Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/tamilan-s-can-not-enter-into-karnataka-vattal-nagaraj-has-warned-338779.html

  • Replies 99
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

இன்றைய இலங்கையில் அங்கே என்ன பிரச்சனை இருக்கின்றது?
வயல் விளையவில்லையா?
வெங்காயம் விளையவில்லையா?
பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லையா?
ரயில் ஓடவில்லையா?
பஸ் ஓடவில்லையா?
மழை பெய்யவில்லையா?
வெய்யில் எறிக்கவில்லையா?
மக்கள் பட்டினியால் சாகின்றார்களா?
அது மட்டுமா?
தியேட்டர்களில் சினிமா படங்கள் ஓடவில்லையா?
 
அண்ணை இவை    அனைத்தும்  இருக்கிறது  நான் சொன்னேனா  ?? இல்லை என்று ......ஆனாலும் பாருங்கோ !!நீங்கள் மேலே சொன்ன அனைத்தும்   தமிழ் ஈழ விடுதலை புலிகள்  ஆயுதம் ஏந்தி போராடிய  30க்கும். மேற்பட்ட ஆண்டுகளில் கூட. இருந்தது தான்  ....அப்படியானால் அவர்கள் ஏன் போராடினார்கள்??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

இல்லை அண்ணா 

அப்படியானால் கன்னடத்தை கன்னடர்களும் கேரளத்தை மலையாளிகளும் தெலுங்கு தேசத்தை தெலுங்கர்களும் பஞ்சாப்பை பஞ்சாபியர்களும் ஆள்வதும் எப்படி தமிழகத்தில் வாழும் அமைதியை ஏற்படுத்தும்???

வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பொய்யான வாதம்.

இங்கேயும் எல்லோரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மாநிலங்களை போல நாம் தான் ஆழ்வோம் என்பது எப்படி அமைதிக்கு பங்கமாகும். தமிழன் இளிச்சவாயன் என்பதை தவிர.

எனது பார்வையில் எவர் ஆள்கிறார். என்பது பிரச்சனையில்லை   எப்படி ஆள்கிறார்  என்பதுதான் பிரச்சனை?   அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமன்,...வேலைவாய்ப்பு கல்வி மருத்துவம்,..........இதுபோன்ற   எந்த விடயத்திலும். பாரபட்சம்  இருக்க கூடாது   பிரான்ஸ் இல் ஒரு தமிழன்  ஐனதிபதி ஆகி  மக்களுக்கு நல்லாட்சி வழங்கினார் என்றால் நீங்கள்  எதிர்ப்புகள் தெரிவிப்பீர்களா ??? அல்லது  ஒரு தமிழன்   நாம் இனத்தவர்  ஆள்கிறார்.  என்று  மகிழவும். பாராட்டாவும். செய்வீங்களா?? மேலும் இலங்கையில் எந்தவொரு சிங்கள அதிபரும். நல்லாட்சி வழங்க இல்லை ..வழங்கி இருந்தால்  தமிழர்கள்  ஒருபோதும் போராடி இருக்க மாட்டார்கள்   அந்த சிங்கள அதிபருக்கே வாக்கை போட்டு  மீண்டும் மீண்டும் ஐனதிபதி ஆக்குவார்களோ ஒழிய போரடமாட்டார்கள். 

அடுத்து தமிழன் நல்லாட்சி வழங்குவன். என்று என்ன உத்தரவாதம்??  

சீமான் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என நான் சொல்லவில்லை  எவரும் ஆளலாம்.  ஆனால் எந்தவொருவரும்  தமிழ்நாட்டில்  தனித்து தேர்தலில் போட்டு இட்டு  120 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது   தமிழ்நாட்டில் 234  சட்டமன்ற உறுப்பினர்கள் உண்டு”   தனித்து நிற்கும் எவரும் தமிழ்நாட்டை ஆளப்போவதில்லை   தமிழ்நாட்டை ஆளவேண்டுமானல். நிச்சயம் கூட்டணி அமைக்க வேண்டும்   தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் 2009 பிற்பாடு   இலங்கை தமிழர்களை சொல்லி அரசியல் நடத்துவது  எற்க முடியாது ....நடத்த கூடாது   ஏனெனில் தமிழ்நாட்டு மக்களை 2009. இல் அணி திரட்டி  போராடி  இலங்கையில் மாற்றங்களை செய்ய இயலாதவர்களாக  இருந்துள்ளார்கள். .......இவர்கள் இன்று மேடைதோறும் உணர்ச்சி பொங்க. பேசினா உடன்  இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை   இந்த வேலையை அல்லது முறையை  இலங்கை தமிழ் தலைவர்கள்  ஏற்கனவே செய்து படுதோல்வி அடைந்து உள்ளார்கள்   🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!

