Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அக்பர் உசேன்
  • பதவி, பிபிசி செய்தி பங்களா
  • 9 ஏப்ரல் 2024, 11:55 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்கும் வகையில் எதையும் செய்யவும் இரான் விரும்பவில்லை.

இரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, இரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இரான் எப்போது, எங்கு இந்தத் தாக்குதலை நடத்தும் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ரமலான் மாதத்தின் கடைசி வாரத்திற்கு இடையில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இரானுக்குள் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுமா அல்லது இராக் மற்றும் சிரியாவின் மண் இதற்குப் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமெரிக்க உளவு நிறுவனத்திற்கும் அதிகம் தெரியவில்லை.

இதற்கிடையில், இரான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இது நடந்தால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் தொடங்கும்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்?

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால், இரானுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும். மறுபுறம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு இரான் பதிலளிக்கத் தவறினால், அதன் இராணுவத் திறன்களும் கேள்விக்குட்படுத்தப்படும்.

இதன் விளைவு, இரானை பலவீனமாகக் கருதும் இஸ்ரேல் எதிர்காலத்தில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படும்.

இரான் முன் உள்ள சவால், அது தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ளக் கூடாது. எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அது நிரூபிக்க வேண்டும்.

ஆனால் சிரமம் என்னவென்றால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தொடங்காமல் இரான் இஸ்ரேலுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? மற்றொரு கேள்வி என்னவென்றால், இஸ்ரேலைத் தாக்கும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் திறன் இரானுக்கு இருக்கிறதா?

இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடும் திறன் இரானுக்கு இல்லை என்று மத்திய கிழக்கு விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான அலி சத்ரசாதே பிபிசியிடம் தெரிவித்தார்.

“இரான், தங்கள் நாட்டு மக்களுக்காகவாவது கண்டிப்பாக இஸ்ரேலுக்கு பதிலளிக்க வேண்டும். இது தவிர, தனது நட்பு நாடுகளுடன் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இரான், இஸ்ரேல் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் பரவாயில்லை. இஸ்ரேலுக்கு எதிராக இரான் எந்த ஒரு வலுவான பதிலடியையும் கொடுக்கும் சாத்தியம் குறைவு. எனவே இரான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்கிறார் அலி சத்ரசாதே.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது இரானின் முன்னுரிமை அணுகுண்டு தயாரிப்பதே. ஒரு சில பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி 100 இஸ்ரேலியர்களைக் கொல்வதை விட அணுகுண்டு தயாரிப்பில் முன்னேறுவது தான் அந்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் தாக்குதலையும் இரான் தடுத்து நிறுத்தும்” என்றார்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்.

ஹெஸ்புல்லாவின் நிலைப்பாடு என்ன?

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, பல இரான் ஆதரவு குழுக்கள் சிரியா, இராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய குழுக்களைத் தாக்கியுள்ளன. இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபட விரும்பவில்லை.

"இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள், அவ்வாறு தாக்குவது மிகவும் கடினம்." என்கிறார் அலி சத்ரசாதே.

உலகிலேயே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுவாக உள்ளது ஹெஸ்புல்லா. இது ஒரு நாட்டின் இராணுவ அமைப்பு இல்லை என்றாலும், இதில் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் போராளிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். சிரியப் போரில் பங்கேற்றதன் மூலம், போர்க்கள அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லாவிடம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இருந்த போதிலும், இரான் சார்பாக ஹெஸ்புல்லா இனி இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபடாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஹெஸ்புல்லா இஸ்ரேலின் வலையில் விழ விரும்பவில்லை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார் என்பது நன்றாகவே தெரியும்.

இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலமும் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலுடன் நேரடிப் போரை நடத்தாமல் ஒரு குறியீட்டு பதிலடியை தான் இரான் எதிர்பார்க்கிறது என்று மத்திய கிழக்கு நிபுணர் சத்ரசாதே நம்புகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இராக்கில் இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு 'கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை' எடுக்கப்படும் என இரான் அச்சுறுத்தியது, ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை.

