Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உணவகத்தில் புழு!!

330533779.jpg

புதியவன்) 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நகருக்கு அண்மையாகவுள்ள பிரபல சைவ உணவகத்தின் மதிய உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மதிய உணவுப் பொதியை இன்று ஒருவர் 300 ரூபா செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார். அவர் தனது அலுவலகத்துக்குச் சென்று மதிய உணவை உண்பதற்காக பொதியைத் திறந்துள்ளார். இதன்போது உணவினுள் புழு இருந்தமையை அவதானித்துள்ளார். உடனடியாக யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிக்கும், பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவித்துள்ளார். 

இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது. (அ)
 
https://newuthayan.com/article/யாழில்_உணவகத்தில்_புழு!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புரதச் சத்துள்ள உணவு, சீனர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கு, தெரியாமல் வாங்கியிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சாப்பாடு என்று நினைக்கிறேன்....உணவகத்தின் பெயரையும் சேர்த்தே செய்தியை பிரசூரிக்கலாம் தானே இந்த பத்திரிகை நிறுவனங்கள்..அப்பாவிச் சனங்களை ஏமமாற்றுபவர்களுக்கு இப்படித் தான் செய்ய வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது. (அ)

அட  இது இரண்டாவது தடவையா ?

  • கருத்துக்கள உறவுகள்

உணவகம் எந்த இனத்தவரால் நடத்தப்படுகிறது?

இந்த டீடெய்ல் தெரிந்த பின்பே கண்டிப்பதா இல்லை கண்டும் காணாமல் போவதா என நாம் தீர்மானிக்க முடியும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் வெள்ளவத்தையில் ஒரு சாப்பாட்டு கடையில் இட்லி பொதி வாங்கியபோது அவிஞ்ச இட்லியுடன் ஒரு சிலந்தியின் அவிஞ்ச காலும் மூட்டுக்களுடன் வந்தது.

சிலந்தி காலை ஒரு பக்கம் தூக்கிவீசிப்போட்டு இட்லியை மட்டும் முழுங்கிப்போட்டு பேசாமல் ஒரு சம்பவமும் இடம்பெறாதது போல் உள்ளார்கள்.

இதை எல்லாம் படம் எடுத்து செய்தி ஆக்குவதா? 😩

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

உணவகம் எந்த இனத்தவரால் நடத்தப்படுகிறது?

யாழ்ப்பாண சைவ உணவகம் மற்றும் நியாயம் அவர்களுக்கு  வெள்ளவத்தையில் இட்லி கொடுத்தது இவைகளை பார்த்தால் சிங்கலவர்கள் நடத்தும் உணவகங்கள் போன்றே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாண சைவ உணவகம் மற்றும் நியாயம் அவர்களுக்கு  வெள்ளவத்தையில் இட்லி கொடுத்தது இவைகளை பார்த்தால் சிங்கலவர்கள் நடத்தும் உணவகங்கள் போன்றே தெரிகின்றது.

சிங்களவன் கட்டா சம்பல்  அடிமை அவனா இருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாண சைவ உணவகம் மற்றும் நியாயம் அவர்களுக்கு  வெள்ளவத்தையில் இட்லி கொடுத்தது இவைகளை பார்த்தால் சிங்கலவர்கள் நடத்தும் உணவகங்கள் போன்றே தெரிகின்றது.

வெள்ளவத்தையில் சிங்களவன் கடை ஒன்றுக்கு சென்று ஆப்பம் சாப்பிட்டு ஆப்பமே வெறுத்து போயிற்று ஐயா. 

ஆனால் இட்டலியுடன் சிலந்திக்காலை அவிச்சு தந்தது தமிழன் கடைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயம் said:

கொழும்பில் வெள்ளவத்தையில் ஒரு சாப்பாட்டு கடையில் இட்லி பொதி வாங்கியபோது அவிஞ்ச இட்லியுடன் ஒரு சிலந்தியின் அவிஞ்ச காலும் மூட்டுக்களுடன் வந்தது.

சிலந்தி காலை ஒரு பக்கம் தூக்கிவீசிப்போட்டு இட்லியை மட்டும் முழுங்கிப்போட்டு பேசாமல் ஒரு சம்பவமும் இடம்பெறாதது போல் உள்ளார்கள்.

இதை எல்லாம் படம் எடுத்து செய்தி ஆக்குவதா? 😩

பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலுக்கு முன் (1995) (கற்பக விற்பனை நிலையத்திற்கு அருகாமையில்) உள்ள கடையில் இடியப்பம் சாப்பிட இருந்த வேளையில் சாம்பாருக்குள் புளியங்கெட்டை மாதிரி ஓன்றிருக்க, கொஞ்சம் கவனமாக பார்த்தால் அது எலி குஞ்சு😂

இந்த புழுக்கள் எல்லாம் சர்வசாதாரணம் , சூடாக்கிவிட்டால் கரைத்துவிடும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இறால் குழம்புக்குள் புழுக்கள் போட்டால் எப்படி கண்டு பிடிப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இறால் குழம்புக்குள் புழுக்கள் போட்டால் எப்படி கண்டு பிடிப்பது?

இறாலே புழுதானே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இறாலே புழுதானே

புழுக்குழம்பு என்று பெயரை மாத்தணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு சமையலில் இவ்வாறு வந்தால் என்ன செய்வது??? ஒரு புழுவுக்காக கடையை பூட்ட வேண்டியதில்லை. சுகாதார முறைப்படி உணவகம் இயங்கவில்லை என்பதை பரிசோதனை செய்து கண்டு பிடித்தால் மூடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கிழமைக்கு மேல ஊர் போய் நின்று விட்டு, நேற்றுத் தான் திரும்பி வந்தேன். யாழில் சில இடங்களில் 300 ரூபா மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டும் இருக்கின்றேன். இது எந்தக் கடை என்று சொன்னீர்கள் என்றால், திருவிழா நாட்களில் மரக்கறி என்று நினைத்து மச்சம் சாப்பிட்டதற்கு மனதார மன்னிப்பு கேட்க வசதியாக இருக்கும்.

