Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பையன்26 said:

நெத்த‌னியாகு ஒரு ம‌ன‌ நோயாளி எடுத்த‌துக்கு எல்லாம் ஆயுத‌ம் மூல‌ம் அடிப்பேன் என்று சொல்லுப‌வ‌ர் அவ‌ரே நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌லுக்கு பிற‌க்கு மெள‌வுன‌த்தை க‌டை பிடிக்கிறார்

காஸா யுத்தத்திற்கு முதலே நெத்தன்யாகு மேல் பாராளுமன்றம் நம்பிக்கையில்லா பிரேரணையை பலமுறை கொண்டு வந்தது. இன்றும் நெத்தன்யாகுவிற்கு எதிராக வீதி மறிப்பு போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு யுத்தம் மட்டுமே அவரை பதவி கதிரையில் அமர்த்தியுள்ளது.
நான் நினைக்கிறேன் இஸ்ரேலிய பொதுமக்கள் குழுவும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு விடுதலை/தீர்வை கொடுத்துவிட்டு தாங்கள் நிம்மதியாக வாழ நினைக்கின்றார்கள் போலும்.

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ  ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு  அச்சொட்டாய் ஆதாரம்  காட்ட......அந்த நாட்டையே

  • goshan_che
    goshan_che

    அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

  • goshan_che
    goshan_che

    தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன்ட‌ ப‌ருப்பு இனி உல‌க‌ அள‌வின் வேகாது....................சீன‌ன் நினைச்சா ஒரு நாளிளே தைவானை த‌ங்க‌ளின் க‌ட்டுப் பாட்டில் கொண்டு வ‌ருவாங்க‌ள் ஆனால் சீன‌ன் பெரிசா போர‌ விரும்புப‌வ‌ர்க‌ள் அல்ல‌

கடந்த சில நாட்களாக ஜேர்மனிய தொலைக்காட்சிகளின்  அரசியல் கலந்துரையாடல்களை கவனித்ததின் படி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் அரசியல் கொள்கைகளை மாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் பல அரசியல் மாற்றங்களை டொனால்ட் ரம்ப் வந்த பின் காணலாம் என நான் நினைக்கின்றேன்.

குட்டையை குழப்பி  அரசியல் சுகம் காணும் நிலை மாறணும்.அது எந்த நாடாகினும்....

இப்படிக்கு அரசியல் அறிஞர். 👈🏽  😎

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் தனது பலத்தைக் காட்டியுள்ளது. அடுத்து என்ன? இஸ்ரேல் இழுத்துப் போர்த்துக்கொண்டு  குப்புறப் படுக்க வேண்டுயதுதானோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்

இரானுக்கு பதிலடியாக இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது? அமெரிக்காவும் முழு போரில் இறங்குமா?

இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி நிருபர்
  • 14 ஏப்ரல் 2024

இரானால் ஒரே இரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியது.

இந்தப் பிரச்னையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நேற்றிரவு நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்து அமையும்.

இரானிய ஆட்சியை முற்றிலும் விரும்பாத நாடுகள் உட்பட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் இந்த விவகாரத்தை நிதானமாக அணுக வலியுறுத்தியுள்ளன.

இரானின் நிலைப்பாடு பின்வருமாறு உள்ளது, "கணக்கு சரி செய்யப்பட்டது, அதுதான் இந்த விஷயத்தின் முடிவு. எங்களைத் திருப்பித் தாக்காதீர்கள் அல்லது உங்களால் தடுக்க முடியாத அளவுக்கு ஒரு வலுவான தாக்குதலை நடத்துவோம்."

ஒரு குறிப்பிடத்தக்க பதிலைக் கொடுப்போம் என இஸ்ரேல் ஏற்கனவே சபதம் செய்துள்ளது. தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம், இஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் கடுமையான மற்றும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஒரு அரசாகக் கருதப்படுகிறது.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்குள் இந்த அரசு பதிலடி கொடுத்தது.

எனவே இரானின் இந்த நேரடித் தாக்குதலுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட வாய்ப்பில்லை, இருப்பினும் களத்தில் அதற்கென சில வரம்புகள் உள்ளன.

 
இரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கொடுக்கப்போகும் பதில்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இரானின் தாக்குதல் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையைக் கூட்டியுளார்.
இரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கொடுக்கப்போகும் பதில்

பட மூலாதாரம்,REUTERS

இஸ்ரேல் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

இஸ்ரேல், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளின் பேச்சைக் கேட்டு ‘மூலோபாய பொறுமையைக்’ கடைபிடிக்கலாம். இரானைத் தாக்குவதற்குப் பதிலாக லெபனானில் உள்ள ஹெஸ்புலா அல்லது சிரியாவில் உள்ள ராணுவத் தளங்கள் போன்ற இரானின் நண்பர்களை குறிவைப்பதைத் தொடரலாம். இதை இஸ்ரேல் பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

நேற்றிரவு இரான் எந்த தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவியதோ, இஸ்ரேல் அதைக் குறிவைக்கலாம். நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களால் பதிலடி கொடுக்க முடியும்.

