Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

451778206_3205159692948628_3066616051420 452306993_3205159632948634_1691434853938

லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.

இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை. 
உலகின் மிக விலையுயர்ந்த பிராண்ட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது.   
ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்!  

இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், 
விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், 
விலையுயர்ந்த அணிகலன்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன.   
ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் இருக்கிறேன்!  

எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் 
அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.  என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, 
ஆனால் நான் ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன்.  

நான் இந்த உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன்.   
ஆனால் இப்போது நான் மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்திலிருந்து 
மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன்!  
 
ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள்.   
ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை.  

நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டேன்.   
ஆனால் இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு.   

நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தேன்.   
ஆனால், இன்று இரண்டு பேர் எனக்கு மருத்துவமனை வராண்டாவிற்கு உதவுகிறார்கள்.  
எந்த வசதியும் எனக்கு உதவவில்லை. 

அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை.  
ஆனால், சில அன்பர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் 
என்னை வாழ வைக்கின்றன.
இதுதான் வாழ்க்கை.  

 எவ்வளவு செல்வம் இருந்தாலும், கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள்.  
எனவே அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவுங்கள்.   
பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.  
 
நல்லவர்களை நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை நேசியுங்கள், 
யாரையும் புண்படுத்தாதீர்கள், நல்லவர்களாக இருங்கள், 
நல்லவர்களாகவே இருங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுடன் செல்லும்.😌 

-லதா  மங்கேஷ்கர்,,,

Joseph Anthony Raj

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே

வரும்போது சேர்ந்து வந்த உடலே சேர்ந்து வராதபோது, வராத ஊசிக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன.........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

என் இரண்டு கைகளும் என் சவப்பெட்டிக்கு வெளியே தொங்கிக்கொண்டே இருக்கட்டும்" - அலெக்சாண்டர் தான் இந்த உலகத்திற்கு வெறும் கையாக வந்ததை அனைவருக்கும் காட்ட விரும்புகிறார், மேலும் அவர் வெறுங்கையுடன் வெளியேறுவார்.

"Both my hands be kept dangling out of my coffin"- Alexander wants to show everyone that he came into this world empty handed and he will leave empty handed.

 

1443656491.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல பணம் படைத்தவர்களுக்கு கண் கெட்ட பின்னர் தான் ஞானோதயங்கள் பிறக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சுடலை ஞானம்,..

 

(ஒ. க. ஸ்ராலினைக் குறித்துச் சொல்லவில்லை,.😁)

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் மரணம் ஒன்றேதான், லதா அம்மாவின் கருத்துக்கள்  ஞானிகள் சொல்வதுபோல் இருந்தாலும்,  எதிர்காலத்தில் போகபோறோம் என்றெண்ணி நிகழ்காலத்தில் எவராவது இருப்பதை அனுபவிக்காமல் செத்தால் அந்த வாழ்விலும் ஒரு அர்த்தம் இல்லை.

தெரிந்தவர்களின் மரணவிட்டுக்கு போகும்போதுதான் இவ்வளவுதானா வாழ்க்கை என்று ஒரு பயம் வரும், தெரியாதவர்களின் மரணம் கேள்விப்பட்டால் அது ஒரு நாளாந்த செய்திபோல கடந்துவிடும்.

எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் திருமணம் வாரிசுகள் என்று இல்லாமல் வாழ்வுக்காலம் முடிந்துவிட்டால் எந்த ஆதாரமுமின்றி சூனியம் நிறைந்ததாக போய்விடுகிறது நாம் வாழ்ந்த காலங்கள்.

இந்தியாவின் இசைகுயில் என்று அனைத்து வசதிகளுடனும் தனிக்காட்டு ராணியாக வாழ்ந்திருந்தாலும் நிஜ குயில்கள்போல் சொந்தமாய் ஒரு கூடில்லாமல் முடிந்து போனது லதா அம்மா சோக வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

வயோதிபம் வாழ்க்கையில் ஒரு பகுதி  அந்த பகுதியை வைத்து முழு வாழ்க்கையையும். குறை சொல்ல முடியாது கூடாது    இது ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது தான்   உடல்  ஆரோக்கியத்தில். தான் தங்கியுள்ளது   உடல் ஆரோக்கியமற்றவர்களுக்கு மட்டுமே வயோதிப வாழ்க்கை கடினம்  உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ஏன்   கவலைப்பட வேண்டும்  ??? அவர்கள் பணம்  பதவி, ...    ......பற்றி மகிழ்ச்சி தான் அடைவர்கள்.  போகும் போது எதையும் கொண்டு போவதில்லை ....அதற்காக உழைக்காமல்.  படிக்காமல்   ...... இருக்க முடியுமா????  இல்லை அது வாழ்க்கை இல்லை 

உலக தமிழ் தலைவர்  கலைஞர் கருணாநிதி  வாழ்க்கையை பாருங்கள் 😂😂🤣😂 மனிதன்  ஏதற்காகவது கவலைப்பாட்டாரா???  அவரை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்   🤣🤣🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இந்தியாவின் இசைகுயில் என்று அனைத்து வசதிகளுடனும் தனிக்காட்டு ராணியாக வாழ்ந்திருந்தாலும் நிஜ குயில்கள்போல் சொந்தமாய் ஒரு கூடில்லாமல் முடிந்து போனது லதா அம்மா சோக வாழ்க்கை.

புகழ், பணம், பதவி என்று... அதி உச்சத்தை தொட்ட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்வும் 
லதா  மங்கேஷ்கர் வாழ்வு போல் முடிந்ததும் இன்னும் இரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

லதா  மங்கேஷ்கர் யார் என்று தேடுதல் செய்தேன் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகி கலைஞர் என்று வந்தது .தன் சுய உழைப்பால் சம்பாதித்த ஒருவரை தனது அரசியல் பதவியை பயன்படுத்தி தமிழ்நாட்டை கொள்ள அடித்த ஜெயலலிதாவோடு ஒப்பிடுவது சரி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

லதா மங்கேஸ்கார, அவருக்கு உரிய நேரத்தில் கிடைத்தவற்றை பற்றி ஏன் ஒரு பிரதிபலிப்பும் இல்லை. 

அவற்றை சொல்லி இருக்க வேண்டும். 

இப்போதும், மானிடராக, ஒளவையார் சொன்னது போல வாழ்கை இருந்தால் அது அரிதே.

லதா மங்கேஷ்கர் போன்றவர்கள், ஒளவை யார் சொன்னதை விட கூடவே அரிதானது கிடைத்து இருக்கிறது.

இனியதும் ஒளவை யார் சொன்னதை விட கூடவே கிடைத்து இருக்கிறது.

கொட்டியதும்  லதா மங்கேஷ்கர் வாழ்க்கையில் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவைகள் அனைத்தும் வாழ்க்கையில் கொண்டிருப்பது வாழ்க்கையின் சிறப்பு. 

லாத மங்கேஷ்கர் (போன்றவர்கள்) இறுதி காலத்தில் கூட  கிடந்தது, அழுந்தாமல் போனது / போவது இன்னும்  சிறப்பு. 

 

அரியது

“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இனியது

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே”

 

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே.

 

 

இவற்றின் பொருள் எவருக்கும் தெரியாது ஆயின், பொருளை பின்பு இணைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.