Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ibrahim-raisi.jpg

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1379001

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

இந்த இக்கட்டான நிலையில் இவரை அழைத்து தன்னை பெரிய ராஜதந்திரி எனக்காடட விழையுதோ இலங்கை!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இஸ்ரேல் பிரிட்டன்.. மேற்கு ஐரோப்பா.. சண்டித்தனத்தில் நம்பிக்கை வைப்பது அதிகரித்து விட்டது. மேலும் அமெரிக்காவின் எதேச்சதிகார.. ஏகாதபத்தியம் தலைவிரித்தாடுவதும் அதிகரித்துவிட்டது. ஐநா வை கூட இஸ்ரேல்.. உக்ரைன் செவிமடுக்காத அளவிற்கு அமெரிக்காவின் செல்வாக்கு கூடி இருப்பது மொத்த உலகிற்கும் அதன் நலனிற்கும் நல்லதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான், இலங்கைக்கு விஜயம்

22 Apr, 2024 | 10:04 AM
image

பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஈரான் ஜனாதிபதி திங்கட்கிழமை (22) இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இப்ராஹிம் ரைசி இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்து, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்ட ரைசி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின்  திறப்பு விழாவில் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து பங்கேற்பதே அவரது இலங்கை விஜயத்தின் சிறப்பம்சமாகும்.                     
 

https://www.virakesari.lk/article/181620

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தால் இலங்கை நெருக்கடிக்குள் தள்ளப்படுமா?

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி (புதன்கிழமை) கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் இந்த தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

ஈரானின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்க்கப்படும்.

இத்திட்டம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி தற்போது மூன்று நாள் பயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை சீர்செய்வதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, நேற்று ஏப்ரல் 22ஆம் திகதி (திங்கட்கிழமை), இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் பேச்சுகள் நடத்தினார்.

பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு ரைசி இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ரைசி கொழும்பிற்கு ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு ஜனாதிபதிகளும் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கும், உமா ஓயா என பெயரிடப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

529 மில்லியன் டொலர் மதிப்பில் ஈரானிய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் 2015 இல் முடிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் பல சிக்கல்கள் காரணமாக பல முறை இடைநிறுத்தப்பட்டு தற்போது இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால் அமெரிக்கா ஏற்கனவே, ரைசியின் பயணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், இராஜதந்திர ரீதியான அழுத்தங்களையும் கொடுத்திருந்தது.

என்றாலும், இந்த எதிர்ப்புகளை மீறி ஈரான் ஜனாதிபதியின் பயணத்துக்கு இலங்கை ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தின் பின் கடுமையான இராஜதந்திர நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை இலங்கை எதிர்கொள்ளலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

http://www.samakalam.com/ஈரான்-ஜனாதிபதியின்-விஜயத/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி

Published By: Digital Desk 3

24 Apr, 2024 | 11:02 AM
image

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார். 

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பை நடாத்தவுள்ள ஈரான் ஜனாதிபதி, பின்னர் நாடு திரும்பவுள்ளார். 

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும். 

உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது. 

இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. 

அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது. 

இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  

 

https://www.virakesari.lk/article/181820

இந்த ஈரானிய விஜயத்தில் ஈரானிய உள்துறை அமைச்சர் Ahmad Vahidi கூட வந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆர்ஜெடீனா இவரைக் கைது செய்யுமாறு இலங்கையைக் கேட்டுள்ளது. இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குண்டுத்  தாக்குதலில் தேடப்பட்டு வருபவர் என்று கூறப்படுகிறது.

https://www.rfi.fr/fr/amériques/20240424-argentine-pakistan-sri-lanka-demande-arrêter-ahmad-vahini-ministre-interieur

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலையே உண்மையான தைரியம் கொண்ட நாடெண்டால் அது சிறிலங்காதான் 😎

 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2024 at 07:51, nedukkalapoovan said:

அமெரிக்கா இஸ்ரேல் பிரிட்டன்.. மேற்கு ஐரோப்பா.. சண்டித்தனத்தில் நம்பிக்கை வைப்பது அதிகரித்து விட்டது. மேலும் அமெரிக்காவின் எதேச்சதிகார.. ஏகாதபத்தியம் தலைவிரித்தாடுவதும் அதிகரித்துவிட்டது. ஐநா வை கூட இஸ்ரேல்.. உக்ரைன் செவிமடுக்காத அளவிற்கு அமெரிக்காவின் செல்வாக்கு கூடி இருப்பது மொத்த உலகிற்கும் அதன் நலனிற்கும் நல்லதல்ல. 

ஐ.நா.சபை ஒரு தோல்வியுற்ற அமைப்பாகிப் பதினைந்து ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. ஈழத்திற் தமிழின அழிவுக்கு மௌனமாக அனுமதித்து வெளியேறியபோதே அதனது தாற்பரியம் உலகறிந்தது. ஐ.நாவை அமெரிக்க அவையென்பதே பொருந்தும்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கிம் மில்லியன் டொலர் திட்டத்தை சிறிலங்காவில் உருவாக்கினால் அவரை அழைக்கவும் சிறிலங்கா அரசு தயங்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Untitled-109-635x375.jpg

இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை!

1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இரு நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தலைமையிலான குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அஹமட் வஹிதியும் தெஹ்ரானில் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி அவரை சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் ‘வாஹிதி’க்கு கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல், அர்ஜென்டினாவின் வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் அவரைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது

மேலும் ஈரானின் முன்னாள் மூத்த உறுப்பினரான வஹிதி 1994 ஆம் ஆண்டு AMIA மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று அர்ஜென்டினா மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1379601

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

உலகத்திலையே உண்மையான தைரியம் கொண்ட நாடெண்டால் அது சிறிலங்காதான் 

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களின் நலனே ஈரான் மக்களின் நலன் என்றாராம் ஈரான் ஜனாதிபதி. ஈரான் கலாச்சாரமண்டபத்திற்கு ஈரான் ஜனாதிபதி மனைவி போனவவாம் .அங்கே இந்து குருக்கள், கிறிஸ்தவ குருக்கள்,  புத்த குருக்கள், முஸ்லிம் குருக்கள் எல்லாரும்  ஒன்றாக நிற்கும்.வட்சப்பில் வந்த தகவல்படம் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இன்று இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

440573044_831004959064478_68442691661139

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.