ஆனால் அவ்வாறு நடந்தால் இரான் அதை போரின் தொடக்கமாகப் பார்க்கும். ஏனெனில் இஸ்ரேல் நேரடியாக இரானைத் தாக்குவது அதுவே முதல் முறையாக இருக்கும். இதுவரை பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரான் ஆதரவு போராளி அமைப்புகளை மட்டுமே இஸ்ரேல் தாக்கியுள்ளது.

அவ்வாறு இல்லையென்றால், இரானின் சக்தி வாய்ந்த புரட்சிகர காவலர் படைக்கு சொந்தமான தளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களைத் தாக்கி, இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம். இது விரிவான பதிலடி தாக்குதலாக இருக்கும்.

பிந்தைய இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை இஸ்ரேல் தேர்ந்தெடுத்தால், இரான் ஒரு புதிய தாக்குதலை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

 
இரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கொடுக்கப்போகும் பதில்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

அமெரிக்காவையும் முழு போரில் ஈடுபட தூண்டுமா?

இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால், இவை அனைத்தும் இரான் - இஸ்ரேல் பிரச்னையில் அமெரிக்காவையும் இழுத்துவிடுமா என்பது தான். அப்படி அமெரிக்கா உள்ளே நுழைந்தால், இரானுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே முழு அளவிலான போருக்கு அது வழிவகுக்கும்.

ஆறு வளைகுடா அரபு நாடுகளிலும், சிரியா, இராக் மற்றும் ஜோர்டானிலும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளன.

பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளை மீறி இரான் தயாரித்துள்ள பாலிஸ்டிக் மற்றும் பிற ஏவுகணைகளின் இலக்குகளாக இந்த அமெரிக்க ராணுவத் தளங்கள் மாறக்கூடும்.

ஒருவேளை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், இரான் நீண்ட காலமாக அச்சுறுத்தி வந்த ஒன்றைச் செய்யக்கூடும். அதாவது வெடிகுண்டுகள், ட்ரோன்கள் மற்றும் அதிவேக போர்க் கப்பல்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட இரான் முயற்சி செய்யலாம்.

அவ்வாறு நடந்தால் உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியை இரான் துண்டித்துவிடும்.

அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை பிராந்திய அளவிலான போருக்கு இழுத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கர நிகழ்வாக இது அமைந்துவிடும். இதைத் தவிர்க்க தான் பல அரசாங்கங்கள் இப்போது 24 மணி நேரமும் போராடி வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cp3gnvj2re3o

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய இராணுவம் அனுமதி

15 APR, 2024 | 11:44 AM
image
 

ஈரானின் முன்னொருபோதும் இல்லாத வான்தாக்குதலை தொடர்ந்து தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளிற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் போர்கால அமைச்சரவையின் நீண்ட நேர சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி ஈரானின் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்னமும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருக்கின்றோம் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த மணித்தியலாங்களில் நாங்கள் தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181103

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

@nunaviIan

 

எனது சிக்னேச்சரை வாசிக்கவும்.

எனது நக்கல்கள் பெரும்பாலும் புட்டின், சீமான், முல்லாகள் போன்றோரை பற்றியே ஆரம்பிக்கும்.

அதை சகித்து கொள்ள முடியாமல், ஏதோ புட்டினுக்கும், சீமானுக்கும் வாழ்க்கை பட்டவர்கள் போல, சிலர் என்னை பிராண்டும் போது அதே பாணியில் பதிலும் அமைகிறது.

இந்த திரியில் கூட பாருங்கள் - நான் உங்களை பற்றி எதுவுமே எழுதவில்லை - என் நக்கல் முழுவதும் முல்லாக்கள், புட்டின் மீதே இருந்தது.

ஆனால் நீங்கள் இதை கண்டு காண்டாகி, என்னை சில்லறைதனமாக தாக்குகிறீர்கள்.

கண்டுலாமல் போனாலும்….மீண்டும், மீண்டும் வந்து…..

@குமாரசாமி அண்ணை போல் நக்கல் ரசிக்கும் படி இருந்தால் நானே சிரிப்பு குறி கூட போட்டுள்ளேன்.

நீங்களும், @பெருமாள் செய்வது சில்லறை அலப்பறை.

பின்னே ஹீத்துரூ ஏர்போட்டின் உள்ளக பாதுகாப்பு நடைமுறை பற்றி, drop off, pick up க்கு போனவர்கள் சொல்வதையா நம்பவேண்டும்?

தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல், ஈரான் தூதரகம் மீது தாக்குதல் உரிமை கோரவில்லை என்பது (அதனால் பொறுப்பாக்குவது கடினம்) , தேவை இல்லை, ஏனெனில் இஸ்ரேல் வன்மையாக மறுக்கவும் இல்லை. 

இந்த மத்திய கிழக்கு  நிலையில், மறுக்காதது குற்றசாட்டை ஏற்றுக்கொள்வது, எவரென்றாலும், முக்கியமாக அரசுக்கள்,  சர்வசாதரண  ராஜதந்திரம். மேற்கும், அதை மறுக்கவில்லை, கண்டிக்கவில்லை.

