Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

european-union-gave-money-ukraine.jpg?re

உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்

முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரெய்னுக்கு முதல் முறையாக 160கோடி டொலரை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ursula von der leyen நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,’ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரெய்னுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க அந் நாட்டு பணத்தையே பயன்படுத்துவதுதான் சிறந்த வழி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரெய்ன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் எனக் கூறிவரும் உலக நாடுகள், உக்ரெய்னுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

 

ஆனால், சில உள்ளூர் பொருளாதார நிலைமைகளினால் அந்த நிதியை அளிப்பதில் சிரமம் ஏற்படவே, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருவாயை உக்ரெய்னுக்கு வழங்கும்படி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த செயல்பாட்டுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, இந்த செயல்பாட்டினால் சொத்துக்களை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். இது அந்த நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393758

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க அந் நாட்டு பணத்தையே பயன்படுத்துவதுதான் சிறந்த வழி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரெய்ன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் எனக் கூறிவரும் உலக நாடுகள், உக்ரெய்னுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

ரஷ்ய தனியார் சொத்துக்களை களவெடுத்து /அபகரித்து கொடுக்கின்றார்கள். வெட்கம் இல்லாதவர்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

ரஷ்ய தனியார் சொத்துக்களை களவெடுத்து /அபகரித்து கொடுக்கின்றார்கள். வெட்கம் இல்லாதவர்கள்.😂

உக்ரைனுக்கு... குடுத்து, குடுத்து... கஜானா காலி என்றால் என்ன செய்யிறது. 😂
சனங்களும் நெடுக தங்களின் வரிப்பணத்தை எவ்வளவு காலத்துக்கு கொடுக்க சம்மதிப்பார்கள். இப்பவே... பயங்கர கோபத்தில் இருக்கின்றார்கள். இந்த நிலையில்... களவெடுத்துதான்  காசு  குடுக்க வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைனுக்கு... குடுத்து, குடுத்து... கஜானா காலி என்றால் என்ன செய்யிறது. 😂
சனங்களும் நெடுக தங்களின் வரிப்பணத்தை எவ்வளவு காலத்துக்கு கொடுக்க சம்மதிப்பார்கள். இப்பவே... பயங்கர கோபத்தில் இருக்கின்றார்கள். இந்த நிலையில்... களவெடுத்துதான்  காசு  குடுக்க வேணும். 🤣

உக்ரேனுக்கு பண உதவி ஆயுத உதவி  செய்யும் நாடுகள் முதலில் தங்கள் நாட்டு மக்களிடம் உக்ரேன் உதவி பற்றி சர்வசன வாக்கெடுப்பு நடத்தட்டுமன் பார்ப்பம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு பண உதவி ஆயுத உதவி  செய்யும் நாடுகள் முதலில் தங்கள் நாட்டு மக்களிடம் உக்ரேன் உதவி பற்றி சர்வசன வாக்கெடுப்பு நடத்தட்டுமன் பார்ப்பம். 🤣

சர்வசன வாக்கெடுப்பு நடத்தும்  அந்தத் துணிவு... ஒரு நாட்டிற்கும் இல்லை.
சனம் வாக்குச் சீட்டாலையே.. இவர்களின் யோக்கியதையை முகத்தில் அடித்து காட்டி விடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்

நல்ல விடயம். வாழ்வா சாவா?? பார்த்திடலாம்...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, விசுகு said:

உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்

நல்ல விடயம். வாழ்வா சாவா?? பார்த்திடலாம்...

நாங்க உக்ரேனுக்கு எவ்வளவும் கொடுப்போம்.

ஆனால் ரசியாவுக்கு ஒருவரும் கொடுக்க் கூடாது.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்க உக்ரேனுக்கு எவ்வளவும் கொடுப்போம்.

ஆனால் ரசியாவுக்கு ஒருவரும் கொடுக்க் கூடாது.

ஆக்கிரமிப்பாளர்கள் அழியட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, விசுகு said:

ஆக்கிரமிப்பாளர்கள் அழியட்டும் 

போர் என்றால் இரு பக்கத்துக்கும் அடிதான்.

இலங்கையை பார்க்கலையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

போர் என்றால் இரு பக்கத்துக்கும் அடிதான்.

இலங்கையை பார்க்கலையா?

அதற்காக நாம் போராடாமல் இருக்கவில்லையே?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

ஆக்கிரமிப்பாளர்கள் அழியட்டும் 

விட்டால் தமிழர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போல இருக்கே.

உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி 1990 வரை. சோவியத் உடைவின் போது தனிநாடானது. இப்போ சோவியத்தில் இருந்து உடைத்த அத்தனை நாடுகளையும் நேட்டோவில் இணைச்சாச்சு. உக்ரைன் தான் பாக்கி. நேட்டோ விரிவாக்கமே தான் ரஷ்சிய- உக்ரைன் போருக்கான முக்கிய மறைமுகக் காரணம். நேரடிக்காரனம்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுயநிர்ணய உரிமையை பறித்து உக்ரைனின் ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க முனைந்தது. இதில்.. ரஷ்சியாவினது உக்ரைன் மீதான போர் எப்படி ஆக்கிரமிப்பாகும்.