சுலேமானியின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது இரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அந்த தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

தாக்குதலுக்கு முன்னதாகவே ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வர்ஜீனியா டெக்கின் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் அண்ட் இன்டர்நேஷனல் அஃபர்ஸைச் சேர்ந்த யூசுப் அஸிஸி பிபிசியிடம், “திரைக்குப் பின்னால் இரானுக்குள் இரு சக்திகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இரான் அணுசக்தி நாடாக மாறுவதன் மூலம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் விரும்புகிறது, மறுபுறம் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கி பதிலடி கொடுக்க விரும்புகிறது.

இந்தச் சூழ்நிலையில் பொறுமையாக இருந்து, அணுசக்தியை மேம்படுத்துவதுதான் இரானின் முன்னுரிமையாக இருக்கலாம் என்கிறார் அவர்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

மத்திய கிழக்கில் பெரிய போர் எதுவும் வெடிப்பதை இரான் விரும்பவில்லை. இரானுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களைத் தாக்கும் ஆயுதக் குழுக்களுக்கு அது தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

இரண்டாவதாக இரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புகின்றன.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க அதிகாரிகள் இரானை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர, இராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது ராணுவ வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்தக் கூடிய தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது.

எவ்வாறாயினும், சிரியா மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க உளவுத் துறையால் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் துணைத் தலைவர் முகமது ஜம்ஷிதி தனது சமூக ஊடகப் பக்கத்தில், "உங்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம், விலகி இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

தனது சமூக ஊடகச் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தளங்களைத் தாக்க வேண்டாம் என்று இரானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக ஜம்ஷிதி கூறினார்.

இரானிடம் இருந்து அமெரிக்காவிற்கு எழுத்துப்பூர்வ செய்தி வந்துள்ளதாக அமெரிக்க செய்தி சேனலான சிபிஎஸ் (CBS) உறுதிப்படுத்தியுள்ளது.

இரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு எச்சரிக்கை கடிதத்தையும் அமெரிக்கா எழுதியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஒருபுறம், எதிர்காலத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துணியக்கூடாது என்று இரான் விரும்புகிறது, மறுபுறம் மத்திய கிழக்கில் புதிய போரைத் தொடங்கவும் இரான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இரான் குழப்பத்தில் உள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் பிபிசியிடம் பேசுகையில், “இரான் உண்மையில் ஒரு 'காகிதப் புலி' என்பதை உலகிற்கு காட்ட, இஸ்ரேல் ஒரு பதற்றத்தை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.

"இந்த விஷயத்தில் இரான் பதிலளிக்கவில்லை என்றால், அது ஒரு 'காகிதப் புலி' தான் என்றும், பதிலடி கொடுக்கும் திறன் அதற்கு இல்லை என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும்," என்று ஒரு பெயர் கூற விரும்பாத அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி இராக்கில் படுகொலை செய்யப்பட்டார்.

இப்போது இரான் என்ன செய்யும்?

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு யூத நிறுவனங்களை இரான் தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மத்திய கிழக்கு நிபுணர் எலியட் ஆப்ராம்ஸ், “இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இரான் தனது அணுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்க முடியும். யுரேனியத்தை சிறப்பாக செறிவூட்டுவதன் மூலம், அணு குண்டுகளை தயாரிக்க அதை பயன்படுத்த முடியும் அல்லது இரான் அணு ஆயுதங்களை மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கை இரானுக்கு பாதகமாக அமையக்கூடும் என்று பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இரான் இதைச் செய்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்க முன்வரும்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் (Center for Strategic and International Studies) மத்திய கிழக்கு நிபுணர் ஜான் ஆல்டர்மேன், இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை இரான் எடுக்காது என்று நம்புகிறார்.

“இஸ்ரேலுக்கு பாடம் கற்பிப்பதில் இரானுக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக, தாங்கள் பலவீனமாக இல்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு காட்டவே இரான் விரும்புகிறது" என்று ஜான் கூறுகிறார்.

