Jump to content

மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   04 JUL, 2024 | 02:03 AM

image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர்  உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில்,  ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஆளுநருபழக்கு களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறும்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187629

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன்.  அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது.  சிவத்தமிழ்ச்செல்வி தங்

Kavi arunasalam

தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவ

கந்தப்பு

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகன

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு; ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்துமூடல்! வடக்கு ஆளுநர் பணிப்புரை!
 
 
1215656767.jpg

 

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும், அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட் டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் குளிக்கும் இடத்துக்கு மேற்புறமாக கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்த சிறுமிகள். அதுதொடர்பில் தமது பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் இல்லத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீதியைப் பதிவு செய்வதற்காகவே கமரா பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருத்துமாறு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை ஆளுநருக்கு வழங்கப்பட்டதையடுத்து, அறிக்கைகளின் பிரகாரம் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதி பெறாத மற்றொரு இல்லத்தையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர் மேற்பார்வை செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யாமல் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார். (ச)
 

https://newuthayan.com/article/மாணவிகள்_குளிக்கும்_வீடியோக்கள்_பதிவு;_ஆறு.திருமுருகனால்_நடத்தப்படும்_சிறுவர்_இல்லம்_இழுத்துமூடல்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

large.IMG_6828.jpeg.81208c31261628ea3667

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா  

  • Like 3
Link to comment
Share on other sites

11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா  

சிவபூமி - சிவசேனை இரண்டும் ஒரே குட்டைகள். 

இதற்கும் முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளனர்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் விடுதியை மூட உத்தரவு!

02-1.jpg

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அந்த விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

தெல்லிப்பளை பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நிலையம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் மற்றும் நன்னடத்தை பிரிவிற்கும், வடமாகாண ஆளுநருக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உடனடியாக அவ்விடுதியை மூடிவிட்டு, அதன் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சிவபூமி - சிவசேனை இரண்டும் ஒரே குட்டைகள். 

இதற்கும் முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளனர்.

இது பெரிய வீட்டு சமாச்சாரம் என்பதால் அமுக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன். 

அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது. 

சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது முயற்சி, மற்றும் அவருக்கு ஒத்தாசை வழங்கியவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆதரவில் சிறப்பாக கோயிலையும், இதர நிர்வாகத்தையும் நீண்டகாலம் கொண்டு சென்றார். 

இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. 

தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும். 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின் செய்தி தளத்தில் இந்த செய்தி உள்ளது. ஆனால், இது துர்க்காபுரத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதியாக கூறப்படவில்லை. செய்தியை இணைத்தவர்கள் முடியுமானால் செய்தியின் உண்மை தன்மையை தெளிவுபடுத்தவும். 

இங்கு பொதுவான ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். 

இலங்கையில் க.பொ.த சாதாரணம் கற்றுவிட்டு க.பொ.த உயர்தரம் கற்கச்செல்லும் மாணவர்கட்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. 

குறிப்பாக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவிகள் உயர்தரத்திற்கு இடம்/பாடசாலை மாறவேண்டி உள்ளது. 

வீட்டு சூழ்நிலை இடம்கொடுக்காத நிலையில் (தங்கும் இடம் வாடகை, உணவு செலவு, ரியூசன் செலவு: ஒரு பாடம் கிட்டத்தட்ட மாதம் 1,250 ரூபா கட்டணம், போக்குவரத்து செலவு) இலவச விடுதிகளில் விலை குறைவான இடங்களில் சென்று தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 

Link to comment
Share on other sites

நியாயம்,

மேலே உள்ள செய்திகள் வீரகேசரி, உதயன் மற்றும் தினக்குரல் செய்தித் தளங்களிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்வின் செய்தியை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை. 

செய்தியின் பிரகாரம் இதற்குப் பொறுப்பான ஆறுதிருமுருகனும் அவர் சார்ந்த சிவபூமியுமே இங்கு கண்டனத்துக்கு உள்ளாகியதே தவிர சிறுவர் விடுதியின் அவசியம் பற்றியதல்ல. சிவபூமி பற்றிய விமர்சனங்களில் எதுவித மாற்றமுமில்லை.

