Jump to content

மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   30 JUL, 2024 | 11:41 AM

image

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (28)  இடம் பெற்றுள்ளது.

மரணமடைந்த இளம் தாய் 27 வயதுடையவர் எனவும் இவர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09 ம் திகதி பிறந்துள்ளது. 11 ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.

7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு  கூறியதையடுத்து  கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக  இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அவரே  மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு  குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு  நோயாளர் காவு வண்டி மூலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று  ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தெர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை  ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை அவர் இழந்ததாக தாயார் தெரிவித்தார்.

அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11.மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக  செய்தி  எமக்கு கிடைத்தது.

குருதிப் பெருக்கு காரணமாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற  அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இறந்த இளம் தாய் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை.  குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில்  இவ்வாறு  சோக  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனவுகளோடு படித்து  திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து உயிரிழந்த  இளம் தாய்  இனி உயிருடன் மீளப் போவதில்லை. ஆனால்  இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை  வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவிய போது,

பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும். எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189757

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது.

சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள்  அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது.

சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள்  அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!

அங்கு, அந்த வைத்தியசாலையில் இரவு நேரம் மருத்துவர்களே இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அனேகமாக மாலை 6 மணிக்கு வந்து வேலைக்கு வந்ததாக ஒப்பமிட்டுவிட்டு வீட்டை போய் நித்திரை கொண்டு இருப்பார்கள்.

இவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள பகுதிகளில் வேலை செய்யும் சிங்கள மருத்துவர்கள் எவ்வளவோ மேல்.

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அங்கு, அந்த வைத்தியசாலையில் இரவு நேரம் மருத்துவர்களே இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அனேகமாக மாலை 6 மணிக்கு வந்து வேலைக்கு வந்ததாக ஒப்பமிட்டுவிட்டு வீட்டை போய் நித்திரை கொண்டு இருப்பார்கள்.

இவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள பகுதிகளில் வேலை செய்யும் சிங்கள மருத்துவர்கள் எவ்வளவோ மேல்.

 

உங்கள் அவதானிப்பிற்கு ஒரு காரணம் இருக்கிறது. மருத்துவர்கள் கற்கும் மருத்துவ பீடம் தான் அந்தக் காரணம். இலங்கையில் இருக்கும் சிறந்த மருத்துவ பீடமான கொழும்புப் பீடத்தில் சில வருடங்களுக்கொரு முறை பாரியளவில் பாடத்திட்டத்தை மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப மாற்றுவார்கள், புரட்டிப் போடுவார்கள். இது போல ஒரு மீளாய்வு (review) முறை யாழ் மருத்துவ பீடத்தில் இருப்பதாக நான் அறியவில்லை. அதே 50 வருடப் பழைய முறையான பேராசிரியர் சொல்வதை கேள்வி கேட்காமல் செவிமடுத்து, பரீட்சை எழுதி பாஸ் ஆகி மருத்துவராகி விட்டு நோயாளியோடு உரையாடும் முறை கூட தெரியாமல் வாய்க்குள் கொழுக்கொட்டை அடக்கி வைத்திருக்கும் மருத்துவர்களை யாழ் பீடம் உருவாக்குகிறதென நினைக்கிறேன்.

யாழ் மருத்துவ பீடத்தில் கற்பிக்கும் பேராசான்கள் எப்படியாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்:

Internal Medicine எனப் படும் உள்ளக மருத்துவத்தில் பேராசிரியராகவும், யாழ்ப்பாணம் நொதேர்ன் மருத்துவமனையில் தனியார் தொழிலும் செய்யும் ஒரு மருத்துவரிடம் என் உறவுக்காரர் ஒருவர் போயிருக்கிறார். அளக்கப் பட்ட அவரது இரத்த அழுத்தம் 140/90, இது Stage II உயர் இரத்த அழுத்தம், கவனிக்கப் பட வேண்டிய ஒரு குணங்குறி. ஆனால், அதைப் பற்றி நோயாளிக்கு எதுவும் சொல்லாமல், முப்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரத்த பரிசோதனைகளை எழுதிக் கொடுத்து "இங்கேயே செய்தால் தான் நம்புவேன்" என்று சொல்லியிருக்கிறார்.

