Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
(குறுங்கதை)
 
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
--------------------------------------------------------------
அன்று அவன் காரை அதன் தரிப்பிடத்தில் நிற்பாட்டும் போது அங்கு பல கார்கள் ஏற்கனவே நின்றிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்பொழுதும் காலை ஏழு அல்லது ஏழரை மணி அளவில் வேலைக்கு வந்து விடுவான். அங்கு பெரும்பாலானவர்கள் பத்து மணிக்கு பின்னரே வேலைக்கு வருவார்கள். ஒருவர் மட்டும், பெரும் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விடுகின்றார். இது அவரே சொல்லும் ஒரு தகவல். இதுவரை அதை எவராவது உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அமெரிக்கரரான அவர் மதியம் உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணி அளவில், இன்றைய வேலை முடிந்தது என்று தினமும் கிளம்பி விடுவார்.
 
வேலை தளத்தில் பலர் ஏற்கனவே வேலையில் மூழ்கி இருந்தனர். இப்படியொரு திங்கள் காலையா என்று நினைத்தவன் உறை நிலையில் இருந்த அவனின் கணினியை தட்டி எழுப்பினான். இந்த நிறுவனத்தில் அவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருக்கின்றது. இதுவரை அவன் இங்கு வேறு சில நிறுவனங்களில் பல வருடங்கள் வேலை செய்துள்ளான். ஆனால் இங்கே தான் முதன் முதலாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுடன் வேலை செய்கின்றான்.
 
இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருள் திட்டம் ஒன்றிற்காக இந்தியாவின் முன்னணி கணினி தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுத்துள்ளார்கள். அதில் சில நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து இங்கு வந்துள்ளனர். அங்கிருந்து இப்படி வருபவர்கள் முதலில் ஆறு மாதங்கள் மட்டும் இங்கே இருந்து பணி செய்யும் ஒப்பந்தத்துடன் வருவார்கள். சிலர் ஒரு வருடம், இன்னும் சிலர் சில வருடங்கள், பல வருடங்கள் என்று அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு.
 
இப்படியான நிலைகளில் ஒரு அளவிலான பணியாளர்களை, இங்கே குடி உரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களை, வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு முறையும் இங்கே இருக்கின்றது. அவனை அப்படியே எடுத்திருந்தார்கள்.     
 
'ஏன் விக்னேஷ், எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். விக்னேஷ் சென்னையை சேர்ந்தவன், இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கின்றான்.
 
'இல்ல சார், நாங்க நேற்றிலிருந்தே இங்க தான் உட்கார்ந்திருக்கிறம்.'  
 
இவர்கள் சிலருடன் இருக்கும் ஒரு பெரிய தொல்லை இது. எவ்வளவு தான் சொன்னாலும் இவர்கள் இந்த சார் என்று கூப்பிடுவதை விடவே மாட்டார்கள். இவர்களிடையே வேலைத் தளத்தில் இராணுவத்தில் இருப்பது போன்ற பதவி வரிசைகளும், அதற்கான ஒழுங்கும், மதிப்பும் இருக்கும். இங்கு மற்றவர்களிடையே பொதுவாக அப்படியான ஒரு ஒழுங்கோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பணிவோ இருப்பதில்லை. அவரவர் தங்கள் வேலையை செய்து கொண்டு, மிகச் சாதாரணமாக இருப்பார்கள், பழகுவார்கள். இங்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது.
 
'நேற்று ஞாயிறில் இருந்தா, ஏன்?'
 
'ஆமாம் சார். வாற சண்டே ப்ராடக்ட் ரிலீஸ் என்று டெட் லைன் போட்டு விட்டார்கள். அதால சென்னையிலும், இங்கேயும் எங்க டீம் ஒண்ணா உட்கார்ந்து வேலை செய்யிறாங்கள்.'
 
அங்கு மிச்சமாக விடப்பட்டிருக்கும் பீட்சா துண்டுகளை அவன் அப்பொழுது தான் கவனித்தான். விக்னேஷிற்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது. ஆறு மாதங்களின் முன் விக்னேஷின் மனைவியை மருத்துவரிடமும், பின்னர் மருத்துவமனைக்கும் கூட்டிப் போக வேண்டி இருந்தது. முடிவில் தனிமையும், மன அழுத்தமுமே காரணம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். இவர்கள் வேலைக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. காரணம் கேட்டால் அங்கே இஎம்ஐ கட்ட வேண்டும் என்பார்கள், இப்படி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பார்கள், இப்படி ஏதேதோ சொல்வார்கள்.
 