அது தவிர உங்கள் இரு கருத்துக்களிலும், நடைபெற்ற சம்பவத்தை - அது சட்டப்படி குற்றம் என்று தீர்க்கப்படாவிட்டாலும் கூட, இம்மியளவும் கண்டிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள்.

நன்றி.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://tellidurga.com/about-our-temple/

தெல்லிப்பளை துர்க்கை சிறுவர் இல்லத் தகவல்கள் 👆

 

பிறிதொரு செய்தி 👇

யாழில் பாழடைந்த வீட்டில் சிறுவர் இல்லம்.

2024-07-04 06:50
facebook.pngtwitter.pngwhatsapp.pngviber.pngskype.png

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த தை மாதம் 03 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் கடந்த மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன் , ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில் , மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே படுத்து உறங்கி எழும்பும் நிலை காணப்பட்டுள்ளது.

அத்துடன் மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள் , குறித்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.

அதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் , யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பொறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலேயே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது.

அதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று , முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல் , தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.eyetamil.ca/news-story/14911/news

https://pagetamil.com/2024/07/04/தெல்லிப்பளை-சிறுவர்-இல்ல/

தெல்லிப்பளை சிறுவர் இல்ல விவகாரத்தில் பிரதேச செயலகம் மீதும் குற்றச்சாட்டு: சைவ சமயத்தின் பெயரால் மூடி மறைக்க முயற்சியா?

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம்

Sri Lanka PoliceJaffnaSri Lankan Peoples
 By Shankar 39 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 
Follow us on Google News
விளம்பரம்

 யாழ். தெல்லிப்ப்பளை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு முடியாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் இயங்கிவந்துள்ளது.

 

 

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில், மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே உறங்கும் நிலையில் காணப்பட்டுள்ளது.

மேலும், மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள், குறித்த வீட்டிலிருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.

 

 

 

இதேவேளை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.

 

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பெறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலையே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது.

 

இதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று, முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல், தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

 

இந்த நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://jvpnews.com/article/children-s-homes-operating-worse-place-in-jaffna-1720121745

Edited by Kapithan
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கௌரவ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/

வட மாகாண சபையின் official web 👆

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

 

இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. 

தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும். 

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

  • Thanks 2
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்று 5ஆம்திகதி யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர் பத்திரிகையிலும்  ‘உதயன் பத்திரிகையில் வெளியான செய்திபற்றி உதயன் பத்திரிகையின் ஊடக அறத்தினை பற்றி இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளது’. PDF வடிவில் உள்ளதினால் இணைக்க முடியவில்லை

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

ஆமாம் நானும் பார்த்தேன்    மிகவும் கவலையளிக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் காழ்புணர்வுடன் சொல்லுகின்றது என்பது ஆறுதிருமுருகனுக்கு வேண்டியவர்களின் கூற்று. அப்படியானால் வடமாகாண ஆளுநரும் காழ்ப்புணர்வுடன் தான் செயற்படுகின்றாரா? 

மீண்டும் திறக்கப்படமுடியாதபடி இந்த குறிப்பிட்ட சிறுவர் இல்லம் மூடப்படவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு யாருக்கு பொருந்திதோ இல்லையோ ஆறு திருமுருகன் ஐயா விடயத்தில் பொருந்தும் தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும்  வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள் 

எல்லாவற்றையும் வென்று அந்த துர்கை அம்மன் துணையுடன் மீண்டெழுவார் ஐயா ஆறு திருமுருகன் 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, சுண்டல் said:

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு யாருக்கு பொருந்திதோ இல்லையோ ஆறு திருமுருகன் ஐயா விடயத்தில் பொருந்தும் தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும்  வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள் 

எல்லாவற்றையும் வென்று அந்த துர்கை அம்மன் துணையுடன் மீண்டெழுவார் ஐயா ஆறு திருமுருகன் 

உங்கள் பிள்ளைகள் குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் வீடியோ எடுத்தாலும் இப்ப்டித்தன் சமயத்தை இழுப்பீர்களா?  

சரியான சுரணை கெட்ட ஆளாக இருக்கிறீரே சுண்டல்,...