என் சொந்தக்காரர் வாரம் மூன்று தரம் கருவாடு சாப்பிடும் சாப்பாட்டுப் பிரியர் என்று எனக்குத் தெரிந்திருந்ததால் "மருத்துவர் உணவைப் பற்றி ஏதாவது அறிவுரை சொன்னாரா?" என்று கேட்டேன். "எதுவும் சொல்லவில்லை, என் உணவுப் பழக்கங்கள் பற்றி அவர் கேட்கக் கூட இல்லை" என்றார். இத்தனைக்கும் அவர் ஒரு தடவை சிறிய மூளை இரத்த அடைப்பு (stroke) வந்து தப்பிய ஒருவர். இந்த நோயாளிக்கு ஒரு அடிப்படை ஆலோசனை/தகவல் கூட வழங்காத பேராசிரியரின் பட்டங்கள் (certifications) அவர் பெயரை விட நீளம்😂. இவை தான் அந்தப் பட்டங்கள்: MD (Col), FRCP (Lon), FRCP (Edin), FCCP, MRCP (UK), MRCP (Ireland), MSc (Col), FACP (USA).

இந்த நோயாளிக்கு என்ன பயன் இவ்வளவு தகுதிச் சான்றிதழ்களால்? இவர்களுக்கெல்லாம் மருத்துவத் தொழில் ஒரு கேடா? என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்னையை விட மோசமானது வசதிகள் அற்ற நாடு சிங்கள அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையால் நாடு வங்குரோத்து ஆக அனைத்து மருத்துவ திறமைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேற இப்படியான பிரச்சனைகள் வருவது தடுக்க முடியாது இனிமேலும் மோசம் ஆகலாம் .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பெருமாள் said:

இனப்பிரச்னையை விட மோசமானது வசதிகள் அற்ற நாடு சிங்கள அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையால் நாடு வங்குரோத்து ஆக அனைத்து மருத்துவ திறமைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேற இப்படியான பிரச்சனைகள் வருவது தடுக்க முடியாது இனிமேலும் மோசம் ஆகலாம் .

 

உங்கள் சிந்தனையில் எங்கடையதுகள் குண்டியை ஒழுங்காக கழுவாவிட்டாலும் அதன் காரணம் சிங்களவன் தண்ணீர் கொடுக்கவில்லை என்பதாகத்தான் அமையும். 

இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான எங்கடை மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் எப்படி வேலை செய்யிதுகள் என நீங்கள் நேரில் சென்று பாருங்கள். 

Edited by நியாயம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள பகுதிகளில் வேலை செய்யும் சிங்கள மருத்துவர்கள் எவ்வளவோ மேல்.

அது அரசு இலவச மருத்துவமனையில் மட்டுமல்ல. தனியார் மருத்துவமனையிலுமாம். எனக்கு தெரிந்தவர் இலங்கை செல்லும் முதல் சிறு விபத்து காயம் ஏற்பட்டது.சிறு காயம் தானே பிரயாணம் தடைபட கூடாது என்று சென்றுவிட்டார். முதலில் சிங்கல பிரதேச தனியார் வைத்தியசாலையிலும் பின்பு யாழ்பாண தனியார் வைத்தியசாலையிலும் கயத்திற்கு மருத்துவம் பெற்றவர். அங்கே சேவையும் சிறப்பு, கட்டணமும் குறைவு. யாழ்பாணத்தில் கட்ணம் மிகஅதிகம். சேவை சரியில்லை.

--------------------------

2 hours ago, நியாயம் said:

இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான எங்கடை மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் எப்படி வேலை செய்யிதுகள் என நீங்கள் நேரில் சென்று பாருங்கள். 


இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான சிங்கல மருத்துவர்கள் போன்று
இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான  தமிழ்  மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் வேலை செய்ய வேண்டியது இல்லை என்பது அவருடைய சிந்தனை 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

 

உங்கள் சிந்தனையில் எங்கடையதுகள் குண்டியை ஒழுங்காக கழுவாவிட்டாலும் அதன் காரணம் சிங்களவன் தண்ணீர் கொடுக்கவில்லை என்பதாகத்தான் அமையும். 

இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான எங்கடை மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் எப்படி வேலை செய்யிதுகள் என நீங்கள் நேரில் சென்று பாருங்கள். 

நாங்க எழுதிய கருத்தை விளங்கியா உங்கள் பதில் கருத்து வந்தது ?