எதிர் கருத்துகள் வைப்போர். எல்லோரும் மரமண்டைகள் என்றால்   உலகில்…………… உள்ள ஒவ்வொருவரும் மரமண்டைகள்   தான்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

எதிர் கருத்துகள் வைப்போர். எல்லோரும் மரமண்டைகள் என்றால்   உலகில்…………… உள்ள ஒவ்வொருவரும் மரமண்டைகள்   தான்    

எதிர்க்கருத்து வைப்போரை யாரும் மரமண்டைகள் என்று சொல்லவில்லையே! எல்லா மாநிலத்தையும் அந்தந்த மாநிலக்காரனே ஆளும்போது, தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று கூறும் ஒருவரை கேலிசெய்வோருக்கானது அது!!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Eppothum Thamizhan said:

எதிர்க்கருத்து வைப்போரை யாரும் மரமண்டைகள் என்று சொல்லவில்லையே! எல்லா மாநிலத்தையும் அந்தந்த மாநிலக்காரனே ஆளும்போது, தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று கூறும் ஒருவரை கேலிசெய்வோருக்கானது அது!!

ஆமாம் எற்றுக்கொள்கிறேன்,....ஆனால் இதை தீர்மானிப்பதும் தமிழன்  தான் இல்லையா??   அதாவது தமிழன் ஆளவேண்டுமென்று   தமிழன்  அனுமதி வழங்க வேண்டும்   ஏன் வழங்கிறார்களில்லை?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Kandiah57 said:

ஆமாம் எற்றுக்கொள்கிறேன்,....ஆனால் இதை தீர்மானிப்பதும் தமிழன்  தான் இல்லையா??   அதாவது தமிழன் ஆளவேண்டுமென்று   தமிழன்  அனுமதி வழங்க வேண்டும்   ஏன் வழங்கிறார்களில்லை?? 

இப்படி நீங்கள் தூற்றினால் எப்படி வளர்வதாம்? வழங்குவதாம்? 

முதற்படி நாங்க ஆதரிக்க வேண்டும் உற்சாகப்படுத்தணும். 

Posted
4 hours ago, பெருமாள் said:

தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/tamilan-s-can-not-enter-into-karnataka-vattal-nagaraj-has-warned-338779.html

கர்நாடகா மக்கள் இவரை தேர்தலில் தோற்கடித்து நிராகரித்து விட்டார்கள்.

1 hour ago, விசுகு said:

இப்படி நீங்கள் தூற்றினால் எப்படி வளர்வதாம்? வழங்குவதாம்? 

முதற்படி நாங்க ஆதரிக்க வேண்டும் உற்சாகப்படுத்தணும். 

சரி, தமிகத்தில் உள்ள ஒருவரை பச்சைத் தமிழன் என்று எப்படி அடையாளம் காண்பீர்கள்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, விசுகு said:

வணக்கம் சகோ

இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.

சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத்தும் எதிரியுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நாம் இன்னும் எத்தனை நாள் எத்தனை முறை மண்டியிட்டு அழமுடியும்?

உலகெங்கும் இல்லாததையா நாம் தமிழர் சொல்கிறது?

பிரெஞ்சுக் காரர்களுக்கே பிரான்சு தேசம் சொந்தமானது என்று சொல்லி நூற்றிற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளமை தானே நிஜம் களம்.

அந்தந்த பிரதேசத்தை அந்தந்த க்கள் கூட்டம் ஆள்வது தானே நடைமுறையில் உள்ளது.

உங்கள் எழுத்து நாம் மற்றவர் போல் இல்லை பண்பானவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதற்கு மட்டுமே உதவும். ஆனால் இந்த போக்கு எம்மை இதுவரை காப்பாற்றாது கச்சையுடன் விட்டிருப்பது மட்டுமே வரலாறு.

தமிழர்கள் தமிழராக ஒன்று திரள்தால் அன்றி விடிவில்லை எமக்கு. நாம் தமிழர். நாம் சீமான் அல்ல. நன்றி. 

