Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN   19 JUL, 2024 | 01:11 PM

image
 

பாரிய தகவல் தொழில்நுட்ப  கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

லண்டனின் பங்குசந்தை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, வணிக வளாங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, கணிணிகள் செயல் இழந்துள்ளதால் ஊடக நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

it_failure_12.jpg

செயல் இழப்பிற்கான காரணம் சரியாக தெரியவராத போதிலும் பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின் இயக்க முறைமைகளே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசொவ்ட் 365 இன் பல சேவைகள் செயலிகளை பாவனையாளர்கள் பயன்படுத்துவதை சிக்கல்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அந்த நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சேவைகள் சில மணிநேரங்களிற்கு முன்னர் வழமைக்கு திரும்பிவிட்டன என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த செயல் இழப்பிற்கு சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனம், கிரவுட் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சக பேச்சாளர் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமைக்கான அறிகுறி எதுவும் இல்லை நாட்டின் சைபைர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/188846

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: ஊடகங்கள், வங்கிகள், விமான சேவைகளில் பாதிப்பு

விமான சேவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 ஜூலை 2024, 08:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த ஐடி செயலிழப்புக்கு க்ரவுட்ஸ்ட்ரைக் மற்றும் மைக்ரோசாஃப்ரட்-ஐ நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த சேவை செயலிழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மைக்ரோசாஃப்ரட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மற்றும் ஆப் மற்றும் பிற சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் என்ன பாதிப்பு?

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானியங்கி இயந்திரங்கள் செயல்படாத நிலையில், ஊழியர்களே அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

பயணம் செய்ய வேண்டிய பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டை கணினிகளால் அச்சிட முடியாத நிலை உள்ளதால், காலியான பயணச்சீட்டை(போர்டிங் பாஸ்) விமான நிறுவனங்கள் வழங்குவதாக டெல்லி விமான நிலையத்திலிருந்து பிபிசி செய்தியாளர் சமீரா ஹூசைன் தெரிவித்தார்.

“அச்சிடப்படாத காலி போர்டிங் பாஸ் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் பயணிகள் தங்களது விவரங்களை எழுதிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.” என்கிறார் பிபிசி செய்தியாளர்.

விமானங்களின் புறப்பாடு குறித்த விவரங்கள் ஒரு வெள்ளை பலகையில் எழுதப்பட்டிருந்தாக சமீரா ஹூசைன் தெரிவித்தார்.

இந்திய விமான சேவை நிறுவனங்களில், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகளுக்கான சேவைகளை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவில் செயல்படும் விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்டவை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் பிரச்னையால் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்த நிறுவனங்கள், ஆன்லைன் டிக்கெட் புக்கிங், செக் இன் போன்ற சேவைகளை தற்காலிகமாக வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளன. இதனால் விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் சரிபார்த்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய விமான சேவை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் பணியாளர்களை கொண்டு நேரடியாக சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். டெல்லி விமான நிலையம் சார்பாக பதிவிடப்பட்ட பதிவில், உலகளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முடக்கம், டெல்லி விமான நிலையத்தில் சில சேவைகளை தற்காலிகமாக பாதித்துள்ளது. விமான சேவைகளை தொடர்பான தகவல்களை அந்தந்த விமான சேவை வழங்கும் நிறுவனங்களிடம் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் தனது பதிவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்கள் மட்டும் சேவைகளுக்காக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

விமான புறப்பாடு குறித்த தகவல்கள்
படக்குறிப்பு,டெல்லி விமான நிலையத்தில் விமான புறப்பாடு குறித்த தகவல்கள் கையால் எழுதப்பட்டுள்ளன

ஐடி செயலிழப்பு: உலகில் என்ன நடக்கிறது?

  • உலகெங்கிலும் இருந்து தகவல் தொழில்நுட்ப செயலிழப்புகள் பற்றிய அறிக்கைகள் வருகின்றன
  • விமான நிறுவனங்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன - இங்கிலாந்தில் உள்ள ஸ்கை நியூஸ் சேனல் ஒளிபரப்பப்படவில்லை
  • இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
  • அமெரிக்காவில், யுனைடெட் மற்றும் டெல்டா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.
  • ஆஸ்திரேலியாவில், விமான நிலையங்கள், கடைகள் மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆஸ்திரேலியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இதை "பெரிய அளவிலான தொழில்நுட்ப செயலிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இங்கிலாந்தில் உள்ள ரயில்வே நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
  • செயலிழப்பின் "நீடித்த தாக்கத்தை" தொடர்ந்து சமாளித்து வருவதாக மைக்ரோசாஃப்ட் கூறுகிறது.
  • பிரிட்டனில் ஸ்கை நியூஸ் சேனல் ஒளிபரப்பிலிருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இன்று காலை நேரலையாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் கூறியுள்ளார்.லண்டன் பங்குச் சந்தையின் இணையதளமும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது
  • லண்டன் பங்குச் சந்தை குழுமத்தின் தளம் செயலிழப்பைச் சந்தித்து வருகிறது.
 
