Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN   06 MAR, 2024 | 02:46 PM

image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gota_books.jpg

ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178075

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

IMG-5991.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பக்கத்தில்.. கோவணத்துடன் ஓடிய கோத்தாவை போட்டிருந்தால்.. நூல் இன்னும் அமோகமாக ஓட வாய்ப்பிருக்கு.

மேலும்.. வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல.. அனுராதபுரம் போய் சத்தியப்பிரமானம் எடுத்ததே பிழை. அது தமிழர் தலைநகரம். புத்தருக்கே பிடிக்கல்ல. 

அதுபோக.. நாம ஓடுவது முதல் தடவை அல்லவே. மண்டைதீவில் வைச்சும் ஓடினது தானே. அந்த வகையில் விற்பனையும் வருமானமும் தான் முக்கியம். 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

இவரால் நம்பிக்கை நாயகனாக முப்படைக்கும் தலைவனாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வாவே முப்படைகளையும் முடக்கி தலைவன் தப்பி ஓடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

இப்படியும் ஒரு விசுவாசியா?

Posted

நன்றாக ஆட்சி செய்தது சிங்கள மக்களுக்கும் மேற்குக்கும்  பிடிக்கவில்லை போல.🙂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டங்களை எந்த தலையீடு இன்றி உங்களால் அழிக்க முடிந்தது  கோத்தபாய....?

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கின்றோம் என்று சொல்லித்தானே விடுதலைப்புலிகளை அழிக்க இடம் கொடுத்தீர்கள்? 

அதுவும்   சர்வதேச வல்லமையின் உதவியோடு  நீங்களும் சேர்ந்து   அழித்தீர்கள்.

ஆனால் இன்று?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

இவரால் நம்பிக்கை நாயகனாக முப்படைக்கும் தலைவனாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வாவே முப்படைகளையும் முடக்கி தலைவன் தப்பி ஓடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

இப்படியும் ஒரு விசுவாசியா?

அமேரிக்கா சில்வாவின் கோவணத்தை கழற்றி போடுவினம் என்ற பயம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, putthan said:

அமேரிக்கா சில்வாவின் கோவணத்தை கழற்றி போடுவினம் என்ற பயம்...

கோவணம் போனாலும் தலைவனை காப்பாற்ற வேண்டுமல்லவா?

அவனல்லவா வீரன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டங்களை எந்த தலையீடு இன்றி உங்களால் அழிக்க முடிந்தது  கோத்தபாய....?

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கின்றோம் என்று சொல்லித்தானே விடுதலைப்புலிகளை அழிக்க இடம் கொடுத்தீர்கள்? 

அதுவும்   சர்வதேச வல்லமையின் உதவியோடு  நீங்களும் சேர்ந்து   அழித்தீர்கள்.

ஆனால் இன்று?

 

சதி நடந்த விடயம் சகலருக்கும் தெரிந்த விடயம் ...இதில இவர் புத்தகம் அடிச்சு மக்களுக்கு தெளிவு படுத்துறாராம்...
சர்வ வல்லமை படைத்த உங்களுடைய புலனாய்வு  துறை அதை தடுக்க முடியவில்லை ...இதில புத்தகம் ஒரு கேடு ....

தனி மனிதனாக ஓர் இராச்சியத்தை நடத்தியவருடன் உங்களை ஒப்பிட்டால் நீங்கள் சீரோ...

 

அதாவது தமிழர்கள் உரிமை கேட்க தொடங்கிய பின்பு தான் பிரச்சனை என சொல்ல வாரார் போல ....70 களில் ஜெ.வி.பி யை நாட்டினுள் கிளர்ச்சி செய்ய தூண்டியது எந்த நாடு? அதற்கு முதல் இராணுவ புரட்சியை செய்ய தூண்டியது எந்த நாடு....
ஒழுங்காக ஒர் குட்டி தீவை நடத்த் முடியவில்லை இதில அர‌சியல் பாடம்...

13 hours ago, ஏராளன் said:

இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

கோவணம் போனாலும் தலைவனை காப்பாற்ற வேண்டுமல்லவா?

அவனல்லவா வீரன்.

