Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

சீமானின் இரு பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்பதாக ஒரு தகவல் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளது.

என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-reveals-his-sons-studied-in-english-medium-schools-594131.html

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது.

அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள்.

திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன்.

மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.

8 minutes ago, valavan said:

என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-reveals-his-sons-studied-in-english-medium-schools-594131.html

சின்னக் கருணாநிதி.

#அன்றே #சொன்னார் #கோஷான்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.

நித‌ர்ச‌ன் உண்மை..............

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.

இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.

சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.

தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.

ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.

அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,

எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான்.

மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே 

அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?

சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?

யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.

உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, 

நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.

இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣.

பயிற்று மொழிதொகு

அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன.

https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி

சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே?

நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம்.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா?
மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா?
இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?
 
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது.

அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள்.

திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன்.

மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.

சின்னக் கருணாநிதி.

#அன்றே #சொன்னார் #கோஷான்

அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................

வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து..................

ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும்.

சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர்.

ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல.

அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.

 தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.

 குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது.

அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும்.

கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள்.

#சின்ன கருணாநிதி

44 minutes ago, nunavilan said:

கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா?

இருக்கு.

பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை.

45 minutes ago, nunavilan said:

மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா?

பொருந்தும். அச்சொட்டாக.

45 minutes ago, nunavilan said:

இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?

ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே.

ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

இப்போ நான் கேட்கும் கேள்வி….

கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா?

# சின்ன கருணாநிதி

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும்.

சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர்.

ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல.

அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.

 தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.

 குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது.

அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும்.

கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள்.

#சின்ன கருணாநிதி

ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................

1 hour ago, nunavilan said:

என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.

என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 

இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 

தமிழகத்தில் அரசபாடசாலைகளில் தமிழில்தான் கற்பிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................

சீமானுக்கு ஒரு மகந்தான். அந்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களுக்குள் சீமானிடம் வந்த, மனைவி வழி உறவினர் பிள்ளை. அவர் தமிழ் கதைப்பது சீமானால் அல்ல.

ஆனால் அதுவல்ல பொயிண்ட். கீழே நிழலி எழுதியதை பாருங்கள், தமிழ்நாட்டில் திறமான தமிழ் வழி கல்வி இருக்கிறது.

இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது- அவரின் வழமையான கோக்கு மாக்கு சுய நல அரசியலே.

17 minutes ago, goshan_che said:

ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே.

# சின்ன கருணாநிதி

இதே போல், இந்தி எதிர்ப்பு என்று முழங்கி விட்டு, கருணா நிதி குடும்பம்/ உறவுகள் நடாத்தும் கல்லூரிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 

இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.

இருவருக்கும் நன்றி.

கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள்.

நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.

5 minutes ago, கந்தப்பு said:

தமிழகத்தில் அரசபாடசாலைகளில் தமிழில்தான் கற்பிக்கிறார்கள். 

2 minutes ago, நிழலி said:

இதே போல், இந்தி எதிர்ப்பு என்று முழங்கி விட்டு, கருணா நிதி குடும்பம்/ உறவுகள் நடாத்தும் கல்லூரிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

ஓம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.

இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.

சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.

தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.

ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.

அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,

எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான்.

மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே 

அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?

சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?

யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.

உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, 

நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?

உண்மையான யதார்த்தத்தை எழுதியதுக்கு நன்றி .

இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது.

சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது.

இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது.

ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.

இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.

சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.

தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.

ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.

அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,

எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான்.

மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே 

அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?

சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?

யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.

உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, 

நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?

மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு. 

மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத 

போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத 

போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா 

சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 

இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.

அவரின் பிள்ளைகள் வீட்டில் தமிழ் கற்கிறார்கள் என்று கூறி உள்ளார். ஆகவே தமிழ் படிக்கவில்லை என்ற கூற்று அடிபட்டு போகிறது. ஏனைய மொழிகளை விருப்பின் அடிப்படையில் கற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

கந்தப்பு உங்கள் கணிப்பு அருமை ...மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி  

எப்படி  சுகமாக இருக்கிறீர்களா?? 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

அவரின் பிள்ளைகள் வீட்டில் தமிழ் கற்கிறார்கள் என்று கூறி உள்ளார். ஆகவே தமிழ் படிக்கவில்லை என்ற கூற்று அடிபட்டு போகிறது. ஏனைய மொழிகளை விருப்பின் அடிப்படையில் கற்கலாம்.

 இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான்.

தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு….

ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

அவரின் பிள்ளைகள் வீட்டில் தமிழ் கற்கிறார்கள் என்று கூறி உள்ளார். ஆகவே தமிழ் படிக்கவில்லை என்ற கூற்று அடிபட்டு போகிறது. ஏனைய மொழிகளை விருப்பின் அடிப்படையில் கற்கலாம்.

ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.

இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.

சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.

தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.

ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.

அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,

எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான்.

மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே 

அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?

சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?

யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.

உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, 

நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?

நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார்

இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால்

க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁

அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ஏவிம் மிசின் இருக்கும் வ‌ரை மோடி தான் இந்தியாவின் நிர‌ந்த‌ர‌ பிர‌த‌ம‌ர்....................

ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.