ஆனால், சீமான் தம்பிகளும் (சில சமயங்களில் சீமானும்) ஆள்வது பற்றியா சொல்கிறார்கள்? பல தசாப்தங்கள் முன்பு ஒன்றாக இருந்த தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர் என்ற மொழி வாரி இனங்களில் இருந்து வந்த வம்சாவழியினர் "தமிழர்" அல்ல என்றும், அயல் மாநிலத்தவர் தொழில் தேடி வந்து குடியிருப்பதையும் கூட தன் பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள அல்லவா செய்கிறார்கள்?

இது தமிழனை தமிழன் ஆள்தல் என்ற வகைக்குள் அல்ல வருகிறது. இது கடைந்தெடுத்த இனத்தூய்மை வாதம். அப்படி இனத்தூய்மை வாதம் பேசும் சீமானுக்கே மலையாள அடி இருக்கிறது என்கிறார்கள், மனைவி தெலுங்கர் வழி என்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறை இருக்க, இனத்தூய்மை வாதம் பேசி வாக்குக் கேட்கும் வரை, நா.த.க ஒரு முதன்மைக் கட்சியாக உருவாகாது என்பது தான் என் கருத்து.

தற்போது ஈழவரிடையேயும் உருவாகிக் கொண்டிருக்கும் "கிறிஸ்தவன் தமிழனா" என்ற கேள்வியின் தோற்றுவாய் எங்கேயிருந்து வந்திருக்கும் என்கிறீர்கள்? அதைக் கேட்கும் பலர் நாதக ஆதரவாளர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

சிங்களம் - ஈழத்தமிழ் வேறு பிரச்சினை.அது மட்டுமன்றி தமிழ் நாட்டில் நா.த.க என்ற இனத்தூய்மை வாதக் கட்சி ஆண்டால் ஈழவருக்கு நன்மை கிடைக்கும் என்று உங்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பும்  ஆதாரங்களற்றது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

   ஏன் வழங்கிறார்களில்லை?? 

ஏனெனில் தமிழ்நாடு பீகார் அல்ல, குஜராத் அல்ல!

கல்வியில், பொருளாதாரத்தில், சமூக அபிவிருத்தியில் முன்னேற வேண்டுமானால், "வாதக் குணம்😎" இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை முன்னுதாரணங்கள் மூலம் நிரூபித்திருக்கும் ஒரு மாநிலம். அங்கே போய் ,மக்களிடம் "தமிழ் ஜீன்", பச்சைத் தமிழன், ஆங்கிலம் கக்கா (ஆனால், என் மகன் ஆங்கில மீடியம் தான்😂!) என்று அவித்தால் யார் போடுவார்கள்? மண்டை கழுவிய சிலர் எடுபடுவர், ஏனையோர் தவிர்த்து விடுவர்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/6/2024 at 20:18, goshan_che said:

நான் கணக்கில் ரொம்பவே வீக்.

ஆனாலும் ஒரு சின்ன சமன்பாடு.

ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த சதவீதத்தை அது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் - கட்சிகளின் உண்மையான ஆதரவு நிலை பற்றி ஓரளவுக்கு ஊகிக்க முடியுமா?

கணக்கில் புலியாக இருப்போர் சொல்லவும்.

இதன்படி:

திமுக - 26.93/21 = 1.28

அதிமுக - 20.46/32 = 0.63

பாஜக - 11.24/23 = 0.48

காங்கிரஸ் - 10.67/9 =1.18

நாதக -8.10/39 =0.20

பாமக - 4.2/10 = 0.42

* இந்த வகுப்பு கூட்டணி கட்சிகளுக்க்காக கிடைத்த வாக்கை, போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு என்று கருதுகிறது என்பதை கவனிக்கவும்

கணக்கில் புலியல்ல, ஆனால் numerical data என்ன சொல்கிறது என்று தேடுவது தான் என் பிரதான தொழில். அந்த அனுபவத்தில்:

தொகுதிகளின் எண்ணிக்கையால், கிடைத்த வாக்குகளின் வீதத்தைப் பிரித்தால் வரும் பதில், சிம்பிளாக ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வீதம் வாக்கு விழுந்திருக்கிறது என்று    காட்டும்.

இதன் அர்த்தம் என்ன? போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு கட்சியின் முடிவு, அது கட்சியின் பிரபலத்தைப் பிரதிபலிக்காது.