சம்பளத்துக்கு வேலை செய்பவன்...மகள் பாட்டு பாடி புகழ் பெற வேணும் என்ற ஆசை உடையவன்....தன்ட தலைவனை காப்பாற்றுவானா?

5 hours ago, nunavilan said:

நன்றாக ஆட்சி செய்தது சிங்கள மக்களுக்கும் மேற்குக்கும்  பிடிக்கவில்லை போல.🙂

ஆனால் சீனாவுக்கு பிடிச்சிருக்கே😃

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

ஆனால் சீனாவுக்கு பிடிச்சிருக்கே😃

இல்லையே இந்தியா தானே வெடி குண்டெல்லாம் வைத்து பெரும் ஆதரவைத் திரட்டி இவர்களை கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே இந்தியா தானே வெடி குண்டெல்லாம் வைத்து பெரும் ஆதரவைத் திரட்டி இவர்களை கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்.

அப்படி நினைத்து தான் கொண்டு வந்தவையள் ...ஆனால் இவையள் இந்தியாவுக்கு ஆப்பு வைத்து விட்டினம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோத்தாவின் புத்தகத்துக்கு எகிறிய கிராக்கி!

441397231.jpg
 

(புதியவன்)

முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “என்னை அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (07) முற்றாக விற்று தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்தார்.

சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து புத்தகத்தை வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் பிரதான விற்பனையாளர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்ய இன்று (08) கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

“புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது” என்றும் தெரிவித்திருந்தார். (ஏ)

 

https://newuthayan.com/article/கோத்தாவின்_புத்தகத்துக்கு_எகிறிய_கிராக்கி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது : ”ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி” நூலில் கோட்டா தெரிவிப்பு

gota.jpg

வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட தனது நூலில் தெரிவித்துள்ளார்.

”ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி” என்ற பெயரிலான இந்த நூல் நேற்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் இராஜினாமா செய்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் பதவி விலகக்கூடாது என வலியுறுத்திய பிரதான சர்வதேச வல்லரசு ஒன்றும் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த சர்வதேச வல்லரசு இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராகி இருந்ததை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையிலும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக தாம் பதவி விலகியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

”ஒரு சில வல்லரசு நாடுகள் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சியின் காவல் தெய்வங்களை போன்று உலக அரங்கில் தம்மை காண்பிக்கின்றன. ஜனநாயகம், சட்டவாட்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் சம்பளம் பெறும் செயற்பாட்டாளர்கள் வலையமைப்பொன்றை அந்த நாடுகள் பராமரிக்கின்றன. உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பதிலாக தமது தேவைகளையே நிறைவேற்றிக்கொள்கின்றனர்” என அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள் சிலவற்றையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நூலில் எழுதியுள்ளதுடன், மிரிஹானையிலுள்ள தனது வீட்டிற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை அவ்வாறாதொரு சம்பவம் எனவும் கூறியுள்ளார்.

”இரவு 8 மணியளவில் பெங்கிரிவத்த வீதியை நெருங்கிய பேரணியில் குறிப்பிடத்தக்களவானவர்கள் இணைந்திருந்தனர். இந்த அனைத்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை அதிகாரிகள் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். நடப்பதை நான் ஷவேந்திரவுக்கும் கமலுக்கும் கூறினேன். ஷங்ரிலா ஹோட்டலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரெஷ் சலே மிரிஹானவிற்கு வந்தார். அவர் வருகின்றபோது அந்த இடத்தில் சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாத்திரமே இருந்தனர். எனினும், அங்கிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவ அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் எவரும் ஆலோசனை வழங்கியிருக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து சலே – ஷவேந்திரவுக்கும் கமாலுக்கும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி அங்கு வந்திருந்தவர்களை காண்பித்தாலும் அவர்களை கலைப்பதற்கான ஆலோசனை உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து கீழ்மட்டத்திற்கு வரவில்லை” என அவர்விபரித்துள்ளார்.