ஐடி செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக விமான சேவைகளில் என்ன பாதிப்பு?

லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில், பயணிகளை சோதித்து அனுப்பும் சில நடைமுறைகள் கணினியில் அல்லாமல் ஊழியர்களால் செய்து முடிக்கப்படுகின்றன.

எனினும் "விமானங்கள் இன்னும் வழக்கம் போல் இயங்குகின்றன, எங்கள் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை," என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார், ஆனால் "சில கட்டண இயந்திர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையமும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

"இந்த செயலிழப்பு ஷிபோலில் இருந்து பறக்கும் விமானங்களை பாதித்துள்ளது" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார், எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் சிட்னி விமான நிலையத்தில் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக குழப்பம் நீடிக்கிறது என்று விமான நிலையத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சைமன்வ் அட்கின்சன் தெரிவிக்கிறார்.

முதலில், புறப்பாடு குறித்த தகவல் திரைகள் செயலிழந்தன. ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் தனது பயணிகளை செக்-இன் செய்ய இயலவில்லை என்று அறிவித்தது. ஒலி பெருக்கியின் மீது பயணிகளுக்கு மன்னிப்பு தெரிவிக்கையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை குற்றம் சாட்டியது.

 
விமான நிறுவனம்

சுமார் அரை மணி நேரம் கழித்து, விர்ஜின் ஆஸ்திரேலியா விமான சேவைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன எனக் கூறியது.

ஆனால் நிலைமைகள் மீண்டும் சீராவதாக தெரிகிறது. விர்ஜின் ஆஸ்திரேலியா விமானங்கள் பயணிகளை ஏற்றத் தொடங்கின என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட யுனைடெட், டெல்டா மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை தங்கள் அனைத்து விமானங்களுக்கும் "உலக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய விமான நிறுவனமான ரைன்ஏர், தனது விமான சேவைக்கான நெட்வொர்க் முழுவதும் சாத்தியமான இடையூறுகளை சந்தித்து வருவதாகக் கூறுகிறது. தொழில்நுட்ப சேவை செயலிழப்பு காரணமாக இது நேர்ந்திருப்பதாகக் கூறுகிறது.

இன்று பயணம் செய்பவர்கள் தங்கள் விமானம் குறித்த சமீபத்திய தகவல்களை ரைன்ஏர் செயலியில் பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனம் அறிவுறுத்துகிறது.

எடின்பர்க் விமான நிலையத்தில், கணினி பிழை காரணமாக புறப்பாடு திரைகள் செயலிழந்ததால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

பிரதான முனைய கட்டிடத்தில் உள்ள புறப்பாடு பலகைகள் செயலிழந்தன. இதில் நுழைவாயில் எண்கள் மற்றும் புறப்படும் நேரம் பற்றிய காலாவதியான தகவல்களைக் காட்டியது. இதனால் சில பயணிகள் தங்கள் விமானங்களை தவறவிட்டனர்.

இன்று காலை பிரதான முனைய கட்டிடத்தில் தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. இதுவும் அதே கணினி பிழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எடின்பர்க் விமான நிலையம் இந்த பிரச்சினையை தீர்க்க வேலை செய்து வருவதாக கூறியது.

ஹாங்காங்கில் உள்ள பணப் பறிமாற்றம் இயந்திரம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,செயல்படாத ஹாங்காங்கில் உள்ள பணப் பறிமாற்றம் இயந்திரம்

ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பாதிப்பு

ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா குழுமம், இடையூறுகளை எதிர்கொள்வதாகக் கூறுகிறது.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அந்த நிறுவனம், "க்ரவுட்ஸ்ட்ரைக் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றைப் பாதிக்கும் உலகளாவிய பிரச்னைகள் எங்கள் சில கணினிகளை பாதித்துள்ளன. இந்த பிரச்னை எங்கள் வாடிக்கையாளர்களில் சிலருக்கு சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தது.

Posted

நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் பல Services கள் இயங்காமல் உள்ளது. பல ஆயிரம் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன இங்கு.

போர், இயற்கை சீற்றம், பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றால் மட்டுமல்ல, தொழில் நுட்ப கோளாறால் கூட உலகம் முடக்கப்படக் கூடிய சூழல் ஒன்றில் வாழ்கின்றோம்.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, ஏராளன் said:

 

it_failure_12.jpg

செயல் இழப்பிற்கான காரணம் சரியாக தெரியவராத போதிலும் பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின் இயக்க முறைமைகளே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசொவ்ட் 365 இன் பல சேவைகள் செயலிகளை பாவனையாளர்கள் பயன்படுத்துவதை சிக்கல்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அந்த நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால் தான் இந்த 'உலக செயல் இழப்பு' ஆரம்பித்துள்ளது.