அப்படிப் பல தொகுதிகளில் நின்று, கொஞ்சூண்டு வாக்குகளை வென்றால், இப்போது நா.த.க செய்வது போல "இது வெற்றி" என்று கொண்டாடலாம். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் (சராசரியாக) 1% இற்கும் குறைவான வாக்குகளே நாதகவிற்குக் கிடைத்திருக்கிறது என்பது கொண்டாடக் கூடிய தரவு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் அவர்கள் நாம் தமிழர் என மேடைக்கு மேடை உரக்க கூறிக்கொண்டு,தலைவர் பிரபாகரனை தன் தலைவர்/ அண்ணன் என கூறிக்கொண்டும் புலிக்கொடியை ஏந்திக்கொண்டும் பயணித்து....
இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்த்தியிருக்கின்றார். :cool:

அதை விட தமிழ்நாட்டை ஆள்பவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் சீமானின் பிறப்பை மட்டும் அணு அணுவாக ஆராய்கின்றார்கள். 🤣

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, நிழலி said:

கர்நாடகா மக்கள் இவரை தேர்தலில் தோற்கடித்து நிராகரித்து விட்டார்கள்.

சரி, தமிகத்தில் உள்ள ஒருவரை பச்சைத் தமிழன் என்று எப்படி அடையாளம் காண்பீர்கள்?

நான் மேலே குறிப்பிட்டேன் தம்பி 

சீமான் அல்ல நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் எந்த கோவை மற்றும் தேர்தல் அறிக்கையிலும் நீங்கள் சொல்வது போல இல்லை இருக்காது.

அது வெகுதூரப்பயணம். வேறு வழியில்லை. 

நாங்கள் இது பௌத்த சிங்கள தேசம் என்றும் மரமும் கொடியுமாக வாழ்ந்தால் சேர்ந்து வாழுங்கள் என்பவர்களுடன் கூடி வாழ் முயல்கிறோம். அதையே எம்மவர் சொன்னால் தீண்டத்தகாதவராக பார்க்கிறோம்??

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@Eppothum Thamizhan @விசுகு

யாழ்களத்தில் ஏனைய உறவுகள், தமிழக வாக்காளர் போல் நீங்கள் மரமண்டைகள் இல்லை, ரொம்ப உர-மண்டைகள்.

ஆனாலும் பின் வருவதை ஏன் புரியமாட்டேன் என்கிறீர்கள்.

சீமான் தமிழரை தமிழன் ஆள வேண்டும் என சொல்வதை எதிர்க்க 2 காரணங்கள் முக்கியமானவை.

1. சீமானே ஒரு மலையாளி. அவர் மனைவி பாதி தெலுங்குகாரி - அவர் எப்படி இதை சொல்லலாம்?

2. சீமான் 600 வருடமாக தமிழ்நாட்டில் வாழ்வோரை தமிழர் இல்லை என ஆக்குகிறார். அதுவும் சாதி அடிப்படையில்.

தமிழ்நாட்டை தமிழந்தான் ஆள வேண்டும் என்றால் - முதலில் சீமான்

1. மொழி வழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அனைவரும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும்.

2. இல்லை என்றால் மலையாளியாகிய தனக்கும் ஆளும் உரிமை இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

Edited by goshan_che
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

சீமான் அவர்கள் நாம் தமிழர் என மேடைக்கு மேடை உரக்க கூறிக்கொண்டு,தலைவர் பிரபாகரனை தன் தலைவர்/ அண்ணன் என கூறிக்கொண்டும் புலிக்கொடியை ஏந்திக்கொண்டும் பயணித்து....
இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்த்தியிருக்கின்றார். :cool:

அதை விட தமிழ்நாட்டை ஆள்பவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் சீமானின் பிறப்பை மட்டும் அணு அணுவாக ஆராய்கின்றார்கள். 🤣

சீமான் புலிகளின் சின்னத்தையும், கொடியையும் ஆட்டையைப் போட்டிருக்கா விட்டால், அவர் இது வரை பயணித்திருக்கவே முடியாது. ஈழத்தமிழர்களும் அவரைக் கணக்கிலெடுத்துப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் (இப்போதும் தாயகத்தில் சீமான் பற்றி உள்ளூர் ஊடகங்கள் கணக்கிலெடுப்பதில்லை!).

"நதி மூலம் ரிஷி மூலம்" சீமான் பார்த்தால் அவருடைய பரம்பரை பற்றி சுட்டிக் காட்டிப் பேசுவதில் நியாயம் இருக்கிறது. பானையைப் பார்த்து சட்டி கறுப்பென்று சொல்ல முடியாதல்லவா😎?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிழலி said:

சரி, தமிகத்தில் உள்ள ஒருவரை பச்சைத் தமிழன் என்று எப்படி அடையாளம் காண்பீர்கள்?

