Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 JUL, 2024 | 09:37 AM
image
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது குறித்து ஜூலை 23-ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/189316

  • கருத்துக்கள உறவுகள்

குள்ளநரி,...😏

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றியும் அரிசியானால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்கமானது அவர்களது அரசியல் தவறுகளுக்கு அப்பால்,  போராட்டத்துக்கு கோட்பாட்டு ரீதியில்  நேர்மையாக போராடிய இயக்கம்.  அதில் இருந்த உயர்மட்ட அரசியல் தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலாவது  தடை நீக்கத்தை பயன்படுத்தி பழைய  தவறுகளை களைந்து விடுதலைப்புலிகளை மீள அரசியல் அமைப்பாக உருவாக்கி பழைய அனுபவங்களுடனும் புதிய  தந்திரோபாயங்களுடன்  கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படியான நேர்மையான அரசியல் போராளித் தலைவர்கள் எவரும் இன்று இல்லை. அதுவே வெளி நாடுகளில் அமைப்பில்  இருந்த சுயநலமிகளுக்கு வாய்ப்பாக  அமைந்தது. 

வெளிநாடுகளில் புலிகளை தமது சுய லாபத்துக்கு பயன்படுத்துயவர்களே இன்று  எஞ்சி உள்ள நிலையில் தடை நீக்கம் எதிர்மறை விளைவுகளையே ஈழத்தமிழருக்கு செய்யும்.  தவறானவர்கள் கையில் இயக்கத்தின் பெயர் செல்ல வழி வகுக்கும். எஞ்சியுள்ள மாபியாக்கள் எப்படியும் அந்த இயக்கத்தின்  பெயரை கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி தமது கொள்ளையை தொடர முயல்வார்கள் என்பதற்கு துவாரகா விடயம் உட்பட மேலும்  பல  சம்பவங்கள் சாட்சியம் 

ஆகவே தடை தொடர்வதே ஈழத்தமிழருக்கு நன்மை பயக்கும்.  

29 minutes ago, island said:

விடுதலைப் புலிகள் என்பது கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் குறியீடு. எம் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறைமை இது. அவர்கள் மீதான தடை என்பது, ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தின் மீதான தடையாகும்.  எம் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீதான தடையாகும். 

புலிகள் மீதான தடைதான், அவர்கள் பெயரைப் பயன்படுத்தி குளிர்காயும், அவர்களின் சொத்தை கொள்ளையடித்த  பலர் மீதான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை, இந்திய அரசுகளை விட இப்படியானவர்களுக்குத் தான் புலிகள் மீதான தடை நீடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

விசுகு கூறியது போன்று, யார் குற்றியும் அரிசி ஆனால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, island said:

உங்கள் நோக்கத்தில் தவறு இருக்கும்வரை இவ்வாறு தான் உங்கள் கருத்துக்கள் முடிவுறும்.  யார் குற்றினாலும் உங்களுக்கு அது விழுவது புலிகளின் தலை மீதாக இருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஆகவே தடை தொடர்வதே ஈழத்தமிழருக்கு நன்மை பயக்கும்.  

இல்லை கண்டிப்பாக இல்லை   தடை நீக்கினால்.  மட்டும் போதாது   இலங்கை தமிழர்களின் போராட்ட. அமைப்பு   விடுதலை அமைப்பு  என்று அங்கீகரிக்க வேண்டும்  அப்போ தான்  இலங்கை சுயாட்சி தீர்வையாவது வழங்கும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

விசுகு கூறியது போன்று, யார் குற்றியும் அரிசி ஆனால் சரி.

வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது.

அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.

புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.

எனக்கும் பிடிக்கும்   அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை  தேடி விரும்பி வாசிப்பேன்.   எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான்   இவருக்கு இந்த நிலமை.    அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து   சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்   

9 minutes ago, Kandiah57 said:

   எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான்   இவருக்கு இந்த நிலமை.    அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து   சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்   

மிகவும் தவறான அனுமானம்.