அங்கு கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலில், சாப்பாட்டில் புழு இருக்குதா, அசையுதா அல்லது சோற்றுப் பருக்கை அதுவா அசையுதா என்று பேதம் பிரித்து பார்க்கும் பொறுமையையும் இருக்கவில்லை........... என்ன வெயிலும், வெக்கையும்.......புழுக்கள் கூட அடுத்த கொஞ்ச நாட்களுக்கு பதுங்கி வாழ்வது தான் அவைக்கு பாதுகாப்பு.....      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

வணக்கம் ரசோதரன் நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

இறாலே புழுதானே

என் பெறா  மக்கள் ஆறு பேரும்  இறால் சாப்பிடாங்கள் காரணம் புழு என்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரசோதரன் நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

👍...

வணக்கம் ஈழப்பிரியன்.  மூன்று கிழமை லீவு முடிந்துவிட்டது.....😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

மூன்று கிழமைக்கு மேல ஊர் போய் நின்று விட்டு, நேற்றுத் தான் திரும்பி வந்தேன். யாழில் சில இடங்களில் 300 ரூபா மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டும் இருக்கின்றேன். இது எந்தக் கடை என்று சொன்னீர்கள் என்றால், திருவிழா நாட்களில் மரக்கறி என்று நினைத்து மச்சம் சாப்பிட்டதற்கு மனதார மன்னிப்பு கேட்க வசதியாக இருக்கும்.

அங்கு கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலில், சாப்பாட்டில் புழு இருக்குதா, அசையுதா அல்லது சோற்றுப் பருக்கை அதுவா அசையுதா என்று பேதம் பிரித்து பார்க்கும் பொறுமையையும் இருக்கவில்லை........... என்ன வெயிலும், வெக்கையும்.......புழுக்கள் கூட அடுத்த கொஞ்ச நாட்களுக்கு பதுங்கி வாழ்வது தான் அவைக்கு பாதுகாப்பு.....      

வாழை தோட்டத்து பக்கத்தில் சாக்கு கடை சாப்பாடு என்று நண்பர்கள் வாங்கி வருவார்கள் கொழும்பில் 80 கடைசியில் 90தொடக்கம் ஆக இருக்கனும் ஒரு பாசல்  நாலு பேர் சாப்பிடலாம் அதுக்குள் சிலந்தி புழு எல்லாமே கண்டு அதன்பின் வெளியில் என்றால் வெஜ் தான் இன்று வரை .

15 minutes ago, பெருமாள் said:

வாழை தோட்டத்து பக்கத்தில் சாக்கு கடை சாப்பாடு என்று நண்பர்கள் வாங்கி வருவார்கள் கொழும்பில் 80 கடைசியில் 90தொடக்கம் ஆக இருக்கனும் ஒரு பாசல்  நாலு பேர் சாப்பிடலாம் அதுக்குள் சிலந்தி புழு எல்லாமே கண்டு அதன்பின் வெளியில் என்றால் வெஜ் தான் இன்று வரை .

இதே வாழைத் தோட்டத்தில் 90 ஆரம்பத்தில் நானும் வாழ்ந்து இருக்கின்றேன். அதே சாக்குக் கடையில் சாப்பிட்டும் இருக்கின்றேன்.

அன்று என் வாயில் கடிபட்டது சிலந்தி அல்லது புழுவா???

நான் இவ்வளவு நாளும் அது எலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரசோதரன் said:

👍...

வணக்கம் ஈழப்பிரியன்.  மூன்று கிழமை லீவு முடிந்துவிட்டது.....😀

அப்ப வேலைக்கு வந்து வேலை நேரத்திலையே  உவ்வளவு கூத்தும் நடக்குது?????? 😂
நடக்கட்டும் .....நடக்கட்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நான் இவ்வளவு நாளும் அது எலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..😀

கடைசியில் நம்ம பட்ட பெயரை சொல்லிட்டான் போல இருக்கு  😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானெல்லாம் ஊரிலை இருக்கேக்கை.....:cool:

Paruthiveeran Adibrao GIF - Paruthiveeran Adibrao Karthi - Discover & Share  GIFs
பாணுக்குள்ளை வண்டுகள் புழுக்கள் எல்லாத்தையும் கண்டால் லாவகமாக அதை மட்டும் நுள்ளி எறிஞ்சு போட்டு தொடர்ந்து ஒரே வெட்டுத்தான். இதையெல்லாம் வெளியில சொல்லிக்கொண்டே திரிஞ்சனாங்கள்? இதெல்லாம் நோர்மலப்பா....உங்கை சீனக்காரன் புழு பூச்சியள் எல்லாம் சாப்பிடுறாங்கள் தானே? என்ன செத்தே போனாங்கள்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍...

வணக்கம் ஈழப்பிரியன்.  மூன்று கிழமை லீவு முடிந்துவிட்டது.....😀

சரி சரி கன நாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.

என்ன சாப்பிடப் போகிறீர்கள்?

புழு சாப்பாடு,கமக்கட்டில் செய்த சாப்பாடு,பொக்கிளில் பொரித்த முட்டை இப்படி பல சுவையான அயிட்டங்கள் உள்ளன.

ஏதாவது ஓடர்பண்ணி விட்டு அதுவரை பொக்கிளில் பம்பரம் விட்டு விளையாடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.