திராவிடத்திற்கு  தோழமையுடன் கூட சுட்டிக்காட்ட முடியாது.. திராவிட சித்தாந்தத்திற்கும் ஈழத்தமிழருக்கும் கொள்கை அளவில் கூட எந்த சம்மந்தமும் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

நீங்க‌ள் யாழில் சீமானின் எச்சில‌ எடுத்து வ‌ந்து வைப்ப‌து தான் உங்க‌ட‌ ப‌ணி

அதே போல் சீமானின் எச்சிலையும் பன்னீர் தீர்த்தம் என முட்டு கொடுப்பதும், திமுகவின் எச்சிலை எடுத்து வைப்பதும் உங்கள் தொழில்.

உங்களை போன்றோர் இவ்வாறு நடந்து கொள்வதால் ஏதோ ஈழத்தமிழர் எல்லாரும் சீமான் ரசிகர் என்ற விம்பம் ஏற்படுகிறது.

அவ்வாறு இல்லை, ஈழத்தமிழர் ஒரு சாரார்தான் சீமான் ரசிகர்கள் என காட்ட எம் போன்றோர் குரல் ஓங்கி ஒலிப்பது காலத்தின் கட்டாயம்.

இது பெருமை அல்ல கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் ஒரு முற்போக்கான தமிழ்தேசியவாதி.. தமிழ்தேசியம் என்பது உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழர்களையும் உள்ளடக்கியது.. திராவிடம் அப்படி அல்ல.. தமிழ்நாட்டுடன் முடங்கிவிடும்..  நான்  ஈழத்தில் ஒரு தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதி தன் பிள்ளையை ஆங்கில வழி அல்லது சிங்கள வழி கல்வியில் படிக்கவைத்தால் கண்டிப்பாக மிக உக்கிரமாக எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும்.. தமிழ் மொழிதான் தமிழ்தேசியத்தின் அடி அத்திவாரம்.. இருப்பு.. அதேபோல் தமிழ் தேசியம் என்று வரும்போது அதில் ஏதும் தவறு செய்யும்போது நாங்களும் சீமானின் தவறை தோழமையுடன் சுட்டிக்காட்ட உரிமை இருக்கு என்று நம்புகிறேன்.. கம்யூனிஸ்ட்டுக்கள் இன்னொரு நாட்டில் கம்யூனிஸ்ட்டுக்கள் அதன் சித்தாந்தத்தில் இருந்து விலகி நடந்தால் அது தவறு என்று தோழமையுடன் சுட்டிக்காட்ட முடியும்.. ஆனால் அதை சீமானை வீழ்த்த காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டு செயல்படுவது ஈழத்தமிழர் நமக்கு வேண்டாத வேலை.. திராவிடத்திற்கு  தோழமையுடன் கூட சுட்டிக்காட்ட முடியாது.. திராவிட சித்தாந்தத்திற்கும் ஈழத்தமிழருக்கும் கொள்கை அளவில் கூட எந்த சம்மந்தமும் இல்லை..

சீமான் எதையும் ஒளிவும‌றைவு இல்லாம‌ சொல்லுகிறார்..............
திராவிட‌ ஆட்சியாள‌ர்க‌ள் உண்மையை சொல்லுவின‌மா.................
அன்மையில் கூட‌ உத‌ய‌நிதி எழுதிவைச்சு சொல்லுகிறார் த‌மிழுக்காக‌ உயிரையும் கொடுப்போம் என்று அதில் அவ‌ர் சொல்லும் போது ச‌ரியான‌ ப‌த‌ட்ட‌ம்............உத‌ய‌நிதின்ட‌ பேச்சை தான் காமெடியா பார்க்கின‌ம்.......................

ம‌க்க‌ளை ஏமாற்ற‌ இவ‌ர்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை நீட்ட‌ ர‌த்து செய்ய‌ த‌ங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொன்னார்க‌ள் நீட்ட‌ ந‌ம்பி ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளுக்கு வாய்க்கை அரிசு போட்ட‌ உத‌ய‌ நிதி

உண்மையில் இந்த‌ திரிக்குள் தொட‌ர்ந்து எழுத‌ மென்ட‌ல் ஆக்கி விடும் இத்தோடு இந்த‌ திரிக்குள் இனி எழுத‌ போவ‌து கிடையாது

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் ஓணாண்டி

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அவர்களின் அந்த வகை கருத்துக்களை நான் வரவேற்றதும் இல்லை என்பதையும் உணருங்கள்.