வைகோ கொள்கை பிடிப்பு இல்லாத, நேரத்துக்கு நேரம் நிறம் மாறுகின்ற, கூட்டணி மாறுகின்ற அரசியல்வாதி. 
வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்து, அதனால் திமுக வில் இருந்து 1991-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி விலக்கப்பட்டு, அதனால் இவருக்காக 5 தீக்குளித்து உயிரை கொடுக்க இவரால்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) 1994-ம் ஆண்டு, மே மாதம் உருவாக்கப்பட்டது. 

அதன் பின் திமுக வில் இருக்கும் போது, பரம வைரியாக இருந்த ஜெயலலிதாவுடன் 1998 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோற்றார். 

பின் 5 இற்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாண்டு போக காரணமான, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து பிரிந்த திமுகவை / கருணாநிதியை ஆதரித்து அவர்களுடன் 1999 இல்கூட்டணி வைத்து பெரியளவில் சறுக்கினார்.

பின் வந்த காலத்தில் தவறான கூட்டணிகளை அமைத்து தன் அரசியல் கட்சியை நாசமாக்கியது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் கட்சியையும் நாசமாக்கினார்.

ஈற்றில் எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து பிரிந்தாரோ, அதே வாரிசு அரசியலை துரை வைகோ வின் மூலம் தன் கட்சிக்குள்ளும் நுழைத்து தொடர்கின்றார்.

நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அரசியல் கோமாளி இவர், 

இவரின் இந்த நிலைக்கும், எம் இனத்துக்கான போராட்டத்துக்கான ஆதரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

விடுதலைப் புலிகள் என்பது கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் குறியீடு. எம் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறைமை இது. அவர்கள் மீதான தடை என்பது, ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தின் மீதான தடையாகும்.  எம் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீதான தடையாகும். 

புலிகள் மீதான தடைதான், அவர்கள் பெயரைப் பயன்படுத்தி குளிர்காயும், அவர்களின் சொத்தை கொள்ளையடித்த  பலர் மீதான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை, இந்திய அரசுகளை விட இப்படியானவர்களுக்குத் தான் புலிகள் மீதான தடை நீடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

விசுகு கூறியது போன்று, யார் குற்றியும் அரிசி ஆனால் சரி.

தங்கள் நிலைப்பாட்டில் முழுமையாக உடன்படவில்லையாயினும் உங்கள் விருப்பத்தின் நியாயத்தை புரிந்து கொள்கிறேன்.  இவ்வாறான விருப்பத்திலேயே அனைத்து தமிழ் மக்களும் இருந்தனர். அதனை துஷபிரயோகம் செய்தவர்கள் மக்கள் நம்பிக்கை வைத்த புலம் பெயர் பொறுப்பாளர்களே. இன்று அவர்களில் பலரின் நடவடிக்கைகளை பார்ககும் போது இவர்களா அப்பழுக்கற்றவர்கள் என்று ஒரு காலத்தில்  நம்பியிருந்தோம் என்றே விரக்தியே மிஞ்சுகிறது. உங்கள் விருப்பம் தவறல்ல. ஆனால் நடைமுறையில் அப்படியல்ல என்ற விரக்தியே எனது  கருத்தின் சாராம்சம். 

2 hours ago, விசுகு said:

உங்கள் நோக்கத்தில் தவறு இருக்கும்வரை இவ்வாறு தான் உங்கள் கருத்துக்கள் முடிவுறும்.  யார் குற்றினாலும் உங்களுக்கு அது விழுவது புலிகளின் தலை மீதாக இருக்கவேண்டும். 

புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக செயற்பட்டு மத்திய அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து தடை கொண்டுவரை ஓயமாட்டேன் என்று தடை வாங்கி தந்தவர்  ஈழத்தாய் என்று தமிழ் தேசியவாதிகளால் கொண்டாடப்படும் ஜெயலலிதாவே ஆகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது.

அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.

புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.