வேறு யாருடனோ கருத்துக்கு கருத்து வைக்க திராணியில்லாமல் என்னுடன் ஏன் சேட்டை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

நாங்க எழுதிய கருத்தை விளங்கியா உங்கள் பதில் கருத்து வந்தது ?

வேறு யாருடனோ கருத்துக்கு கருத்து வைக்க திராணியில்லாமல் என்னுடன் ஏன் சேட்டை?

 

இலங்கை மருத்துவர்களை வெளிநாடுகள் வாங்கோ வாங்கோ என்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை. 

தமது தகுதி. நிதி நிலவரங்களை காட்டி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா  என இவர்கள் குடிபெயரலாம். 

ஆனால் அங்கே சாதாரண மருத்துவர்களாக பணியாற்றும் தகுதியை குடிபெயரும் எத்தனைபேர் பெறுகின்றார்கள் என்பதே சந்தேகம்.

பலர் வெளிநாடு வந்து மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கின்றார்கள். இலங்கை திரும்பி செல்லும் மருத்துவர்களும் உண்டு. 

இலங்கை வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் எப்படி பணியாற்றுகின்றார்கள் என நான் நேரடியாக அவதானித்துள்ளேன். 

மருத்துவம் இது ஒரு பதவியாக பயன்படுத்தப்படுகின்றது. பணியாக செய்யப்படுகின்றதா என்பது சந்தேகம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  இரவில் விடி காலையில் பதில் கருத்து போடுகிறோம் என்ன நிலையில் இருப்பவர் எப்படி போடுகிறார் என்பதை வைத்து கண்டு பிடிக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மருத்துவர்கள் கொம்பர்கள் என்ற நிலை மாற வேண்டும்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் மருத்துவர்கள் கொம்பர்கள் என்ற நிலை மாற வேண்டும்.

இங்கே கொம்பு அல்ல சிக்கல். வருமானம். 

நாலு வருடங்கள் படித்த எஞ்சினியர் மார் பல லட்சக்கணக்கில் சம்பளத்தை எடுத்து முன்னேற வைத்தியர்கள் ஓடி ஓடி இரண்டு வேலை செய்தும் அவர்கள் போல் வசதியாக வாழமுடியாத நிலை. இது தான் ஊழல் மற்றும் பிற தூண்டுதல் களுக்கு காரணம்.

இங்கேயும் அதே நிலை தான். எனது மகள் மருத்துவப் படிப்புக்கு சென்ற யூனியில் முதல் வகுப்பில் சொன்னது. அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இங்கே யாரும் இருந்தால் இப்பொழுதே எழுந்து சென்று அதற்குரிய படிப்பை தெரிவு செய்து கொள்ளலாம் என்று. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இங்கேயும் அதே நிலை தான். எனது மகள் மருத்துவப் படிப்புக்கு சென்ற யூனியில் முதல் வகுப்பில் சொன்னது. அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இங்கே யாரும் இருந்தால் இப்பொழுதே எழுந்து சென்று அதற்குரிய படிப்பை தெரிவு செய்து கொள்ளலாம் என்று. 

வாழ்த்துக்கள் விசுகர் 

இங்கும் முகநூல் முழுக்க பிள்ளைகளின் யுனி பட்டம்களை பெற்றோருக்கு போடுவதும் பெற்றோர் அதை வாங்கி தங்கள் தலையில் போட்டு மகிள்வதுமாய் படங்கள் வந்து கொண்டே இருகின்றன அதில் அநேக பெற்றோர் வெட்டு புள்ளி என்ற இனவாத பூதம் இலங்கையை விட்டே கலைத்து அவர்கள் இரண்டு நேர வேலை மூன்று நேர வேலை செய்து தங்களின் கனவுகளை நிறைவேற்றி கொண்டார்கள் இனித்தான் .........................................................................இந்த இடைப்பட்ட வெளி எதையும் சொல்லும் 😃 சிலர் பெருமாள் இப்படித்தான் கருத்து வரும் என்று படிக்காமலே கருத்து போடும்  கனவான்களுக்காக வேணுமென்றே இடைவெளி .