மேற்கு ஐரோப்பாவிற்கும் நேட்டோவுக்கும் நன்மையில்லாமலா இவ்வளவு கோடிகளை ஐரோப்பிய ஒன்றியமும்.. பிரிட்டனும்.. அமெரிக்காவும் கொட்டிக் கொடுக்கினம்..??!

எதுஎப்படியோ.. நீங்கள் பிரஞ்சு எஜமானர்கள் வாய்வழி வருவதே சத்தியம் என்று நம்பும் மட்டும் நீதி எதுவென்று விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கும். 

மேற்குலகின் சொத்துக்களும் ரஷ்சியாவில் உள்ளன. ஆனால் ரஷ்சியா இவர்கள் அளவுக்கு மட்டமான காரியம் செய்யவில்லை. 

இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் இருந்து சுருட்டிய காசையும் ஐரோப்பிய ஒன்றியம் விடுவிக்கவில்லை.. தமிழர்களின் பேரழிவின் போது கூட ஐரோப்பிய ஒன்றியமோ அமெரிக்காவோ உதவி அளிக்கவில்லை. ஆனால்.. சொறீலங்காவுக்கு வாரி வழங்கினதும் இல்லாமல்.. இப்போ வரிச்சலுகளையும் அளிக்கினம்.. சொறீலங்காவை பொருண்மிய நெருக்கடியில் இருந்து மீட்க. இப்படியாப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம்.. நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது.

தமக்கான அடிமைக் கூலிகளை கூட அமர்த்தி வைக்க.. அகதி அந்தஸ்தை பாவிக்கினம். 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

அதற்காக நாம் போராடாமல் இருக்கவில்லையே?

நீங்களும் நானும்  எங்கே ஐயா போராடினோம் ? 

போரடினவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 

வேண்டுமானால் ஆதரவளித்தோம் என்று கூறுங்கள். அது பொருத்தமாக இருக்கும். 

4 hours ago, விசுகு said:

ஆக்கிரமிப்பாளர்கள் அழியட்டும் 

ஈராக்கில் இருக்கும்,  சிரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகளும் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற வட்டத்திற்குள் வருமா? 

அல்லது இஸ்ரேலை என்னவென்று சொல்வது,.    ......... 😁

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@விசுகு ருக்கு உண்மை எப்போதும் கசக்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

@விசுகு ருக்கு உண்மை எப்போதும் கசக்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். 😁

போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் என்றால் அதற்கு நிச்சயம் நான் கொள்ளி வைப்பேன். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nedukkalapoovan said:

விட்டால் தமிழர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போல இருக்கே.

 

உங்கள் கருத்துப்படி பங்களாதேசத்தை பாகிஸ்தானும் பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவும் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பு செய்யலாம் என்பதாகிவிடும். 

மற்றவரின் ஒரு துண்டு நிலத்தைக் கூட நாம் அபகரிப்பு செய்யமாட்டோம். இது மண்ணின் மகிமை புரிந்தவர் கற்று தந்தது. அது தொடரும்.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதன் தாக்கங்கள் இப்பொது சொல்ல முடியாது.

ஐரோப்பிய ஒன்றியம் எப்படி செய்தது - ருசியா முதலில் வட்டியை பிணையாக பாவித்து கடனை கொடுக்கிறதா அல்லது நேரடியாக வட்டி, முதலை எடுத்து கொடுக்கிறதா எனறு.


ருசியா பணத்தில் கைவைப்போம் என்ற போது சவூதி எச்சரித்ததாக, அதாவது யூரோ பினைமுறிகளை விற்கவேண்டி வரும், அதனால் யூரோ சரியும் என்றும் ஓர் கதை இருக்கிறது.

இனி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியார் முதலீட்டை கொண்டுவர மிகவும் பின்னிற்றப்பார்கள், அதேபோல யூரோ முதலீட்டையும் நீண்ட கோலினால் (wouldn't touch with long barge pole) தொட்டு பார்ககவும் விருமமில்லாத  நிலை உருவாகும்.

மத்திம, நீண்ட காலத்தில் என்ன விளைவுகள் என்பதை பொருட்டு இருந்து தன பார்க்க வேண்டும். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் என்றால் அதற்கு நிச்சயம் நான் கொள்ளி வைப்பேன். 

உங்கள் கையில் இருப்பது குச்சி . கொள்ளி அல்ல. 

அது ஒருபக்கம் இருக்கட்டும். ..... நான் கூறியதில் எதில் தங்களுக்கு உடன்பாடில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/7/2024 at 20:19, விசுகு said:

உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்

நல்ல விடயம். வாழ்வா சாவா?? பார்த்திடலாம்...

இதைத்தான் சிங்களமும் செய்கின்றது.

Posted

சுவிஸ் மேற்படி ரஸ்யாவின் சொத்துக்களை விற்றல், லாபமீட்டல் போன்றவற்றில் தாம் பங்கேற்கவில்லை என்றும் அப்படி செய்தால் தமக்கு பின்பு பாதிப்புகள் வரும் என கூறியுள்ளது. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.