வைகோ,   வை.கோபாலசாமியாக  எம்பியாக அதாவது    பாராளுமன்ற மேலவை திமுக உறுப்பினராக  இருந்த போது  தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்த நன்மைகள் எண்ணிலடங்காதது. குறிப்பாக 1981 ல் இருந்து  அவரின் ஈழ பங்களிப்பு ஆரம்பமாகி விட்டது.  1987ல் இந்திய இராணுவத்தின் அடாவடிகளை தமிழ் நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் அவரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அத்துடன் ஜோர்ச் பெர்ணாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களுக்கு ஈழப்போராட்ட நியாயங்களை எடுத்து கூறி அவர்களை எமது பக்கத்திற்கு இழுக்க அவர்மேற்கொண்ட பங்கும் குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தனது வாழ் தாள் முழுவதும் ஈழ போராட்ட அனுதாபியாக  இருந்ததற்கு அடித்தளம் இட்டவர்களில் முதன்மையானவர் வை.  கோபாலசாமி ஆகும்.  அவர் இந்திய பாது காப்பு அமைச்சராக இருந்த போது எமக்கு சில சலுகைகளை செய்ததாக கேள்விப்பட்டேன். 

ஆனால்,  வை கோவின் மாபெரும் பலவீனம் எளிதில் உண்ர்சிவசப்பட்டு  கோபப்படும் அவரின் மனப்பாங்கு.  அந்த கோபத்தில் குறுகிய நொக்கிலான தீர்மானங்களை  மேற்கொள்ளுதல். ஒரு அரசியல் தலைவரின் மீது உள்ள கோபத்தினால் அவரை வஞ்சம் தீர்க்க அவரின் எதிரளியுடன் கொள்கைக்கு முரணான கூட்டணி அமைக்க அவரது மனநிலை  தூண்டியது. பல தொலைக்காட்சி பேட்டிகளில் ஒலிவாங்கியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார்.  இவை எல்லாம் சேர்ந்து அவரின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கியது. 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, island said:

புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக செயற்பட்டு மத்திய அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து தடை கொண்டுவரை ஓயமாட்டேன் என்று தடை வாங்கி தந்தவர்  ஈழத்தாய் என்று தமிழ் தேசியவாதிகளால் கொண்டாடப்படும் ஜெயலலிதாவே ஆகும்.  

சீமான் சொன்னது.

அவர் சொன்னவை அனைத்தும் ஈழத் தமிழர்களின் குரல் என்பது மிகவும் அபத்தம். ஆனால் அது உங்களிடமிருந்து வருவது சாதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, island said:

வைகோ,   வை.கோபாலசாமியாக  எம்பியாக அதாவது    பாராளுமன்ற மேலவை திமுக உறுப்பினராக  இருந்த போது  தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்த நன்மைகள் எண்ணிலடங்காதது. குறிப்பாக 1981 ல் இருந்து  அவரின் ஈழ பங்களிப்பு ஆரம்பமாகி விட்டது.  1987ல் இந்திய இராணுவத்தின் அடாவடிகளை தமிழ் நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் அவரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அத்துடன் ஜோர்ச் பெர்ணாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களுக்கு ஈழப்போராட்ட நியாயங்களை எடுத்து கூறி அவர்களை எமது பக்கத்திற்கு இழுக்க அவர்மேற்கொண்ட பங்கும் குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தனது வாழ் தாள் முழுவதும் ஈழ போராட்ட அனுதாபியாக  இருந்ததற்கு அடித்தளம் இட்டவர்களில் முதன்மையானவர் வை.  கோபாலசாமி ஆகும்.  அவர் இந்திய பாது காப்பு அமைச்சராக இருந்த போது எமக்கு சில சலுகைகளை செய்ததாக கேள்விப்பட்டேன். 

ஆமாம் சிறப்பு வாய்ந்த ரொம்பவும் சரியான பதிவுகள்     வை.கோ. இல்லாமல் தமிழ் ஈழ போராட்ட வரலாற்றை எழுத முடியாது 👍🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

மிகவும் தவறான அனுமானம்.

இல்லை    தமிழ் ஈழ போராட்டம் சார்பாக அன்று இன்று எனறும். வை.கோ. தடம் புரளவில்லை  ஒரே கொள்கை தான்   உதாரணம் புலிகள் தடைகளை நீங்கும் படி  தன்னாம் தனியாக வாதிடுகிறார்,......இன்றும்   மோடி உடன் நல்ல உறவிலிருந்தவர். நேரில் டொல்லி சென்று மகிந்தவை   வரவேற்க கூடாது  என்று கேட்டு கொண்டார்.    மோடி சம்மதிக்கவில்லை   அதனுடன் உறவுகள் முறிந்தது   