CrowdStrike உலகெங்கும் கணினிகளில் மிகப்பரவலாக உபயோகத்தில் இருக்கும் ஒரு 'பாதுகாப்பு' மென்பொருள். புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள், அதுவே தப்பாகிவிட்டது........

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த ஒரு தவறும் இதனால் வெளியே வந்து உலகையே கொஞ்ச நேரம் ஆட்டிவிட்டது. 

இரண்டு நிறுவனங்களும் தங்களின் மென்பொருட்களை சரி செய்து விட்டோம் என்கின்றனர்.

Cheap Labor, Recent Mass Layoffs, No Quality Control..............  என்று ஏற்கனவே கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன........🤣. எவ்வளவோ பார்த்திட்டோம்.......

   

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைக்ரோசொப்ட் மென்பொருள் முடக்கம்: உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

மைக்ரோசாஃப்ட்(Microsoft) மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் இன்று முடங்கியது. இதன் காரணமாக பல்வேறு வழிகளில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிப்படைந்துள்ளன.

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம்

இந்நிலையில், நாம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம் என்னும் ரீதியில் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

microsoft outage

 

மேலும் சிலர், இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கமானது, புடினுடைய வேலையாக இருக்கலாம் என்றும் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் ஒரு சைபர் போராகத்தான் இருக்கும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த அச்சம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மைக்ரோசாஃப்ட் பாதிப்பை கேலி செய்யும் விதத்தில் எலான் மஸ்க் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/worldwid-microsoft-global-outage-fear-of-world-war-1721389925

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் பாதிபேதும் இல்லையாம். அவர்கள் வேறு தொழில்நுட்ப சேவையைப் பாவிப்பதாக கூறியுள்ளார்கள். துபாய் விமான நிலையமும் தங்களின் சேவையை மாற்று  சேவைக்கு மாற்றியுள்ளதால் பாதிப்பு குறைவாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஏராளன் said:

 

மேலும் சிலர், இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கமானது, புடினுடைய வேலையாக இருக்கலாம் என்றும் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

🤣...........

மூன்றாம் உலகப் போரை தொடங்காமல் விட மாட்டோம் போல......

CrowdStrike நிறுவனத்தின் தலைவரே என்ன நடந்தது என்று விளக்கம் அளித்து விட்டு, மன்னிப்பும் கேட்டுள்ளார். இங்கேயும் புடினா........

அமெரிக்காவின் பெரிய 500 நிறுவனங்களில் அரைவாசி நிறுவனங்கள் CrowdStrike இன் Anti-Virus Software உபயோகிக்கின்றார்கள். அதில் மைக்கிரோசாப்ட்டின் ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளவர்கள் மட்டுமே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

மற்றவர்கள் நாங்களும் ஏன் CrowdStrike மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் பாவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்......... வெள்ளிக்கிழமை வேற.........

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரசோதரன் said:

🤣...........

மூன்றாம் உலகப் போரை தொடங்காமல் விட மாட்டோம் போல......

CrowdStrike நிறுவனத்தின் தலைவரே என்ன நடந்தது என்று விளக்கம் அளித்து விட்டு, மன்னிப்பும் கேட்டுள்ளார். இங்கேயும் புடினா........

டிரம்புக்கு... காதிலை சுட்டதன் பின்னணியில் ஈரான் இருக்குது என்று சொல்லும் உலகத்தில், 
புட்டினை இதில் கோத்து விடுவதில் ஆச்சரியம்  இல்லை. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

டிரம்புக்கு... காதிலை சுட்டதன் பின்னணியில் ஈரான் இருக்குது என்று சொல்லும் உலகத்தில், 
புட்டினை இதில் கோத்து விடுவதில் ஆச்சரியம்  இல்லை. 😂 🤣

🤣..........

அதுவும் சரி தான், சிறி அண்ணை..........

நாளைக்கு ஆதவன் ஒன்று போடுவார்கள் பாருங்கள்........... CrowdStrike என்பதை 'கூட்டத்தின் தாக்குதல்' என்று மொழிமாற்றம் செய்யும் அளவிற்கு அவர்களிடம் ஆட்கள் இருக்கின்றார்கள்......🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால் தான் இந்த 'உலக செயல் இழப்பு' ஆரம்பித்துள்ளது.

large.IMG_6875.jpeg.9028c7e3a3cb7e116ac3

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
47 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6875.jpeg.9028c7e3a3cb7e116ac3

🤣.........

'புளூ ஸ்கிரீன்' தான் வருகின்றதாம், நீங்கள் போட்டிருப்பது போலவே ..........

 15 தடவைகள் நிற்பாட்டி நிற்பாட்டிப் போட்டால், 16 வது தடவையிலிருந்து ஒழுங்காக வேலை செய்யும் என்று ஒரு உத்தியோகப்பற்றற்ற தீர்வும் சொல்லப்பட்டிருக்கின்றது............... 🫣.

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால்....