🤣

(நான் என்ன எழுதுகிறேன் என்று தெரிந்துகொண்டுதான் எழுதுகிறேன்.)

 

4 hours ago, கந்தப்பு said:

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

விடியோ எடுத்ததைப் பற்றிக் கவலை இல்லை இந்த பன்னாடைக் கூட்டத்திற்கு. 

😏😡

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி ஒருத்தன் பூட்டிட்டு இல்லது பூட்டவைச்சு சதி செய்திட்டு பாவம் அந்தாள சாட்டினா ….. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  

ஊடகத்திற்கு ஊடக தர்மம் 
அவசியல் இல்லையா?

எந்தவொரு ஊடகத்திற்கும் ஊடக தர்மம் என்ற ஒன்று முக்கியம். தனி நபரின் பெயரை செய்தியில் போடுவது முறையன்று. ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரது பெயரை வெளியிடாமல் இருப்பது ஊடக தர்மம். 

ஏன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் பெயர்களைக்கூட வெளியிட்தாக இல்லை.

நிலமை இவ்வாறிருக்க, தமிழர்கள் மத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக, தமிழர்களின் மரபுரிமைகளையும், தமிழ்த் தேசியத்தையும் பாதுகாக்கின்ற ஒருவராக இருக்கக்கூடிய ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் அற நிலையம் ஒன்றை எந்தவித விசாரணையும் இன்றி மூடுவதற்கு ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை பொருத்தமானதல்ல.

அந்தச் செய்தியை பிரதான தலைப்புச் செய்தியாக, தனி ஒருவரது பெயரை பிரதான தலைப்பில் போடுவது ஊடகத்திற்கு இழுக்கு.

ஈ.பி.டி.பி ஸ்ரீதர் தியேட்டரை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருப்பதைப் போன்று யாழ்.உதயன் பத்திரிகையும் தனி ஒருவரின் காணியை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருக்கின்றது. 

உதயன் பத்திரிகை நிறுவனம் இயங்கும் காணியை காணி உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கி அதற்கான எழுத்துமூல உடன்பாட்டையும் ஆறு.திருமுருகன் ஐயாவிற்கு வழங்கியுள்ளார் என அறியவருகின்றது. இது உதயன் தலைவர் சரவணபவனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.

காணியை ஆக்கிரிமிக்க கனவு கண்டவருக்கு இந்த காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டமை பொறுக்க முடியாது உள்ளது. இதனால் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தி, ஊடக தர்மத்தை மீறி ஆறு.திருமுருகன் ஐயாவைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இச்செய்திக்கு எதிராக ஆறு.திருமுருகன் ஐயா மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதை செய்யவேண்டும். 

போரில் பாதிக்கப்பட்டுள்ள அநாதைப் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்கும் உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரை இவ்வாறு பாதிக்கப்பட வைப்பதும் அவரது செயற்பாட்டைக் குழப்புவதற்கு முனைவதும் மிகக் கேவலமான செயல் ஆகும்.

வட்சப்பில் வந்தது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

இன்று 5ஆம்திகதி யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர் பத்திரிகையிலும்  ‘உதயன் பத்திரிகையில் வெளியான செய்திபற்றி உதயன் பத்திரிகையின் ஊடக அறத்தினை பற்றி இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளது’. PDF வடிவில் உள்ளதினால் இணைக்க முடியவில்லை

இன்றைய காலைக்கதிர் (பக்கம் 1,4) வந்த இந்த செய்தியை யாரவது இங்கு இணைக்கமுடியுமா?  

வலம்புரி பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகளிர் இல்லத்தினை மூடுமாறு ஆளுநர் உத்தரவு என்ற செய்தி தவறானது என்று வெளியிட்டிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கந்தப்பு said:

இன்றைய காலைக்கதிர் (பக்கம் 1,4) வந்த இந்த செய்தியை யாரவது இங்கு இணைக்கமுடியுமா?  

வலம்புரி பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகளிர் இல்லத்தினை மூடுமாறு ஆளுநர் உத்தரவு என்ற செய்தி தவறானது என்று வெளியிட்டிருக்கிறார்கள்

kalaikathir-05-07.jpg

2.jpg

3.jpg

இதுவா ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, ஏராளன் said:

kalaikathir-05-07.jpg

2.jpg

3.jpg

இதுவா ஐயா?