இந்திராகாந்தியை   நேரில் கண்டு தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கேட்டவர்    இந்திராகாந்தி கேட்டார்   அப்படியென்றால் மலையகம் வாழ தமிழர்களை என்ன செய்வது… என்று??? பதில் சொல்ல முடியவில்லை இன்றைக்கு பிரபாகரன் இருந்து தமிழ் ஈழம் கிடைத்தால்  கொண்டாட்டம்களில். பிரபாகரனடன். இருக்க போவது வ.கோ வும்  நெடுமாறனும். தான்  

இவர் சிறந்த பேச்சாளர்  தேவையற்ற வேலைகளை தவிர்த்து சுயநலமாக.  அரசியல் செய்து இருந்தால் நல்ல வளர்ச்சி அடைத்திருக்கலாம்   இது எனது கருத்துகள் 

தமிழ்நாட்டு அரசியலில் நீங்கள் சொன்னது உண்மை   அது பற்றி நான் கவலைப்படுவதில்லை வை.கோ வின். ஈழ நிலைப்பாடு பற்றித் தான் கதைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோ  ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் வாதாடவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மிகவும் தவறான அனுமானம்.

வைகோ கொள்கை பிடிப்பு இல்லாத, நேரத்துக்கு நேரம் நிறம் மாறுகின்ற, கூட்டணி மாறுகின்ற அரசியல்வாதி. 
வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்து, அதனால் திமுக வில் இருந்து 1991-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி விலக்கப்பட்டு, அதனால் இவருக்காக 5 தீக்குளித்து உயிரை கொடுக்க இவரால்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) 1994-ம் ஆண்டு, மே மாதம் உருவாக்கப்பட்டது. 

அதன் பின் திமுக வில் இருக்கும் போது, பரம வைரியாக இருந்த ஜெயலலிதாவுடன் 1998 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோற்றார். 

பின் 5 இற்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாண்டு போக காரணமான, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து பிரிந்த திமுகவை / கருணாநிதியை ஆதரித்து அவர்களுடன் 1999 இல்கூட்டணி வைத்து பெரியளவில் சறுக்கினார்.

பின் வந்த காலத்தில் தவறான கூட்டணிகளை அமைத்து தன் அரசியல் கட்சியை நாசமாக்கியது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் கட்சியையும் நாசமாக்கினார்.

ஈற்றில் எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து பிரிந்தாரோ, அதே வாரிசு அரசியலை துரை வைகோ வின் மூலம் தன் கட்சிக்குள்ளும் நுழைத்து தொடர்கின்றார்.

நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அரசியல் கோமாளி இவர், 

இவரின் இந்த நிலைக்கும், எம் இனத்துக்கான போராட்டத்துக்கான ஆதரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

👍👍👍👍👍👍

மிக‌ சிற‌ப்பு

என‌க்கு இவ‌ரின் ஆர‌ம்ப‌ கால‌ அர‌சிய‌ல் சுத்த‌மாய் தெரியாது

இவ‌ரின் அர‌சிய‌லை 2006க‌ளில் இருந்து தான் பார்க்க‌ தொட‌ங்கி நான்.................உண்மையில் இவ‌ர் நிற‌ம் மாறும் ம‌னித‌ர்

க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாம் என்று இர‌ட்டை மீனிங்கில் சொன்ன‌வ‌ர்

எந்த‌ த‌ன்மான‌ த‌மிழ‌ன் திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைப்பான் என்று 2013க‌ளில் சொல்லி விட்டு 2020க‌ளில் திமுக்கா கூட‌ மீண்டும் கூட்ட‌னி...................

ஆர‌ம்ப‌ கால‌த்தில் எங்க‌ட‌ போராளிக‌ளுக்கு ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் செய்து இருக்கிறார்

2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌ நிலைய‌ம் தாக்கின‌ போது இவ‌ரை தான் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ம் பேட்டி எடுத்தார்க‌ள் அத‌ற்க்கு இவ‌ர் சொன்ன‌ ப‌தில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு  த‌மிழ‌ர்க‌ள் வாழும் ப‌குதியில் வானால் போய் குண்டு போட்டு ம‌க்க‌ளை கொல்லுகின‌ம் அது தான் விடுத‌லைப் புலிக‌ள் த‌ரையால் போய் விமான‌ நிலைய‌த்தை தாக்கினார்க‌ள் என்று சொல்லி விட்டு கில‌ம்பி விட்டார்........................ஆனால் இவ‌ருக்கு இர‌ண்டு முக‌ம் உண்டு

ஈழ‌ விடுத‌லைய‌ விட‌ திராவிட‌ வெறி இவ‌ருக்குள் அதிக‌ம்..............................

