Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gce.jpg

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/302863

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்தி

Published By: VISHNU   01 JUN, 2024 | 02:47 AM

image
 

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/185011

  • கருத்துக்கள உறவுகள்

உ.த. பரீட்சையில் சாதித்த மீன் வியாபாரியின் மகள்!

523977445.jpg

(மாதவன்)

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ். மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார்.

க.பொ.த. உயர்தரம் (2023) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி மேலும் தெரிவித்ததாவது,

எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3 ஏ சித்திகளை பெற்றேன். 

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை  சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(ப)  
 

https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கலைத்துறையில்_சாதித்த_மீன்_வியாபாரியின் மகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் போன்றவர்கள் சமூகத்தில் முன்னேறி வருவதற்கு இருக்கும் ஒரே சாதனம் கல்வி மட்டுமே......அதில் சிறந்தோங்க வாழ்த்துக்கள்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

vavuniya-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் சாதனை.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது.

இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ. ஜிலோட்சன் பெற்றுள்ளனையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள். இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.

இதேவேளை ஈ டெக்கில் முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.

பி டெக்கில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1385089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது சிறிய கிராமசேவகர் பிரிவில் இருந்து நீண்ட காலத்தின் பின் உள்ளூரிலே கல்வி கற்று மருத்துவ பீடத்திற்கு முதலாவது மாணவி தெரிவாகியுள்ளார்.

victoria-a-l-23.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் இருந்து அதிகளவான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தகுதி

examiniation-dept-300x200.jpg

இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகின.

இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சையில் 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 173,444 பேர் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2023 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/302911

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் சாதனை படைத்த மாணவன்..! 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

 

உ.த. பரீட்சையில் சாதித்த மீன் வியாபாரியின் மகள்!

523977445.jpg

(மாதவன்)

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ். மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார்.

க.பொ.த. உயர்தரம் (2023) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி மேலும் தெரிவித்ததாவது,

எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3 ஏ சித்திகளை பெற்றேன். 

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை  சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(ப)  
 

https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கலைத்துறையில்_சாதித்த_மீன்_வியாபாரியின் மகள்!

 

தமிழ், நாடகவியல், புவியியல் இம்மூன்று பாடங்களும் புள்ளிகள் பெறுவதற்கு கடினமானவை. கடினமான பாடங்களை தெரிவு செய்து மாவட்டத்தில் முதலிடத்தையும், நாடளாவிய ரீதியில் முப்பத்து இரண்டாம் இடத்தையும் பெற்றது சிறப்பு. 

மீன் வியாபாரியின் மகள் என உதயன் எழுதவேண்டிய தேவை என்னவோ. 

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்

வஜினா பாலகிருஷ்ணனுக்கும் யாழ் இந்துவின் மைந்தர்களுக்கும் சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நியாயம் said:

 

தமிழ், நாடகவியல், புவியியல் இம்மூன்று பாடங்களும் புள்ளிகள் பெறுவதற்கு கடினமானவை. கடினமான பாடங்களை தெரிவு செய்து மாவட்டத்தில் முதலிடத்தையும், நாடளாவிய ரீதியில் முப்பத்து இரண்டாம் இடத்தையும் பெற்றது சிறப்பு. 

மீன் வியாபாரியின் மகள் என உதயன் எழுதவேண்டிய தேவை என்னவோ. 

எனக்கும் இதே கேள்வி எழுந்தது ...ஆனாலும் நான் எழுதி அதை சர்ச்சையாக்கி விடுவதை விட அமைதியாக இருப்பதேே மேல் என்று போய் விடுவது வழமை.அதே மீனவர்கள் பிடித்து தரும் மீனைத் தானே நாம் வயிறாற கறியாக ,பொரியலாக , கூழாக உண்டு தள்ளுகிறோம்.அப்படி இருக்கையில் மீன் விபாரியின் மகன், மகள் என்று ஒருவரது வறுமையை சுட்டிக் காட்டி செய்தி பிரசுரிப்பதை விட இவர்கள் எல்லாம் பேசாமல் இருப்பதே மேல்..

 

நிறைய கஸ்ரங்களுக்கு மத்தியிலும் படித்து திறமைச் சித்திகளை பெற்று கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...அதே நேரம் குறைந்த சித்திகளை பெற்றவர்களும்  மனம் தளராது மறுபடியும் முயற்சித்து முன்னுக்கு வரலாம் வர வேண்டும்.ஆகவே முயற்சியுங்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

 

445364835_471393175414266_45397927297903

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக பிரிவில் முதலிடம் யாழ்.இந்து மகளிர் மாணவி

1671703364.jpg

(மாதவன்)

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கீர்த்திகா பத்மலோஜன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக 44வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி கருத்து தெரிவிக்கையில்,

எனது பாடசாலையிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சிறப்பான கல்வி புகட்டப்பட்டது நானும் வீட்டில் சிறப்பாக கல்வி கற்றேன். ஆகையால் எனது இலக்கினை அடைய முடிந்தது.