ஆனால் ஈழத் தமிழ் இனத்துக்காக பலதை இழந்த தமிழ்நாட்டு தலைவர்கள், உறவுகள், படுக்கையில் உச்சா போகும் வயதில் ஐரோப்பா ஓடி வந்த இணைய போராளிகளால் கொச்சைபடுத்தப்பட்ட போது, நன்றியுணர்ச்சி சிறிதும் இன்றி கள்ள மெளனம் காத்தீர்கள் இல்லையா அன்ணை.

வரவேற்கவில்லை என நழுவ வேண்டாம். நீங்கள் கண்டிக்கவில்லை.

சீமானின் ஏவல் பேய்களை அவர் எமக்கு உதவியோர் மீது ஏவி விட்டதை கண்டிக்ககாமல் கள்ள மெளனம் காத்தது ஒருவகை துரோகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு பலவற்றில் ஒத்துப்போகும் நான்....

சீமான் விடயத்தில் (பர்னிச்சர் உடைக்கும்போது) நான் நாம் தமிழர் கட்சியில் கணக்கில் எடுக்கும் சிலவற்றை  சில நல்லவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று உங்கள் முன் வைக்கிறேன். 

1- தமிழ் மொழி சார்ந்த அவர்களது முன் மொழிவுகள் மற்றும் அடுத்த சந்ததிக்கு கடத்தல் (இதில் சீமான் கூட கருத்தில் இல்லை). ஆனால் விதை போடப்பட்டு விட்டது.

2- பெருவாரியான அடுத்த தலைமுறை (படித்த) இளைஞர்களின் கூட்டு

3- சம பங்கு பெறும் பெண்கள்

4- பணம் மற்றும் வசதிகள் செய்து ஓட்டு வாங்காமை கூட்டத்திற்கு ஆட்கள் சேராமை

5- விழாக்கள் மற்றும் பேரணிகளில் நன்னடத்தை மற்றும் ஒழுங்கு,.

6- முடிந்தவரை தமிழர்கள் சார்ந்த சிந்தனை உடையோர்களுடன் பகை தவிர்ப்பு. (திருமால் வளவன், வைகோ, ராமதாஸ் அன்புமணி, விஜயகாந்த்....…)

நன்றி 

இவற்றை நான் முன்பு எழுதியும், வரவேற்றும் உள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இங்கே ஒரு சிலர், சீமான் காலையில் சந்தனமாக போகிறார் தெரியுமா? என்ற ரீதியில் எழுதுவதோடு மட்டும் அல்லாமல், அதை தாம் எடுத்து நெற்றியில் தீட்டி கொண்டு, நீங்களும் தீட்டுங்கள் இல்லை என்றால் நீங்கள் 200 ரூபாய் ஊபி என எழுதும் போது….

திமுக/விசிக/மதிமுக/பாமக/திக/நெடுமாறன்/ஏனையோர் என அனைவரையும் சீமானை விட மோசமாக வசைபாடும் போது…

நானும் (உம் விகுதியை கவனிக்க) சீமானின் புகழை பாட வேண்டிய தேவை இல்லை.

ஆனால் பர்னிச்சரை உடைக்க வேண்டிய கடமை உள்ளது (விளக்கம் மேலே).

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

அதே போல் சீமானின் எச்சிலையும் பன்னீர் தீர்த்தம் என முட்டு கொடுப்பதும், திமுகவின் எச்சிலை எடுத்து வைப்பதும் உங்கள் தொழில்.

உங்களை போன்றோர் இவ்வாறு நடந்து கொள்வதால் ஏதோ ஈழத்தமிழர் எல்லாரும் சீமான் ரசிகர் என்ற விம்பம் ஏற்படுகிறது.

அவ்வாறு இல்லை, ஈழத்தமிழர் ஒரு சாரார்தான் சீமான் ரசிகர்கள் என காட்ட எம் போன்றோர் குரல் ஓங்கி ஒலிப்பது காலத்தின் கட்டாயம்.

இது பெருமை அல்ல கடமை.