 

நான் நினைக்கிறேன் கொரியன் காரன் தான் புகுந்து  விளையாடியிருக்கிறான். ருசியனும் சப்பை மூக்கரும் கொரியனும் என்று மூவரும் கூட்டுச்சேரக்கியே நினைத்தனான். 😄😄

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1997 இல் உருவாக்கப்பட்ட ரஷ்சியாவின் Kaspersky சைபர் செக்குரிட்டி மென்பொருளுக்கு அமெரிக்காவில் தடை. நேற்று அது அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டது.

இன்று.. உலகமே பெரிதும் அறியப்படாதிருந்த அமெரிக்க.. crowdstrike க்கு பயங்கர விளம்பரம். ஒரே நாளில் உலக அறிமுகம்.

இணையத்தை 1990 களில் அமெரிக்க இராணுவப் பாவனையில் இருந்து வியாபார மற்றும் உளவு நோக்கத்திற்காக திறந்துவிட்ட போதே.. ஒரு நாள் இது நிகழும் என்று அப்பவே எதிர்வு கூறியோர் பலர். 

மக்களை மந்தைகளாக்கி மேற்குலகின் வழியில் கொண்டு சென்றவர்களுக்கு கிடைத்த வெற்றி இது.

இந்த இடத்தில் புலிகளை நினைவு கூறுவது சிறப்பு.. புலிகள் தந்தி இல்லாத தொலைபேசிகளை பாவிப்பினும்.. தந்தி உள்ளதையும் மீளமைத்து பாவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து தப்ப முடிந்தது. எப்போது அவர்கள் மேற்குலக சற்றலைட்டுக்கள் சார்ந்த தொழில்நுட்பத்துக்குள் நுழைந்தார்களோ.. அப்பவே அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுவிட்டார்கள். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5900 Keyboard Gif Pictures, Keyboard Gif Backgrounds Stock, 60% OFF

எல்லாத்தையும் டிஜிட்டலுக்கு மாத்துறம் எண்டு சொல்லி ஒரு செக்கன்ட்ல எல்லா அழிவு வேலைகளையும் செய்ய சந்தர்ப்பம் கொடுக்கின்றார்கள்..... எங்கையோ இருக்கிற ஒருத்தன் பட்டனை தட்ட..... வீடுகளுக்கு தண்ணியும் வராது.கரண்ட்டும் வராது.கீற்றர்,கூலர் ஒண்டும் வேலை செய்யாது. ரெலிபோனும் வேலை செய்யாது. சாப்பாடும் சமைக்கேலாது. இப்பிடியே  கனக்க சொல்லிக்கொண்டு போகலாம்...... 😀
 

ரஷ்யா.......😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரவுட்ஸ்ட்ரைக் என்பது என்ன? உலகெங்கும் வங்கி, விமான சேவைகள் எப்போது சரியாகும்?

கிரவுட்ஸ்ட்ரைக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராபர்ட் ப்ளம்மர்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 19 ஜூலை 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.

பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விமானப் போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'ஃபால்கன் ஆண்டி-வைரஸ்' (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.

இந்த தகவல் தொழில்நுட்பச் (ஐ.டி.) செயலிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

இந்த விவகாரம் பற்றி இதுவரை நமக்கு தெரிந்தது என்ன? விளக்குகிறது இந்தக் கட்டுரை தொகுப்பு.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

க்ரவுட்ஸ்ட்ரைக் ஐ.டி. செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை.

இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் என்ன?

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான 'கன்டென்ட் அப்டேட்டில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கிறார் க்ரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் கர்ட்ஸ்.

"பிரச்னை என்னவென்று தெரிந்துவிட்டது. அதனை சரிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.

இது மற்ற இயங்கு தளங்களைப் (Operating Systems) பாதிக்கவில்லை. மேலும் இது ஒரு சைபர் தாக்குதல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் கர்ட்ஸ்.

ஆண்டி-வைரஸ் மென்பொருளை உருவாக்கும் க்ரவுட்ஸ்ட்ரைக்கின் புதிய மென்பொருளை அப்டேட் செய்ததால் தான் விண்டோஸில் செயல்படும் கணினிகள் செயலிழந்தன என்ற செய்திகள் தொடர்ச்சியாக வெளியான நிலையில் கர்ட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

உலகமெங்கும் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக பயணிப்பவர்களின் பயண திட்டத்தில் பாதிப்பை உருவாக்கும் என்று முதலீட்டாளர்கள் உணர்ந்த நிலையில் பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட துவங்கியது.

ஐ.டி. செயலிழப்பின் காரணமாக க்ரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 15% வரை வீழ்ச்சி அடைந்தன. மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.

 
க்ரவுட்ஸ்ட்ரைக் ஐ.டி. செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா, ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த பிரச்னை எப்போது சரியாகும்?

என்.பி.சி செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்ட்ஸ், தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த செயலிழப்பில் இருந்து மீள்வதை உறுதி செய்வதே அவர் நிறுவனத்தின் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அது தானாக நடைபெறாது என்றும், பிரச்னை சரியாக நேரம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

"இந்த செயலிழப்பால் வாடிக்கையாளர்கள், பயணிகள், மற்றும் இதர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருந்துகிறோம்," என்றும் அவர் கூறினார்.