மறுத்தால் செய்யவில்லை (அல்லது செய்தது) என்பது அர்த்தமல்ல. அது ராஜதந்திரத்துக்கு அப்பால் உள்ள விடயம்.

தெளிவற்ற, குழப்பகரமான ராஜதந்திரம் இருக்கிறது தான், ஆனால், இதில் அந்த நிலை இல்லை.  

பாதுகாப்பு சபை கூட அறிக்கை விட முடியாது முடக்கியது மேற்கு, எனவே மேற்கும் ஆக குறைந்தது கொள்கையளவில் இணக்கம்.  

இது முன்னோடியாய் ஏற்றப்படுத்தி உள்ளது, தூதரங்கள் அரசபடைகளால் தாக்குப்படலாம் என்பதை - மேற்கின் rule based என்பதறகு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.  
 

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி இது தான், அமெரிக்கா, uk, ஜோர்டான் பெரிய அளவில் தடுத்து விட, சாதாரண பொதுமக்கள் பகுதிக்கு வந்த மிகுதியை  கிட்டத்தட்ட முற்று முழுதாக தடுக்க முடிந்த இஸ்ரேல், எவ்வாறு இராணுவ தளம் மீது கோட்டை விட்டது?

இரான், வேறு சிறந்த தொழில்நுட்பம் பாவித்து இருக்கலாம், பெரும்பாலாவற்றை குறைந்த செலவில் உருவாக்கும் ' மொக்கு' ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் போன்றவற்றை ஏவி.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

நீங்கள் பிராண்டும் போது  மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂

நான் பிராண்டும் போது திருப்பி பிராண்டுபவர்களுக்கு நான் எப்போதும் ஒரு குறித்த மரியாதை வைத்தே உள்ளேன். அவர்கள் தாள்காசு தான்.

ஒரு நிர்வாகியாக இருந்த படி நான் இரெண்டு ஐடியில் வருவதாக சொல்லி அபாண்டம் கூறி விட்டு, ஆதாரம் கேட்டதும், பதிலே போடாமல் பின் கதவால் தப்பி ஓடிய யாழ் கள சுமந்திரன் வகையறாக்கள் - சில்லறைகள்தான்.

13 hours ago, குமாரசாமி said:

உங்களிட்ட ஒரு கேள்வி ஒண்டு கேக்கவேணும் எண்டு கனநாளாய் யோசிச்சு கொண்டிருந்தனான். அதை கேக்க இப்பதான் சரியான நேரம் எண்டு நினைக்கிறன்( இப்ப தும்மினாலத்தான் சரியாய் இருக்கும் 🤣 )


உக்ரேன் யுத்தத்திலை ரஷ்யா பலவீனமான நிலை எண்டு நீங்கள் எங்கை எப்பிடி கண்டு புடிச்சனியள்?
அதே மாதிரி ஈரான் வாணவேடிக்கை விடத்தான் சரி எண்டு எப்பிடி தீர்க்கதரிசனமாய் சொல்லுறியள்?

மேற்கத்தைய ஊடக ஆதாரங்கள் இங்கே செல்லுபடியாகாது 😎

சி ஐ ஏ சொல்லி நான் எழுதுகிறேன் அண்ணை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

காஸா யுத்தத்திற்கு முதலே நெத்தன்யாகு மேல் பாராளுமன்றம் நம்பிக்கையில்லா பிரேரணையை பலமுறை கொண்டு வந்தது. இன்றும் நெத்தன்யாகுவிற்கு எதிராக வீதி மறிப்பு போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு யுத்தம் மட்டுமே அவரை பதவி கதிரையில் அமர்த்தியுள்ளது.
நான் நினைக்கிறேன் இஸ்ரேலிய பொதுமக்கள் குழுவும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு விடுதலை/தீர்வை கொடுத்துவிட்டு தாங்கள் நிம்மதியாக வாழ நினைக்கின்றார்கள் போலும்.

நெத்தன்யாகு பதவிக்காக எதையும் செய்வார்.

அவர் மேல் ஒரு தண்டணை தொங்கி கொண்டிருக்கிறது. பிரதமர் அல்லாமல் போனதும் நேரே களிதான்.

ஆகவே யுத்தத்தை நீடிப்பது அவருக்கு இலாபமே.

ஆனால் இஸ்ரேலியர், பலஸ்தீனியர் மக்கள் மனங்கள் மாறியதாக தெரியவில்லை. இரு பகுதியும் ஆளை ஆள் அழித்தே தாம் வாழ முடியும் என நம்புகிறார்கள்.

12 hours ago, குமாரசாமி said:

தெரிவித்திருந்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் பல அரசியல் மாற்றங்களை டொனால்ட் ரம்ப் வந்த பின் காணலாம் என நான் நினைக்கின்றேன்.

 

நானும் இதையே நினைக்கிறேன்.

ஆனால் இந்த மாற்றம் ரஸ்யாவுக்கு, இஸ்ரேலுக்கு சாதகமாக, ஈரான், உக்ரேனுக்கு பாதகமாக முடியும்.

என்னை பொறுத்தவரை டிரம்ப் வருவதும் உறுதி என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!

