Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.

ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது

https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html

மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. 

மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது.

இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ  ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு  அச்சொட்டாய் ஆதாரம்  காட்ட......அந்த நாட்டையே

  • goshan_che
    goshan_che

    அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

  • goshan_che
    goshan_che

    தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"முதல் முறையாக ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது தாக்கியிருக்கிறது. இது சரித்திரத்தில் முன்னர் இடம்பெறவில்லை. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் தாக்குதலை எதிர்பார்த்திருந்தது என்பது உண்மைதான், ஆனால் இதைச் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. இஸ்ரேல் மீது ஏற்படுத்தப்போகும் அழிவுகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்ரேலின் பதிலடி அமையும். அவர்களிடம் சில தாக்குதல் திட்டங்கள் இருக்கின்றன. ஈரானின் முக்கிய இலக்குகள் மீது அவர்கள் தாக்குவார்கள். நிச்சயம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும்" என்று முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் பி பி சி இற்குக் கூறியிருக்கிறார். 

தனது டமஸ்க்கஸ் தூதரகம் மீதான தாக்குதலுக்காகவே இஸ்ரேல் மீது தாக்கினோம். தற்போது அந்த நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று ஐ நா விற்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி கூறியிருக்கிறார். 

ஆனால், இஸ்ரேல் பதில்த் தாக்குதலில் ஈடுபடுமானால், அதன்மீது மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் என்றும், நீதிக்குப் புறம்பான இஸ்ரேல் எனும் நாடு மீது தான் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா இடைமறிக்கக் கூடாது, விலகி நிற்க வேண்டும் என்றும் அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது. 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, ரஞ்சித் said:

ஆனால், இஸ்ரேல் பதில்த் தாக்குதலில் ஈடுபடுமானால், அதன்மீது மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் என்றும், நீதிக்குப் புறம்பான இஸ்ரேல் எனும் நாடு மீது தான் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா இடைமறிக்கக் கூடாது, விலகி நிற்க வேண்டும் என்றும் அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது. 

சீனா உட்பட ரஷ்யாவும் வட கொரியாவும் மறைமுகமாக ஈரானுக்கு கை கொடுக்கும் என நம்பலாம். பலகால ஒத்திகைகளை பார்க்கும் போது பாவம் இஸ்ரேல் என தோன்றுகின்றது.
அமெரிக்க தேர்தல் திருவிழாக்காலம் என்பதால் பல சம்பவங்கள் நடைபெறும் வருடமாக இது இருக்கும். 😎

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, பிரான்ஸ், ஐக்கிய ராட்சிய விமானப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். 

இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது.

பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது.

Just now, nunavilan said:

அமெரிக்க, பிரான்ஸ், ஐக்கிய ராட்சிய விமானப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன

இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
சைப்பிரசில் உள்ள ஐக்கியராச்சிய விமானபடை தளத்தில் இருந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிலிருந்து இஸ்ரேலிற்கான மிகக் கிட்டிய தூரம் 1600 கிலோமீட்டர்கள். இதனைக் கடக்க ஈரானிய ட்ரோன்களுக்கு சில மணிநேரங்கள் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட ட்ரோன்கள் இப்போதுதான் இஸ்ரேல் வான்பரப்பிற்குள் நுழைந்திருக்கின்றன. பெரும்பாலானவற்றை ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலவற்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கிறது.  சில வீழ்ந்து வெடித்திருக்கின்றன. இத்தாக்குதலில் காயப்பட்ட இஸ்ரேலியச் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

4 minutes ago, nunavilan said:

சைப்பிரசில் உள்ள ஐக்கியராச்சிய விமானபடை தளத்தில் இருந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.

தாக்குதலா அல்லது இடைமறிப்பா? 

6 minutes ago, nunavilan said:

சைப்பிரசில் உள்ள ஐக்கியராச்சிய விமானபடை தளத்தில் இருந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.