இரான் இனி எந்தப் பாதையில் செல்லும்? இந்த விவகாரம் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் முடிவைப் பொறுத்து தான் அமையும்.

https://www.bbc.com/tamil/articles/c3g7dr79gzjo

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2024 at 00:44, ஏராளன் said:

“இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தாக்குவினம் தாக்குவினம்....79 ஆம் ஆண்டு( ஈராணில் உள்ள)அமெரிக்கா தூதகரத்தை கைப்பற்றி அங்கு அதிகாரிகளை பயணக்கைதிகளாக வைத்திருந்த காலம் தொடக்கம் இன்று வரை பயங்கரவாதத்தை வளர்த்தை விட இவர்கள் செய்த ஆக்க பூர்வமான செயல் ஏதாவது? 

அன்றைய மாணவர் எழுச்சியில் (79 களில்),புரட்சிகர படையில் பங்கு பற்றிய மாணவர்கள் கள் தான் இன்று ஈரானின் புரட்சிபடையில் தளபதிகளாக இருக்கின்றனர்....

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து.. சர்வதேச எல்லைகளை மதிக்காமல் ஊடுருவித் தாக்கும்.. இஸ்ரேலில வான்படை விமானங்களை சுட்டு வீழ்த்தலாமே. அதுக்கு வக்கில்ல... சும்மா வாயளவில் தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கும் வியாபாரம் தான் முக்கியம் ....சும்மா புருடா விட்டுக்கொண்டிருக்கினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் அதிகரிக்கின்றது – தடுத்து நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி

Published By: RAJEEBAN    12 APR, 2024 | 08:39 AM

image
 

இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களை வழங்கிவரும் அதேவேளை அமெரிக்கா ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என வோசிங்டனில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மத்தியகிழக்கில் பாரிய போர்வெடிப்பதை   தடுப்பதற்கான முயற்சிகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் இஸ்ரேலிற்கு எதிராக ஈரான் ஆளில்லா விமான தாக்குதலை அல்லது ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியாக  அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

iran.jpg

சிரியதலைநகரில் உள்ள தனது துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல்  ஏப்பிரல் முதலாம் திகதி மேற்கொண்ட  தாக்குதலிற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள டெல்நொவ் விமானதளத்தில் அமெரிக்க எவ்15 போர் விமானங்களின் முன்னாள் நின்றபடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு யார் எங்களுக்கு தீங்கிழைத்தாலும் நாங்கள் அவர்களிற்கு தீங்குவிழைவிப்போம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அனைத்து பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் தயார் பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்பு வழிமுறைகள் மூலம் இதனை உறுதி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இராஜாங்க செயலாளரின் இஸ்ரேலிற்கு வலுவான ஆதரவை தெரிவிக்கும் செய்திகள் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை தடுக்ககூடும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.

ஈரான் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கினால் அது மிக நீண்டகால யுத்தமொன்றை ஆரம்பித்துவைக்கும், இதுவரை இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல்கள் ஒரு மறைமுக யுத்தமாகவே காணப்பட்டன.

மோதல்கள் தீவிரமடைவது எவரினது நலனிற்கும் உகந்த விடயமல்ல ஈரான் தாக்குதலை மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என அன்டனி பிளிங்கென் துருக்கி சீன, சவுதிஅரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

benjamin.jpg

ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்காவின் மிகவும் உறுதியான ஆதரவு இஸ்ரேலிற்கு கிடைக்கும் என ஜோபைடன் உறுதியளித்துள்ள அதேவேளை இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அன்டனி பிளிங்கென் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை தொடர்புகொண்டுள்ளார்.

ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும்  பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும்.

எனினும் ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலிற்கு குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டால் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்வதற்கான உரிமை இஸ்ரேலிற்கு உள்ளது என பைடன் நிர்வாகம் கருதுகின்றது.

https://www.virakesari.lk/article/181017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் எண்ணத்தை ஈரான் கைவிடவேண்டும் - அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN   12 APR, 2024 | 11:07 AM

image

இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்குஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் பதற்ற நிலையை அதிகரிக்ககூடாது எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவுள்ளது என வெளியாகும் அறிகுறிகள் குறித்து அவுஸ்திரேலியா கடும் கரிசணை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181027

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் தாக்குதல் பொய்த்தே போகலாம்.