இராணுவத்தளபதி , பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி , பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மறுநாள் முற்பகல் 10.30 மணியளவிலேயே தமது இல்லத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவ தலைமையகத்தில் இருந்த நடவடிக்கை நிலையத்தை கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றுமாறு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி கோட்டாபய  பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் இருந்த முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இராணுவத்தினரை வரவழைக்கும் போது ஏற்பட்ட சீரற்ற அனுபவம் காரணமாக அனைத்து பாதுகாப்பு பிரதானிகளையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து நடவடிக்கை நிலையத்தை அங்கிருந்து செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர் , முப்படைத் தளபதிகள் , பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் இந்த நிலையத்தில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும், மக்கள் கொழும்பிற்கு வருவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

”அனைத்து பிரவேச மார்க்கங்களையும் தடுப்பதனூடாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு வருவதை தடுப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. எனினும், இத்தகைய வீதித்தடைகள் எந்த ஒரு இடத்திலும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வித இடையூறும் இன்றி ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் பதவி விலகும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்த எரிபொருள் , எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் தெரிவித்துள்ளார்.

”மூழ்கும் கப்பலிலிருந்து நான் தனியாக தப்பிச் சென்றதாக ஒரு சில குழுவினர் கூறினாலும் நான் இராஜினாமா செய்யும்போது இலங்கை ஒருபோதும் மூழ்கிக்கொண்டிருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் என்னை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக நாடு பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கு ஆரம்பித்திருந்த சந்தர்ப்பத்தில் மூலோபாய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது. நான் இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக ஒரு உயிரையேனும் இழப்பது அர்த்தமற்ற செயலாக இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/294889

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

நான் இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக ஒரு உயிரையேனும் இழப்பது அர்த்தமற்ற செயலாக இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.

ரொம்ப சரி  அப்படியென்றால் முள்ளிவாய்க்கால் இலங்கையில் இல்லையா??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட்டாபய மக்களால் வெளியேற்றப்பட்டார்; ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை மக்கள் ஏற்கப்போவதில்லை - சம்பிக்க 

08 MAR, 2024 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன. கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்வதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிடுவது நகைப்புக்குரியது. கோட்டாவை பதவியில் இருந்து வெளியேற்ற எவரும் சதி செய்யவில்லை.ஏனெனில் சதி ஊடாகவே அவர் பதவிக்கு வந்தார்.

கோட்டபய ராஜபக்ஷவின் முட்டாள்தனமான நிர்வாகத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்ட எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, மின்விநியோக துண்டிப்பு ஆகியவற்றை பார்த்துக்கொண்டு மக்கள் கைகட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள். நெருக்கடிகளை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் வெளியேற்றப்பட்டால் என்பதே உண்மை.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது. ஏனெனில், கொவிட் பெருந்தொற்று இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை விட பொருளாதார பின்னடைவில் இருந்த நாடுகள் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தன. கொவிட் பெருந்தொற்று இரண்டாம் அலையை கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தோற்றுவித்தது.

கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு தாமதப்படுத்தப்பட்டு தம்மிக்க பாணிக்கு முன்னுரிமை வழங்கியமை, கொவிட் மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். கோட்டபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே கடந்த காலம் தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷ புத்தகம் எழுதுவது பயனற்றது என்றார்.

https://www.virakesari.lk/article/178253

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1681629324-Mano-Ganesan-6-650x375.jpg

கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்!

‘சிங்கள பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதனாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்’ என கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் கூறியிருப்பதானது, வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள “சதி” என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது,

சிங்கள-பௌத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பௌத்த தரிசனத்தை கடை பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள பௌத்த சிந்தனையை பலப்படுத்தி வருகிறேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை?

இந்நாட்டில் சிங்கள- பௌத்தம், பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கை பன்மைத்துவத்தை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை. அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் “அரகலய” வுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.

நாடு முழுவதும்; நடைபெற்ற அரகலவில் பங்கு பெற்ற மக்களில் நூற்றுக்கு 99 வீதமானவர்கள் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்கு அளித்தவர்கள். அவர்களே, கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதார கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்தவுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.

ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதி கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனையில் “இத்தோடு இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான்.

இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களை காணவில்லை.

எது எப்படி இருந்தாலும், அரகலய முழுக்க முழுக்க, “வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால்” நடத்தப்பட்ட ஒன்றாகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தப்பட்டது. இதுதான் உண்மை.