எனக்கு நாலு மொழி தெரியும் என அவர் படம் காட்டியதை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்🤣.

அத்தோடு இந்த திரியில் பையன் என்னை நேட்டோவுக்கு மலம் கழுவுகிறேன் என்று எழுதியதன் பிந்தான் நான் அப்படி எழுதினேன்.

நினைவூட்டல்: ரசம்பூசிய கண்ணாடி

கையைதூக்கி: நான் கையை அல்லது வேறு ஏதாவது உறுப்பை தூக்கி கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் எப்படி கண்டீர்கள்? Don’t judge others by your own yardstick.

  • கருத்துக்கள உறவுகள்

இரசம் கொட்டுண்ட பழைய கண்ணாடியில் சொந்த முகத்தையே பார்க்க முடியாது.

 🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்


 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:


 

 

சொல்லவேண்டிய செய்தியை ஈரான் தெளிவாகச் சொல்லியுள்ளது. 

செய்தி போய்ச் சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேர்ந்துள்ளது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!

ந‌ண்பா இதை பெரிசு ப‌டுத்த‌ வேண்டாம் கோஷானுக்கு என்னை ப‌ற்றி ஒன்றும் தெரியாது..........

1996ம் ஆண்டு கொழும்பில் வெள்ள‌வ‌த்தையில் த‌ங்கி இருந்த‌ போது ஆங்கில‌ ருயிஸ்ச‌னுக்கு போனான் அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ஆங்கில‌ம் சிம்பிலா எழுதுவேன்

உதார‌ண‌த்துக்கு ஆங்கில‌ம் சொல்லி த‌ரும் மாஸ்ட‌ர் 15 டிக்டேச‌ன் வைச்ச‌வ‌ர் 

கிட்ட‌ த‌ட்ட‌ 10 பிள்ளைக‌ள் அவ‌ரிட‌ம் ப‌டித்தோம்

15டிக்டேச‌னில் 14 ச‌ரி எடுத்தேன் ஒரு எழுத்து பிழை விடாட்டி 15க்கு / 15 ச‌ரி எடுத்து இருப்பேன் 
ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளை விட‌ ஆங்கில‌த்தில் அதிம் ச‌ரி எடுத்த‌து நான்

பிற‌க்கு டென்மார்க் வ‌ந்து டெனிஸ் மொழியில் ப‌டிக்க‌  தொட‌ங்க‌................
ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ஜேர்ம‌ன் மொழி ப‌டிக்க‌ ஆங்கில‌மும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய் போய் விட்ட‌து இப்போது என்னை  தற்காத்துக் கொள்ளும் அள‌வுக்கு ஆங்கில‌ம் தெரியும்

இந்த‌ திரியில் நான் பெரிதும் ம‌திக்கும் குமார‌சாமி தாத்தா கூட‌ போனில் ஜேர்ம‌ன் மொழியில் க‌தைச்சு இருக்கிறேன்...............

இடையில் ஏற்ப‌ட்ட‌ கொடிய‌ நோயால்.............  ஒரு நாளுக்கு 12 குளுசையோட‌ போகுது என‌து வாழ்க்கை😞.......................

நான் நேசிக்கும் யாழ்க‌ள உற‌வுக‌ள்
இடைசுக‌ம் அடிச்சு க‌தைப்பின‌ம் ஆறுத‌ல் சொல்லுவின‌ம்  அதிக‌ம் யோசிக்க‌ வேண்டாம் என்று சொல்லுவின‌ம் உற‌வுக‌ளின் ஆறுத‌ல் உண்மையில் என‌க்கு உற்சாகத்தை சந்தோஷத்தை தந்தது🙏🥰..........................

இது தான் வாழ்க்கை யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது 

வாழும் வ‌ரை கொண்ட‌ கொள்கையோ உறுதியாய் நிக்க‌னும் என்று என‌க்கு நானே எடுத்த‌ முடிவில் சிறு மாற்ற‌ம் கூட‌   செய்ய‌ வில்லை இதுவ‌ரை  ந‌ண்பா🙏...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இதற்கான பதிலை நிர்வாகம் அனுமதிக்குமானால் பதிலளிக்க  முடியும். களவிதிகளுக்கு அமைய பதில் தரவில்லை. பின் கதவால் மாரி தவளைகளுக்காக ஓட வேண்டிய  தே வை இல்லை.

இதன் அர்த்தம் என்ன? நிர்வாகத்தில் இருந்த படி, நிர்வாகிகள் செய்ய கூடாத முறையில் நீங்கள் அன்று ரகசிய காப்பை மீறி வாயை விட்டுள்ளீர்கள்?

பலராலும், புலனாய்வாளராலும் கவனிக்கப்படும் இந்த தளத்தில், நிர்வாகம் சில ரகசிய காப்புக்கு உடன்பட்டு நடக்கும் என நம்பி எழுதுவோருக்கு நீங்கள் செய்த பச்சை துரோகம் அல்லவா இது?

இதை ஒத்து கொள்ள வெட்கமாயில்லை?

