Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

adminJuly 13, 2024
ameer-1170x878.jpg

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.

நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
https://globaltamilnews.net/2024/205050/

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தின் கொள்கைக்கு திரண்ட பெரும் திரளானவர்களைக் காண கண்கள் ஆயிரம் தேவை.

கூடின கூட்டமே சாட்சி.. இவர்களின் இனக்கொலைக் கொள்கைகள் பற்றிய உண்மைகளைச் சொல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2024 at 13:41, nedukkalapoovan said:

அமிர்தலிங்கத்தின் கொள்கைக்கு திரண்ட பெரும் திரளானவர்களைக் காண கண்கள் ஆயிரம் தேவை.

கூடின கூட்டமே சாட்சி.. இவர்களின் இனக்கொலைக் கொள்கைகள் பற்றிய உண்மைகளைச் சொல்ல. 

450553474_495199746513865_47109634155221  450586317_495199789847194_73109304620364

•அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா? 

சில வருடங்களுக்கு முன்னர் பி.பி.சி க்கு பேட்டி கொடுத்த சம்பந்தர் ஐயா “அமிர் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறியிருந்தார். 

(1) தமிழ் மக்களுக்கு இன உணர்வை ஊட்டியதில் அமிர்தலிங்கம் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் அதை அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யவில்லை. மாறாக தனது பதவி நலன்களுக்காகவே செய்தார். 

(2) சுயாட்சிக் கழக நவரட்ணம் தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தபோது அது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என அமிர்தலிங்கம் சாடினார். ஆனால் அதே அமிர்தலிங்கம் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி நலனுக்காக அதே தமிழீழ தீர்வை முன்வைத்தார். 

(3) ”அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு” என இளைஞர்களை உசுப்பேற்றிவிட்ட அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தபோது அதனை ஏற்றார். ஜே.ஆர் “மாவட்ட சபை” வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றார். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்றார். 

(4) வடபகுதியில் சாதிப் போராட்டம் நடைபெற்றபோது அமிர்தலிங்கம் உயர்சாதியினர் பக்கமே நின்றார். பாராளுமன்றத்தில் “சங்கானை இன்னொரு சங்காயாக (சீனா) மாறுகின்றது” என தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக பேசினார். 

(5) தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராக (மலையக) தொண்டமான் இருந்தார். ஆனால் அமிர்தலிங்கம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தபோது அதனால் தமது மக்களுக்கு பயன் இல்லை எனக் கூறி தொண்டமான் விலகி சென்றார். 

(6) ராஜதுரைக்கு தலைமைப் பதவியை வழங்கியிருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜதுரைக்கு எதிராக தமிழரசுக்கட்சி சார்பில் காசி ஆனந்தனை போட்டியிட செய்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பினார். 

(7) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது அதனைக் கண்டித்த அமிர்தலிங்கம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்தபோது அதனைக் கண்டிக்க மறுத்தார். 

(😎 இலங்கை அரசு தரப்படுத்தலை அமுல்படுத்தியபோது அதற்கு எதிராக தமிழ் மாணவர்களை போராடும்படி தூண்டிய அமிர்தலிங்கம் தனது மகனுக்கு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்றார். 

(9) இந்திரா காந்தி போராளிகளுக்கு பயிற்சி வழங்க முனைந்தபோது அதனை தடுக்க அமிர்தலிங்கம் முனைந்தார். ஆனால் மதுரை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது மகன் ஆயுத இயக்கம் கட்டிய போது அதனை அவர் தடுக்கவில்லை. 

(10) பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகனின் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். 

(11) யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார். 

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால், 
• தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார். 
• முள்ளிவாய்க்கால் அவலத்தையும் அவர் தடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர். 
• தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தர் ஐயாவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்காது. 

எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.! 

குறிப்பு- புலிகளுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கி திரிந்த காலத்தில் அமிர் இறப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை. இப்போது அந்த சம்பந்தர் ஐயா இறந்த பின்பு சம்பந்தர் ஐயா மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சுமந்திரன் கூறுகின்றார்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால், 
• தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார். 
• முள்ளிவாய்க்கால் அவலத்தையும் அவர் தடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர். 
• தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தர் ஐயாவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்காது. 

சரி தோழர் பாலன்,  

அமிர் உயிரோடு இல்லை, இப்ப தமிழீழம் கிடைத்துவிட்டதா?