'உங்க டீம் பண்ணி முடிச்சிட்டாங்களா, சார்?'
 
'தெரியல விக்னேஷ், இனித்தான் பார்க்கணும்.' 
 
விக்னேஷும், இவனும் வெவ்வேறு அணியில், மென்பொருளின் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவனுடைய அணியின் முதன்மைப் பொறியியலாளன் இவன் தான். விக்னேஷிற்கு அவர்களின் ஊரைச் சேர்ந்த கணேஷ் என்னும் ஒருவர் மேற்பார்வையாளராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேலிருப்பவர்களை எப்படி ஆச்சரியப்பட வைக்கலாம் என்று யோசிப்பவர் கணேஷ். இவனுக்கு கணேஷுடன் பெரிதாக ஒட்ட முடியவில்லை. சுருக்கமாக் சொன்னால், ஒரு நவீன கங்காணியாகவே இவன் கணேஷைப் பார்த்தான். கணேஷிற்கும் அது தெரியும்.
 
தன் இடத்தில் வந்து அமர்ந்து, வந்திருந்த மின் அஞ்சல்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் நூறுக்கும் மேற்பட்டவை வந்திருந்தன.
 
'நேற்றும், முந்தா நாளும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையே' என்றபடியே முருகன் வந்தார்.
 
இந்த திட்டத்திற்கு அவர்களின் பக்கத்தில் இருந்து வந்திருக்கும் திட்ட மேற்பார்வையாளர் அவர். அப்படியா என்றபடி இவன் கைத்தொலைபேசியை வெளியில் எடுத்தான்.
 
'சனி ஞாயிறு ஆளைப் பிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆமா, சனி ஞாயிறில் வேறு ஒரு உலகத்துக்கே போய் விடுகின்றாயா, என்ன?'
 
சிரித்து சமாளித்துக் கொண்டே ஏதோ வீட்டு வேலையில் இருந்து விட்டேன் என்றான். அப்படி ஒன்றும் வீட்டில் வெட்டி நிமிர்த்துவது கிடையாது. ஆனாலும் இவர்களுடன் சேர்ந்து கண் மண் தெரியாமல் ஓடுவதில்லை என்ற முடிவை அவன் எப்பவோ எடுத்திருந்தான். முருகன் கொஞ்சம் வயதானவர். அவர் இவனுடன் ஒரு மாதிரியும், அவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இன்னொரு மாதிரியும், கொஞ்சம் கடுமையாகவும், நடந்து கொள்வார்.
 
அவர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சொன்னபடியே அந்த ஞாயிறன்று புதிய மென்பொருள் பரீட்சாத்தமாக வெளியிடப்பட்டது. பின்னர் இரண்டு வாரங்களில் அது வாடிக்கையாளர்களுக்கு, சில பிழை திருத்தங்களின் பின், வெளியிடப்பட்டது.
 
இங்கு எந்த மென்பொருளையும், எல்லாவற்றையும் படைத்தவர் என்று ஒருவர் இருந்து, அவரே வந்து உருவாக்கி, எழுதினாலும் அதில் பிழைகள் வந்தே தீரும். பில் கேட்ஸின் விண்டோஸ் என்னும் மென்பொருளில் இந்த உலகம் பார்க்காததா? அவரை ஒரு ஜீனியஸ் என்று சொல்வார்கள். ஆரம்ப நாட்களில், பல வருடங்களின் முன், அந்த மென்பொருள் இடையிடையே கணினித் திரையை அப்படியே முழு நீலமாக மாற்றி விட்டு, அப்படியே நின்றும் விடும். முழு நீலம் ஒரு குறியீடு போல, நடுக்கடலில் உன்னை தள்ளி விட்டுள்ளோம், இனி நீயாகவே நீந்திக் கரை சேர் என்று சொல்வதற்கான ஒரு குறியீடு.
 
இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருளும் வாடிக்கையாளர்களின் கைகளில் பலத்த அடி வாங்கியது. ஆனால் அதற்கு முன்னேயே புதிய மென்பொருளை சொன்ன நேரத்தில் வெளியிட்டதற்காக பெரும் விழா ஒன்று நடந்து முடிந்திருந்தது. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்கள் பலருக்கு மட்டும், இவன், கணேஷ் உட்பட, சன்மானமும் கொடுத்திருந்தனர். விக்னேஷிற்கோ அல்லது அவர்களின் பக்கத்தில் இருந்து எவருக்குமோ எதுவும் கொடுக்கப்படவில்லை, வெறும் 'தாங் யூ  சோ மச்' என்ற வார்த்தையைத் தவிர.
 
பின்னர் சில நாட்களில் இந்த புதிய மென்பொருளின் தோல்வியாலும், நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினாலும் பலரை வேலையிலிருந்து நீக்கும் முடிவை நிறுவனத்தின் மேல் நிர்வாகம் எடுத்தது. இவனையும் நீக்கினார்கள். கணேஷையும் நீக்கினார்கள். 
 
'என்ன சார், இப்படி அநியாயம் பண்ணிட்டாங்கள். உங்களை ஏன் சார் தூக்கினாங்கள்?' என்று கடைசி நாளான அன்று வந்து நின்றான் விக்னேஷ். அவர்களின் நிறுவனத்திலிருந்து எவரையும் வேலையிலிருந்து, இன்னமும், நீக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் வேறு ஒரு புதிய மென்பொருள் ஆரம்பிக்கும் திட்டம் ஒன்றும் முன்னமே இருந்தது.
 
'இதில என்ன இருக்கு, விக்னேஷ், தூக்க வேண்டும் என்று முடிவு செய்து எல்லாரையும் ஒன்றாக தூக்கினார்கள்.'
 
'நீங்க எப்படி சார் இப்படி ஈசியா இருக்கிறீர்கள். கணேஷ் சார் எங்களுடன் பேசவே இல்லை, அழுதிருப்பார் போல.'
 
'இதெல்லாம் இங்க சாதாரணம், விக்னேஷ்.'
 
'உங்களுக்கு இஎம்ஐ எதுவும் இல்லையா, சார்.'
 
'வீட்டிற்கு இருக்குது, இரண்டு காருக்கும் இருக்குது, இன்னும் எவ்வளவோ இருக்குது.'
 
'என்ன பண்ணுவீங்க, சார்?'
 
'அடுத்த வேலையை தேட வேண்டியது தான். இந்த துறையில் இங்க வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்று எவருமில்லை.'
 
விக்னேஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். கை கொடுத்தவன் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரின் கண்களை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்த்தனர். அப்படியே திரும்பி நடந்த விக்னேஷை இவன் கூப்பிட்டான். 'என்ன, சார்' என்று விக்னேஷ் திரும்பினான்.
 
'குடும்பத்தை பார்த்துக் கொள், விக்னேஷ்' என்றான் இவன்.
Edited by ரசோதரன்
  • Like 7
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.டி துறையின் நெருக்கடியையும் நெருக்குவாரத்தையும் எளிமையாய் எழுதியுள்ளீர்கள்......!  😂

நன்றி ரசோதரன்......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

விக்னேஷை இவன் கூப்பிட்டான். 'என்ன, சார்' என்று விக்னேஷ் திரும்பினான்.

ரசோதரன் சார் நல்லா எழுதியிருக்கிறீங்கள் சார்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரசொதரனுக்கு .

2 hours ago, Kavi arunasalam said:

ரசோதரன் சார் நல்லா எழுதியிருக்கிறீங்கள் சார்

சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா  நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ?

கவி அருணாசலம் ஐயா கனகாலம் தமிழ்நாட்டில் இருந்தவர் போல் உள்ளது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஐ.டி துறையின் நெருக்கடியையும் நெருக்குவாரத்தையும் எளிமையாய் எழுதியுள்ளீர்கள்......!  😂

நன்றி ரசோதரன்......!

🙏....

ஒப்பீட்டளவில் இது ஒரு புதுத் துறையாகவும், பணம் மிக அதிகம் புரளும் இடமாகவும் இருப்பதால், இன்னும் பல வருடங்கள் எடுக்கும் போல இதன் மீதுள்ள கவர்ச்சி ஒரு சமநிலைக்கு வருவதற்கு.  