உங்க‌ளுக்கு சீமானை பிடிக்காட்டி ஒதுங்கி இருங்கோ நீங்க‌ள் ஆதார‌ம் இல்லா பொய் குற்ற‌ச்சாட்டு வைக்கும் போது உங்க‌ளை மாதிரி குழ‌ப்ப‌ வாதிக‌ளுக்கு த‌குந்த‌ ப‌தில் அளிப்ப‌தே என் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை 

200ரூபாய்க்கு நாம் த‌மிழ‌ர் ஜ‌ரிம் இய‌ங்க‌ வில்லை இன‌ உண‌ர்வு கொண்டு உல‌க‌ம் பூரா இய‌ங்குது................65வ‌ருட‌ திமுக்கா 200ரூபாய் கொடுத்து தான் புக‌ழ் தேட‌னும் என்றால் அவ‌ர்க‌ளின் நிலை எவ‌ள‌வு கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் விட்ட‌து

சீமான்ட‌ சொத்து ம‌திப்பை ப‌ற்றி எழுதி இருந்தீங்க‌ள் ஆதார‌த்தை கேட்டால் ப‌தில் வ‌ராது.............ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ருக்கு க‌ல‌ங்க‌ம் விளைவிப்ப‌தும் ஒரு வ‌கை ம‌ன‌ நோய் தான்..........................

நான் எழுதின‌தை விடுங்கோ முடிந்தால் புல‌வ‌ர் அண்ணா எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ

யாழில் இருந்து சிறு ஓய்வு தேவை ப‌டுது என‌க்கு

நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்கோ ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.......................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான்  ஈழத்தில் ஒரு தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதி தன் பிள்ளையை ஆங்கில வழி அல்லது சிங்கள வழி கல்வியில் படிக்கவைத்தால் கண்டிப்பாக மிக உக்கிரமாக எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும்.. தமிழ் மொழிதான் தமிழ்தேசியத்தின் அடி அத்திவாரம்.. இருப்பு..

அதே.

ஈழ அரசியல்வாதி என்றால் இடித்துரைப்பீர்கள்.

தமிழக அரசியல்வாதி என்றால் முட்டு கொடுப்பீர்களா?

சீமானின் இந்த கோக்குமாக்கை, அவரின் ஆதரவாளர்கள்தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும்.

37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதேபோல் தமிழ் தேசியம் என்று வரும்போது அதில் ஏதும் தவறு செய்யும்போது நாங்களும் சீமானின் தவறை தோழமையுடன் சுட்டிக்காட்ட உரிமை இருக்கு என்று நம்புகிறேன்..

நம்புங்கள்.  நாம் தமிழர் நிறுவன உறுப்பினர் முதல்….ஐயநாதன் வரை சீமானிடம் தோழமையுடன் சுட்டி காட்டி…கட்சியில் இருந்து துரத்தப்பட்டோர் லிஸ்ட் ரொம்ப நீளம்.

கட்சி நிர்வாகிகைய…போடா ங்….என போனில் வசைபாடிய, பொட்டம்மான் என் ம** என சொல்லிய சீமான் உங்கள் தோழமை சுட்டலை….சும்மா சிரிப்பு காட்ட வேணாம் ஓணாண்டி.

6 minutes ago, பையன்26 said:

யாழில் இருந்து சிறு ஓய்வு தேவை ப‌டுது என‌க்கு

நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்கோ ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.........

சந்திப்போம்🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அதே.

ஈழ அரசியல்வாதி என்றால் இடித்துரைப்பீர்கள்.

தமிழக அரசியல்வாதி என்றால் முட்டு கொடுப்பீர்களா?

சீமானின் இந்த கோக்குமாக்கை, அவரின் ஆதரவாளர்கள்தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்..

இப்படி தவக்கை கத்தி சாவது விஞ்ஞான ரீதியில் உண்மையா?

@Justin அண்ணா விளக்கவும்.  

என்ன செய்வது, சீமானியர்கள் தவக்கை, ஆமை என ஆரம்பித்தாலே சந்தேகத்துடந்தான் அணுக வேண்டியுள்ளது🤣.

நிற்க யாழில் கத்தும் தவளைகளால் மட்டும் அல்ல, 20 வருடமாக கத்தியிம் மைக் தவளையாலும் ஊரை ஏமாற்ற முடியவில்லை என்பதை காண்க. இனியும் கஸ்டம்தான்.