 டைபூன் ரக மிகையொலித் தாக்குதல் விமானங்களை வானுக்கு ஏவியிருக்கிறது பிரித்தானிய வான்படை. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கெதிராக வரும் ஏவுகணைகள், ட்ரோன்கள் என்று அனைத்தையும் சுட்டு வீழ்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

சந்தில சிந்துபாடக் காத்திருந்த அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். 

அடுத்தபக்கம் ரஸ்ஸியாவும், வடகொரியாவும் தமது ஆயுதக் கிடங்குகளைத் திறந்துவைத்திருப்பார்கள் ஈரானுக்காக. சீனாவும் ஆயத்தப்படும் போலத் தெரிகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.RAF_Eurofighter_Typhoon.jpg.6baf475dd9fe3c058a70d81a4b6af624.jpg

இங்கிலாந்து வானுக்கு ஏவியிருக்கும் டைபூன் ரக தாக்குதல் விமானம்

large.Drone-attack.jpg.4f42e975160d9a23151a05798e4f714f.jpg

இஸ்ரேலிய வான்பரப்பில் காணப்படும் ஈரானிய ட்ரோன்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தாக்குதலா அல்லது இடைமறிப்பா? 

ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து தாக்க உதவுகின்றார்கள். ஈரான் ஏவுகணைகளை  ஏவ தொடங்கியதாக அல்ஜசீரா சொல்கிறது. அவற்றை தாக்கவும் உதவுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா சாசனத்திற்கு உட்பட்ட வகையில் நடத்தப்பட்ட தற்காப்புத் தாக்குதலே இஸ்ரேல் மீது நாம் மேற்கொண்ட தாக்குதல் என்று ஈரான் தனது செயலை நியாயப்படுத்தியிருக்கிறது.

சிரிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கவே தனது இராணுவ வல்லுனர்கள் டமஸ்க்கஸிற்குச் சென்றிருந்தார்கள் என்றும், அவர்களையே இஸ்ரேல் நீதிக்குப் புறம்பான முறையில் கொன்றதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின்  ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் பணி தொடர்ந்து  நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலில் அமெரிக்கா இலக்குவைக்கப்படவில்லையென்றே தெரிகிறது.

தனது ஜெனரல்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கவேண்டிய கட்டாயம் ஈரானுக்கு. தனது மக்கள் முன்னால் தான் அவமானப்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இத்தாக்குதலை அடையாளமாக நடத்தியிருக்கிறது ஈரான். அதுவும் சில மணிநேரத்திலேயே தாக்குதலை முடித்துக்கொண்டு, எச்சரிக்கையுடன் மெளனமாகிவிட்டது. இஸ்ரேலைத் தவிர மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புக்களைத் தாக்குவதைக் கூடத் தவிர்த்திருக்கிறது.

ஆக, இத்தாக்குதலை நடத்தவேண்டிய கட்டாயம், ஆனால் தாக்குதலும் விஸ்த்தரிக்கப்படக் கூடாது என்கிற நிலை. 

பிரச்சினை என்னவென்றால், இஸ்ரேல் இதனை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறது என்பதுதான். ஈரான் நேரடியாகத் தன்னைத் தாக்கும்வரை இஸ்ரேல் காத்திருப்பதாகவே பலரும் கூறிவந்த நிலையில், ஈரான் அதனை இஸ்ரேலிடம் கொடுத்திருக்கிறது. 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீதான ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஐ நா செயலாளர் கண்டித்திருப்பதுடன், உடனடியாக பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புக்களும் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

சுமார் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள், பலிஸ்ட்டிக் ஏவுகணைகள், ஸ்க்ரூஸ் ஏவுகணைகள் எம்மீது ஏவப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவற்றை எமது விமானப்படை இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியிருக்கின்றது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் டனியேல் ஹகாரி கூறியிருக்கிறார்.

இஸ்ரேலிய சியோன்ஸிட்டுக்களை ஆதரித்துவரும் பயங்கரவாத நாடான அமெரிக்கா தனது செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும். இஸ்ரேலினைத் தண்டிக்கும் தனது நடவடிக்கைகளுக்கும் தனது நலன்களுக்கும் எதிராக அமெரிக்கா செயற்படுமானால் ஈரானின் பயங்கரமான பதிலடியை அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா தளம் அமைத்திருக்கும் நாடுகளோ எதிர்நோக்க வேண்டி வரும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது. 