15 minutes ago, குமாரசாமி said:

வைகோ  ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் வாதாடவில்லையா?

வாதாடின‌வ‌ர் ஆண்டு வ‌டிவாய் என‌க்கு நினைவில்லை..................2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு . அதுக்கு முத‌ல் வாதாடின‌து என‌க்கு தெரியாது......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது.

அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.

புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.

இவ‌ர் கொண்ட‌ கொள்கையில் உறுதியா நின்று தேர்த‌ல‌ ச‌ந்திச்சு இருந்தால் த‌மிழ் நாட்டு எதிர்க‌ட்சி த‌லைவ‌ரா கூட‌ வ‌ந்து இருப்பார் என்று ஆய்வுக‌ள் சொல்லு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

க‌ருணாநிதி குடும்ப‌த்தின் உண்மை முக‌ம் சீமானுக்கு தெரிந்த‌ அள‌வு இவ‌ருக்கு தெரியாதா......................க‌ருணாநிதி ஒன்றும் வீழ்த்த‌ முடியாத‌ பெரிய‌ அர‌சிய‌ல் வாதி கிடையாது

எம்ஜீ ஆர் எப்ப‌டி வீழ்த்தினார் க‌ருணாநிதிய‌ ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ ப‌டி

வைக்கோ தொட‌ர்ந்து நேர்மையா கூட்ட‌னி இல்லாம‌ ப‌ய‌ணித்து இருந்தால் த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ரா கூட‌ வ‌ந்து இருக்க‌லாம்..................அழுக்கு நீர் என்று தெரிந்தும் ம‌று ப‌டியும் அதுக்கை போய் விழுந்த‌ ப‌டியால் தான் இவ‌ரின் க‌ட்சி கால‌ப் போக்கில் த‌மிழ் நாட்டில் காணாம‌ல் போன‌து........................

காங்கிர‌ஸ் வ‌ந்தால் த‌டை நீக்க‌ப் ப‌டும் என்று சொல்வ‌து ஒரு வ‌த‌ந்தி

2009ஓட‌ பிர‌பாக‌ர‌ன் குடும்ப‌த்தில் யாரும் இல்லை என்று தெரிந்தும்

ராஜிவ் கொலை வ‌ழ‌க்கில் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ளை தூக்கில் போட‌ போகிறோம் என்று 2013 சொன்ன‌து இதே காங்கிர‌ஸ் தான்............................

2009க்கு முத‌ல் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை நான் பெரிசா எட்டியும் பார்த்த‌து இல்லை

எங்க‌ட‌ நாட்டு ந‌ட‌ப்பு செய்திக‌ளை பாட‌சாலையால் வ‌ந்த‌  உட‌ன‌ பார்ப்பேன்...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

காங்கிர‌ஸ் வ‌ந்தால் த‌டை நீக்க‌ப் ப‌டும் என்று சொல்வ‌து ஒரு வ‌த‌ந்தி

காங்கிரஸ் வந்தால் தடை நீங்கும் என்று சொல்லவில்லை.

காங்கிரசைத் தவிர வேறு யாராவது தடையெடுத்தால் காங்கிரஸ் பெரும் அரசியலாக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

காங்கிரசைத் தவிர வேறு யாராவது தடையெடுத்தால் காங்கிரஸ் பெரும் அரசியலாக்கலாம்.

இதை நான் பல காலமாக யோசித்ததுண்டு. அரசியல் எனும் நூல் பாதையில் கொஞ்சம்  நெழிந்தாலும் அதள பாதாளத்திற்கு தள்ளி விடும்.இதில் அனைத்து அரசியல்வாதிகளும் அவதானமாக இருப்பர்.

முள்ளை குத்தியவன் அதே முள்ளை எடுத்தால் தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

காங்கிரஸ் வந்தால் தடை நீங்கும் என்று சொல்லவில்லை.