இப்படி ஒரு மாபெரும் தப்பை செய்துவிட்டு - கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி எப்படி உங்களால் தொடர்ந்தும் அந்த பொறுப்பில் இருக்க முடிந்தது?

அன்றே விலகி இருக்க வேண்டாமா?

இப்படி காட்டி கொடுக்கும் உங்களை யாழ்கள சுமந்திரன் என அழைப்பது சாலப்பொருத்தமே.

————-

இது மட்டும் இல்லை - என் பயண திரியில் கூட - நானும் செப்ரெம்பர் 2003 ஊருக்கு போனேன் - கோஷான் வெள்ளை அடிக்கிறார் என்ற தொனியில் பெருமாளோடு சேர்ந்து கோரஸ் பாடினீர்கள்.

அப்படியா? எனது அனுபவத்தை விட உங்கள் இலங்கை அனுபவம் மிகவும் வேறு பட்டு இருந்ததா? என கேட்டதும் - நான் இந்த முறை போய் வீட்டிலேயே பூட்டி கொண்டு இருந்தேன் என்ற வகையில் ஒரு மழுப்பு மழுப்பி விட்டு, யன்னலுக்கால பாய்ந்து ஓடி விட்டீர்கள்.

இப்படி முன் விரோத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு கருத்து எழுதி விட்டு கேள்வி வந்ததும் எஸ் ஆவதுதான் சில்லறைதனம்.

இது நீங்கள் யாழ்களத்தில் பல காலமாக செய்து வருவதுதான்.

 

30 minutes ago, பையன்26 said:

ந‌ண்பா இதை பெரிசு ப‌டுத்த‌ வேண்டாம் கோஷானுக்கு என்னை ப‌ற்றி ஒன்றும் தெரியாது..........

1996ம் ஆண்டு கொழும்பில் வெள்ள‌வ‌த்தையில் த‌ங்கி இருந்த‌ போது ஆங்கில‌ ருயிஸ்ச‌னுக்கு போனான் அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ஆங்கில‌ம் சிம்பிலா எழுதுவேன்

உதார‌ண‌த்துக்கு ஆங்கில‌ம் சொல்லி த‌ரும் மாஸ்ட‌ர் 15 டிக்டேச‌ன் வைச்ச‌வ‌ர் 

கிட்ட‌ த‌ட்ட‌ 10 பிள்ளைக‌ள் அவ‌ரிட‌ம் ப‌டித்தோம்

15டிக்டேச‌னில் 14 ச‌ரி எடுத்தேன் ஒரு எழுத்து பிழை விடாட்டி 15க்கு / 15 ச‌ரி எடுத்து இருப்பேன் 
ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளை விட‌ ஆங்கில‌த்தில் அதிம் ச‌ரி எடுத்த‌து நான்

பிற‌க்கு டென்மார்க் வ‌ந்து டெனிஸ் மொழியில் ப‌டிக்க‌  தொட‌ங்க‌................
ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ஜேர்ம‌ன் மொழி ப‌டிக்க‌ ஆங்கில‌மும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய் போய் விட்ட‌து இப்போது என்னை  தற்காத்துக் கொள்ளும் அள‌வுக்கு ஆங்கில‌ம் தெரியும்

இந்த‌ திரியில் நான் பெரிதும் ம‌திக்கும் குமார‌சாமி தாத்தா கூட‌ போனில் ஜேர்ம‌ன் மொழியில் க‌தைச்சு இருக்கிறேன்...............

இடையில் ஏற்ப‌ட்ட‌ கொடிய‌ நோயால்.............  ஒரு நாளுக்கு 12 குளுசையோட‌ போகுது என‌து வாழ்க்கை😞.......................

நான் நேசிக்கும் யாழ்க‌ள உற‌வுக‌ள்
இடைசுக‌ம் அடிச்சு க‌தைப்பின‌ம் ஆறுத‌ல் சொல்லுவின‌ம்  அதிக‌ம் யோசிக்க‌ வேண்டாம் என்று சொல்லுவின‌ம் உற‌வுக‌ளின் ஆறுத‌ல் உண்மையில் என‌க்கு உற்சாகத்தை சந்தோஷத்தை தந்தது🙏🥰..........................

இது தான் வாழ்க்கை யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது 

வாழும் வ‌ரை கொண்ட‌ கொள்கையோ உறுதியாய் நிக்க‌னும் என்று என‌க்கு நானே எடுத்த‌ முடிவில் சிறு மாற்ற‌ம் கூட‌   செய்ய‌ வில்லை இதுவ‌ரை  ந‌ண்பா🙏...................

பையா - நீங்கள் என்னை நேட்டோவுக்கு கழுவுதாக எழுத, ஏட்டிக்கு போட்டியாக நானும் எழுதிவிட்டேன்.

அதை பெரிதுபடுதாமைக்கு நன்றி.