ஸ்பெயினும், போர்த்துக்கலும் மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க கோரிக்கை விடுத்திருக்கின்றன.

ஜோர்தான் நாட்டின் தலைநகரான அம்மானில் வசிக்கும் மக்கள் தமது நகரின் மேலாக பறக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பார்த்திருக்கிறார்கள். இவற்றுள் பல அவ்வானிலேயே இடைமறிப்பால்  வெடித்திருக்கின்றன.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலையடுத்து இருதரப்பும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

பிரச்சினை என்னவென்றால், இஸ்ரேல் இதனை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறது என்பதுதான். ஈரான் நேரடியாகத் தன்னைத் தாக்கும்வரை இஸ்ரேல் காத்திருப்பதாகவே பலரும் கூறிவந்த நிலையில், ஈரான் அதனை இஸ்ரேலிடம் கொடுத்திருக்கிறது. 

இஸ்ரேல் விரும்பியபடி யுத்தம் இந்த ஒரு காரணத்தை காட்டியே பல ஆண்டுகள் கவனித்து  ஏற்கனவே திட்ட மிட்ட உளவு தகவல்களை வைத்து தாக்குவார்கள் ஈரான் வாங்கித்தான் ஆகணும் அதுக்கு மேல் போனால் இங்கு மேலே பலரும் சொல்லிய நிகழ்வு நடக்கும் .  இதனால் திங்கள் காலையில் நடக்கும் பங்கு சந்தையில் கோமணம் கூட இல்லாமல் பலர்  வெளியேற சான்ஸ் இருக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானிய ட்ரோன் வகையைச் சேர்ந்த ஒன்று

large.Iraniandrone.jpg.20e1fdd7bb4a3d7490cdc3c6c4d3f29a.jpg

குவைட் விமானச்சேவை தனது பறப்பின் பாதைகளை மாற்றி, தாக்குதல் நடக்கும் பகுதியை விலத்திச் செயற்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டென்யாகுவுடன் வெகு விரைவில் இத்தாக்குதல் குறித்துப் பேசப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. மேலும் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலுடன் பைடன் தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று அது கூறுகிறது.

இதற்கிடையில் தான் பதவியில் இருந்திருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

ஈரானியத் தாக்குதலில் தமது தளம் ஒன்று சிறிய சேதத்திற்கு உள்ளானதாக இஸ்ரேல் கூறுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான பதில்த் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கான அனுமதியினை இஸ்ரேலிய அமைச்சரவை யுத்தக் கவுன்சிலுக்கு வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது. 

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ட்டின், இஸ்ரேலுக்கு விடுத்த வேண்டுகோளில் ஈரான் மீதான பதிலடி குறித்து தமக்கு அறியத்தருமாறு கேட்டிருக்கிறார். 

அமெரிக்க அதிபருக்கும் இஸ்ரேலிய பிரதமருக்கும் இடையில் உரையாடல் ஒன்று தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் வீதியில் இறங்கி தாக்குதலிற்கு ஆதரவு

Published By: RAJEEBAN    14 APR, 2024 | 10:03 AM

image
 

இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் முன்னொருபோதும் இல்லாத பாரிய  ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களிற்கு ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளியிட்டு வருகி;ன்றனர்.

ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவரும் ஈரானிய மக்கள் ஈரான் பாலஸ்தீன கொடிகளுடன் காணப்படுகின்றனர்.

iran_supp1.jpg

டெஹ்ரானின் பாலஸதீன சதுக்கத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிற்கு மரணம் அமெரிக்காவிற்கு மரணம் என கோசம் எழுப்புகின்றனர்.