நா த க காரியாலயத்தில் கேட்டால் ஒரு குடுவை தருவார்கள். 

காலையில் எழும்பியதும் ஒரு சாம்பிள் பிடித்து கொடுத்தால் - 3 நாளில் நீங்கள் பச்சை தமிழனா அல்லது இளம் பச்சை தமிழனா அல்லது பிங்க் கலர் தமிழனா என ரிசல்ட் வீட்டுக்கு டோர் டிலிவரியாகும்🤣.

32 minutes ago, விசுகு said:

நாம் தமிழர் கட்சியின் எந்த கோவை மற்றும் தேர்தல் அறிக்கையிலும் நீங்கள் சொல்வது போல இல்லை இருக்காது.

நாம் தமிழரின் முதலாவது கொள்கை விளக்க கையேட்டினை நீங்கள் படித்துள்ளீர்களா? (இப்போ அதை அவர்களே மறைக்கிறார்கள்).

34 minutes ago, விசுகு said:

சீமான் அல்ல நாம் தமிழர்.

இதை சொல்ல நீங்கள் யார்?

சீமாந்தான் நான் தமிழர், நாம் தமிழர்தான் சீமான்.

சின்ன விடயங்களில் சீமானை எதிர்க்க கூட இல்லை, விளக்கம் கேட்டவர்களே நா த க வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.

“வையடா போனை” என்ற டெலிபோன் உரையாடலில் சீமானே இதை சொல்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

————-

டக்வர்த்-லூயிஸ் முறை போல, கந்தையா-ரசோ முறையில் தமிழ் நாட்டில் கட்சிகளின் ஆதரவு நிலமை கீழே.

திமுக வும் காங்கிரசும் கிட்டதட்ட சரி சமன் என வருகிறது. காரணம் காங்கிரஸ் கேட்ட தொகுதியில் எல்லாம் திமுக வாக்குகள் காங்கிரசுக்கு வீழ்ந்துள்ளன.

ஆகவே கட்சிகளின் ஆதரவை கணிப்பது இயலாத காரியம் என்ற முடிவுக்கு வருகிறேன்.

திமுக = 1.28x40= 51.2

அதிமுக = 0.63x40=  25.2

பாஜக = 0.48x40= 19.2

காங்கிரஸ் = 1.18x40= 47.2

நாதக =  0.2x40=8

பாமக = 0.42x40= 16.8

2 hours ago, Justin said:

கணக்கில் புலியல்ல, ஆனால் numerical data என்ன சொல்கிறது என்று தேடுவது தான் என் பிரதான தொழில். அந்த அனுபவத்தில்:

தொகுதிகளின் எண்ணிக்கையால், கிடைத்த வாக்குகளின் வீதத்தைப் பிரித்தால் வரும் பதில், சிம்பிளாக ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வீதம் வாக்கு விழுந்திருக்கிறது என்று    காட்டும்.

இதன் அர்த்தம் என்ன? போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு கட்சியின் முடிவு, அது கட்சியின் பிரபலத்தைப் பிரதிபலிக்காது.

அப்படிப் பல தொகுதிகளில் நின்று, கொஞ்சூண்டு வாக்குகளை வென்றால், இப்போது நா.த.க செய்வது போல "இது வெற்றி" என்று கொண்டாடலாம். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் (சராசரியாக) 1% இற்கும் குறைவான வாக்குகளே நாதகவிற்குக் கிடைத்திருக்கிறது என்பது கொண்டாடக் கூடிய தரவு அல்ல.

நன்றி🙏.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, goshan_che said:

இதை சொல்ல நீங்கள் யார்?

அதே

யாழ் களமே சாட்சி

அவர்கள் பற்றி பேசத் தேவையில்லை 

இனி அவர்கள் இன்றி பேச முடியாது. 

தொடரும்

பேசுவோம் ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che ஒரு கட்சி போட்டியிட்ட தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையையை மொத்த வாக்காக எடுத்துக்கொண்டு  ஒரு கட்சி பெற்ற வாக்கை வர்களின் வாக்கு சதவீதமாக கொள்வது ஒரளவு துல்லியமாக இருக்கும்.  ஒரிரு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு இது பொருந்துமோ தெரியாது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒரளவுக்கு பொருந்தலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, விசுகு said:

அவர்கள் பற்றி பேசத் தேவையில்லை 

இனி அவர்கள் இன்றி பேச முடியாது. 