6 hours ago, Kavi arunasalam said:

ரசோதரன் சார் நல்லா எழுதியிருக்கிறீங்கள் சார்

😀.......

தாங்ஸ் கவிஞன் சார்.....

உங்களின் 'இந்த அருணாச்சலம் சொல்றான்...' கார்ட்டூன்கள் சூப்பர் சார்.....👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நன்றி ரசொதரனுக்கு .

சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா  நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ?

கவி அருணாசலம் ஐயா கனகாலம் தமிழ்நாட்டில் இருந்தவர் போல் உள்ளது .

👍....

தமிழ் நாட்டவர்களிடம் ஏன் இப்படி சார் என்ற ஒரு அடைமொழி என்று கேட்டிருக்கின்றேன். அவர்களில் சிலர் நீங்கள் ஈழத்தவர்கள் அண்ணா அல்லது அண்ணை என்ற கூறுவது போலவே இது எங்களின் பழக்கம் என்று சொல்லியிருக்கின்றனர். அந்த வார்த்தையின் அர்த்தம் அழிந்து, இன்று இது ஒரு பழக்கமாகவே அவர்களுக்கு வந்து விட்டது போல.

'நவீன கங்காணி' என்ற ஒரு வார்த்தை இந்தக் குறுங்கதையில் வருகின்றது. அது இந்த துறையில் எம்மவர்கள் பலரிடையே இருக்கும் ஒரு மனநிலையையே காட்டுகின்றது. குறுங்கதையில் அதை நான் விபரித்து எழுத இடம் கிடைக்கவில்லை..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, பெருமாள் said:

சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா  நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ?

🤣😂எங்கே எடுத்தீர்கள் இந்த விரிவாக்கத்தை?

Sire என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்தது தான் Sir என்கிறார்கள். மரியாதையோடு விளிக்க பல நாடுகளில் பயன்படுகிறது, பிரிட்டனில் Knighthood வழங்கப் பட்டவர்களை விளிக்கவும் பயன்படுகிறது.

பதில் அவசியமில்லை. சமூக வலையூடகங்களில் யாரோ பொங்கல் வைத்திருக்கிறார்கள் என்று இந்த fact-check இணைப்பு சொல்கிறது.

https://factly.in/slave-i-remain-is-not-the-full-form-of-the-word-sir-sir-is-originated-from-an-old-french-word-sire/

Edited by Justin
கீழ் இணைப்பு
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பினிட்டீங்க ...சார்... ரசோதரன்...நன்றாகவே உள்ளது..அனுபவம் பேசுது..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

🤣😂எங்கே எடுத்தீர்கள் இந்த விரிவாக்கத்தை?

Sire என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்தது தான் Sir என்கிறார்கள். மரியாதையோடு விளிக்க பல நாடுகளில் பயன்படுகிறது, பிரிட்டனில் Knighthood வழங்கப் பட்டவர்களை விளிக்கவும் பயன்படுகிறது.

பதில் அவசியமில்லை. சமூக வலையூடகங்களில் யாரோ பொங்கல் வைத்திருக்கிறார்கள் என்று இந்த fact-check இணைப்பு சொல்கிறது.

https://factly.in/slave-i-remain-is-not-the-full-form-of-the-word-sir-sir-is-originated-from-an-old-french-word-sire/

பிழையை திருத்தியதுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

நன்றி ரசொதரனுக்கு .

சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா  நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ?

கவி அருணாசலம் ஐயா கனகாலம் தமிழ்நாட்டில் இருந்தவர் போல் உள்ளது .

சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா .

வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

🤣😂எங்கே எடுத்தீர்கள் இந்த விரிவாக்கத்தை?

Sire என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்தது தான் Sir என்கிறார்கள். மரியாதையோடு விளிக்க பல நாடுகளில் பயன்படுகிறது, பிரிட்டனில் Knighthood வழங்கப் பட்டவர்களை விளிக்கவும் பயன்படுகிறது.