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கருத்துக்களை படியுங்க அதன்பின் பதில் கருத்து போடுங்க மூன்றாவது நாலாவது ரவுண்டில் இவரை அடிக்கிறன் தூக்கிறன் என்று சோ..... தனமாய் @நியாயம் போன்றவர்கள் வர வேணாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9-1.webp?resize=750,375

மன்னார் பெண்ணின் மரணம் – உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கை!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பினனர், உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண்ணான மரியராஜ் சிந்துஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

https://athavannews.com/2024/1394781

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். 

இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். 

இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? 

வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. 

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். 

அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும்.

நீதிமன்றின் ஊடாக,

1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும்

2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்

ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. 

உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் 

நன்றி 

Dr முரளி வல்லிபுரநாதன் 

4.8.2024

https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/

விசுகண்ணையின் பகிர்வு. நன்றியோடு இத்திரியிலும்

அங்கே என்ன நடந்தது??

அந்த இளம் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியும் கொடுமையும் அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்பதை வாசித்துப் பாருங்கள்.

மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார்.

திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார்.

வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார்.

அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம்.

தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர். 

‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார்.

காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார். 

நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள். காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். 

தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம். அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார்.

அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம். 

ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? என பத்திரகாளியாக மாறியது மட்டும்தான் செய்யக் கூடியதாக இருந்ததாம். தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம். 

இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள். 

இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம்.

1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா?

2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்)

3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்?

4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா?

5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா?

மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா? இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா? இவை பொதுமக்களிற்குத் தெரியாதா? நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன? சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ ?

copied post

https://www.facebook.com/share/b8EK2FpTq7HrEq8S/

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் (Mannar District Hospital) நள்ளிரவில் குருதிப் போக்கினால் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மரியராஜ் சிந்துஜா, அடுத்த நாள் காலையில் மயங்கி விழும் வரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான கனகரத்தினம் சுகாஷ் (Kanagaratnam Sugash) தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் கனகரத்தினம் சுகாஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிறந்து சில நாட்களேயான சிசுவைத் தவிக்கவிட்டுத் தாயார் மரணித்துள்ளார்.

 

நீதியான - வெளிப்படையான விசாரணை

உடனடியாகச் சிகிச்சையளித்திருந்தால் நிச்சயம் அவரைக் காப்பாற்றியிருக்கலாம்.

 

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு | Mannar Hospital Young Mother Death Case

விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தங்கும் விடுதியிலிருந்தும் தாதிய உத்தியோகத்தர் அறிவித்தும் விடியும்வரை சிகிச்சையளிக்க முன்வரவில்லை.

இது தவறல்ல, குற்றம். நீதியான - வெளிப்படையான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

 

உயிர்கள் அநியாயமாகக் காவு

அதன் மூலமே சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்பதோடு நேர்மையாகப் பணிபுரியும் வைத்தியர்களின் சேவையும் போற்றப்படும்.

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு | Mannar Hospital Young Mother Death Case

இந்நிலை தொடர்ந்தால் அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாங்கள், மருத்துவ அலட்சியங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்படும்.

எமது உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தயவுசெய்து பொறுப்போடு செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கனகரத்தினம் சுகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

https://ibctamil.com/article/mannar-hospital-young-mother-death-case-1722827117

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதைத் தான் எழுதுவது இந்த கொலைகாரக் கூட்டத்தைப் பற்றி?

இப்படியாக பல கேஸ்கள் இருபது ஆண்டுகள் முன்பு கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். லேடி ரிட்ஜ்வேயில் கைக்குழந்தைக்கு கை அகற்ற வேண்டிய  நிலை வந்த அசமந்த நிலை, ஒரு புற்று நோய் நிபுணரான மருத்துவருக்கே எச்.ஐ.வி தொற்றிய இரத்தத்தை ஏற்றிய கதை, நோயுற்ற சூலகத்தை விட்டு விட்டு நல்ல சூலகத்தை அகற்றிய கதை என்று சம்பவங்கள் பல, ஆனால் எதற்கும் நடவடிக்கையென்று எதுவும் எடுக்கப் பட்டதாக நான் அறியவில்லை.

ஒரு பட்டத்தை எடுத்து, தங்களுக்கு மேல் மேற்பார்வை செய்யவோ அறிக்கையிடவோ யாரும் இல்லையென்று வந்து விட்டால் எந்த நிபுணரும் இந்த அசமந்த மருத்துவ சேவையாளர்கள் போலத் தான் நடந்து கொள்வர்- complacency?.