மேலும், எனது இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அம்மா, அப்பா, பாடசாலை சமூகத்தினர், தனியார் கல்வி நிலையத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாகி, வறுமைப்பட்ட எங்கள் மக்களுக்கு என்னால் இயன்ற சட்ட உதவிகளை வழங்குவேன் என்றார்.

இந்த வெற்றி குறித்து மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

தங்களது மகள் வணிகத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்பினார். அவரது விருப்பத்துக்கு ஏற்ப நாங்களும் ஒத்துழைத்தோம். ஆகையால் அவர் சாதனை புரிந்துள்ளார்.

ஏனைய பெற்றோர்களும், உங்களது பிள்ளைகள் எந்த துறைக்குள் சாதிக்க விரும்புகின்றதோ அந்தத் துறைக்குள் அவர்களை செல்ல விடுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அப்படி இருந்தால் அவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.(க)  
 

https://newuthayan.com/article/மாவட்ட_ரீதியாக_முதலிடம்_யாழ்.இந்து_மகளிர்_மாணவி

  • கருத்துக்கள உறவுகள்

 

447052262_122162516762081423_19269644419

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை!

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 10.04 வீதமானவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார் .

இவ்வருட பரீட்சை பெறுபேறுகள் சாதனை அதிகரிப்பை காட்டுவதாக தெரிவித்த அவர், விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் இது 64.33 வீதமாகும் எனவும் தெரிவித்தார்.

மூன்று பாடங்களிலும் 10,484 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும், இது 3.9 வீதமாகும் எனவும் ஜெயசுந்தர தெரிவித்தார்.

இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 190 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார் .

2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் ஆண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/303000

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்திகள்.

ஒரு விடயத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்: பல் கலைக் கல்வியால் "பயன் இல்லை அல்லது உரிய தொழில் கிடைக்காது" போன்ற காரணங்களை முன் வைத்து பல் கலை போகாமல் விடும் மாணவர்களின் தொகை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது எனக் கேள்விப் பட்டுள்ளேன். 3 , 4  வருடங்கள் செலவு செய்து பல் கலைக் கல்வியையும், அனுபவத்தையும் பெறுவது பெரிய விரயமல்ல, ஒரு back-up plan ஆகவாவது ஒரு பட்டத்தை எடுத்து வைத்துக் கொள்வது புத்தி சாலித்தனம்.

ஆசிரியர்களும், பெற்றோரும், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களும் இதனை இந்த மாணவ அணியிடம் வலியுறுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரணி மத்திய கல்லூரியில் முதன்முறையாக வரலாற்றுச் சாதனை!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2024 at 04:12, nunavilan said:

 

447052262_122162516762081423_19269644419

நுணாவிலான், நீங்கள் ஏன் கலைப்பிட result ஐ மட்டும் போட்டுள்ளீர்கள்? KHCயிலிருந்து மொத்தம் 15 மாணவர்கள் 3A எடுத்துள்ளார்கள்

கணிதம் - 4

உயிரியல் - 2

வர்த்தகம் - 4

கலை - 5

 

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragaa said:

நுணாவிலான், நீங்கள் ஏன் கலைப்பிட result ஐ மட்டும் போட்டுள்ளீர்கள்? KHCயிலிருந்து மொத்தம் 15 மாணவர்கள் 3A எடுத்துள்ளார்கள்

கணிதம் - 4

உயிரியல் - 2

வர்த்தகம் - 4

கலை - 5

 

மிகுதி தகவல் என்னிடம் கிடைக்கவில்லை.  நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்ததை யாழில் நானும் பகிர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போரில் தந்தையை இழந்த மாணவி சாதனை!

1125900942.jpg

 (செல்வன்)

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் மணிவண்ணன் துஷாகா  3 ஏ பெறுபேறுகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 124 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார் 

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரிலே தன்னுடைய தந்தையை இழந்த மாணவி தாயின் அரவணைப்பில் வாழ்ந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று  உயர்தர பரீட்சைக்கு தோற்றி  மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் 

அரச உத்தியோகத்தராக கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலே பணியாற்றி வருகின்ற தாயாருடைய அரவணைப்பில் வாழ்ந்து  பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலே சாதனையை நிகழ்த்தியுள்ளார்

மகள் மருத்துவராக வரவேண்டும் என்ற கணவனின் கனவை தனது மகள்  நிறைவேற்றியுள்ளதாகவும் இதனால் தான் பெருமை கொள்வதாகவும்  மாணவியின் தாயார் தெரிவித்தார் 

ஒரு பெண் தலைமைத்துவ குடும்பமாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கற்பிக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திலே தான் உழைத்து வந்ததாகவும் அவ்வாறு தன்னுடைய மகள் இந்த சாதனையை நிலைநாட்டி இருக்கின்றமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தாய் தெரிவித்துள்ளார். (ப)  
 

காணொலி: https://fb.watch/swwBMCkvvh/

https://newuthayan.com/article/போரில் தந்தையை_இழந்த_மாணவி சாதனை! 

Edited by கிருபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.