Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

நாங்கள் என்னதான் வேட்டியைக் கட்டி வெறுங்காலுடன் போனாலும் எம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். 

ஏற்கனவே பலர் கூறியது போல் கடை வைத்திருக்கும் நண்பன் கூறியது …..,.

எமது தோல், வாசனைத் திரவியங்கள், கைத் தொலைபேசி & Cover, நகைகள்,

கைப்பைகள் ( உள்ளூர் கைப்பைகள் ஏதாவது ஓரிடத்தில் தேய்ந்து கறுப்பாக ஏதாவது ஒட்டி அல்லது சிப் இற்கு அண்மையாக சிறிதளவு தூசி படித்து இருக்கும்)

, உடுப்புகளின் தன்மை ( சாரமோ வேட்டியோ புதிதாக இருக்கும்) அதேபோல் காலணிகள் ( பாட்டா செருப்பு என்றாலும் புதிதாக இருக்கும்) மிக முக்கியம் Self hygiene சுய சுத்தம். இப்படி பல….

ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது….

ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும்.

அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும்.

எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.

14 minutes ago, MEERA said:

அடுத்த தடவை நீங்கள் Wembley இல் உள்ள Ganapathy cash & carry க்கு செல்லும் போது கடையின் பின் பக்கம் மரக்கறிகள் வைத்திருக்கும் Cool Room வாசலுக்கு அண்மையில் இடது பக்கமாக பல brand களில் இந்த மஞ்சள் கடலை உள்ளது. வாங்கிப் பாருங்கள்.

நன்றி🙏

  • Replies 138
  • Views 10.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து,

  • நிழலி
    நிழலி

    நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும்

  • ஏராளன்
    ஏராளன்

    இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர்.
அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம்.  சிலர்  வறுமையில்  வேறு வழி  இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள்  என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை  தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும்  பாதிக்கப் படுகின்றார்களாம்.

ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஒரு கொத்து ரொட்டி இரண்டு லட்சமாம்.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

Oil of Olay, Gucci, Tom Ford, DKNY, Versace, Armani, CK, Tommy……

வெளிநாட்டு வாசம் என்று ஒரு விசயம் நிச்சயம் உள்ளது.

அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை  
வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.

எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது.

அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி.

நிற்க,

இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி - 

இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா?

எத்தனை சதவீதத்தால்?

பிகு

என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார்.

58 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை  
வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 

ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀.

சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣

எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏.

இனிய பயணமாகட்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏.

இனிய பயணமாகட்டும்.

நன்றிகள் அண்ணை 
நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது.
சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான்.

எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.    
நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.  
Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை. 
    
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

20 ரூபாய்க்கு வடையில் எண்ணை ஒத்திய பேப்பரும் கிடைக்காது🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

20 ரூபாய்க்கு வடையில் எண்ணை ஒத்திய பேப்பரும் கிடைக்காது🤣

300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது.
வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது.
வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣

இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை.

நான் ஒரு கொத்து அடிப்படைவாதி.

தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது.
வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣

அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀

  • கருத்துக்கள உறவுகள்

களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம்.

சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம்.

பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

vadai.jpg

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378864

  • கருத்துக்கள உறவுகள்

sri-Lanka-2-750x375.jpg

சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை!

நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1378849

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

9 hours ago, goshan_che said:

களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம்.

சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம்.

பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.

போயும்...போயும் ஒரு சப்பை மேட்டருக்கு   நல்ல சீவனை கைது செய்திருக்கிறார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உழுந்து வடை, தேநீருக்கு நோகாமல் எண்ணூறு ரூபா வாங்கியவர் எப்படி விறைப்பெடுக்கிறார் பாருங்கள். தண்டம் கொடுக்கும் போது, கொடுத்தவரின் வலி தெரியும், அப்போ நினைப்பார்; இப்படி வரும் என்று தெரிந்திருந்தால், சும்மாவே கொடுத்து புண்ணியத்தை தேடியிருக்கலாமென்று. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

போயும்...போயும் ஒரு சப்பை மேட்டருக்கு   நல்ல சீவனை கைது செய்திருக்கிறார்கள் 🤣

0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்…..

இது எழுதாமலே விளங்க வேணும்….

எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣.

—————

அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா….

அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு….

இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு….

திறைசேரியிலே திருட்டு….

ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்…….

இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣.

பிகு

அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்?

ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣

3 hours ago, தமிழ் சிறி said:

அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

@பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை.

நான் ஒரு கொத்து அடிப்படைவாதி.

தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣

கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂
அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது.
தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂
அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது.
தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.

ஓமண்ணை….

பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது.

70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

@பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.

vadivelu soona paana comedy checking

vadivelu-vadivelu-comedy.gif

இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது.
ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் 
அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்...
ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள்.
அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂
"ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்…..

இது எழுதாமலே விளங்க வேணும்….

எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣

இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣

இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்".

🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.