தமிழ்நாட்டு மக்கள் படிப்பாளிகள், அறிவாளிகள் இல்லை, ஆனால் புத்திசாலிகள்.

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பின்னர் ஏன் இதே போல் இடித்துரைக்கும் ஏனையோரை காழ்புணர்சியால் கத்தும் தவளைகள் என்கிறீர்கள்?

நீங்கள் கண்டித்தால் நற்புணர்ச்சி, ஏனையோர் கண்டித்தால் காழ்புணர்ச்சி ?🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

நம்புங்கள்.  நாம் தமிழர் நிறுவன உறுப்பினர் முதல்….ஐயநாதன் வரை சீமானிடம் தோழமையுடன் சுட்டி காட்டி…கட்சியில் இருந்து துரத்தப்பட்டோர் லிஸ்ட் ரொம்ப நீளம்.

கட்சி நிர்வாகிகைய…போடா ங்….என போனில் வசைபாடிய, பொட்டம்மான் என் ம** என சொல்லிய சீமான் உங்கள் தோழமை சுட்டலை….சும்மா சிரிப்பு காட்ட வேணாம் ஓணாண்டி.

அது அவர்கள் உள்வீட்டு பிரச்சினை.. அதில் நாங்கள் தலையிடாமல் இருப்பதுதான் நாங்கள் அசிங்கப்படாமல் இருக்க உதவும்.. ஒரு தமிழ்தேசியவாதியாக சீமான் தமிழ்தேசியம் சார்ந்து மட்டும் ஏதாவது தவறு செய்யும்போது அதை தோழமையுடன் சுட்டிக்காட்டுவதனுடன் முடிந்துவிடுகிறது நம் எல்லை.. அதை அவர்கள் எடுத்து திருத்திக்கொண்டால் அவர்களுக்குத்தன் நல்லது.. இல்லை நான் நாசமாப்போவன் எண்டாலும் அது அவர்களுக்குத்தான்.. இங்கு பலரைப்போல் அடுத்தவன் கொல்லைக்குள் உள்ள குதிச்சு ஊளை இட்டுக்கொண்டிருந்தால் இழப்பும் அசிங்கமும் நமக்குத்தான்..

20 minutes ago, goshan_che said:

பின்னர் ஏன் இதே போல் இடித்துரைக்கும் ஏனையோரை காழ்புணர்சியால் கத்தும் தவளைகள் என்கிறீர்கள்?

நீங்கள் கண்டித்தால் நற்புணர்ச்சி, ஏனையோர் கண்டித்தால் காழ்புணர்ச்சி ?🤣

உங்களுக்கு சுட்டுப்போட்டுதாக்கும்..😂 நீங்கள் இடித்துரைத்தால் மூடிட்டு கம்முன்னு இருப்பீர்கள்.. இல்லை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதினால் இப்பிடித்தான் குய்யோ முறையோ எண்டு கூப்பாடு போடுவீர்கள்..😂  தீதும் நன்றும் பிறர் தர வாரா..😂 நான் உங்கள் தலையில் தொப்பியை போடவில்லை.. நீங்களாக போட்டுக்கொண்டு ஒற்றைக்காலில் நிண்டு ஜயோ தவளை தவளை எண்டு கத்துறியள்..😂 உதுக்கு நான் என்ன செய்ய..😂

சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிளிஞ்சிருச்சு இத எங்க முறையிடலாம்..😂😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது அவர்கள் உள்வீட்டு பிரச்சினை.. அதில் நாங்கள் தலையிடாமல் இருப்பதுதான் நாங்கள் அசிங்கப்படாமல் இருக்க உதவும்.. ஒரு தமிழ்தேசியவாதியாக சீமான் தமிழ்தேசியம் சார்ந்து மட்டும் ஏதாவது தவறு செய்யும்போது அதை தோழமையுடன் சுட்டிக்காட்டுவதனுடன் முடிந்துவிடுகிறது நம் எல்லை.. அதை அவர்கள் எடுத்து திருத்திக்கொண்டால் அவர்களுக்குத்தன் நல்லது.. இல்லை நான் நாசமாப்போவன் எண்டாலும் அது அவர்களுக்குத்தான்.. இங்கு பலரைப்போல் அடுத்தவன் கொல்லைக்குள் உள்ள குதிச்சு ஊளை இட்டுக்கொண்டிருந்தால் இழப்பும் அசிங்கமும் நமக்குத்தான்..