பதில் அவசியமில்லை. சமூக வலையூடகங்களில் யாரோ பொங்கல் வைத்திருக்கிறார்கள் என்று இந்த fact-check இணைப்பு சொல்கிறது.

https://factly.in/slave-i-remain-is-not-the-full-form-of-the-word-sir-sir-is-originated-from-an-old-french-word-sire/

நானும் இந்த அர்த்தத்தை நம்பிக்கொண்டிருந்தேன். ஒர் இந்திய பாண்டிச்சேரி கத்தோலிக்க பாதிரியார் ஒரு பிரசங்கத்தில் இப்படி கூறினார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 hours ago, Justin said:

பதில் அவசியமில்லை. சமூக வலையூடகங்களில் யாரோ பொங்கல் வைத்திருக்கிறார்கள் என்று இந்த fact-check இணைப்பு சொல்கிறது.

பொதுவாக சமூக வலைத்தளங்களின் போக்கு என்பது பின்வருமாறு உள்ளது.

 பரந்துபட்ட அறிவுத்தேடல் உள்ளவர்களை அதை நோக்கி உந்தித் தள்ளும்  ஆரம்ப புள்ளியாக செயற்பட்டு அவர்களுக்கு சேவை செய்யும் கருவியாக செயற்படும் அதேவேளை,   பொது அறிவுக்கு தன்னைமட்டுமே முழுமையாக நம்பியவர்களை  அவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவையும் மங்க வைத்து அடி முட்டாளாக்கிவிடும்.  

Edited by island
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா .

வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .

இது "மன்னிப்பு இல்லாத மன்னிப்பு  போல இருக்குது😂.

ஒருவரது வயது, ஓய்வு நிலை என்பவற்றை சுட்டிக் காட்டிப் பேசுவது யாழ் கள விதி மீறலாக இருக்கலாம், ஆனாலும் உங்களை ரிப்போர்ட் செய்யவில்லை. ஏனெனில், கருத்தை அகற்றி விட்டு சும்மா விட்டு விடும் நிர்வாகம் - அதில் ஒருவருக்கும் படிப்பினை கிடைக்காது. உங்கள் கருத்தை அப்படியே விட்டு "இவர் இப்படித் தான்" என்று வாசகர்களுக்கு அடையாளம் காட்டி விடுவது மிகவும் பயனுள்ள நடைமுறை என்பதால் ரிப்போர்ட் செய்யவில்லை.

ஆனால், பென்சன் எடுக்கும் வரை விரல் நுனியில் இருக்கும் இணையத்தில் தேடி சரி பார்க்காமல் அறிவலட்சியமாக இருப்பது உங்களுக்கே ஆபத்தாக ஒரு நாள் முடியலாம் என அஞ்சுகிறேன். அலரிக்காயை அரைத்துத் தின்றால் இதயத்திற்கு நல்லது என்று யாராவது இணைய வம்பர்கள் பதிவிட, அதை சரி பார்க்காமல் நீங்கள் பரப்பினால், பின்பற்றினால்..யோசித்துப் பாருங்கள்😎, நீங்கள் பென்சன் எடுப்பதைப் பற்றியே யோசிக்க வேண்டியதில்லை!

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்ணியாவில் தடக்கி விழுந்தாலும் ஐடிக்காரன் மேலே தான் விழ வேணும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்போ கொஞ்சம் பிசியாக நிற்கிறேன்.

சீமான் திரியில் வழமை போல் இறங்கி அடிக்கவில்லை. வேறு திரிகளை பார்க்கவே நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பயண கட்டுரை திரியில் செலவழிக்கிறேன்.

அப்படி இருந்தும்….என்னடா பெரிய தலையள் எல்லாம் இந்த திரியில் மினக்கெடுதே எண்டு ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்தேன்.

பெரும்ஸ்…. @பெருமாள்சும்மா சொல்லக்கூடாது…சார்

சும்மா கிண்டி கிழெங்கெடுக்கிறீங்க😂

அதுவும் அந்த மன்னிப்பு கேட்ட பாணி…ஈயம் பூசியும், பூசாமலும்….

வேற லெவல், வேற லெவல் பாஸ்😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஊரிலிருந்து வரும் போது பார்சலோடு ஒட்டிக் கொண்டு வந்த இந்த வேற லெவலை அங்கயே விட்டுட்டு வந்திருக்கலாம் கோசான்..இது எல்லாம் ஊரில் உள்ளவர்கள் தத்து எடுக்கும் வார்த்தைகள்.😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, யாயினி said:

ஊரிலிருந்து வரும் போது பார்சலோடு ஒட்டிக் கொண்டு வந்த இந்த வேற லெவலை அங்கயே விட்டுட்டு வந்திருக்கலாம் கோசான்..இது எல்லாம் ஊரில் உள்ளவர்கள் தத்து எடுக்கும் வார்த்தைகள்.😀

உண்மைதான்…

வேற லெவல்…

சட்டப்படி இருக்கு….