உங்கள் - நோய் பற்றி இப்போதே அறிகிறேன் - 25 வருடமாக ஊசியும் கையுமாக இருப்பவன் நான் என்ற வகையில், நீங்கள் தைரியசாலி, தொடர்ந்து தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்பதை மீள வலியுறுத்துகிறேன்❤️.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

சி ஐ ஏ சொல்லி நான் எழுதுகிறேன் அண்ணை 🤣

பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா...
உப்புடித்தான் சிஐஏ  ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு  அச்சொட்டாய் ஆதாரம்  காட்ட......அந்த நாட்டையே அழிச்சு நாசமாக்கினார்கள். அதே போல லிபியா,சிரியா எண்டு ஒரு பட்டியலே நீளும்....

ஈராக்கிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂
லிபியாவிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂
சிரியாவிலை சிஐஏ சொன்னது உண்மை எண்டால்😂
ஆப்கானிஸ்தானிலை சிஐஏ சொன்னது சரி எண்டால்😂
உக்ரேனிலை சிஐஏ சொல்லுறதெல்லாம் சரி எண்டால்😂

என்ரை அன்புத்தம்பி கோஷான் சொல்லுறதும் சரிதான்....🤣

அரோகரா....அரோகரா சாமிவாறார் வழி விடுங்கோ😎

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா...
உப்புடித்தான் சிஐஏ  ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு  அச்சொட்டாய் ஆதாரம்  காட்ட......அந்த நாட்டையே அழிச்சு நாசமாக்கினார்கள். அதே போல லிபியா,சிரியா எண்டு ஒரு பட்டியலே நீளும்....

ஈராக்கிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂
லிபியாவிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂
சிரியாவிலை சிஐஏ சொன்னது உண்மை எண்டால்😂
ஆப்கானிஸ்தானிலை சிஐஏ சொன்னது சரி எண்டால்😂
உக்ரேனிலை சிஐஏ சொல்லுறதெல்லாம் சரி எண்டால்😂

என்ரை அன்புத்தம்பி கோஷான் சொல்லுறதும் சரிதான்....🤣

அரோகரா....அரோகரா சாமிவாறார் வழி விடுங்கோ😎

 

ஓவர் நக்கல்…🤣….

சோத்துக்கு சிங்கி அடிக்கும் எனக்கு சி ஐ ஏ தகவல் சொல்லுமா 🤣

நான் மேலே எழுதியது நடப்பவைகளை வைத்து நான் கருதும், எனது கருத்து.

அது எனது கருத்து என்பதால்தான் எந்த டிக் டொக் ஆதாரத்தையும் இணைக்கவில்லை.

அண்ணை நான் இவர்களை அச்சா பிள்ளைகள் என சொல்லவில்லை.

அவர்களுக்கு சில மூலோபாய குறிக்கோள்கள் உள்ளன.

அதில் ஒன்று மத்திய கிழக்கில் ஸ்திரமின்மையை பேணுவது. இன்னொரு ரஸ்யாவில் யெல்சின் அல்லது பழைய புட்டின் போல ஒரு நட்பு சக்தியை வைத்திருப்பது.

இரெண்டையும் அடையும்/ தொடர்ந்து பேணும் எத்தனிப்பே நாம் இப்போ காண்பது. 

இப்போ ரஸ்யா உக்ரேனில் முடக்கப்பட்டுள்ளதா? நிச்சயமாக ஆம். மத்திய கிழக்கில் மட்டும் அல்ல, அண்டைநாடுகளான கசகஸ்தான், ஆர்மேனிய, ஜோர்ஜிய, துருக்மனிஸ்தான் க்கு கூட படை அனுப்பி மேலாண்மையை பேணும் நிலையில் இப்போ ரஸ்யா இல்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகிறன. ஏன்? முழுப்பலமும் 21% உக்ரேனை தக்கவைப்பதில் செலவழிகிறது.

தமக்கு எந்த செலவுமில்லாமல் மேற்கு ரஸ்யாவை உலக இராணுவ அரங்கில் இருந்து வெளியேற்றி வைத்துள்ளது.

டிரம்ப் வந்த பின் - நிலைமை நிச்சயம் தலை கீழாக மாறும் (ஏன் என்றால் டிரம்பின் துருப்பு புட்டின் கையில்).

ஏதோ ஒரு ஒப்பந்தம் மூலம் புட்டினை தாஜா செய்வார் டிரம்ப். அது உக்ரேனுக்கு பாதிப்பாகவே அமையும்.

அதற்கு பிரதியுபகாரமாக ஈரானுக்கு வாயளவு உதவியோடு நிறுத்தி கொள்வார் புட்டின். 

ஆங்கிலத்தில் time is of the essence என்பர். உக்ரேன் விடயத்திலும் அதுதான்.

வாலி சொன்னது போல் ஈரானின் முல்லா+புட்டின் சாம்ராஜ்யங்கள் ஒரு சேர முடியும் நிலை ஏய்தப்பட - நொவெம்பர் 2024 வரைக்கும் மட்டுமே காலம் இருக்கிறது.

இல்லாவிடின் சகல எதிர்வுகூறல்களையும் பொய்யாக்கி - பைடன் வெல்ல வேண்டும்.

பிகு

மேலே எழுதியது என் கருத்து.

தனிப்பட்டு என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

1. ஈரானில் சொந்த மக்களை,மத, இன, பால்நிலை, இனச்சேர்க்கை விருப்பு அடிப்படையில் துன்புறுத்தும் முல்லாக்கள் ஒழிய வேண்டும்.