அடுத்த அடி மிகமோசமானதாக காணப்படும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையொன்றை டெஹ்ரான் பாலஸ்தீன சதுக்கத்தில் காணமுடிகின்றது.

tehransupporters.jpg

ஈரான் தலைநகரில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தின் முன்னாலும் அமெரிக்காவின் தாக்குதல் உயிரிழந்த ஈரானின் இராணுவதளபதி காசிம் சுலைமானியின் கல்லறைக்கு முன்னாலும் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/181065

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்துவதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு உதவியது – பைடன்

14 APR, 2024 | 09:45 AM
image
 

ஈரான் இஸ்ரேலை நோக்கி செலுத்திய அனைத்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை செயல்இழக்கச்செய்வதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு உதவியது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவின் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகளையும்  போர்க்கப்பல்களையும் மத்தியகிழக்கிற்கு அனுப்பியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவும் எங்களின் பாதுகாப்பு தரப்பினரின் திறமை காரணமாகவும் இஸ்ரேலை  நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை செயல் இழக்கச்செய்ய முடிந்தது என குறிப்பிட்டுள்ள அவர் ஈரானின் தாக்குதல்களை மிக கடுமையான விதத்தில் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181064

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் தாக்குதலில் பலியான உயிர்கள்! வெளியான விபரங்கள்

ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளன எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நேரத்தில் விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு வெளியே கப்பல் ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன.

ஈரானின் தாக்குதலில் பலியான உயிர்கள்! வெளியான விபரங்கள் | Death Details In Iran Attack

UAV களின் முதல் அலை இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவில் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது.

ஏவுகணைகளின் இரண்டாவது அலையால் இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து முக்கியமான தளங்களில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும் ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 வயது சிறுவன் ட்ரான் தாக்குதலால் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளான்.  

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Israel's air defence system has not faced attack of this magnitude before

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏவல்பட்ட 300 ட்ரோன்களிலும், ஏவுகணைகளிலும் 99% க்கு மேல் இஸ்ரேலும், அமெரிக்க நாசகாரிக் கப்பல்களும் சுட்டுவீழ்த்திவிட்டன. இது ஈரானின் தாக்குதல் படுதோல்வி என்றுதான் காட்டுகின்றது. ஒரு சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் அயர்ன் டோம் எதிர்ப்புப் பொறிமுறையை செயலிழக்கவைக்காமல் நடந்த தாக்குதல் வெறும் புஸ்வாணமாகப் போயிருக்கின்றது.

பதிலுக்கு இதே மாதிரி ட்ரோன்களை இஸ்ரேல் ஏவினால் ஈரானில் பெரிய அழிவு வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

ஏவல்பட்ட 300 ட்ரோன்களிலும், ஏவுகணைகளிலும் 99% க்கு மேல் இஸ்ரேலும், அமெரிக்க நாசகாரிக் கப்பல்களும் சுட்டுவீழ்த்திவிட்டன. இது ஈரானின் தாக்குதல் படுதோல்வி என்றுதான் காட்டுகின்றது. ஒரு சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் அயர்ன் டோம் எதிர்ப்புப் பொறிமுறையை செயலிழக்கவைக்காமல் நடந்த தாக்குதல் வெறும் புஸ்வாணமாகப் போயிருக்கின்றது.

பதிலுக்கு இதே மாதிரி ட்ரோன்களை இஸ்ரேல் ஏவினால் ஈரானில் பெரிய அழிவு வரலாம்.

Temu delivery..

பால்னா பொங்கும் பச்சதண்ணி எப்புடி பொங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

Temu delivery..

பால்னா பொங்கும் பச்சதண்ணி எப்புடி பொங்கும்..

இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்

வானவேடிக்கை....

சும்மா இருந்து பலவீனத்தை வெளியே காட்டாமலாவது இருந்து இருக்கலாம். 100 யை அனுப்பி லட்சத்தை வா என்று வரவழைத்து விட்டார்கள்.. வானவேடிக்கை முடிய ஈரான் அதிரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிருக்கும் ஈரான்காரரே உந்த முல்லாக்கள் அழிக்கப்படவேண்டும் என்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.