உண்மையாக இந்த கருத்தை பார்க்க பச்சாதாபமே வருகிறது.

——-

பேசுவோம்🙏

5 minutes ago, island said:

@goshan_che ஒரு கட்சி போட்டியிட்ட தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையையை மொத்த வாக்காக எடுத்துக்கொண்டு  ஒரு கட்சி பெற்ற வாக்கை வர்களின் வாக்கு சதவீதமாக கொள்வது ஒரளவு துல்லியமாக இருக்கும்.  ஒரிரு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு இது பொருந்துமோ தெரியாது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒரளவுக்கு பொருந்தலாம். 

இதற்கு மேல் இந்த மரமண்டையால் இயலாது.

முடிந்தால் பகிரவும்🙏.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் நாம்தமிழர்.. என்னைப்போன்று உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ்த்தேசியவாதிகளிற்கு இது உற்சாகம் தருகிறது.. 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, goshan_che said:

உண்மையாக இந்த கருத்தை பார்க்க பச்சாதாபமே வருகிறது.

——-

பேசுவோம்🙏

இதற்கு மேல் இந்த மரமண்டையால் இயலாது.

முடிந்தால் பகிரவும்🙏.

உண்மையில் நாம் பரிதாபப்பட்ட ஜென்மங்கள் தானே?? கேட்க நாதியற்ற பிறவிகள் தானே. 

59 minutes ago, goshan_che said:

உண்மையாக இந்த கருத்தை பார்க்க பச்சாதாபமே வருகிறது.

——-

🙏

🙏.

இதில் என்ன வெட்கம்??

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

சீமான் புலிகளின் சின்னத்தையும், கொடியையும் ஆட்டையைப் போட்டிருக்கா விட்டால், அவர் இது வரை பயணித்திருக்கவே முடியாது. ஈழத்தமிழர்களும் அவரைக் கணக்கிலெடுத்துப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் (இப்போதும் தாயகத்தில் சீமான் பற்றி உள்ளூர் ஊடகங்கள் கணக்கிலெடுப்பதில்லை!).

"நதி மூலம் ரிஷி மூலம்" சீமான் பார்த்தால் அவருடைய பரம்பரை பற்றி சுட்டிக் காட்டிப் பேசுவதில் நியாயம் இருக்கிறது. பானையைப் பார்த்து சட்டி கறுப்பென்று சொல்ல முடியாதல்லவா😎?

சீமான் மட்டுமல்ல உலகத்தில் வாழும் யாரும் புலிகளையும் தலைவரையும் அதன் கொள்கைகளையும் பேசலாம்.. அது ஒரு தத்துவம்.. தலைவர் தமிழ்தேசிய உலகிற்கு தந்துவிட்டு போனது.. மார்க்சியம் போல லெனினியம் போல் பெரியாரிசம் அம்பேத்கரிசம் போல் பிரபாகரனும் புலிகளும் அந்த சோரம்போகாத போராட்டம் மூலம் வாழ்ந்துகாட்டிவிட்டு போன தத்துவமும் இந்த உலகம் முழுதுக்குமானது.. நீங்கள் வெளிநாடுகளில் துரோகிப்பட்டம் கொடுக்கும் புலிகளை குத்தகைக்கு தாம் மட்டுமே எடுத்துவிட்டோம் என்பதுபோல் செயல்படும்  புலிகளின் காசை ஆட்டையப்போட்டவர்கள் போல பேசுகிறீர்கள்.. அவர்களுக்கு பலம் சேர்ப்பதுபோல் இருக்கிறது புலிகளையும் அவர்கள் தத்துவத்தையும் யாரும் பேசக்கூடாது என்பது.. புலிகளையும் அவர்கள் கட்டமைத்து வாழ்ந்து காட்டிவிட்டுபோன அந்த தமிழ்தேசிய தத்துவமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நாம் இறந்த பின்னாலும் இன்னும் சில நூற்றாண்டுகளில் திராவிடம்போல் ஒரு பெரும் தத்துவமாக எழுச்சி பெறும்.. வரலாறு அதன் தடங்களில் காலம் சென்றாலும் உண்மைக்கும் அதன் வழி நின்று செய்யப்பட்ட தியாகங்களுக்கும் பெரும் பக்கங்களை அதன் வழிநெடுக ஒதுக்கி வைத்திருக்கிறது.. அவற்றை இன்றும் நாம் படித்து புளகாங்கிதம் அடைகிறோம்... அது போல் புலிகளின் போராட்டமும் தியாகமும் பேசப்படும்.. தமிழ் தேசியம் எழும்..

