Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 JUN, 2024 | 12:49 PM
image
 
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு தான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. 

பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் நிகழ்வு. இதற்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக நாங்கள் செல்ல கூடாது. 

அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். சிவில் சமூகம் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம். அவர்களின் ஆலோசனைகளை வரவேற்போம். 

தேர்தல் என்பது அரசியல் நிகழ்ச்சி. அந்த அரசியலில் மக்களை வழி நடத்த சிவில் சமூகத்தை மக்கள் தெரிவு செய்து அனுப்பவில்லை. மக்கள் எமக்கே ஆணை தந்துள்ளார்கள். நாங்களே மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்த கூடியவர்கள். நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டு விட்டு மக்களை உதாசீனப்படுத்த முடியாது.

இதையெல்லாம் தாண்டி நாங்கள் நிறுத்தி தான் ஆவோம் என யாராவது ஒற்றைக்காலில் நின்றால் அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. 

அதற்கு எதிராக நாங்கள் செயற்பட்டால் எங்களுக்கு உடனடியாக துரோகி பட்டம் கட்டுவார்கள். அதற்காக நங்கள் ஒழிந்து ஓட போவதில்லை. துரோகி பட்டத்திற்கு இன்று பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. 

ஆனால் என்ன தான் செய்தாலும் எங்கள் மக்களின் அடிப்படை உரித்தை விட்டுக்கொடுக்கவோ , விலை பேசவோ நாம் அனுமதிக்க போவதில்லை. 

தமிழ் வேட்பாளர் என ஒருவரை அடையாளப்படுத்தி முற்படுத்தினால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் நாங்கள் . ஏனென்றால் அவர் தேர்தலில் படு தோல்வி அடையும் போது, இது எங்களின் அரசியல் நிலைப்பாடு அல்ல. இது யாரோ செய்த கோமாளி கூத்து என நாங்கள் சொல்ல கூடியதாக இருக்க வேண்டும். 

எனவே எமது கட்சியை சார்ந்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். என்னையும் துரோகி என்று சொல்லி விடுவார்களோ என ஒழிந்து ஓட வேண்டாம். பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நங்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். 

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் ! | Virakesari.lk

  • Replies 86
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொ

  • மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையா

  • Kandiah57
    Kandiah57

    தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    த

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிழம்பு said:

எங்களுக்கு உடனடியாக துரோகி பட்டம் கட்டுவார்கள்.

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது ஏற்கனவே அவர் தமிழர்களுக்கு துரோகி தானே போர் குற்றம் தொடர்பில் .

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தோற்கடிப்பேன்! துரோகி பட்டம் தாருங்கள்! சுமந்திரன் ஆவேசம்.

தேர்தலிலே வாக்குகளை புறக்கணிப்பதாலும் வேறு ஒருவருக்கு வாக்களிப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்திருந்த நிலையில் தமிழர்களுடைய வாக்குகளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தீர்மானம்மிக்க வாக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

“மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு ஆர்வம்

மேலும் தெரிவிக்கையில், “2005 இல் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை புறக்கணித்திருந்த நிலையில் அதன் விளைவுகளை சந்தித்திருந்தோம். ஆகையினால் இந்த வாக்கை பிரயோசனமான முறையிலே நாங்கள் ஒரு ஜனநாயக சூழலிலே மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கிற போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்கை திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்.

அதை நாங்கள் செய்வது நல்லது என்ற என்னுடைய கருத்தை சொல்லி வைக்கிறேன். இப்படியாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

தற்போது வவுனியாவிலும் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் இருந்து நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் இப்படியாக பேசுவது நல்லது. இந்த விடயங்களை பகிரங்கமாக மக்களோடு சேர்ந்து பேசுவது நல்லது என்பதுடன் மிகவும் ஆரோக்கியமானது. அதை தவிர்க்கிறவர்கள் தவிர்க்கலாம்.

ஆனால் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று இன்று திரளாக வந்த உங்களுடைய வருகை எங்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. 

பொதுத்தேர்தல்

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கிற பொழுது கூட வாக்களித்தார்கள்.