செட் ஆகுவம்…

இப்படி சிலது ஒட்டி கொண்டு வந்துட்டுது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, island said:

பொதுவாக சமூக வலைத்தளங்களின் போக்கு என்பது பின்வருமாறு உள்ளது.

 பரந்துபட்ட அறிவுத்தேடல் உள்ளவர்களை அதை நோக்கி உந்தித் தள்ளும்  ஆரம்ப புள்ளியாக செயற்பட்டு அவர்களுக்கு சேவை செய்யும் கருவியாக செயற்படும் அதேவேளை,   பொது அறிவுக்கு தன்னைமட்டுமே முழுமையாக நம்பியவர்களை  அவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவையும் மங்க வைத்து அடி முட்டாளாக்கிவிடும்.  

🤣..........

சுந்தரராமசாமி ஒரு தடவை இன்றைய தமிழ் பற்றி இப்படி சொன்னார் என்ற குறிப்பை நேற்று ஒரு இடத்தில் பார்த்தேன்: வண்டிச் சில்லு ஏறிப் போன பாம்பு போல இன்றைய தமிழ் இருக்கின்றது. தலை முன்னுக்கு போக முனைகின்றது. வண்டிச் சில்லால் நசுங்கின பாம்பின் உடம்பு அப்படியே தரையில் அசையாமல் கிடக்குது என்று.

இன்றைக்கு கனவெல்லாம் பாம்போ என்று நினைத்தேன்...🤣

தமிழ் என்று இல்லை. எல்லா விடயத்திலும் இப்படித்தான் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் போல....... எதிலும் கொஞ்சம் முன்னுக்கு போக எத்தனிக்கும், கொஞ்சம் போக மாட்டம் என்று நின்று அடம்பிடிக்கும்....😀

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இது "மன்னிப்பு இல்லாத மன்னிப்பு  போல இருக்குது😂.

ஒருவரது வயது, ஓய்வு நிலை என்பவற்றை சுட்டிக் காட்டிப் பேசுவது யாழ் கள விதி மீறலாக இருக்கலாம், ஆனாலும் உங்களை ரிப்போர்ட் செய்யவில்லை. ஏனெனில், கருத்தை அகற்றி விட்டு சும்மா விட்டு விடும் நிர்வாகம் - அதில் ஒருவருக்கும் படிப்பினை கிடைக்காது. உங்கள் கருத்தை அப்படியே விட்டு "இவர் இப்படித் தான்" என்று வாசகர்களுக்கு அடையாளம் காட்டி விடுவது மிகவும் பயனுள்ள நடைமுறை என்பதால் ரிப்போர்ட் செய்யவில்லை.

ஆனால், பென்சன் எடுக்கும் வரை விரல் நுனியில் இருக்கும் இணையத்தில் தேடி சரி பார்க்காமல் அறிவலட்சியமாக இருப்பது உங்களுக்கே ஆபத்தாக ஒரு நாள் முடியலாம் என அஞ்சுகிறேன். அலரிக்காயை அரைத்துத் தின்றால் இதயத்திற்கு நல்லது என்று யாராவது இணைய வம்பர்கள் பதிவிட, அதை சரி பார்க்காமல் நீங்கள் பரப்பினால், பின்பற்றினால்..யோசித்துப் பாருங்கள்😎, நீங்கள் பென்சன் எடுப்பதைப் பற்றியே யோசிக்க வேண்டியதில்லை!

🤣.......

சமூக ஊடகங்களே நீங்கள் சொல்வது போலவே. ஆனால், யாழ் களத்தில் எதுவுமே வேகாது போல. எங்க பிழையாக திரும்பினாலும், அங்கே ஒரு அடி போட ஆட்கள் காத்துக் கொண்டு நிற்கினமே....😀....👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உண்மையில் இப்போ கொஞ்சம் பிசியாக நிற்கிறேன்.

சீமான் திரியில் வழமை போல் இறங்கி அடிக்கவில்லை. வேறு திரிகளை பார்க்கவே நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பயண கட்டுரை திரியில் செலவழிக்கிறேன்.