அனால், ஈரான் இஸ்ரேலுக்கு பதல் தாக்குதல்  செய்யக்கூடாது என்பது தான் மேற்கின் rule based இல் மிக முக்கியமானது.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: இந்திய மத்திய அரசு

12 APR, 2024 | 07:37 PM
image

புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று  இந்தியவெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று  இந்தியவெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181036

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி அல்லது வடபகுதி மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளலாம் - வோல்ஸ்டீரீட் ஜேர்னல்

Published By: RAJEEBAN   12 APR, 2024 | 04:50 PM

image

the wall street journal

ஈரான் இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி மீது அல்லது வடபகுதி மீது நேரடி தாக்குதலை மேற்கொள்ளலாம் கருதும் இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்வதற்காக தயாராகிவருகின்றது என விடயம் குறித்து நன்கு அறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார் என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது

அமெரிக்க ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

iran.jpg

இதேவேளை ஈரானின் தலைமைத்துவத்திடமிருந்து தகவல்களை பெற்ற ஒருவர் ஈரான் தாக்குதல்களிற்கு திட்டமிடுகின்றது, ஆனால் இன்னமும் இறுதிமுடிவு எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

கடந்தவாரம் சிரிய தலைநகரில் உள்ள துணை தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் தளபதிகள் உட்பட ஈரான் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்ப்பட்டனர்.

முன்னதாக ஈரான் அல்லது அதன் சார்பு குழுக்கள் இஸ்ரேலின் தூதரகம் அல்லது அதற்கு சொந்தமான கட்டிடம் மீது தாக்குதலை மேற்கொள்வது உறுதி என்பதை வெளிப்படுத்தும் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

எனினும் தற்போது இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்குள் இடம்பெறலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன

அடுத்த சில நாட்களில் இஸ்ரேலிற்குள் ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவிப்பதாக விடயங்கள் குறித்து நன்கறிந்த அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இஸ்ரேலின் தூதரகங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய பல கட்டிடங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து ஈரான் இராணுவம்  ஈரானின் மததலைவர்  ஆயத்தொல்லா அலி கமேனியுடன் ஆராய்ந்தது என இராணுவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிநவீன குறுந்தூர ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்தும் ஈரான் இராணுவம் ஆராய்ந்துள்ளது.

இஸ்ரேலின் ஹைபா விமானநிலையம் டிமோனாவில் உள்ள அணுவாயுத பொருட்கள் தொழிற்சாலை போன்றவற்றின் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெறுவதை சித்தரிக்கும் வீடியோக்களை ஈரானின் புரட்சிகர காவல்படையின் சமூக ஊடகபக்கங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரானின் மின்சக்தி மற்றும் உப்புநீக்கும் தொழிற்சாலைகள் தாக்கப்படலாம் என ஈரான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை நேரடி தாக்குதல்கள் எதிர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்தலாம். இஸ்ரேல் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கலாம், பின்னர் ஈரானின் மூலோபாய உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என அவர் கருதுகின்றார்.

தாக்குதல் திட்டம் ஆன்மீகதலைவரின் முன்னிலையில் உள்ளது அவர் இன்னமும் உரிய பதிலை வழங்கவில்லை என ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிரியா ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை மேற்கொள்வது குறித்த திட்டமும் காணப்படுகின்றது. இந்த தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக ஈரான் சமீபத்தில் ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளது என சிரிய அரசாங்கம் மற்றும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் தாக்குதலை நடத்துவதை தவிர்ப்பதற்காக  1981ம் ஆண்டு சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலான் குன்றின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டமும் காணப்படுகின்றது. காசாவிலும் தாக்குதல் இடம்பெறலாம்.