உங்களுக்கு சுட்டுப்போட்டுதாக்கும்..😂 நீங்கள் இடித்துரைத்தால் மூடிட்டு கம்முன்னு இருப்பீர்கள்.. இல்லை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதினால் இப்பிடித்தான் குய்யோ முறையோ எண்டு கூப்பாடு போடுவீர்கள்..😂  தீதும் நன்றும் பிறர் தர வாரா..😂 நான் உங்கள் தலையில் தொப்பியை போடவில்லை.. நீங்களாக போட்டுக்கொண்டு ஒற்றைக்காலில் நிண்டு ஜயோ தவளை தவளை எண்டு கத்துறியள்..😂 உதுக்கு நான் என்ன செய்ய..😂

சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிளிஞ்சிருச்சு இத எங்க முறையிடலாம்..😂😂😂

அட எப்ப சுட்டுச்சு, இப்ப சுட 🤣.

ஆனால் உங்கள் கட்சி சாராமை கருத்துடன் எனக்கும் 100% உடன்பாடே.

யாழில் இதை வலியுறுத்தி எழுதிய முதல் ஆளும் நானே.

ஆனால் சந்தண வியாபாரம் ஓவராகியதால் எதிர்வினையாற்ற வேண்டிய நிர்பந்தம்.

பார்க்கலாம், தேர்தல் மட்டுமாவது வகை வகையாக செய்யும் நாதக நூதன பிரச்சாரத்தை கைவிட்ட்டால் - எனக்கும் பர்னிச்சர் உடைக்கும் வேலை மிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்,தமிழினம்,சுற்றம் சூழல், என் நிலம் ; என் மக்கள் என போராடுபவர்களுக்கும் ஒரு முறை ஆட்சி கதிரையை கொடுத்து பார்க்கலாம் என்பது என் கருத்து. 

இது விஜயகாந்த் இறந்த பின் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த நற்சான்றிழை வைத்து சொல்கிறேன். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை ஆட்சியில் அமர வைத்து விட்டு சரி பிழை ஏதாவது சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இது விஜயகாந்த் இறந்த பின் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த நற்சான்றிழை வைத்து சொல்கிறேன். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை ஆட்சியில் அமர வைத்து விட்டு சரி பிழை ஏதாவது சொல்லியிருக்கலாம்

அவர் உயிருடன் இருந்த போது….

அவர் தெலுங்கர்…

வீட்டில் தெலுங்கு பேசுபவர்….

”விஜயகாந்துக்கு எல்லாம் தமிழனை ஆளும் ஆசை வந்துவிட்டது எளிய தமிழ் பிள்ளைகளுக்கு கேவலம்”

இப்படி அல்லவா ஓட்டி கொண்டு இருந்தார்கள்?

தட் நாறவாய், வேற வாய் மொமெண்ட்👇

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈழத்தமிழர் நமக்கு வேண்டாத வேலை.. திராவிடத்திற்கு  தோழமையுடன் கூட சுட்டிக்காட்ட முடியாது.. திராவிட சித்தாந்தத்திற்கும் ஈழத்தமிழருக்கும் கொள்கை அளவில் கூட எந்த சம்மந்தமும் இல்லை

திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது. பேதமற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவது. அதை நோக்கிய படிக்கட்டுகளை கட்டி எழுப்புவது. பெரியாரின் பல தசாப்ச போராட்டம் மனிதர்களுக்கு இடையிலான பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகும்.  அதற்காகவே தேர்தல் அரசியலில் பங்கேற்காது தனது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.  அது தமிழ் நாட்டில் முழுமை பெற்று விட்டதா என்றால் நிச்சயமாக  இல்லை இன்னும் முன்னேற பல விடயங்கள் உள்ளது  என்பதே பதில். பத்தாம்பசலித்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னும் பல மாற்றங்களை அது உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்றால் ஆம் என்று கூறலாம்.

 தமிழ் நாட்டில் தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் அடிபடையற்ற போலி  அறிவியலை முன்னிறுத்தும் காணொளிகளை உருவாக்கி அதை பரப்பிவருவதை நீங்கள் அவதானிக்கவில்லையா?