அப்படி இருந்தும்….என்னடா பெரிய தலையள் எல்லாம் இந்த திரியில் மினக்கெடுதே எண்டு ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்தேன்.

பெரும்ஸ்…. @பெருமாள்சும்மா சொல்லக்கூடாது…சார்

சும்மா கிண்டி கிழெங்கெடுக்கிறீங்க😂

அதுவும் அந்த மன்னிப்பு கேட்ட பாணி…ஈயம் பூசியும், பூசாமலும்….

வேற லெவல், வேற லெவல் பாஸ்😁

😀....

என்னாது........சீமான் திரியில 'வழமை போல' நீங்கள் இறங்கி அடிக்கவில்லையா........ நீங்க அடிச்ச அடியில, பையன் இனிமேல் அந்த திரி பக்கமே வர மாட்டேன் என்று பின் வாங்கினாரே...😀

அந்த திரியில் ஒரு கருத்து, ஒரேயொரு கருத்து மட்டும் நான் எழுதினேன். அப்படியே ஆடிப் போய், அடுப்படிப் பக்கம் போய், எந்த அரிசி நல்லது, சீனி எவ்வளவு எடுக்கலாம், உப்பு ஏன் கூடாது என்று வேற பக்கம் நானும் ஓடி விட்டன்.......😀   

5 hours ago, ஈழப்பிரியன் said:

கலிபோர்ணியாவில் தடக்கி விழுந்தாலும் ஐடிக்காரன் மேலே தான் விழ வேணும்.

😀....

அப்படி தடக்கி விழுந்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆள் மற்ற ஆளைப் பார்த்து கேட்பார், 'பாஸ், நீங்க என்ன டெக்னாலஜி.......'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, Justin said:

இது "மன்னிப்பு இல்லாத மன்னிப்பு  போல இருக்குது😂.

ஒருவரது வயது, ஓய்வு நிலை என்பவற்றை சுட்டிக் காட்டிப் பேசுவது யாழ் கள விதி மீறலாக இருக்கலாம், ஆனாலும் உங்களை ரிப்போர்ட் செய்யவில்லை. ஏனெனில், கருத்தை அகற்றி விட்டு சும்மா விட்டு விடும் நிர்வாகம் - அதில் ஒருவருக்கும் படிப்பினை கிடைக்காது. உங்கள் கருத்தை அப்படியே விட்டு "இவர் இப்படித் தான்" என்று வாசகர்களுக்கு அடையாளம் காட்டி விடுவது மிகவும் பயனுள்ள நடைமுறை என்பதால் ரிப்போர்ட் செய்யவில்லை.

நல்ல காலம் Slave i remain என்ற சொல் ஆங்கிலம் இல்லைஎன்று சொல்லாமல் விட்டது பெரும் அதிசயம்  தேவையில்லாமல் தொப்பியை துக்கி போட்டு தேவயில்லாமல் நாடகம் போடுகிறீர்கள் சேர் பிரச்சனை யில் Slave i remainஎன்பது பொய்யாக இருக்கட்டும் உண்மையாக இருக்கட்டும் பக்ட் செக் என்ற ஒன்றை இழுத்தால் உண்மையாகும் என்றால் இனி உங்கள் கருத்துகளையும் சரி  பிழை பக்ட் செக் தான் நீதிபதி .😃

On 6/4/2024 at 05:32, colomban said:

நானும் இந்த அர்த்தத்தை நம்பிக்கொண்டிருந்தேன். ஒர் இந்திய பாண்டிச்சேரி கத்தோலிக்க பாதிரியார் ஒரு பிரசங்கத்தில் இப்படி கூறினார்.

Edited by பெருமாள்
எழுத்து பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

😀....

என்னாது........சீமான் திரியில 'வழமை போல' நீங்கள் இறங்கி அடிக்கவில்லையா........ நீங்க அடிச்ச அடியில, பையன் இனிமேல் அந்த திரி பக்கமே வர மாட்டேன் என்று பின் வாங்கினாரே...😀

அந்த திரியில் ஒரு கருத்து, ஒரேயொரு கருத்து மட்டும் நான் எழுதினேன். அப்படியே ஆடிப் போய், அடுப்படிப் பக்கம் போய், எந்த அரிசி நல்லது, சீனி எவ்வளவு எடுக்கலாம், உப்பு ஏன் கூடாது என்று வேற பக்கம் நானும் ஓடி விட்டன்.......😀   

😀....