நன்றி . 

முதல் பக்கத்தில் ‘இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் வந்த பெட்டி செய்தியும் , அதைதொடர்ந்து 4 பக்கத்தில் வந்த முழு செய்தியும் இணையுங்கள்

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர். எழுதியவர், சைமன் டுலெட் பதவி, பிபிசி செய்தியாளர் "எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு அதன் முதல் நாள் உற்சாகமும், அச்சமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஷிவான் மற்றும் ஆடமுக்கு முதல் நாளே மோசமாக இருந்தது. இருவரும்` Foundem’ என்னும் இணையதளத்தை தொடங்கியபோது, அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கு பெரிய பிரச்னை வரப்போகிறது என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கூகுள் ஸ்பேம் ஃபில்டர்கள் ஏற்படுத்திய பாதிப்பு? கூகுள் தேடுபொறியின் தானியங்கி ஸ்பேம் ஃபில்டர்களில் ஒன்றின் காரணமாக `ஃபவுண்டெம்’ இணையதளம் மீது கூகுள் சர்ச் பெனால்டி (`Google search penalty’) விதிக்கப்பட்டது. இது அவர்களின் இணையதளத்தின் வணிகத்தை பாதித்தது. விலை ஒப்பீடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ராஃப் தம்பதியினரின் `ஃபவுண்டெம்’ இணையதளம், ஷாப்பிங் செய்பவர்கள் வெவ்வேறு விற்பனையகங்களில் விலை ஒப்பீட்டை தெரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி பயனர்கள் விலை ஒப்பீடு தொடர்பான தகவல்களை பெற `ஃபவுண்டெம்’ லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் பட்டியலிட்டிருக்கும் பொருட்களை கிளிக் செய்யும் போது ராஃப் தம்பதிக்கு வருவாய் வரும். ஆனால், கூகுள் விதித்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டது. இணையதளத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும், விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் தொடர்பான கூகுள் தேடல் முடிவுகளின் பட்டியலில் `ஃபவுண்டெம்’ மிகவும் பின்தங்கியது. "எங்கள் இணையதளத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தோம். கூகுள் தேடலில் அவை எவ்வாறு தரவரிசை செய்யப்படுகின்றன என்பதை பார்த்தபோது, அவை அனைத்தும் உடனடியாக வீழ்ச்சியடைந்ததைக் கவனித்தோம்" என்று ஆடம் கூறுகிறார்.   கூகுளுக்கு எதிரான நீடித்த சட்டப் போராட்டம் ஃபவுண்டெம் தளத்தின் முதல் நாள் திட்டமிட்டபடி போகவில்லை. இது 15 ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. தம்பதியினரின் சட்டப்போராட்டத்தின் இறுதியில் கூகுளுக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் (ஏறக்குறைய 26 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நம்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் உலகளாவிய ஒழுங்குமுறையில் இந்த வழக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்பட்டது. ஜூன் 2017இல் வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் ஏழு ஆண்டுகள் போராடியது. இந்த ஆண்டு செப்டம்பரில், ஐரோப்பாவின் உயர் நீதிமன்றமான `ஐரோப்பிய நீதிமன்றம்’ கூகுளின் மேல்முறையீடுகளை நிராகரித்தது. அந்த இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு, ரேடியோ 4 இன் தி பாட்டம் லைனிடம் ஷிவான் மற்றும் அடாம் கொடுத்த முதல் நேர்காணலில், தங்கள் இணையத்தளத்திற்கு ஏற்பட்ட தடங்கலை ஆரம்பத்தில் சிறிய பிரச்னை தான் என்று நினைத்ததாக விளக்கினர். 55 வயதான ஷிவான் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்கள் இணையதளத்தை கூகுள் ஸ்பேம் என்று தவறாக கருதியிருக்கலாம் என்று நினைத்தோம். சரியான இடத்தில் புகார் அளித்தால், இந்த தவறு சரி செய்யப்படும் என நினைத்தோம்.” என்றார். ஆடம் (58) பேசுகையில், "இணையதளத்துக்கு பயனர்கள் வரவில்லை எனில், டிராஃபிக் ஏற்படாது (Website Traffic). எனவே வருவாயும் வராது” என்றார்.   அந்தத் தம்பதியினர் இணையதளத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கூகுளுக்குப் பல கோரிக்கைகளை அனுப்பினர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், எதுவும் மாறவில்லை என்றும், தங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையில், அவர்களின் இணையதளம் மற்ற தேடுபொறிகளில் (search engine) எந்த பிரச்னையும் இன்றி தரவரிசையில் இருந்தது. ``ஆனால் மக்கள் பெரும்பாலும் கூகுள் தேடுபொறியை தான் பயன்படுத்துகிறார்கள்" என்பது ஷிவானின் கருத்து. அதன் பின்னர், கூகுளால் தங்கள் வலைதளம் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை தம்பதியினர் அறிந்து கொண்டனர். 