இஸ்ரேலுடனான உறவுகளிற்காக விலைசெலுத்தவேண்டியிருக்கும் என்பதை காண்பிப்பதற்காக அராபிய நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டமும் உள்ளதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/181028

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ் ஏவுகணைகள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை ஈரான் இஸ்ரேலிற்கு எதிரான தாக்குதலிற்கு பயன்படுத்தலாம் - சிபிஎஸ்

Published By: RAJEEBAN   12 APR, 2024 | 08:28 PM

image

bbc

ஈரானின் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் தனது யுத்தகால அமைச்சரவையை சந்திக்கவுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இராணுவதளபதிகள் கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் எந்தவேளையிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கலாம் என வெளியாகும் தகவல்களால் மத்திய கிழக்கில் பதட்டநிலை காணப்படுகின்றது.

எவ்வேளையிலும் இஸ்ரேல் மீதான தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

ஈரான் 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் இராணுவ கட்டமைப்புகளை ஈரான் இலக்குவைக்கலாம் அதனை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிற்கு மிகவும் சவாலான விடயமாக காணப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஈரான் தாக்குதலை கைவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று இந்த தாக்குதல் இடம்பெறலாம் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஈரான் 150 குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளன.

ஈரான் தனது தாக்குதல் திட்டத்தை மிகப்பெரியதாக்கியுள்ளது. தனது ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவை இலக்குகளை அடையவேண்டும் என கருதும் ஈரான் அதற்காகவே மிகப்பெரிய எண்ணிக்கையில் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/181037

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தினால்...' - ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை, பதற்றத்தில் மத்திய கிழக்கு

"இஸ்ரேல் மீது இரான் விரைவில் தாக்குதல் நடத்தும்" - பைடன் எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, இரானை ஜோ பைடன் எச்சரித்துள்ளார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், கேத்ரின் ஆர்ம்ஸ்ட்ராங் & மத்திய கிழக்கு செய்தியாளர் ஹூகோ பசேகா
  • பதவி, லண்டன் மற்றும் ஜெருசலேமிலிருந்து
  • 19 நிமிடங்களுக்கு முன்னர்

இரானில் ஏப்ரல் ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதலில் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு அந்நாடு பதிலடி தரும் என அச்சம் நிலவிவரும் நிலையில், இரான் இஸ்ரேலை “விரைவில் தாக்கும்" என்று எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உள்ள இரான் தூதரகத்தைத் தாங்கள் தாக்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல்தான் அத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் விரைவில் நிகழலாம் என, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் “வேண்டாம்” என, இரானுக்கு பைடன் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம்,” என பைடன் தெரிவித்தார். “இஸ்ரேலை பாதுகாக்க நாங்கள் உதவுவோம். இரான் இதில் வெற்றி பெற முடியாது,” என அவர் எச்சரித்தார்.

காஸாவில் இஸ்ரேலுடன் சண்டையிடும் பாலத்தீன குழுவான ஹமாஸ் மற்றும் அப்பிராந்தியத்தில் அதுபோன்ற மற்ற குழுக்களையும் இரான் ஆதரித்து வருகிறது. இஸ்ரேலியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து வரும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பையும் இரான் ஆதரித்து வருகிறது.

லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி “டஜன்" கணக்கிலான ராக்கெட்டுகளை ஏவியதாக ஹெஸ்புல்லா அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. சுமார் 40 ஏவுகணைகள் மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதில் எந்த உயிர்ச்சேதமும் பதிவாகவில்லை. மேலும், இதில் தொடர்புடைய மற்ற அமைப்புகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை.

 

போரை விரும்பாத அண்டை நாடுகள்

"இஸ்ரேல் மீது இரான் விரைவில் தாக்குதல் நடத்தும்" - பைடன் எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம்

இரான் வேண்டுமென்றே மத்திய கிழக்கு மற்றும் வாஷிங்டனை யூகிக்க வைப்பதாக, பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃப்ராங்க் கார்ட்னர் தெரிவிக்கிறார்.

டமாஸ்கஸில் உள்ள தூதரகத்தில் ஏப்ரல் 1 அன்று கடும் தாக்குதலைத் தொடர்ந்து, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இரானிய பினாமிகளுக்கு இரான் தனது ரகசிய ஆயுத விநியோகத்தை வழிநடத்துவதாக இஸ்ரேல் நம்பி வருகிறது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரானின் பாதுகாப்பு அமைப்புகள், தங்கள் பதிலடி குறித்து விவாதித்து வருகிறது.