காங்கிரசைத் தவிர வேறு யாராவது தடையெடுத்தால் காங்கிரஸ் பெரும் அரசியலாக்கலாம்.

3 minutes ago, குமாரசாமி said:

இதை நான் பல காலமாக யோசித்ததுண்டு. அரசியல் எனும் நூல் பாதையில் கொஞ்சம்  நெழிந்தாலும் அதள பாதாளத்திற்கு தள்ளி விடும்.இதில் அனைத்து அரசியல்வாதிகளும் அவதானமாக இருப்பர்.

முள்ளை குத்தியவன் அதே முள்ளை எடுத்தால் தான் உண்டு.

👍👍👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kandiah57 said:

எனக்கும் பிடிக்கும்   அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை  தேடி விரும்பி வாசிப்பேன்.   எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான்   இவருக்கு இந்த நிலமை.    அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து   சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்   

அதே......
சீமானும் ஈழப்பிரச்சனையை தன் அரசியலில் சேர்க்காமல் இதர  கொள்கைகளை முன்னெடுத்திருந்தால் உச்சிக்கு சென்றிருப்பார்.

ஈழம் எனும் ஒரு சாக்கடை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இன்றைக்கு பிரபாகரன் இருந்து தமிழ் ஈழம் கிடைத்தால்  கொண்டாட்டம்களில். பிரபாகரனடன். இருக்க போவது வ.கோ வும்  நெடுமாறனும். தான்  

அப்படியா உண்மை நிலைமை. நான் சீமான் சொல்கின்ற கதைகளை கேட்டு வைகோ நெடுமாறனுக்கு பதிலாக சீமான் தான் பக்கத்தில் இருந்திருப்பார் என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் 'ஆதாய அரசியல்' தான் செய்கின்றார்கள் என்பதில் நாங்கள், ஈழத்தமிழர்கள், ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றோம். இவர்களின் ஆதாய அரசியல் பெரும்பாலும் இவர்களின் குடும்ப உறவுகளின், வாரிசுகளின் மேம்பாட்டை நோக்கியே. இவர்களில் ஒரு சிலர், இரண்டாம் பட்சமாக, அவர்கள் சார்ந்த சாதி சனங்களிற்காகவும் சில அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர், உதாரணம்:  பாமகவின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை.

முழு தமிழ்நாட்டிற்கு என்றோ, அங்கு வாழும் எல்லா தமிழர்களுக்கும் என்றோ இவர்களிடம் ஒரு பரந்த பார்வை கிடையாது. அப்படியான இவர்கள் ஈழத்தமிழர்களான எங்களை மட்டும் எவ்வாறு பரந்த ஒரு பார்வையுடன் அணுகுகின்றார்கள் என்று நாங்கள் நினைக்கவேண்டும்? இவர்களின் ஆதாய அரசியலுக்கு எங்களை ஒரு ஆயுதமாகவே இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

சரி, என்னவானாலும் இவர்களால் எங்களுக்கு, எங்கள் நோக்கத்திற்கு நன்மை ஏதாவது கிடைத்தால், அது நல்லது தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் மிக நெருக்கடியான நேரத்தில், அதே சுய ஆதாயம் கருதி, இவர்கள் எங்களை கைவிடவும் கூடும் அல்லவா.......... கைவிட்டார்கள் என்று தானே நாங்கள் நினைக்கின்றோம்.

தங்கள் தகுதிக்கு மீறிய விடயங்களை நம்பிக்கைகளாக ,பொய்யான வாக்குறுதிகளாக இவர்கள் எல்லோரும் எங்களின் தலைமைக்கு கொடுத்தும் இருக்கலாம் அல்லவா, ஏனென்றால் இவர்களின் முதல் மற்றும் இரவு பகல் தேவை இவர்களின் ஆதாய அரசியல் மட்டுமே, நாங்கள் அல்ல.   

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்வது உண்மை தான் வரலாறு தான். ஆனாலும் தமிழகமும் ஈழமும் சேர்ந்தால் மட்டுமே தமிழருக்கு ஏதாவது சாத்தியம். இதற்கு இடையில் நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்கள் சுயநல அரசியல் புடுங்கல்கள் அனைத்தும் நாம் கடந்து தான் ஆகணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.