அதன் பின்னர் மூன்று மாதங்களில் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கைவிட போரில் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்கு வாக்குகள் கொடுத்தார்கள்.

/votes-tamils-converted-decisive-votes-sumanthran

அடுத்த தடவை நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள்.

இந்த இடத்தில் மைத்திரிக்கு வாக்களித்து அதனால் என்ன நடந்தது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் அதில் ஆனது என்னவென்று எங்களில் பலருக்கு தெரியும். ஆனால் முடிவு ஒன்றும் பெறவில்லை என்பதை தவிர நடந்த பல விஷயங்கள் பலருக்கு தெரியும்.

புதிய அரசியலமைப்பு

இதில் விசேஷமாக எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயம். அந்த காலகட்டத்தில் எங்கெங்கு எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் இருக்கின்றன அதனைச் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை .

/votes-tamils-converted-decisive-votes-sumanthran

குறித்த காலகட்டத்தில் தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது. எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது.

அப்படி காணி விடுவிப்பு பெரியளவில் நடந்தது. அதேபோன்று ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால் அது நிறைவு பெறவில்லை.

இந்நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/votes-tamils-converted-decisive-votes-sumanthran-1717999137

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிப் பட்டம் எத்தனை தரம் தான் கொடுக்கிறது? ஒருக்காத் தான் தரலாம், அதை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியது பட்டம் வேண்டியவரின் பொறுப்பு😂!

ஆனால்: சொன்ன விடயங்களோடு ஒப்புதல் தான்! தனி பொது வேட்பாளர் வேண்டாத வேலை, இருக்கும் 3 பேரில் பேச உகந்தவர் யாரென்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொது தமிழ் வேட்பாளரை  வேணாம் என்று சுடுதண்ணியை குடித்தவர் போல் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு கத்துகிறவர் மூன்று சிங்கள  வேட்பாளர்களில் யாரையுமே அவர் சார்பில் தெரிவிக்கவில்லை இதுதான் சுத்து  மாத்து  வழக்கம்போல் தமிழர்களை குழப்பி அடிப்பதுதான் அவரின் (அவர் என்று மரியாதை கொடுத்து எழுதுவதுக்கு கூட தகுதி அற்றவர்   ) ஒரே தொழில் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

ஏன்? அவர் ஒருவரைச் சுட்டிக் காட்டினால் அவரைத் துரோகியில்லை என்று விடுவீர்களா😂?

உங்களுக்கு யோசிப்பு இயலுமை இல்லாமல் இருக்கலாம், தாயக மக்களுக்கு/வாக்களர்களுக்கு கணிசமாக இருக்கிறது என நான் நம்புகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

ஏன்? அவர் ஒருவரைச் சுட்டிக் காட்டினால் அவரைத் துரோகியில்லை என்று விடுவீர்களா😂?

உங்களுக்கு யோசிப்பு இயலுமை இல்லாமல் இருக்கலாம், தாயக மக்களுக்கு/வாக்களர்களுக்கு கணிசமாக இருக்கிறது என நான் நம்புகிறேன்!

அவரே துரோகி  என்று எவன் சொன்னாலும் தனக்கு கவலையில்லை என்பவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் ஒருத்தரை கை  காட்ட வேண்டியதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிப் பட்டத்துக்கு பயப்படமாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:
10 JUN, 2024 | 12:49 PM
image
 
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு தான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. 

பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் நிகழ்வு. இதற்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக நாங்கள் செல்ல கூடாது. 

அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். சிவில் சமூகம் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம். அவர்களின் ஆலோசனைகளை வரவேற்போம். 

தேர்தல் என்பது அரசியல் நிகழ்ச்சி. அந்த அரசியலில் மக்களை வழி நடத்த சிவில் சமூகத்தை மக்கள் தெரிவு செய்து அனுப்பவில்லை. மக்கள் எமக்கே ஆணை தந்துள்ளார்கள். நாங்களே மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்த கூடியவர்கள். நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டு விட்டு மக்களை உதாசீனப்படுத்த முடியாது.

இதையெல்லாம் தாண்டி நாங்கள் நிறுத்தி தான் ஆவோம் என யாராவது ஒற்றைக்காலில் நின்றால் அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. 