க்ரவுட்ஸ்ட்ரைக் இந்த ஐ.டி. செயலிழப்பை தடுக்கும் புதிய அப்டேட்டை வழங்கிவிட்டது. ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியிலும் தனித்தனியாக அப்டேட் செய்வது தான் தீர்வளிக்கும்.

இதற்காக ஒவ்வொரு கருவியையும் safe mode-இல் வைத்து ரீபூட் செய்ய வேண்டும். இந்தப் பணி அனைத்து நிறுவனங்களின் ஐ.டி. பிரிவினருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரவுட்ஸ்ட்ரைக் ஐ.டி. செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான 'கன்டென்ட் அப்டேட்டில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம்

க்ரவுட்ஸ்ட்ரைக் என்றால் என்ன?

நம் நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பின் சிக்கலான தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த க்ரவுட்ஸ்ட்ரைக். டெக்ஸாஸில் அமைந்திருக்கும் ஆஸ்டினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனம் இது. அமெரிக்க பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது க்ரவுட்ஸ்ட்ரைக். S&P 500 மற்றும் நஸ்தாக் குறியீடுகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம்.

அநேக தொழில்நுட்ப நிறுவனங்களைப் போன்றே இந்த நிறுவனமும் மிகச் சமீபத்தில், அதாவது 2013-ஆம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே நன்கு வளர்ச்சியடைந்த இந்த நிறுவனத்தில் தற்போது 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

சைபர் செக்யூரிட்டி சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் என்பதால், இணையதளங்கள் முடக்கப்படும் போது அதனைச் சரிசெய்ய தேவையான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.

சைபர் தாக்குதல்களுக்கு ஆளான மிக முக்கியமான பெரிய நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கியுள்ளது க்ரவுட்ஸ்ட்ரைக். 2014-ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை சரி செய்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.டி. பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் இந்த நிறுவனமே, தவறாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளால் பிரச்னைக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, 24,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இது பிரச்னை எவ்வளவு பெரியது என்பதைக் காட்டிலும், பிரச்னைக்கு வழங்கப்படும் தீர்வு எத்தனை சவால்களை கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

க்ரவுட்ஸ்ட்ரைக்கின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிகப்பெரிய நிறுவனங்கள். எனவே ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை கணினிகள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை மதிப்பிடுவது சவாலானது.

க்ரவுட்ஸ்ட்ரைக் ஐ.டி. செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐ.டி. செயலிழப்பின் காரணமாக க்ரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 21% வரை வீழ்ச்சி அடைந்தன.

எந்தெந்த சேவைகள் பாதிக்கப்பட்டன?

'Piecemeal Fashion' என்ற நிறுவனம் முதன்முறையாக இந்தப் பிரச்னையை பொதுவெளிக்குக் கொண்டுவந்தது. ஆஸ்திரேலியாவில் முதலில் ஐ.டி. செயலிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகின. பிறகு உலகின் பல்வேறு பாகங்களிலும் செயலிழப்பு தொடர்பான புதிய செய்திகள் வெளிவர துவங்கின.

விமான சேவை

யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் விமான சேவைகள் தாமதமாக துவங்கின. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

டோக்யோவின் நரிட்டா, இந்தியாவின் டெல்லி விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் ஸ்டான்ஸ்டெட், காட்விக் விமான நிலையங்கள், ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபூல் விமான நிலையம் உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் ஐ.டி. செயலிழப்பின் காரணமாக சேவைகள் தாமதமானது என்று தெரிவித்தன.

மூன்றாம் தரப்பு சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக தங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது ரியான்ஏர் என்ற ஐரோப்பிய விமான சேவை.

பிரிட்டனில் ரயில் நிறுவனங்களும் இந்த ஐ.டி. செயலிழப்பால் பாதிக்கப்பட்டன.

க்ரவுட்ஸ்ட்ரைக் ஐ.டி. செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டோக்யோவின் நரிட்டா, இந்தியாவின் டெல்லி விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணபரிவர்த்தனை சேவைகளில் பிரச்னை

கணினி சேவைகளைத் தொடர முடியாத காரணங்களால் விற்பனை மையங்களில் பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளப்பட்டது.

பிரிட்டனில், மோரிசன்ஸ், வெய்ட்ரோஸ் உள்ளிட்ட சூப்பர் மார்க்கெட்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவின.

ஆஸ்திரேலியாவின் வூல்வொர்த்ஸ், கோல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இதே நிலை நீடித்தது.

இது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய தேசிய வங்கியின் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டது.

க்ரவுட்ஸ்ட்ரைக் ஐ.டி. செயலிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கணினி சேவைகளை தொடர முடியாத காரணங்களால் விற்பனை மையங்களில் பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளப்பட்டது.