2017 ஆம் ஆண்டில் கூகுள் தவறிழைத்தது உண்மை எனக் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, கெல்கு (Kelkoo), டிரிவாகோ (Trivago) மற்றும் யெல்ப் (Yelp) உள்ளிட்ட 20 நிறுவனங்கள் கூகுள் மீது குற்றம்சாட்டி இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னதாக, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆடம், ஒரு நாள், தனது அலுவலகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஃபவுண்டெம் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார். விலை ஒப்பீட்டு இணையதளங்கள் ஆரம்ப நிலையில் இருந்த காலம் அது. அந்த நேரத்தில், ஒவ்வொரு இணையதளமும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது. ஆனால், ஃபவுண்டெம் இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஆடைகள் முதல் விமானங்கள் வரை பல வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷிவான் பல உலகளாவிய பிராண்டுகளுக்கு மென்பொருள் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். "எங்கள் இணையதளம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார்.   ஐரோப்பிய ஆணையத்தின் தீர்ப்பு ஐரோப்பிய ஆணையம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பில், கூகுள் தனது சொந்த ஒப்பீட்டு ஷாப்பிங் சேவையை தேடல் (google search) முடிவுகளில் சட்டவிரோதமாக ஊக்குவித்ததும், இதனால் இதுதொடர்பான இணையதளங்களை பின்னுக்குத் தள்ளியதும் கண்டறியப்பட்டது. ``பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஃபவுண்டெம் நிறுவப்பட்ட காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, கூகுள் வேண்டுமென்றே இவ்வாறு செய்யும் என்பதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் இதுபோன்ற இணையதளங்கள் மிகவும் குறைவு” என்று ஆடம் கூறுகிறார். அத்தம்பதியினர் 2008 ஆம் ஆண்டின் இறுதியில், ஏதோ தவறு இருப்பதாக சந்தேகிக்கத் தொடங்கினர். கிறிஸ்துமஸுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு அவர்களின் இணையதளம் திடீரென மெதுவாகிவிட்டதாக எச்சரிக்கை செய்தி வந்தது. இதுபற்றி ஆடம் சிரித்துக்கொண்டே கூறுகையில், “முதலில் சைபர் தாக்குதல் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் அனைவரும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். டிராஃபிக் அதிகமானதால், தளம் மெதுவாகிவிட்டது” என்றார். பட மூலாதாரம்,FOUNDEM சேனல் 5 இன் தி கேட்ஜெட் ஷோவில் பிரிட்டனின் சிறந்த விலை ஒப்பீட்டு இணையதளமாக ஃபவுண்டெம் தளத்தைப் பெயரிட்டது. ஷிவான் கூறுகையில், "அந்த எச்சரிக்கை செய்தி மிகவும் முக்கியமானது. அதற்குப் பிறகு நாங்கள் கூகுளைத் தொடர்புகொண்டு, 'கூகுள் பயனர்களுக்கு எங்கள் இணையதளம் தெரியவில்லை. கூகுள் தேடலில் எங்கள் இணையதளம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை' என்று கூறினோம்” என்று விவரித்தார். "அப்போதும் கூகுள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நீதியை பெற போராட வேண்டும் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் ஆடம். ராஃப் தம்பதியர் பத்திரிகையாளர்களிடம் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், அதில் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, ஆடம் இதுதொடர்பாக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஒழுங்கமைப்புகளிடம் வழக்கை முன்வைத்தார். இதற்குப் பிறகு, இந்த விவகாரம் ஐரோப்பிய ஆணையத்திடம் சென்றது. 