அதற்கு எதிராக நாங்கள் செயற்பட்டால் எங்களுக்கு உடனடியாக துரோகி பட்டம் கட்டுவார்கள். அதற்காக நங்கள் ஒழிந்து ஓட போவதில்லை. துரோகி பட்டத்திற்கு இன்று பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. 

ஆனால் என்ன தான் செய்தாலும் எங்கள் மக்களின் அடிப்படை உரித்தை விட்டுக்கொடுக்கவோ , விலை பேசவோ நாம் அனுமதிக்க போவதில்லை. 

தமிழ் வேட்பாளர் என ஒருவரை அடையாளப்படுத்தி முற்படுத்தினால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் நாங்கள் . ஏனென்றால் அவர் தேர்தலில் படு தோல்வி அடையும் போது, இது எங்களின் அரசியல் நிலைப்பாடு அல்ல. இது யாரோ செய்த கோமாளி கூத்து என நாங்கள் சொல்ல கூடியதாக இருக்க வேண்டும். 

எனவே எமது கட்சியை சார்ந்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். என்னையும் துரோகி என்று சொல்லி விடுவார்களோ என ஒழிந்து ஓட வேண்டாம். பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நங்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். 

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் ! | Virakesari.lk

தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது   கொழும்பு வாழ்  மக்களால்  ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத.  ரணிலுக்கு   சுமத்திரன்.  எப்படி தமிழ் மக்கள் மத்தியில்   இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று    சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு   வாக்கு போடவில்லை??  இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை??  ஆனால் 2005 இல்  வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்??   

இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான்  தமிழருக்கு  சுயாட்சி  வழங்கலாம்  ஏன்?  வழங்க இல்லை  ?? அதாவது விருப்பமில்லை  2005  இவரை தெரிவு செய்திருந்தால்   சுயாட்சி வழங்கி இருப்பாரா??    இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால்  தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா??    இல்லை  இந்த ரணில்  வாழ் நாள் அரசியல்வாதி.   இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் நண்டுக்குணம் ??

உருப்பட வாய்ப்பே இல்லை ராசா.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

தமிழரின் நண்டுக்குணம் ??

உருப்பட வாய்ப்பே இல்லை ராசா.

உருப்பட வெளிகிட்டாலும் சுத்து மாத்து சுமத்திரன் போன்றவர்கள் விடமாட்டார்கள் அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6555.jpeg.f95e358d822ec69e775f

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6555.jpeg.f95e358d822ec69e775f

கவி ஐய்யா கேட்கிறேன் என்று குறை நினைக்க கூடாது நீங்கள் இன்னும் ஊரிலா அதாவது இலங்கையிலா உள்ளீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

கவி ஐய்யா கேட்கிறேன் என்று குறை நினைக்க கூடாது நீங்கள் இன்னும் ஊரிலா அதாவது இலங்கையிலா உள்ளீர்கள் ?

பெருமாள், நான் யேர்மனியில் இருக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பிக்கிறது அல்லவா. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது   கொழும்பு வாழ்  மக்களால்  ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத.  ரணிலுக்கு   சுமத்திரன்.  எப்படி தமிழ் மக்கள் மத்தியில்   இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று    சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு   வாக்கு போடவில்லை??  இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை??  ஆனால் 2005 இல்  வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்??   

இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான்  தமிழருக்கு  சுயாட்சி  வழங்கலாம்  ஏன்?  வழங்க இல்லை  ?? அதாவது விருப்பமில்லை  2005  இவரை தெரிவு செய்திருந்தால்   சுயாட்சி வழங்கி இருப்பாரா??    இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால்  தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா??    இல்லை  இந்த ரணில்  வாழ் நாள் அரசியல்வாதி.   இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??  

கந்தையர், 2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு கொழும்பில் 51% வாக்குகள். யாழ்ப்பாணத்திலும், வன்னி மாவட்டத்திலும் பதிவான 20 ஆயிரத்திற்கு உட்பட்ட வாக்குகளில் 70% ரணிலுக்கு. இதே போல ரணில் 70% வாக்குகள் பெற்ற இன்னொரு இடம் நுவரெலியா!