மிகவும் கடுமையாகத் தாக்கினால், இஸ்ரேல் பேரழிவு சக்தியுடன் பதிலளிக்கும். மிகவும் இலகுவாகச் சென்றால், இரான் பலவீனமானதாகவும் பயனற்றதாகவும் கருதப்படும் அபாயம் உள்ளது. ஒரு தந்திரோபாய கண்ணோட்டத்தில், பிராந்தியம் முழு விழிப்புடன் இருக்கும்போதும் அமெரிக்கா உலகிற்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கூறிவரும் நிலையிலும் இரான் இப்போது பதிலளிப்பதில் அர்த்தமில்லை.

தெஹ்ரான் மற்றும் கோம்-இல் உள்ள நடைமுறைவாதிகள் கட்டுப்பாட்டை வலியுறுத்துவர். அதேநேரத்தில், இரானின் வயதான அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமேனி உட்பட பருந்துகள் உறுதியான பதிலைக் கோருவர்.

ஆனால் இரான் ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை. வளைகுடாவின் அரபுப் பக்கத்தில் உள்ள அதன் அண்டை நாடுகளும் போரை விரும்பவில்லை. அங்குள்ள அரசாங்கங்கள் ஏற்கெனவே இரானிடம் கட்டுப்பாடு காக்க வேண்டும் எனக் கேட்டுள்ளன. வெற்றி பெறப்போவது, பருந்துகளா அல்லது புறாக்களா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

 

ராணுவத்தைத் தயார் செய்யும் இஸ்ரேல்

"இஸ்ரேல் மீது இரான் விரைவில் தாக்குதல் நடத்தும்" - பைடன் எச்சரிக்கை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,டமாஸ்கஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

அதிகரித்து வரும் பதற்றங்களால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளன. இரானை விட்டு வெளியேறுமாறு ஜெர்மனி தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பீர்ஷெபா நகரங்களுக்கு வெளியே பயணம் செய்வதையும் அமெரிக்க வெளியுறவுத் துறை தடை செய்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தனது அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். சில இஸ்ரேலியர்கள் இரானிய தாக்குதலைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினர்.

"தெற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் நாங்கள் எதிரிகளால் சூழப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்" என்று ஜெருசலேமில் உள்ள சந்தையில் ஏ.எஃப்.சி. செய்தி முகமையிடம் டேனியல் கோஸ்மன் கூறினார். "நாங்கள் பயப்படவில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சுற்றிப் பாருங்கள்: மக்கள் வெளியே செல்கிறார்கள்" என்றார்.

தண்ணீர், மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கான தற்போதைய வழிகாட்டுதலைத் தவிர, இஸ்ரேலிய அரசாங்கம் அதன் மக்களுக்கு எந்தப் புதிய ஆலோசனையையும் வழங்கவில்லை.

எவ்வாறாயினும், பொது தங்குமிடங்களின் தயார்நிலையை மதிப்பிடுவது உட்பட, தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளுக்கு தயாராகுமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், இஸ்ரேலிய ராணுவம் போர் துருப்புகளுக்கான விடுப்பை ரத்து செய்தது, வான் பாதுகாப்பைப் பலப்படுத்தியது மற்றும் ரிசர்வ் படைகளை அழைத்தது.

 

மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு எச்சரிக்கை

"இஸ்ரேல் மீது இரான் விரைவில் தாக்குதல் நடத்தும்" - பைடன் எச்சரிக்கை

பட மூலாதாரம்,INDEMTEL/X

படக்குறிப்பு,இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்தியாவின் அறிவிப்பு

டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் மூத்த இரானிய ராணுவத் தலைவர்களும் அடங்குவர். மேலும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள இரானின் உயர்மட்ட குட்ஸ் படையின் மூத்தத் தளபதியான பிரிக் ஜெனரல் முகமது ரேசா ஜாஹேடியும் அடங்குவார்.

இஸ்ரேல் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல்தான் தாக்குதலை நடத்தியதாக பரவலாகக் கருதப்படுகிறது. பரந்த பிராந்திய போரைத் தூண்டும் என்ற அச்சத்தால், பல நாடுகளில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலைத் தடுக்க முயன்று வருகின்றனர்.