மருத்துவம் மற்றும் இதர சேவைககள்

இஸ்ரேலில் 15 மருத்துவமனைகள் மேனுவல் செயல்பாட்டுக்கு மாறின என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளில் எந்த பிரச்னையும் இதனால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவசரஊர்தி சேவைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிரிட்டனில், தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக அறுவை சிகிச்சைகளுக்கான முன்பதிவு செய்வதில் பிரச்னைகள் ஏற்பட்டது.

எதனால் இந்த தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டது என்று தெரிய வந்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அலாஸ்காவில் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்கை நியூஸ் போன்ற ஒளிபரப்பு சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பங்கு வர்த்தகம் வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்காக பிரத்யேகமாக தகவல்களை வழங்கி வந்த அதன் செய்தி பிரிவு பாதிக்கப்பட்டது.

போலாந்தின் கடான்ஸ்க் (Gdansk) பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கண்டெய்னர் முனையமான பால்டிக் ஹப்பில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கண்டெய்னர்கள் எதையும் துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உலகப் பிரச்சினைக்கு மூலகாரணம் ஒரு NULL pointer. ஒழுங்காக memory ஐ allocate பண்ணாமல் விட்டால் அல்லது பிழையான memory addresses ஐ point பண்ணினால் வரும் பிரச்சினை! C/C++  programming languages படிக்கும்போது பெரிய தலையிடியைக் கொடுக்கும் விடயம்! இதனால் பின்னர் வந்த programming languages பல resource management ஐ coding எழுதுவர்களிடம் இருந்து மறைத்து கையாள்கின்றது. ஆனால் Hardware க்கு அண்மித்து உருவாக்கப்படும் embedded software C/C++  இல்தான் எழுதப்படுகின்றன.

எமது வேலையிலும் NULL pointers எப்போதும் பிரச்சினையாகத்தான் உள்ளன. ஆனால் இவற்றை இலகுவாகக் கண்டுபிடிக்க பல tools, rigorous engineering processes உள்ளன. எப்படி இவற்றையெல்லாம் தாண்டி Microsoft நிறுவனம் CrowdStrike இன் update ஐ அனுமதித்தது என்று புரியவில்லை. 

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால், இந்த பெரிய நிறுவனங்களில், severe operational disruption or disaster recovery plan இல்லாதது தான் அடிப்படை பிரச்சனை.

இது SCADA மற்றும் critical infrastructure , services ஐயும் பாதித்தது தான் முக்கிய பிரச்சனை.  

சில பாதிப்புக்கள் இன்னமும் தெரியாமல் இருக்கலாம். உ.ம். காற்றாலை, சில வெளியில் வராது உ.ம். உளவு நிறுவன பாதிப்புக்கள், அணுத்துறை பாதிப்புக்கள் போன்றவை.

(சிறிய, மற்றும் இடை நிறுவங்களின் நிலை வேறு)

இது Operational  risk and  resiliency   இல் ஒன்று, வெளிப்படையானது - single point of failure by vendor-lock-in (vendor-lock-in தவிர்க்க முடியாதது அநேகந்தமான சந்தர்ப்பங்களில், தொழில்நுட்ப சிறப்புத்தேர்ச்சியால்). 

(தொழில்நுட்ப அடிப்படையில் எந்த ஊற்றாகவும் இருக்கலாம், memory leak, dangling pointers ...) 

நான் முன்பு சேவை அளித்த ஒரு முக்கிய  நிறுவனதிலும் பிரச்சனை  வந்தது, அனால், அவர்களின்  severe operational disruption or disaster recovery plan படி, 1 - 3 மணி நேரத்தில் சேவைகள் வழமைக்கு திரும்பி விட்டது என்று அறிந்தேன். 

இன்னொரு நிறுவனத்தில் பிரச்சனை வரவே இல்லை -ஏனெனில் எந்த (technology) update உம risk profile செய்யப்படும். இது lab இல் சோதனை செய்யப்பட்டு, update நிறுத்ப்பட்டு விட்டது. 

இந்த நிறுவனங்களின் Operational Risk ஆய்வு, திட்டத்தில் இத்தகைய ஓர் (single point of failure by vendor-lock-in risk) ஐ, technology risk profiling ஐ   executive முகாமைத்துவதுடன் கிட்டத்தட்ட அனல் பறக்கும்  வாதத்துடன்  அந்த நேரத்தில் (பல வருடங்களுக்கு) முன்பு  புகுத்தியது  எனது மிகச் சிறிய அணி.

அதை அவர்கள் பின்பு , தொழிநுட்ப வளர்ச்சி, மாற்றம்  ஏற்ப விரிவாக்கி உள்ளார்கள் என்பது போலவே தெரிகிறது. 

ஆகவே, பிரச்சனை ஊற்று தொழில்நுட்பத்தில் இருந்தாலும், பெரிய நிறுவனங்களின் organisational, operational risk and resiliency  இன் திட்டமிடலில் ஓட்டை இருந்ததே மிகப்பெரிய தவறு.