சிங்கள-பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் எனக் கூறி, உண்மையை திரிபு படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவுக்கு கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1372872

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது கோரிக்கையை ரணில் மாத்திரமே அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் : 'சதி' நூலில் கோட்டாபய

10 MAR, 2024 | 10:54 AM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்ததாகவும் அந்த புத்தகத்தின் 163ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது தன்னால் உடனடியாக பதவியை ஏற்க முடியாது என்றும், அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

'இந்த வன்முறைக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்ற கோரிக்கைக்கு அமைய பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவேதான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனக் கூறி அவர் எனது கோரிக்கையை நிராகரித்தார். அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசி பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அவர் தன்னை பிரதமராக நியமிப்பதை பகிரங்கமாக அறிவிக்குமாறும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார். எனினும் அவருக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் உடனடியாக ஏற்கவில்லை.

https://www.virakesari.lk/article/178342

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 ''அனைவரையும் சுட்டுக்கொல்ல கட்டளையிட்டவர் கோத்தா'' - சி. வி. விக்னேஸ்வரன்

1528993605.jpg

முன்னாள் அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன், இராணுவத்தின் வசமிருந்த பல இடங்களில் இன்று மனித எலும்புக்கூடுகள் வெளி வருகின்றன. சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் உண்மை வெளிவந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு - உள்நாட்டு சதியின் விளைவே தாம் பதவியிலிருந்து நீங்கியமை என்று முன்னாள் அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ கூறுகின்றாரே! உங்கள் கருத்து என்ன? என்ற வாரத்துக்கொரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே நீதியரசர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

துஷ்டர்களைக் கண்டால் தூர விலகுவது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு செய்கையாகும். 

போர் காலத்தின் போதும் அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோத்தாபய, துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட போது, இராணுவ சிங்கள நண்பர்களுடன் எம்மவர் சிலர் பேச நேர்ந்தது. அவர்கள் கூறிய கூற்று அந்த காலகட்டத்தில் எனக்கு பாரிய அதிர்ச்சியைத் தந்தது.

அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தி சரணடைந்த தமிழ் மக்களை என்ன செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு படையணியினர் வினவிய போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய சற்றும் சிந்தியாது 'அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இட்டார்' என்று அந்த இராணுவ அதிகாரிகள் கூறினர். 

இராணுவத்தினர் கைவசம் அன்று இருந்த பல இடங்களில் இன்று இறந்தவர்களின் மனித எலும்புகளும் எலும்புக்கூடுகளும் நிலத்திலிருந்து வெளிவருகின்றன. உண்மையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் சரணாகதி அடைந்தவர்கள் எவ்வாறு, யாரின் கட்டளைக்கமைய காணாமல் போனார்கள் என்ற விடயம் வெளிவந்துவிடும்.

தமது வீழ்ச்சிக்குத் தமிழர்களையும் முஸ்டிம் மக்களையும் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டும் கோத்தாபய அரகலயவில் பங்கு பற்றியோர் 99 சதவிகிதமானோர் சிங்கள இளைஞர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பு நடைபெறமுன், எவ்வளவு காலமாக, யாருடன் கூட்டுச் சேர்ந்து குறித்த சம்பவம் நடைபெற பதவியில் இருந்த சிலர் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர் என்பது ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் வெளிவந்துவிடும். இந்த சம்பவத்தால் அரசியல் இலாபம் பெற்ற சிங்கள நபர் யார்?  என்பதை விசாரணை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

சர்வதேச விசாரணைகள் இங்கு நடைபெறக்கூடாது என்று இன்று பதவியில் உள்ளவர்கள் கூறுவது உண்மைகள் வெளிவந்துவிடாது தடுப்பதற்கே.

என் நண்பர் சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான இலசந்த விக்ரமதுங்க எவ்வாறு, ஏன் கொலை செய்யப்பட்டார். பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று சர்வதேச விசாரணை நடந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். கோத்தாபயவின் பங்கு என்ன என்பதையும் சர்வதேச விசாரணை காட்டிக் கொடுத்துவிடும். 

வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் தமக்கெதிராகச் சதி செய்தார்களா? என்பதை கோத்தாபய தன்னிடமே விஸ்வாசத்துடன் கேட்டால் தன் செயல்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வார்.

ஆனால் 'அரகலய' இளைஞர் - யுவதிகளை கிளர்ந்தெழச் செய்தது கோத்தாபயவின் முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கைகளே. அதிகாரம் இருந்தால் எவர் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கோத்தாபயவே.

இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரத்தை எமது விவசாயிகள் பாவிக்க வேண்டும் என்பதில் எவரிடத்திலும் இரண்டாவது கருத்து ஒன்று இருக்கமுடியாது. ஆனால், சரியோ பிழையோ செயற்கை உரங்களை நம்பியே விவசாயிகள் அண்மைக் காலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். 

ஆகவே, திடீரென செயற்கை உரத்தை வெளிநாட்டில் இருந்து வருவிப்பதைத் தடுத்தால் என்ன நடக்கும் என்று அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். 

சிந்தித்திருந்தால் வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின் செயற்கை உரங்களை வருவிப்பதை நீக்க இருக்கின்றோம். அவற்றிற்குப் பதில் பலமான இயற்கை உரங்களை உருவாக்க இப்பொழுதிருந்தே ஆயத்தமாகுங்கள் என்று கூறியிருப்பார். 

மண்புழு உரம், சாணி உரம், காய்ந்த சருகு உரம் என்று பல விதமான இயற்கை உரங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

பயிர்கள் கூடிய அறுவடையைத் தர எவ்வாறு, என்னவாறான இயற்கை உரங்கள் இனிப் பாவிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து அவற்றை பெருவாரியாக உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் போதிய அறிவிப்புடன் செயற்கை உரங்கள் வருவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாது சிங்கள மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு சிறுபான்மையினரின் சதியே தமது வெளியேற்றம் என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமாகும்.

தனக்கு தேர்தலில் உதவி புரிந்த பணக்காரக் குடும்பங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் வண்ணம் தமது நிதிக் கொள்கைகளை மாற்றியமை சிங்கள மக்களிடையே பலத்த வெறுப்பை ஏற்படுத்தியது. இவை சாதாரண சிங்களக் குடும்பங்களில் இருந்தவர்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின.

தமது வயிற்றில் அடிக்கப்பட்டதால் சிங்கள இளைஞர்கள் கோத்தாபயவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்ததற்காக சிறுபான்மையினர் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் சேறு பூசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. 

அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவரே அவர்களால் விரட்டப்பட்டார்.

அவரின் குடும்பத்திற்குள்ளேயே சதிகாரர்கள் சிலர் இருந்திருக்கக்கூடும். அதனை அவர் ஆராய்ந்து பார்த்து தமது குடும்ப அங்கத்தவருடன் பேச வேண்டும். 

அதை விட்டு விட்டு 'செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கின்றார்' என்பது போன்று சிறுபான்மையினர் மீது சதிப்பழி போடுவது அரச தலைவராகப் பதவி வகித்த ஒருவர்க்கு அழகல்ல.

துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர் - யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பது தான் உண்மை. அது சதி அல்ல தண்டனை. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். 

அவ்வாறு நிறுத்தப்படுவதை அவரின் இந்த நூல் தடுக்கும் என்று கோத்தாபய நினைத்தாரானால் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியது போல், கோத்தாபயவைப் போல வடிகட்டின முட்டாள் ஒருவர் இந்நாட்டில் இருக்க முடியாது- என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
 

https://newuthayan.com/article/''அனைவரையும்_சுட்டுக்கொல்ல_கட்டளையிட்டவர்_கோத்தா''

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைதெறிக்க ஓடிய கோமாளி , அதில புத்தகம் வேற. மானம் கெடடவனே. செய்த பாவம் விடுமா உன்னை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட்டாவின் நூலில் ஒருசில உண்மைகள் பல பொய்கள் - உதய கம்மன்பில

Published By: VISHNU   11 MAR, 2024 | 09:21 PM

image

(இராஜதுரை ஹஷான்)

கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன. பஷிலுடன் எனக்கு அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடு ஏதும் இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்துவதற்காக அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகளை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் னஎ பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும்  தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் எம்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் வெளியானதும் அதை வாங்கி படித்தேன்.அதில் ஒருசில உண்மைகளை போல் பல பொய்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.புத்தகத்தில் 66 ஆவது பக்கத்தில் 'உதய  மற்றும் விமல் ஆகியோர் எம்மை விட்டு விலகிச் சென்றார்கள்'என குறிப்பிடப்பட்டுள்ளது.பாரதூரத்தன்மையை அவர் மறந்து விட்டார்.