2010-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. தம்பதியினர் பின்னர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு அறையில் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தங்கள் முதல் சந்திப்பை நடத்தினர். அந்த நேரத்தை நினைவு கூர்ந்த ஷிவான், "ஒழுங்குமுறை அதிகாரி என்னிடம் கேட்ட ஒரு விஷயம் என்னவென்றால், இது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்னை. ஆனால் இவ்வாறு புகார் வருவது இது தான் முதல்முறை. இப்படி நடந்ததாக இதுவரை யாருமே வரவில்லையே” என்றார். ஷிவான் மேலும் பேசுகையில் "எங்களும் மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறது என 100% உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் இணையத்தில் உள்ள அனைத்து வணிகங்களும் கூகுளில் இருந்து அவர்கள் பெறும் டிராஃபிக்கை சார்ந்துள்ளது." என்றார். "காயப்படுத்துபவர்களை நாங்கள் விரும்பவில்லை" ஒழுங்குமுறை ஆணையம் இருந்த கட்டடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள ஹோட்டல் அறையில் தம்பதியினர் தங்கியிருந்தனர். ஷிவான் மற்றும் ஆடம் தங்களது தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்கள் மட்டுமின்றி மற்ற ஷாப்பிங் இணையதளங்களும் காத்திருந்தன. ஒழுங்குமுறை ஆணையர் மார்கிரேத் வெஸ்டேஜர் இறுதியாக முடிவை அறிவித்தார். முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் உடனடியாக அவர்கள் கொண்டாடவில்லை. காரணம் இந்த முடிவை ஐரோப்பிய ஆணையம் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரின் கவனமும் குவிந்தது.   " கூகுள் எங்களுக்கு இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது அவர்களுக்கு துரதிருஷ்டவசமாகிவிட்டது" என்கிறார் ஷிவான். "நாங்கள் இருவரும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதமற்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையில் காயப்படுத்துபவர்களை (bullies) விரும்புவதில்லை," என்று அவர் கூறினார். கடந்த மாதம் இந்த வழக்கில் கூகுள் தோல்வியடைந்த போதிலும், ராஃப் தம்பதியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கூகுளின் அணுகுமுறை இன்னும் மாறவில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஆணையம் அதன் புதிய டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் கீழ் கூகுளின் முதன்மை நிறுவனமான `ஆல்பாபெட்’ (Alphabet) மீது விசாரணையைத் தொடங்கியது. கூகுள் தேடல் முடிவுகளில் கூகுள் இன்னும் அதன் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கமாக இருந்தது.   கூகுள் தரப்பு விளக்கம் கூகுள் செய்தித் தொடர்பாளர், "ஐரோப்பிய நீதிமன்றத்தின் முடிவு 2008 மற்றும் 2017க்கு இடையில் தயாரிப்பு முடிவுகளை நாங்கள் எவ்வாறு காட்டினோம் என்பது பற்றியது தான்." என்றார். அவர் மேலும் கூறுகையில் : "ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு இணங்க 2017 இல் நாங்கள் செய்த மாற்றங்கள் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டன. 800க்கும் மேற்பட்ட ஒப்பீட்டு ஷாப்பிங் சேவை இணையதளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகள் பதிவானது." "எனவே , ஃபவுண்டெம் நிறுவனர்களை கூற்றுக்களை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம், மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்கும் போதும் அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார். ராஃப் தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர், இது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விசாரிக்கப்பட உள்ளது. ஆனால், ராஃப் தம்பதி இறுதியில் வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், அது அவர்களுக்கு அதிக பலனைத் தராது. ஏனெனில், 2016 இல் ஃபவுண்டெம் இணையத்தளத்தை மூட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. கூகுளுக்கு எதிரான இந்த நீண்ட போராட்டம் தம்பதியருக்கும் கடினமாக இருந்தது என்கின்றனர். ஆடம் கூறுகையில், "இந்த போராட்டம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்திருக்க மாட்டோம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3nl3dneelo
    • மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள்  கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
    • ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து. ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது. குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்.. முடிவிலியில் ஓய்வெடுங்கள்.
    • விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311851
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.