பாரிய அளவு பாதிக்கப்பட்ட பெரிய நிறுவங்களின் ceo க்கள்,மற்றும் சிரேஷ்ட முகைமாத்துவம் , தொழிநுட்பத்தை கொண்டு தமது ஓட்டையை மறைத்து  கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரவுட்ஸ்ட்ரைக்: அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டாலும் சீனா மட்டும் தப்பியது எப்படி?

கிரவுட்ஸ்ட்ரைக், சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் பாதிப்பு குறைவு. கட்டுரை தகவல்
  • எழுதியவர், நிக் மார்ஷ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வெள்ளிக்கிழமை உலகத்தின் பெரும்பகுதி ‘ப்ளூ ஸ்க்ரீன் எரர்’ காரணமாக போராடிய நிலையில், அதிலிருந்து பெருமளவு தப்பித்த ஒரு நாடு சீனா.

அதற்கு காரணம் மிக எளிது. கிரவுட்ஸ்டிரைக் மென்பொருள் அங்கு அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை.

பெய்ஜிங் சைபர்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா கூறிவந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வெகுசில சீன நிறுவனங்கள் மட்டுமே மென்பொருளை வாங்குகின்றன.

உலகின் மற்ற பகுதிகளை போன்று சீனா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பி இருக்கவில்லை.

பெரும்பாலும் அலிபாபா, டென்சென்ட் மற்றும் ஹவாய் போன்ற உள்நாட்டு நிறுவனங்களே தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன.

எனவே, சீனாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உதாரணமாக, சீன நகரங்களில் உள்ள ஷெரட்டன், மேரியட், ஹயாத் போன்ற சர்வதேச உணவகங்களில் அறையை பதிவு செய்ய முடியவில்லை என, சீன சமூக ஊடக தளங்களில் சில பயனாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.  

சீனா மீதான மற்ற நாடுகளின் தடைகள்

யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை விமானங்களை இயக்கவில்லை.

சீனாவில் சமீப ஆண்டுகளாக அரசு அமைப்புகள், வணிகங்கள், உள் கட்டமைப்பு ஆபரேட்டர்கள் வெளிநாட்டு ஐ.டி. அமைப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை அதிகமாக மாற்றிவருகின்றனர். இதனை சில ஆய்வாளர்கள் “ஸ்ப்ளிண்டர்நெட்” (இணையத்தை பிளவுபடுத்துவது) என அழைக்கின்றனர்.

“வெளிநாட்டு தொழில்நுட்ப அமைப்புகளை கையாள்வதில் சீனாவின் திறமையான நிர்வாகத்திற்கான ஆதாரமாக இது உள்ளது” என, சிங்கப்பூரை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜோஷ் கென்னடி ஒயிட் கூறுகிறார்.

“21வயாநெட் (21Vianet) எனும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து சீனாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கிவருகிறது. சீனாவில் மைக்ரோசாஃப்ட் சேவையை தன்னிச்சையாக அந்நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த ஏற்பாட்டின் மூலம் சீனாவின் அத்தியாவசிய சேவைகளான வங்கி மற்றும் விமான போக்குவரத்து சேவைகளில் வெளிப்புற காரணிகளால் தடங்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.”

வெளிநாட்டு அமைப்புகளை சாந்திருக்காமல் அவற்றை தடுப்பது தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக சீனா பார்க்கிறது.

இது, 2019-ஆம் ஆண்டில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயை சில மேற்கு நாடுகள் தடை செய்தன. அது 2023-ஆம் ஆண்டில் சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்த பிரிட்டனின் நடவடிக்கையை போன்றதாகும்.

அப்போதிருந்து, அமெரிக்க வணிகங்கள் சீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதைத் தடுக்கவும், அதிநவீன செமி கன்டக்டர் சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பதை சட்டவிரோதமாக்கவும் அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேச பாதுகாப்புக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது.

 

அமெரிக்காவை விமர்சித்த சீனா

கிரவுட்ஸ்டிரைக்: உலகையே பாதித்த தொழில்நுட்ப செயலிழப்பிலிருந்து சீனா தப்பித்தது எப்படி?

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,தொழில்நுட்ப செயலிழப்பால் ஹாங்காங் விமான நிலையத்தில் சில சேவைகள் பாதிக்கப்பட்டன.

சீன அரசு சார்பு ஊடகமான குளோபல் டைம்ஸில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில், சீன தொழில்நுட்பம் மீதான இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து மேலோட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“சில நாடுகள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வருகின்றன, பாதுகாப்பு என்ற கருத்தை பொதுமைப்படுத்துகின்றன. ஆனால், உண்மையான பாதுகாப்பு பிரச்னையை புறக்கணித்துவிட்டன, இது முரணாக உள்ளது,” என அந்த தலையங்கம் கூறுகிறது.