2. ரஸ்யாவில் ஜனநாயகத்தை கேலிகூதாக்கி, ஆயுட்கால அதிபராகியுள்ள, அன்நாட்டின் வளங்களை ஒலிகார்குகளு தாரை வார்த்த புட்டின் - ரஸ்யர்களுக்காக - ஒழிய வேண்டும்

3. ஏனைய சிறிய ஐரோபிய தேசிய இன வழி நாடுகளின் சுய உரிமையை கேள்விக்குள்ளாக்கி mother Russia விற்குள் போலந்து முதல் பெலரூஸ் வரை தேசிய இனங்களை விழுங்கும், புட்டினின் 2ம் ரஸ்ய சாம்ராஜ்ய கனவு தோற்கடிக்கப்படவேண்டும்.

4. இந்த கனவின் முதல் போரிற்கு முகம் கொடுத்துள்ள உக்ரேனிய தேசிய இனம் வென்று, அதன் சுயநிர்ணய உரிமை நிலை நாட்டப்படவேண்டும்.

5. பலஸ்தீனருக்கும், இஸ்ரேலுக்கும் கீறின் லைன் எனப்படும், 1969 இல் இருந்த சர்வதேச அங்கீகாரமுள்ள எல்லைகள் அடிப்படையில் இரு நாடுகள் அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

அவர்களுக்கு சில மூலோபாய குறிக்கோள்கள் உள்ளன.

அதில் ஒன்று மத்திய கிழக்கில் ஸ்திரமின்மையை பேணுவது.

 

ஏனைய கருத்துக்களில் மறுக்க எதுவும் இல்லை.

ஆனால், ஸ்திரத் தன்மை இல்லாமல் இருப்பதை அனேகமான மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. தங்கள் நலனுக்காக பல நாடுகளில் மேற்குலகம் ஸ்திரமின்மையை ஊக்குவித்தமை பனிப்போர் காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஈராக் ஒரு அமெரிக்க நிர்வாகத்தின் பெரும் முன் யோசனையற்ற தவறு. ஆப்கானிஸ்தான் நேட்டோ போயிருக்க வேண்டிய இடம் தான், அமெரிக்க படைகள் அங்கே நடந்து கொண்ட விதம் தவறானாலும். சிரியாவின் ஸ்திரமின்மை - தோற்றுவாயோ, தற்கால நிலையோ- மேற்கின் முழுத்தவறல்ல.

இது என் கருத்து. (நீங்கள் மட்டும் எழுதிக் கொண்டிருக்க எனக்கு லாங்லியில் இருந்து போனைப் போட்டுத் திட்டுறாங்கள், எனவே நானும் எழுத வேண்டியதாயிற்று😎!)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணாவும் க‌ள‌த்தில் குதித்து விட்டார்

இந்த‌ திரி இனி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டும்🤣😁😂.............................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

ஜஸ்ரின் அண்ணாவும் க‌ள‌த்தில் குதித்து விட்டார்

இந்த‌ திரி இனி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டும்🤣😁😂.............................

அப்படியெதுவும் நடக்காது😂.

இஸ்ரேலும், ஈரானும் என்னைப் பொறுத்த வரையில் புத்தி சாலிகள் (ரஷ்யாவை விட). துலங்கல் செய்யாமல் இருந்து தவறான சமிக்ஞையைக் கொடுக்காமல், பொருத்தமான எதிர்வினையை ஆற்றி விட்டு அடங்கியிருக்கிறார்கள். இனி proxy யுத்த முனைக்குத் திரும்பி விடுவர் இரு தரப்பும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

அப்படியெதுவும் நடக்காது😂.

இஸ்ரேலும், ஈரானும் என்னைப் பொறுத்த வரையில் புத்தி சாலிகள் (ரஷ்யாவை விட). துலங்கல் செய்யாமல் இருந்து தவறான சமிக்ஞையைக் கொடுக்காமல், பொருத்தமான எதிர்வினையை ஆற்றி விட்டு அடங்கியிருக்கிறார்கள். இனி proxy யுத்த முனைக்குத் திரும்பி விடுவர் இரு தரப்பும்.

ஈரானில் இந்த அத்துமீறலை அல்லது நேரடியான யுத்தத்தை இஸ்ரேல் மன்னித்து மறந்து விடும் என்கிறீர்களா?

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

ஏனைய கருத்துக்களில் மறுக்க எதுவும் இல்லை.

ஆனால், ஸ்திரத் தன்மை இல்லாமல் இருப்பதை அனேகமான மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. தங்கள் நலனுக்காக பல நாடுகளில் மேற்குலகம் ஸ்திரமின்மையை ஊக்குவித்தமை பனிப்போர் காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஈராக் ஒரு அமெரிக்க நிர்வாகத்தின் பெரும் முன் யோசனையற்ற தவறு. ஆப்கானிஸ்தான் நேட்டோ போயிருக்க வேண்டிய இடம் தான், அமெரிக்க படைகள் அங்கே நடந்து கொண்ட விதம் தவறானாலும். சிரியாவின் ஸ்திரமின்மை - தோற்றுவாயோ, தற்கால நிலையோ- மேற்கின் முழுத்தவறல்ல.