உண்மையில் நாங்கள் விலகிச் செல்லவில்லை.விலக்கப்பட்டோம்.அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவர் மறந்து விட்டார்.அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக எங்களை அரசாங்கத்திலிருந்து விலக்கவில்லை.பொருளாதார பாதிப்பால் சமூக கட்டமைப்பில் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைத்தோம்.எமது கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாததால் மக்களிடம் உண்மையை எடுத்துரைத்தோம்.இதன் பின்னரே நாங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டோம்.

65 ஆவது பக்கத்தில் 'பசிலுக்கும் உதயகம்மன்பிலவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு காணப்பட்டது' என குறிப்பிடப்பட்டுள்ளது.பஷிலுக்கும் எனக்கும் தனிபட்ட முரண்பாடு தோற்றம் பெற நான் அவரின் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கவுமில்லை, மல்வானை சொகுசு வீட்டுக்கு உரிமை கோரவுமில்லை.எனக்கு அவரிடம் அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.ஆகவே பஷிலுக்கும் எனக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையை கோட்டபய ராஜபக்ஷ வெளிப்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மேற்குலக நாடுகள் செயற்பட்ட விதம்,இராணுவ தளபதி பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட விதம் குறித்து கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கத்துக்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாங்கள் குறிப்பிட்டதை கோட்டபய ராஜபக்ஷ கவனத்திற் கொள்ளவில்லை.ஆகவே அந்த உண்மைகளையும் அவர் நாட்டுக்கு குறிப்பிட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/178470

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/3/2024 at 17:46, கிருபன் said:

பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக குறைந்த்து 200 புத்தகம்? 234 எம்.பிகளில் நூறு எம்பி க்கள் ,அரசியல்வாதிகள் 100  என்று பார்த்தாலும் 200 புத்தகம் விற்பனையாகி இருக்கும்....இவரை ஓட ஓட விரட்டிய ஏழைமக்கள் இந்த புத்தகத்தை வாங்கி வாசிச்சிருப்பிமோ...வாங்கி வாசிக்க பணம் இருக்கா ?விஜிதா யாப்பா இவரின் உறவினரின் பதிப்பகமோ தெரியவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2024 at 11:12, ஏராளன் said:

சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

IMG-6008.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற வசதிகளைச் செய்து கொடுத்தேன்! -ஓமல்பே சோபித தேரர்

13 MAR, 2024 | 01:38 PM
image

அன்றைய தினம் (அரகலய)  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு  தான் வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஓமல்பே சோபித தேரர்  தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தேவையான வசதிகளை  அவருக்கு  தான் ஏற்படுத்திக் கொடுத்ததனை  கோட்டாபய ராஜபக்க்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார். 

"நாங்கள் கோட்டாபயவுக்கு எதிரானவர்கள் அல்லர். தற்போதுள்ள முறைமைக்கு எதிரானவர்கள்" என கூறிய சோபித தேரர், கோட்டாபயவை நாட்டை விட்டு வெளியேற்றும் சதி என்ன என்பதை தற்போதைய தலைவரால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178616

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட்டாபய நிர்வாகத்திறன் அற்றவர் – மகிந்த முன்னிலையில் கடுமையாக விமர்சித்த பௌத்தமதகுரு

Published By: RAJEEBAN   16 MAR, 2024 | 01:48 PM

image
 
பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார்.

மகி;ந்த ராஜபக்சமுன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை  வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என  குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபயவிடம் நிர்வாகத்திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும்  பௌத்மதகுரு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய தவறான பாதையில்  செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178864



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.