இங்கே உங்களுக்குப் பின்னணி புரிகிறதா? தமிழ் மக்கள் தடுக்கப் பட்டிருக்கா விட்டால் ரணில் தான். அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பது எவருடையதுமான ஊகம். ஆனால், நடந்து விட்ட 2009 அழிவு ஊகமல்ல, நிஜமான சம்பவம்!

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

2005. இல் தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தால்.  ரணில் ஐனதிபதி  ஆகி இருப்பார்  என்ற உங்கள் கூற்று சரியாகும்  ஆனால்  தீர்வு நிச்சயமாக கிடைத்து இருக்காது  மீண்டும் சொல்லுகிறேன். 2005  இல் 100% தமிழ் மக்கள்  வாக்கு போட்டிருந்தாலும். தீர்வு கிடைத்திருக்காது   நன்கு திட்டமிட்டவகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றாமால். செய்யும் அரசியல்வாதிகளில். இவர் ரணில்  மிக முக்கியமான மனிதர்   ஆகவே  2005 தேர்தல் முடிவு பற்றி எனக்கு ஒரு சிறுதுளி கவலையுமில்லை   2009 அழிப்பு இவரது  ஆதரவுடன் நடத்தது  இவர் தடுக்கவில்லை  மாறாக  பால் சோறு  சாப்பிட்டார்    இவருக்கு தமிழ் மக்கள்  50%,....70%    என்று வாக்கு போடுவார்கள் என்றால்     ஒரு தமிழன் பொது வேட்பாளரா நிற்பதை  ஏன் தடுக்க வேண்டும்??  இன்றைய ஐனதிபதி  ரணில் தமிழ் மக்களுக்கு தீர்வு தர விரும்பவில்லை ..நாளைய ஐனதிபதி ரணில்  தீர்வு தருவாரா??  தமிழ் மக்கள் வாக்கு போடும் விதத்தை வைத்து  ரணில்  நல்லவர்  தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் தீர்வு வழங்குவார். என்று நிறுவ முடியாது ...கூடாது     மாறாக கடந்த காலங்களில் ரணிலின். செயல்பாடுகளை வைத்து கணிக்க நிறுவ   முயல வேண்டும்    2009  அழிப்புக்கு போராடியவர்கள் காரணம் இல்லை   தீர்வு தாராமல். அழித்தவர்கள் தான்  குற்றவாளிகள்  அதில் ரணிலுக்கு முக்கிய பங்குண்டு  

  • கருத்துக்கள உறவுகள்

2009 அழிவின் சூத்திரதாரி இந்தியா -சோனியா , ரணில் வந்தால் என்ன , மஹிந்த வந்தால் என்ன. அழிவு தான் முடிவு. சும்மா ரணிலுக்கு போற்றிந்தால் அழிவில் இருந்து தப்பியிருப்பம் என்பது , அரசியல் அறிவு இல்லாத வாதம். மஹிந்தவும் சண்டைக்கு போக மனதளவில் விரும்பவில்லை ஆனால் அவரை தன்வழிக்கு மாற்றியது இந்தியா . 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

76 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையினை தீர்க்கும் திற்வுகோல் ரணிலிடம் மட்டும் இருக்கிறதா?

இந்த பிரச்சினை தொடர்ந்து செல்லும் கடைசியாக யாராவது  இடையில் புகுந்து குரங்கு அப்பம் பிரித்தனை போல் பிரிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

உருப்பட வெளிகிட்டாலும் சுத்து மாத்து சுமத்திரன் போன்றவர்கள் விடமாட்டார்கள் அண்ணா .

அவரையே தெரிவு செய்து நிறுத்தினால்??

என்ன சிரிப்பு வருகிறதா?

அவரது கட்சியே அவரை தெரிவு செய்யுதில்லை அதுக்குள்ள இந்த நினைப்பு வேறா என்று?