 

பல இடங்களில் ஸ்திரதன்மையை ஊக்குவித்தார்கள்தான் (ஜேர்மனி, முன்னாள் வோர்சோ நாடுகள், தாய்வாய், கொரியா, இலங்கையில் எடுத்த எடுக்கும் நிலைப்பாட்டுக்கும் இந்த அணுகுமுறையே காரணம்).

சில இடங்களில் இதை உருவாக்க முனைந்து தோற்றார்கள்(ஆப்கானிஸ்தான்).

சில இடங்களில் இதை உருவாக்க முனைந்து வென்றார்கள் (யுகோஸ்லாவியாவில் இருந்த நாடுகள், குறிப்பாக கொசோவோ, வட அயர்லாந்து) 

சில இடங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தார்கள் (வியட்னாம், ஈராக், வெனிசுவேலா).

சில இடங்களில் ஸ்திரமின்மையை தூண்டுகிறார்கள். இதில் எண்ணை வள நாடுகள் உள்ள மத்திய கிழக்கு விழுகிறது.

இதில் அவர்கள் (அவர்கள் நாட்டில் வாழும் எம்) சுயநலம் அடங்கியுள்ளது.

உலகின் 65% மொத்த எண்ணை வளத்தையும், விநியோகத்தையும், சுயஸ் கால்வாய் வர்த்தக பாதையையும் MBS, ஈரான் முல்லாக்கள், ஹிஸ்புலா, ஹமாஸ், முஸ்லிம் பிரதர்ஹூட் போன்ற மண்டை விறைச்ச கேசுகள் கையில் கொடுத்தால் நிலைமை எப்படி இருக்கும்?

நம்பிக்கையாளனுக்கு லீட்டருக்கு 20 ரூபாய். காபிருக்கு லீட்டருக்கு 20 ரூபாய் + 1000 ரூபாய் நம்பிகை மறுப்பு  வரி Jizyah என வைத்தாலும் வைப்பார்கள் (ஈரானிலும் சவுதியிலும் இப்போதும் 3 பெண்ணின் வாக்கு மூலம் = 1 ஆணின் எதிர் வாக்குமூலம் என நினைக்கிறேன்).

இது மேற்குக்கும் இங்கே வாழும் எமக்கும் மட்டும் அல்ல, ஜப்பான் முதல் பேரு வரை எல்லாருக்கும் ஆப்பாகவே முடியும்(இந்தியா, சீனா அடக்கி வாசிப்பதும் இதனாலேயே) .

ஆகவே இங்கே ஈரான்-சவுதி ஷியா, சன்னி. சவுதி-துருக்கி முதன்மை இஸ்லாமிய நாடுப் போட்டி, நடுவிலே ஒரு டைம்பாம் போல இஸ்ரேல் - இவற்றால் ஸ்திரமின்மையை தூண்டி கொண்டே இருப்பார்கள்.

மூடர்கள் ஆளும் ஸ்திரத்தன்மையை விட, பராமரிக்க கூடிய ஸ்திரமின்மை (manageable instability) மேலானது.

இதுதான் மத்திய கிழக்கில் மேற்கின் அணுகுமுறை என்பது என் கருத்து.

#ஒரே ஒரு கோஷான் வாறார் வழி விடுங்கோ🤣

56 minutes ago, Justin said:

நீங்கள் மட்டும் எழுதிக் கொண்டிருக்க எனக்கு லாங்லியில் இருந்து போனைப் போட்டுத் திட்டுறாங்கள், எனவே நானும் எழுத வேண்டியதாயிற்று

தெரியும், லாங்லி மூலம் ஜஸ்டினை அடுத்து இறக்குகிறோம், நீங்கள் முதலில் இறங்கி கொஞ்சம் looseners போடுங்கள் என GCHQ சொல்லித்தான் நானே இறங்கினேன் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

ஜஸ்ரின் அண்ணாவும் க‌ள‌த்தில் குதித்து விட்டார்

இந்த‌ திரி இனி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டும்🤣😁😂.............................

வழமையா ஜஸ்டின் வந்தா பிறகு, அவரை தனிப்பட்டு தாக்கும் ஒரே நோக்கத்துக்காக மட்டுமே @Eppothum Thamizhan கிரிகெட் அல்லாத திரிகளில் தலை காட்டுவார்.

இன்னிக்கி அவரே வெள்ளன வந்துட்டார். கோஷான் மூத்திரசந்துல மாட்டிட்டார் ஒரு கை போடுவம் என நினைத்தாரோ என்னமோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

ஈரானில் இந்த அத்துமீறலை அல்லது நேரடியான யுத்தத்தை இஸ்ரேல் மன்னித்து மறந்து விடும் என்கிறீர்களா?

கொஞ்ச காலம் பொறுத்து….

சத்தமில்லாமல்….

சில உயர் அதிகாரிகளையோ…

சில அணு விஞ்ஞானிலளையோ…

ஒரு அணு சோதனை கூடத்தையோ…

போட்டு பிளக்கும்…..

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.