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓணாண்டியார், சுகமா? கனகாலம் கண்டு.

அவசரப் பட்டுட்டியள். புலிகள் தத்துவத்தைப் பேச லைசென்ஸ் வேண்டுமென்றோ அல்லது பேசவே கூடாதென்றோ சொல்லவில்லை. எதற்காகப் பேசுகிறோம், பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். ஒரு தமிழக அரசியல் வாதி, தன் ஊரில் வாக்குகள் பெற, ஈழவரிடம் நிதி பெற, அதனால் தன் அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்த புலிகளின் கொடியை, பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துவது தவறு என்பது என் அபிப்பிராயம்.

ஆனால், யாராவது "ம்.." என்றால் "ஐயோ கொச்சைப் படுத்தி விட்டார்" என்று ஒப்பாரி வைக்கும் யாழ் கள சீமான் விசிறிகளுக்கு சீமான் செய்வது "மகிமைப் படுத்தலாக" தெரிவதில் ஆச்சரியமில்லை என நினைக்கிறேன்😎. டிசைன் அப்படி!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

————-

டக்வர்த்-லூயிஸ் முறை போல, கந்தையா-ரசோ முறையில் தமிழ் நாட்டில் கட்சிகளின் ஆதரவு நிலமை கீழே.

திமுக வும் காங்கிரசும் கிட்டதட்ட சரி சமன் என வருகிறது. காரணம் காங்கிரஸ் கேட்ட தொகுதியில் எல்லாம் திமுக வாக்குகள் காங்கிரசுக்கு வீழ்ந்துள்ளன.

ஆகவே கட்சிகளின் ஆதரவை கணிப்பது இயலாத காரியம் என்ற முடிவுக்கு வருகிறேன்.

திமுக = 1.28x40= 51.2

அதிமுக = 0.63x40=  25.2

பாஜக = 0.48x40= 19.2

காங்கிரஸ் = 1.18x40= 47.2

நாதக =  0.2x40=8

பாமக = 0.42x40= 16.8

நன்றி🙏.

எனக்கு புரிந்த அளவுக்கு இது தவறு, உதாரணத்துக்கு திமுகவின் 27% என்பது அவர்கள் போட்டியிட 21 தொகுதிகளுக்கானதல்ல. அவரகள் கூட்டணி 21 தொகுதிகளில் எடுத்த வாக்குகளை வைத்து 40 தொகுதிகளுக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் அதை 21ஆல் வகுத்து 40ஆல் பெருக்குகிறீர்கள்   

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி Published By: Vishnu 16 Dec, 2024 | 02:25 AM   மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார்.  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய மக்கள் சார்பாக மிஸ்பா ஜெப மிஷனரி ஆலய மாணவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன். இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது  இன்றையதினம் இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற அனைவரோடும் மாணவர்கள், இளைஞர்கள், இங்கே இருக்கின்ற மக்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு ஆரம்பம்தான் எதிர்காலத்தில் பல விடயங்களோடு சேர்ந்து பயணிப்போம்.  ஒக்டோபர் மாதம் இறுதியில் பெரியளவிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள் ஆனால் மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மேலும் தெரிவித்தார்.    
    • வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024    (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் உள்நாட்டு இறைவரி கட்டளை சட்டங்களின் பிரகாரம் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு எதிராக 2025 ஜனவரி மாதத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் எஞ்சிய வருமான வரி பணம் செலுத்தாத நபர்களுக்கு முன் அறிவிப்பின்றி அவர்களின்  வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக அவர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரி பணத்தின் அளவுக்கமைய குற்றவியல் வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.    
    • இல்லை என்பதை எப்படி ஆணித்தரமாக கூறுகின்றீர்கள்?  
    • சில்ல முடியாது. எங்கள் டமில் தேசிய வியாதியஸ்தர்கள் கருணாநிதியைக் கொப்பியடிப்பதில் வல்லவர்கள்.  😁
    • இவர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று கனடா பிரதமருக்கும் அனுப்பினவர்களோ
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.