தமிழ் தேசியம் உலகளாகிய ரீதியில் வலுப்பெற வேண்டுமானால் அறிவியல் ரீதியில் அது பலம் பெற வேண்டும்.  அப்போது தான் உலகில் மற்றய இனங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்த இனமாக எமது சந்ததி வாழமுடியும். இன்று தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோர் செய்துவரும் போலி அறிவியலை ஊக்குவித்தல்,  பத்தாம்பசலித்தனம், விட்டுத்தொலைக்கவேண்டிய மூடப்பழக்கங்களுக்கு அறிவியல் முட்டுக்கொடுத்து அதை பரப்புவது, வெறுமனே உசுப்பேற்றுவது ஆகியவை தமிழருக்கு பெருமை தரும் விடயங்கள் அல்ல.   

ஈழத்தில் சமூகநீதி ஏற்கனவே நிலைநாட்டப்பட்டு சாதி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் கட்டப்பட்டு விட்டதென்றால் நீங்கள் கூறும் திராவிட சித்தாந்தம் தேவையில்லை என்று கூறலாம்.  அந்த பெயரில் அது  தேவையில்லை என்று நீங்கள் கூறலாமேயொழிய  அதையொட்டிய சித்தாந்தம் ஈழத்துக்கு தேவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்களே ஈழத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக கண்டித்து சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்திய முற்போக்கு கருத்தாளராக உள்ளீர்கள். உங்கள் பல கருத்துக்கள் அவ்வாறு முற்போக்காக  இருந்ததை அவதானித்துள்ளேன். 

 ஈழத்துக்கு திராவிட சித்தாந்தத்தை ஒட்டிய சமூக நீதி சித்தாந்தம் தேவையில்லை என்று கூறுபவர் யாழ்பாண மேற்தட்டு ஆதிக்க சாதி கோட்பாடுகள் தொடரவேண்டும் என்று கருதும் ஒருவராகவே இருக்க முடியும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஆனால் ஈழத் தமிழ் இனத்துக்காக பலதை இழந்த தமிழ்நாட்டு தலைவர்கள், உறவுகள், படுக்கையில் உச்சா போகும் வயதில் ஐரோப்பா ஓடி வந்த இணைய போராளிகளால் கொச்சைபடுத்தப்பட்ட போது, நன்றியுணர்ச்சி சிறிதும் இன்றி கள்ள மெளனம் காத்தீர்கள் இல்லையா அன்ணை.

வரவேற்கவில்லை என நழுவ வேண்டாம். நீங்கள் கண்டிக்கவில்லை.

சீமானின் ஏவல் பேய்களை அவர் எமக்கு உதவியோர் மீது ஏவி விட்டதை கண்டிக்ககாமல் கள்ள மெளனம் காத்தது ஒருவகை துரோகம்தான்.

நான் வாசிக்காத வாசிக்க விரும்பாத கருத்துக்கு நான் எப்படி பொறுப்பு சகோ?? யானை வழி விடுவதால் அதற்கு பயம் என்பது போல இருக்கிறது உங்கள் பார்வை. நமக்கெல்லாம் ஒரு சூடு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன் வெளி நாட்டில் ப‌டித்து விட்டு வ‌ந்தார் அவ‌ர்க‌ளை பார்த்து கேள்வி கேட்க்க‌ மாட்டிங்க‌ள் சீமான் சீமான் என்று  அவ‌ரை விர‌ல் நீட்டி கேள்வி கேட்ப்ப‌து அப‌த்த‌ம்.......................