இங்குள்ள வாதம் என்னவென்றால், உலகளாவிய தொழில்நுட்பத்தை யார் பயன்படுத்தலாம் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகளை அமெரிக்கா கட்டளையிட முயற்சிக்கிறது. ஆனால் அதன் சொந்த நிறுவனம் ஒன்றை சரியாக கவனிக்காததால் உலகளாவிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான்.

தகவல் தொழில்நுட்பத்தை “ஏகபோக உரிமை” கொண்டாடும் சர்வதேச நிறுவனங்களையும் ‘தி குளோபல் டைம்ஸ்’ விமர்சித்தது: “இணைய பாதுகாப்புக்காக பெரிய நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு சில நாடுகள் வாதிடுவது, நிர்வாக முடிவுகளை உள்ளடக்கிய பகிர்வுக்கு மட்டும் தடையாக இல்லாமல், புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் அறிமுகப்படுத்தும்.” என்கிறது அந்த தலையங்கம்.

 

'மைக்ரோசாஃப்டுக்கு நன்றி'

கிரவுட்ஸ்டிரைக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கத்திய தொழில்நுட்பத்தை நகலெடுப்பதாகவோ அல்லது திருடுவதாகவோ சீனா அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதால், "பகிர்வு" என்ற சொல், அறிவுசார் சொத்து பற்றிய விவாதத்தின் ஒரு குறிப்பாக இருக்கலாம். திறந்த உலகளாவிய தொழில்நுட்ப சந்தைக்காக வாதிடும் சீனா, உள்நாட்டு சூழலை இன்னும் இறுக்கமாக கட்டுப்படுத்துகின்றது.

எனினும், சீனாவில் எதுவுமே பாதிக்கப்படவில்லை என கூற முடியாது. வாரத்தின் இறுதி வேலை நாளை முன்கூட்டியே முடித்து வைத்ததற்கு அமெரிக்க மென்பொருள் நிறுவனத்திற்கு சில பணியாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

‘ப்ளூ எரர்’ திரையின் படங்களை சீன சமூக ஊடக தளமான வெய்போவில் (Weibo) பகிர்ந்துள்ள பயனாளர்கள், “முன்கூட்டியே விடுமுறை அளித்ததற்காக மைக்ரோசாஃப்டுக்கு நன்றி” (Thank you Microsoft for an early vacation) என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

452076972_886594286838878_55490314776631

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாவின் சிறு பாதிப்புடன் தவிர்த்தது, உண்மையில் வடிவமைபின் (design) வழியா (அதாவது operational risk analysis, assessment, resiliency and business continuity plan இன் படியா), அல்லது தற்செயலாக நடந்ததா என்பது தெரியவில்லை.

அனால், சீன செய்த முறை, அதாவது தொழிநுட்பம் வெளிநாடோ (அல்லது உள்நாடோ), சீன அரசு வேறு ஓர் நிறுவனத்தை நியமித்து, அந்த நிறுவனம் quality, ரிஸ்க் போன்ற ஆய்வு செய்த்த்து, profile செய்த பின்பே சீன அரசு நிறுவனங்கள் தொழிலநுட்ப மேம்படுத்துதலை அனுமதிக்கும்.

இது உண்மையில், third party risk என்ற வகையிலும் - ஏனெனில் crowdsrtike பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு third party (மூன்றாம் பட்சம்) risk , microsoft (இரண்டாம் பட்சம்), supply chain risk profile  ஆகும் .    

எனவே, third party risk ஐ கையாள்வதிலும், பாரிய அளவு பாதிக்கப்பட்ட நிறுவங்களின் தலைமை தவறி  விட்டது 
(அனால் இது தடுத்து அல்லது விளைவை குறைத்து இருக்க கூடிய யதார்த்த சாத்திய யக்கூறுகள் உள்ள பிரச்சனை )

உண்மையில், முன்பே சொன்னது போல, இது business and operational resiliency, continuity விடயம்,  இது ceo மற்றும் executive management மட்டத்தில் ஒழுக்காற்று செய்யப்படவேண்டிய நிலை.


பாதிக்கப்பட்ட நிறுவங்களின் வேறு எந்த பகுதியாவாது தவற  விட்டு இருந்தால் , அந்த பகுதியில் இருந்த பலர் வேலை நீக்கதுக்கு உடனடியாக, கேட்டுகேள்வி இன்றி உட்பட்டு இருப்பார்கள் 

 

7 hours ago, ஏராளன் said:

வெளிநாட்டு தொழில்நுட்ப அமைப்புகளை கையாள்வதில் சீனாவின் திறமையான நிர்வாகத்திற்கான ஆதாரமாக இது உள்ளது” என, சிங்கப்பூரை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜோஷ் கென்னடி ஒயிட் கூறுகிறார்.

 

இந்த கூற்று தான் சீன நிறுவங்களின் ceo, executive management, எவ்வளவு தூரம்  business, operational  resiliency, continuity இல் கவனம் செலுத்தி உள்ளார்கள் என்றும், மேற்கு நிறுவங்கள் புறக்கணித்து உள்ளன என்பதும் தெளிவு. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.