1989 அமிர் கொல்லப்பட்டார், முள்ளிவாய்க்கால் நிகழ்வு 2009 இல் நிறைவு. இடைப்பட்ட 20 வருடங்களில் ஏன் எவரும் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தை தடுக்க முன்வரவில்லை? இதற்கும் 20 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட அமிர்தான் காரணமா?

அமிர் உயிரோடு இருந்திருந்தால் சம்பந்தருக்கு எதிர்க்கட்சித்தலைவர் கிடைத்திருக்காது என்பது உண்மைதான். ஏனென்றால் அவர் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

சரி தோழர் பாலன்,  

இந்த தோழர் பாலன் உயிரோடு இருந்தும்  தமிழீழம் கிடைக்கவில்லை. எனவே இவரும் இருந்தும் தமிழருக்கு எந்த  பிரயோசனமும் இல்லை.  இவர் செத்தாலும் தமிழருக்கு இழப்பு இல்லை. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் தோல்வியடைந்த தலைவர் தான். ஆனால் இவரை கொலை செய்தவர்களும் பாரிய உயிர்  அழிவுகளை மட்டும் தமிழருக்கு பெற்று கொடுத்துவிட்டு தோல்வியடைந்தவர்களாக சென்றவர்களே. அமிர்தலிங்கத்தை நினைவு கூரும் வேளையில் அவரின் மனைவி கையால் தேனீர் வாங்கி  அருந்தி விட்டு அவரை கொலைசெய்த பாதகர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்பும் யாழ்களத்தில் இவர் பெயரை கண்டுள்ளேன். யார் இந்த தோழர் பாலன்   டொக்டர் அர்ச்சுனா போன்று இலங்கையில் இருந்து மக்களுக்காக போராடுபவரா அல்லது கப்பிட்டலிஸ்ட் மேற்குலகநாடுகளில் குடியேறி கொண்டவரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, island said:

இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை.
இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது.  அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது  என ஒதுங்கியது மட்டுமல்லாமல்  சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது  அவர்கள் தனிப்பட்ட விடயம்.

இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து  காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். 
துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து  காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். 

துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.

அது தொடர்கிறது இங்கேயும்......

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை.
இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது.  அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது  என ஒதுங்கியது மட்டுமல்லாமல்  சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது  அவர்கள் தனிப்பட்ட விடயம்.

இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து  காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். 
துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.

தமது தவறுகளை மறைப்பதற்கு துரோகிகள் மீது முழுப்பழியையும் சுமத்தி தப்பிக்கலாம் என்ற தந்திரத்தை பின்புவந்த ஆயுத போராளிகளுக்கும் உங்களுக்கும்  சொல்லி கொடுத்த குருவே  இந்த அமிர்தலிங்கம் தான்.

அமிர்தலிங்கம்  இறந்தாலும் அவர்,  தான் சொல்லிக் கொடுத்த  கருத்தியல் இன்றும் தலைமுறை கடந்து  வாழ்வதை  நினைத்தும் குருவை மிஞ்சிய சீடர்களை  நினைத்தும் அகமகிழலாம். 😂 

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த பொட்டு புகழ் அமிரும் மங்கையர்கரசியும் இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை ஆயுத போருக்கு அடித்தளம் இட்டவர்கள் . குறிப்பாக தமிழர் விடுதலை கூட்டமைப்பினர். 
ஒரு  பா உறுப்பினரின் மகள் உயர்தர பரீட்சையில் குண்டடித்தவர் 😆தற்போது டாக்டராக உள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, island said:

தமது தவறுகளை மறைப்பதற்கு துரோகிகள் மீது முழுப்பழியையும் சுமத்தி தப்பிக்கலாம் என்ற தந்திரத்தை பின்புவந்த ஆயுத போராளிகளுக்கும் உங்களுக்கும்  சொல்லி கொடுத்த குருவே  இந்த அமிர்தலிங்கம் தான்.

அமிர்தலிங்கம்  இறந்தாலும் அவர்,  தான் சொல்லிக் கொடுத்த  கருத்தியல் இன்றும் தலைமுறை கடந்து  வாழ்வதை  நினைத்தும் குருவை மிஞ்சிய சீடர்களை  நினைத்தும் அகமகிழலாம். 😂 

தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்று   பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிக்கட்சி தலைவராக அமர்ந்த பெருமை அன்பு அமிர் அவர்களையே சாரும். அந்த அரசியல் பலத்தை வைத்து எதுவுமே செய்யாத மனிதர்.
அது மட்டுமல்லாமல்  சிங்கள தலைவர்களை சந்திக்க பின் கதவால் செல்லும் நற்பழக்கைத்தை  ஈழமண்ணில் அறிமுகப்படுத்தியவரும் சாட்சாத் அன்பு அமிர் அவர்கள் தான் என்பதை நினைவு கூர்கின்றேன்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2024 at 14:23, விளங்க நினைப்பவன் said:

இதற்கு முன்பும் யாழ்களத்தில் இவர் பெயரை கண்டுள்ளேன். யார் இந்த தோழர் பாலன்   டொக்டர் அர்ச்சுனா போன்று இலங்கையில் இருந்து மக்களுக்காக போராடுபவரா அல்லது கப்பிட்டலிஸ்ட் மேற்குலகநாடுகளில் குடியேறி கொண்டவரா

கனடா என்று ஒரு ஞாபகம்.

கேரளா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிற்கு போய் ஒவ்வொரு வகுப்புகளும், பாடசாலை அல்லது பல்கலை வகுப்புகள், கொண்டாடும் ஒன்றுகூடல் பற்றி இவர் சில வருடங்களின் முன் கருத்தொன்று எழுதி, அது கொஞ்சம் பிரபலமாக ஓடித் திரிந்தது ஞாபகம். 

இவருடைய பாடசாலை வகுப்பு கேரளா போனது, ஆனால் இவர் போகவில்லை என்றும் ஞாபகம்.........    

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இரத்த பொட்டு புகழ் அமிரும் மங்கையர்கரசியும் இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை ஆயுத போருக்கு அடித்தளம் இட்டவர்கள் . குறிப்பாக தமிழர் விடுதலை கூட்டமைப்பினர். 
ஒரு  பா உறுப்பினரின் மகள் உயர்தர பரீட்சையில் குண்டடித்தவர் 😆தற்போது டாக்டராக உள்ளார்.

இங்கே இதைக் குறிப்பிடுவதற்காக மன்னிக்கவும். இது ஒரு பார்வை மட்டுமே.(இது எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களையும் சுட்டி என்னால் குறிப்பிடப்படவில்லை) . 👇

அமைச்சர் சன்னங்கரா அவர்களால்(?) அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்துதல் எனும் செயற்றிட்டத்தை, தமிழர்களுக்கு (மட்டுமே என) எதிரானதாகத் திசைதிருப்பி, (இந்திய அரசின் சொற்படி ) இலங்கை அரசுக்கெதிராக தமிழ் மாணவர்களையும் மக்களையும் கிளர்ந்தெழ வைத்தவர் என்கிற ஒரு பார்வையும் இவருக்கெதிராக சொல்லப்படுகிறது. 

இங்கே தரப்படுத்துதலால் தமிழர்களில் (சாதி ரீதியாக)  அதிகம் பாதிக்கப்பட்டது வெள்ளாளச் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களே. எனவே அதிகம் பாதிக்கப்பட்ட இவ் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கோபத்தை அடக்க, இந்த தரப்படுத்துதல் தமிழ் மாணவர்களை மாத்திரம் குறிவைத்து இயற்றப்பட்டதாக இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் கூட்டாகத்  தமிழ்த் தேசிய உணர்வை கிளப்ப, மக்களை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பியதாகச் சொல்லப்படுகிறது. 

On 14/7/2024 at 18:47, குமாரசாமி said:

இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து  காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். 
துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.

புலம்பெயர்ஸ்சை நம்பியது தவறில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

கனடா என்று ஒரு ஞாபகம்.

லண்டன் ஈஸ்ட்காம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

கனடா என்று ஒரு ஞாபகம்.

3 hours ago, பெருமாள் said:

லண்டன் ஈஸ்ட்காம் தான் .

ஈழதமிழ் தோழர்கள், புரச்சியாளர்கள் மீது நான் வைத்திருக்கின்ற எனது உறுதியான நம்பிக்கை பிழைக்கவில்லை 💪

On 14/7/2024 at 23:23, விளங்க நினைப்பவன் said:

அல்லது கப்பிட்டலிஸ்ட் மேற்குலகநாடுகளில் குடியேறி கொண்டவரா

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழதமிழ் தோழர்கள், புரச்சியாளர்கள் மீது நான் வைத்திருக்கின்ற எனது உறுதியான நம்பிக்கை பிழைக்கவில்லை 💪

🤣......

வெளியில் அவ்வளவாகத் தெரியாத, சமூக ஊடகங்களில் பிரபலம் தேடாத, ஆனால் உண்மையில் போற்றப்பட வேண்டிய சில எம்மவர்கள் பல இடங்களிலும் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இங்கும் அப்படியான சிலர் இருக்கின்றார்கள்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.