இலங்கையில் Sri Lanka Medical Council என்ற மருத்துவர்களைப் பதிவு செய்து பணி செய்ய அனுமதிக்கும் அமைப்பும் இருக்கிறது. இவ்வளவு அக்கப் போர் நடக்கிறது, இந்த அமைப்பு இதைப் பற்றி ஒரு மூச்சும் விட்டதாகவோ, தற்காலிகமாவேனும் சம்பந்தப் பட்ட மருத்துவர்களின் அனுமதியை மீளப் பெற்றதாகவோ தெரியவில்லை.

இந்த தாயின் மரணத்தினாலாவது ஏதாவது நன்மை நடக்கட்டும்! 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454036167_26309568132020920_641626634637

 

453877031_26309567715354295_369755880261

மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் மனச்சாட்சி உள்ள உத்தியோகத்தர்களே!
மன்னாரின் புத்திஜீவிகளே!
மன்னார் மக்களின் வாக்குகளைப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர்களே!
மன்னாரின் மதத்தலைவர்களே!
அரச அதிகாரிகளே!
அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளே!
சட்டத்துறை வல்லுநர்களே!
காவல்துறை தமிழ் அதிகாரிகளே!
சமூக சேவையாளர்களே!
சமூக ஊடகப் போராளிகளே!
மன்னாரைச் சோர்ந்த சமூக அக்கறையுள்ள புலம்பெயர் தேசத்தவர்களே!

இந்த நாதியற்ற ஜீவன்களுக்கு நாம் என்ன பதில் வழங்கப்போகின்றோம்?
இல்லை மட்டக்களப்பில் இருந்து இன்னுமொரு அர்ச்சுனா வந்து நியாயம் கேட்கட்டும் என்று காத்திருக்கப் போகின்றோமா?

நம் ஒவ்வொருவரிற்கும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.
ஒரு அநீதி இழைக்கப்படும் பொழுது அதை வேடிக்கை பார்த்து மொளனியாக இருப்பவன் அநீதியை இழைத்தவனைவிட மோசமானவன் ஆகின்றான்.

நமது குடும்பத்தில் இவ்வாறு நடந்திருந்தால்? நம் எதிர்வினை எவ்வாறு அமைந்திருக்கும்.
இதுவரை இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நடந்த எந்த ஒரு மருத்துவ உதாசீன கொலைகளிற்கும் நீதி வழங்கப்பட்டுள்ளதா?

குற்றவாளியை அவனது தாய் புலன் விசாரணை செய்தால் நியாயமான தீர்ப்பு கிடைக்குமா?
ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்கு சரியான தண்டனை வழங்கப்படுமானல் மீண்டும் அதே குற்றங்கள் நிகழ்வதை தடுக்கலாம். 

அநீதிகளுக்கு நியாயம் கேட்பது என்பது காழ்ப்புணர்ச்சியினால் அல்ல அக்குற்றங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்கே. 

அன்பார்ந்த வைத்திய துறைசார் உறவுகளே!
ஒருவன் உங்களை கொலை செய்ய வருகின்றான் நீங்கள் கடவுளே! காப்பாற்று என்று கோவிலுக்குள் ஓடுகின்றீர்கள் அந்த தெய்வமே உஙகளுக்கு ஈட்டியால் குத்தினால் உங்களுக்கு எவ்வாறான உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு தான் உங்கள் மருத்துவ உதாசீனத்தின் போதும் எமக்கும் ஏற்படுகின்றது.

வைத்தியத்துறை புனிதமானது அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை 
எனினும் ஒருசிலரின் தான்தோற்றித்தனமான செயற்பாடுகளினால் அர்ப்பணிப்பான சேவையாளர்கள் பாதிக்கப்பட கூடாது.

Rex Leon

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்!

 

தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

"வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண்மைகளை மறைப்பது நியாயமாகுமா?

 

1.மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்துவத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா?

அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன?

 

2. எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள்/ சுயநல்வாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது.

 

3. டாக்டர். அரிச்சுணாவின் பல அணுகுமுறைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடையத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை?

குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்துகொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த  காணொளிகளில் வார்த்தைகளை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்சட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது. 

இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன.