கூட்டி கழித்து பாருங்க கணக்கு (ஏன் கொதிக்கிறார் என்பது) சரியாக வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சுமா  பொத்திக்கொண்டு இருப்பதே நல்லம் . ஒரு கோடாரிக்காம்பு .....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

76 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையினை தீர்க்கும் திற்வுகோல் ரணிலிடம் மட்டும் இருக்கிறதா?

இந்த பிரச்சினை தொடர்ந்து செல்லும் கடைசியாக யாராவது  இடையில் புகுந்து குரங்கு அப்பம் பிரித்தனை போல் பிரிப்பார்கள்.

குரங்கு அப்பம் பிரிக்க வந்து தன்வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்வதுதான் கதை. இலங்கையில் 76 வருடங்களாக அப்பம் பிரிக்க வருவது குரங்கல்ல நாய்கள். வைக்கல் பட்டடை நாய்கள்.😳

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழன்பன் said:

2009 அழிவின் சூத்திரதாரி இந்தியா -சோனியா , ரணில் வந்தால் என்ன , மஹிந்த வந்தால் என்ன. அழிவு தான் முடிவு. சும்மா ரணிலுக்கு போற்றிந்தால் அழிவில் இருந்து தப்பியிருப்பம் என்பது , அரசியல் அறிவு இல்லாத வாதம். மஹிந்தவும் சண்டைக்கு போக மனதளவில் விரும்பவில்லை ஆனால் அவரை தன்வழிக்கு மாற்றியது இந்தியா . 

உங்கள் "அரசியல் அறிவில்" ஒரு துளியை இங்கே பகிர்ந்து இந்தக் கூற்றை விளக்கலாமே?

போரிட விருப்பமில்லாத ராஜபக்ஷ  அமெரிக்காவில் சிவிலியனாக இருந்த கோத்தாவையும், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற இரண்டாம் நிலை இராணுவ அதிகாரிகளையும் முன்னிறுத்தி படைகளைப் பலப்படுத்தினார் என்கிறீர்களா😎

ரணிலை, அவர் இயக்கத்தை உடைத்தார் என்ற கோபத்தில் பழிவாங்க எடுத்த முடிவு தான் புலிகள் வாக்களிப்பைப் பகிஷ்கரித்தது. இந்த தூர நோக்கில்லாத கோபாவேஷ முடிவை "இராசதந்திர முடிவு" என்று காட்ட பல தியரிகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. உங்களுடையது கொஞ்சம் புதிதாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

76 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையினை தீர்க்கும் திற்வுகோல் ரணிலிடம் மட்டும் இருக்கிறதா?

இல்லை தான்  ஆனால் அவர் அதை எடுக்க முடியும் .....முதல் காரணமும்,.முக்கிய காரணமும்.  அந்த திறவுகோலை  அவர் எடுக்க விரும்பவில்லை  ...எப்படி என்றால்,..உதாரணமாக  1983 ஆண்டில்  தமிழ் மக்களை தாக்கிய,வெட்டிய.  ...கொன்ற,.எரித்த     அனைத்து குற்றவாளிகளையும். தேடி கண்டு பிடித்து   நண்பர்கள் உறவினர்கள்  பணக்காரர் என்று பாராது சட்டம் தன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும்  ...அதாவது ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும்  ...இதன் மூலம் குற்றவாளிகள் குறைவு அடைவார்கள்.  குற்றவாளிகளின். சொத்துக்கள் பறிமுதல் செய்து  பதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்   இதனால் சிங்களவர் தமிழரை தாக்குதல் வெட்டுதல். கொல்லுதல்   எரித்தால்     என்பன. குறையும்  அல்லது நடைபெறாது     இன்று ஒரு நெருகடியான. நிலை இலங்கையில் தோன்றும் போது  சிங்களவன். தமிழர்களை என்னவும் செய்யலாம்  என்ற எழுதாப்படாத. சட்டம் உண்டு”  இந்த நிலைமையை மாற்றி அமைத்தால். திறவுகோல். இவரிடம் வந்து விடும்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

புலிகள் வாக்களிப்பைப் பகிஷ்கரித்தது. இந்த தூர நோக்கில்லாத கோபாவேஷ முடிவை "இராசதந்திர முடிவு" என்று காட்ட பல தியரிகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.

அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.