சீனா, சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் பேசியுள்ளார். அமெரிக்க ஒருங்கிணைந்த படைத்தளபதியை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த அச்சுறுத்தலால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு வலுப்பெற்றுள்ளது என்றும், "எப்படி பதிலளிப்பது என்பதை நாங்கள் அறிவோம்" என்றும் கூறினார்.

காஸாவுக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சமூகங்களை ஹமாஸ் தாக்கியதில் காஸாவில் போர் மூண்டது. இதில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். மேலும், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். காஸாவில் 130 பணயக் கைதிகளில், குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 33,600க்கும் மேற்பட்டோரில் பொதுமக்களே பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இஸ்ரேல் தனது வடக்கு எல்லையான ஹெஸ்பொல்லாவுடன் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதேநேரம், இராக் மற்றும் ஏமனில் உள்ள இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய பகுதிகளையும் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்க முயன்றன.

ஏமனின் ஹூத்தி இயக்கம் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்தியது. இதில், குறைந்தது ஒரு கப்பலையாவது மூழ்கடித்தது. ஏமனில் உள்ள ஹூத்தி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டனை தூண்டியது.

https://www.bbc.com/tamil/articles/cv26w3jz9jzo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானில் வசிக்கும் ஜேர்மனியர்களை வெளியேறுமாறு ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

https://www.bild.de/politik/ausland/politik-ausland/joe-biden-iran-angriff-auf-israel-eher-frueher-als-spaeter-87867352.bild.html

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு ஈரானால் வெல்ல முடியுமா? 

முடியாது. 

எனவே, நேரடி மோதலைத் தவிர்த்து தனது வளங்களைப் பாதுகாக்கவே  ஈரான் முனையும். அதேவேளை பதிலடி கொடுக்கவும் வேண்டும். ஆக, ஈரானா தனது proxies மூலமாகவும் வேறு விதமாகவும் இஸ்ரேலைத் தாக்கலாம். இஸ்ரேலின் பொருளாதார மூலங்களை அழிக்கலாம். 

ஈரானை நேரடி யுத்தத்தில் இழுத்து விழுத்தி அழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம். 

அது நிறைவேறாது என நம்பலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. 

bbc world news

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. 

bbc world news

இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக அமையவே வாய்ப்புகள் அதிகம். அதை ஊதிப் பெரிதாக்குவது இஸ்ரேலின் கையில்,. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kapithan said:

இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக அமையவே வாய்ப்புகள் அதிகம். அதை ஊதிப் பெரிதாக்குவது இஸ்ரேலின் கையில்,. 🤣

ஈராக்குக்கு அடிச்சு வெற்றிவாகை சூடின மாதிரி ஈரானுக்கும் சணலடி அடிச்சு வெற்றி கிரீடத்தை தனதாக்க அமெரிக்காவுக்கு என் வாழ்த்துக்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

ஈராக்குக்கு அடிச்சு வெற்றிவாகை சூடின மாதிரி ஈரானுக்கும் சணலடி அடிச்சு வெற்றி கிரீடத்தை தனதாக்க அமெரிக்காவுக்கு என் வாழ்த்துக்கள். 😎

மூடன் தன் காலில் பட்ட (எதையோ) .......எல்லா இடங்களிலும் பிரட்டுவான் என்பது போல, அமெரிக்கனும் இஸ்ரேலும்  தான் போகும் வழி எல்லாம் அழிவையும் மரணத்தையும் விதைத்துக்கொண்டே போகிறார்கள். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

மூடன் தன் காலில் பட்ட (எதையோ) .......எல்லா இடங்களிலும் பிரட்டுவான் என்பது போல, அமெரிக்கனும் இஸ்ரேலும்  தான் போகும் வழி எல்லாம் அழிவையும் மரணத்தையும் விதைத்துக்கொண்டே போகிறார்கள். 