 

4. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்ஙளும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடையங்களில் வாய் திறக்கவில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடையத்தில் அமைதி காப்பது ஏன்?

மறுபடியும் சொல்கிறேன். இதை நான் அரிச்சுணாவை ஆதரித்து எழுதவில்லை. சாமானியனாக அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது.

 

5. யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னன் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே?

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

பிரச்சினைகள் நடக்கும் போது விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுபன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம்படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள்.

 

6. மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடையத்தில் மௌனம் காப்பது ஏன்?

இதுவரை சார்ந்வர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை.

விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? 

 

வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர்களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

 

அரிச்சுணாவின் அணுகுமுறைகளிலும் ஆணவப் பேச்சுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை ஆயினும் அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று  பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பலபெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும்.  பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும்.

 

இந்தப் பதிவு நல்ல மருத்துவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே எழுதப்படுகின்றது. இப்படியே மருத்துவத்துறையில் உள்ளும் வெளியும் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தால் எம்மிடம் எஞ்சியிருக்கும் சில நல்ல மருத்துவர்களையும் இழந்துவிடுவோம்.

மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும்.

 

நன்றி

 

திருநாவுக்கரசு தயந்தன்

2024.08.06

 

https://www.facebook.com/share/7H2mKsKqyirjhqEB/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி : மன்னார் இளந்தாய் மரணத்தில் வைத்தியசாலை தரப்பில் தவறு நடைபெற்றுள்ளமை விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் பெண் பட்டதாரி உயிரிழப்பு : விசாரணை நிறைவு : தவறிழைத்தவர்கள் அடையாளம் - வைத்தியசாலை பணிப்பாளர் 

06 AUG, 2024 | 03:32 PM
image
 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  பட்டதாரியான இளம் தாயொருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சம்பவ தினத்தின்போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மன்னார்  - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாயொருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இந்த சம்பவமானது கடந்த 28ஆம் திகதி    ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அந்த இளம் தாயின் மரணத்துக்கு சம்பவ தினத்தன்று விடுதியில் இருந்தவர்களின் அசமந்தப்போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த மரணம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகள் தற்போது நிறைவடைந்த நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த பெண் மரணமடைந்ததை தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன்  தவறிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அப்பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எனது தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகளினூடாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/190413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது "வரும் ஆனால் வராது" என்ற கதையாகத் தான் இருக்குமென நினைக்கிறேன்.

மாகாண அமைச்சுக்கு யார் தவறு செய்தார் என்பது இப்போது தெரியும். அந்தப் பணியாளர்களை மத்திய அரசின் விசாரணை முடியும் வரை சம்பளமில்லாத பணி இடை நிறுத்தம் செய்யலாம், செய்தால் மத்திய அரசின் விசாரணையை பணி நீக்கம் செய்யப் பட்டவர்களே துரிதமாகச் செய்யும்படி மன்றாடுவர்.

என் கணிப்பு, இப்படி பணி இடை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். மக்கள் மறந்து நகரும் வரை மத்திய அரசின் விசாரணை தொடரும். இறுதியில் யாரும் தண்டிக்கப் பட மாட்டார்கள். சீரழிந்த சிறிலங்காவின் நடைமுறைகளில் இது புதிதல்ல.

இதற்கு தீர்வு என்ன? நீதிமன்றில் பாதிக்கப் பட்ட குடும்பம் சிவில் வழக்குப் போட வேண்டும். மன்னார் மருத்துவமனைப் பணிப்பாளரையும் அந்த நேரம் கடமையில் இருந்த மருத்துவரையும் எதிராளிகளாக (respondents) குறிப்பிட்டு வழக்கைப் போட்டு வைக்க வேண்டும். சிவில் வழக்கு இழுபடும், ஆனால் பெயர்கள் வெளியே வரும், ஒரு கட்டத்தில் மாகாண அமைச்சின் அறிக்கையையும் நீதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டி வரும்.

முகநூலில் நேரம் வீணாக்குவதை தவிர்த்து சட்டத்தரணிகள் இதைச் செய்ய உதவினால் அது பயனுள்ளதாக இருக்கும். 

Edited by Justin
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரச வைத்தியசாலைகளில் தாதிமார்கள்/வைத்தியர்களின் துர்ஷ்பிரயோகங்கள் இல்லையென்றால் தான் உலக அதிசயம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.