அப்படி தடக்கி விழுந்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆள் மற்ற ஆளைப் பார்த்து கேட்பார், 'பாஸ், நீங்க என்ன டெக்னாலஜி.......'

அது அப்படியில்லை…

சீமானிற்கு சேதம் அதிகம் ஆகாமல் தடுக்க….பையன் தன்னைத்தானே தியாகம் செய்துள்ளார்😀.

நானும் விளங்கி, விலகியுள்ளேன்.

13 hours ago, பெருமாள் said:

நல்ல காலம் Slave i remain என்ற சொல் ஆங்கிலம் இல்லைஎன்று சொல்லாமல் விட்டது பெரும் அதிசயம்  தேவையில்லாமல் தொப்பியை துக்கி போட்டு தேவயில்லாமல் நாடகம் போடுகிறீர்கள் சேர் பிரச்சனை யில் Slave i remainஎன்பது பொய்யாக இருக்கட்டும் உண்மையாக இருக்கட்டும் பக்ட் செக் என்ற ஒன்றை இழுத்தால் உண்மையாகும் என்றால் இனி உங்கள் கருத்துகளையும் சரி  பிழை பக்ட் செக் தான் நீதிபதி .😃

Fact-check இல்லாட்டில் எந்த கண்றாவியையாவது யாழில் கொணர்ந்து கூவி விற்கலாம்….

என்ன செய்வது….அறுவார்…பொல்லும் கையுமா ஒவ்வொரு முடக்கிலேம் நிக்கிறானுவ.

#மைண்ட்வாய்ஸ் 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

நல்ல காலம் Slave i remain என்ற சொல் ஆங்கிலம் இல்லைஎன்று சொல்லாமல் விட்டது பெரும் அதிசயம்  தேவையில்லாமல் தொப்பியை துக்கி போட்டு தேவயில்லாமல் நாடகம் போடுகிறீர்கள் சேர் பிரச்சனை யில் Slave i remainஎன்பது பொய்யாக இருக்கட்டும் உண்மையாக இருக்கட்டும் பக்ட் செக் என்ற ஒன்றை இழுத்தால் உண்மையாகும் என்றால் இனி உங்கள் கருத்துகளையும் சரி  பிழை பக்ட் செக் தான் நீதிபதி .😃

யார் கருத்தையும், தகவலையும் தரவு சரி (fact-check) பார்க்க யாழில் தடையில்லை. செய்யலாம், நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். சில சமயங்களில் பிழையான கேள்வியை சற் ஜிபிரியிடம் கேட்டு, நீங்கள் விரும்பிய பதிலைப் பெற்று, குதூகலத்துடன் வந்து, முகம் சோர்ந்து போயிருக்கிறீர்கள்😂. அனேகமாக மறந்திருப்பீர்கள் இதையெல்லாம், இவை கசப்பான அனுபவங்கள் என்பதால்!

சுருக்கமாக: "வேலைப் பழு, நேரமின்மை, இவையெல்லாம் தரவு சரி பார்ப்பதற்கு தடை" என்பது அறிவலட்சியத்தின் இன்னொரு வெளிப்பாடு. அப்படி சரி பார்க்காத தகலவல்களைப் சும்மா போட்டு விடுவோம் என்பது "வாசகன் கேனையன் தானே?" என்ற இறுமாப்பின் வெளிப்பாடும் கூட😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

உங்களுக்கு யாழில் நடக்கும் வழமையான விடயங்களை எனக்கு சொல்லி மகிழ்ந்து கொள்வதில் அடித்து கொள்ள உங்களை விட்டால்  வேறு ஆள் கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு யாழில் நடக்கும் வழமையான விடயங்களை எனக்கு சொல்லி மகிழ்ந்து கொள்வதில் அடித்து கொள்ள உங்களை விட்டால்  வேறு ஆள் கிடையாது .

மீள உரைத்தல் தவறல்ல, நினைவு மங்கும் பிரச்சினையுள்ள கேட்போரோடு பேசும் போது, மீள உரைத்தல் தவறல்ல!😎

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.