☹️

மறுபடியும் முதல்ல இருந்து சாமான் எல்லாம் விலை ஏறப்போகுது.. ஆனால் சம்பளம் ஏறாது.. நான் இலங்கையை பற்றி கதைக்கேல்ல.. இந்தியா ஜரோப்பா கனடா அவுஸ் எண்டு தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளையும்தான் சொல்லுறன்.. நடுத்தர மற்றும் ஏழைமக்கள் ஏற்கனவே உக்ரைன் சண்டையில் சாப்பாட்டு சாமானைகூட வாங்கும் திறனை இழந்திருக்க இதுவேற வர பட்டினிசாவு கொலை கொள்ளை எண்டு போகப்போகுது உலகம்.. எதை சாதிக்கபோகிறார்கள் இந்த போர் விரும்பும் மேற்குலக மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் நாடுகள்..??

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஈரான் பயந்திட்டு போல இருக்கு.. இது தனது தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலாக ட்றோன் ஏவி இருக்காம்.. அதுக்கும் இதுக்கும் கணக்கு சரியாம்.. இனி மேற்கொண்டு எந்த தாக்குதலும் ஈரான் செய்யாதாம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, Kapithan said:

மூடன் தன் காலில் பட்ட (எதையோ) .......எல்லா இடங்களிலும் பிரட்டுவான் என்பது போல, அமெரிக்கனும் இஸ்ரேலும்  தான் போகும் வழி எல்லாம் அழிவையும் மரணத்தையும் விதைத்துக்கொண்டே போகிறார்கள். 

☹️

இப்பிடியான  ஒரு கதையை யாழ்ப்பாணத்தான்ர வாளிக் கக்கூஸ்சு கதையிலும் சொல்லுவினம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இரான் Temu online store ல வாங்கின items வருகுது இஸ்ரேலுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக்கொள்ள முடியாத இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது என்றும் மற்றும்  பிராந்திய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும்  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏற்றுக்கொள்ள முடியாத இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது என்றும் மற்றும்  பிராந்திய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும்  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் பெயர் வெட்டுக்கிளியாக இருக்குமோ? 

 

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

மறுபடியும் முதல்ல இருந்து சாமான் எல்லாம் விலை ஏறப்போகுது.. ஆனால் சம்பளம் ஏறாது.. நான் இலங்கையை பற்றி கதைக்கேல்ல.. இந்தியா ஜரோப்பா கனடா அவுஸ் எண்டு தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளையும்தான் சொல்லுறன்.. நடுத்தர மற்றும் ஏழைமக்கள் ஏற்கனவே உக்ரைன் சண்டையில் சாப்பாட்டு சாமானைகூட வாங்கும் திறனை இழந்திருக்க இதுவேற வர பட்டினிசாவு கொலை கொள்ளை எண்டு போகப்போகுது உலகம்.. எதை சாதிக்கபோகிறார்கள் இந்த போர் விரும்பும் மேற்குலக மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் நாடுகள்..??

ஏற்கனவே $3000 வட்டியும் முதலுமாக வீட்டுக்கடன் கட்டியபடி இருக்கையில் உந்த பன்னாடைக் கூட்டத்தால வட்டி மட்டுமே $6000 கட்டிக்கொண்டு இருக்கிறன். இதுக்குள்ள இப்ப Prtrolum Gas Liter க்கு $1.65 க்கு மேல வந்திட்டுது. 

இனி exptess way exit ல் god bluss you என்று மட்டையப் பிடிக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈராக்குக்கு அடிச்சு வெற்றிவாகை சூடின மாதிரி ஈரானுக்கும் சணலடி அடிச்சு வெற்றி கிரீடத்தை தனதாக்க அமெரிக்காவுக்கு என் வாழ்த்துக்கள். 😎

 

 

இஸ்ரேல் மீது ஈரான் க‌ண்மூடி த‌ன‌மான‌ தாக்குத‌ல‌ செய்து இருக்கு..................இஸ்ரேலின் ஜ‌டோம் இய‌ங்க‌ வில்லை போல் தெரிகிற‌து....................ஈரானுக்கு ர‌ஸ்சியாவின் ஆத‌ர‌வு ம‌றைமுக‌மாய் கிடைக்குது போல் தெரிகிற‌து...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.