இங்கே சீமான் ஆதரவாளர்கள் அவர் தவறை கண்டிக்கவில்லை பாலபத்ர ஓணாண்டியை தவிர. மற்றவர் சிலர் அந்த தவறை சீமனுக்காக நியாயபடுத்துகிறார்கள்.சீமான் ஆதரவாளர் ஒருவர்  சீமானை நியாயபடுத்துவதற்காக வெளிநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் ஆங்கில மொழி மூலம் தானே கல்வி கற்கின்றார்கள் என்கிறார். யாழ்களத்து சீமான் ஆதரவாளர்கள் அப்படி நடந்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுமே சுத்துமாத்துக்கள் என்றுவிட்டு உறவுகள் கடந்திருப்பார்கள். சீமான் நோக்கி விர‌ல் நீட்டி கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். தமிம்நாட்டு மீனவர்கள் களவு எடுக்க இலங்கை வந்து இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர்.ஆனால்  அந்த பிரச்சனையை கச்சத்தீவு மீட்பு என்று தமிழ்நாட்டில் பெரிய கட்சி சின்ன கட்சி எல்லாம்  இப்போது அங்கே உள்ள மக்களை ஏமற்றி அரசியல் செய்வதை பார்க்கின்றோமே.அது மாதிரியே ஆங்கில மோகத்தால் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கின்றார்கள் தமிழ் தமிழ் என்று மக்களை அங்கே எல்லோரும் ஏமாற்றுகின்றனர் என்று நினைத்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

Solid shot.

இங்கே எல்லாருக்கும் தமிழக அரசியல்வாதிகள் எல்லாரும் பொய்யர்கள், சந்தர்பவாதிகள், ஊழல்வாதிகள் என்பது தெரியும். 

ஆகவே அதை பற்றி அலட்டி கொள்ள தேவை இல்லை. அது அவர்கள் விடயம், நாம் விலகி நின்று எல்லாருடனும் சம தூரத்தில் நின்று பழகலாம்.

புலிகள் அப்படித்தான் பழகினார்கள்.

ஆனால் @பாலபத்ர ஓணாண்டி போன்றவர்களே…சும்மா வாய்ப்பேச்சுக்கு “தலையிடாமை” பற்றி கதைத்தாலும், மிச்சம் எல்லாரும் கள்ளன், சீமான் மட்டுமே சொக்கத்தங்கம் என்ற ரீதியில்தான் எழுதுகிறார்கள்.

உதாரணமாக பொம்பிளை விசயத்தில் சகல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் மோசம் என நாம் கூறிய போது, விஜி அண்ணி விடயத்தில் ஓணாண்டி எட்டாக வளைந்து சீமானுக்கு முட்டுக்கொடுத்தார்.

இப்படியாக சீமான் ஏனையோரை விட திறம் என நிறுவ, பிரச்சாரம் செய்ய விழையும் போதுதான், அவரும் இன்னொரு தமிழக அரசியல் கழிசடைதான் என்பதை உரக்க சொல்ல வேண்டியதாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர்   ஐ  கருணாநிதி கட்சியிலிருந்து  தூக்கி வெளியில் எறிந்தார்.  எம் ஜி ஆர் புதிய கட்சி தொடங்கி  தேர்தலில் போட்டி இட்டார்  எந்த இலங்கை தமிழனவாது ஆதரித்ததுண்டா ?? இல்லையே?   கருணாநிதியை  ஆட்சியிலிருந்து  தூக்கி வெளியில் எறிந்தார் ....தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் உயிர் உள்ள வரை  வெற்றியீட்டினார். முதல்வரானார்  ஒரு சிறந்த தலைவனுக்கு  மக்கள் ஆதரவு அவனை தேடி போகும்…   அவன் மக்களை தேடி போக வேண்டிய தேவை இருக்காது 

இதே தமிழ்நாட்டு மக்கள் கமலுக்கு சீமானுக்கு  .......போன்ற ஏனையோருக்கும்.  623 இலட்சம் வாக்காளர்களில்    வெறும்  20,..30,...  40,     .... இலட்சம் வாக்குகளையே போடுகிறார்கள்  தமிழ்நாட்டு மக்களே  கடந்த பல வருடங்களாக தீர்ப்பு சொல்லும் போது  .  .......இதில் நாங்கள் என்ன சொல்ல உண்டு” ??  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தகவலுக்காக
எனது நண்பர் ஒருவர் சியரா லியோன் Sierra Leone  என்ற ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்றிருந்ததை சொல்லியிருந்தார். அங்கே ஆங்கிலம் தான் அரச மொழி. அவர்களுக்கு  சொந்த மொழி இருந்தது பின்பு கைவிடபட்டதாம். எல்லோரும் ஆங்கிலம் தான் பேசுவார்களாம்  விளங்கி கொள்வது கஷ்டமாக இருக்குமாம்😂

இலங்கையில் தமிழ் இருக்கும் 👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.